மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.6.17

Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!


Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!

சனீஷ்வரன் எவ்வளவு பெரிய ஆள்? அவரை எப்படி சட்டைப் பைக்குள் வைக்க முடியும்?

புறங்கால்களைச் சரியாகக் கழுவாமல் தன் கோவிலுக்குள் நுழைந்தவனை சனீஷ்வரன் ஆட்டிவைத்த கதை எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட  சனீஷ்வரன் எங்கே வேண்டுமென்றாலும் நுழைந்து அமர்ந்து கொள்வார்.

ஆனால் சட்டைப் பைக்குள் அல்லது உங்கள் மணிபர்சில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து அமரவைப்பது நீங்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

புரியும்படியாகச் சொல்லவா?

கடன் அட்டை என்னும் குட்டி சனீஷ்வரனைத்தான் அப்படிச் சொல்கிறேன்.

கடன் அட்டைக்கு என்ன விளக்கம்?

கீழே கொடுத்துள்ளேன்.

A credit card is a small plastic card issued to users as a system of payment. It allows its holder to buy goods and services based on the holder's promise to pay for these goods and services. The issuer of the card creates a revolving account and grants a line of credit to the consumer (or the user) from which the user can borrow money for payment to a merchant or as a cash advance to the user.

எனக்குத் தெரிந்து கடன் அட்டை வைத்திருக்கும் மனிதர்களில் 90% பேர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தகாத பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டவன் போல விழி பிதுங்க முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களால், அந்தப் பெண்ணை உதறவும் முடியாது. அவளை வைத்துக்கொண்டு தீனி போடவும் முடியாது.

உங்களில் எத்தனை பேர்கள் அப்படி மாட்டிக் கொண்டு முழிக்கின்றீர்கள் என்று தெரியாது.

இதை விழி பிதுங்க முழித்துக்கொண்டிருப்பவர்களுக்காக மட்டும் எழுதவில்லை. இதுவரை மாட்டிக்கொள்ளாதவர் கள் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.

உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் Debit Card கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில்
வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். அது முறையாக ஒரு பெண்னை மணந்து கொண்டு ஊர் சுற்றுவதற்குச் சமம். எந்தப் பிரச்சினையும் வராது.

கடன் அட்டையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். கட்டுரையின் நீளம் கருதி இரண்டொரு வரிகளில் மட்டும் எழுதுகிறேன்.

1. கடன் அட்டையைப் பெற்றுக் கொள்வது சுலபம். நீங்கள் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் போதும். அதற்கான சான்றிதழைக் கொடுத்தால் போதும்.

2. ஆண்டுக்கு ஆண்டு உங்களுக்குப் பணம் கிடைக்கும் வரம்பை ஏற்றிக் கொண்டே இருப்பார்கள்.

3. சிரங்கு வந்தவனுக்கு, சொறிவது இன்பமாக இருக்கும். அதுபோல கார்டைக் கையில் வைத்திருப்பவனுக்கு அதைப் பயன் படுத்துவது சுகமாக இருக்கும். கடன் சுமை அதிகமாகி மாட்டிக் கொண்டு விழிக்கும்போதுதான் அவஸ்தையாக இருக்கும். மீண்டு வரவே முடியாது. சிக்கிக்கொண்டு விடுவான்.

4. வட்டிவிகிதம் 3% (மாதத்திற்கு) ஆண்டிற்கு 42% அளவில் இருக்கும். அந்த அளவு வட்டி விகிதம் வேறு எங்கேயும் கிடையாது (கந்து வட்டிக்காரனிடம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் மீட்டர் வட்டிக் காரனிடம் இருக்கும்) உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் தரும் வட்டி ஆண்டிற்கு 6% மட்டும்தான் அதை நினைவில் வையுங்கள்.

5. உங்களுக்குப் புரியும்படி சொன்னால், அட்டை மூலம் செலவழித்த அல்லது வாங்கிய கடன் ஐம்பதாயிரம் என்று வைத்துக் கொண்டால், அந்தப்  பணம்  இரண்டாண்டு காலத்தில் வட்டியுடன் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் கடனாகிவிடும். செட்டி தூங்கினாலும், வட்டி தூங்காது என்பார்கள். கடன்

அட்டையின் வட்டி புற்று நோயைப்  (cancer) போன்றது. கவனிக்காமல் விட்டால் உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் பரவத்துவங்கிவிடும். வளரத்துவங்கிவிடும்.

