பின்னூட்ட மன்னருக்காக ஒரு பதிவு!
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 14
பின்னூட்ட மன்னர், சிங்கை இளவல், நாகைச் சூறாவளி
கோவி.கண்ணன் அவர்கள் இந்த ஜோதிடம் ஒரு பார்வை
பகுதி எண் 9ல் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.
அதைப் பார்க்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்!
அவருக்குப் பதில் கொஞ்சம் விரிவாகவே சொல்ல
விரும்பியதால் இந்தப் பதிவு. அவருடைய நியாமான
கேள்விக்கு உரிய பதிலை வகுப்புக் கண்மணிகளும்
தெரிந்து கொள்ளட்டும் எனத் தனிப் பதிவாகவே
இட்டுவிட்டேன்.
இதில் எதாவது அவருக்குச் சந்தேகம் இருந்தால
பதிவுக்குப் பதிவு என்று போகாமல் பின்னூட்டத்தி
லேயே கேட்கலாம்:-)))
///கோவியார் சொல்லியது:சுப்பைய்யா ஐயா,
மேலே குறி(ப்பிட்ட) சம்பவம் உண்மையா
இல்லை என்ற ஆராய்ச்சிக்கு நான் போகவில்லை.
பல சோதிடர்கள் நம்பவைக்க ஆட்களை தலை
ஆட்டுவதற்கும் கேள்விகளுக்காக தயார்
கதைகளையும் வைத்திருப்பார்கள் என்று
கேள்விப்பட்டு இருக்கிறேன்.
நேற்று தொலைக் காட்சி செய்தியில்
வைத்தீஸ்வரன் கோவில் நாடி சோதிடர்
செத்தவர் கைரேகையை பார்த்து ஆயுள்
கெட்டி என்று சொன்னதாக கூட செய்திகள்
வந்திருக்கின்றன.
சோதிடர் சொல்வது
எல்லாமே சரி என்றால் காணமல்
போனவர்கள் பற்றி தெரிந்து கொள்ள
காவல் துறை தேவை இல்லை.//
"உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை"
என்று கவியரசர் முன்பே எழுதிவைத்து
விட்டுப்போனார்.
இறைவனுக்கு மட்டுமல்ல - ஜோதிடத்திற்கும்
அதுதான் பதில். என் முதல் மூன்று பதிவுகளைப்
படித்துவிட்டு வாருங்கள்.
அரைகுறை ஜோதிடர்களால் ஜோதிடத்திற்கு
கெட்ட பெயர் ஏற்படுவது உண்மை. ஆனால்
ஜோதிடம் அறிவியல் பூர்வமானது
என்பதற்கு கடந்த எட்டுப் பதிவுகளிலும்
நிறைய ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன்.
அவற்றை எல்லாம் படியுங்கள்
இன்னும் கொடுக்க உள்ளேன் தொடர்ந்து
படியுங்கள்
யாரையும் பிடித்து இழுத்து வந்து ஜோதிடத்தை
நம்ப வைக்க வேண்டுமென்பது என்னுடைய
நோக்கமல்ல! எனக்குத் தெரிந்தவற்றை
எழுதுகிறேன் அவ்வளவுதான்.
ந்ம்புவதும், நம்பாததும் படிப்பவர்களின்
மனதில் உள்ளது!
நம்புவதால் எனக்கு எந்த ஆதாயமும் இல்லை
நம்பாவிட்டால் எனக்கு எந்தவிதமான
நஷ்டமும் இல்லை!
//சோதிடர் சொல்வது எல்லாமே சரி என்றால்
காணமல் போனவர்கள் பற்றி தெரிந்து கொள்ள
காவல் துறை தேவை இல்லை.//
"பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்
கொண்டதடா மீதி மனதில் மிருகம் இருந்து
ஆட்டிவைத்ததடா"
என்று எழுதினார் கவியரசர்.
