மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.2.16

சனீஷ்வரனின் போர்டிங் பாஸ்!


சனீஷ்வரனின் போர்டிங் பாஸ்! 

(பயணத்தின் போது விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டு)

எனது உடல் நலம் பற்றி பல மாணவக் கண்மணிகள் அன்புடன் கேட்கின்றார்கள். பலர் மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவருக்கும் விளக்கம் சொல்லும் விதமாக இந்தப் பதிவு.

உடல் நலம் அவ்வப்போது பாதிப்பிற்கு உள்ளாகிறது. புதன் திசையில்
புத்தி நாதன் கேது  அந்தத் திருப்பணியைத் துவக்கி வைத்தான். அவன்
துவக்கி வைத்து. ஆண்டுகள் மூன்றாகி விட்டன. இன்னும் முடிந்த
பாடாக இல்லை. பழைய தியாகராஜ பாகவதர் படம் போல ஏராளமான
பாடல்களுடன் நீண்டு கொண்டே போகின்றது..நீரழிவு நோய்.
டயாபெட்டிக்ஸ், சர்க்கரை வியாதி. அதுதான் பிள்ளையார் சுழியாக அமைந்தது.அது  மற்ற நோய்களையும் கூட்டிக்கொண்டு வருகிறது
கடந்த 3 மாதங்களாக அந்தப் பிரச்சினை சற்று அதிகரித்துள்ளது. அதன் பாதிப்பில்தான் கிட்னி ஸ்டோன். அறுவை சிகிச்சை. ஐந்து நாட்கள் மருத்துவமனை வாசம் இத்யாதிகள்.

பழநியப்பன் அருளாலும், மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளாலும் அவ்வப்போது சரியாகிக் கொண்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு  மாத செலவாக 500 ரூபாய்களுக்கு
மாத்திரைகளை வாங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்போது அதீத முன்னேற்றம். இப்போது மாதம் 4,000  ரூபாய்களுக்கு மருந்துகளை
வாங்கிக் கொண்டிருக்கிறேன். காலையில் பத்து மாத்திரைகள். இரவில் படுக்கப் போகும் முன்பு 8 மாத்திரைகள்.

நான் மகர ராசிக்காரன். குரு பகவான் 8ல் இருந்து கொண்டு அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு விடுகிறார். வரும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு
அவர் கண்னைத் திறப்பார். நிலைமை சீராகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்.

அடியவனுக்கு நண்பர்களாகிவிட்ட மருந்துகள்:
1. Glycomet 1 gram
2. Hupride (Bepride 4 mg)
3. Zita Plus - 20mg
4. Hopace 5 mg (excellent medicine for BP)
5. Amtas - 5 mg
6. Aquazide - 2.5 mg
7. Zincovit - Syrub
8  Niftran 100 mg capsules
9. Fosirol Trometarol powder 8 gm
10. Becasules - Vitamin

ஒரு அன்பர் நீங்கள் செய்யும் ஜோதிட சேவைக்கு நலம் பெற்று இன்னும் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று  சொல்லியுள்ளார். அப்படி
ஆசைப்படுவது பேராசை ஆகிவிடாதா? எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை. ஆயுள்காரகன் சனீஷ்வரன் என்றைக்கு, எக்கணத்தில் போர்டிங்
பாஸ் கொடுக்கிறாரோ - அக்கணமே புறப்பட்டுச் செல்ல வேண்டியதுதான்

அதுவரை பழநிஅப்பன் துணை இருப்பான்
---------------------------------------------------------
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
- கவியரசர் கண்ணதாசன் (படம்: அபூர்வ ராகங்கள்)
---------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
----------------------------
அடிக்குறிப்பு:
இந்த மாதம் முதல் தேதியில் இருந்து இன்றுவரை சுமார் 11 நாட்களில்
வந்த பின்னூட்டங்கள் அனைத்திற்கும் இன்று பதில் எழுதியுள்ளேன்
படித்துப்பாருங்கள். தாமதத்திற்குக் காரணம் உடல் நலமின்மை!
ஆகவே பொறுதருள வேண்டுகிறேன்.
அன்புடன்
வாத்தியார்
12-2-2016
அதிகாலை 3.56 மணி
-------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

65 comments:

 1. அய்யா வணக்கம்,

  தங்கள் நலம் அறிய ஆவலாக இருந்தேன், படித்த பின் புரிந்தது. தயவு செய்து முடிந்தவரை உங்கள் உடல் மீதும் கவனம் செலுத்தவும்,
  விடியற் காலை உங்கள் சொந்த பணி செய்ய அதன் பின் மற்றவேலைகள்.

