மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19

===========================================================
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19
கிரகங்களின் சேர்க்கை (Association of Planets)

ஜாதகத்தில் கிரகங்கள் வீடுகளில் தனித்திருந்தால்
நல்லது. அல்லது ஒரு வீட்டில் (30 பாகைக்குள்)
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள்
சேர்ந்திருக்கும்போது அவை நன்மை செய்யக்கூடிய
கிரகங்களாகவோ அல்லது ஒன்றிற்கு ஒன்று நட்புடைய
கிரகங்களாகவோ இருந்தால் நல்லது.

இல்லையென்றால் தீயது!

அந்தத் தீமையும் வேறு ஒரு பிரதான நன்மை
பயக்கும் கிரகத்தின் பார்வை அந்த
வீட்டிற்குக் கிடைக்குமென்றால் தீமையின் அளவு
பெரும் அளவு குறைக்கப்பட்டுவிடும்
-----------------------------------------------------------------------
ஒரு அறையில் ஒருவர் மட்டும் அமர்ந்து வேலை
பார்க்கும் போது அவரது வேலை முழுக்கவனத்துடனும்
தனித்த்தன்மையுடனும் சிறப்பாக இருக்கும்.

அதே அறையில் இருவரை அமர்த்தி வேலை செய்யச்
சொல்லும்போது, ஒருவரால் மற்றவருடைய வேலை
அதிக சிறப்படையவும் வாய்ப்பு இருக்கிறது. அதே
நேரத்தில் கெட்டுச் சிதறிக் குறையவும் வாய்ப்பு
இருக்கிறது.

அது, அந்த இருவருடைய திறமை, குணம், ஒத்துப்
போகும் தன்மை இவற்றைப் பொருத்தது

அதே நேரத்தில் ஒரு புத்திசாலியையும், ஒரு மடைய
னையும், அல்லது ஒரு சோம்பேறியையும் அல்லது
ஒரு குஜால் பேர்வழியையும் அல்லது ஒரு கிரிமினலையும்
ஜோடி சேர்த்து அமரவைத்து வேலை செய்யச்
சொன்னால் வேலை எப்படி நடக்கும் ?
அல்லது எப்படி இருக்கும் ? என்று நீங்களே யோசித்துப்
பாருங்கள்!

அதானால்தான் பல நிறுவனங்களில் Cabin அமைத்து
அல்லது Partition பலகைகள் அமைத்துத் தங்கள்
ஊழியர்களை (staff) அமர்த்தி வேலை வாங்குவார்கள்
---------------------------------------------------------------
இரண்டு கிரகங்களின் சேர்க்கைக்கே இப்படியென்றால்
மூன்று அல்லது நான்கு கிரகங்கள் சேர்ந்து ஒரே
வீட்டில் இருந்தால் என்ன ஆகும்?

அதற்குப் பெயர் கிரக யுத்தம் (Planetary War)
அதைப் பற்றி விரிவாகப் பின் வரும் பகுதியில்
பார்ப்போம். இப்போது கிரக சேர்க்கையை
மட்டும் தெரிந்து கொள்வோம்.

(பாடம் திசை மாறக் கூடாது என்பதில் நான்
கவனமாக இருக்கிறேன், அதே போல ஒரே
அத்தியாயத்தில் ஓவர் டோஸாக எதையும்
கொடுக்க விரும்பவில்லை. 250mg Capsule மருந்து
என்றால் அதை மருத்துவர் சொல்லியதுபோல
ஒரு வேளைக்கு ஒன்று என்று சாப்பிடுவோம்
இல்லையா அதுபோல!)

இரண்டு கிரகங்கள் அப்படியே ஒரே வீட்டில்
இருந்தாலும் அவை ஒன்றை விட்டு ஒன்று தள்ளி
(at least 5 degree) இருக்கவேண்டும். அப்படி இல்லாமல்
5 பாகைக்குள் இரண்டும் இருந்தால் அது நல்லதல்ல!

அதைக் கிரக அஸ்தமணம் (Combust) என்பார்கள்

அப்படி அஸ்தமணமானால் முதலில் நிற்கும்
கிரகம்தான் வலிமையுடம் இருக்கும். அதற்கு
5 பாகைக்குள் பின்னால் வந்து நிற்கும் கிரகம்
வலிமை இழந்து விடும்

இதுவே சூரியனுக்கும் மட்டும் 10 பாகைகள் என்று
கணக்கு. ஜாதகத்தில் சூரியனுக்குப் பக்கத்தில் அமரும்
எந்தக் கிரகமும் 10 டிகிரி தள்ளியே இருந்தால்
நல்லது. இல்லையென்றால் வலிமை இழந்து விடும்

வலிமை இழந்தால் என்ன ஆகும்?