6. அட்டைக்கான காப்பீட்டுத்தொகை, விபத்தில் அட்டைவைத்திருப்பவன் இறந்துபோனால், தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என்பதற்கான காப்பீட்டுத்தொகை, அதற்கான பிரிமியம் என்று மாதாமாதம் ரூ.75:00ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். அத்துடன் சேவை
வரியாக 15% சேர்ந்து கொள்ளும்.

7. உங்கள் கடன் தொகையுடன் மேலே உள்ள அத்தனை கருமங்களையும் ஒன்றாகக் கூட்டிப் போட்டு, வரும் தொகையில் 5% மட்டும் மாதத் தவணையாக செலுத்தினால் போதும் என்பார்கள். அங்கேதான் சிக்கல். கடன் சுமை கூடுவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். அதாவது  உங்களின் தகாத உறவுக்காரிக்கு வயிற்றில் குழந்தை உண்டாவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். தெரிந்த பிறகு கூடுதலாகப் பிரசவச்
செலவு, பிறந்த குழந்தையை வளர்க்கும் செலவு என்று அவள் உங்களை மேலும் படுத்தி எடுப்பாள்.

8. ஒவ்வொரு மாதமும்18ஆம் தேதி உங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் பட்டியலை முறையாக அனுப்பி விடுவார்கள். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை நீங்கள் அதற்கடுத்த மாதம் 11ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மறந்து விட்டாலோ அல்லது செலுத்தத் தவறினாலோ அபராதமாக சுமார் ரூ.250:00 உங்கள் கணக்கில் ஏறிவிடும்.

9. ஒருவன் அவனுக்கு சிரம திசை (கேடான தசா புத்திகள் ஆரம்பிக்கும்போதுதான் கடன் அட்டையை வாங்கிப் பையில் வைப்பான்.17 ஆண்டுகளோ அல்லது 19 ஆண்டுகளோ என்று சிரம திசை முடிந்தாலும், இந்தக் குட்டிச் சனி மட்டும் விலகாது.

10. கடன் அட்டை வைத்திருப்பவர்கள், அதனால் ஏற்படும் கடன் சுமையை, அந்தந்த மாதமே தவணையன்று முழுமையாகச் செலுத்தி எப்போதுமே கடன் அளவை ஜீரோ இருப்பில் வைத்திருப்பது மட்டுமே புத்திசாலித் தனமாகும். இல்லை என்றால் சிக்கல்தான்

இங்கே எந்த அட்டையையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாக உள்ள பிரச்சினைகளைத்தால் சொல்லியிருக்கிறேன். அதை மனதில் கொள்க!

சரி, மாட்டிக் கொண்டு விட்டோம். வெளியே வருவது எப்படி? அதற்கு வழி உண்டா?

உண்டு!

Option 1

அரசுடமை வங்கிகளில் - புறநகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில், நகைகளின் பேரில் விவசாயக் கடன் என்னும் பிரிவில் கடன் தருகிறார்கள். வட்டி விகிதம் ஆண்டிற்கு 7% மட்டுமே - நன்றாகக் கவனிக்கவும் ஆண்டுக்கு 7% சதவிகிதம் மட்டுமே.(It is also simple interest)  இந்திiயாவில் வேறு எங்கும் இந்த வட்டிக்குக் கடன் கிடைக்காது.

ஒரு பவுனுக்கு ரூ.10,000:00 தருவார்கள். உங்களுடைய கடன் அட்டைக் கடன் ரூ 50,000:00 என்று இருப்பதாக வைத்துக்கொண்டால், ஐந்து பவுன் நகையை அங்கே (அரசுடமை வங்கிகளில்) அடமானம் வைத்துப் பணத்தை வாங்கி, ஒரே நாளில் கடன் அட்டைக் கடனை முழுமையாக அடைப்பதுடன், அட்டையைத் திரும்பக் கொடுத்துவிட்டு (surrender) அல்லது Cancel  செய்யச் சொல்லிவிட்டு, சுமையை இறக்கிவிட்டுவிடலாம்.

