மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.3.07

திமுக' வின் ஜாதகம்

தி.மு.க.வின் ஜாதகம்!

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 16
By SP.VR.SUBBIAH

முதலில் பாடம்: அப்புறம் அரட்டை!

லக்னம் என்றால் என்ன?

வானம் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, ஒவ்வொரு
பகுதிக்கும் ஒரு பெயர் தரப்பட்டுள்ளது என்று முன்பே
சொல்லியிருக்கிறேன. மேஷம் முதல் மீனம் வரை
அதற்குப் பெயர்களும் உண்டு

வானவட்டம் 360 வகுத்தல் 12 = 30 பாகைகள் = ஒரு ராசி
என்பது கணக்கு. ஆரம்ப ராசி மேஷம்தான்.

சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி.
சூரியன் அந்த ராசியில்தான் உதிக்கும். வைகாசி மாதம்
ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம் மிதுனம்
ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
கன்னி, ஐப்பசிமாதம் துலாம், கார்த்திகை மாதம் விருச்சிகம்,
மார்கழி மாதம் தனுசு, தை மாதம் மகரம், மாசி மாதம் கும்பம்
பங்குனி மாதம் மீனம் என்று ஒரு சுற்று முடிந்து விடும்
ஒரு வருடமும் முடிந்து விடும். மீண்டும் அடுத்த சுற்று
மறுபடியும் மேஷத்தில் தான் ஆர்ம்பமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசியை
வைத்து அவர் எந்த மாதம் பிறந்தவர் என்று சொல்லிவிடலாம்
உதாரணத்திற்குச் சூரியன் சிம்ம வீட்டில் இருந்தால் அந்த
ஜாதகர் ஆவணி மாதம்தான் பிறந்தவர்.

ஆனால் லக்கினம் என்பது வேறு!.

ஒரு குழந்தை பிறந்த் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த
இடம், வானத்தை எதிர் நோக்கி இருக்கும் பகுதிதான்
அந்தக் குழந்தையின் லக்கினம் ஆகும்!

லக்(கி)னம் . பெயர்ச்சொல்: சூரிய உதயத்தைப் பொறுத்து
ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தைக் கட்டுப்படுத்தும் ராசி
Zodiacal sign influencing events at any given
time of the day with reference to the time of sunrise

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை பிறந்த
இடத்தைக்கட்டுப் படுத்தும் ராசிதான் லக்கினம்

லக்கினம் என்ப்து ஒரு ஜாதகத்தின் தலைப்பகுதி. அதுதான்
முதல் வீடு. அதிலிருந்து கடிகாரச் சுற்று வரிசையில்தான் மற்ற
வீடுகளைக் கணக்கில் கொள்வார்கள்

சித்திரை மாதம் முதல் தேதி சூரிய உதயம் முதல் அடுத்து
வரும் 2 மணி நேரம் வரை உள்ள காலத்தில் பிறந்த
குழந்தையின் லக்கினம் மேஷம்தான். அதற்குப் பிறகு
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அடுத்தடுதத ராசி
வரிசையில் லக்கினங்கள் அமையும்

ஆனால் சித்திரை மாதம் 16 ம் தேதி காலை சூரிய உதயத்தி
லிருந்து ஒரு மணி நேரம் வரை தான் மேஷ லக்கினம்
அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தை ரிஷப லக்கினக் குழந்தை
யாகும்.

இந்த வித்தியாசம் ஏன்?

ஒரு ராசி என்பது 30 பாகைகள் - ஒரு ராசியின் கால அளவு
24 மணிகள் வகுத்தல் 12 ராசி = 2 மணி நேரம் = 120 நிமிடங்கள்

ஆக்வே ஒவ்வொரு நாள் சுழற்சியிலும் சூரியன் ஒரு பாகை
யைத் தாண்டி வந்துவிடும் (4 நிமிடங்கள்) 15 நாட்களில்
15 பாகைகளைக் கடந்து விடும் ஆகவே 15 x 4 = 60 நிமிடங்கள்
அந்தத் தேதிக்குள் கழிந்துவிடும்

இப்படியே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
பாகை வீதம் 360 நாட்களில் 360 பாகைகள் வித்தியாசத்துடன்
பிறக்கும் குழந்தைகளுக்கு அது எந்தப் பாகையில் பிறந்ததோ
அந்தப் பாகையின் பகுதிதான் லக்கினம் ஆகும்.

