மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.3.07

ஜியா-உல்-ஹக்'கின் மரணம்

















ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 10

ESP என்றால் என்ன?
(தொடர்ச்சி)
முன் பதிவைப் படிக்காதவர்கள், அதைப் படித்துவிட்டு
இதற்கு வரவும்

20.12.1971 முதல் 5.7.1977 வரை பாகிஸ்தானின்
சர்வ வல்லமை படைத்த மனிதராக இருந்த
திரு. ஜுல்ஃபிகர் அலி புட்டோ' வைத் தெரியாதவர்களே
இருக்க மாட்டார்கள்

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ்
நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த
திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக
இருந்த கிஸ்டி' என்னும் ESP சக்தியுள்ள மனிதரைச்
சந்திக்க விரும்பினார்.

ஏற்பாடு செய்யப்பெற்றது.

தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும்
தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு
பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி த்ன்னுடைய
பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்

"மிஸடர், புட்டோ!"

புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"

அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை
புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் கடாசுவதைப் போல
இருந்தது

"ஜாக்கிரதை ! (Be careful!)"

" என்ன சொல்கிறீர்கள்?" இது புட்டோ

" உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"
(You are going to be hanged)

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை
மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்
" என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத்
தெரியும்: எனக்கு மூளை இருக்கிறது!
(I can safe guard myself: I have brain)"

கிஸ்டி விடமல் சொன்னார்

"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும்
சேர்ந்துதான் தொங்கப் போகிறது"

அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக
சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள்
பலித்தது (நடந்தது)

4.4.1977ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில்
தொங்க விடப்பட்டார்.

அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின்
மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன்
தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று
சந்தித்து அழுதார்.

அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு
தன்னுடைய ESP சக்தியால் நடக்கப்போகின்ற
இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

அதாவது அப்போது பதவியில் இருந்த ஜெனரல்
ஜியா- உல்- ஹக் வெடி விபத்தில் இறப்பார் என்பதையும்,
அவர் இறந்தவுடன் பெனாசிர் பாகிஸ்தானின் பிரத்மர்
ஆவார் என்பதையும் சொன்னார்.

"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதம
ராவீர்கள் என்றார். அதேபோல ஜியா சென்ற
விமானத்தில் பழக்கூடையில் வைக்கப் பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததாலதான் விமானம்
விபத்துக்குள்ளாகி, ஜியா அகால மரணமடைந்த
தோடு, பெனாசிரும் பிரதமரானார்

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும்
முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?

அதுதான் இந்த ESP யின் சக்தி!

பெனாசிர், பங்ளாதேஷின் பிரதமர் எர்ஷாத் ஆகியோருடன்
கிஸ்டி அவர்களும் சேர்ந்திருக்கும் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
-------------------------------------------



முன்பு ஒரு தமிழ் வார இதழில் வந்த செய்தி இது!

ESP கட்டுரை இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு
ESP சக்தி படைத்திருந்த வேறு ஒரு மனிதரைப் பற்றிய
செய்தியுடன் வரும்!

(தொடரும்)
---------------------------------------------------


Clipping from Wikipedia:
General Zia-ul-Haq died in a plane crash on August 17, 1988. After witnessing a tank inspection in Bahawalpur, Zia had left the small town in Punjab province by C-130 Hercules aircraft. Shortly after a smooth take-off, the control tower lost contact with the aircraft. Witnesses who saw the plane in the air afterwards claim it was flying erratically. Directly afterwards, the aircraft nosedived before exploding in mid-air, killing General Zia and several other senior army generals, as well as American Ambassador to Pakistan Arnold Raphel. A common suspicion within Pakistan, although with no proof, is that the crash was a political assassination carried out by the American CIA or Russian KGB
--------------------------------------------

9 comments:

  1. இதை (புட்டோ)முன்பே (உங்கள் வேறொரு பதிவில்?) படித்திருக்கேன்.
    இதை புட்டோ தவிர்த்திருக்க முடியுமா?
    ESP மூலம் காணுவதெல்லாம் முன்பே எழுதிவைக்கப்பட்ட புத்தகமா?மாற்றமுடியாதா?

    ReplyDelete
  2. ஹைய்யா...
    இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்ட்

    சென்ஷி

    ReplyDelete
  3. இப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயா, அமெரிக்காவில் பிறக்கும் ஒருவருக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது? அங்கு நாள் , கிழமை, நேரம் எல்லாம் மாறியுள்ளதே? அதாவது நம்மூர் பஞ்சாங்கத்தை வைத்து கணிக்கும் ஜாதகம் சரியாக இருக்குமா?

    நிறைய பேருக்கு இந்த ஐயம் உள்ளது. இது தொடர்பாக விளக்கமாக ஒரு பதிவு போட்டு தெளிவாக்க வேண்டும் என்பது மாணவனின் கோரிக்கை.



    ஒரு சோதிடர் சொன்னார் 1 அல்லது 2 பாகை வேறுபாட்டினால் ஜாதக கணிப்பு மாறாது என்று, அவர் சொன்னது சரியா? அதாவது குனியமுத்தூரில் பிறந்தாலும் சூலூரில் பிறந்தாலும் ஒன்னா? அல்லது சேத்துப்பட்டில் பிறந்தாலும் அம்பத்தூரில் பிறந்தாலும், தாம்பரத்தில் பிறந்தாலும் ஒன்னா?

    இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பக்கத்து பெரு நகரத்துக்கும் குழந்தை பிறந்த சிறு நகரத்துக்கும் பாகை அளவில் வேறுபாடு குறைவு என்றாலும் சூரிய உதயம் 4 நிமிடங்கள் வேறுபட்டது ஆனால் சோதிடர் பாகை முறை கொண்டு பெரு நகரத்தை வைத்தே ஜாதகத்தை கணித்தார்.

    அமெரிக்க நகரங்களின் / கிராமங்களின் அச்ச & தீர்க்க ரேகையை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த சுட்டி உதவும்

    http://terraserver.microsoft.com/default.aspx

    * இவ்விடுகைக்கு இது நேரடையாக தொடர்பில்லாவிட்டாலும் சோதிடத்துடன் தொடர்புடையது என்பதால் இப்பின்னூட்டம்*

    ReplyDelete
  5. ///வடுவூர் குமார் said...
    இதை (புட்டோ)முன்பே (உங்கள் வேறொரு பதிவில்?) படித்திருக்கேன்.
    இதை புட்டோ தவிர்த்திருக்க முடியுமா?
    ESP மூலம் காணுவதெல்லாம் முன்பே எழுதிவைக்கப்பட்ட புத்தகமா?மாற்றமுடியாதா?///

    தவிர்க்க முடியாது. வள்ளுவரின் ஊழ்வினை அதிகாரத்தின் கடைக் குறளைப் படியுங்கள்
    விவரமாக எழுதியுள்ளார் வள்ளுவர் பெருந்தகை.
    இதெல்லாம் விதிக்கப்பெற்றது. விதிக்கப்பெற்றதை எவராலும் மீறமுடியாது!

    "ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினும் தான் முன்னுறும்!"
    -குறள் எண் 380

    (Nothing is stronger than destiny)

    ReplyDelete
  6. ///சென்ஷி said...
    ஹைய்யா...
    இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்ட்
    சென்ஷி///

    அட்டா இதில்கூட ஒரு சந்தோஷம் உள்ளதா!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  7. //Madaiyan said...
    இப்படிப்பட்ட ஆட்களை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?//

    இல்லை அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை!
    கேள்விப்பட்டது. நிறையப் புத்தகங்களில் படித்தது
    அவ்வளவுதான் நண்ப்ரே!

    ReplyDelete
  8. ///Saturday, March 10, 2007 1:59:00 AM
    குறும்பன் said...
    வாத்தியார் ஐயா, அமெரிக்காவில் பிறக்கும் ஒருவருக்கு எப்படி ஜாதகம் பார்ப்பது? அங்கு நாள் , கிழமை, நேரம் எல்லாம் மாறியுள்ளதே? அதாவது நம்மூர் பஞ்சாங்கத்தை வைத்து கணிக்கும் ஜாதகம் சரியாக இருக்குமா?

    நிறைய பேருக்கு இந்த ஐயம் உள்ளது. இது தொடர்பாக விளக்கமாக ஒரு பதிவு போட்டு தெளிவாக்க வேண்டும் என்பது மாணவனின் கோரிக்கை.

    ஒரு சோதிடர் சொன்னார் 1 அல்லது 2 பாகை வேறுபாட்டினால் ஜாதக கணிப்பு மாறாது என்று, அவர் சொன்னது சரியா? அதாவது குனியமுத்தூரில் பிறந்தாலும் சூலூரில் பிறந்தாலும் ஒன்னா? அல்லது சேத்துப்பட்டில் பிறந்தாலும் அம்பத்தூரில் பிறந்தாலும், தாம்பரத்தில் பிறந்தாலும் ஒன்னா?

    இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பக்கத்து பெரு நகரத்துக்கும் குழந்தை பிறந்த சிறு நகரத்துக்கும் பாகை அளவில் வேறுபாடு குறைவு என்றாலும் சூரிய உதயம் 4 நிமிடங்கள் வேறுபட்டது ஆனால் சோதிடர் பாகை முறை கொண்டு பெரு நகரத்தை வைத்தே ஜாதகத்தை கணித்தார்.

    அமெரிக்க நகரங்களின் / கிராமங்களின் அச்ச & தீர்க்க ரேகையை துல்லியமாக அறிந்து கொள்ள இந்த சுட்டி உதவும்

    http://terraserver.microsoft.com/default.aspx

    * இவ்விடுகைக்கு இது நேரடையாக தொடர்பில்லாவிட்டாலும் சோதிடத்துடன் தொடர்புடையது என்பதால் இப்பின்னூட்டம்*///

    எந்த ஊராக இருந்தாலும், உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் கணிக்கலாம்!
    மாதிரிக்கு, ஒரு வெளிநாட்டுப் பிறப்பை தேதி, நேரம், அட்சரேகை, தீர்க்கரேKஐவிவரம் , ஊரின் பெயர் இவ்ற்றுடன் கொடுங்கள்
    கணிக்கும் முறையைச் சொல்லித்தருகிறேன்

    30 கிலோமீட்டர் வட்டத்திற்குள் வேறுபாடு இருக்காது!

    ReplyDelete
  9. உங்கள் வகுப்பறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஐயா எனக்கு தங்களுடன் தொடர்பு கொள்ள ஆவல்.எத்தனையோ பேர்கள் உங்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பார்கள்.இத்தனைக்கும் இடையே எனக்கு பதில் அளிப்பது உங்களுக்கு கடினம்.இது எனக்கு புரியும்.எனது வலைப்பூ இது
    http://machamuni.blogspot.com/
    பாருங்கள்.
    சந்தர்ப்பத்திற்கு
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com