ஜாதகனுக்கு நன்மையைச் செய்யும் சக்தியை அது
இழந்து விடும்.

உதாரணத்திற்கு களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவன்
ஜாதகத்தில் வேறு ஒரு கிரகத்துடன் சேர்ந்து
அஸ்தமண்ம் ஆகியிருந்தால் ஜாதகனுக்கு உரிய
பருவத்தில் திருமணம் ஆகாது! 21 முதல் 25 வயதிகுள்
ஆகவேண்டிய திருமணம் 35 முதல் 40 வயதில் நடக்கும்

மேலும் ஒரு உதாரணம்: ஏழில்(ஏழாம் வீட்டில்) இரண்டு
தீய கிரகங்கள் சேர்ந்திருந்தால் ஜாதகனுக்கு அலலது
பெண்ணாக இருந்தால் ஜாதகிக்குத் தீமை.

அது களத்திர ஸ்தானம். திருமண வாழ்க்கைக்கான
இடம் அங்கே பெண் ஜாதகத்தில் இரண்டு தீய
கிரகங்கள் இருந்தால் அவளுடைய மண வாழ்க்கை
போராட்டம் மிகுந்ததாக இருக்கும். நிம்மதியில்லாத
மண வாழ்க்கை அமைந்து விடும.

அந்த இடம் குருவின் பார்வை பெற்றிருந்தால் அந்தத்
தீமை குறைந்து விடும் அல்லது முற்றிலும் விலகி
விடும். குரு பார்ககக் கோடி தோஷம் நீங்கும் என்
கிறார்களே அதுதான் இது!

ஆண் ஜாதகமாக இருந்தால் இதே அமைப்பிற்கு
அவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு
ஏற்பட்டு விடும் ( தொடர்பு ஏற்பட்டால் சந்தோஷமா?
அல்ல!) ஆரம்பத்தில் அவனுக்கு அது சந்தோஷமாகத்தான்
இருக்கும். பின்னால் அவஸ்தையாக மாறிவிடும்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று
ஆசைகளில் மனிதன் அதிகமாக சிக்கித் தவிப்பது
இந்தப் பெண்ணாசையில்தான். அவர்களுடைய
ஜாதகங்களில் இந்த ஏழாம் வீடு கெட்டுப் போயிருக்கும்
அல்லது 7ம் வீட்டிற்குரியவன் கெட்டுப்போயிருப்பான்

ஏழாம் வீட்டிற்குரியவன் என்பது - உதாரணத்திற்கு
சிம்ம லக்கினம் என்றால் 7ம் வீடு கும்பம். அதன் அதிபதி
(Owner) சனி. அவர் லக்கினத்திற்கு 5, 9லோ அல்லது உச்சம்பெற்று
துலாம் வீட்டில் இருந்தாலோ நல்ல மனைவி அமைவாள்

அதில்லாமல் அந்த் வீட்டிற்குரிய சனி லக்கினத்திற்கு 8
அல்லது 12ம் வீட்டிலோ அமர்ந்தால் திருமண வாழ்க்கை
சந்தோஷம் தருவதாக இருக்காது!

அதே ஜாதகனுக்கு, கிரக சேர்க்கையில் அந்த ஏழாம்
வீட்டிற்குரிய சனி சந்திரனுடன் (He is the 12 th lord for that
horoscope) சேர்ந்து எங்கே இருந்தாலும் மண வாழ்க்கை
நிம்மதியில்லாமல் இருக்கும்

இந்த 7ம் வீட்டைப் ப்ற்றிப் பின் வரும் அத்தியாயங்
களில் விரிவாகப் பார்ப்போம். இப்போது சேர்க்கையைப்
பற்றி சொல்கிறேன்
-----------------------------------------------------------------------
1. சூரியனுக்கு: சந்திரன், செவ்வாய், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த நான்கும்
பகைக் கிரகங்கள்
புதன் மட்டும் சமக் கிரகம் (Neutral Planet)

