ஜோதிடம் ஒரு பார்வை - ப்குதி 11
நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம்!
1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு
முன்பு பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில்
பிறந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்க
தரிசனம் பெற்ற மனிதர்.
யூத குடும்பத்தினரான அவருடைய பெற்றோர்கள்
கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.
நாஸ்ட்ரடாமஸ் மறைநூல்களும், மருத்துவமும்
கற்றார் மான்ட்பெல்லி பல்கலைக்கழகத்தில்
மருத்துவப் பட்டம் பெற்று, திருமணமும் செய்து
கொண்டு தன் வாழக்கையை இனிது
தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு
பிரஞ்சு நாட்டில் பரவிய பிளேக் நோய்க்குத்
தன் மனைவியைப் பறிகொடுத்தார்
அதற்குப் பிற்கு அந்தத் தாக்கத்தில் ஏறக்குறையப்
பத்து ஆண்டுகள் மெளனமாகவே இருந்தார்.
அந்தக் காலகட்டதத்தில் அவருக்கு
அதியசமான அந்த ESP சக்தி ஏற்பட்டது.
அவர் யாரை உற்று நோக்கினாலும் அவருடைய
எதிர்காலம் அவர் மனத்திரையில் ஓடியது.
பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர்
மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம்
விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.
அவைகள் பெரும்பாலும் பிரஞ்சு நாட்டின் அரசியல்
மாற்றங்களை விவரித்து எழுதப்பெற்ற நூலாகும்.
பிரஞ்சு நாட்டு மன்னன் ஒரு விளையாட்டு விபத்தில்
இறந்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டு எழுதியி
ருந்தது உண்மையிலேயே நடந்துவிட பிரஞ்சு மக்கள்
அவருடைய கணிப்புக்களில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.
1550 ஆம் ஆண்டு முதல் 1555 ஆம் ஆண்டுவரை
வருங்காலத்தில் பல நாடுகளில் நடக்கவிருக்கும்
சம்பவங்களை எல்லாம் எழுதி
10 பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிட்டார்.
1566 ஆம் ஆண்டு அவருடைய மறைவிற்குப்
பின்னரே அவருடைய நூலகள் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பெறறு வெளியாகி
ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமானார்
பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு
ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டு
களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ்
துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல
ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.
அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும்,
அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும்,
ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தோல்வியுறுவதுவரை
ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி
வைத்திருந்ததும் விந்தையானதாகும்
ஹிட்லரின் பிறப்பு, வளர்ப்பு, ஜெர்மனியில் அவர்
அமைத்த ராணுவ அரசு, பிறகு உலகம் முழுவதையும்
பிடிப்பதற்காக 1939 ஆம் ஆண்டில் அவர் துவக்கிய
இரண்டாவது உலகமகாயுத்தம் ஆகியவற்றையும்
எழுதிவைத்திருந்தார். அவை அனைத்தும்
சரியாக நடந்தன.
ஹிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸின்
மனைவி ஃப்ரைன் 1939ம் ஆண்டு அந்த நூலைப்
படித்துவிட்டு, ஹிட்லரின் சாகசங்கள்
அந்த நூலில் விவரிக்கப்பட்டு இருப்பதைக்
ஹிட்லரிடம் காண்பிக்க, ஹிட்லர் அந்தப் பக்கங்
களைப் பிரதி எடுத்து ஐரோப்பா முழுவதும்
தூவ விட்டார்.
அச்செய்தி இங்கிலாந்து மக்களைக் கவலையில்
ஆழ்த்த, அப்போது அங்கே பிரதமராக இருந்த
வின்ஸ்டன் சர்ச்சில், நாஸ்டர்டாமஸின்
நூலை வாங்கிப் படித்து, அதில் ஹிட்லரின்
வீழ்ச்சியைப் பற்றி நாஸ்டர்டாமஸ் எழுதியிருந்ததை
துண்டுப் பிரசுரமாக்கித் தன் தேசம் முழுவதும்
வெளியிட்டு அவநம்பிக்கையிலிருந்து தன்
தேசமக்களை மீட்டார்.
