மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.3.07

கலைஞரின் ஜாதகம்

கலைஞரின் ஜாதகம்

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 17
By SP.VR.SUBBIAH

லக்கினத்தைப் பற்றி எழுதிய முதல் கட்டுரை
அனைவருக்கும் புரிந்துள்ளது என்பதைப் பின்னூட்டம்
மூலம் அறிந்தேன். மகிழ்வும் கொண்டேன்

அதைவிட வாத்தியாருக்கு என்ன வேண்டும்?

இன்று லக்கினத்தின் அடுத்த பகுதி!

1. லக்கினத்தில் மிகவும் முக்கியம் லக்கினநாதன்
என்னும் அந்த வீட்டு அதிபதி (Owner of the lagna
or lagna lord) உதாரணம் சிம்ம லக்கினத்தின்
அதிபதி சூரியன்.அவர் எங்கே போய் உட்கார்ந்திருக்
கிறார் என்பது முக்கியம்.
அவருடைய சிறப்பான அமர்விடம் லக்கினத்திலிருந்து
5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோண வீடுகள்
எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது
11ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும்
வீடுகள்)

2. ஏழாம் வீட்டிலிருந்து லக்கினாதிபதி லக்கினத்தைப்
பார்த்தால் மிகவும் சிறப்பு. 180 பாகையிலிருந்து
எல்லாகிரகஙகளும் எதிர்வீட்டைப் பார்க்கும்.
The lagna lord aspecting the lagna from the
7th place will confer standing power to the native!

3.லக்கினாதிபதி லக்கினத்திலிருந்து 6ம் வீடு, 8ம் வீடு
12ம் வீடு ஆகிய வீடுகளில் மறைந்து விடக்கூடாது!
These places are inimical places
(தீய இடங்கள்)
அப்படி அமர்ந்தால் வாழ்க்கை போராட்டமாக அமையும்.
(உடனே ஜாதகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுக்
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து
விடாதீர்கள் - பல விதிவிலக்குகள் உள்ளன
- வரிசையாக அவைகளும் சொல்லித்தரப்படும்)
You should not jump to any conclusion
by seeing a single rule. The houses are to be
judged by various factors which will be taught
one by one

4. லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் (அதாவ்து
விரைய ஸ்தானம் எனப்படும் - house of lossesல்
அமர்ந்தால், ஜாதகன் வாழ்க்கை அவனுக்குப்
பயன் படாது. அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு
மட்டுமே பயன் படும்.

5. அதுபோல விரையாதிபதி that is the owner of
the 12th house லக்கினத்தில் வந்து அமர்ந்தால்
-உதாரணம் சிம்ம லக்கினத்தில் - அதற்குப் 12ம்
வீடான கடகத்தின் அதிபதி சந்திரன் வந்து
அமர்ந்தால் - ஜாதகன் வாழக்கை விரயமாகி விடும்
அவனுடைய வாழக்கை யாருக்கும் பயன் படாது
You should not jump to any conclusion
by seeing a single rule. The houses are to be
judged by various factors which will be taught
one by one

6. லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று
சேர்ந்து ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் அது
ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.
Both the owner of the first house and owner of
the 12th associated together in any place in the
horoscope will not confer any auspicious things to
the native

7. லக்கினாதிபதி உச்சம் பெறுவது மிகவும் ந்ல்லது
example - சிம்மலக்கின ஜாதகத்தில் சூரியன் மேஷத்தில்
இருப்பது.

8. லக்கினத்தில் குரு இருப்பது மிகவும் நல்லது.
It is blessed horoscope

9. அதற்கு நேர் எதிர் லக்கினத்தில் சனி இருப்பது
நல்லதல்ல!
இதற்கு மகர லக்கினமும், குமப லக்கினமும்
விதிவிலக்கு ஏனென்றால் அந்த இரண்டு லக்கினங்
களுக்கும் சனி அதிபதி.

10. லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலோ (7ம் பார்வை)
அல்லது லக்கினத்தில் சந்திரன் இருந்தாலோ, ஜாதகன்
அழகாக இருப்பான் - பெண் என்றால் ஜாதகி அழகாக
இருப்பாள்.

