மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.16

மனத்தெளிவு எப்போது பிறக்கும்?

மனத்தெளிவு எப்போது பிறக்கும்?

ஒரு உண்மையான.... இறைபக்திக்கு எது முக்கியம்?

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட,அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை.ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம், முனிவரே! என வணங்கினர் அம்மையும்  அப்பனும்.
முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான்.
மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள்
விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள்

'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத்  தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,முனிவர் சிரித்தார். வரமா! உங்கள்  தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம்  கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால்  வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு.

நீதி!

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.     🔯🙏🙏
-------------------------------------------------
2

காந்தி சொர்க்கதில் கடவுளிடம் போய் நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு எனக் கேட்டார்.

கடவுள்  சொன்னார்:

கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது🙊🙉🙈

======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. குருநாதா வந்தனம்!
    மனத்தெளிவைப் பற்றி மிக நேர்த்தியாக முனிவர் விளக்குகிறார்.
    எவ்வளவு மனத்தெளிவு முனிவருக்கு!
    பரமனே எதிரில் வந்தாலும் பரவாயில்லை, நியதி தன் வேலையைத் தடையின்றிச் செய்யும், என்கிறார்!
    வாழ்க முனிவர்!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,கதையும்,கதையின் நீதியும் அருமை.காந்தி பொம்மைக்கு நிகழ்கால விளக்கம் மிகவும் பொருத்தம்.நன்றி.

    ReplyDelete
  3. arumaiyana pathil , vazumpadi vazthal varuvadu thana varum arumai elimai
    vanakam nan ungalidam oru varam ketu konde irukiren, puthagam pera vazhi, class room @2007 nukku mail anipi konde irukiren ferroformindustries@gmail.com il irundu vandada varavillaya theriya villai, varam kodungal, vaguparai sera vaipaliyingal, vanakkam

    ReplyDelete
  4. ayya vanakkam ,arumaiyana pathi, vazumpadi vazthanl varuvadu thane varum, arumai elimai, nan ayyanidam oru varam kettukonde irukiren puthagam vendum endru class room@2007 nukku mail anipiukonde ullen vantahtha varavillaya thereyavill ferroformindustries@gmail.com ilirundu vagauparaikku vaipalikkavum varam kodutahrulavum

    ReplyDelete
  5. ///தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும்///

    அய்யர் சொல்லும் வார்த்தை
    அப்படியே சொல்கிறீர்களே...

    ReplyDelete
  6. நீதிக்கதை அருமை !!!
    நன்றி,
    செ.ஆறுமுகவேல்

    ReplyDelete
  7. ஆசிரியர்க்கு வணக்கம்,
    நல்ல பதிவு. மருள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெறியாமல் இருந்தேன். மருள் என்றால் "மயக்கம், பேயாட்டம்" என்று கூகுல் ஆண்டவர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
    காந்தி : 3 குரங்கி நிலை நகசுவையாகவும், உன்மையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி!!
    பன்னீர்செல்வம்.இரா

    ReplyDelete
  8. hello sir , eppadi irrukinga? i used to visit your astro blogs regularly in 2009 2010 n 11.
    thats when i started learning astrology. then i lost interest , i remember u stopped posting lessons openly coz some1 stole ur posts n used it in his books.

    ok neenga books release pannitingala ? entha pathipagam? private lessons thru mail innum poitueruka? jus curious to know? thanks. hope all the old students are fine. ungalakku shani dasa epo mudiyum? best wishes to u ayya. vannakam

    ReplyDelete
  9. Nice sir..I requested you to permit me for galaxy classroom..i sent mail too..please consider mine sir

    ReplyDelete
  10. ///////Blogger வரதராஜன் said...
    குருநாதா வந்தனம்!
    மனத்தெளிவைப் பற்றி மிக நேர்த்தியாக முனிவர் விளக்குகிறார்.
    எவ்வளவு மனத்தெளிவு முனிவருக்கு!
    பரமனே எதிரில் வந்தாலும் பரவாயில்லை, நியதி தன் வேலையைத் தடையின்றிச் செய்யும், என்கிறார்!
    வாழ்க முனிவர்!////

    கரெக்ட். நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  11. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கதையும்,கதையின் நீதியும் அருமை.காந்தி பொம்மைக்கு நிகழ்கால விளக்கம் மிகவும் பொருத்தம்.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  12. //////Blogger Raghu k r said...
    arumaiyana pathil , vazumpadi vazthal varuvadu thana varum arumai elimai
    vanakam nan ungalidam oru varam ketu konde irukiren, puthagam pera vazhi, class room @2007 nukku mail anipi konde irukiren ferroformindustries@gmail.com il irundu vandada varavillaya theriya villai, varam kodungal, vaguparai sera vaipaliyingal, vanakkam//////

    உடல்நிலை காரணமாக உடனடி பதில் அனுப்ப இயலவில்லை. இரண்டொரு நாட்களில் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதில் வரும். பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  13. /////Blogger kmr.krishnan said...
    2 is the best./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  14. /////Blogger Raghu k r said...
    ayya vanakkam ,arumaiyana pathi, vazumpadi vazthanl varuvadu thane varum, arumai elimai, nan ayyanidam oru varam kettukonde irukiren puthagam vendum endru class room@2007 nukku mail anipiukonde ullen vantahtha varavillaya thereyavill ferroformindustries@gmail.com ilirundu vagauparaikku vaipalikkavum varam kodutahrulavum//////

    உடல்நிலை காரணமாக உடனடி பதில் அனுப்ப இயலவில்லை. இரண்டொரு நாட்களில் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் பதில் வரும். பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  15. //////Blogger வேப்பிலை said...
    ///தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும்///
    அய்யர் சொல்லும் வார்த்தை
    அப்படியே சொல்கிறீர்களே.../////

    உண்மைதான். நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  16. /////Blogger Arumugavel said...
    நீதிக்கதை அருமை !!!
    நன்றி,
    செ.ஆறுமுகவேல்///////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger Selvam R said...
    ஆசிரியர்க்கு வணக்கம்,
    நல்ல பதிவு. மருள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெறியாமல் இருந்தேன். மருள் என்றால் "மயக்கம், பேயாட்டம்" என்று கூகுல் ஆண்டவர் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
    காந்தி : 3 குரங்கி நிலை நகசுவையாகவும், உன்மையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி!!
    பன்னீர்செல்வம்.இரா////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பன்னீர்செல்வம்!

    ReplyDelete
  18. /////Blogger Unknown said...
    hello sir , eppadi irrukinga? i used to visit your astro blogs regularly in 2009 2010 n 11.
    thats when i started learning astrology. then i lost interest , i remember u stopped posting lessons openly coz some1 stole ur posts n used it in his books.
    ok neenga books release pannitingala ? entha pathipagam? private lessons thru mail innum poitueruka? jus curious to know? thanks. hope all the old students are fine. ungalakku shani dasa epo mudiyum? best wishes to u ayya. vannakam////

    சனி திசை முடிந்து புதன் திசை நடந்து கொண்டிருக்கிறது சாமி! புத்தகம் முதல் தொகுதி வந்துள்ளது! மற்ற தொகுதிகளும் விரைவில் வரும்!

    ReplyDelete
  19. /////Blogger Lekha Chandran said...
    Nice sir..I requested you to permit me for galaxy classroom..i sent mail too..please consider mine sir//////

    கேலக்ஸி வகுப்பெல்லாம் முடிந்து மாதக்கணக்காகிறது தாயே!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com