===========================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 20
முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு ஞாயிற்றுக்
கிழமை காலைப் பொழுது.
நண்பர் ஒருவர் துணைக்குக் கூப்பிட்டார் என்பதற்காக
அவருடன் கோவை இடையர் வீதியிலிருந்த ஜோதிடர்
வீட்டிற்கு, அவருடன் நானும் சென்றிருந்தேன்.
ஜோதிடரின் பெயர் பரமேஷ்வர பணிக்கர். அந்தக்
காலத்தில் மிகவும் பிரபலமான ஜோதிடர்.கூட்டம்
அலைமோதும் காத்திருந்துதான் அவரைப் பார்க்க
முடியும். வயதானவர். அனுபவம் மிக்கவர்
என் நண்பனின் சகோதரி மகளுக்கு எப்போது திருமணம்
நடக்கும் என்று கேட்டு வருவதற்காகப் போயிருந்தோம
ஜோதிடரின் வீடு கீழ்த்தளத்தில். முதல் மாடியில்தான்
அவரது அலுவலகம்.
11' x 15' அளவில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்
உட்காருவதற்குப் பாய் போட்டு வைத்திருப்பார்கள்
ஏற்கனவே பத்துப் பேர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
நாங்களும் போய் உட்கார்ந்து கொண்டோம்.
நான் இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் போகும்போது
என்ன நடக்கிறது என்று முழுக்கவனத்துடன் பார்ப்பது
வழக்கம்.
எங்களுக்கு முன்னால் ஒரு வயதான தம்பதியர்
தங்கள் மகனுடைய ஜாதகத்தை அவரிடம் கொடுத்துப்
பார்க்கச் சொல்லிவிட்டு அவர் எதிரில் அமர்ந்திருந்தார்கள்
ஜோதிடர் நடப்பு தசாபுத்தியை ஒரு காகிதத்தில் அசுர
வேகத்தில் கணக்கெடுத்துக் குறித்துக் கொண்டவர்,
ஜாதகத்தையும் ஒரு கண்ணோட்டம் பார்த்தவாறு கேட்டார்
"உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்?"
அந்தப் பெரியவர் சொன்னார்." சாமி, பையனுக்கு
22 வயசாச்சுங்க! வியாபாரம் எதாவது வச்சுக் கொடுக்கலாமா? அல்லது திருமணத்த நடத்திப் போடலாமா? கொஞ்சம் விவரனையா பாத்துச் சொல்லுங்க! வியாபாரம் வச்சுக் கொடுத்தா அஞ்சு வருசம் கழிச்சுத் தான் திருமணம் பண்ணோனும். இல்ல திருமணம் செஞ்சுவச்சோமின்னா வியாபாரம் பின்னாடித்தான் வைக்கோணும். சாதகப்படி எது நல்லதுன்னு சொல்லுங்க"
உடனே சட்டென்று ஜோதிடர் அவரைப் பார்த்துக் கேட்டார்.
"பையன் வீட்டிற்கு அடங்க மாட்டானே?"
"ஆமாம் சாமி!"
"ஒழுங்கா படிச்சு பட்டம் வாங்கியிருக்க மாட்டானே?"
"ஆமாம் சாமி!"
" அதுக்கெல்லாம் காரணம் பையன் மூல நட்சத்திரம்.
சின்ன வயசிலேயே சுக்கிர தசை வந்திருச்சு. சின்ன
வயசில சுக்கிர தசை வரக்கூடாது. குட்டிச் சுக்கிரன்
கூடிக் கெடுக்கும். அதோட பையனை சுகவாசியா
வச்சு - அவனைக் கெடுத்துவிட்டுப்போய் விடும்!
அவன் பிறந்ததிலிருந்து உங்களுக்குப் பணம் நிறைய
வந்திருக்கும். அதனால அவனைச் செல்லம் கொடுத்தும்
வளர்த்திருப்பீங்க! ஜாதகப்படி கர்ப்பச்செல் இருப்பு
கேதுல 3 வருஷம், சுக்கிரன் ஒரு 20 வருஷம், அதுக்க
ப்புறம் வரப்போகிற சூரிய தசை ஒரு ஆறு வருஷம்
ஆக மொத்தம் 29 வருஷம். பையனுக்கு 30 வயசுக்கு
மேலதான் நல்ல காலம். அதுக்கப்புறம் வியாபாரம்
வச்சுக்கொடுங்க. இப்ப கல்யாணத்தைப் பண்ணுங்க!