இதெல்லாம் வரலாறு!
அதுபோல் அமெரிக்காவின் விடுதலைப்போரைப்
பற்றியும், அமெரிக்க ஜனாதிபதிகள் அபிரகாம்
லிங்கன், கென்னடி போன்றவர்கள் சுட்டுக்
கொல்லப்படுவார்கள் என்பதையும் நாஸ்டர்டாமஸ்
தன் நூலில் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான
விஷயங்கள். ஏனென்றால் அந்தநாடு நாஸ்டர்டாமஸ்
காலத்தில் உருவாகக்கூட இல்லை என்பது
வியக்கத்தக்க உண்மை!
இந்தியாவைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?
ஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
அவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!
(நாஸ்டர்டாமஸ் பற்றிய செய்திகள் நாளையும் வரும்!)
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
12.3.07
நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனம்
Subscribe to:
Post Comments (Atom)
Sir,
ReplyDeleteInteresting!!
Eagerly Waiting for the Next Post!!
//சிவபாலன் அவர்கள் சொல்லியது:
ReplyDeleteInteresting!!
Eagerly Waiting for the Next Post!! //
வெறும் பாடங்களாக நடத்திக் கொண்டிருந்தால் மாணவர்கள் கட் அடிக்கும் அபாயம் உள்ளது. அதனால்தான் நடு நடுவே இப்படிச் சில
சுவாரசியமான விஷயங்கள்!
நான் இனி பள்ளிக்கு போகலை உங்களிடமே வகுப்பு எடுக்க போறன்
ReplyDeleteசுப்பையா சார், நாஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனத்தை பலர் பல்வாறாக அர்த்தம் சொல்கிறார்கள் யாருமே இது நடப்பதற்கு முன் நாஸ்ட்ரடாமஸ் சொன்னது என சொல்லமுடியவில்லை.
ReplyDeleteஇரட்டைக்ம்கோபுரங்கள் இடிந்தபிறகு ஓ இந்த செய்யுளின் அர்த்தம் இது என்றார்கள்.
இந்தியாப் பற்றி சொன்னதை அறிய ஆவலாய் இருக்கிறேன்
சுவாரசியமான செய்தி-தான்! நன்றி!
ReplyDelete//பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர்
மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம்
விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.
//
ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு அப்புறம் தான்,
"இதலாம், நாஸ்டர் டாமஸ் ஏற்கனவே சொன்னதுதான். என்ன ஒரு தீர்க்க தரிசனம்!" -னு சொல்லுறாங்க.
நடப்பதற்கு முன்னால் அனுமானிக்க முடியுமா?
ஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
ReplyDeleteஅவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!//
(நாஸ்டர்டாமஸ் நாளையும் தொடரும். வேறு என்ன சொல்லப் போகிறாரோ!!!
அதிசயமாகத்தான் இருக்கிறது.அதுவும் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்னும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
ReplyDelete//வெறும் பாடங்களாக நடத்திக் கொண்டிருந்தால் மாணவர்கள் கட் அடிக்கும் அபாயம் உள்ளது. அதனால்தான் நடு நடுவே இப்படிச் சில
ReplyDeleteசுவாரசியமான விஷயங்கள்!//
யார் சொன்னது அப்படி...
ஆனாலும் ESP ஆரம்பிச்சப்புறம் Students அதிகமா ஆர்வமாயிட்டோம் :))
சென்ஷி
///தமிழ்பித்தன் said...
ReplyDeleteநான் இனி பள்ளிக்கு போகலை உங்களிடமே வகுப்பு எடுக்க போறன்///
ஆகா, ந்ல்லது! தொடர்ந்து வாருங்கள்
///கால்கரி சிவா said...
ReplyDeleteசுப்பையா சார், நாஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனத்தை பலர் பல்வாறாக அர்த்தம்
சொல்கிறார்கள் யாருமே இது நடப்பதற்கு முன் நாஸ்ட்ரடாமஸ் சொன்னது என
சொல்லமுடியவில்லை. ///
இரட்டைக்ம்கோபுரங்கள் இடிந்தபிறகு ஓ இந்த செய்யுளின் அர்த்தம் இது என்றார்கள்.