உங்கள் மொழியில் சொன்னால் லக்கினம்தான் தலைமைச்
செயலகம்!
----------------------------------------------------------
லக்கினத்தை வைத்துதான் ஒரு மனிதனின் குணத்தை,
தோற்றத்தை, அவனுடைய ஆளூமையைச் சொல்ல
முடியும்.

அழகான் தோற்றம், உடற்கட்டு, நல்ல குணம் குறிப்பாக
Heroவா? அல்லது Villainனா? என்பது போன்ற
கணிப்புக்களை, பெண்ணாக இருந்தால் நாயகியா அல்லது
வில்லியா என்று தெரிந்து கொள்வதற்கு லக்கினம்தான்
ஆதாரம்!

அறிவாளியா- முட்டாளா, திறமைசாலியா- சோம்பேறியா
ந்ல்லவனா- வக்கிரம் பிடித்தவனா, அப்பாவியா - கல்லுளி
மங்கனா, சமூகத்தோடு ஒத்துப் போகக்கூடியவனா அல்லது
விதண்டாவாதம் பேசி வீணாய்ப் போகிறவனா என்று
சொவதற்கும், தோற்றத்தில் அரவிந்தசாமியா அல்லது
பி.எஸ் வீரப்பாவா ஓமக்குச்சி நரசிம்மனா அல்லது
பயில்வான் ரங்கநாதனா பெண்ணாக இருந்தால் நயன்தாராவா
அல்லது காந்திமதியா (அவரேதான் 16 வயதினில் படத்தில்
மயிலின் அம்மாவாக வருவரே அதே காந்திமதிதான்)
என்று சொல்வதெல்லாம லக்கினத்தை வைத்துததான்

எல்லாவ்ற்றையும் ஒரே நாளில் லோட் செய்தால் வண்டி
கவிழ்ந்து விடும். ஆகவே இன்று லக்கினம் என்பது என்ன்
என்பதை மட்டும் மனதில் வையுங்கள். அதன் பலா
பலன்கள் 6 பகுதிகளாகப் பின் வரும் பதிவுகளில்
சொல்லிக்கொடுக்கப்படும்!
-----------------------------------------------------

பயிற்சி வகுப்பு (Practical Class)
தி.மு.க வின் ஜாதகததைக் கீழே கொடுத்துள்ளேன்
இதுவரை சொல்லிக் கொடுத்த பாடத்தைவைத்து
1. தி.மு.கவின் லக்கினம் என்ன?
2. லக்கின நாதன் யர்ர்?
3. அவர் அம்ர்ந்திருக்கும் ராசியின் பெயர் என்ன?

(ராசிகளின் பெயர்களும், ராசி நாதனின் பெயர்களையும்
முன் பாடத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்)

யோசித்துச் சரியான விடையைத் தெரிந்த
வர்கள் (atleast இரண்டு மூன்று பேர்களாவது)
எழுதுங்கள்.

தெரியாதவர்கள் அந்தப் பின்னூட்டஙகளை

வெளியிடுகிறேன். தெரிந்து கொள்ளுங்கள்.-----------------------------------------------------------
நாட்டிற்கு ஜாதகம் கொடுத்தீர்கள். இப்போது கட்சிக்கும்
ஜாதகமா? என்று வியப்பவர்களுக்கு:

உண்டு. தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் கூட
ஜாதகம் உண்டு. குத்து விளக்கேற்றித் துவக்கி வைக்கிறார்களே
அதுதான் அவ்ற்றின் துவ்க்க நேரம் அதைவைத்துத்தான்
அவற்றிற்கு ஜாதகங்கள் - பலன்கள்.