இன்றைய நாகரீக உலகில் மிருக குணமுடைய
மனிதர்கள்தான் அதிகம். அத்னால்தான் போலீஸ்
நிலையங்கள் (உங்களைப் போன்ற நல்லவர்
களைக் காக்க)
திருவண்ணாமலையில் அருணகிரிநாதருக்கு
முருகப் பெருமான் காட்சி கொடுத்து, அவருடைய
நோயைக் குணப்படுத்தியதுடன், முத்து என்று
அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழைப் பாட
வைத்தார் என்பது வரலாறு.
அதைச் சொன்னால், நான் ந்ம்ப மாட்டேன்,
ஒன்று அன்று நடந்ததற்கு ஏதாவது
'Strong Evidence' காட்டு அல்லது முருக்ப்
பெருமானை வரவழைத்து எனக்குக் காட்டு
என்றால் என்ன செய்வது?
எனது நெருந்கிய உறவினர் ஒருவர். தீவிர
நாத்திகவாதி. எனக்கு இனிய ந்ண்பரும்கூட.
அவருடைய தாத்தா தந்தைபெரியார்
அவர்களின் நெருங்கிய நண்பர். அந்தக்
காலத்தில், பெரியார் அவர்கள் எங்கள்
பகுதிக்கு வந்தால் அவர்கள் வீட்டில்தான்
தங்குவார். பெரியார் மட்டுமல்ல அந்தக்
காலத்தில் அறிஞர் அண்ணா
உட்பட பல தி.மு.க தலைவர்கள் காரைக்குடிக்கு
வந்தால் அவர்கள் வீட்டில்தான் தங்குவார்கள்.
இன்று சென்னையில் உள்ள ஒரு பெரிய
திரைப்பட இயக்குனருக்கும், மற்றும்
திராவிடர் கழகத்தில் உள்ள புகழ் பெற்ற பேச்சாளர்
ஒருவருக்கும் அவர் சகோதரியின் மகனாவார்.
அந்த உறவினருக்கும் எனக்கும் அடிக்கடி
தர்க்கவாதம் நடக்கும்.
அவர் கேட்பார், " கோவிலை ஏன் பூட்டுகிறீர்கள்?
தன் உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள
உங்களுடைய இறைவனுக்குத் தெரியாதா?"
நான் சொல்வேன்," இறைவன் ஒன்றும் கோவில்
கட்டிக் கும்பிடு என்று சொல்ல்வில்லை. மேலும்
விலை உயந்த பஞ்சலோக சிலைகளையும்,
தங்க, வைர நகைகளையும் எனக்கு அணிவியுங்கள்
என்று சொல்லவில்லை. பகதர்கள் காலம் காலமாக
தங்கள் ப்கதி மிகுதியினால் அப்படிச் செய்கின்றார்கள்.
அதையே ஒருவன் உள்ளே வந்து
திருட முயன்றால், கருணை மிகுந்த கடவுள், பிழைத்துப்
போகட்டும், வயிற்றுப் பசிக்காகத் திருடுகிறான் என்று
கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார். அந்தத் திருட்டு
நடந்தால் செய்து வைத்த மக்களின் மனது எவ்வளவு
கஷ்டப்படும்? அதைத்தடுக்கவே கோவிலுக்குப்
பூட்டும், காவலும் உள்ளன!"
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இறைவன
இல்லை என்று வாதம் செய்யும் அவர், ஜோதிடத்தில்
மிகுந்த ந்ம்பிக்கை உள்ளவர்.அவர்தான் எனக்கு இந்த
ஜனவெளி ஜோதிடரைப் பற்றி முதன் முதலில்
தகவல் தந்தவர்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்!
அன்புடன்
SP.VR.சுப்பையா
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
15.3.07
பின்னூட்ட மன்னருக்காக ஒரு பதிவு!
Subscribe to:
Post Comments (Atom)
வாத்தியாரே!
