மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.2.16

ஆலய அதிசயங்கள்!


ஆலய அதிசயங்கள்

1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.

6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    நலமறிய ஆவல்....சீரான பணிகள் தொடர இறைவன் அருள்புரியட்டும் .
    ஆலய தொகுப்பு அருமை
    நன்றி

    ReplyDelete
  2. Respected Sir,

    Thanks for giving very spiritual information.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. காஞ்சிபுரத்தில் உள்ள பற்பல சிவாலயத்தில் எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது. அத்தனைக்கும் ஒரே நாயகி காமாக்ஷி அம்மன். இதுவும் காஞ்சியின் தனி சிறப்பு.

    ReplyDelete
  4. குரு வந்தனம்.
    ஆஹா, என்னே ஆலய அதிசயங்கள்!!
    மிகச் சிறந்த பதிவு, ஆங்காங்கே நடக்கும்/ இருக்கும் பல விஷயங்களை வகுப்பறை மாணவர்க்கு வாரி வழங்கும் எங்கள் வாத்தியாரையா, எல்லா நலங்களும் பெற்று, தங்கள் குடும்பத்தாருடன் நீண்ட காலம் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்திட அனைவர் சார்பில், குமரப்பெருமானிடம் நெஞ்சார்ந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றேன்.

    ReplyDelete
  5. அருமையான தகவல்கள். நன்றி ஐயா.

    ReplyDelete
  6. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    நலமறிய ஆவல்....சீரான பணிகள் தொடர இறைவன் அருள்புரியட்டும் .
    ஆலய தொகுப்பு அருமை
    நன்றி/////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  7. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Thanks for giving very spiritual information.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசிக்காரரே!

    ReplyDelete
  8. ///Blogger siva kumar said...
    vanakgam iya////

    உங்களின் வணக்கத்திற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  9. ////Blogger வேப்பிலை said...
    https://www.youtube.com/watch?v=6MCkBbBN9vs/////

    காணொளி தகவலுக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. ///Blogger SELVARAJ said...
    காஞ்சிபுரத்தில் உள்ள பற்பல சிவாலயத்தில் எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது. அத்தனைக்கும் ஒரே நாயகி காமாக்ஷி அம்மன். இதுவும் காஞ்சியின் தனி சிறப்பு.//////

    உண்மைதான். அறியத் தந்தமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    Good information Sir. Thank you./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    ஆஹா, என்னே ஆலய அதிசயங்கள்!!
    மிகச் சிறந்த பதிவு, ஆங்காங்கே நடக்கும்/ இருக்கும் பல விஷயங்களை வகுப்பறை மாணவர்க்கு வாரி வழங்கும் எங்கள் வாத்தியாரையா, எல்லா நலங்களும் பெற்று, தங்கள் குடும்பத்தாருடன் நீண்ட காலம் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்திட அனைவர் சார்பில், குமரப்பெருமானிடம் நெஞ்சார்ந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றேன்./////

    உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  13. /////Blogger Mrs Anpalagan N said...
    அருமையான தகவல்கள். நன்றி ஐயா./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete
  14. Sir i am read your previous lesson please

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com