தி.மு.க வின் ஜாதகம்:

பிறந்த நாள்: 17.09.1949
நேரம் மாலை: மணி 7.20 PM (19.20 IST)
இடம்: ராபின்சன் பூங்கா, ராயபுரம் சென்னை
நட்சத்திரம்: புனர்பூசம்
(ஸ்ரீ ராமபிரானுடைய நட்சத்திரம்)
---------------------------------------
நீ அப்போது பிறந்திருக்ககூட மாட்டாயே உன்க்கு
எப்படித் தெரியும் என்கிறீர்களா?
எல்லாம் என்னுடைய சேகரிப்புக் கோப்பில் உண்டு!
அதன் Scanned Copy கீழே உள்ளது.

30 வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய ஜோதிடர்
கணித்தது. அரசியல் வாதிகளுக்குத் தெரியாத
ஜோதிடர்களும் இல்லை ஜோதிடர்களுக்குத்
தெரியாத அரசியல்வாதிகளும் இல்லை!

நம் அம்மா கட்சியின் ஜோதிடர் கேரளாவில்
இருக்கிறார் ( உன்னிகிருஷ்ண பணிக்கர்)

இன்றைய கர்நாடக முதல்வரின் ஜோதிடர்
எங்கே இருக்கிறார் தெரியுமா? நம்து வலைப் பதிவர்
சிபியின் ஊரில்தான் இருக்கிறார்!

(அவரிடம் கேட்டால் முகவரி கிடைக்கும்:-)))) )

நம்து கணினிக் கணிப்பில் வரும் ஜாதகங்களுக்கும்
(அதெல்லாம் இப்போது 10 வருடஙகளாகத்தானே)
அன்று மனித முயற்சியால் கணிக்கப்ப்பெற்ற
ஜாதகங்களுக்கும் வேறுபாடு துளிக்கூட இருக்காது
அதை உங்களுக்குச் சுட்டிக் காட்டும் முகமாக
தி.மு.கவின் ஜாதகத்தைக் கணினியில் கணித்தும்
கொடுத்துள்ளேன்

இன்று கேட்டுள்ள மூன்று கேள்விகளுக்கும் சரியான
பதிலை எழுதுபவர்கள் நாளை முதல் முதல் பெஞ்ச்சில்
அமரலாம்:-))))

(தொடரும்)
---------------------------------------
லக்னம் (Ascendant) என்பதைப் பற்றி அறிவியல்
பூர்வமாக நமது வணக்கத்திற்குரிய கூகுள் ஆண்டவர்
சொன்னால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதற்காக
லக்கினத்தைப்ப்ற்றி அவர் சொல்வதையும் நீங்கள்
தெரிந்துகொள்வதற்கான சுட்டியைக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------
================================================





=========================================================

30 comments:

  1. Sir,
    I have been reading your posts for a while. My best wishes for your good work.

    Following are answers to your questions,

    Lagnam is in Meenam (Pisces).
    Lord of the house, Meenam , is Guru.

    In this horoscope, Guru sits in Dhanus, saggitarius.

    Thanks,
    Moorthi

    ReplyDelete
  2. Thiru Subbiah,
    I have been reading your posts for a while. My best wishes for your good work.

    Following are answers to your questions.