11. அதே போல சுக்கிரன் லக்கினத்தில் இருந்தாலும்,
அல்லது பார்த்தாலும் அழகான் தோற்றத்தை கொடுப்பான்

(சினிமா நடிகைகளின் ஜாதகத்தில் இந்தக் combination
இருக்கும். அதனால்தான் அவர்கள் அழ்கான் தோற்றத்தைப்
பெற்றுள்ளார்கள்)
(சரி பரிசோதனை செய்து பார்க்கலாம் என்றால்
நடிகர்களின் ஜாதகங்கள் தாராளமாகக் கிடைக்
கின்றன். நடிகைகளின் ஜாதகங்கள் கிடைப்பதில்லை!
வெளியே வராது. வயது தெரிந்துபோய் விடுமே
சாமி:-))))


நடிகைகள் என்றில்லை, பெண்களின் வயதையும்
ஆண்களின் வருமானத்தையும் கண்டுபிடிக்க
முடியுமா? அல்லது கேட்பதுதான் நியாயமா?
12. அதே இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அல்லது
பார்த்தால் அபரிதமான திறமையைக் கொடுப்பான்

13. எல்லா லக்கினங்களும் சமம். ஆனால் ஒவ்வொன்
றிற்கும் ஒரு அதிகப்படியான சிறப்பு உண்டு. சிம்ம
லக்கினம் Heroக்களின் லக்கினம். அந்த லக்கினக்
காரர்கள் எல்லாம் நாயகர்கள்தான்
(உதாரணம் - கமல்ஹாசன், ரஜினிகாந்த ஆகிய
இருவரின் ஜாதகங்களைக் கொடுத்துள்ளேன்
பாருங்கள்)

=============================================




===========================================================
சிம்ம லக்கினம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏனென்றால் நானும் சிம்ம லக்கினம்தான்..ஹி.ஹி:-))
திரைத்துறைக்குச் சென்றால்தான் ஹீரோவா?
மனதளவில் நானும் ஹீரோதான்..ஹி.ஹி:-))

14. மகர, குமப லக்கினக்காரர்கள் கடின
உழைப்பாளிகள். சனீஸ்வரன் அந்த ல்க்கினங்களின்
அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையிலே கடும்
உழைப்பளிகள். எடுத்த காரியத்தை முடிக்காமல்
விட மாட்டார்கள்

15. கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையாகவே மிகவும்
நல்லவர்கள். அவர்களை நம்பி எந்தக் காரியத்திலும்
இறங்கலாம். அவர்கள் நிறைகுடம் போன்றவர்கள்
அதனால்தான் கும்ப ராசியின் சின்னமாக் குடம் வழங்கப்
பெற்றுள்ளது.

பெண்களுக்கு கும்ப லக்கினம்தான் சிறந்த லக்கினம்
கும்ப லக்கினப் பெண்களை மணந்தவர்கள்
அதிர்ஷ்டசாலிகள்.

16.கன்னி லக்கினக்காரர்கள் ம்ற்ற எல்லா லக்கினக்
காரகளையும் சுலபமாக ஈர்த்து விடக்கூடியவர்கள்
They will attract or mix with any people or any
Society easily

17.மிதுன லக்கினக்காரர்கள் மிகவும் அழகாக
இருப்பார்கள் (உதாரணம் - திரு.ஜெமினி கணேசன்
செல்வி ஜெயலலிதா. திரு. ப். சிதம்பரம் போன்றவர்கள்)

18. கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல்
வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள். உதாரணம் -கலைஞர்
மு.க, திருமதி இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு
போன்றவர்கள்) அரசியல் இல்லையென்றாலும்
தலைமை தாங்கும் திறமையுடையவர்கள்
நாட்டமையாக இருப்பவர்கள்

19. ரிஷபம், துலாம் லக்கினக்காரர்கள் கலைத்துறையில்
பிரகாசிப்பார்கள் (அதிபதி சுக்கிரன்). அதுபோல வாழ்க்கையை
இயற்கையாகவே அனுபவிக்கக் கூடியவர்கள். ரசனை
உணர்வு மிக்கவர்கள். மெல்லிய உணர்வு மிக்கவர்கள்

20. மேஷம், விருச்சிக லக்கினக்காரர்க்ள் - செவ்வாய்
அதிபதி அதனால் போரர்டிப் பார்க்கும் மனப்பான்மை
உள்ளவர்கள். யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டர்கள்
ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் பரிண்மிப்ப
வர்கள் இவர்கள்தான்.

21. தனுசு, மீன் லக்கினக்காரர்கள் - குரு அதிபதி
யானதால், இயற்கையாகவே சிற்ந்த அறிவுடையவர்களாக்
இருப்பார்கள் (Keen Intelligence) Finance, stock market,
Banking, auditing, teaching, coaching போன்ற துறைகளில்
இவர்கள் பரிணமிக்கும் வாய்ப்பு இயற்கையாகவே இவர்களுக்கு இருக்கும்!