2.சந்திரனுக்கு: சூரியனும் புதனும் நட்புக்
கிரகங்கள்
ராகுவும், கேதுவும் பகைக் கிரகங்கள்
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி இந்நான்கும் சமக்
கிரகங்கள்

3. செவ்வாய்க்கு: சூரியன், சந்திரன், குரு இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதன், ராகு, கேது இம்மூன்றும் பகைக்
கிரகங்கள்
சுக்கிரனும், சனியும் சம்க் கிரகங்கள்

4. புதனுக்கு: சூரியனும் சுக்கிரனும் நட்புக்
கிரகங்கள்
சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்
செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும்
சமக் கிரகங்கள்

5. குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம்
மூன்றும் நட்புக் கிரகங்கள்.
புதனும், சுக்கிரனும் பகைக் கிரகங்கள்
சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள்

6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்
நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள்
செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள்

7. சனிக்கு: புதன், சுக்கிரன், ராகு, கேது
இந்நான்கும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
குரு மட்டும் சமக் கிரகம்

8. இராகுவுக்கும், கேதுவுக்கும்:
சுக்கிரனும், சனியும் நட்புக் கிரகங்கள்
சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும்
பகைக் கிரகங்கள்
புதனும், குருவும் சமக் கிரகங்கள்

கிரகங்கள் சேர்க்கையில் ஒரு கிரகம்
தன்னுடைய நட்பு அல்லது சமக்
கிரகத்துடன் சேர்வது நன்மை பயக்கும்

அதுவே பகைக் கிரகத்துடன் சேரும்
பொழுது நன்மை பயக்காது

பெரிய அதிகாரத்தில் இருப்பவருடன்
சேரும் பொழுது கிடைக்கும் நன்மை
ஒரு பேட்டை தாதாவுடன் சேரும்போது
கிடைக்குமா?

ஒரு மிகப் பெரிய போலீஸ் அதிகாரியின்
நட்பில் கிடைக்கும் சந்தோஷம், ஒரு
கிரிமினல் ஆசாமியுடன் சேரும்போது
கிடைக்குமா?

சேர்க்கையின் பலனும் அப்படித்தான்
-----------------------------------------------------------
இயற்கையாகவே நன்மை பயக்கக்கூடிய
சில கிரக சேர்க்கைகள்:

பல கிரக சேர்க்கைகள் உள்ளன. நான்
மாதிரிக்கு ஐந்தை மட்டும் கொடுத்துள்ளேன்

1. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால்
அதைக் குருச்சந்திர யோகம் என்பார்கள்

2. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்திருந்தால்
சசிமங்கள யோகம் என்பார்கள்

3. புதனும், சூரியனும் சேர்ந்திருந்தால்
புத-ஆதித்ய யோகம் என்பார்கள்

4. புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால்
நிபுனத்துவ யோகம் என்பார்கள்

5. ஒரு நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு
உச்சம் பெற்ற கிரகம் சேர்ந்திருந்தால்
அது நீசபங்க ராஜயோகம் எனப்படும்

நீசபங்க ராஜயோகம் - அமைப்பு:

மேஷத்தில் சனியும், சூரியனும்
சேர்ந்திருப்பது

ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும்
சேர்ந்திருப்பது

கடகத்தில் செவ்வாயும், குருவும்
சேர்ந்திருப்பது

கன்னியில் சுக்கிரனும், புதனும்
சேர்ந்திருப்பது

துலாத்தில் சூரியனும், சனியும்
சேர்ந்திருப்பது

மகரத்தில் குருவும், செவ்வாயும்
சேர்ந்திருப்பது

மீனத்தில் புதனும், சுக்கிரனும்
சேர்ந்திருப்பது

நீசபங்க ராஜயோக கிரகங்கள் - தாங்கள்
சம்பந்தப் பட்ட வீடுகளை வைத்து
மிகப் பெரிய - அளவிடமுடியாத
நன்மைகளைச் செய்துவிடும்

அது ஒவ்வொரு லக்கினத்துக்காரர்களுக்கும்
தனித்தனியாக மாறுபடும்.
அவரவர் லக்கினத்தை வைத்து - அந்த
நீசபங்க ராஜயோக கிரகங்கள் சம்பந்தப்
பட்டுள்ள இடத்தை வைத்து அதற்குண்டான
பலன்களை அள்ளித்தந்துவிடும்!

