மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

1.2.16

Short Story: சிறுகதை: முதல் தர்மம்


Short Story: சிறுகதை: முதல் தர்மம்

மாத இதழ் ஒன்றிற்கு அடியவன் எழுதிக் கொடுத்த சிறுகதை. நீங்கள் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------

அது 1928ம் ஆண்டு. இன்றைக்கு 87 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். தெற்கு வட்டகையில் பெரிய செல்வந்தர் என்றால் எல்லோரும் சின்னையா செட்டியாரைத்தான் கையைக் காட்டுவார்கள்.

மற்ற நகரத்தார்கள் எல்லாம் பர்மா, மலேசியா, சைகோன், இலங்கை என்று வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்து கொண்டிருந்த காலத்தில் சின்னையா செட்டியார், உள்ளூரிலேயே பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் தொழிலைச் செய்து கொண்டிருந்தார்.

பவுன் 13 ரூபாய் விற்ற காலம். ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்களின் மதிப்பை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். சின்னையா செட்டியார் மொத்தம் முப்பது லட்ச ரூபாய்களுக்கு மேல் இனத்தில் அடைத்திருந்தார். எல்லாவற்றிற்கும் முறையான கணக்கு இருந்தது. வரவு செலவும்
முறையாக இருந்தது.

அரண்மனை போன்ற தங்கள் வீட்டு வாசலில் ஃபோர்டு டூயூடர் செடான் கார் ஒன்று வந்து நிற்பதைப் பார்த்தவுடனேயே, வருவது அருணாசலம் செட்டியார் என்பதைச் சின்னைய்யா செட்டியார்  தெரிந்து கொண்டார்.

முகப்புவரை சென்று வந்தவரை, முகம் மலர உள்ளே அழைத்து வந்து பெட்டகசாலையில் விரித்திரிந்த இரத்தினக் கம்பளத்தின் மேல் அவரை அமர வைத்தார்.

அன்றையத் தேதியில் செட்டிநாட்டின் மிகப் பெரிய புள்ளிகள் சிலரில் அருணாசலம் செட்டியாரும் ஒருவர். தலைக்கு டர்பன், கழுத்தில் துப்பட்டா என்று பார்வைக்கு அசத்தலாக இருப்பார்.

வந்தவர் பத்து நிமிடங்கள் பொதுத் தாக்கலைப் பேசிவிட்டு, தன்னைவிட இளையவரான சின்னய்யாவிடம் மெல்லிய குரலில் கேட்டார்:

”தம்பி, சைகோன் மெய்யப்பனுக்கும் உங்களுக்கும் வரவு செலவு உண்டா?”

“ஆஹா, உண்டு அண்ணே, அவுக அப்பச்சி, எங்க அப்பச்சி காலத்திலேயிருந்து தொடர்ந்து வரவு செலவு உண்டு அண்ணே!”

“இன்றையத் தேதிக்கு அவர்கள் கணக்கில் என்னதொகை உங்களிடம் நிலுவையில் உள்ளது? அதாவது அவர்கள் எவ்வளவு பாக்கி தர வேண்டும்?”

“எதற்காகக் கேட்கிறீர்கள்?”

“அவர்கள் பணச் சிக்கலில் இருக்கிறார்கள். உங்களுக்கு உதவுவதற்காகத்தான் கேட்கிறேன்.”

“நீங்கள் எப்படி எங்களுக்கு உதவ முடியும்?”

“அவர்களுடைய பிராமிசரி நோட்டுக்களை எல்லாம் என்டார்ஸ் செய்து என்னிடம் கொடுத்துவிடுங்கள். அவற்றிற்குரிய பணத்தை நான் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்.”

“அதனால் உங்களுக்கு என்ன லாபம்? அந்தப் பணத்தை நீங்கள் எப்படி வசூல் செய்வீர்கள்?”

"அவர்கள் மீது பிராது போட்டு சொத்துக்களை எல்லாம் அட்டாச் செய்து, அவர்களைத் தெருவிற்குக் கொண்டு வந்து விடுவேன். எனக்கும் அவர்களுக்கும் பகை ஒன்று உள்ளது. அதைத் தீர்க்கவே, அப்படிச் செய்ய விரும்புகிறேன்.”