ReplyDeleteநீங்க என்னதான் சொன்னாலும் ஜோதிடம் என்பது பொய் என்பது என் தீவிர நம்பிக்கை.
சிறுவயதிலிருந்து எனக்கு என் வீட்டார் ஜோதிடம் பார்த்து ஒன்று கூட உருப்படியாக நடந்ததில்லை.
எந்த ஜோதிடராவது சரியாக சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள். என் நட்சத்திரத்தையும், பிறந்த தேதியையும் அனுப்பி வைக்கிறேன். ஓரளவுக்காவது சரியாக கணிக்கிறார்களா பார்ப்போம்.
லக்கிலுக்,
ReplyDeleteஉங்க சாதகத்தை கணிக்க உங்களை விட சிறந்த சோதிடர் இல்லை.
நீங்க சோதிடத்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்களுக்கு சோதிடம் தெரிஞ்சாலும் தெரியாவிட்டாலும், இது பொருந்தும்.
:-)
வாத்தியாரைய்யா,
அடிப்படைப் பாடங்கள் முடித்தபின் மேல் நிலை பாடங்களையும் தொடர வேண்டும் என முன்பு கேட்டிருந்தேன்.
அது போலவே சோதிடக் கலை பயில்வோரின் சந்தேகங்கள் குறித்த (இது என் ஜாதகம், நான் எப்ப வீடு வாங்குவேன் போன்ற கேள்விகளுக்கல்ல...) பதில் கூறும் பதிவொன்றை எழுத வேண்டுகிறேன்.
எளிய கேள்விகள் சில உதாரணத்துக்காக:
1) செவ்வாய்த் தோசம் என்றால் என்ன? அது சுப கிரக பார்வையால் நிவர்த்தியாயிற்று என்கிறார்களே எப்படி? சில சோதிடர்கள் 30 வயதுக்கு மேல் செவ்வாய்த் தோசம் பார்க்க வேண்டியதில்லை என்கிறார்களே அது சரியா?
2) திருக்கணிதம் துல்லியமானது என்றபோதும் சுத்த வாக்கியப்படி சாதகம் கணிப்பது இன்னும் வழக்கிலுள்ளது. அவ்வாறு கணிக்கப் பட்ட சாதகத்துக்கு சொல்லப்படும் பலன்கள் சரியாய் வருமா?
///லக்கியார் சொல்லியது: வாத்தியாரே!
ReplyDeleteநீங்க என்னதான் சொன்னாலும் ஜோதிடம் என்பது பொய்
என்பது என் தீவிர நம்பிக்கை.///
உங்கள் நம்பிக்கை வாழ்க!
அதோடு உங்கள் தன்னம்பிக்கையும் வாழ்க!
//சிறுவயதிலிருந்து எனக்கு என் வீட்டார் ஜோதிடம்
பார்த்து ஒன்று கூட உருப்படியாக நடந்ததில்லை.///
இப்பொழுதெல்லாம் மருத்துவ் மனைகளில் பிறக்கும்
குழந்தைகளுக்கு துல்லியமாக நேரத்தை எழுதி அட்டை
கொடுத்து விடுகிறார்கள்
அந்தக் காலத்தில், அதாவது 30 வருடங்களுக்கு முன்பு
பிரசவம் எல்லாம் வீடுகளில்தான். அதுவும் மருத்துவச்சிகள்
என்று செல்லமாக அழைக்கப்பெறும் ஆயாக்கள்தான்
பிர்சவம் பார்த்தார்கள். அறையை விட்டு வந்து அவர்கள்
சொல்லும் நேரம்தான் பிறந்த நேரமாகக் குறிக்கப்பெற்றது
4 நிமிடங்களுக்கு ஒரு பிறப்பின் விதிகள் மாறிவிடும்
அதனால் பெரும்பான்மையானவர்களின் ஜாதகம்
சரியாகக் கணிக்கப்பட்டதில்லை!