ஒரு சிம்ம லக்கின ஜாதகம். அந்த ஜாகத்தின்
பத்தாம் வீட்டிற்குரிய சுக்கிரன் நீசனாகி கன்னி
ராசியில் அம்ர்ந்துவிடும் போது அங்கே புதன்
இருந்தால் - அது புதனுக்கு சொந்த வீடும்
உச்ச வீடும் ஆனதால் புதனுடன் சுக்கிரன்
சேர்ந்து நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அந்த
ஜாதகன் பெரிய தொழில் அதிபர் ஆகிவிடுவான்

10க்குரிய சுக்கிரன் நீசமானதால் வேலையின்றி
ரோட்டில் திரிய வேண்டிய ஆசாமி, உச்ச புதன்
உடன் சேர்ந்ததால் பெரிய Business Magnet ஆகி
பணத்தில் புரளுவான். இதுதான் நீசபங்க ராஜ
யோகத்தின் பலன்

இதுவே 10ம் வீடாக இல்லாமல் 4ம் வீடான கல்வி
ஸ்தானமாக இருந்தால் ஜாதகன் பெரிய Scholar
ஆகி விடுவான். சாதாரண விரிவுரையாளராக
இருந்த அவனை இந்த ராஜயோகம் பல்கலைக்கழக
துணை வேந்தர் பதவிவரை கொண்டுபோய்ச்
சேர்த்துவிடும்!

இதுபோன்று வாழ்க்கையின் பலதுறைகளிலும்
பல நிலைப்பாடுகளிலும் இந்த நீசபங்க கிரக
சேர்க்கையின் தன்மை, அது அமையப்பெற்ற
ஜாதகனுக்கு அற்புதமான நன்மையைச் செய்யும்

அந்த நன்மை எது சம்பந்தப்பட்டதாய் வேண்டு
மானலும் இருக்கலாம். அது அந்த ஜாதகனின்
ஜாதகம் சம்பந்தப் பட்டதாகவும், அந்தக் கிரகங்களின்
தசா புக்திக் காலங்களிலும் நிச்சயாமாக நிறைவேறும்!

இந்த யோகங்களுக்குரிய பலன்களை
பின் வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்
100ற்கும் மேற்ப்ட்ட முக்கியமான யோகங்கள்
உள்ளன!

பதிவின் நீளம் கருதி - இன்று இத்துடன்
நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!

(தொடரும்)
-------------------------------------------------

Article about combust

Article about conjunction


32 comments:

  1. en jadakathil. meshathil suriyan,bhuthan and sani irukku. Neengal kuriyapadi enakku,புத-ஆதித்ய யோகம் +நீசபங்க ராஜயோகம் irukka? makara lagnam nan. Nan Bsc Zooo padithu ippa USA la irukken. Ippa theriyutha nan eppadi inga..apparam 9la kuru + kethu.Pagai eppadi kandu pedippathu?

    ReplyDelete
  2. வணக்கம், அய்யா!

    கஷ்டமான பாடமாக (வகுப்பாக)இருப்பதால், மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  3. குருவே,

    இன்றைய வகுப்பில் வினா - விடை பகுதி இல்லையா? வழக்கம் போல் அட்டவணை தருவீர்கள் அல்லவா?

    ராஜா.

    நேற்றைய வகுப்பிற்கு மட்டம் போட்டு விட்டேன்.

    ReplyDelete
  4. "cumbust" சரியாகப் புரியவில்லை.

    //குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் நட்புக் கிரகங்கள். புதனும்,சந்திரனும் பகைக் கிரகங்கள். சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள்//

    இதில் ஏதோ பிழை உள்ளது போல் தெரிகிறது.

    ReplyDelete
  5. உள்ளேன் ஐயா.
    கிரகச் சேர்க்கை பற்றிய வகுப்பு நன்றாக இருக்கிறது.
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. //////aravindaan said...
    en jadakathil. meshathil suriyan,bhuthan and sani irukku. Neengal kuriyapadi enakku,
    புத-ஆதித்ய யோகம் +நீசபங்க ராஜயோகம் irukka? makara lagnam nan.
    Nan Bsc Zooo padithu ippa USA la irukken. Ippa theriyutha nan eppadi inga.
    .apparam 9la kuru + kethu.Pagai eppadi kandu pedippathu?///

    இதற்கு முன் பதிவில் ஜாதகம் கணிப்பது பற்றியும்
    அதற்குரிய இணைய தளம் பற்றியும் எழுதியுள்ளேன்
    அதைப் படித்துப்பார்க்க வேண்டுகிறேன்
    கணித்தால் அதில் கிரக நிலைப்பாடுகள்,
    பாகைகளுடன் துல்லியமாக இருக்கும்

    ReplyDelete
  7. ////தென்றல் said...
    வணக்கம், அய்யா!