“பதினைந்து சிவன் கோயில்களுக்கு தங்கள் சொந்த செலவில் குடமுழுக்கு செய்த குடும்பம் அது. அவர்களுக்கு அந்த நிலைமை ஏற்பட ஈசனே விடமாட்டான். ஆகவே பகை வேண்டாம். அவர்ளுடன் ஏதாவது ராசி பேச வேண்டும் என்றால் சொல்லுங்கள். நான் பேசுகிறேன்”

”பேசித் தீரக்கூடிய பகையல்ல அது! முடிவாக என்ன சொல்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்! அவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அவர்களுடன் இருந்தால் நீங்களும் சேர்ந்து முழுக வேண்டியதுதான்.”

”அவர்கள் எங்களுடைய வாடிக்கையாளர்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தற்காலிகமானதுதான். அவர்கள் மீண்டு வருவார்கள். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு வேளை நீங்கள் சொல்வதைப் போல அவர்கள் கடனில் மூழ்க நேர்ந்தால் அவர்களுடன் சேர்ந்து மூழ்க நாங்களும் தயாராக உள்ளோம். அவர்களுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, அவர்களுடைய பிராமிசரி நோட்டுக்களை எல்லாம் உங்களிடம் மறு அடமானத்திற்குக் கொடுத்து, எங்களைக் காப்பாற்றிக் கொள்வதை விட, அவர்களுடன் சேர்ந்து மூழ்குவதே நல்லது. அதுதான் தர்மம். ஆகவே அவர்கள் சம்பந்தப்பட்ட எதையும் தருவதற்கில்லை. மன்னிக்கவும்......” என்று இவர் சொல்லச் சொல்லவே, வந்தவர் எழுந்து விட்டார். ஒப்புக்காக கையைக் குலுக்கிவிட்டு சட்டென்று வெளியேறிச் சென்று விட்டார்.
 
                       ************************************************

காலதேவனின் விளையாட்டுக்கள் வினோதமாகவும் சில சமயங்களில் அற்புதமாகவும் இருக்கும். சைகோன் மெய்யப்ப செட்டியாரின் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பணச் சிக்கல் தீர்வதற்கு அவன் அற்புதமாக உதவி செய்தான். காலதேவன் உதவி செய்தால் யார் குறுக்கே நிற்க முடியும்?

சைகோனில் அவர்களுக்கு இருந்த 20,000 ஏக்கர் விலை நிலங்களை பிரெஞ்ச் நிறுவனம் ஒன்று நல்ல விலைக்கு வாங்க முன் வந்தது. இவர்களும் அந்த ஊரில் இருந்த கடையை மட்டும் வைத்துக் கொண்டு நிலங்களை மொத்தமாக விற்றுப் பணம் பண்ணி விட்டார்கள். பணப்பரிவர்த்தனைக்குப் பிரச்சினை எதுவும் இல்லாத காலம் அது.

அந்தப் பணத்தை அப்படியே கொண்டுவந்து, ஊரில் வாங்கியிருந்த கடன்களை எல்லாம் ஒரே நாளில் அடைத்துவிட்டார்கள். பர்மாவிலும் இலங்கையிலும் அவர்களுக்கு இருந்த இடங்கள் எல்லாம் அப்படியே இருந்தன. அதனால் ஊருக்குள் அவர்களுக்கு இருந்த நல்ல பெயர் தொடர்ந்தது.

அதிகமாகப் பணம் வாங்கியிருந்தது சின்னையா செட்டியாரிடம்தான். அதைத்தான் முதலில் தீர்த்தார்கள். தீர்த்துக் கொடுப்பதற்கு சைகோன் மெய்யப்ப செட்டியாரும், அவருடைய மகன் தியாகராஜனும் வந்திருந்தார்கள். வந்தவர்கள் நீண்ட நேரம் நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாரூனா பிராமிசரி நோட்டுக்களைக் கேட்டு வந்த விஷயமும், அதற்கு சின்னையா மறுப்புச் சொல்லி அவரை திருப்பி அனுப்பி வைத்த விஷயமும் அவர்களுக்கு ஆனா ரூனா நிறுவன ஆட்கள் மூலமாகவே தெரிந்திருந்தது.

