மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.5.16

தாமதத்திற்கு என்ன காரணம்? தலைவர் சொன்ன காரணம்!


தாமதத்திற்கு என்ன காரணம்? தலைவர் சொன்ன காரணம்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார்

" ஜீவா."என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?" என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்
.
உடனே ஜீவா,"நான் மட்டுமா..? இங்கே இருக்கிற  எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன்”, என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை, உட்கார வைக்க,ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,  பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர்.

"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச  நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார்.

"கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்.காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா,அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர்,"ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை ஆனா,நான் கொடுத்தா,  அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி,
"வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...ஆனா,இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது அவன் முரடன்,உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர்.

அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே காணமுடியம் இது போன்ற தலைவர்களை?
அடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர்,ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. நம் பாரம்பரியத்தையும், தமிழ் இலக்கியத்தையும் மதித்தவ‌ர் ஜீவா. பாரதியிலும் கம்பனிலும் ஆழங்கால் பட்டவர்.

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா
    மனதை மிகவும் நெகிழச்செய்தது ஐயா

    ReplyDelete
  3. வாத்தியாருக்கு வந்தனம்!
    "இனி எங்கே காணமுடியும் இது போன்ற தலைவர்களை?"] சிந்தனை வசப்பட்டு கண்கள் கலங்கி,கண்ணீரை
    சொரிந்தன!எப்படிப்பட்ட வாழ்க்கையை
    இம் மாமனிதர்கள் நடாத்தியிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்குங்கால் உணர்ச்சி வசப்படுகிறேன்!நம் கண்ணுக்கு முன்னே காலத்தையும் கடந்த செயற்கரிய செயல்களைச் செய்து,சாதாரண மனிதர்களுடன் கலந்து உறவாடி, இத் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கறார்கள்!!காமராஜர்,ஜீவா மற்றும் கக்கன் போன்றோர் இந்நூற்றாண்டின் சிந்தனைச் செம்மல்கள்!
    இவர்களைப் பற்றி அல்லவா நமது இளைய சமுதாயம் அறியவேண்டும், இவர்கள் வழியையல்லவா பின்பற்ற வேண்டும்?!
    இறைவா, எங்களின் வழித்தோன்றல்களை நீங்கள் தான் நல்வழியில் நடாத்திச் செல்ல வேண்டும்!

    ReplyDelete
  4. Respected sir,

    Really good. We may not get such a wonderful leaders in Tamil Nadu. Thanks for writing in this web to know all.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  5. Ayya vanakkam. Arumaiyana thalaivargal. Intrm engavathu oriruvar iruppargal nammal kandupidithu munnilaippadutha mudiyavillaye enra varutthama minjukirathu.may be avarkalai maranthuvittathal evarkal kidaikkavillaiyo_?

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,கண்களில் முட்டிய கண்ணீரை துடைத்து விட்டு பார்த்தேன்.எட்டிய தூரம் எதிர்கால வெளிச்சம் தெரியவில்லை.நம்பிக்கையோடு கடமையை செய்தேன்.எக்சிட் போல் எமனாய் நிற்கிறது.பார்ப்போம் இன்னுமொரு நாள் வெளிச்சமா?இருட்டா என்று.இருட்டென்றால் காத்திருப்பேன் இன்னும் ஒரு ஐந்தாண்டு.

    ReplyDelete
  7. இதை படிக்கும் பொழுது என் மனம் நெகிழ்ந்தது. காமராஜருக்கு பிறகு எந்த முதல் அமைச்சரும் நேர்மையாக அடி தட்டு மக்களுக்காக அரசாங்க செய்யவில்லை. இவரைப் போல் யாரவது அல்ல நானாவது மக்களுக்கு உழைக்க மாட்டோனா? என்ற ஆதங்கத்துடன் காத்திருக்கிறேன்!
    இந்த பகிற்விக்கு மிக்க நன்றி! பன்னீர்செல்வம்.இரா

    ReplyDelete
  8. Vanakkam ayya,
    Natpirku oor ilakanam..

    ReplyDelete
  9. Dear Sir,

    Nice to read about Jeeva and Kamaraj in your wordings. Great leaders.

    Thank You,

    Jeeva

    ReplyDelete

  10. Look at Singapore and India. Most efficient vs most in tolerable. Tiny vs abundant human minds. Election campaign in USA vs Tamil nadu is like day and night.

    Tamil nadu don't have water, no people for agriculture in next ten years, best corrupted political system, people spoofed by media, leaders without physical or mental stability, wow so on.

    Nice post for current times. We don't need kamaraj level of great humans to lead in current world, atleast let's hope to get a good human to rule.
    Hope the dream comes true one day.

