மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.2.16

கடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்!


கடவுள் சாப்பிடுவார் என்று கதை விடாதீர்கள்!

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.

‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார்
என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  இறைவன்
சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?
கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல், அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது
வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய்.
சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என
பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில்
வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.

அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..

” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..

 “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்

“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.

ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்...”

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார்,

 ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம
நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல
வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.நீ உள்
வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல்
நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம்
ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்
.🙏🙏🙏🙏🙏🙏
🌴படித்ததில் பிடித்தது🌴
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

வைஷாலி வாசகர் வட்டம் said...

ஐயா அவர்களுக்கு, தங்களின் பதிவின் கதையும் விளக்கமும் மிகவும் அருமையான அனுபவங்களை தருகிறது.., இதுபோல தாங்களின் ஜோதிட வகுப்புக்களில் கூறும் விளக்கமும் அது சம்பந்தமாக கூறும் சான்றுக் கதைகளும் மிகவும் அருமை...ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியராக நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்கிறோம் ... "வைஷாலி வாசகர் வட்டம்"- புது தில்லி

lrk said...

ஐயா வணக்கம்
நல்ல விளக்கம் . அருமை ஐயா
கண்ணன்

Mrs Anpalagan N said...

உண்மை தான்.
எல்லாவற்றிகும் அத்தாட்சி காட்ட முடியாது. உதாரணம் சூடு. நெருப்பினருகே சுடும் என்பது அருகே போனால் மட்டுமே உணர முடியும், பார்த்து அறிய முடியாது. இறைவனும் அப்படியே. அவரவர் நம்பிக்கையின் ஆழத்தினால் உணர்ந்து கொள்ளலாம். நம்பிக்கையில்லாதவர்க்கு காட்ட முடியாது.
உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை.
வருவான், அருள்வான் என்றால் வருவான், அருள்வான்.
வரான், அருளான் என்றால் வரான், அருளான்!

Neelakantan Tn said...

நன்றி. மிக அருமையான விளக்கம். நம் முன்னோர்கள் தத்துவ வடிவமாகவே பல உண்மைகளை விளக்கியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றுக்கும் விஞ்ஞான வடிவமாக ஆதாரத்தை தேடுகிறோம்.

Santhanam Raman said...

வணக்கம் ஐயா!

அறுசுவை உணவு மனிதர்களுக்கு மட்டும் இல்லை, இறைவனுக்கும்...உரியது என கதையின் வழி உணர்த்தியமைக்கு மிக்க நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger வைஷாலி வாசகர் வட்டம் said...
ஐயா அவர்களுக்கு, தங்களின் பதிவின் கதையும் விளக்கமும் மிகவும் அருமையான அனுபவங்களை தருகிறது.., இதுபோல தாங்களின் ஜோதிட வகுப்புக்களில் கூறும் விளக்கமும் அது சம்பந்தமாக கூறும் சான்றுக் கதைகளும் மிகவும் அருமை...ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியராக நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்கிறோம் ... "வைஷாலி வாசகர் வட்டம்"- புது தில்லி///////

நல்லது. நன்றி. கேட்பதற்குப் புதிதாக உள்ளதே! வைஷாலி வாசகர் வட்டமா? எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் உங்கள் வட்டத்தில்?

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
நல்ல விளக்கம் . அருமை ஐயா
கண்ணன்//////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

///////Blogger Mrs Anpalagan N said...
உண்மை தான்.
எல்லாவற்றிகும் அத்தாட்சி காட்ட முடியாது. உதாரணம் சூடு. நெருப்பினருகே சுடும் என்பது அருகே போனால் மட்டுமே உணர முடியும், பார்த்து அறிய முடியாது. இறைவனும் அப்படியே. அவரவர் நம்பிக்கையின் ஆழத்தினால் உணர்ந்து கொள்ளலாம். நம்பிக்கையில்லாதவர்க்கு காட்ட முடியாது.
உண்டு என்றால் உண்டு, இல்லை என்றால் இல்லை.
வருவான், அருள்வான் என்றால் வருவான், அருள்வான்.
வரான், அருளான் என்றால் வரான், அருளான்!//////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////////Blogger Neelakantan Tn said...
நன்றி. மிக அருமையான விளக்கம். நம் முன்னோர்கள் தத்துவ வடிவமாகவே பல உண்மைகளை விளக்கியிருக்கிறார்கள். இன்று எல்லாவற்றுக்கும் விஞ்ஞான வடிவமாக ஆதாரத்தை தேடுகிறோம்.//////

அதனால்தான் பல விஷயங்கள் நமக்குப் பிடிபடாமல் இருக்கிறது!