அதற்கு சின்னையாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்கள் நன்றி சொன்னபோது, சின்னையா தழுதழுத்த குரலில் சொன்னார்:

“எங்கள் அப்பச்சி, எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த முதல் தர்மம் அது. ஆகவே கொஞ்சம் கூடப் பிறழாமல் அதைச் செய்தேன். எங்கள் அப்பச்சி அடிக்கடி நகரத்தார்களின் முதல் தர்மம் என்று அதைத்தான் சொல்லுவார்கள். பிறருக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும் என்று சொல்வார்கள். கூடவே பொய்யாமொழிப் புலவரின் குறளையும் சொல்லுவார்கள்
“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
அத்துடன் நம்பிக்கை துரோகம் செய்வதும் நகரத்தார்கள் கடைப்பிடிக்கும் தர்மத்திற்கு எதிரானது. ஆகவே செய்யவில்லை”

உடனே சைகோன் மெய்யப்ப செட்டியார் குறுக்கிட்டுச் சொன்னார்:

”அதை விடுங்கள். அவர்கள் மூழ்கினால் அவர்களுடன் சேர்ந்து நாங்களும் மூழ்குகிறோம் என்று சொன்னீர்களாமே - அது கோடி பெறும். யாருக்கு வரும் அந்தத் துணிச்சலும் நல்ல மனசும்? அதை எங்கள் வாழ் நாளில் நாங்கள் மறக்க மாட்டோம். இந்தப் பணத்துடன் இரண்டு லட்ச ரூபாய் அதிகமான பணம் உள்ளது. அதை உங்கள் நிறுவனத்தில் எங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள். நாலணா வட்டி கொடுத்தால் போதும். எங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் தேவையான கால அவகாசம் கொடுத்துவிட்டு அந்தப் பணத்தை பகுதியாகவோ அல்லது முழுதாகவோ வாங்கிக்கொள்கிறோம்”

”நல்லது” என்று சின்னையா செட்டியார் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.

அவர்கள் தொடந்தார்கள். சின்னையா செட்டியாரைக் கூட்டிக்கொண்டு அவருடைய வீட்டு வாசல்வரை சென்றவர்கள், வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த புது ரோல்ஸ்ராய்ஸ் காரைக் காட்டியதோடு, அதன் சாவியையும் கொடுத்துவிட்டுச் சொன்னார்கள்:

”உங்களின் நல்ல மனசிற்குப் பரிசாக இதை வைத்துக்கொள்ளுங்கள். நாங்களும் மூழ்கவில்லை. எங்களுடன் துணிந்து பயணித்த சின்னையாவும் மூழ்கவில்லை என்பதை இந்த செட்டிநாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பரிசாகவே இந்தக்கார்.”

சின்னையா செட்டியாரின் கண்கள் பனித்துவிட்டன.
          ***********************************************

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31 comments:

Gopal Krishnan said...

உண்மை கசக்கும் அதன் பலனோ இனிக்கும்....அன்புடன் ரேடியோ கோகி..
"...துணையின்றி வெண் புறா தனியாக வந்ததே
வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே

இனம் யாவும் சேர்ந்து தான்
அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே

வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே

ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே...."

வரதராஜன் said...

குரு வந்தனம்.
ஐயா, கதையைப் படித்து முடிக்குமுன் கடைசி வரிகள், உண்மையில் எங்கள் கண்களிலும் நீர் துளித்தன.உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நல்ல சிறுகதை.

A. Anitha said...

நல்லதே நினைப்போம்...

நல்லதே நடக்கும்...

இடர்கள் அனைத்தும்

இறைவன் நடத்தும் தேர்வுகளே...

முடங்கிடாமல் முயற்சித்தால்

முந்தி வரும் வெற்றிகளே...

நேர்மை அதனை ஊன்றுகோலாய்

நீ கொண்டால்

சோதனை வேதனை வந்தாலும்

நிச்சயம் ஒருநாள்

நிலைமாறும்...

நீதி தேவன் அருளாலே

நிச்சயப் பரிசுகள் உனக்குண்டு...

ravichandran said...

Respected Sir,

Veracity will protect always... Great thought... Nice story...

With kind regards,
Ravi-avn

Mrs Anpalagan N said...

உண்மை ஐயா. படிக்கும்போது பலதும் நினைவுக்கு வந்து மனது கனக்கிறது.
இந்த உண்மைகளை பலரும் நம்புவதில்லை. (இறைவனை) நம்பினார் கெடுவதில்லை.
நல்லவரை சோதனைகள் சூழும், ஆனாலும் இறைவன் அவர்கள் அருகிலேயே இருந்து அவர்கள்
விழுந்து விடாமல் தாங்கிக் கொள்வதை பார்ப்பவர் பலரும் அறிந்திரார்.
அல்லாதவர் ஆகா, ஓகோ என்று வாழ்வார்கள். ஆனால் ஒரே புயலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவர்.