    1. Lagnam is Meenam, Pisces.
    2. Lord of the house, Meenam, is Guru.
    3. Guru sits in Dhanus, Saggitarius.

    Thanks,
    Moorthi

    ReplyDelete
  3. 1. மீனம்
    2. குரு
    3. தனுசு (சூப்பர் ஸ்டார் மருமகன் இல்லை)

    ReplyDelete
  4. குருவே,

    விடைகள் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    1. மீன லக்னம்
    2. குரு
    3. தனுசு

    ராமரை போல் தி.மு.க.வும் அரசியல் வனவாசம் அனுபவித்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

    ராஜகோபால்

    ReplyDelete
  5. /// Googly said...
    Thiru Subbiah,
    I have been reading your posts for a while. My best wishes for your good work.
    Following are answers to your questions.
    1. Lagnam is Meenam, Pisces.
    2. Lord of the house, Meenam, is Guru.
    3. Guru sits in Dhanus, Saggitarius.
    Thanks,
    Moorthi///
    சரியான் விடைகள்!
    வாழ்த்துக்கள் மிஸ்டர் மூர்த்தி!

    ReplyDelete
  6. ////வெட்டிப்பயல் said...
    1. மீனம்
    2. குரு
    3. தனுசு (சூப்பர் ஸ்டார் மருமகன் இல்லை)///
    சரியான விடைகள்!
    நடுவில் தனுசிவிற்கு ஒரு கலக்கலான விமர்சனம் வேறு:-))))
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ///Rajagopal said...
    குருவே,
    விடைகள் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
    1. மீன லக்னம்
    2. குரு
    3. தனுசு
    ராமரை போல் தி.மு.க.வும் அரசியல் வனவாசம்
    அனுபவித்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.
    ராஜகோபால்////

    சரியான் விடைகள்!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. சரியான விடைகள் ஓகே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க?

    ReplyDelete
  9. அய்யா!

    திமுகவின் ஜாதகம் என்று ஒரு PRESS CLIPPING போட்டிருக்கிறீர்கள். அது சமீபத்திய தேர்தலின் போது போடப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தவும்.

    சமீபத்திய தேர்தலில் நம்புங்கள் நாராயணன் அவர்களின் திமுக பற்றிய கணீப்பீடு சுத்தமாக மாறிவிட்டது

    ReplyDelete
  10. ///// பொன்ஸ் said...
    சரியான விடைகள் ஓகே.. எப்படிக் கண்டுபிடிச்சாங்க?////

    இதுவரை நடத்திய பாடங்களை வைத்துக் கேட்கப்பட்ட
    கேள்விகள் சகோதரி!
    அதனால் வெட்டிகூட வந்து பதிலை
    வெட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

    நீங்கள் ஆரம்பத்தில் உள்ள பதிவுகளில் இருந்து தொடர்ச்சியாக
    அத்தனை பதிவுகளையும் படித்தால் அது தெரியவரும்!

    ReplyDelete
  11. //// லக்கிலுக் said..
    அய்யா!
    திமுகவின் ஜாதகம் என்று ஒரு PRESS CLIPPING போட்டிருக்கிறீர்கள்.
    அது சமீபத்திய தேர்தலின் போது போடப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தவும்.

    சமீபத்திய தேர்தலில் நம்புங்கள் நாராயணன் அவர்களின் திமுக
    பற்றிய கணீப்பீடு சுத்தமாக மாறிவிட்டது////

    ல்க்கியாரே,

    முப்பது வருடங்களுக்கு முன்பு வந்த பத்திரிக்கையில் இருந்து
    எடுத்து வைத்திருந்த Press Clipping அது!

    (தேதியுடன் அந்தப் பத்திரிக்கையின் முழுப்பக்கம் என்வசம்
    உள்ளது. பார்க்க விரும்பினால் சொல்லுங்கள் Scan செய்து அப்படியே
    பதிவிடுகிறேன்)

    அப்போது நடந்த தேர்தலில் (1977) புரட்சித்தலைவர் பத்விக்கு வந்தார்
    என்பதும் அந்த் ஜோதிடர் சொன்னது அப்படியே நட்ந்தது என்பதும்
    குறிப்பிடத்தக்கது!

    ReplyDelete
  12. வாத்தியாரய்யா,

    19.20 PM என்கிற போது அது எப்படி மீனமாக இருக்கிறது?, 6 மணி சூர்ய உதயம் எனக்கொண்டால் மகரம் / விருச்சிகமாக அல்லவா இருக்க வேண்டும்?.