அவர்களுக்கு மாதாமாதம் செலுத்தும் தவணைத் தொகையை, அரசுடைமை வங்கியில் செலுத்தினால் 20 மாதங்களில் அதுவும் தீர்ந்துவிடும். நகையும் வீட்டிற்குத் திரும்பிவிடும்

Option 2

அடமானம் வைப்பதற்கு நகைகள் இல்லை என்னும் சூழ்நிலையில்,

1. இன்று முதல் அந்த அட்டையைப் பயன் படுத்துவதை சுத்தமாக நிறுத்திவிடுங்கள்.

2. மொத்தக் கடனில் 5% சதவிகித்தை நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும். உபரியாக அவர்கள் வசூலிக்கும் சர்வீஸ் கட்டணத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்திக்கொண்டே வாருங்கள். முதலில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் போகப் போகப் பழகிவிடும். 20 மாதங்களில் அட்டைக் கடன்
மொத்தமும் தீர்ந்து விடும்

அதற்கு முழுக்குப்போட்டு விடுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Very useful information sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. நிதர்சன உண்மைகள்.Credit card வாங்க சொல்லி எத்தனை முறை அனுகுகின்றனர். நல்லவேளை சுதாரிப்புடன் இருந்திருக்கின்றேன்.

    ReplyDelete
  3. நல்ல விழிப்புணர்வுக்கான பதிவு

    7 வங்கி 10 கார்டுகள் வைத்திருந்தேன்
    12 வருடங்களுக்கு முன்னர்
    தெரிந்தவர்கள் தராததை வட்டி இல்லாமல் எடுத்துத் கொண்டேன் மருத்துவ இக்கட்டிற்காக.

    அந்த நாட்களில் அது போதையாக அல்ல, ராணுவ வீரனின் கடுமை திருப்பிக் கொடுப்பதில் இருந்ததால் தப்பித்தேன். இரு முனை கூர்ந்த ஆயூதம். சற்றே அசந்தால் இரத்தம் சிந்த வைக்கும்.

    சக நண்பன், கணினி வேலை பார்த்து மாதம் 30,000 சம்பாதித்தும் கூட, CC வாங்கிய 2 வருடத்தில் வங்கி குண்டர்களால் துரத்தப்படும் அளவிற்கு ஆட்டி வைத்தான் பார்கெட் சனி.

    ஒரு அட்டை அவசியம் என்றால், debit Card risk in Identity theft என நினைத்தால்,SBl ஒன்று மட்டுமே மனசாட்சி உள்ள வங்கி. ஆனால் 15,000 மேல் கடன் மதிப்பு தேவை இல்லை.



    Unless people live in Chennai or Bangalore, you should avoid credit cards.

    ReplyDelete
  4. Another thing forgot to add on credit card.

    #1 - I have a friend worked in credit card back end and later he got a good job. So be polite to them. It's a monkey business but they too are humans

    #2-never ever provide your passport as identity proof. It's always better to walk in and apply for credit card with the bank you already have an account. So you don't give any of your additional identities.
    I don't go to details but I know how these identity theft takes place, done become a prey for it.

    #3-i know people like shiny gold, Platinum cards, but clear your mind. I too was proud to have cards with high limits once, but it's just a sleeping dragon. If you lose and someone hacks or miss use, you need to spend a lot of time timing to Banks who give no shit to your time. I seen people suffered that.

    #4-thinking smart. If you think you are smart, the person selling it is smarter, the person using them is smarter than them. Think simple, clear and straight. If the card has more than half month of your salary it is always a risk.

    #5-Small discounts/coupons
    There is a detailed study on human social psychology, which these banks implement to profit. Every fish has it's day, so don't fall prey for those sign up things.

    I am not saying it's all bad. Compared to other foreign nations where you get insured for misuses, Indian Banking system doesn't give a thing about customer satisfaction or security any more.

    Lastly, at last it's individual choice. But if you choose, choose wisely. Because wise don't do mistakes from their own, they learn by seeing it.

    ReplyDelete
  5. விவசாயக் கடன் என்னும் பிரிவில் கடன் தருகிறார்கள். வட்டி விகிதம் ஆண்டிற்கு 7% மட்டுமே -

    It's 4% only if you have Farmers card. Few banks give it without documents too. Just thought of passing Incase any farmers read.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா, கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குவதில் விருப்பம் இல்லாததால், எத்துணையோ கவர்ச்சி திட்டங்களுடன் அனுகியபோதும்,தப்பித்து விட்டேன்.நன்றி.

    ReplyDelete
  7. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Very useful information sir thanks sir vazhga valamudan///

    நல்லது. நன்றி நணப்ரே!!!