மகான்கள் எல்லாம் கெட்ட உறவுகளையும், நட்புகளையும், சுற்றத்தையும் நம்பி வாழ்ந்தவர்களில்லை. அந்த இறைவனை மட்டுமே நம்பி, எல்லாவற்றையும் அவன் மேல் போட்டு விட்டு, நடப்பதை ஏற்று வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்கள் வீழ்ந்ததில்லை. அவர்களுக்கும் உள்ளுணர்வில் தெரியும், இறைவன் தம்முடன் தான் கூடவே இருக்கிறான் என்று.

பலருக்கும் பல வகைகளிலும் அநியாயம் செய்தவர்களை நான் கூட நினைத்ததுண்டு என்னே மனிதர்கள் இவர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைப்பதும், எரிகிற வீட்டில் பிடுங்க நினைப்பதும் என்று. ஆனால் சில வருடங்கள் கடக்க, அவர்கள் செய்ததை அவர்களே அறுவடை செய்து கொள்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆண்டவன் சபையில் நீதி என்றும் தவறுவதில்லை.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
முன் காலத்தில் பெரும்பாலான மக்கள் பரந்த மனதுடனும் ,நேர்மை கொண்ட மனத்தினராக இருந்துள்ளார்கள்
அனால் இப்போதும் இருக்கின்றனர் சொற்பமாக ..கலி காலம் .
கதை அருமை

kamal said...

Speachless

Gajapathi Sha said...

Vanakkam ayya thangalin kathai arumaiyana karuthil kollavendiya visayangal eralam nantri vazhga valamudan

GANAMURUGU said...

Vanakkam Ayya, Dharmamum Neethiyum eppothum vellum. Nallavargal endrum nandragavey valvargal. G.Murugan

kmr.krishnan said...

என்னுடைய உறவினர் ஒருவர் மிகவும் ஏழ்மை நிலைய அடைந்தார். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில், கடைசியாக மனைவியின் தாலியை ஒரு நகரத்தார் கடையில் அடமானமாக வைத்தார்.அதன் பின்னர்தான் எங்களுக்கு அவருடைய நிலை தெரிய வந்தது. உடனே நேரில் சென்று அவரை மீட்டு எடுக்க எங்களால் ஆனதைச் செய்தோம்.அதன் ஒரு படியாக அந்தத் தாலியை அடகில் இருந்து மீட்கச் சென்றோம்.அப்போது அந்த செட்டியாரிடம் பேசிக்கொண்டு இருந்தோம்.செட்டியார் கூறினார்: " தாலியை அடகு பிடிப்பதை நாங்கள் செய்வதே இல்லை.அட்மானமே வேண்டாம். பணத்தை வாங்கிக்கொள்ளும் என்று கூறியும் இவர் கேட்கவில்லை. தாலியை மேசை மீது வைத்து விட்டு மள மளவென்று இறங்கிச் சென்று விட்டார்.அதனால் வேறு வழி இன்றி எடுத்து பத்திரப் படுத்தினேன்.ஆகவே வட்டி ஒன்றும் வேண்டாம் .அசல் மட்டும் கொடுத்தால் போதுமானது."

லேவா தேவியிலும் ஒரு தர்மத்தை/ நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர்கள் நகரத்தார்கள். நல்ல கதையைப் படிக்கத் தந்ததற்கு நன்றி ஐயா!

மற்றவர்கள் கதைசொல்வதாக் இருந்தால், அருணாசலம் செட்டியாருக்கு ஏதாவது கெட்டது சூழ்ந்ததாகக் காட்டி இருப்பார்கள். நீங்கள் எதையுமே நேர்மறையாகக் கூறுவதால் அழகாக முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Arul said...

What a story!!! Short and moral story are the Twenty20 ground for our Guru...Summa solli adippaar...

Santhanam Raman said...

Vanakkam Ayya!
Very good moral lesson to all have to follow..

Thanks for sharing

adithan said...

அய்யா வணக்கம், உங்கள் புதிய மாணவன் நான். கதை நாயகர்களை கண் முன் உலவ விட்டீர்கள் ( இரண்டு நாட்களாக அவர்களுக்கு விதம் விதமாக அலங்கரித்து, அதாவது நெற்றியில் விபூதி, சந்தனம் கழுத்திலே உத்திராட்சம் என்று உடை, நடை, பாவம் என்று ஒவ்வொன்றாக மாற்றி போட்டு அனுபவித்து வருகிறேன்). நன்றி

selvam velusamy said...