முடியப் போற சுக்கிரதசையும் கல்யாணத்தை
நடித்தி வச்சுட்டுத்தான் போகும். அதோட அவனுக்கு
வியாழ நோக்கமும் இருக்கு! ஜாதகப்படி இன்னும்
தொண்ணூறு நாள்ல கல்யாணம் ஜாம் ஜாம்னு
நடந்திரும்!"
என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து விட்டார்
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை
அவர் சொன்ன அந்த வாக்கியம் நெடு நாட்கள்
என் காதிலும் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."
"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."
அது உண்மை என்பதைப் பின்னால் தெரிந்து
கொண்டேன்
அதாவது எனக்குக் கிடைதத என் உறவினர்கள்
மற்றும் என் நண்பர்களின் ஜாதகங்களை (சுமார் 200)
வைத்து நான் ஆராய்ச்சி செய்தபோது அது
உண்மைதான் என்று தெரிந்து கொண்டேன்
-----------------------------------------------------------------------
அதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு, வேறு
ஒரு நண்பர் கூப்பிட்டார் என்பதற்காக அவருடன்
வேறு ஒரு பிரபல ஜோதிடரைப் பார்க்கப் போயி
ருந்தேன்.
அந்தக் கால கட்டத்தில் நான் ஜோதிட நூல்களை
யெல்லாம் ஓரளவிற்குக் கற்றுத் தெளிந்திருந்தேன்
ஆனாலும் இதுபோன்ற இடங்களுக்குப் போகும்
போது என்னுடைய திருவாயை மூடிக் கொண்டு
என்ன நடக்கிறது என்று கவனிப்பேனேயன்றி
ஒன்றும் பேச மாட்டேன். என் மேதாவித்தனத்தை
எல்லாம் ஸ்லைடு போட்டுக் காட்டமாட்டேன்
என் நண்பர் கொடுத்த அவருடைய ஜாதகத்தை
வாங்கி ஒரு காகிதத்தில் தேவையான விவரங்களைக்
குறிபெடுத்த ஜோதிடர் என் நண்பர் ஒன்றும் சொல்
லாமலேயே கேட்டார்.
"உங்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக மிகுந்த
பணக்கஷ்டம். சரியா?"
என் நண்பர் சற்றுத் திகைத்துப்போய், அரைப்
புன்னகையுடன் பதில் சொன்னார்
"ஆமாம்!"
" வியாபாரத்தில் சரக்குக் கொடுத்த இடத்திலெல்லாம்
சிக்கல். நம்பியவர்கள் எல்லாம ஏமாற்றுவார்கள்.
உங்கள் பாக்கியெல்லாம் ஒன்றும் வசூலாகாது. ஆனால்
உங்களுக்குப் பணம் கொடுத்தவன் நெருக்கடி கொடுப்பான்
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா?"
" ஆமாம்!"
"அதற்குக் காரணம் உங்களுக்கு 2ம் வீட்டில் மாந்தி
மாந்தி அமர்ந்த வீட்டிற்குரியவனான புதனுடைய
புக்தி உங்களுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.
மாந்தி அமர்ந்தவனுடைய புக்தி வாட்டி எடுத்துவிடும்.
மேலும் உங்களுக்கு சனிமகாதிசையில் புதன் புக்தி
சனியும் புதனும் வேறு அஷ்டம சஷ்டமத்தில்
(6th and 8th position to each other) இருக்கிறார்கள். அதுவும்
அனுகூலமாக இல்லை. இந்த தசாபுக்திக் காலம்
மொத்தம் 32 மாதத்தில் 24 மாதங்கள் கழிந்துவிட்டன
இன்னும் 8 மாத காலம் பாக்கி இருக்கிறது. அதற்குப்
பிறகு எல்லாம் சரியாகிவிடும். கவலையை விடுங்கள்
உங்கள் அடிப்படை ஜாதகம் நன்றாக இருக்கிறது
பழைய நிலைமை திரும்பி விடும்" என்று சொல்லி
அனுப்பி வைததார்.
