மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.2.16

Astrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா?


Astrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா?

கீழே கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை!

அவருடைய ஆசை நிறைவேறியதா? ஜாதகத்தை நன்றாக அடித்துத் துவைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்.

Toss போட்டுப் பார்த்து ஒரு வார்த்தையில் விடையைச் சொல்லக்கூடாது. ஜாதக அமைப்பின்படி என்ன காரணம் என்பதைக் கணித்துக் கூற வேண்டும்!அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25 comments:

Prasanna Venkatesh said...

வெளிநாட்டு வேலை உறுதிசெய்யப்பட்ட அமைப்பு: -
1. 12 இல் - 5,10 வது அதிபதி
2. லக்னத்தில் - 9 அதிபதி
3. 4 வது இடத்தில் - லக்னாதிபதி
4. 11 வது இடத்தில் -> மாந்தி
5. 11 வது இடத்தில்-> சந்திரன் (7 வது அதிபதி)
6. 11 வது இடத்தில் -> குரு
7. 11 வது இடத்தில் -> செவ்வாய் (4,11 வது அதிபதி)

Mrs Anpalagan N said...

காலை வணக்கம் ஐயா,
ஆமாம் அவருக்கு அது கைகூடி இருக்கும்.
வெளிநாட்டு தொழில் பலனுக்கு ராகு, மற்றும் ஜல ராசிகள், 9, 10, 11 இடம் பார்க்கப்படவேண்டும்.
1. லக்னம் ஜல ராசியில்.
2. ராசி ஜல ராசியில்.
3. 9ஆம் அதிபதி மகரத்தில்.
4. 11ஆமிடம் ஜலராசி. அங்கு அதன் அதிபதியுடன், ஏழாம் அதிபதி.
5. ராசிக்கு 2ஆமிடத்தோனும், ஒன்பதாம் இடத்தோனும் ஜல ராசியில்.
6. ராசிக்கு பதினோராம் இடத்தோனும் ராகுவுடன் ஜல ராசியில்.
நன்றி.

Srinivasa Rajulu.M said...

தொழில் காரகன் (லக்னாதிபதி) நாலில் நீச்சம்! தொழில் ஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைவு! ஒன்பது மற்றும் பன்னிரண்டு ஆகிய ராசிகள் ஜல ராசிகளோ வாயு ராசிகளோ அல்ல! குருவுக்கும் ஒன்பதாம் இடத்துடன் சம்பந்தமில்லை! வேலை செய்யும் வயதில் வந்த சுக்கிர, சூரிய, மற்றும் (நீச்ச) சந்திர தசைகள் வலுவாக இல்லை!
ஆக, வெளிநாடு செல்லும் யோகமோ, சுயதொழில் யோகமோ இல்லாத ஜாதகர்.

selvaspk said...

1. Lagnam fortified with bakyathipathi and lagna lord aspect. Both are friendly planets.
2. Vikrama sthanathipathi Guru is with friendly planets situated in a comfortable placement who belongs to 12th house for foreign travels

3. 10th house lord, it's placement in 12th, 12th house lord fortified and planets saturn, mercury responsible for work and business denotes comfortable work. Mostly placed in computer related work, big salary, work in backend(who don't need to handle people, may work remotely). Debilitated moon with Guru and Mars denotes he will work secluded doing programming, may even reached greater heights through his thought power.

No doubt on his foreign travel as he cannot stay in one place. 9th lord in 1st and fortified 12th and Guru mangal, sasi mangal, k.kesari and even lagna raaghu all well placed. He will blast his enemies and succeed in his career in foreign countries.

kmr.krishnan said...

1. 10க்கு உடைய சுக்ரன் 12ல் வந்து அமர்ந்தது;
2. சர ராசியான மகரம் லக்கினமாக அமைந்தது;
3. ல‌க்கினத்திலேயே ராகு அமர்ந்தது;

ஆகிய இவை ஜாதகரை வெளிநாடு செல்ல அனுமதித்து இருக்கும். வெளிநாட்டில் சுமாராகச் ச்ம்பாதித்து இருப்பார்.

ஜாதகர் 20 பிப்ர‌வரி 1971, காலை 5 மணி, 33 நிமிடம்,30 நொடிக்குப் பிறந்துள்ளார். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

hamaragana said...


அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 103..
1.,மகர லக்னம் லக்னாதிபதி கேந்த்ரத்தில் ஆனால் நீசம்
2.,சுபர் பார்வை இல்லை..
3..மகர லக்னத்திற்கு யோகாதிபதி சுக்ரன் 12ல் விரயம் ..மேலும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி கொண்டான் .
4. வெளிநாடு வாய்ப்பு 9 மிடம் நன்றாக..மேலும் சூரியன் .நல்ல இடத்தில. இங்கு அப்படி இல்லை.
சூரியன் பகை வீட்டில் 8 ம்வீட்டுக்கரன் 2ல் தனத்தில் அமர்ந்து கெடுத்தான் .
5.,10ம் அதிபதி சுக்ரன் 12ல் .
7.,வெளிநாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு 7'&9 வீடதிபதிகள் தொடர்பு இருத்தல் வேண்டும் ஜாதகரிடம் 7 வீட்டதிபதி சந்தரன் 9ம் வீட்டதிபதி புதனுடன் எந்த விதமான பார்வை தொடர்பு இல்லை ..???
8., ஆரம்பகால திசைகள் அவ்வளவு விசேடமாக இல்லை.
9.முக்கியமாக தனதிபதியும் லாப ஷ்தாநிபதியும் 6/8 நிலைமை ..[செவ்வாய் 11ல் சனி 4ல் அமர்ந்து அந்த இடம் செவ்வாய்க்கு 8மிடமாக அமைந்தது..!!!

10..***,இந்த ஜாதகர் வெளி நாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. !!!!**,
முன்பு இந்த ஜாதகத்தை பார்த்த ஞாபகம் ..சரிவர பிடி படவில்லை..

Thanga raj said...

லக்கினாதிபதி நீச பங்கம் நான்காம் இடத்தில். பதினொன்றில் சந்திரன் உடன் பதினொன்றாம் வீட்டோன் செவ்வாய், ஆகா ஜாதகர் வெளிநாடு வாசம் உண்டு . நிச்சயமாக தன் 39 வயதிற்கு மேல் வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்திருப்பார்.

SSS CONSTRUCTION said...

SIR, THE NATIVE WENT ABROAD HIS DESIRE IS FULFILD COMPARING 4TH AND 9TH LORD THE 4TH LORD IS WEAK AND HE CONJUCT WITH 12TH LORD GURU AND DEBAILATED MOON AND THE NINTH LORD BUDHAN IS IN LAGNA AND THE LAGNA LORD SAT IS IN NEECHAM

adithan said...

ஐயா வணக்கம். லக்னாதிபதி சனி நீச்சம்.ஒனபதாம் அதிபதி புதன் லக்னத்தில் உடன் ராகு மேலும் கேதுவின் பார்வை.இரண்டில் எட்டாம் அதிபதி சூரியன்,சனி பார்வையுடன்.பணம் சம்பாதிக்க வாய்ப்பில்லை.நவாம்சத்திலும் புதன் பகை ஸ்தானத்தில்,சனி பார்வையுடன்.வெளிநாடு போக வாய்ப்பல்லை.ஆரம்ப முயற்ச்சி. தவறிருந்தால் சுட்டவும். நன்றி.

Chandrasekaran Suryanarayana said...

ஆசிரியருக்கு வணக்கம். தாங்கள் நலமாக இருக்கிறீர்களா ?
ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
20.02.1971 ஆம் தேதி காலை 4.26.19 மணிக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மகர லக்கினம்(6 பரல்). (இடம் : சென்னை) .
லக்கினாதிபதி சனி நீசம். நவாம்சத்தில் லக்கினாதிபதி சனி துலா ராசியில் உச்சம். இருந்தும் லக்கினாதிபதி வலுவாக இல்லை. சுபக் கிரகங்களின் பார்வையும் இல்லை.

சுக்கிரனுக்கு 9ஆம் அதிபதி புதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது வெளிநாட்டு வாய்ப்புகளுக்குக் கேடானது. பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் செவ்வாய். மறுபக்கம் ராகு.

பணம் ஈட்டலுக்கு 2ஆம் வீட்டுக்காரனும், 11ஆம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அஷ்ட்டமம் / சஷ்ட்டமம் நிலையில் உள்ளார்கள். அதாவது சனியும், செவ்வாயும் 6/8, 8/6 நிலையில் உள்ளார்கள்.