வணக்கம் குரு,

கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. தர்மத்தை போதிக்கும் விதமான நல்ல கதை.

நன்றி
செல்வம்

Subbiah Veerappan said...

/////Blogger Gopal Krishnan said...
உண்மை கசக்கும் அதன் பலனோ இனிக்கும்....அன்புடன் ரேடியோ கோகி..
"...துணையின்றி வெண் புறா தனியாக வந்ததே
வன வேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்து தான்
அதை மீட்டுச் சென்றதே
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே
ஒற்றுமையாய் வாழ்வதாலே
உண்டு நன்மையே
வேற்றுமையை வளர்ப்பதனாலே
விளையும் தீமையே...."/////

உங்களின் நல்லதொரு பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///////Blogger வரதராஜன் said...
குரு வந்தனம்.
ஐயா, கதையைப் படித்து முடிக்குமுன் கடைசி வரிகள், உண்மையில் எங்கள் கண்களிலும் நீர் துளித்தன.உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நல்ல சிறுகதை.//////

உங்களின் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger A. Anitha said...
நல்லதே நினைப்போம்...
நல்லதே நடக்கும்...
இடர்கள் அனைத்தும்
இறைவன் நடத்தும் தேர்வுகளே...
முடங்கிடாமல் முயற்சித்தால்
முந்தி வரும் வெற்றிகளே...
நேர்மை அதனை ஊன்றுகோலாய்
நீ கொண்டால்
சோதனை வேதனை வந்தாலும்
நிச்சயம் ஒருநாள்
நிலைமாறும்...
நீதி தேவன் அருளாலே
நிச்சயப் பரிசுகள் உனக்குண்டு...//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

//////Blogger ravichandran said...
Respected Sir,
Veracity will protect always... Great thought... Nice story...
With kind regards,
Ravi-avn//////

உண்மைக்கு எப்போதுமே ஒரு வெற்றி உண்டு. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!

Subbiah Veerappan said...

///////Blogger Mrs Anpalagan N said...
உண்மை ஐயா. படிக்கும்போது பலதும் நினைவுக்கு வந்து மனது கனக்கிறது.
இந்த உண்மைகளை பலரும் நம்புவதில்லை. (இறைவனை) நம்பினார் கெடுவதில்லை.
நல்லவரை சோதனைகள் சூழும், ஆனாலும் இறைவன் அவர்கள் அருகிலேயே இருந்து அவர்கள்
விழுந்து விடாமல் தாங்கிக் கொள்வதை பார்ப்பவர் பலரும் அறிந்திரார்.
அல்லாதவர் ஆகா, ஓகோ என்று வாழ்வார்கள். ஆனால் ஒரே புயலில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவர்.
மகான்கள் எல்லாம் கெட்ட உறவுகளையும், நட்புகளையும், சுற்றத்தையும் நம்பி வாழ்ந்தவர்களில்லை. அந்த இறைவனை மட்டுமே நம்பி, எல்லாவற்றையும் அவன் மேல் போட்டு விட்டு, நடப்பதை ஏற்று வாழ்ந்தவர்கள். அதனால் தான் அவர்கள் வீழ்ந்ததில்லை. அவர்களுக்கும் உள்ளுணர்வில் தெரியும், இறைவன் தம்முடன் தான் கூடவே இருக்கிறான் என்று.
பலருக்கும் பல வகைகளிலும் அநியாயம் செய்தவர்களை நான் கூட நினைத்ததுண்டு என்னே மனிதர்கள் இவர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைப்பதும், எரிகிற வீட்டில் பிடுங்க நினைப்பதும் என்று. ஆனால் சில வருடங்கள் கடக்க, அவர்கள் செய்ததை அவர்களே அறுவடை செய்து கொள்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக உள்ளது. ஆண்டவன் சபையில் நீதி என்றும் தவறுவதில்லை.///////

உங்களின் கருத்துப் பகிர்விற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
முன் காலத்தில் பெரும்பாலான மக்கள் பரந்த மனதுடனும் ,நேர்மை கொண்ட மனத்தினராக இருந்துள்ளார்கள்
அனால் இப்போதும் இருக்கின்றனர் சொற்பமாக ..கலி காலம் .
கதை அருமை//////

உங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

/////Blogger kamal said...
Speachless/////

அடடே! உங்கள் இரசனை உணர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Gajapathi Sha said...
Vanakkam ayya thangalin kathai arumaiyana karuthil kollavendiya visayangal eralam nantri vazhga valamudan//////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே! பாராட்டுக்கள் ஊக்க மருந்தாகும் (டானிக்)

Subbiah Veerappan said...