    கஷ்டமான பாடமாக (வகுப்பாக)இருப்பதால்,
    மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு வருகிறேன்.///

    பாடம் கஷ்டம்தான். ஆனால் அதை சரியாகச்
    சொல்லிக் கொடுத்திருக்கிறேனா? இல்லையா?
    அதைச் சொல்லுங்கள்!:-)))

    ReplyDelete
  8. ///////Rajagopal said...குருவே,
    இன்றைய வகுப்பில் வினா - விடை பகுதி இல்லையா?
    வழக்கம் போல் அட்டவணை தருவீர்கள் அல்லவா?///

    தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் அட்டவணை
    கொடுத்துக் கொண்டுதானே வருகிறேன்

    இந்தக் குறிப்பிட்ட பாடத்திற்கு எந்த இடத்திற்கு
    அட்டவணை வேண்டும் சொல்லுங்கள்
    தருகிறேன்

    ReplyDelete
  9. ////ராவணன் said... "cumbust" சரியாகப் புரியவில்லை////

    அஸ்தமணம் (Combust) என்பது ஒன்றும் பெரிய
    விஷயமில்லை !
    இரண்டு பேருந்துகள் ஒரு நெடுஞ்சாலையில்
    ஒன்றிற்குப் பின்னால் ஒன்று வேகமாகச் சென்று
    கொண்டிருக்கின்றன.இரண்டுமே Air Brake என்னும்
    நவீன பிரேக்குகள் பொருத்தப்பட்ட வண்டிகள்
    பிரேக்கை அடித்தால் சடனாக ஐந்தடி தூரத்திற்குள்
    வண்டி நின்றுவிடும். குறுக்கே யாரவது ஓடினால்
    விபத்தைத் தடுக்க இந்த வசதி
    பின்னால வரும் வண்டி மிகவும் நெருக்கத்தில் தொடர்ந்து
    வந்தால், முன் வண்டிக்காரர் பிரேக் அடிப்பதைக் கவனிக்காமல்
    அவர் மீது மோதிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு

    ஆக்வே வண்டியின் பின்னால் இப்படி எழுதப் பெற்றிருக்கும்
    "30 அடி இடை வெளிவிட்டு வரவும் அல்லது தொடரவும்"

    அதுபோல கிரகங்களூக்குள் உள்ள இடைவெளி 5 டிகிர் (பாகை)
    இருக்க வேண்டும் அப்படி இல்லாத போது அது முன்னால்
    சென்ற கிரகத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகி விட்டது
    போன்ற அமைப்பில் இங்கே அஸ்தமணம் (Combust)
    கணக்கிடப் படுகிறது.
    புரியும்படியாக் இந்த விளக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்
    மிஸ்டர் ராவணன். பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

    //குருவுக்கு: சூரியன், சந்திரன், செவ்வாய் இம்மூன்றும் நட்புக் கிரகங்கள். புதனும்,சந்திரனும் பகைக் கிரகங்கள். சனி, ராகு, கேது இம்மூன்றும் சமக் கிரகங்கள்// இதில் ஏதோ பிழை உள்ளது போல் தெரிகிறது.///

    அது தட்டச்சுப்பிழை - சுக்கிரன் என்று இருக்கவேண்டும் - திருத்திவிட்டேன்
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி மிஸ்டர் ராவணன்.

    ReplyDelete
  10. ///// செல்லி said..உள்ளேன் ஐயா.
    கிரகச் சேர்க்கை பற்றிய வகுப்பு நன்றாக இருக்கிறது.
    மிக்க நன்றி! ////

    ஆகா! மாய்ந்து மாய்ந்து தட்டச்சிட்டு எழுதுவதற்கு
    இதுதான் கிடைக்கும் பலன்!
    நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. மிகவும் அருமையான வகுப்பு(ஆசிரியர்/வாத்தியார்) அமைய என்ன மாதவம் செய்தேனோ ... உங்களது இந்த பணிக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். என் குறிக்கோள் பிழை காண்பது இல்லை, பிழையின்றி கற்பதே ...