லக்கினத்தில் 6ஆம் வீட்டுக்காரன் புதன் வில்லன். லக்கினத்தில் அமர்ந்தது கேடு உண்டாகும். ராகுவும் கூட்டணியாக சேர்ந்தது சரியில்ல. 7ம் வீட்டுக்காரன் சந்திரனும் நீசம்.

யோககாரகன் சுக்கிரன். 5ஆம், 11ஆம் இடங்களுக்கு உரியவன். அவன் வந்து 12ல் (விரையத்தில்) அமர்ந்தது கேடானது.

பத்தாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் 12ல் மறைந்து விட்டார். சுக்கிரனுடன் மாந்தியும் கூட்டு. முயற்சிகள் அனைத்தும் செல்லாமல் போனது.

தசைகளும் சாதகமாக இல்லை. சனி - 6 ஆண்டுகள் , புதன் மகா திசை - 17 ஆண்டுகள் ,கேது மகா திசை - 7 ஆண்டுகள், சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள் (12ஆம் வீட்டுக்காரனின் திசை).

லக்கினத்தில் புதனும், ராகுவும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் சுறுசுறுப்பானவன் . கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து கூரு போட்டு கட்டிக் கொண்டு வந்து விடுவான். விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்.

ஆக மொத்தம் சரியில்லை வெளிநாடு செல்வதற்கு.

இருந்தாலும், (பூவா, தலையா போட்டு பார்த்ததில் தலை தான் விழுந்தது). அதனால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.

Sathyanarayanan said...

10TH LORD IN 12TH house indicates work in foreign country. He would have got foreign job in later half of sukra dasa. Yes his wishes got fulfilled

sundinesh1 said...

ஜாதகரின் ஆசை நிறைவேறியது . வெளிநாடு சென்று cinema / entertainment industry பிரபலமானார். அனால் சிறு வயதில் மிகவும் கஷ்ட பட்டார்

காரணம்:

ஒன்பதாம் அதிபதி 1'இல் ராகுவுடன் , 12'ம் அதிபதி 11'இல் , உடன் செவ்வாய் மற்றும் சந்திரன் . 12'இல் 10ம் அதிபதி
ஒன்பதாம் அதிபதி, 12'ம் அதிபதி நன்றாக உள்ளனர். 4'இல் சனி நீசம்

saravanan said...

9 ம் வீட்டுக்காரன் லக்னத்தில் ராகுவோடு...100% வெளிநாடு போவார்..
நவாம்சத்திலும் லக்னத்தில் புதன் நல்ல நிலைமை...நவாம்சத்தில் சுக்கிரனின் நிலை அருமை..எனவே நல்ல வேலை...நல்ல வருமானம் தரும் ராகு....

saravanan said...

கண்டிப்பாக வெளி நாடு போய் நல்ல வருமானம் பெறுவார்..

ஒன்பதாம் வீட்டுகாரனின் நிலை அருமை...

ராகுவுடன் இணைந்த நிலை..சுக்கிரனும் நல்ல நிலை...சனியும் நவாம்சத்தில் உச்சம்...

B. Lakshmi Narayanan, Tuticorin said...


வணக்கம் வாத்தியாரே!

Quiz 103 க்கான பதில்.

ஜாதகர் பிறந்த நேரம் : 20/Feb/1971 5.45 am

ஜாதகர் சுக்கிர திசையில் புதன் புத்தியில் வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்டினார்.குறிப்பு : லக்னாதிபதிக்கு ராகு தொடர்பு உள்ளவர்கள் & ஜாதகத்தில் ராகு லக்னத்திற்கு 1 , 5 , 9 ஆகிய அதிபதிகள் சாரம் பெறுவது மற்றும் ராகு, மேஷம் , ரிஷபம் , கடகம் , கன்னி , மகரம் ஆகிய ராசிகளில் அமர்ந்திருப்பவர்கள் வெளிநாட்டு வாசம் செய்து நல்ல அந்தஸ்து , செல்வத்துடன் இருப்பார்கள்.

1. மேலே சொன்ன குறிப்பு ஜாதகருக்கு உள்ளது. மகர லக்கினத்தில் ராகு, 9ம் அதிபதி புதனுடன் கூட்டு.

2. நீர்கிரகம் சந்திரன், 4ம் அதிபதி செவ்வாயுடன் கூடி, ஜலராசியான விருச்சகத்தில். மேலும் சந்திரன் 9ம் அதிபதி புதனின் நட்சத்திரமான கேட்டையில் அமர்ந்து கடல் கடக்க உதவினார்.