  நன்றி.
  அன்புடன் சா.குமணன்

  ReplyDelete
 2. Dear Sir, Get well soon.
  Our prayers are always there with you along with God's grace.
  Priyavardini

  ReplyDelete
 3. Appan Murugan thunai irripaar.
  Ithuvum sariyagum


  Thanks
  Rathinavel C

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா
  உங்கள் உடல் நிலை நன்கு குனமடைய பழனி முருகன் அருள் புரியவேண்டும்.

  ReplyDelete
 5. வணக்கம் குரு,

  பழனியப்பன் அருளால் சீக்கிரமாக குணமாவீர்கள். உங்களுக்கு 2 மற்றும் 11குடையவன் தசாவில் உங்கள் லக்னதிற்க்கு கெட்டவனான சுக்கிரன் புக்தி. சூரிய புக்தியில் அனைத்தும் சரியாகி நீங்கள் முன்பு போல இருப்பீர்கள் பாருங்கள்.

  நன்றி
  செல்வம்

  ReplyDelete
 6. எங்கள் அன்பிற்குகந்த ஐயா,
  இன்றைய பதிவு கண்களைக் குளமாக்கியது. நெஞ்சை கனலாக்கியது.இறைவன் மீது பற்றை அதிகமாக்கியது.தங்கள் வழக்கமான வேடிக்கைப் பேச்சு குறைந்து நோயின் தாக்கம் தெரிகிறது. ஜோதிட வகுப்பையும் இறைப்பணியாகச் செய்யும் தாங்கள் முருகப் பெருமானருளால் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete
 7. Vanakkam ayya thangal pirar nalam vendy sevai seikirergal agavey sani bagavan niyathin neethikathi thangalukku nal arul purivan vazhga valamudan

  ReplyDelete
 8. பலருக்கும் வழிகாட்டியாய் இருந்த தங்களுக்கு கடவுளின் இச் சோதனை மிக அதிகமே.எல்லாம் விதிப்படி எனும் போது நாம் செய்வதற்க்கொன்றுமில்லை எனும் தங்கள் கூற்றுப்படி வருவதை அனுபவித்துதான் ஆகவேண்டுமென்பதால் இச் சோதனையிலிருந்து மிக மிக விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல எம்பெருமான் நாராயணனை மனமாற வேண்டுகிறேன்.

  ReplyDelete
 9. Respected Sir,

  You should get well soon. God will give you Standing power. We will pray Sri Dhanvanthiri Bagavan for your quick recovery. This generation needs your service for long time.

  Thanks,
  Sathishkumar GS

  ReplyDelete
 10. Dear Sir,

  Please take of your health.

  --
  Damodar

  ReplyDelete
 11. குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்களின் உடல் நலமின்மை குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த சக்கரை வியாதி மற்ற வியாதிகளுக்கெல்லாம் நண்பன் போல!. (மாத்திரைகளின் பட்டியல் கொடுத்திருப்பது) தங்களின் மனதின் நிலை, அதன் வேதனைகளை அனுபவிக்கிறிர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு தெரிந்து சக்கரை விரைவில் குறைய தினமும் சிறிதளவு வேப்பிலை கொழுந்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சரியாகும்.இது என் அனுபவத்தில் கண்ட உண்மை, என் தந்தைக்கு தினமும் பறித்து கொடுப்பேன், அந்த சமயத்தில் மருத்தவரே ஆச்சரியமாய் கேட்டதாக சொன்னார்.
  தேவையான அளவு ஒய்வு எடுத்து கொள்ள வேண்டுகிறேன். தங்களிடம் இருந்து பெறவேண்டிய அனுபவம், செய்திகள் எவ்வளவோ இருக்கிறது. விரைவில் உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  நேசமுடன்
  வெங்கடேஷ்.சின்னசாமி.

  ReplyDelete
 12. Father dealing with same situation of surgeries & diabetes, with most tablets listed for last 20 years with insulin injection. Now he is on two three tabs and injections.

  While you cannot completely cure or reverse immediately, there are few things you have to do to keep you in track and make kethu salute for the human will and step aside. May be by the timer you do, Jupiter will help you:) but seriously for all people reading this should read

  1. Basics of human physiology, don't depend on doctors to say. Most times we get all symptoms but ignorance is our biggest enemy.
  2. Man made diabetes - please watch below samples
  https://youtu.be/da1vvigy5tQ
  https://youtu.be/vut4jxorpV0

  3. Please use allopathic medicines as short term for 3 months, then all in your hands to knock many listed tablets (Becasules and zinc tablets, etc). Consult a siddha and homoepathy, you don't need to intake but at least consult as there is no side effects.