22.லக்கினாதிபதி சிறுவயது வாழ்க்கைக்கும், உடல்
நல்த்திற்கும் உரியவர், அவர் பலமாக இருந்தால்
சிறுவயது வாழ்க்கை சிற்ப்பாக இருக்கும். உடல்
நலமும் ந்ன்றாக இருக்கும்

23. அவர் வலுவிழந்து இருந்தால் (உதாரணம்
லக்கினாதிபதி சனி அல்லது ராகு அல்லது கேது
போன்ற தீய கிரகங்களுடன் சேர்ந்திருந்தால்
உடல் நலம் பாதிக்கப்படும்.

24.தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை
ஒன்றுக்கு மேற்பட்ட தீய கிரகமானால் வாழ்க்கை
துன்பம் மிகுந்ததாகிவிடும்

25. கடவுள் கருணை மிக்கவர். ஜாதகத்தில்
லக்கினத்தின் மூலம் உள்ள குறைகளுக்கு
அவர் நிவர்த்தியையும் கொடுத்துதான் அத்தனை
ஜீவ ராசிகளையும் பிறக்க வைக்கிறார்.
அதற்கு அதிரடியான சான்று - ஜாதகத்தின்
மொத்த மதிப்பெண் 337தான்.
அது என்ன 337 என்கிறீர்களா? அதுதான்
சுவாரசியம் மிக்க, மனதை வருடக்கூடிய
கடைசிப் பாடம். அப்போது விவரமாகச் சொல்கிறேன்
36ல் 18 என்று முன் பதிவில் சொன்னேன் இல்லையா
அந்தக் கணக்கு இதில்தான் (அந்த 337ல்) அடங்கும்

ஆட்டிற்கும், மாட்டிற்கும், மான்களுக்கும், கொம்பைக்
கொடுத்த இறைவன் ஏன் குதிரைக்குக் கொம்பைக்
கொடுக்க வில்லை?

இதைச் சொன்னவுடன் என் நண்பர் ஒருவர் சொன்னார்,
"கழுதைக்கும் கொம்பைக் கொடுக்கவில்லயே?"

நான் உடனே அவரிடம் சொன்னேன், "இல்லை
இறைவன் Strengthஐ கழுதைக்குக் கால்களில்
கொடுத்துள்ளார் உதை வாங்கியவர்களுக்குத் தெரியும்
கேட்டுப்பார்"

அதற்குப் பெயர் சம்ப்படுத்தும் முறை!(Balancing Theory)
Wealth இருக்கிறவனுக்கு Health இருக்காது.
Health இருக்கிறவனுக்கு Wealth இருக்காது
பயில்வானாக இருக்கிறவனுக்கு மூளை Sharpஆக
இருக்காது. Smart ஆக இருக்கிறவனுக்கு உடல்
பலம் மறுக்கப்பட்டிருக்கும்.

பிரதமருக்கும் 337தான், அம்பானிக்கும் 337தான்
அவர்களுடைய கார் டிரைவருக்கும் 337தான்
கார் டிரைவர் Duty Time முடிந்தவுடன் த்ன்னுடைய
இரண்டு சக்கர வாகனத்தில் ஜாலியாக எங்கு வேண்டு
மானலும் போவான். ஆனால் அவர்க்ள் Security

இல்லாமல் எங்கும் செல்ல முடியாது
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன்
முடித்துக் கொள்கிறேன்!
-----------------------------------
Practical Class: (Test)
கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் ஜாதகத்தைக்
கீழே கொடுத்துள்ளேன்

1.அவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?
2.அவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் ஆட்சி பலத்துடன் உள்ளன?
==============================================

=================================================
முன்பாடத்தில் சொல்லிக் கொடுத்துள்ளேன்.
கண்டு பிடித்து எழுதுங்கள்
(கடைசி பெஞ்சகாரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு:-)))

(தொடரும்)
=============================

26 comments:

  1. அய்யா

    இந்த வகுப்பு நன்றாக செல்கிறது..

    எனினும் வேறு பாடங்களும் எடுக்கவும்.. :)

    ReplyDelete
  2. //சிவபாலன் அவர்கள் சொல்லியது:
    எனினும் வேறு பாடங்களும் எடுக்கவும்.. :) ///

    எங்கள் ஊர்க்காரார் சிவபாலன் சொல்லிவிட்டார்!
    ம்றுக்க முடியுமா?

    அடுத்த் 3 பதிவுகள் வேறு பாடங்கள் சிவபாலன்.

    சரிதானே?