இந்தியாப் பற்றி சொன்னதை அறிய ஆவலாய் இருக்கிறேன்///
நீங்கள் சொல்வதுபோல இரண்டொன்று இருக்காலாம். அவர் எல்லாவ்ற்றையுமே
குறிப்பிட்டுத்த்தான் எழுதியுள்ளார். அவர் காலத்தில் இருந்த அரச் குடும்பத்தினரின்
மிரட்டலால், அவர் தான் எழுதிய எல்லாவ்ற்றையுமே கிசுகிசு பாணியில் மாற்றி
எழுதிவைத்தார்
அரச குடும்பத்தாரால் ஏற்ப்ட்ட கெடுபிடிகள் அடுத்த பதிவில் வரும்!
///தென்றல் said...
ReplyDeleteஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்ததற்கு அப்புறம் தான்,
"இதலாம், நாஸ்டர் டாமஸ் ஏற்கனவே சொன்னதுதான். என்ன ஒரு தீர்க்க தரிசனம்!"
-னு சொல்லுறாங்க.
நடப்பதற்கு முன்னால் அனுமானிக்க முடியுமா?///
அவர் 1568ம் ஆண்டில் எழுதிய புத்தகங்களில் உள்ளதுதான் நடந்தன. நடந்து
கொண்டிருக்கின்றன. ஆகவே நீங்கள் சொல்வதுபோல இல்லை.
சில கணிப்புக்கள் மொழி பெயர்ப்பாளர்கள் செய்த குளறுபடியால் குழப்பமாகத்
தென்படுமாம்
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
அவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!//
(நாஸ்டர்டாமஸ் நாளையும் தொடரும். வேறு என்ன சொல்லப் போகிறாரோ!!!///
எல்லாம் நல்லதாகத்தான் சொல்லியிருக்கிறார் சகோதரி!
///வடுவூர் குமார் said...
ReplyDeleteஅதிசயமாகத்தான் இருக்கிறது.அதுவும் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்னும் போது
வியக்காமல் இருக்க முடியவில்லை.///
வார்னர் பிரதர்ஸ் அவறைப்பற்றிய டாக்குமென்ட்டரி படம் எடுத்து வெளியிட்டார்கள்
விடியோ கடைகளில் கிடைக்கும். வாங்கிப் பாருங்கள் குமார்!
உள்ளேன்யய்யா!!!
ReplyDeleteவிடுப்பு முடிந்து வந்துள்ளேன்....இந்த பதிவு கண்டிப்பாக ஆர்வத்தை தூண்டுகிறது....
விடுபட்ட பாடங்களை படித்துவிட்டு மீண்டும் வருகிறேனய்யா.....
சுப்பையா சார், கோவிச்சுக்கக் கூடாது. நாஸ்ட்ராடாமஸ் என்னத்தையோ குழப்பமான மொழியில் எழுதியதையெல்லாம் நாம் அர்த்தப்படுத்திக் கொள்வதில்தான் (Interpretation) எல்லாமேயுள்ளது. இது எப்படின்னா நம்மூர் நாடி சோதிடம் மாதிரி. சுத்த -ஹம்பக். கூகிளிட்டால் நாஸ்ட்ராடாமஸை வைத்து சிலர் ஏமாற்றுவது தெரியும்.
ReplyDelete/// சென்ஷி அவர்கள் சொல்லியது: யார் சொன்னது அப்படி...
ReplyDeleteஆனாலும் ESP ஆரம்பிச்சப்புறம் Students அதிகமா ஆர்வமாயிட்டோம் :))//
இதே ஆர்வம் பாடத்திலும் இருந்தால் சரிதான்!
உள்ளேன்யய்யா!!!
ReplyDelete/// மதுரையம்பதி அவர்கள் சொல்லியது: விடுப்பு முடிந்து வந்துள்ளேன்....இந்த பதிவு கண்டிப்பாக ஆர்வத்தை தூண்டுகிறது....