Subbiah Veerappan said...

/////Blogger Santhanam Raman said...
வணக்கம் ஐயா!
அறுசுவை உணவு மனிதர்களுக்கு மட்டும் இல்லை, இறைவனுக்கும்...உரியது என கதையின் வழி உணர்த்தியமைக்கு மிக்க நன்றி!//////

நல்லது. நன்றி நண்பரே!

வரதராஜன் said...

குரு வநதனம்.
இறைவன் நம் கண்ணுக்குப் புலப்படாதவன்.அகக் கண்ணில் அவனை நிறுத்தி,மனமுருகிப் பிரார்த்தனை செய்வோர்க்கு அவன் நேரில் வந்து அருள் புரிவான் என்பதைப் படிக்கிறோம்.சிறுமி
பக்த மீராவுக்காக நேரல் வந்து பிரசாதம் உண்டான் என்பதை அண்மையில் இராஜஸ்தானிலுள்ள மேதாபட் எனும் மீரா பிறந்த ஊருக்குச் சென்றபோது அறிந்தேன்.மேலும் பல சம்பவங்கள் இது போன்று நடந்துள்ளதையும் கேள்விப்படுகிறோம்.பக்தி இல்லாவிடத்தில் அவன் இல்லை.அவ்வளவு ஏன்,"மனம்" என்று சொல்லுகிறோமே, அது எங்கே இருக்கிறது? காண்பிக்க முடியுமா?...
சிறிய உதாரணத்தால் பெரிய காரியத்தை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது!
அருமை, வாத்தியாரையா!!

வைஷாலி வாசகர் வட்டம் said...

...வைஷாலி வாசகர் வட்டமா? எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் உங்கள் வட்டத்தில்? http://vaishalireaderscircle.blogspot.com/

adithan said...

ஐயா,வணக்கம். ஆன்மா சூட்சுமம்,உடல் தூலம்.ராஐயோகத்தை புரிந்து கொள்ள எளிமையான ஒரு கதை.நன்றி.

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
குரு வநதனம்.
இறைவன் நம் கண்ணுக்குப் புலப்படாதவன்.அகக் கண்ணில் அவனை நிறுத்தி,மனமுருகிப் பிரார்த்தனை செய்வோர்க்கு அவன் நேரில் வந்து அருள் புரிவான் என்பதைப் படிக்கிறோம்.சிறுமி
பக்த மீராவுக்காக நேரல் வந்து பிரசாதம் உண்டான் என்பதை அண்மையில் இராஜஸ்தானிலுள்ள மேதாபட் எனும் மீரா பிறந்த ஊருக்குச் சென்றபோது அறிந்தேன்.மேலும் பல சம்பவங்கள் இது போன்று நடந்துள்ளதையும் கேள்விப்படுகிறோம்.பக்தி இல்லாவிடத்தில் அவன் இல்லை.அவ்வளவு ஏன்,"மனம்" என்று சொல்லுகிறோமே, அது எங்கே இருக்கிறது? காண்பிக்க முடியுமா?...
சிறிய உதாரணத்தால் பெரிய காரியத்தை சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது!
அருமை, வாத்தியாரையா!!////

புரிதலுக்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger வைஷாலி வாசகர் வட்டம் said...
...வைஷாலி வாசகர் வட்டமா? எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் உங்கள் வட்டத்தில்? http://vaishalireaderscircle.blogspot.com/////

தகவலுக்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger adithan said...
ஐயா,வணக்கம். ஆன்மா சூட்சுமம்,உடல் தூலம்.ராஐயோகத்தை புரிந்து கொள்ள எளிமையான ஒரு கதை.நன்றி.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!