    ReplyDelete
  13. மதுரையம்பதி அவர்களே!

    தி.மு.கவின் ஜாத்கத்தையும், பிறந்த தேதியையும்
    மீண்டும் ஒருமுறை நன்றாகாப் பாருங்கள்

    பிறந்ததேதி: 17.09.1949

    செப்டெம்பர் 17 என்பது புரட்டாசி 1ம் தேதி
    சூரியன் கன்னியில்தான் உதிக்கும்
    உதய லக்கினம் கன்னிதான்.

    கன்னி + துலாம் + விருச்சிகம் + தனுசு + மகரம் + கும்பம்
    ஆக மொத்தம் 6 ராசிகளுக்கு 12 மணி நேரத்தை அன்றைய
    சூரிய உதயத்துடன் கூட்டினீர்கள் என்றால்
    அதாவ்து 6.05 AM + 12 Hours= மாலை மணி 6.05 முதல்
    8.05 வரை மீனம்தான் லக்கினமாக வரும்

    அந்த் ஜோதிடரும் தவறு செய்யவில்லை. நான் அதையே
    கணினியில் எடுத்துக் கொடுத்திருக்கிறேன் அதிலும் தவறில்லை
    அதை நீங்கள் பார்க்கவில்லையா?

    மேல் விபரம்: ஒவ்வொரு மாதமும் சூரியன் எந்த ராசியில்
    உதிக்கும் என்பதை இதே பதிவில் எழுதியுள்ளேனே
    அதையும் நீங்கள் கவனிக்கவில்லை

    ////சித்திரை மாதம் மேஷம்தான் சூரியனின் உதய ராசி.
    சூரியன் அந்த ராசியில்தான் உதிக்கும். வைகாசி மாதம்
    ரிஷப ராசியில்தான் உதிக்கும், ஆனி மாதம் மிதுனம்
    ஆடி மாதம் கடகம், ஆவணி மாதம் சிம்மம், புரட்டாசி மாதம்
    கன்னி..../////

    என்ன சரிதானா? உங்களுக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறேனா
    பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

    ReplyDelete
  14. புரிந்தது....நான் ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்திலிருந்து 2 மணிநேரம் மேஷமென புரிந்துகொண்டேன்....அதனால் வந்த கேள்வி அது. இப்போது தெளிவாகியது. நன்றி வாத்தியாரய்யா

    ReplyDelete
  15. மீன லக்னம், லக்னாதிபதி குரு, அவர் அமர்ந்திருக்கும் ராசி தனுசு.

    ReplyDelete
  16. எல்லாரும் சரியா சொல்லிட்டாங்க!
    இப்ப வந்து நான் சொன்னா அது காப்பி அடிச்ச மாரி இருக்கும் என்பதால் விடுகிறேன்!
    :)))
    நான் பேக்பெஞ்சிலேயே உக்காந்துக்கறேன்! :))

    சுவையான பதிவு ஆசானே!

    ReplyDelete
  17. /// எஸ்.கே அவர்கள் சொல்லியது: நான் பேக்பெஞ்சிலேயே உக்காந்துக்கறேன்! :))
    சுவையான பதிவு ஆசானே! ///

    சுவையாக இருந்தது பதிவு என்று பாராட்டியமைக்கு நன்றி!

    குரு பகவான் ஜாதகத்தில் 1, 5, 9ம் வீடுகளில்
    இருந்தால் சிறப்பான பலன்கள் உண்டு!.
    அதிலும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் (House of gains)
    இருந்தால் இரு மடங்கு சிறப்பு. அவர் அமர்ந்ததினால்
    ந்மது பாக்கியத்திற்கும் கை கொடுப்பார் அதோடு
    ஐந்தாம் பார்வையாக (aspect) லக்கினத்தையும்
    பார்த்துக் கொள்வார்.(உதாரணம்
    M.G.R & கண்ணதாசன் ஆகியோருடைய ஜாதகங்கள்)

    அதாவது என் தந்தையே நிதியமைசகம், உள்துறை
    அமைச்சகம் இரண்டிற்கும் மந்திரி என்றால் என்
    நிலைமை எப்படிக் குஷியாக இருக்கும் - அதுபோல!