    //4. புதனுக்கு: சூரியனும் சந்திரனும் நட்புக்
    கிரகங்கள்
    சந்திரன் மட்டுமே பகைக் கிரகம்
    செவ்வாய், குரு, சனி, ராகு, கேது இவ்வைந்தும்
    சமக் கிரகங்கள்//

    இதில் ஏதோ பிழை போல் தோன்றிய காரணத்தால் தங்கள் பார்வைக்கு ...

    ReplyDelete
  12. ///Pரஸ்ரீஅம் ஸைட்: மிகவும் அருமையான வகுப்பு(ஆசிரியர்/வாத்தியார்) அமைய என்ன மாதவம் செய்தேனோ ... உங்களது இந்த பணிக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.////

    மாதவம் எல்லாம் பெரிய வார்த்தை. நான் அதற்கெல்லாம் தகுதியானவன் இல்லை!
    எனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கும்
    தெரியப் படுத்த என் நேரத்தைச் செலவழித்துப் பதிவிடுகிறேன் அவ்வளவுதான்!

    //4. புதனுக்கு: சூரியனும் சந்திரனும் நட்புக்
    கிரகங்கள் ////

    அது தட்டச்சுப்பிழை - சுக்கிரன் என்று இருக்கவேண்டும் - திருத்திவிட்டேன்
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
    Cut & Paste செய்ததால் ஏற்பட்ட தவறு
    இனி அது வராமல் பார்த்துக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  13. ///Pரஸ்ரீஅம் ஸைட்: மிகவும் அருமையான வகுப்பு(ஆசிரியர்/வாத்தியார்) அமைய என்ன மாதவம் செய்தேனோ ... உங்களது இந்த பணிக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.////

    மாதவம் எல்லாம் பெரிய வார்த்தை. நான் அதற்கெல்லாம் தகுதியானவன் இல்லை!
    எனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கும்
    தெரியப் படுத்த என் நேரத்தைச் செலவழித்துப் பதிவிடுகிறேன் அவ்வளவுதான்!

    //4. புதனுக்கு: சூரியனும் சந்திரனும் நட்புக்
    கிரகங்கள் ////

    அது தட்டச்சுப்பிழை - சுக்கிரன் என்று இருக்கவேண்டும் - திருத்திவிட்டேன்
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி
    Cut & Paste செய்ததால் ஏற்பட்ட தவறு
    இனி அது வராமல் பார்த்துக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
  14. Anbu aiyya,

    6. சுக்கிரனுக்கு: புதன், சனி, ராகு, கேது இந்
    நான்கும் நட்புக் கிரகங்கள்
    சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்கள்
    செவ்வாயும், குருவும் சமக் கிரகங்கள்
    Sir just check on குருவும் சமக் கிரகங்கள் for sukran
    Sara
    CMB

    ReplyDelete
  15. Anbu Aiyya,
    ரிஷபத்தில் ராகுவும், சந்திரனும்
    சேர்ந்திருப்பது Neesabanga rajayogam. Is it applicable for Kethu & Chandran in Rishabam. Pls clear my doubt sir.

    Sara,
    CMB

    ReplyDelete
  16. உச்சம், நீசம், நட்பு, பகை, சமம் ஆகியவை ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக வேறுபடும். முன் பதிவு ஒன்றில் - ஆரம்பகாலப் பதிவில் - அட்டவணை கொடுத்துள்ளேன்.அதைப் பாருங்கள் சரவணன்

    ReplyDelete
  17. ////Is it applicable for Kethu & Chandran in Rishabam. Pls clear my doubt sir.Sara,
    CMB////
    ஒரு உச்சமான கிரகத்துடன் ஒரு நீசமான கிரகம் - அது எந்தக் கிரகமாக இருந்தாலும் - நீசபங்க ராஜயோகம்தான். தாங்கள் ஒரு ஜாதகத்தில் எந்த வீட்டிற்கு இயற்கை அதிபதியோ அந்த வீட்டிற்குரிய பலனை அள்ளித் தருவார்கள்.