ஆக்வே உங்கள் ஜாதகம் நீங்கள் பிறந்த நேரத்தைவைத்துச்
சரியாகக் கணிக்கப்பெற்றுள்ளதா என்று முதலில் பாருங்கள்
உங்கள் பெற்றோர் எழுதிவைத்துள்ள ஜாதகத்தை Scan செய்து
எனக்கு மின்ஞ்சலில் அனுப்புங்கள். அதோடு உங்களுடைய
பிறந்த தேதி, நேரம், ஊர் மூன்றையும் எழுதியும் அனுப்புங்கள்
நான் திருக்கணித முறைப்படி (Computerல்) கணித்து அது
சரியாக உள்ளதா என்று சொல்கிறேன். அதோடு ந்ல்ல
Astrologer இருவரின் முகவரிகளையும் தருகிறேன்
கவலைப் பட வேண்டாம் - உங்கள் பிறந்த் தேதி ரகசியம்
யாருக்கும் தெரியாமல் காக்கப்படும் :-)))))
எனது மின்னஞசல் முகவரி:
classroom2007@gmail.com
நல்ல விளக்கம் ஐயா.
ReplyDeleteநல்ல விளக்கங்கள் வாத்தியார் அய்யா
ReplyDeleteகோவையில் உள்ள பணீக்கர் ஒருவர் எனக்கு சொன்னது அனைத்தும் நடந்திருக்கிறது.என் நண்பர் ஒருத்தரை கூட்டிக்கொண்டு போனேன்.இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் ஜெயிலில் இருப்பீர்கள் என்று சொன்னதும் அவருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.ஆனால் சொன்னமாதிரி செக் ரிடர்ன் ஆகி கைது செய்யப்பட்டு விட்டார்.
இன்னொருத்தருக்கு உங்கள் மகனுக்கு ஆக்ஸிடண்ட் ஆகும் என்று சொல்லி அது சொன்ன காலகட்டத்துக்குள் நடந்தது.இன்னொருத்தருக்கு இன்னும் 3 மாதத்தில் பைக் வாங்குவீர்கள் என்றதும் அவர் நம்பவே இல்லை.ஏன் என்றால் அவருக்கு வருமானம் குறைவு.ஆனால் சொன்னமாதிரி மூன்று மாதத்தில் அவர் பைக் வாங்கிவிட்டார்.
இன்னும் ஏராளமான விஷயங்கள் இதுபோல் நடந்திருக்கின்றன.
எங்க பிள்ளைங்க திருமணத்திற்கும் நாங்கள் அலைந்தது கொஞ்சமில்லை.
ReplyDeleteஜாதகம் பொருந்த இத்தனை வருடங்கள்!
அத்தனை ஜோசியர்கள்.
முகம்பார்த்து சொல்லும் ஜோதிடமும் பலிக்கிறதா?ஃபேஸ் ரீடிங்க்?
நீங்கள் சொல்வதுபோல, நேரம் குறிக்கப் படவில்லையானால் எத்தனை நஷ்டம்!
சுப்பையா ஐயா,
ReplyDeleteகோவி.கண்ணன் என்ற பெயருக்கு பெயர் ராசி பார்க்க முடியுமா ?
4ல் இருந்தாலும் மகரச் செவ்வாய்க்கு செவ்வாய் தோசம் இல்லையாமே ?
சரியா ?
/// கோபி அவர்கள் சொல்லியது: சோதிடக் கலை பயில்வோரின் சந்தேகங்கள் குறித்த (இது என் ஜாதகம், நான் எப்ப வீடு வாங்குவேன் போன்ற கேள்விகளுக்கல்ல...) பதில் கூறும் பதிவொன்றை எழுத வேண்டுகிறேன்.////
ReplyDeleteமுதலில் ஒரு பதினந்து பதிவுகள் வரை அடிப்படைப் பாடங்கள்
அத்ற்குப் பிறகு மேல் நிலைப் பாடங்கள் வரும்போது கலக்கலாக
(Blended with examples) எல்லாவற்றையும் சொல்கிறேன். அரட்டை அரங்கம்
பாணியில் வைத்துக் கொள்வோம்!
