By SP.VR.Subbiah
சூரிய உதயம் ஜோதிடத்தில் முக்கியமானதாகும்
எல்லாச் சுபகாரியங்களும் சூரிய உதயத்திற்குப்
பிறகுதான் செய்யப்படும்
அதுவும் சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு என்றால்
அந்த நேரம் துவங்கி மதியம் 12 மணிக்குள் வளர் சூரியனில்
முடித்துக் கொண்டு விடுவார்கள். அந்த 6 முதல் 12 மணிக்குள்
உள்ள 6 மணி நேர காலத்தில் கூட ராகுகாலம் அல்லது
எமகண்டம் (கேதுவிற்குரியது) இல்லாத நேரத்தில்தான்
செய்வார்கள். இது காலங்காலமாக உள்ளது
பகல் நேரத்திற்குக் கொடுக்கும் முன்னுரிமையை, சூரிய
அஸ்தமணத்திற்குப் பிறகு வரும் 12 மணி நேரத்திற்கு
யாரும் கொடுப்பதில்லை!
அதுபோல வார நாட்களில், செவ்வாய்கிழமையையும்,
சனிக்கிழமையையும் தவிர்த்து விடுவார்கள்.
நீங்கள் எங்காவது அந்த இரு கிழமைகளில் திருமணம்
முகூர்த்தம் இருந்ததாகவோ, அல்லது யாரும் தங்கள்
வீடுகளில் திருமண வைபவங்களை நடத்தியதாகவோ
கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இருக்காது!
நமது நடைமுறை வழக்கங்களில் சூரியனுக்கு அவ்வளவு
முன்னுரிமை உள்ளது.
எல்லாக் கோள்களிலும் பிரதானக் கோள் சூரியன்தான்!
(It is the prime planet in the space)
ஜாதக நிர்ணயத்தில் சூரியன் தந்தைக்கு உரிய கிரகம்
(He is the Pithurkaraka - Authority for Father of the native)
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக
இருந்தால்தான் அந்தக் குழந்தைக்குத் தன் தந்தையின்
அரவணைப்பும், ஆதரவும் கிடைக்கும்.
தந்தையால் குழந்தை பெருமை பெரும்!
குழந்தையின் ஜாதகத்தில், சூரியன் 6, 8, 12 ஆகிய
இடங்களில் மறைந்து விட்டால்
(If the Sun is placed in 6th Or 8th or 12th
houses in a chart - all these houses are inimical houses)
அல்லது நீசமடைந்திருந்தால் (debilitated) அந்தக்
குழந்தைக்குத் தந்தை இறந்திருப்பார் அல்லது
இருந்தாலும் அந்தக் குழந்தையை நன்றாக
வளர்கக்கூடிய நிலையில் இல்லாமல் இருப்பார்
(இது பற்றிய முழு விவரம் பின் பதிவுகளில் வரும்)
அதுபோல சூரியனுக்கு இன்னொரு ஆதிபத்யமும் உண்டு
(Fortfolio) சூரியன் உடல் (Body) காரகன். ஒருவன் நல்ல
உடல்வாகோடு இருக்க வேண்டுமென்றாலும், ஜாதகத்தில்
சூரியன் வலுவாக இருக்க வேண்டும்!
அதுபோல சந்திரன் தாய்க்கு உரிய கிரகம். சந்திரனை
வைத்துத்தான் ஒரு குழந்தையின் தாயைப்பற்றிச் சொல்வார்கள்
சந்திரன் மனதிற்கும் (Mind) உரிய கிரகம். சந்திரன் ஜாதகத்தில்
வலுவாக இருந்தால்தான் மனம் தெளிவாக இருக்கும்
சந்திரன் வேறு தீய கிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் அல்லது
ஜாதகத்தில் மறைந்திருந்தாலும், குழப்பமான மனநிலை
உள்ளவராக இருப்பார்.
