மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.2.16

Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்!


Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்!

             அதுஇருந்தா இதுஇல்லே
                   இதுஇருந்தா அதுஇல்லே
              அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா
                  அவனுக்கிங்கே இடமில்லே!
                                  - கவியரசர் கண்ணதாசன்
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.

ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ
அல்லது மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.

ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!

எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!

எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது:
எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!

ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும்
ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச்
சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.

இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு,
கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக்காரனுக்கு இருக்காது.

இறைவனின் படைப்பு அப்படி!

உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும். இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்

அதற்கு உதாரணம்:  ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!

கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!"

நான் சொன்னேன், "கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!"

பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!

9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும், மொத்த
மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.

நரேந்திர மோடிக்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.

முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன்
அவருடைய வாகன ஓட்டிதான்!

பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்!

இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம்
எதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில் தனியாக
நடந்து
தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும்.

ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.

பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள்
நன்றாக இருக்கும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு  நான்காம்
வீடும் நன்றாக இருக்கும்.

உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை;
உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!
அனைவரும் சமம்!
அதை மனதில் வையுங்கள்!
-------------------------------------------------
ஜோதிட விதிகளளைப் படிக்கும் போது, நமது மனம், அதன் படி நமது ஜாதகத்திலும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முனையும்.
ஒவ்வொரு முறையும் ஜாதகத்தைக் கையில் அல்லது பையில்
வைத்துக் கொண்டு கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க
முடியாது.

ஆகவே முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் மனப்பாடம் செய்து
வையுங்கள். எப்படி மனப்பாடம் செய்ய வேண்டு மென்றால்,
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட நீங்கள் தயக்கமின்றிப் பதில்
சொல்ல வேண்டும்

உடனே அதைச் செய்யுங்கள்.

லக்கினத்தின் பெயர், ராசியின் பெயர், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர், அது
லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதற்குக்
காரகன் என்னும் அடிப்படை விஷயங்களை அடக்கி உங்கள் ஜாதகத்தை
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் ஆணித் தரமாகப் பதிவு
செய்து வைத்திருக்க வேண்டும்.

எனக்கு என் உறவினர்கள் பலருடைய ஜாதகங்கள் மனப்பாடம். நீங்கள் அட்லீஸ்ட் உங்கள் ஜாதகத்தையாவது  மனப்பாடம் செய்து வையுங்கள்.
மூன்று நாட்களுக்குள் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்!

செய்வீர்களா? முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்!

இது 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை வகுப்பில் பதிவிட்ட பழைய பாடம். இப்போது நிறைய புதியவர்கள் வந்துள்ளதால் அனைவரும் தெரிந்து

கொள்ளட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்.

என்ன சரிதானே?

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28 comments:

  1. வணக்கம் ஐயா
    எனது ஜாதகத்தை மனனம் செய்து விட்டேன்

    ReplyDelete
  2. சரி .தான். எனக்கு
    சிலருடைய ஜாதகம் மனப்பாடம்...

    ஒன்பது கிரகத்தையும்
    ஒரே கட்டத்தில் இருக்கும்படி

    ஜாதகம் அமைந்தால் எப்படி
    ஜாலியாக இருக்கும் என

    அவ்வப்போது கற்பனை செய்வதுண்டு
    அது முடியாது என்று தெரிந்தும்... .ம்... ம்...

    ReplyDelete
  3. Dear sir,
    you said correctly and I believe many people will do like as I do
    whenever I visit Tamil Nadu immediately or next day I take my horoscope & will go to 3-4 astrologer and compare their prediction. End result was confused & frustration & then visit Tiruchendur and Sankarankoil temples and by the time my leave will be finished.

    after that somehow I found your class room & reading the lessons whenever I get times .
    Initially I got more confusion due to improper perception and now slowly understood from various lessons apart from astrology Life is to enjoy wherever I am working if not in my native place.
    many Thanks to you

    ReplyDelete
  4. Vanakkam ayya thangal padathinpadi enudai jathagar muzhumaiyaga ariven Vazhga valamudan

    ReplyDelete
  5. அய்யா சீக்கிரம் மனப்பாடம் செய்கிறேன்
    உங்கள் புத்தகம் வகுப்பறை ஜோதிடம் முதல் தொகுதி அருமையாக உள்ளது. படிக்கும்போது நீங்கள் அருகில் இருப்பது போல உணர்வு ஏற்படுகிறது
    கணபதி சுப்ரமணியன்

    ReplyDelete
  6. anbudan vanakkam vaathiyaar ayya...

    present ayya....!