அதன்படியே நடந்தது!
சரி, இதையெல்லாம் எப்படி சொல்கிறார்கள்?
தசாபுக்திகளை வைத்துத்தான் சொல்வார்கள்!
தசாபுத்தி என்றால் என்ன?
ஒவ்வொரு கிரகத்திற்கும் தசாபுக்திகள் (Own Periods)
உண்டு. ஒவ்வொரு கிரகமும் அதனுடைய தசாபுக்தி
நடக்கும்போதுதான் பலனைக் கொடுக்கும்.
(Awarding the benefits to the native of the horoscope)
அதுதான் அடுத்த பாடம்!
பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய பொறுமை
கருதி இன்று இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
நாளை சந்திப்போம்!
(தொடரும்)
-----------------------------------------------------------------
//"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."//
ReplyDeleteஇதை இன்னும் விளக்கமாக எப்படி கெடுக்கும் என்று சொல்வீர்களா? ஏனென்றால் எனக்கும் 29 வயது வரை சுக்கிர தசை நடந்து கொண்டிருந்தது.
///அமர பாரதி அவர்கள் சொல்லியது:
ReplyDelete//"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."//
இதை இன்னும் விளக்கமாக எப்படி கெடுக்கும் என்று சொல்வீர்களா? ///
உங்கள் நட்சத்திரம் என்ன?
அய்யா,
ReplyDeleteநட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம். லக்னம் : துலாம். 2ல் சுக்கிரன். லக்னத்தில் சூரியன், புதன் & குரு. 5ல் ராகு, 7ல் சனி. 10ல் சந்திரன். 12ல் செவ்வாய்.
துலா லக்னமா?
ReplyDelete2ல் சுக்கிரன் என்றால் விருச்சிகத்தில் சுக்கிரனா?
லக்கினத்தை துலா லக்கினத்திற்கு யோககாரகனான் சனி பார்க்கிறார்
லக்கினத்தில் லாபதிபதி சூரியன் இருக்கிறார். இருவருமே நீசம் ஆனாலும் ஆதிபத்ய பலனுண்டு
லக்கினாதிபதி 2ல் இருக்கிறார்.
எல்லாவற்ரையும் விட சிறப்பாக குரு லக்கினத்தில் இருக்கிறார்
குரு லக்கினத்தில் இருப்பது ந்ன்மை
அவர் உங்கள் ஜாதகத்திற்கு ஆறாம் வீட்டிற்கு அதிபதி!
இருந்தாலும் ந்னமை!
சரி விஷயத்திற்கு வருகிறேன்
குட்டிச் சுக்கிரன் என்பது
அஸ்விணி, மகம், மூலம் (அதிபதி கேது)
பரணி, பூரம், பூர்ரடம் (அதிபதி சுக்கிரன்)
ஆகிய இந்த ஆறு நட்சத்திர்க்காரகளுக்குத்தான்
மற்றவர்களுக்கு இல்லை!
ஏனென்றால் இவர்களுக்குத்தான் ஒரு வயதிலிருந்து ஏழு வயதிற்குள்
சுக்கிரதசை துவங்கி
18 வயதிற்குள் தன்னுடைய பாதி தசாப்பலன்களைக் கொடுத்திருக்கும்
கெடுக்கும் என்றால் - படிப்பில் கவனமினமை, பொறுப்பின்மை
எல்லாவற்றிலும் ஒரு விளயாட்டுத்தன்மை, கேளிக்கை, சேட்டை
என்று ( கிராமங்களில் மைனர் என்பார்களே அப்படி) ஆக்கி
வைத்திருக்கும். பின் வாழக்கையில் அதெல்லாம் சரியாகிவிடும்
விளக்கம் போதுமா?
அய்யா,
ReplyDeleteதங்களுடைய விரிவான விளக்கத்திற்கு நன்றிகள்.
//அதுக்கெல்லாம் காரணம் பையன் மூல நட்சத்திரம்.