    ReplyDelete
  8. /////Blogger SELVARAJ said...
    நிதர்சன உண்மைகள்.Credit card வாங்க சொல்லி எத்தனை முறை அனுகுகின்றனர். நல்லவேளை சுதாரிப்புடன் இருந்திருக்கின்றேன்./////

    வாழ்க உங்களின் சுதாரிப்புடன் இருக்கும் தன்மை! நன்றி!!!!!

    ReplyDelete
  9. ////Blogger selvaspk said...
    நல்ல விழிப்புணர்வுக்கான பதிவு
    7 வங்கி 10 கார்டுகள் வைத்திருந்தேன்
    12 வருடங்களுக்கு முன்னர்
    தெரிந்தவர்கள் தராததை வட்டி இல்லாமல் எடுத்துத் கொண்டேன் மருத்துவ இக்கட்டிற்காக.
    அந்த நாட்களில் அது போதையாக அல்ல, ராணுவ வீரனின் கடுமை திருப்பிக் கொடுப்பதில் இருந்ததால் தப்பித்தேன். இரு முனை கூர்ந்த ஆயூதம். சற்றே அசந்தால் இரத்தம் சிந்த வைக்கும்.
    சக நண்பன், கணினி வேலை பார்த்து மாதம் 30,000 சம்பாதித்தும் கூட, CC வாங்கிய 2 வருடத்தில் வங்கி குண்டர்களால் துரத்தப்படும் அளவிற்கு ஆட்டி வைத்தான் பார்கெட் சனி.
    ஒரு அட்டை அவசியம் என்றால், debit Card risk in Identity theft என நினைத்தால்,SBl ஒன்று மட்டுமே மனசாட்சி உள்ள வங்கி. ஆனால் 15,000 மேல் கடன் மதிப்பு தேவை இல்லை.
    Unless people live in Chennai or Bangalore, you should avoid credit cards.//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா!!!!!

    ReplyDelete
  10. //////Blogger kmr.krishnan said...
    Very god analysis and advice Sir.////

    நல்லது. உங்களின் பாரட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  11. /////Blogger selvaspk said...
    Another thing forgot to add on credit card.
    #1 - I have a friend worked in credit card back end and later he got a good job. So be polite to them. It's a monkey business but they too are humans
    #2-never ever provide your passport as identity proof. It's always better to walk in and apply for credit card with the bank you already have an account. So you don't give any of your additional identities.
    I don't go to details but I know how these identity theft takes place, done become a prey for it.
    #3-i know people like shiny gold, Platinum cards, but clear your mind. I too was proud to have cards with high limits once, but it's just a sleeping dragon. If you lose and someone hacks or miss use, you need to spend a lot of time timing to Banks who give no shit to your time. I seen people suffered that.
    #4-thinking smart. If you think you are smart, the person selling it is smarter, the person using them is smarter than them. Think simple, clear and straight. If the card has more than half month of your salary it is always a risk.
    #5-Small discounts/coupons
    There is a detailed study on human social psychology, which these banks implement to profit. Every fish has it's day, so don't fall prey for those sign up things.
    I am not saying it's all bad. Compared to other foreign nations where you get insured for misuses, Indian Banking system doesn't give a thing about customer satisfaction or security any more.
    Lastly, at last it's individual choice. But if you choose, choose wisely. Because wise don't do mistakes from their own, they learn by seeing it./////

    கடன் அட்டை குறித்த மேலதிகத் தகவலுக்கு நன்றி செல்வா!!!!!

    ReplyDelete
  12. ////Blogger selvaspk said...
    விவசாயக் கடன் என்னும் பிரிவில் கடன் தருகிறார்கள். வட்டி விகிதம் ஆண்டிற்கு 7% மட்டுமே -
    It's 4% only if you have Farmers card. Few banks give it without documents too. Just thought of passing Incase any farmers read.////

    தகவலுக்கு நன்றி செல்வா!!!!!

    ReplyDelete
  13. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா, கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குவதில் விருப்பம் இல்லாததால், எத்துணையோ கவர்ச்சி திட்டங்களுடன் அனுகியபோதும்,தப்பித்து விட்டேன்.நன்றி.////

    நல்லது. உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  14. ///Blogger Anbu Selvan said...
    Nice Sir////

    நல்ல்து. நன்றி அன்புச் செல்வன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com