(இது பற்றிய முழு விவரம் பின் பதிவுகளில் வரும்)
------------------------------------------------------
சூரிய உதயம்
சூரிய உதயம் வருடம் 365.25 நாட்களும் ஒரே மாதிரியாக
இருக்காது. பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல தினமும்
காலை 6.00 மணிக்கு சூரிய உதயம் இருக்காது
இன்று (மாசி மாதம் 28ம் தேதி) சூரிய உதயம் காலை
6.29 மணிக்கு. ஆனால் வெய்யில் காலமான வைகாசி
மாதத்தில் சூரியன் காலை 5.53 க்குகே உதயமாகிவிடும்
இந்த வித்தியாசம், சூரியனின் சுழற்சியையும்,அதனால்
பூமியில் ஏற்படும் பருவ மாற்றங்களையும் வைத்து
வேறுபடுகிறது. குளிர்காலம், கோடைகாலம், இலை
யுதிர்காலம், வசந்தகாலம் (Winter, Summer, Autumn, Spring)
என்று பருவங்களில் மாற்றங்களைக் கொடுப்பதும் சூரியனின்
சுழற்சிதான், அதேபோல சூரிய உதயகால மாற்றமும்
அந்த சுழற்சியால்தான்
The Sun does not revolve around the Earth--it's the other
way around. Nonetheless, the Sun does not rise at the same
time each morning, either. For the most part, this is because
the Sun's path through the sky is higher in spring and summer,
and lower in autumn and winter. As a result, in spring and
summer, the Sun is above the horizon for a longer portion
of the 24-hour day, and it rises earlier than on average.
During autumn and winter, it's the opposite: the Sun
is above the horizon for a shorter portion of the 24-hour
day, and it rises later than on average.
இதற்கான சுட்டி இங்கே உள்ளது
--------------------------------------------------
வெவ்வேறு மாதங்களில் சூரிய உதய நேரத்தை
அட்டவனையாக்கிக் கீழே கொடுத்துள்ளேன்.
உங்கள் கவனத்திற்கு அது வரவேண்டும்
என்பதற்காகக் கொடுத்துள்ளேன். இதைக்
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால்
பயன்படும் மனனம் செய்ய வேண்டியதில்லை!
================================ஜாதகம் கணிப்பதற்கு இந்த சூரிய உதயநேரம் மிக
முக்கியமானதாகும்.
நமக்கு ஒரு நாள் என்பது இன்று காலை சூரிய உதயம்
தொடங்கி அடுத்த நாள் காலை சூரிய உதயத்திற்கு ஒரு நொடி
முன்புவரை ஒருநாள். ஆனால் ஆங்கில நாட்காட்டியின் படி
இரவு 12,01ற்கே அடுத்த நாள் துவங்கிவிடும்.
இன்று காலை சரியாக 6.00 மணிக்கு ஒரு குழந்தை
பிறக்கிறது என்று வைத்துக் கொண்டால் அந்தக் குழந்தையின்
பிறந்த நாளை - இன்று சூரிய உதயம் 6.29 என்பதால் - அந்தக்
குழந்தை 4/5,மார்ச், 2007 என்றுதான் குறிப்பார்கள்
விய வருடம் வைகாசி மாதம் 27ம் தேதி 58.45 நாழிகை
என்றுதான் குறிப்பிடுவார்கள் ( 28ம் தேதி என்றல்ல -
இதை நன்றாக மனதில் உள்வாங்கிக்கொள்ளுங்கள்)
அதாவது 4ம் தேதி முடியுமுன்பாக 5ம் தேதி அதிகாலை
பிறந்த குழந்தை என்று அறிந்து கொள்ள அது உதவும்
ஜாதகம் கணிக்கும்போது இந்த சூரிய உதயத்தைக் குறிப்பிட்டு
ஜாதகம் எழுதினால்தான், கணித்தால்தான் அது உண்மையான
கிரக நிலைப்பாடுகளைக் கொண்ட ஜாதகமாக இருக்கும்!