ReplyDeleteசின்ன வயசிலேயே சுக்கிர தசை வந்திருச்சு. சின்ன
வயசில சுக்கிர தசை வரக்கூடாது. குட்டிச் சுக்கிரன்
கூடிக் கெடுக்கும். அதோட பையனை சுகவாசியா
வச்சு - அவனைக் கெடுத்துவிட்டுப்போய் விடும்!
அவன் பிறந்ததிலிருந்து உங்களுக்குப் பணம் நிறைய
வந்திருக்கும். அதனால அவனைச் செல்லம் கொடுத்தும்
வளர்த்திருப்பீங்க! ஜாதகப்படி கர்ப்பச்செல் இருப்பு
கேதுல 3 வருஷம், சுக்கிரன் ஒரு 20 வருஷம், அதுக்க
ப்புறம் வரப்போகிற சூரிய தசை ஒரு ஆறு வருஷம்
ஆக மொத்தம் 29 வருஷம். //
தலைவா,
இது நமக்கு அப்படியே இருக்கு...
மூலம் ஒண்ணாம் பாதம் (உச்சம்)
சுக்கிர தசை தான் இப்ப நடக்குது (24 வயசு)...
சின்ன வயசுலயே ஓரளவு நல்லாவே சம்பாதிக்கிறேன்... இது எப்படி???
//
ReplyDeleteகெடுக்கும் என்றால் - படிப்பில் கவனமினமை, பொறுப்பின்மை
எல்லாவற்றிலும் ஒரு விளயாட்டுத்தன்மை, கேளிக்கை, சேட்டை
என்று ( கிராமங்களில் மைனர் என்பார்களே அப்படி) ஆக்கி
வைத்திருக்கும். பின் வாழக்கையில் அதெல்லாம் சரியாகிவிடும்//
இது எல்லாத்துக்குமே அப்போஸிட் நானு... எனக்கு நட்சத்திரம் மூலம்...
அதே சுக்கிர தசைதான்...
இது எப்படி???
நீங்க சொல்றது பொய்னு நான் சொல்ல வரலை... நீங்க தான் எல்லாத்தையும் நம்ம ஜாதகத்தோட பொறுத்தி பார்க்க சொன்னீங்க. அதனால தான் :-))
ஐயா
ReplyDeleteஉள்ளேன்,ஐயா.
//"குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும்."//
இது முற்றிலும் உண்மை. பலரது அனுபத்தில் கண்டிருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு ஒரு பெண் குழந்தை பூரம் 4ம் பாதத்தில் பிறந்தது.
அதன் சாதகத்தில் சுக்கிரனுடன் 6ம் அதிபதி பகையுடன் கூட்டுச் சேர,
சுக்கிரதிசை முடியும்வரை குழந்தை நோயினால் சாகுந்தறுவாயில் இருந்தது.6ம் அதிபதி ரோகமல்லவா அது ரோகத்தில் வாட்டிவிட்டது.
அதன் பின் சூரிய திசையிலும் வேறு நோய்கள் இடையிடையே வந்தன.சந்திர திசையில்த் தான் ஆரோகியமாக வளர்ந்தது.
எந்த வீட்டு அதிபதியுடன் குட்டிச் சுக்கிரன் இருக்கிறானோ அதுக்கேற்ப பலன் அமைந்துவிடும் என சொல்லப்படுகிறது, உண்மைதானா?
நன்றி
///வெட்டிப்பயல் அவர்கள் சொல்லியது:இது நமக்கு அப்படியே இருக்கு...
ReplyDeleteமூலம் ஒண்ணாம் பாதம் (உச்சம்)
சுக்கிர தசை தான் இப்ப நடக்குது (24 வயசு)...
சின்ன வயசுலயே ஓரளவு நல்லாவே சம்பாதிக்கிறேன்... இது எப்படி??? ////
ஒரு பொது விதியையோ அல்லது single rule ஐயோ வைத்து எந்த முடிவிற்கும் வரக்கூடாது.