    ஆகவே வகுப்பறையில் நீங்கள் எங்கே வேண்டு
    மென்றாலும் உட்காருங்கள். ஆனால் வாத்தியாரைப்
    பார்க்கும் முகமாக (aspecting the class teacher) உட்காருங்கள்
    அப்பொழுதுதான் வாத்தியார் சிறப்பாகப் பாடம்
    நடத்துவார்:-)))))

    ReplyDelete
  18. //குரு பகவான் ஜாதகத்தில் 1, 5, 9ம் வீடுகளில்
    இருந்தால் சிறப்பான பலன்கள் உண்டு!.// குரு துலாத்தில் இருந்தாலும் இதே பலன் பொருந்துமா?. துலாம் குருவின் எதிரி சுக்கிரனின் வீடென்பதால் பலன்கள் மாறுபடுமா?. நான் என்னுடைய ஜாதகத்தை வைத்து உங்களின் பாடங்களைப்புரிந்து கொள்ளும் முயற்சியின் விளைவே இந்த கேள்வி.

    ReplyDelete
  19. ///madaiyan avarkaL solliyathu:
    குரு துலாத்தில் இருந்தாலும் இதே பலன் பொருந்துமா?. துலாம் குருவின் எதிரி சுக்கிரனின் வீடென்பதால் பலன்கள் மாறுபடுமா?. நான் என்னுடைய ஜாதகத்தை வைத்து உங்களின் பாடங்களைப்புரிந்து கொள்ளும் முயற்சியின் விளைவே இந்த கேள்வி. ///

    மாறுபடும்! ஆனால் அவர் அமர்ந்த அந்தவீட்டிற்குரிய சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் குருவின் வீஇட்டில் அமர்ந்திருந்தால் அது பரிவர்த்தனை யோகம்! அது இரண்டு மடங்கு ந்ல்ல பலனைக் கொடுக்கும். இதுபோல....இன்னும் பல Combinationகள் உள்ளன அடிப்படைப்பாடங்கள் முடியும் வரை பொறுத்திருக்கவும்

    ReplyDelete
  20. //இன்னும் பல Combinationகள் உள்ளன அடிப்படைப்பாடங்கள் முடியும் வரை பொறுத்திருக்கவும் // நன்றி அய்யா. ஆர்வக்கொளாறு. மன்னித்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  21. வாத்தியார் அய்யா

    கட்சிக்கும் ஜாதகம் கணிப்பது தேர்தல் சமயத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலசமயங்களில் கட்சி முக்கியஸ்தர்களின் எதிர்காலத்தை வைத்து கட்சிகளின் எதிர்காலத்தை சிலர் கணிப்பதும் உண்டு.மற்றபடி சுவாரசியமாக தொடரை படித்துவருகிறேன்

    ReplyDelete
  22. /// செல்வன் அவர்கள் சொல்லியது: வாத்தியார் அய்யா

    கட்சிக்கும் ஜாதகம் கணிப்பது தேர்தல் சமயத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலசமயங்களில் கட்சி முக்கியஸ்தர்களின் எதிர்காலத்தை வைத்து கட்சிகளின் எதிர்காலத்தை சிலர் கணிப்பதும் உண்டு.மற்றபடி சுவாரசியமாக தொடரை படித்துவருகிறேன் ///

    முக்கியஸ்தர்களை வைத்துத்தான்
    சிலரல்ல - பலரும் பலன்சொல்வார்கள்!