  4. There is one plant which we lost on moving our rental house which drastically reduced blood insulin levels. I forgot the name, I will check with my uncle if I can get name.

  After spending years of savings, time and watching best hospitals in Tamil nadu doing mistreatments to loved ones, I realized most diseases are not real diseases and most treatments are not real treatments. Most things we hear are not truth.

  Knowledge is true protector. Food is cure and watch what you eat. Simple changes on life style will make huge differences.

  Make better yourself and we will do our prayers for faster healing.

  ReplyDelete
 13. அன்பின் ஐயா.. தாங்கள் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 14. Dear Sir,
  Our prayers are always there with you. Along with the grace of GOD we are sure you will get well soon .We expect you with 100% vigour. regards kittuswamy

  ReplyDelete
 15. Me too prayer for u sure u will relief quicklt

  ReplyDelete
 16. உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...

  ReplyDelete
 17. மருந்துகளை நண்பர்களாக்கி கொள்வது சரியா
  மருத்துவன் வைத்தியநாதனை துணையாக கொள்ள வேண்டாமா?

  நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளில் இரண்டு
  நிச்சயம் தவிர்க்க வேண்டியது - அது

  பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
  பயம் கொள்ள வேண்டாம்...

  முருகன் அருள்
  முன் நிற்கும்

  தாங்கள் சென்னை வருவதாக சொன்னீர்கள்
  தர விரும்பியதை எடுத்து வைத்து இருந்தேன் - இப்போ

  அனுப்பி உள்ளேன் அதனை
  அன்பு கூர்ந்து பெற்று கொள்ளவும்.

  அது ஆண்டவரின் பிரசாதம்... பிரார்த்தனைகள் ....
  அத்துடன் வழக்கமானவைகள் ...

  விசு அய்யர்

  ReplyDelete
 18. சிறுதானியங்களான குதிரைவாலி திணை சாமை போன்றவற்றில் சாதம் வடித்து தினம் சாப்பிட்டு வர உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். என்னுடைய மேலதிகாரி ஒருவர் இம்முறையை பின்பற்றி மருந்துகள் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்

  ReplyDelete
 19. Thangal Nalam pera ellam valla en Seshathri swamigal parthukolvar. Ungal Dr Murugan irukka kavalai etharkku ?

  ReplyDelete
 20. getwell soon- chennimalai muruga will be around you

  ReplyDelete
 21. ஜோதிட குருவே நீவீர் நீடூழி வாழ்க!!

  எங்கள அனவரின் ஏகமனப்பிரார்த்தனை எல்லாம் வல்ல தண்டாயுதனின் ஞான ஒளியைத் தூண்டி அதன்அருட் பிரகாசத்தால் தங்களின் தற்கால உடல் உபாதைகள் காணாமல் போகட்டும்:சீரான உடல் நிலை சீக்கிரமே வந்திடட்டும்:அவன் கூரான ஆயுதத்தால் தங்கள்பாலுள்ள கொடுந்நோயை குத்திக் களையட்டும்:வாளா இருப்பனல்லன் வேலவன்; கோள் வினையால் குன்றிக் கிடக்கும் எங்கள் குணக் குனறாம் சுப்பு ஐயாவின் ஊழ் வினையின் வலிவைத் திருத்தி, புகழுடனே வாழப் புரிந்திடுவான்
  அருள்:மாணவராம் எங்கனைவரின் மனத்துயரைப் போக்கிடுவான், இது உறுதி!
  முருகா மால்மருகா அருள் புரிக!!

  ReplyDelete
 22. ஐயா வணக்கம்,

  ஒருமுறை இது பற்றி கேட்டேன். அதன் பின்னர், நீங்களாக குறிப்பிடாமல் உடல் நலம் பற்றி விசாரிப்பது சரியில்லை என்று விட்டு விட்டேன். பொது வாழ்வில் இல்லாதவர்கள் தம் விருப்பம் போல் ஒதுங்கி இருந்து கொள்ளலாம். பலருடனும் தினமும் தொடர்பு கொள்பவர்களுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. அதனால், அடிக்கடி கேட்டு அசௌகரியப் படுத்துதல் ஆகாது என்று இருந்தேன். ஆனாலும், உடல்நலத்தின் நிலையை சரியாக உணராது அதிகம் வருத்திக்கொண்டு இங்கே வந்து போகிறீர்களோ என்று நினைத்ததுண்டு. காரணம் இது ஆண்களின் பொது குணம். அதனால் தான் ஆண்களின் ஆயுளும் பொதுவாக குறைவு. பெண்கள், குழந்தைகளை பார்க்க வேண்டும், என்று எந்த சிரமத்திலும், ஓரளவு தங்கள் உடல்நிலை மோசமாக போகாத அளவுக்காவது தங்களை கவனித்துக் கொள்வார்கள்.