ஜாதகத்தில் லக்கினாதிபதி, 4ற்குரிய கல்வியைக் கொடுக்கக்கூடிய கிரகம், 9ம் வீட்டிற்குரிய பாக்கியாதிபதி ஆகியவை அந்த மூல நட்சத்திரக்குழந்தையின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால். அதன்படிதான் நடக்கும். அதாவது அந்த கிரகங்கள் வலிமையாக இருந்து அவர்களுடன் சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் அல்லது சுக்கிரனைவிட அவர்கள் வலிமையுடையவர்களாக இருந்தாலும்
ப்லன் மாறுபடும்
இவற்றையெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் தசாபுத்தியைப் பற்றி எழுதும் போது எழுத உள்ளேன்
மிஸ்டர் பாலாஜி!
//செல்லி அவர்கள் சொல்லியது: எந்த வீட்டு அதிபதியுடன் குட்டிச் சுக்கிரன் இருக்கிறானோ அதுக்கேற்ப பலன் அமைந்துவிடும் என சொல்லப்படுகிறது, உண்மைதானா?///
ReplyDeleteஆமாம் சகோதரி!
இதற்குமுன் வெட்டிப்பயல் அவர்களின் பின்னூட்டத்திர்கு நான் அளித்துள்ள பதிலைப் படிக்க வேண்டுகிறேன்
ஐயா,
ReplyDeleteஒருவருக்கு 90 வது வயதில் சுக்கிர தசை வருதல் நல்லதா?
(அந்த வயசு வரைக்கும் அவர் இருப்பாரா என்பதே சந்தேகம்?)
(அந்தப் பிரபலம் யார் என்பதையும் உங்களுக்கு அப்புறமா சொல்றேன்)
(இது விளையாட்டாகக் கேட்க வில்லை. நிஜமாகவே அப்படி ஒரு ஜாதகத்தில் இருக்கு)
அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை
ReplyDeleteகல்யாணம் வரைக்குமா?அதுக்குப்பிறகா ஐயா? :-))
நம்ம வெ. பயலுக்கு பதில் கொடுக்கும் போது அப்படியே நைசாக அவர் இயற்பெயரை போட்டதற்கு கூட காரணம் உண்டா?
ஏனென்றால் பல சமயங்களில் நானும் அப்படிதான் அழைப்பேன்.அவர் பொரொபைல் பெயரில் அழைப்பது ஏனோ ஒருமையில் இருப்பது போல் தோனுகிறது.
பாலாஜி உங்களை வைத்து கும்மி அடிக்கவில்லை.:-))
///நாமக்கல்லார் கேட்டது:ஐயா,
ReplyDeleteஒருவருக்கு 90 வது வயதில் சுக்கிர தசை வருதல் நல்லதா?////
90 வயதில் கல்லூரிக்குப் போவது நல்லதா?
90 வயதில் திருமணம் செய்து கொள்வது ந்ல்லதா?
90 வயதில் காரோட்டப் பழகிக் கொள்வது நல்லதா?
சுக்கிரதசை என்பது ந்ல்லதையும் செய்யும் தீமையையும் செய்யும்.
ஒருவரின் ஜாதகத்தில் அதற்குரிய Portfolio வையும் Placementஐயும் பொருத்தது அது.
பொதுவாக நன்மை செய்யக்கூடிய சுக்கிரதசை (75% அப்படித்தான் இருக்கும்)20 வ்யது முதல் 50 வயது வரை உள்ள காலகட்டத்திற்குள் ஆரம்பித்து முடிந்து விடவேண்டும்
அப்போதுதான் ஜாதகன் அதை முழுதாக enjoy பண்ண முடியும்
50 வயதிற்கு மேல் வரும் சுக்கிரதசையால் அவனைச் சார்ந்தவர்கள்தான் அவன் மூலம் அந்தப் பலனை அனுபவிப்பார்கள்
(ex: His wife and children)
//வடுவூரார சொல்லியது:அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை
ReplyDeleteகல்யாணம் வரைக்குமா?அதுக்குப்பிறகா ஐயா? :-))///
அதாவது ஜோதிடரிம் அதற்குப் பிறகு நாங்கள் பேசியது முக்கியமில்லை என்ற பொருளில் எழுதியுள்ளேன்
வெட்டி என்று அவரை அழைக்க மனம்
வரவில்லை. அதனால்தான் நடுநடுவே பாலாஜி என்ற அவருடைய இய்ற்பெயரைக் குறிப்பிடுவேன்.