இல்லையென்றால் தவறான ஜாதகமாகிவிடும்
(தொடரும்)
// நீங்கள் எங்காவது அந்த இரு கிழமைகளில் திருமணம்
ReplyDeleteமுகூர்த்தம் இருந்ததாகவோ, அல்லது யாரும் தங்கள்
வீடுகளில் திருமண வைபவங்களை நடத்தியதாகவோ
கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இருக்காது! //
இருக்கலாம். ஆனால், இங்கு லண்டனில் சனிக்கிழமைகளில் கல்யாணங்கள் நடக்கின்றன. வசதியாக இருக்கும்போது, விதிகள் காற்றில் பறக்கின்றன போலும்!
// பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல தினமும்
காலை 6.00 மணிக்கு சூரிய உதயம் இருக்காது //
பூமத்திய ரேகையிலிருந்து விலகிப் போகப் போக இந்த மாறுபாடுகள் பெரியதாகிக் கொண்டு போகும்.
// ஆனால் ஆங்கில நாட்காட்டியின் படி
இரவு 12,01ற்கே அடுத்த நாள் துவங்கிவிடும். //
உண்மையில் 12:00:01க்கே அடுத்த நாள் ஆகிவிடும்! :-))
வைசா
இன்னைக்கும் சென்ஷி ஆஜர்.
ReplyDeleteஐயா, நீங்கள் சொல்வதை ப்ரிண்ட் எடுத்து படித்து வருகிறேன்..
ஆனாலும் சந்தேகங்கள் எழுகின்றன.!
தங்களின் மின்மடல் முகவரி அறிய இயலுமா?
எனது மின்மடல் முகவரி:senshe.indian@gmail.com
நன்றி
//உண்மையில் 12:00:01க்கே அடுத்த நாள் ஆகிவிடும்! :-))//
ReplyDeleteஉண்மைதான்.
12.01 நான் குறிப்பிட்டுள்ளது ஒரு நிமிடம் முடிந்தால்தான் காலசந்திப் பிழை வராது என்பதற்காக!
Border problem between the two days
///ஆனாலும் சந்தேகங்கள் எழுகின்றன.!
ReplyDeleteதங்களின் மின்மடல் முகவரி அறிய இயலுமா?///
என் மின்னஞ்சல் முகவரி Blogger Profile லில்
உள்ளதே டில்லிக்காரரே!
I have appended it for your ready reference:
classroom2007@gmail.com
சூர்ய உதய அட்டவணை உபயோகமான ஒன்று.... நாழிகை கணக்குப்பார்க்க வசதி....நன்றி வாத்தியாரே..
ReplyDelete///சூர்ய உதய அட்டவணை உபயோகமான ஒன்று.... நாழிகை கணக்குப்பார்க்க வசதி....நன்றி வாத்தியாரே..///
ReplyDeleteஉண்மையான உபயோகம் - ஒரு ஜாதததைக் கணிப்பதற்கு (Manual ஆக) இந்த சூரிய உதயம் மிகவும் அவசியமானது!
ஐயா,
ReplyDeleteஜோதிடம் பகுதி-8 பற்றி சில எண்ணங்கள்.
1.
//குழந்தையின் ஜாதகத்தில், சூரியன் 6, 8, 12 ஆகிய
இடங்களில் மறைந்து விட்டால்
(If the Sun is placed in 6th Or 8th or 12th
houses in a chart - all these houses are inimical houses)
அல்லது நீசமடைந்திருந்தால் (debilitated) அந்தக்
குழந்தைக்குத் தந்தை இறந்திருப்பார் அல்லது >>>
இருந்தாலும் அந்தக் குழந்தையை நன்றாக
வளர்கக்கூடிய நிலையில் இல்லாமல் இருப்பார்<<< //
உண்மைதான் என்று நினைக்கிறேன்.
2. நார்வே, ஸ்வீடன் நாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த சூரிய உதயக் கணக்கு ஒத்து வராதே! அவர்களுக்கு மாறுமோ?
3. பூமியின் எடை காரணாமாக, அதன் சுற்றும் வேகம் குறைவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் இந்த சூரிய உதயக் கணக்கு மாற்றப்படுமா?
கடைசி பென்ச் மாணவன்.