  அட்டமத்து வியாழனின் பாதிப்பை நானும் நன்றாக உணர்ந்திருக்கிறேன். (வியாழன் எனக்கு நன்மை செய்பவராக இருப்பினும்!)

  எது எப்படி இருப்பினும், பல சிரமங்களை தொடர் பிரார்த்தனை குறைத்து வந்துள்ளது. எனக்கு இறை நம்பிக்கை அதிகமாயினும், ஒரு சில வருடங்கள், வாழ்க்கையின் அதிக சுமை காரணமாக, பிரார்த்தனைகளை குறைத்ததன் விளைவை நன்றாகவே உணர்ந்து விட்டேன். இப்போது எது செய்யாவிடினும், இறைவனை தொடர்ந்து வேண்டுவதை விடுவதில்லை. அதன் பலனை மீண்டும் அனுபவிக்க கொடுத்து வைத்துள்ளேன்.

  எனவே தயவு செய்து, எங்களுக்காக இல்லாவிடினும், உங்களுக்காக, உங்கள் குடும்பத்திற்காக, பழனி ஆண்டவரை நன்றாக மனமுருகி, தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் அவனருள் கிடைக்கும்.

  நம்பிக்கை மட்டுமே போதுவதில்லை. பிரார்த்தனையும் வேண்டும். (இறைவனுக்கும் வேலைகள் அதிகம், கூப்பிட்டால் தான், நமக்காக வருவார்.)
  வாழ்க வளமுடன்.
  உங்கள் உண்மையான மாணவி,

  ReplyDelete
 23. ஹலோ சார்,

  உங்கள் ஆரோக்கியத்தை கவனிச்சுக்குங்க !

  Watch Healer Baskar videos.

  Thanks
  Satya

  ReplyDelete
 24. sir,

  my prayer is with you and wish speedy recovery from illness.

  ReplyDelete
 25. //////Blogger Kumanan Samidurai said...
  அய்யா வணக்கம்,
  தங்கள் நலம் அறிய ஆவலாக இருந்தேன், படித்த பின் புரிந்தது. தயவு செய்து முடிந்தவரை உங்கள் உடல் மீதும் கவனம் செலுத்தவும்,
  விடியற் காலை உங்கள் சொந்த பணி செய்ய அதன் பின் மற்றவேலைகள்.
  நன்றி.
  அன்புடன் சா.குமணன்/////

  நல்லது. உங்களின் பரிந்துரைக்கு நன்றி குமணன்!

  ReplyDelete
 26. /////Blogger priya vardini said...
  Dear Sir, Get well soon.
  Our prayers are always there with you along with God's grace.
  Priyavardini/////

  நல்லது. உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 27. /////Blogger Rathinavel.C said...
  Appan Murugan thunai irripaar.
  Ithuvum sariyagum
  Thanks
  Rathinavel C//////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரத்தினவேல்!

  ReplyDelete
 28. /////Blogger siva kumar said...
  வணக்கம் ஐயா
  உங்கள் உடல் நிலை நன்கு குணமடைய பழனி முருகன் அருள் புரியவேண்டும்./////

  நல்லது. உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சிவகுமார்!

  ReplyDelete
 29. /////Blogger selvam velusamy said...
  வணக்கம் குரு,
  பழனியப்பன் அருளால் சீக்கிரமாக குணமாவீர்கள். உங்களுக்கு 2 மற்றும் 11குடையவன் தசாவில் உங்கள் லக்னதிற்கு கெட்டவனான சுக்கிரன் புக்தி. சூரிய புக்தியில் அனைத்தும் சரியாகி நீங்கள் முன்பு போல இருப்பீர்கள் பாருங்கள்.
  நன்றி
  செல்வம்//////

  உங்களின் கணிப்பு உண்மையாக மலரட்டும். நன்றி செல்வம்!

  ReplyDelete
 30. /////Blogger வரதராஜன் said...
  எங்கள் அன்பிற்குகந்த ஐயா,
  இன்றைய பதிவு கண்களைக் குளமாக்கியது. நெஞ்சை கனலாக்கியது.இறைவன் மீது பற்றை அதிகமாக்கியது.தங்கள் வழக்கமான வேடிக்கைப் பேச்சு குறைந்து நோயின் தாக்கம் தெரிகிறது. ஜோதிட வகுப்பையும் இறைப்பணியாகச் செய்யும் தாங்கள் முருகப் பெருமானருளால் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்திக்கின்றேன்.////

  நல்லது. உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 31. ||Om Gurave Namah||

  Dear Sir,

  My prayers to Krshna will cure you soon. Get well soon.