    ReplyDelete
  18. அருமையான தொகுப்பு - பழைய பாடங்களின்
    தொகுப்பு எப்படி பெருவது - அன்புடன்

    ReplyDelete
  19. Anbu Aiyya,
    Thank you for the response.Further on your reply another doubt.
    ////Is it applicable for Kethu & Chandran in Rishabam. Pls clear my doubt sir.Sara,
    CMB////
    ஒரு உச்சமான கிரகத்துடன் ஒரு நீசமான கிரகம் - அது எந்தக் கிரகமாக இருந்தாலும் - நீசபங்க ராஜயோகம்தான். தாங்கள் ஒரு ஜாதகத்தில் எந்த வீட்டிற்கு இயற்கை அதிபதியோ அந்த வீட்டிற்குரிய பலனை அள்ளித் தருவார்கள்.

    Avai erandum sernthu rishabathil irunthaal mattuma allathu jathagaththil engu irunthalum sirappaana palana? Pls let us know.

    Sara
    CMB

    ReplyDelete
  20. Avai erandum sernthu rishabathil irunthaal mattuma allathu jathagaththil engu irunthalum sirappaana palana? Pls let us know.

    Sara
    CMB
    ---------------------------
    Only in the Rishabam - In other places - they will not attain that position of forming the neecha banga raja yogam

    ReplyDelete
  21. Anbu Aiyya,
    Well understood. Thankyou & sorry for the trouble.
    Sara,
    CMB

    ReplyDelete
  22. ஆசானே,

    சில சந்தேகங்கள் ‍

    1. ஜாதகத்தில், ஒரே வீட்டில் உள்ள‌ கிரகங்களுக்கு இடையே உள்ள பாகைகளை எவ்வாறு அறிந்து கொள்வது?

    2. சூரியனின் நட்பு கிரகங்கள் மற்றும் சம கிரகங்களும் 10 பாகைகளுக்குள் ஒரே ராசியில் இருந்தால் அவையும் அஸ்தமனம் ஆகி விடுமா?

    3. யோக‌ங்க‌ள் ம‌றைவிட‌மான‌ 8‍ம் இட‌த்தில் அமைந்தால் ப‌ல‌ன‌ளிக்குமா அல்ல‌து ம‌றைந்து போகுமா?

    4. இர‌ண்டுக்கு மேற்ப‌ட்ட‌ கிர‌க‌ங்க‌ளின் சேர்க்கை ப‌ல‌ன்க‌ள் (சாத‌க‌ம் அல்ல‌து பாத‌க‌ம்) எவ்வாறு அமையும்? ஏனெனில், வெவ்வேறு permutation/combination சாத்திய‌ம‌ல்ல‌வா?

    சிர‌ம‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும். உங்க‌ள‌து பாட‌ங்க‌ளை ப‌ல‌ மாத‌ங்க‌ளாக‌ அமைதியாக‌ ப‌டித்து வ‌ந்தாலும், இது தான் என‌து முத‌ல் ப‌திவு.

    அன்புட‌ன்,

    வெற்றி

    ReplyDelete
  23. ///sara said...
    Anbu Aiyya,
    Well understood. Thankyou & sorry for the trouble.
    Sara,
    ////
    நன்றி சரவணன்

    ////Kalacharam said...
    ஆசானே,
    சில சந்தேகங்கள்
    சிர‌ம‌த்திற்கு ம‌ன்னிக்க‌வும். உங்க‌ள‌து பாட‌ங்க‌ளை ப‌ல‌ மாத‌ங்க‌ளாக‌ அமைதியாக‌ ப‌டித்து வ‌ந்தாலும், இது தான் என‌து முத‌ல் ப‌திவு.
    அன்புட‌ன்,
    வெற்றி////

    ////1. ஜாதகத்தில், ஒரே வீட்டில் உள்ள‌ கிரகங்களுக்கு இடையே உள்ள பாகைகளை எவ்வாறு அறிந்து கொள்வது?////

    கணினி ஜாதகங்களில் அது கொடுக்கப்பட்டிருக்கும். என் பதிவின் சைடுபாரில் கணினியில் ஜாதகங்களைக் கணிப்பதற்கான சுட்டிகள் உள்ளன. கனித்துப் பாருங்கள்

    //// 2. சூரியனின் நட்பு கிரகங்கள் மற்றும் சம கிரகங்களும் 10 பாகைகளுக்குள் ஒரே ராசியில் இருந்தால் அவையும் அஸ்தமனம் ஆகி விடுமா?///

    ஆமாம்.

    ////3. யோக‌ங்க‌ள் ம‌றைவிட‌மான‌ 8‍ம் இட‌த்தில் அமைந்தால் ப‌ல‌ன‌ளிக்குமா அல்ல‌து ம‌றைந்து போகுமா?///

    6, 8ல் பலன்கள் சரிபாதியாகக் குற‌ைந்‍து போய்விடும்.12ல் சுத்தமாகக் கிடைக்காது.