/// செல்வன் அவர்கள் சொல்லியது: நல்ல விளக்கங்கள் வாத்தியார் அய்யா
ReplyDeleteகோவையில் உள்ள பணீக்கர் ஒருவர் எனக்கு சொன்னது அனைத்தும் நடந்திருக்கிறது.என் நண்பர் ஒருத்தரை கூட்டிக்கொண்டு போனேன்.இன்னும் ஒரு மாதத்தில் நீங்கள் ஜெயிலில் இருப்பீர்கள் என்று சொன்னதும் அவருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது.ஆனால் சொன்னமாதிரி செக் ரிடர்ன் ஆகி கைது செய்யப்பட்டு விட்டார்.
இன்னொருத்தருக்கு உங்கள் மகனுக்கு ஆக்ஸிடண்ட் ஆகும் என்று சொல்லி அது சொன்ன காலகட்டத்துக்குள் நடந்தது.இன்னொருத்தருக்கு இன்னும் 3 மாதத்தில் பைக் வாங்குவீர்கள் என்றதும் அவர் நம்பவே இல்லை.ஏன் என்றால் அவருக்கு வருமானம் குறைவு.ஆனால் சொன்னமாதிரி மூன்று மாதத்தில் அவர் பைக் வாங்கிவிட்டார்.
இன்னும் ஏராளமான விஷயங்கள் இதுபோல் நடந்திருக்கின்றன.//
நன்றி மிஸடர் செல்வன்!
Third Umpire போன்று உள்ளே வந்து நீங்கள்
சொல்லிய செய்திகள் பலருடைய சந்தேகங்களைத்
தீர்க்கும் என்பது உண்மை!
எனக்கும் இதுபோன்ற் பல சுவாரசியமான (உண்மையான)
அனுபவங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் பதிய உள்ளேன்
முதலில் பாடங்கள். பிறகு முடிந்தவரை, மாணவர்கள் விரும்பும்
வரை அரட்டை அரங்கம்தான். ஜாமாய்த்து விடுவோம் செல்வன்
பதிவுகள் அப்போது கலகலப்பாகி விடும்.
அடிக்கடி வாருங்கள். நேரமில்லையென்றால் உள்ளேன் அய்யா'
என்று வருகைப் பதிவேட்டில் டிக் அடித்துவிட்டுப்போங்கள்!
///வல்லிசிம்ஹன் அவர்கள் சொல்லியது::எங்க பிள்ளைங்க
ReplyDeleteதிருமணத்திற்கும் நாங்கள் அலைந்தது கொஞ்சமில்லை.
ஜாதகம் பொருந்த இத்தனை வருடங்கள்!
அத்தனை ஜோசியர்கள்.
முகம்பார்த்து சொல்லும் ஜோதிடமும் பலிக்கிறதா?ஃபேஸ் ரீடிங்க்?