  Kind Regards,
  Arulnithi

  ReplyDelete
 32. ////Blogger Gajapathi Sha said...
  Vanakkam ayya thangal pirar nalam vendy sevai seikirergal agavey sani bagavan niyathin neethikathi thangalukku nal arul purivan vazhga valamudan/////

  நல்லது. நன்றி கஜபதி அவர்களே!

  ReplyDelete
 33. /////Blogger பாலாஜி கண்ணன் said...
  பலருக்கும் வழிகாட்டியாய் இருந்த தங்களுக்கு கடவுளின் இச் சோதனை மிக அதிகமே.எல்லாம் விதிப்படி எனும் போது நாம் செய்வதற்க்கொன்றுமில்லை எனும் தங்கள் கூற்றுப்படி வருவதை அனுபவித்துதான் ஆகவேண்டுமென்பதால் இச் சோதனையிலிருந்து மிக மிக விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல எம்பெருமான் நாராயணனை மனமாற வேண்டுகிறேன்./////

  நல்லது. உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 34. ////Blogger KJ said...
  Respected Sir,
  You should get well soon. God will give you Standing power. We will pray Sri Dhanvanthiri Bagavan for your quick recovery. This generation needs your service for long time.
  Thanks,
  Sathishkumar GS/////

  நல்லது. உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 35. /////Blogger karthi said...
  sir get well soon//////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 36. Respected Sir,

  You will get well soon. God will give you Standing power.

  kindly try to do the following.

  அஸ்மிந் பராத்மந் நநு பாத்ம்கல்பே
  த்வமித்தம் உத்தாபித பத்ம்யோநி
  அநந்த பூமா மம ரோகராஸிம்
  நிருந்ததி வாதாலய வாஸ விஸ்ஷ்னோ//

  ரோக நிவாரண ஸ்தொதிரம்//( ஸ்ரீமத் நாரண்யத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்லோகம்.)

  உத்தர்னியில் சிரிது நீர் வைத்துகொண்டு 24 முறை ஸ்லொகத்தை கூறி உட்கொள்ளவும், தினமும்

  உடல் உபாதைகள் குறையும். வேண்டுவது நம்பிக்கை ஒன்று மட்டுமெ.

  faithfully
  Ezhil

  ReplyDelete
 37. ஐயா, வணக்கம்.மனம் தளற வேண்டாம். ஹோமியோபதி மருத்துவ முறையில் எல்லாவித உடல் பிரச்சனைகளுக்கும் ஔடதங்கள் உள்ளன.மின்னஞ்சலில் என்னுடைய பிரார்தனைகளுடன் சில பதிவுகளை அனுப்பியுள்ளேன் .ஆலோசிக்கவும்.

  ReplyDelete
 38. /////Blogger Damodar said...
  Dear Sir,
  Please take of your health.
  Damodar////

  உங்கள் பரிந்துரைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 39. /////Blogger C.P. Venkat said...
  குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்களின் உடல் நலமின்மை குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த சக்கரை வியாதி மற்ற

  வியாதிகளுக்கெல்லாம் நண்பன் போல!. (மாத்திரைகளின் பட்டியல் கொடுத்திருப்பது) தங்களின் மனதின் நிலை, அதன் வேதனைகளை

  அனுபவிக்கிறிர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு தெரிந்து சக்கரை விரைவில் குறைய தினமும் சிறிதளவு வேப்பிலை

  கொழுந்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சரியாகும்.இது என் அனுபவத்தில் கண்ட உண்மை, என் தந்தைக்கு தினமும் பறித்து

  கொடுப்பேன், அந்த சமயத்தில் மருத்தவரே ஆச்சரியமாய் கேட்டதாக சொன்னார்.
  தேவையான அளவு ஒய்வு எடுத்து கொள்ள வேண்டுகிறேன். தங்களிடம் இருந்து பெறவேண்டிய அனுபவம், செய்திகள் எவ்வளவோ இருக்கிறது.

  விரைவில் உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
  நேசமுடன்
  வெங்கடேஷ்.சின்னசாமி./////

  வேப்பிலையைக் கவனத்தில் கொள்கிறேன். நன்றி!