    ReplyDelete
  3. ஆமோதிக்கிறேன். உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  4. எனக்கு 18 தான்,ஆனா அதில் உள்ளவை என்னிடம் இல்லை.அதான் வேறு கலரில் போட்டு முன்குறிப்பு கொடுத்திட்டீங்களே!! அதனால் கவலையில்லை.
    நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பழைய பதிவை போய் பார்த்துவிட்டு தான் வரவேண்டும் என்று நினைக்கிறேன்,இல்லை பிரிண்ட் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  5. குருவே,

    பாடங்கள் மிக சுவராசியமாக செல்கின்றது. ஒவ்வொரு நாளும் ஆவலுடன் வருகின்றோம்.

    விடைகள்:

    உச்சம் - சந்திரன், சனி, செவ்வாய்
    ஆட்சி - புதன்

    ராஜகோபால்

    ReplyDelete
  6. ////வல்லிசிம்ஹன் said...
    ஆமோதிக்கிறேன். உள்ளேன் ஐயா.///


    சிவபாலன அவர்கள் சொல்லியதை
    நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?
    ந்ன்றி சகோதரி!

    ReplyDelete
  7. ////வடுவூர் குமார் said...
    நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பழைய பதிவை
    போய் பார்த்துவிட்டு தான் வரவேண்டும்
    என்று நினைக்கிறேன், இல்லை பிரிண்ட்
    எடுக்க வேண்டும்.////

    ராசிக்ள், கிரகங்களின் பெயர்கள், ஆட்சி, உச்சம், நீசம்
    போன்றவற்றை மனதில் ஏற்றிக் கொள்வதுதான்
    தீர்வு! (They should be kept in our own (body) hard disc)

    ReplyDelete
  8. முதலில் பிரிண்ட் எடுத்து பாடம் பண்ண முயற்சிக்கிறேன் வாத்தியாரே.

    ReplyDelete
  9. பழைய பதிவொன்றில் அப்படியே பதில் இருக்கே!

    1. செவ்வாய், சனி, சந்திரன் - 3 கிரகங்கள் உச்சம்
    2. புதன் ஆட்சி பலத்துடன் உள்ளது

    ReplyDelete
  10. ///பொன்ஸ் said...
    பழைய பதிவொன்றில் அப்படியே பதில் இருக்கே!
    1. செவ்வாய், சனி, சந்திரன் - 3 கிரகங்கள் உச்சம்
    2. புதன் ஆட்சி பலத்துடன் உள்ளது///

    முன் பக்கம் புரட்டிப் பார்த்து அதை வைத்தாவது
    நமது வகுப்புக் கண்மணிகள் சொல்கிறார்களா
    என்று பார்த்தேன். அப்படியும் பலர் சொல்லவில்லை:-((((

    ReplyDelete
  11. ராஜகோபால் அவர்கள் சரியான் விடைகளைச்
    சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. //லக்கினத்திலிருந்து 5ம் வீடு அல்லது 9ம் வீடு (திரிகோண வீடுகள்
    எனப்படும்) அதுபோல 4ம் வீடும் 7ம் வீடும் அல்லது 11ம் வீடும் சிறப்பான வீடுகளே (கேந்திரம் எனப்படும்
    வீடுகள்)//

    4-7-10 தான் கேந்திரம் என்று படித்ததாக நினைவு.

    ReplyDelete
  13. ///ராவணன் அவர்கள் சொல்லியது: 4-7-10 தான் கேந்திரம் என்று படித்ததாக நினைவு.///

    ஆமாம் நண்பரே - சரிதான் - தட்ட்ட்ச்சுப்பிழை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

    2, 11 ற்கும் அதே அந்தஸ்து உண்டு
    காரணம் 2 ம் வீடு தன,குடும்ப ஸ்தானம் (House of Finance & Family Life) 11 ம் வீடு லாப ஸ்தானம் (House of Profit)

    ReplyDelete
  14. //கடக லக்கினக்காரர்கள் பெரும்பாலும் அரசியல்
    வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள். உதாரணம் -கலைஞர்
    மு.க,
    திருமதி இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு
    போன்றவர்கள்) அரசியல் இல்லையென்றாலும்
    தலைமை தாங்கும் திறமையுடையவர்கள்
    நாட்டமையாக இருப்பவர்கள்//

    ஆச்சரியமான ஒரு ஒற்றுமை.

    எனக்கும், என் தலைவனுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லையென்றாலும் நாங்கள் இருவரும் ஒரே லக்கினம் ;-)

    தொடர்ந்து தொடரை படித்து வருகிறேன். அட்டகாசமாக பாடம் நடத்துகிறீர்கள் வாத்தியாரே. உங்களை மாதிரி வாத்தியார் எனக்கு ஸ்கூலில் வாய்த்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன்.