    ReplyDelete
  7. One general question.

    When astrologers gives a date for marriage they look at stars of boy,girl and panchangam. But the same date is not agreed by numerologists as according to their beliefs, the numbers aren't good (2,4,5,7,8) also they look at lucky number of boy,girl vs date choosen. Like if the date adds up to number 3, which is considered to be ruled by Guru and when boy has 6 (Venus), the numerologist consider not to conduct marriage on that day.

    If the numerology has astrology basis, how come it is not embedded to astrology? How a day choosen through astro basis becomes irrelevant on numerology.

    For a common person who has no idea on both, won't they be tossed?

    While I am not oppose to both belief systems, just like to hear your opinion on this to get more wisdom.

    ReplyDelete
  8. மிகவும் சரியான அறிவுரை வாத்தியார் அவர்களே...

    ReplyDelete
  9. குரு வந்தனம்.
    என் போனறவர்கட்கு மனதில் குதூகலம். ஏனெனில் நான் மேல்நிலை வகுப்பில் படிக்கவில்லை!
    என் ஜாதகத்தை இரண்டு நாளில் மனனம் செய்து விடுவேன், ஐயா!

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா,குடும்பத்தில் உள்ள பத்து நபர் ஜாதகம் மனப்பாடம்.நவாம்சம் மறந்து போய்விடுகிறது.

    ReplyDelete
  11. Anbu Assaanukku,

    Could not find any new lessons in the Class stars2015,After Lesson No.48. Iam a member in that class and hence the Query.
    Hoping to get a reply in this regard.
    Thanking you, Sir.
    Truly Yours,
    V.Shanmugasundaram.

    ReplyDelete
  12. வணக்கம், குருஜி அவர்களுக்கு. எனது ஜாதகத்தை மனதில் பதித்து வைத்துள்ளேன். மேல்நிலை பாடங்களுக்கு எப்போது அனுமதி கொடுப்பிர்கள்? மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்.

    ReplyDelete
  13. ////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா
    எனது ஜாதகத்தை மனனம் செய்து விட்டேன்/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger வேப்பிலை said...
    சரி .தான். எனக்கு
    சிலருடைய ஜாதகம் மனப்பாடம்...
    ஒன்பது கிரகத்தையும்
    ஒரே கட்டத்தில் இருக்கும்படி
    ஜாதகம் அமைந்தால் எப்படி
    ஜாலியாக இருக்கும் என
    அவ்வப்போது கற்பனை செய்வதுண்டு
    அது முடியாது என்று தெரிந்தும்... .ம்... ம்.../////

    கற்பனைக்கென்ன காசா, பணமா? கற்பனை பல சமயங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் வேப்பிலையாரே!

    ReplyDelete
  15. /////Blogger seenivasan said...
    Dear sir,
    you said correctly and I believe many people will do like as I do
    whenever I visit Tamil Nadu immediately or next day I take my horoscope & will go to 3-4 astrologer and compare their prediction. End result was confused & frustration & then visit Tiruchendur and Sankarankoil temples and by the time my leave will be finished.
    after that somehow I found your class room & reading the lessons whenever I get times .
    Initially I got more confusion due to improper perception and now slowly understood from various lessons apart from astrology Life is to enjoy wherever I am working if not in my native place.
    many Thanks to you/////

    நல்லது. உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ///////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya thangal padathinpadi enudai jathagar muzhumaiyaga ariven Vazhga valamudan//////

    நல்லது. நன்றி கஜபதியாரே!