நீங்கள் சொல்வதுபோல, நேரம் குறிக்கப் படவில்லையானால்
எத்தனை நஷ்டம்!///
ஆமாம் சகோதரி, னேரம் சரியாகக் குறிக்கப் படவில்லையென்றால்
Reversal calcualtion method முறையில், ஒருவருடைய ஜாதகத்தை திருத்திக்
கொடுக்ககூடிய வல்லுனர்கள் இருக்கிறர்கள்
ஃபேஸ் ரீடிங்க் பற்றி எனக்குத் தெரியாது. அதிலெல்லாம் பெரிதாக
ஒன்றும் சொல்வதற்கு வாய்ப்பில்லை
1.Intution Power / ESP Powerலில் சொல்லப்படுவது துல்லியமாக இருக்கும்
2.Birth Chart ஐ வைத்துக் கொடுக்கப்படும் பலன்களும் சரியாக இருக்கும்
3.எல்லாவற்ரையும் விட சுலப்மானது அஷ்டகவர்க்கம் எனப்படும்
பரல்களை வைத்து சொல்லப்படும் பலன்கள் சரியாக இருக்கும்
4. Horary Astrology, Prassana Marga என்று ஆருடம் (அல்லது சோழி போட்டுப்) பார்த்து ஒரு
சில குறிப்பிட்ட காரியங்களுக்குப் பார்க்கப்படும் சோதிடமும்
பலன்களைச் சரியாகக் கொடுக்கும்
///கோவியார் அவர்கள் சொல்லியது: கோவி.கண்ணன் என்ற பெயருக்கு பெயர் ராசி பார்க்க முடியுமா ?///
ReplyDeleteபிறந்த நட்சத்திரத்திற்கு வேண்டுமென்றால் பெயரின் முதல்
எழுத்து என்னவாக இருந்தால் ந்ல்லது என்று சொல்லாலமே தவிர
பெயரை வைத்தெல்லாம் ராசியைப் பார்க்க முடியாது!
KOVI KANNAN என்ற பெயருக்கு (Numerology) எண் 35
அது நல்ல எண் அல்ல!
சனியின் எண். சனியின் எண்கள், 8,17, 26, 35, 44 என்று படிப்படியாகப் போகும்
அதில் 17 மட்டும்தான் ந்ல்ல எண்.
G.Kannan = 22 அது ந்ல்ல எண்தானா என்று பார்ப்பதற்கு
உங்களுடைய பிறந்த தேதி வேண்டும்!!!
இதைப்பற்றிய பதிவுகள் தொடரில் பிறகு வரும்
அதைப் பற்றி இப்போது எழுதினால் தொடரின் ஓட்டம் திசை மாறிவிடும்!
ஆக்வே பொருத்தருள்கவும்
//4ல் இருந்தாலும் மகரச் செவ்வாய்க்கு செவ்வாய் தோசம் இல்லையாமே ?
சரியா ?//
மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால் உச்ச செவ்வாய்க்கு
தோசம் இல்லையென்பார்கள். அதுபோல மேஷ லக்கினக்காரர்களுக்கும்
விருச்சிக லக்கினக்காரர்களுக்கும் செவ்வாய் தோசம் கிடையாது
ஏனென்றால் அந்த இரு லக்கினக்காரர்களுக்கும் செவ்வாய் அதிபதி
(Ruler of those Lagnas) இதைப்பற்றிய பதிவுகள் தொடரில் பிறகு வரும்
Sir,
ReplyDeleteAs you said earlier, all these beliefs are only for beleivers.
As GOD is true for beleivers, the ancient Indian science Astrology is true for beleivers like us.
The classes are going interesting and informative.Good work. Keep up the good work.
/// Mr.Anbu Selvaraj Said: As you said earlier, all these beliefs are only for beleivers.
ReplyDeleteAs GOD is true for beleivers, the ancient Indian science Astrology is true for beleivers like us.
The classes are going interesting and informative.Good work. Keep up the good work.//
It is really a good comment.
Thanks Mr.Anbu Selvaraj!
கோவி. கண்ணன் என்னும் சனி ஐயா வாழ்க !!!
ReplyDeleteஹி ஹி.. சும்மா ஒரு வெள்ளாட்டுக்குத்தான் :))
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆனால் இந்த நியூமராலஜி, அப்புறம் கல் வைத்தால் சரியாகும், பரிகாரங்களில் சரியாகும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை என்று அபிப்பிராயம். என்னளவில் எங்க ஜோசியர் சொன்னது எல்லாம் பலித்திருக்கிறது. ஆகவே நல்ல ஜோசியராய் இருந்தால் கட்டாயம் சொல்வது நடக்கும். அவரைக் கண்டுபிடிப்பது தான் கொஞ்சம் கஷ்டம். அதுவும் இன்றைய ஏமாற்று உலகில்.