  ReplyDelete
 40. /////Blogger selvaspk said...
  Father dealing with same situation of surgeries & diabetes, with most tablets listed for last 20 years with insulin injection. Now he is on two three

  tabs and injections.
  While you cannot completely cure or reverse immediately, there are few things you have to do to keep you in track and make kethu salute for the

  human will and step aside. May be by the timer you do, Jupiter will help you:) but seriously for all people reading this should read
  1. Basics of human physiology, don't depend on doctors to say. Most times we get all symptoms but ignorance is our biggest enemy.
  2. Man made diabetes - please watch below samples
  https://youtu.be/da1vvigy5tQ
  https://youtu.be/vut4jxorpV0
  3. Please use allopathic medicines as short term for 3 months, then all in your hands to knock many listed tablets (Becasules and zinc tablets,

  etc). Consult a siddha and homoepathy, you don't need to intake but at least consult as there is no side effects.
  4. There is one plant which we lost on moving our rental house which drastically reduced blood insulin levels. I forgot the name, I will check with

  my uncle if I can get name.
  After spending years of savings, time and watching best hospitals in Tamil nadu doing mistreatments to loved ones, I realized most diseases are

  not real diseases and most treatments are not real treatments. Most things we hear are not truth.
  Knowledge is true protector. Food is cure and watch what you eat. Simple changes on life style will make huge differences.
  Make better yourself and we will do our prayers for faster healing./////

  உங்களின் மேலான கருத்துக்களுக்கும் பரிந்துரைகளுக்கு நம்றி நண்பரே

  ReplyDelete
 41. //////Blogger துரை செல்வராஜூ said...
  அன்பின் ஐயா.. தாங்கள் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக் கொள்கின்றேன்./////

  உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 42. /////Blogger kittuswamy palaniappan said...
  Dear Sir,
  Our prayers are always there with you. Along with the grace of GOD we are sure you will get well soon .We expect you with 100% vigour. regards

  kittuswamy/////

  உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 43. ////Blogger Subathra Suba said...
  Me too prayer for u sure u will relief quicklt////

  உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 44. ////Blogger பரிவை சே.குமார் said...
  உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா..//////.

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 45. /////Blogger வேப்பிலை said...
  மருந்துகளை நண்பர்களாக்கி கொள்வது சரியா
  மருத்துவன் வைத்தியநாதனை துணையாக கொள்ள வேண்டாமா?
  நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளில் இரண்டு
  நிச்சயம் தவிர்க்க வேண்டியது - அது
  பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
  பயம் கொள்ள வேண்டாம்...
  முருகன் அருள்
  முன் நிற்கும்
  தாங்கள் சென்னை வருவதாக சொன்னீர்கள்
  தர விரும்பியதை எடுத்து வைத்து இருந்தேன் - இப்போ
  அனுப்பி உள்ளேன் அதனை
  அன்பு கூர்ந்து பெற்று கொள்ளவும்.
  அது ஆண்டவரின் பிரசாதம்... பிரார்த்தனைகள் ....
  அத்துடன் வழக்கமானவைகள் ...
  விசு அய்யர்///////

  உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும், ஆண்டவனின் பரசாதத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 46. /////Blogger A. Anitha said...
  சிறுதானியங்களான குதிரைவாலி திணை சாமை போன்றவற்றில் சாதம் வடித்து தினம் சாப்பிட்டு வர உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

  உண்டாகும். என்னுடைய மேலதிகாரி ஒருவர் இம்முறையை பின்பற்றி மருந்துகள் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்/////

  நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். முயற்சி செய்கிறேன். நன்றி சகோதரி!

  ReplyDelete
 47. /////Blogger k kumaresan said...
  Thangal Nalam pera ellam valla en Seshathri swamigal parthukolvar. Ungal Dr Murugan irukka kavalai etharkku ?////

  எப்பொதும் கவலைகளை நான் அண்டவிடுவதில்லை. முருகன் இருக்கிறார். நன்றி நண்பரே!

  ReplyDelete
 48. ////Blogger padman said...
  getwell soon- chennimalai muruga will be around /////

  உண்மைதான் நன்றி நண்பரே!

  ReplyDelete
 49. ////Blogger வரதராஜன் said...
  ஜோதிட குருவே நீவீர் நீடூழி வாழ்க!!
  எங்கள அனவரின் ஏகமனப்பிரார்த்தனை எல்லாம் வல்ல தண்டாயுதனின் ஞான ஒளியைத் தூண்டி அதன்அருட் பிரகாசத்தால் தங்களின் தற்கால
  உடல் உபாதைகள் காணாமல் போகட்டும்:சீரான உடல் நிலை சீக்கிரமே வந்திடட்டும்:அவன் கூரான ஆயுதத்தால் தங்கள்பாலுள்ள கொடுந்நோயை
  குத்திக் களையட்டும்:வாளா இருப்பனல்லன் வேலவன்; கோள் வினையால் குன்றிக் கிடக்கும் எங்கள் குணக் குனறாம் சுப்பு ஐயாவின் ஊழ் வினையின்
  வலிவைத் திருத்தி, புகழுடனே வாழப் புரிந்திடுவான்
  அருள்:மாணவராம் எங்கனைவரின் மனத்துயரைப் போக்கிடுவான், இது உறுதி!
  முருகா மால்மருகா அருள் புரிக!!/////

  உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 50. ////Blogger Mrs Anpalagan N said...
  ஐயா வணக்கம்,
  ஒருமுறை இது பற்றி கேட்டேன். அதன் பின்னர், நீங்களாக குறிப்பிடாமல் உடல் நலம் பற்றி விசாரிப்பது சரியில்லை என்று விட்டு விட்டேன். பொது

  வாழ்வில் இல்லாதவர்கள் தம் விருப்பம் போல் ஒதுங்கி இருந்து கொள்ளலாம். பலருடனும் தினமும் தொடர்பு கொள்பவர்களுக்கு அந்த சௌகரியம்

  இருப்பதில்லை. அதனால், அடிக்கடி கேட்டு அசௌகரியப் படுத்துதல் ஆகாது என்று இருந்தேன். ஆனாலும், உடல்நலத்தின் நிலையை சரியாக

  உணராது அதிகம் வருத்திக்கொண்டு இங்கே வந்து போகிறீர்களோ என்று நினைத்ததுண்டு. காரணம் இது ஆண்களின் பொது குணம். அதனால் தான்

  ஆண்களின் ஆயுளும் பொதுவாக குறைவு. பெண்கள், குழந்தைகளை பார்க்க வேண்டும், என்று எந்த சிரமத்திலும், ஓரளவு தங்கள் உடல்நிலை

  மோசமாக போகாத அளவுக்காவது தங்களை கவனித்துக் கொள்வார்கள்.
  அட்டமத்து வியாழனின் பாதிப்பை நானும் நன்றாக உணர்ந்திருக்கிறேன். (வியாழன் எனக்கு நன்மை செய்பவராக இருப்பினும்!)
  எது எப்படி இருப்பினும், பல சிரமங்களை தொடர் பிரார்த்தனை குறைத்து வந்துள்ளது. எனக்கு இறை நம்பிக்கை அதிகமாயினும், ஒரு சில

  வருடங்கள், வாழ்க்கையின் அதிக சுமை காரணமாக, பிரார்த்தனைகளை குறைத்ததன் விளைவை நன்றாகவே உணர்ந்து விட்டேன். இப்போது எது

  செய்யாவிடினும், இறைவனை தொடர்ந்து வேண்டுவதை விடுவதில்லை. அதன் பலனை மீண்டும் அனுபவிக்க கொடுத்து வைத்துள்ளேன்.
  எனவே தயவு செய்து, எங்களுக்காக இல்லாவிடினும், உங்களுக்காக, உங்கள் குடும்பத்திற்காக, பழனி ஆண்டவரை நன்றாக மனமுருகி, தொடர்ந்து

  பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் அவனருள் கிடைக்கும்.
  நம்பிக்கை மட்டுமே போதுவதில்லை. பிரார்த்தனையும் வேண்டும். (இறைவனுக்கும் வேலைகள் அதிகம், கூப்பிட்டால் தான், நமக்காக வருவார்.)
  வாழ்க வளமுடன்.
  உங்கள் உண்மையான மாணவி,//////

  நல்லது. உங்களின் மேலான அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி சகோதரி!

  ReplyDelete
 51. ////Blogger உணர்ந்தவை! said...
  ஹலோ சார்,
  உங்கள் ஆரோக்கியத்தை கவனிச்சுக்குங்க !
  Watch Healer Baskar videos.
  Thanks
  Satya/////

  வீடியோ பற்றிய தகவலுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 52. ////Blogger seenivasan said...
  sir,
  my prayer is with you and wish speedy recovery from illness.////

  நல்லது. உங்களின் மேலான அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி நண்பரே!!

  ReplyDelete
 53. /////Blogger Arul said...
  ||Om Gurave Namah||
  Dear Sir,
  My prayers to Krshna will cure you soon. Get well soon.
  Kind Regards,
  Arulnithi/////

  உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி அருள் நிதி!