    ReplyDelete
  23. சுப்பையா சார்,
    எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதைக் கண்டு கொண்டேன் :) ஆனால், ஒரு சந்தேகம், ராசி, அம்சம் என்று இரண்டு கட்டங்கள் இருக்கும் போது, அம்ச கட்டத்தின் லக்னம் முக்கியமா, ராசி கட்டத்தின் லக்னம் முக்கியமா? எதைப் பார்த்து லக்னாதிபதி, அல்லது, லக்னம் எது என்று கணிக்கிறார்கள்?

    அம்சத்தைப் பார்த்து என்றால் ஏன்? அப்படியானால் ராசி கட்டத்துக்கு என்ன சிறப்பு? (இதற்கு ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள் என்றால், மன்னிக்கவும்.. சந்தேகம் என்று தோன்றியவுடன் இங்கே பதிந்து வைக்கிறேன்; முடிந்தால் நானே இன்னும் பழைய பதிவுகளைப் படித்துப் பார்க்கிறேன். ஏற்கனவே சொல்லி இருந்தால் அதில் வந்திருக்கும் அல்லவா? )

    ReplyDelete
  24. ///பொன்ஸ் அவர்கள் சொல்லியது:எப்படிக்
    கண்டுபிடித்தார்கள் என்பதைக் கண்டு கொண்டேன் :)
    ஆனால், ஒரு சந்தேகம், ராசி, அம்சம் என்று இரண்டு
    கட்டங்கள் இருக்கும் போது, அம்ச கட்டத்தின் லக்னம்
    முக்கியமா, ராசி கட்டத்தின் லக்னம் முக்கியமா?
    எதைப் பார்த்து லக்னாதிபதி, அல்லது, லக்னம்
    எது என்று கணிக்கிறார்கள்?
    அம்சத்தைப் பார்த்து என்றால் ஏன்? அப்படியானால்
    ராசி கட்டத்துக்கு என்ன சிறப்பு? (
    இதற்கு ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள் என்றால், மன்னிக்கவும்
    .. சந்தேகம் என்று தோன்றியவுடன் இங்கே பதிந்து வைக்கிறேன்;
    முடிந்தால் நானே இன்னும் பழைய பதிவுகளைப் படித்துப்
    பார்க்கிறேன். ஏற்கனவே சொல்லி இருந்தால் அதில்
    வந்திருக்கும் அல்லவா? )////

    ராசிதான் அடிப்படை ஜாதகம், ராசியின் 1/9 அளவில்
    பகுக்கப்பெற்றதுதான் ந்வாம்சம்,(Fine Tuning என்று
    வைத்துக்கொள்ளுங்களேன்). நம்து கணினி மொழியில்
    சொன்னால் ஒன்பது மடங்கு Zoom செய்து பார்ப்பது
    என்றும் வைத்துக் கொள்ளலாம்

    ராசியில் ஒரு கிரகம் நீசம், ஆனால் நவாம்சத்தில்
    அது வேறு நிலையில் அதாவது நட்பு வீட்டிலோ
    அல்லது உச்ச வீட்டிலோ இருக்கலாம், அதனால்
    நீசத்தைக் கணக்கில் சொல்லாமல் ந்வாம்ச நிலையைப்
    பார்த்து பலனைச் சொல்வார்கள்

    ReplyDelete
  25. வாத்தியாரைய்யா,

    சூப்பருங்க. லக்னம் பற்றி எளிமையாக புரியும் படி சொல்லியிருக்கீங்க. இவ்வளவு எளிமையான விளக்கத்தை இதுவரை நான் கேட்டதில்லை.

    எனக்குத் தெரிந்த சோதிட ஆசான் ஒருத்தர் (எனக்கு ஆசான் அவரல்ல) இருக்கார். மேல்நிலை பாடங்களில் பல நுணுக்கங்களை அருமையாய் விளக்குவார். ஆனால் இன்னும் கூட லக்னம் கணிப்பது பற்றி அவர் விளக்க ஆரம்பிச்சா பசங்க எல்லாம் தலையை பிச்சிக்குவாங்க.