/////Blogger GANAMURUGU said...
Vanakkam Ayya, Dharmamum Neethiyum eppothum vellum. Nallavargal endrum nandragavey valvargal. G.Murugan//////

உண்மைதான் நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///////Blogger kmr.krishnan said...
என்னுடைய உறவினர் ஒருவர் மிகவும் ஏழ்மை நிலைய அடைந்தார். எல்லாம் கைவிட்டுப்போன நிலையில், கடைசியாக மனைவியின் தாலியை ஒரு நகரத்தார் கடையில் அடமானமாக வைத்தார்.அதன் பின்னர்தான் எங்களுக்கு அவருடைய நிலை தெரிய வந்தது. உடனே நேரில் சென்று அவரை மீட்டு எடுக்க எங்களால் ஆனதைச் செய்தோம்.அதன் ஒரு படியாக அந்தத் தாலியை அடகில் இருந்து மீட்கச் சென்றோம்.அப்போது அந்த செட்டியாரிடம் பேசிக்கொண்டு இருந்தோம்.செட்டியார் கூறினார்: " தாலியை அடகு பிடிப்பதை நாங்கள் செய்வதே இல்லை.அட்மானமே வேண்டாம். பணத்தை வாங்கிக்கொள்ளும் என்று கூறியும் இவர் கேட்கவில்லை. தாலியை மேசை மீது வைத்து விட்டு மள மளவென்று இறங்கிச் சென்று விட்டார்.அதனால் வேறு வழி இன்றி எடுத்து பத்திரப் படுத்தினேன்.ஆகவே வட்டி ஒன்றும் வேண்டாம் .அசல் மட்டும் கொடுத்தால் போதுமானது."
லேவா தேவியிலும் ஒரு தர்மத்தை/ நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர்கள் நகரத்தார்கள். நல்ல கதையைப் படிக்கத் தந்ததற்கு நன்றி ஐயா!
மற்றவர்கள் கதைசொல்வதாக் இருந்தால், அருணாசலம் செட்டியாருக்கு ஏதாவது கெட்டது சூழ்ந்ததாகக் காட்டி இருப்பார்கள். நீங்கள் எதையுமே நேர்மறையாகக் கூறுவதால் அழகாக முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்./////

எழுதுபவர்களுக்கு ஒரு தார்மீகக் கடமை உள்ளது. எதையும் எதிர்மறையாகச் சொல்லக்கூடாது. அதை நானும் கடைப்பிடிக்கிறேன். உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////////Blogger Arul said...
What a story!!! Short and moral story are the Twenty20 ground for our Guru...Summa solli adippaar...///////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Santhanam Raman said...
Vanakkam Ayya!
Very good moral lesson to all have to follow..
Thanks for sharing//////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger adithan said...
அய்யா வணக்கம், உங்கள் புதிய மாணவன் நான். கதை நாயகர்களை கண் முன் உலவ விட்டீர்கள் ( இரண்டு நாட்களாக அவர்களுக்கு விதம் விதமாக அலங்கரித்து, அதாவது நெற்றியில் விபூதி, சந்தனம் கழுத்திலே உத்திராட்சம் என்று உடை, நடை, பாவம் என்று ஒவ்வொன்றாக மாற்றி போட்டு அனுபவித்து வருகிறேன்). நன்றி///////

அப்படியா! நல்லது. உங்கள் கற்பனை வளம் வாழ்க!

Spalaniappan Palaniappan said...

"தர்மம் தலைமுறை காக்கும்" சிறப்பான சிறு கதை . சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்
சோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்

Subbiah Veerappan said...

////Blogger Spalaniappan Palaniappan said...
"தர்மம் தலைமுறை காக்கும்" சிறப்பான சிறு கதை . சொல்லிய விதம் அருமை. வாழ்த்துக்கள்
சோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பழநியப்பன்!

arul said...

very important lesson for all

Subbiah Veerappan said...

////Blogger arul said...
very important lesson for all////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அருள்!