ReplyDelete//கோவி. கண்ணன் என்னும் சனி ஐயா வாழ்க !!!
ReplyDeleteஹி ஹி.. சும்மா ஒரு வெள்ளாட்டுக்குத்தான் :))//
சனியுடன் விளையாடுகிறீர்களே சகோதரி!:-)))
அவர் கர்மகாரகன் , ஆய்ள்காரகன் (Authority
for Work & authority for span of life)
///கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு.
ஆனால் இந்த நியூமராலஜி, அப்புறம் கல் வைத்தால் சரியாகும்,
பரிகாரங்களில் சரியாகும் என்பதெல்லாம் ஏமாற்று வேலை
என்று அபிப்பிராயம். என்னளவில் எங்க ஜோசியர் சொன்னது
எல்லாம் பலித்திருக்கிறது. ஆகவே நல்ல ஜோசியராய்
இருந்தால் கட்டாயம் சொல்வது நடக்கும். அவரைக் கண்டுபிடிப்பது
தான் கொஞ்சம் கஷ்டம். அதுவும் இன்றைய ஏமாற்று உலகில்.///
நான் கடந்த 30 வருடங்களாக பல ஜோதிட நூல்களை விரும்பிப்
படித்துக் கொண்டிருப்பவன். அறிவியல் பூர்வமாக உள்ள
ஜோதிட உண்மைகள் பலருக்கும் பயன்பட வேண்டுமென்ற
நோக்கத்தில்தான் என்னுடைய நடையில் பதிவிட்டுக் கொண்டு
வருகிறேன்.
பரிகாரம் என்பது Material offer அல்ல! இறைவழிபாடுதான்
பரிகாரம். அதைப் பற்றி பின்னொரு பதிவில் எழுதுகிறேன்.
விதிக்கப்பட்டதைக் கல்வைத்தெல்லாம் சரி செய்ய முடியாது.
நீங்கள் கூறுவது உண்மை.
சரவளி, காலப் பிரகாஸிகா, அகத்தியரின் மணிகண்டஜோதிடம்
போன்ற நூல்களில் மொத்தம் 2 லெட்சத்திற்கும் மேற்ப்பட்ட
ஸ்லோகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் கற்றுணர்ந்து
யாரும் இப்போது ஜோதிடராக வருவதில்லை. அதுதான்
நல்ல ஜோதிடராகப் பலர் இல்லாததற்குக் காரணம்.
இறைவனையும், ஜோதிடத்தையும் கேலிக்கூத்தாக
சில இளைஞர்கள் நக்கலடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அதுதான் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்
கவியரசர் சொல்வார். எல்லோருக்கும் பாவக்கணக்கு,
புண்ணியக்கணக்கு என்ற பத்தகம் உள்ளது.விதி என்ற
(Processor Unit) உடன் அதவும் சேர்ந்து வரும்
50 வயதிற்குமேல்தான் உனக்கு ஐந்தொகை தெரியுமென்பார்
(Trial Balance)
அப்படித் தெரியும்போது அவர்கள் திருந்தட்டும்!
என்னுடைய பழைய பதிவுகளையும் படித்துப் பாருங்கள்
சகோதரி!
அய்யா,
ReplyDeleteஜோதிடம்,ஜாதகம் அனைத்தும் உண்மை.நாம் கொடுக்கும் தகவல்கள் சரியாக் இருந்தால்,அனைத்தும் அதன்படியே நடக்கும்.நாம் அனுகவேண்டியது காசுக்கு ஆசைபடாத ஒரு ஜோசியர்.நலவேளை எனக்கு ஒருத்தர் இருக்கிறார்
(நல்நான் உங்களது பதிவுகள் அனைத்தையும் விடாது படித்து வருவேன்.ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை.)
மீனாஅருண்