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    நம் பாரம்பரியத்தையும், தமிழ் இலக்கியத்தையும் மதித்தவ‌ர் ஜீவா. பாரதியிலும் கம்பனிலும் ஆழங்கால் பட்டவர்.////

    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. Wednesday, May 18, 2016 6:20:00 AM Delete
    /////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    மனதை மிகவும் நெகிழச்செய்தது ஐயா////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  13. //////Blogger வரதராஜன் said...
    வாத்தியாருக்கு வந்தனம்!
    "இனி எங்கே காணமுடியும் இது போன்ற தலைவர்களை?"] சிந்தனை வசப்பட்டு கண்கள் கலங்கி,கண்ணீரை
    சொரிந்தன!எப்படிப்பட்ட வாழ்க்கையை
    இம் மாமனிதர்கள் நடாத்தியிருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்குங்கால் உணர்ச்சி வசப்படுகிறேன்!நம் கண்ணுக்கு முன்னே காலத்தையும் கடந்த செயற்கரிய செயல்களைச் செய்து,சாதாரண மனிதர்களுடன் கலந்து உறவாடி, இத் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கறார்கள்!!காமராஜர்,ஜீவா மற்றும் கக்கன் போன்றோர் இந்நூற்றாண்டின் சிந்தனைச் செம்மல்கள்!
    இவர்களைப் பற்றி அல்லவா நமது இளைய சமுதாயம் அறியவேண்டும், இவர்கள் வழியையல்லவா பின்பற்ற வேண்டும்?!
    இறைவா, எங்களின் வழித்தோன்றல்களை நீங்கள் தான் நல்வழியில் நடாத்திச் செல்ல வேண்டும்!/////

    அதையெல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வார். நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  14. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Really good. We may not get such a wonderful leaders in Tamil Nadu. Thanks for writing in this web to know all.
    with kind regards,
    Visvanathan N/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!

    ReplyDelete
  15. //////Blogger kittuswamy palaniappan said...
    Ayya vanakkam. Arumaiyana thalaivargal. Intrm engavathu oriruvar iruppargal nammal kandupidithu munnilaippadutha mudiyavillaye enra varutthama minjukirathu.may be avarkalai maranthuvittathal evarkal kidaikkavillaiyo_?/////

    பொறுத்திருங்கள். இறையருளால், அதுபோன்ற தலைவர்கள் ஒரு நாள் மீண்டும் கிடைப்பார்கள்!

    ReplyDelete
  16. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கண்களில் முட்டிய கண்ணீரை துடைத்து விட்டு பார்த்தேன்.எட்டிய தூரம் எதிர்கால வெளிச்சம் தெரியவில்லை.நம்பிக்கையோடு கடமையை செய்தேன்.எக்சிட் போல் எமனாய் நிற்கிறது.பார்ப்போம் இன்னுமொரு நாள் வெளிச்சமா?இருட்டா என்று.இருட்டென்றால் காத்திருப்பேன் இன்னும் ஒரு ஐந்தாண்டு.//////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!

    ReplyDelete
  17. //////Blogger Selvam R said...
    இதை படிக்கும் பொழுது என் மனம் நெகிழ்ந்தது. காமராஜருக்கு பிறகு எந்த முதல் அமைச்சரும் நேர்மையாக அடி தட்டு மக்களுக்காக அரசாங்க செய்யவில்லை. இவரைப் போல் யாரவது அல்ல நானாவது மக்களுக்கு உழைக்க மாட்டோனா? என்ற ஆதங்கத்துடன் காத்திருக்கிறேன்!
    இந்த பகிற்விக்கு மிக்க நன்றி! பன்னீர்செல்வம்.இரா/////

    நல்லது. உங்களுடைய ஆர்வத்திற்கும் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வம்!

    ReplyDelete
  18. ////Blogger Lekha Chandran said...
    Vanakkam ayya,
    Natpirku oor ilakanam..////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. //////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    Nice to read about Jeeva and Kamaraj in your wordings. Great leaders.
    Thank You,
    Jeeva/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  20. /////Blogger selvaspk said...
    Look at Singapore and India. Most efficient vs most in tolerable. Tiny vs abundant human minds. Election campaign in USA vs Tamil nadu is like day and night.
    Tamil nadu don't have water, no people for agriculture in next ten years, best corrupted political system, people spoofed by media, leaders without physical or mental stability, wow so on.
    Nice post for current times. We don't need kamaraj level of great humans to lead in current world, atleast let's hope to get a good human to rule.
    Hope the dream comes true one day.//////

    பொறுத்திருங்கள். இறையருளால், அதுபோன்ற தலைவர்கள் ஒரு நாள் மீண்டும் கிடைப்பார்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com