    "ஜாதகன் ஜனன காலத்தில் உதயாதியிலிருந்து சூரியன் நின்ற ராசியே லக்னம்"னு சொல்லி என்ன சொன்னாருன்னு எல்லாருக்கும் புரியரதுக்குள்ள பொர்டுல கரகரகரன்னு கிறுக்கி ஒரு ஃபார்முலா வேற போட்டு கதி கலங்க வைப்பார்.

    :-))

    ReplyDelete
  26. வாங்க கோபி அண்ணா!
    (அண்ணா என்பது ஒரு விகுதிக்காக)
    என்ன 20ம் தேதிப் பேப்பரை இன்னைக்குத்தான் படிக்கிறீங்களா?

    எல்லாததையும் படிச்சு முடிச்சிட்டு சீக்கிரம் நடபபுப் பகுதிக்கு வாங்க!

    அப்பத்தானே சுடச் சுடப் படிக்கலாம்
    பின்னூட்டமும் போடலாம் - வேணும்னா கேள்வியும் கேட்கலாம்!

    அப்புறம் பாராட்டிற்கு நன்றி அண்ணா!:-)))

    ReplyDelete
  27. ஐயைய்யோ! என்னங்க என்னைப் போய் அண்ணான்னு சொல்லிட்டீங்க. (லேட்டா வந்ததால வாசல்ல நிக்கவச்சி கிண்டல் பண்றீங்களா?)

    :-))

    அது வேற ஒன்னுமில்லீங்க.. கொஞ்ச நாளா பயணத்துல இருந்ததால விட்டுப் போச்சி. இன்னைக்கு தான் எல்லா பகுதியும் படிச்சி முடிச்சேன்.

    இன்னைக்கு பாடம் (பகுதி 19) கொஞ்சம் கடினம். இன்னும் கொஞ்சம் எளிமையாக்கலாம். ஆனா இதை விடவும் எளிமையாக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்...

    ReplyDelete
  28. sir, i am just now following ur classes i got an illustration to tell about lagna, while sooriyan's place refers to the revolution of the earth around sun, lagna refers to the rotation of the earth on its own axis, correct me if i am wrong.

    thanks for the classses

    ReplyDelete
  29. ////Blogger கோபி(Gopi) said...
    ஐயைய்யோ! என்னங்க என்னைப் போய் அண்ணான்னு சொல்லிட்டீங்க. (லேட்டா வந்ததால வாசல்ல நிக்கவச்சி கிண்டல் பண்றீங்களா?)
    :-))
    அது வேற ஒன்னுமில்லீங்க.. கொஞ்ச நாளா பயணத்துல இருந்ததால விட்டுப் போச்சி. இன்னைக்கு தான் எல்லா பகுதியும் படிச்சி முடிச்சேன்.
    இன்னைக்கு பாடம் (பகுதி 19) கொஞ்சம் கடினம். இன்னும் கொஞ்சம் எளிமையாக்கலாம். ஆனா இதை விடவும் எளிமையாக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்.../////

    அண்ணா என்பது ஒரு விகுதிக்காகத்தான்!

    ReplyDelete
  30. Blogger RamKumar said...
    sir, i am just now following ur classes i got an illustration to tell about lagna, while sooriyan's place refers to the revolution of the earth around sun, lagna refers to the rotation of the earth on its own axis, correct me if i am wrong.
    thanks for the classes/////

    ஜாதகன் பிறந்த தினத்தன்று சூரியன் இருக்கும் இடத்தை அந்த ராசி காட்டும். லக்கினம் என்பது ஜாதகன் பிறந்த நேரத்தில் அவன் பிறந்த இடம் வானத்தில் எந்த ராசியின் பகுதியைப் பார்த்தது என்பதைக் குறிப்பிடும். அவன் அந்த ராசிக்குரிய லக்கினக்காரன் ஆவான்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com