    ///4. இர‌ண்டுக்கு மேற்ப‌ட்ட‌ கிர‌க‌ங்க‌ளின் சேர்க்கை ப‌ல‌ன்க‌ள் (சாத‌க‌ம் அல்ல‌து பாத‌க‌ம்) எவ்வாறு அமையும்? ஏனெனில், வெவ்வேறு permutation/combination சாத்திய‌ம‌ல்ல‌வா?//

    அது கிரக யுத்தம் எனப்படும்.இரண்டிற்கும் இடைவெளி (சூரியனைத் தவிர்த்து) 5 டிகிரிகளுக்குமேல் இருக்க வேண்டும். அதையும் மீறி இருந்தால் முதலில் நிற்கும் கிரகத்திற்கு மட்டுமே உரிய பலன் கிடைக்கும். இரண்டாவதாக நிற்கும் கிரகம் அஸ்தமனக்கணக்கில் வரும்!

    ReplyDelete
  24. அய்யா,
    எனது ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் , செவ்வாயுடன் , சூரியன் ,புதன் மற்றும் கேது உள்ளது . எனக்கு சசி மங்கள யோகம் உண்டா ? அதன் பலன்களை முடிந்தளவில் சுருக்கிய்யாவது தயவுசெய்து எனக்கு விளக்க வேண்டுகிறேன் .
    அன்புடன்,
    அருப்புகோட்டை பாஸ்கர்

    ReplyDelete
  25. /////அருப்புக்கோட்டை பாஸ்கர் said..
    அய்யா,
    எனது ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரன் , செவ்வாயுடன் , சூரியன் ,புதன் மற்றும் கேது உள்ளது . எனக்கு சசி மங்கள யோகம் உண்டா ? அதன் பலன்களை முடிந்தளவில் சுருக்கியாவது தயவுசெய்து எனக்கு விளக்க வேண்டுகிறேன் .
    அன்புடன்,
    அருப்புகோட்டை பாஸ்கர்/////

    ஐந்து கிரகங்கள் ஒன்றாக இருந்தால் கிரக யுத்தம் (Planetary war)
    இதில் யோகங்கள் அஸ்தமனத்தில் அடிபட்டுப்போகும். ஒவ்வொருகிரகத்திற்கும் (அந்த ஐந்திற்கும்)
    எவ்வளவு பாகைகள் இடைவெளி என்று பாருங்கள்!

    ReplyDelete
  26. //ஒவ்வொருகிரகத்திற்கும் (அந்த ஐந்திற்கும்)
    எவ்வளவு பாகைகள் இடைவெளி என்று பாருங்கள்!//

    சார் ,
    அதை எப்படி தெரிந்து கொள்வது ?
    ஜகன்னாத ஹோரா வில் எங்கு உள்ளது ?
    தயவு செய்து விளக்கவும் !
    அன்புடன் ,
    பாஸ்கர்

    ReplyDelete
  27. /////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    //ஒவ்வொருகிரகத்திற்கும் (அந்த ஐந்திற்கும்)
    எவ்வளவு பாகைகள் இடைவெளி என்று பாருங்கள்!//
    சார் ,
    அதை எப்படி தெரிந்து கொள்வது ?
    ஜகன்னாத ஹோரா வில் எங்கு உள்ளது ?
    தயவு செய்து விளக்கவும் !
    அன்புடன் ,
    பாஸ்கர்////

    planetarypositions.com தளத்தில் ஜாதகத்தைக் கணித்துப் பாருங்கள் அதில் கிடைக்கும்
    அதற்கான சுட்டி சைடுபாரில் உள்ளது!

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. If one planet in neesa and other in its own house,is it neesa panga raja yoga?example:In meena rasi budhan+guru

    ReplyDelete
  30. மிகவும் அருமையான வகுப்பு (ஆசிரியர்/வாத்தியார்) அமைய என்ன தவம் செய்தேனோ ... உங்களது இந்த பணிக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

    Ippo than Ayya Naan Padikiren.
    Anandh

    ReplyDelete
  31. Sir,
    All your lessons are really interesting.I am interested in joining repeat higher jothidam classes to be started from 29.10.2016. Thanking you sir, P.Venkatesan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com