    ReplyDelete
  17. ///////Blogger ganapathi said...
    அய்யா சீக்கிரம் மனப்பாடம் செய்கிறேன்
    உங்கள் புத்தகம் வகுப்பறை ஜோதிடம் முதல் தொகுதி அருமையாக உள்ளது. படிக்கும்போது நீங்கள் அருகில் இருப்பது போல உணர்வு ஏற்படுகிறது
    கணபதி சுப்ரமணியன்////////

    அப்படியா? கேட்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger hamaragana said...
    anbudan vanakkam vaathiyaar ayya..
    present ayya....!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  19. ////Blogger selvaspk said...
    One general question.
    When astrologers gives a date for marriage they look at stars of boy,girl and panchangam. But the same date is not agreed by numerologists as according to their beliefs, the numbers aren't good (2,4,5,7,8) also they look at lucky number of boy,girl vs date choosen. Like if the date adds up to number 3, which is considered to be ruled by Guru and when boy has 6 (Venus), the numerologist consider not to conduct marriage on that day.
    If the numerology has astrology basis, how come it is not embedded to astrology? How a day choosen through astro basis becomes irrelevant on numerology.
    For a common person who has no idea on both, won't they be tossed?
    While I am not oppose to both belief systems, just like to hear your opinion on this to get more wisdom.//////

    அலோபதி, ஹோமியோபதி போன்று இரண்டும் உள்ளது. எண் கணிதததை மறந்துவிட்டு ஜாதக கணிப்பையே எடுத்துக்கொள்ளுங்கள் குழப்பம் இருக்காது!

    ReplyDelete
  20. /////Blogger பரிவை சே.குமார் said...
    அறிந்து கொண்டேன் ஐயா..////.

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    மிகவும் சரியான அறிவுரை வாத்தியார் அவர்களே.../////

    நல்லது. நன்றி லெட்சுமி நாராயணன்!

    ReplyDelete
  22. ////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    என் போனறவர்கட்கு மனதில் குதூகலம். ஏனெனில் நான் மேல்நிலை வகுப்பில் படிக்கவில்லை!
    என் ஜாதகத்தை இரண்டு நாளில் மனனம் செய்து விடுவேன், ஐயா!/////

    நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  23. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,குடும்பத்தில் உள்ள பத்து நபர் ஜாதகம் மனப்பாடம்.நவாம்சம் மறந்து போய்விடுகிறது.////

    உங்கள் ஜாதகத்திற்கு மட்டும் அதை மறக்காமல் மனனம் செய்யுங்கள் போதும்!

    ReplyDelete
  24. ////Blogger shanmugam said...
    Anbu Assaanukku,
    Could not find any new lessons in the Class stars2015,After Lesson No.48. Iam a member in that class and hence the Query.
    Hoping to get a reply in this regard.
    Thanking you, Sir.
    Truly Yours,
    V.Shanmugasundaram.//////

    இப்போது சென்று பாருங்கள்! பாடங்களைத் துவங்கி விட்டேன்!

    ReplyDelete
  25. //////Blogger C.P. Venkat said...
    வணக்கம், குருஜி அவர்களுக்கு. எனது ஜாதகத்தை மனதில் பதித்து வைத்துள்ளேன். மேல்நிலை பாடங்களுக்கு எப்போது அனுமதி கொடுப்பிர்கள்? மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன்./////

    கூடிய சீக்கிரம் தருகிறேன். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  26. உங்களது பாடங்கள் அனைத்தையும் படித்து கொண்டே இருக்கிறேன் ஜயா....மின் அஞ்சல் பாடத்திற்காக காத்திருக்கிறேன் ஜயா.....

    ReplyDelete
  27. //////Blogger Unknown said...
    உங்களது பாடங்கள் அனைத்தையும் படித்து கொண்டே இருக்கிறேன் ஜயா....மின் அஞ்சல் பாடத்திற்காக காத்திருக்கிறேன் ஜயா.....//////

    மின்னஞ்சல் பாடம் எல்லாம் கிடையாது. அனைத்தையும் பொது வகுப்பில் சேர்த்துவிட்டேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com