மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.3.17

நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!


நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

மனவளக் கட்டுரை!

1. கன மழைக்கு அஞ்சாதீர்கள். மிதமான மழைக்கு ஏங்காதீர்கள். அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள். அதுதான் நல்லது.

2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும்.  வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும். கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம்.  கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.

3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள். வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல!

4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.  வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!

5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை. கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமனதாகும்!!

6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட,  கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்!

7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+1) என்பதுதான் தீர்வு. இதில் N என்பது எத்தனை தீர்வுகளை நீங்கள் முயற்சித்தீர்கள் என்பதைக் குறிக்கும். 1 என்பது நீங்கள் முயற்சிக்காத தீர்வுகளைக் குறிக்கும்

8. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது,  அதுதான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்!

9. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு கடவுள் கொடுக்கிறார், கொடுக்கிறார்,  விட்டும் கொடுக்கிறார்.  மன்னித்தும் விடுகிறார். ஆனால் மனிதன் பெறுகிறான், பெறுகிறான். காரியம் முடிந்தவுடன் கடைசியில் கடவுளையே மறந்துவிடுகிறான்!

10. இரண்டுவிதமான மக்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும்
( பைத்தியக்காரர்களும் ) குழந்தைகளுமாவார்கள். உங்கள் லட்சியங்களை அடைய பைத்தியக்காரகளைப் போல் இருங்கள். அடைந்தபின் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியடையுங்கள்.

11. மற்றவர்களுடைய உணர்வுகளோடு விளையாடாதீர்கள். நீங்கள் வெற்றி அடையலாம். ஆனால் அந்த மனிதரை நீங்கள் இழக்க நேரிடும்

12. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு!

படித்ததில் கவர்ந்தது. மொழியாக்கம் செய்து பதிவிட்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. ஐயா -

    இது போன்று அடிக்கடி படிப்பதால் வாழ்க்கையை "இதுவும் கடந்து போகும்" என அணுக மனதை சமன்படுத்த உதவும்.

    #1 காய்ச்சல் வரும் என தெரிந்தாலும், கையில் குடை இருந்தாலும் முதல்
    மழையில் நனைதல் சுகம்.

    #5 இதுதான் வாழ்க்கை, இதே கணவனோ/மனைவியோ தான், இதே வேலை தான்...வேற மாற்றம் இல்லை என கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் வரவே 30 -40 ஐ கடந்துவிடும். அப்பறம் தான், வாழ்வை ரசிக்க ஆரம்பிப்போம்.

    #10 கணவனையும்/தந்தையும் தனது பாதுகாப்பு என நம்பிக்கை வைக்கும் பெண்களும் அதிஷ்டசாலிகள் தான்.

    நன்றி (enjoy reading your daily message).

    ராகினி

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. ////Blogger koindu Jr said...
    ஐயா -
    இது போன்று அடிக்கடி படிப்பதால் வாழ்க்கையை "இதுவும் கடந்து போகும்" என அணுக மனதை சமன்படுத்த உதவும்.
    #1 காய்ச்சல் வரும் என தெரிந்தாலும், கையில் குடை இருந்தாலும் முதல்
    மழையில் நனைதல் சுகம்.
    #5 இதுதான் வாழ்க்கை, இதே கணவனோ/மனைவியோ தான், இதே வேலை தான்...வேற மாற்றம் இல்லை என கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற மனோபாவம் வரவே 30 -40 ஐ கடந்துவிடும். அப்பறம் தான், வாழ்வை ரசிக்க ஆரம்பிப்போம்.
    #10 கணவனையும்/தந்தையும் தனது பாதுகாப்பு என நம்பிக்கை வைக்கும் பெண்களும் அதிஷ்டசாலிகள் தான்.
    நன்றி (enjoy reading your daily message).
    ராகினி//////

    உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,தங்கள் மனவளப் பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன.மனக்கிலேசம் போக்கிட மாமருந்தாய் உளன.நன்றி.

    ReplyDelete
  5. Respected Sir,

    Happy morning... Nice article.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  6. வணக்கம் குருவே!
    நல்ல பயனுள்ள பகிர்வு!
    மொழி மாற்றம் செய்து தந்ததற்கு ஒரு நன்றி!
    வகுப்பறையில் விடாமல் பாடங்கள் தருவதற்கு ஒரு நன்றி!
    இறைப்பணியில் மனந்தளராமைக்கு
    மற்றொரு நன்றி!
    பயனாகும் பகிர்வுகளை தொகுத்தளிக்கும் தங்கள் பாணிக்குத்
    தனி நன்றி!
    எங்களின் எண்ணொலா நன்றிக்கு
    என்றென்றும் உரியவர்!
    இன்றைய பதிவில் முதல் நான்கும்
    முத்துக்கள்!
    முடிந்தால், இருந்தால், தங்களின் புதிய சிறுகதை ஒன்றும் தாருங்களேன்
    என் வேண்டும்,
    அன்பு மாணவன் வரதராஜன் கிருஷ்ணன் சிகாகோ.

    ReplyDelete
  7. Sir, good example is,v worried for Mr.Kunha's Judgement initially, then felt Happy for Mr.Kumarasamy's Judgement. Again v expected that Mr.Kunha's Judgement should be confirmed.. same ppl, but different situations.... Depends on our Views..

    ReplyDelete
  8. For Your Consideration.

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    very nice Sir.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  10. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,தங்கள் மனவளப் பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன.மனக்கிலேசம் போக்கிட மாமருந்தாய் உளன.நன்றி.//////

    தங்களின் மேலான பாராட்டுக்களுக்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  11. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice article.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

    ReplyDelete
  12. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நல்ல பயனுள்ள பகிர்வு!
    மொழி மாற்றம் செய்து தந்ததற்கு ஒரு நன்றி!
    வகுப்பறையில் விடாமல் பாடங்கள் தருவதற்கு ஒரு நன்றி!
    இறைப்பணியில் மனந்தளராமைக்கு
    மற்றொரு நன்றி!
    பயனாகும் பகிர்வுகளை தொகுத்தளிக்கும் தங்கள் பாணிக்குத்
    தனி நன்றி!
    எங்களின் எண்ணொலா நன்றிக்கு
    என்றென்றும் உரியவர்!
    இன்றைய பதிவில் முதல் நான்கும்
    முத்துக்கள்!
    முடிந்தால், இருந்தால், தங்களின் புதிய சிறுகதை ஒன்றும் தாருங்களேன்
    என் வேண்டும்,
    அன்பு மாணவன் வரதராஜன் கிருஷ்ணன் சிகாகோ.//////

    எனது உடல்நிலை காரணமாகவும், வேலைப் பளு காரணமாகவும், சென்ற 4 மாதங்களாக புதிய சிறுகதை எதையும் எழுதவில்லை. உங்களின் அன்பிற்கு நன்றி. பொறுத்திருங்கள். இரண்டு மாதங்கள் கழித்து எழுதுவேன். அப்போது பதிவிடுகிறேன்!!!!


    ReplyDelete
  13. /////Blogger KJ said...
    Sir, good example is,v worried for Mr.Kunha's Judgement initially, then felt Happy for Mr.Kumarasamy's Judgement. Again v expected that Mr.Kunha's Judgement should be confirmed.. same ppl, but different situations.... Depends on our Views../////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!!

    ReplyDelete
  14. ////OpenID thedevilcorp said...
    For Your Consideration./////

    மேட்டர் என்ன? அதைச் சொல்லவில்லையே நீங்கள்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com