    ReplyDelete
  15. ///தொடர்ந்து தொடரை படித்து வருகிறேன். அட்டகாசமாக பாடம் நடத்துகிறீர்கள் வாத்தியாரே. உங்களை மாதிரி வாத்தியார் எனக்கு ஸ்கூலில் வாய்த்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன்.///

    ஆகா, பாராட்டிற்கு மிக்க நன்றி லக்கியாரே!

    இன்னொரு ஒற்றுமை தெரியுமா?

    உங்களுடைய உண்மைப் பெயர், மற்றும் புனைப் பெயர் இரண்டிற்குமே
    பெயர் எண் 34 தான்

    (3+4 =7) ஏழு என்பது ஞானகாரகன் கேதுவின் எண்! சிறப்பான எண்

    ReplyDelete
  16. மிகவும் அருமையான பணியை செம்மையாக செய்யும் குருவுக்கு இந்த மாணவனின் வணக்கங்கள். உச்சம் என்பது எப்படி வரையறுக்க படுகிறது கொஞ்சம் விளக்க வேண்டுகிறேன் .

    ReplyDelete
  17. அய்யா,

    இதுவரை வந்த சோதிடப் பகுதிகளை PDF ஆக கொடுக்குமாறு மிகவும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

    இப்படிக்கு,
    இரா.ரகுபதி

    ReplyDelete
  18. மிஸ்டர் ரகுபதி!

    என்னுட்டைய பதிவில் உள்ள டெம்ப்ளேட்டில் PDF மென்பொருளுக்கான
    html code பதிவிட்டால் மட்டுமே அது சாத்தியம்

    இரண்டொரு நாட்க்ளில் செய்கிறேன் பொறுத்திருங்கள்

    அன்புடன்
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  19. மதிப்பிற்குரிய அய்யா,

    தாங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. தங்களின் சோதிடப் பகுதி மிகவும் அருமையாக வருகிறது. மிகவும் மகத்தான பணியை செய்கிறீர்கள். தங்களின் முயற்சி தொடர என் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு,
    இரா.ரகுபதி.

    ReplyDelete
  20. மதிப்பிற்குரிய அய்யா,

    தாங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. தங்களின் சோதிடப் பகுதி மிகவும் அருமையாக வருகிறது. மிகவும் மகத்தான பணியை செய்கிறீர்கள். தங்களின் முயற்சி தொடர என் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு,
    இரா.ரகுபதி.

    ReplyDelete
  21. //லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று
    சேர்ந்து ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் அது
    ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.// If the lord of the Lagna and விரையாதிபதி sits together at the 9th house(thirikonam), what will be the effect? as i'm going thru ur lessons from the begining i'm asking these questions very lately. Sorry for disturbing you sir. Arun

    ReplyDelete
  22. //////Ragupathi said...
    மதிப்பிற்குரிய அய்யா,
    தாங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. தங்களின் சோதிடப் பகுதி மிகவும் அருமையாக வருகிறது. மிகவும் மகத்தான பணியை செய்கிறீர்கள். தங்களின் முயற்சி தொடர என் வாழ்த்துக்கள்.
    இப்படிக்கு,
    இரா.ரகுபதி./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////அட்சயா said...
    //லக்கினாதிபதியும், விரையாதிபதியும் - ஒன்று
    சேர்ந்து ஜாதகத்தில் எங்கு அமர்ந்தாலும் அது
    ஜாதகனுக்குப் பயன் அளிக்காது.// If the lord of the Lagna and விரையாதிபதி sits together at the 9th house(thirikonam), what will be the effect? as i'm going thru ur lessons from the begining i'm asking these questions very lately. Sorry for disturbing you sir. Arun//////

    விரையாதிபதி உடன் இருந்தால் பலன் இருக்காது!

    ReplyDelete
  24. Dear sir
    The articles in your blog are very helpful to astrologers. I'm also an astrologer and I want to know more deeply in astrology. Please help.

    Thanks & Best Regards,

    Palaniappan,
    Karur.

    ReplyDelete
  25. hello sir,

    its been like an addiction since morning this day with ur blog site!!!! it's too simple, comprehensive and very educative for a person like me who had been browsing various sites on astro for past 2 months, 5 hours a day!!!! i would luv to receive all ur study articles from the beginning!!! hope u would enlighten me through out this wonderful journey. my mail id is spicepeppers@gmail.com. waiting for lessons sooner

    thanks with regards
    G3

    ReplyDelete
  26. அய்யா, உங்கள் பதிவுகள் நல்ல இருக்கு. இந்த பதிவுல ஒரு சிறு எழுத்து பிழைன்னு நினைக்ரென். 10 க்கு பதில் 11 கேந்த்ரம்னு வந்திருக்கு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com