  ReplyDelete
 54. /////Blogger ezhil said...
  Respected Sir,
  You will get well soon. God will give you Standing power.
  kindly try to do the following.
  அஸ்மிந் பராத்மந் நநு பாத்ம்கல்பே
  த்வமித்தம் உத்தாபித பத்ம்யோநி
  அநந்த பூமா மம ரோகராஸிம்
  நிருந்ததி வாதாலய வாஸ விஸ்ஷ்னோ//
  ரோக நிவாரண ஸ்தொதிரம்//( ஸ்ரீமத் நாரண்யத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஸ்லோகம்.)
  உத்தர்னியில் சிரிது நீர் வைத்துகொண்டு 24 முறை ஸ்லோகத்தை கூறி உட்கொள்ளவும், தினமும்
  உடல் உபாதைகள் குறையும். வேண்டுவது நம்பிக்கை ஒன்று மட்டுமே.
  faithfully
  Ezhil//////

  நல்லது. நான் மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவன். நீங்கள் திரியப்படுத்திய ஸ்லோகத்திற்கு நன்றி!

  ReplyDelete
 55. /////Blogger adithan said...
  ஐயா, வணக்கம்.மனம் தளற வேண்டாம். ஹோமியோபதி மருத்துவ முறையில் எல்லாவித உடல் பிரச்சனைகளுக்கும் ஔடதங்கள்

  உள்ளன.மின்னஞ்சலில் என்னுடைய பிரார்தனைகளுடன் சில பதிவுகளை அனுப்பியுள்ளேன் .ஆலோசிக்கவும்./////

  உங்களின் அன்பிற்கும் மின்னஞ்சல்களுக்கும் நன்றி படித்துப்பார்க்கிறேன்!

  ReplyDelete
 56. chennimalai appan முருகன் அருள் புரியவேண்டும்

  ReplyDelete
 57. sir please take care of yr health. i will pray for you also. take care of yr food and health also .

  mrs balaji

  ReplyDelete
 58. ஐயா ,
  கூடிய சீக்கிரமே குணமடைய வேண்டுகிறேன் .
  தன்வந்திரி சுலோகம் சொல்லி( ஒரு உத்திரணி ஜலத்தில் வலது கையில் வைத்துக் கொண்டு )பிறகு சாப்பிட்டால் ) உபாதைகள் குறைவது நிச்சயம் .
  எப்போதாவது இந்த சைட்டை வந்து பார்க்கும் குருவி

  ReplyDelete
 59. வணக்கம். தாங்கள் எப்பொழுதும் நலமாக இருக்க இறைவனை வணங்குகிறேன்.

  ReplyDelete
 60. Respected sir ,I am also suffering from tension induced diabetics since 2006 2 age of 42 But till date I have not taken medicine. Also its close friends BP , cloistral till have not knocked my door Sugar level is fully control without taking medicine just by changing life style food style. By Brisk walking of minimum 5 km per day without doubt sugar has no power to dominate human being.it is true from my experience so do not worry much about health.As per your lesson taught to us all in the hands of god.I pray to Lord of Nellaippayr of my home town and Kurukutarai murugan for your restore of minimum normal health to serve / guide to society.
  Nellai Padmanabhban

  ReplyDelete
 61. நெடு நாட்களாய் உங்கள் பதிவை பார்க்க இயலவில்லை . இன்று பார்த்த போது தாங்கள் படும் துன்பம் கண்டு மனம் வருந்துகிறது . வெகு விரைவில் பூரண குணமடைய இறைவனை வணங்கும் - திருநெல்வேலி கார்த்திக்(கோவை )

  ReplyDelete
 62. Anbulla Iyya,

  I deeply pained to read your message. Although, Diabetes could not be cured completely, but our prayers will mitigate the effect and in due course you would be taking lesser medicines by adopting the alternative therapy along with allopathic medicine following things like, dietary food as advised by Dietician, taking more vegetable, fruits, in daily diet, simple exercise at least 10-15 minutes a day, brisk walking, pranayama, taking sufficient rest etc. will leads to healthy life. I have seen people in my family, persons with diabetes for more than 25 years still lead a normal life by strict practice of walking daily and avoid eating food stuff which is against Diabetes.

  I know busy people like you would be difficult to allot time for the above said things. but for the sake of health, one has to at least minimum time need to be allocated.

  I pray once again almighty to give all blessings and strength to you.

  Regards,

  Muraleedharan.J
  No.34, I Floor, Sec-3, Sadiq Nagar
  New Delhi-49
  Mobile: 8802785854

  ReplyDelete
 63. Dear Sir,

  I pray almighty to give you all strength and courage to you.

  Best regards

  Baskar,
  14, Ramanujar Street,
  Chitlapakkam,
  Chennai

  ReplyDelete
 64. ஐயா,இறைவனின் பரிபூரண ஆசியால் தாங்கள் விரைவில் குணமடைவீர் , உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு என்றும் கிடைக்கும்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com