///பாலாஜி உங்களை வைத்து கும்மி அடிக்கவில்லை.:-)) ///
என்னை வைத்து யாரும் கும்மி அடிக்க மாட்டார்கள். ஏனெறால் எனது சுபாவம் அப்படி:-)))
//என்னை வைத்து யாரும் கும்மி அடிக்க மாட்டார்கள். ஏனெறால் எனது சுபாவம் அப்படி//
ReplyDeleteஆமாம்! இவரை வைத்து யாரும் கும்மி அடிக்க மாட்டார்கள்!
கும்மி அடிக்கும் வகுப்பும் இதுவல்ல!
//50 வயதிற்கு மேல் வரும் சுக்கிரதசையால் அவனைச் சார்ந்தவர்கள்தான் அவன் மூலம் அந்தப் பலனை அனுபவிப்பார்கள்//
ReplyDeleteஅப்போ அந்த பிரபலத்துக்கு சுக்கிர தசையே கிடையாதா?
:(
சுப்பையா சார்,
ReplyDeleteஊர் திரும்பி ஒரு வாரம்...இப்ப தான் இப்பதிவுகளுக்குள் வந்தேன்!
அருமையாவும் எளிமையாவும் சொல்றீங்க! நன்றி.
ஒரு வேண்டுகோள்:
தசாபுத்தி பலம் பற்றி எழுதும் போது, அதோடு கூடவே கோசார பலம், ஆவை இரண்டையும் எப்படி சீர் தூக்கிப் பார்ப்பது என்றும் எழுதினால், இன்னும் பல பேருக்குத் தெளிவு கிடைக்கும்.
////நாமக்கல் சிபி said...
ReplyDelete//என்னை வைத்து யாரும் கும்மி அடிக்க மாட்டார்கள்.
ஏனெறால் எனது சுபாவம் அப்படி//
ஆமாம்! இவரை வைத்து யாரும் கும்மி அடிக்க மாட்டார்கள்!
கும்மி அடிக்கும் வகுப்பும் இதுவல்ல!/////
இப்படி நீங்கள் சொன்னால் ஏதோ ஆபத்து பின்னால்
வருகிறது என்று அர்த்தம்!:-)))))
//////நாமக்கல் சிபி said...
ReplyDelete//50 வயதிற்கு மேல் வரும் சுக்கிரதசையால் அவனைச்
சார்ந்தவர்கள்தான் அவன் மூலம் அந்தப் பலனை அனுபவிப்பார்கள்//
அப்போ அந்த பிரபலத்துக்கு சுக்கிர தசையே கிடையாதா?///
ஜாதகம் இல்லாமல் எப்படிச் சொல்வது மிஸ்டர் சிபி?
யாரது அந்தப் பிரபலம் - அதுவும் 90 வயதில் சுக்கிர தசைக்காக
ஏங்குவது?
////// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteசுப்பையா சார்,
ஊர் திரும்பி ஒரு வாரம்...இப்ப தான் இப்பதிவுகளுக்குள் வந்தேன்!
அருமையாவும் எளிமையாவும் சொல்றீங்க! நன்றி.
ஒரு வேண்டுகோள்:
தசாபுத்தி பலம் பற்றி எழுதும் போது, அதோடு கூடவே கோசார பலம்,
இரண்டையும் எப்படி சீர் தூக்கிப் பார்ப்பது என்றும் எழுதினால்,
இன்னும் பல பேருக்குத் தெளிவு கிடைக்கும்.////
கோச்சாரம் பற்றி மட்டுமல்ல , அஷ்டகவர்க்கம் பற்றியும்
விரிவாக எழுத உள்ளேன் மிஸ்டர் KRS
கடக லக்னம் லக்னத்தில் குருவும் கேதுவும் கடக குரு உச்சம் வக்கிரம் அப்புறம் அதிபதி சந்திரன் ரிஷப ராசி ராசில செவ்வாய் வக்கிரம். சூரியன் லக்னத்துக்கு அஞ்சில் சூரியனும் சுக்கிரனும் இருக்காக எதிரிகள்
ReplyDeleteகடக குரு உச்சம் வக்கிரம் இதனால் குரு நல்ல பலன் கொடுக்குமாம் அல்லது நிச பலன்கொடுக்குமா?
ReplyDelete