விடுபட்ட பாடங்களை படித்துவிட்டு மீண்டும் வருகிறேனய்யா.....///
விடுபட்ட பாடங்களைப் படித்து விடுங்கள் அதுதான் முக்கியம்!
////தங்கவேல் அவர்கள் சொல்லியது:சுப்பையா சார், கோவிச்சுக்கக் கூடாது.
ReplyDeleteநாஸ்ட்ராடாமஸ் என்னத்தையோ குழப்பமான மொழியில் எழுதியதையெல்லாம்
நாம் அர்த்தப்படுத்திக் கொள்வதில்தான் (Interpretation) எல்லாமேயுள்ளது.
இது எப்படின்னா நம்மூர் நாடி சோதிடம் மாதிரி. சுத்த -ஹம்பக்.
கூகிளிட்டால் நாஸ்ட்ராடாமஸை வைத்து சிலர் ஏமாற்றுவது தெரியும். ///
அதெல்லாம் இன்றைய உலகில் யாரையும் வைத்து யாரும் ஏமாற்ற முடியாது!
நாஸ்ட்ரடாமஸ் பெரிய தீர்க்கதரிசி. அவர் எழுதியுள்ளது இதுவரை 800 க்குமேல்
நடந்துள்ளது. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைபோல ஒன்று இரண்டு அல்ல!
800 நிகழ்வுகள். அவர் எழுதிய புத்தகம் கிடைக்கும் வாங்கிப் படித்துப் பாருங்கள்
அவர் ஒன்றும் புரியாத மொழியில் எழுதவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில்
இருந்த அரசு கெடுபிடியினால் கிசுகிசுபாணியில் சூட்சுமத்துடன் எழுதிவைத்துள்ளார்.
அவ்வளவுதான்
அவர் இருக்கும்போது நம் நாடு பல சிற்றரசர்களால் ஆளப்பெற்று வந்தது.
அப்போது இந்தியா என்ற ஒரு பெயரில் ந்ம நாடு அழைக்கப்படவில்லை
நம்நட்டைப் பற்றிக் குறிப்பிடும்பொழுதெல்லாம் அவர் மூன்று கடல்
சூழ்ந்த நாடு என்றுதான் எழுதியுள்ளார்
//தங்கவேல் அவர்கள் சொல்லியது போல....
ReplyDeleteநாஸ்ட்ராடாமஸ் என்னத்தையோ குழப்பமான மொழியில் எழுதியதையெல்லாம்
நாம் அர்த்தப்படுத்திக் கொள்வதில்தான் (Interpretation) எல்லாமேயுள்ளது.
//
எனக்கும் இந்த எண்ணம் உண்டு, சார்!
உங்கள் அடுத்த பதிவை படிக்க ஆவல்... குறிப்பாக, இந்தியாப் பற்றி
விளக்கத்திற்கு நன்றி!
தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி
ReplyDeletehttp://www.desipundit.com/2007/03/13/nostradamus/
//டுபுக்கு அவர்கள் சொல்லியது: தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி
ReplyDeletehttp://www.desipundit.com/2007/03/13/nostradamus////
இணைத்ததற்கு நன்றி நண்பரே!
மதிப்புற்குரிய அய்யா,
ReplyDeleteநாஸ்ட்ரடமஸ் 9/11 பற்றி எதுவும் சொல்லவில்லை, அது ஒரு கல்லூரி மாணவர் (:-)))) உடைய வம்பு என்று படித்திருக்கிறேன்.
http://www.museumofhoaxes.com/nospredict.html
நாஸ்ட்ரடமஸ் சொன்ன சில நாடி ஜோசியம் என்பது என் எண்ணம். (பள்ளிக்கூடத்திலும் இப்பிடித்தான் ஆசிரியர்கள எதித்துப் பேசி அடி, குட்டு, கிள்ளு எல்லாம் வாங்கியிருக்கேன், இன்னும் புத்தி வரலே - வேற என்ன, அய்யா கோல் எடுத்து வருமுன் ஐயம் தி எஸ்கேப்).
கெ.பி.
நாஸ்ட்ரடாமஸ் பற்றிய சுவையான பதிவிற்க்கு நன்றி ஐயா!
ReplyDelete