3. 11ம் இடத்தில் உள்ள 34பரல், ஜாதகருக்கு அதிக தனம் மற்றும் பொருள் சேரும் என தெளிவாக உரைக்கிறது.

4. வெளிநாட்டிர்க்கு கடத்தும் 12ம் அதிபதி, இங்கே சுக்கிரனாகி, அவர் தனது திசையில் 9ம் அதிபதியான புதன் புத்தியில் தனது யோக காரகதுவத்தை நிறைவேற்றி ஜாதகரை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்தார்.அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

amuthavel murugesan said...

வணக்கம் ஜயா,
புதிர் எண்.103 க்கான் பதில்.

வெளிநாடு சென்று இருப்பார்.

1. லக்னாதிபதி 4 ல்.மற்றும் லக்னாதிபதி அம்சத்தில் உச்சம்.

2. 7ம் அதிபதியும் 4ம் அதிபதியும் சேர்ந்து சந்திரமங்கள ராஜ யோகம்.

மு.சாந்தி.

slmsanuma said...

ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்.
மகர லக்கின ஜாதகம்.
யோககாரகன் & 10ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான்.
லக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.
ஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்.
9ஆம் அதிபதி ராகுவோடு கூட்டு.
சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை.
வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை நிறைவேறாது.

SANTHANAM, SALEM

Ramamoorthy said...

Yes. He would have gone abroad. Debilitated Lagnathipathi and 2nd lord Saturn in 4th.7th lord Moon debilitated in 11th. But his overall money position is not good ,so would have lost or had money trouble.

anand tamil said...

ஜாதகர் வெளிநாடு சென்றார்.

காரணம்: பாக்கிய ஸ்தான அதிபதி புதன் ராகுவுடன் சேர்ந்து லக்கினத்தில் உள்ளார்.

Raja R said...

IYA VANAKKAM.....

IVAR KANDIPPAKA VELINADU SELVAR

5TH AND 10TH ATHIBAL VELINATTAI KURIKKUM 12-M BAVATHIL

NEENDADURA PAYANNATHAI KURIKKUM RAGU LAGNATHIL IRUNDU CHADRANNAI PARPATHAL

CHANDRA THISAIYILO....SUKRADISAI (RAGUPUTHIYILO) VELINADU CENTRIKKA VENDUM


IPPADIKKU

R.RAJA


IYA NAN THANGAL MELNILAI VAHUPPIL SERA ENNA SEIYA VENDUM

Selvam Velusamy said...

வணக்கம் குரு,

ஜாதகர் 40 வயதுக்கு மேல் சந்திரன் அல்லது செவ்வாய் தசையில் புதன் அல்லது கேது அல்லது சுக்கிரன் புக்தியில் வெளிநாட்டுக்கு சென்றிருப்பார். காரணம் சந்திரன் ஒரு ஜல கிரகம் ஏழுக்கும் அதிபதி. புதன் ஒன்பதுக்கு அதிபதியானார், கேது ஏழாமிடமான ஜல ராசியில் அமர்ந்தார், சுக்கிரனும் பன்னிரண்டாமிடத்தில் நிற்கிறார். செவ்வாய் லாபாதியாகி ஆட்சி பலம் பெற்றார்.

நன்றி,
செல்வம்

siva kumar said...

உள்ளேன் ஐயா

Manikandan said...

Yes. buz 9th place lord (Chuthan) is in very good position both Rasi and Amsa.

venkatesh r said...

வணக்கம் அய்யா.
"எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?" என்று ஜாதகன் ஒருவன் கேட்டால்,ஒன்பதாம் பாவாதிபதி (The lord of the ninth house) நல்ல நிலையில் இருந்தால் கிடைக்கும் என்று சொல்லலாம். இல்லையென்றால் இல்லை!"
மேற்கண்ட விளக்கம் நீங்கள் http://classroom2007.blogspot.in
/2008/08/blog-post_04.htmlவகுப்பில் எழுதியது.

புதிர் எண் 103க்கான அலசல்:

"ஜாதகரின் வெளி நாட்டு வேலைக் கனவு நிறைவேறியிருக்கலாம். ஆனால் நிறைய பொருள் ஈட்டும் ஆசையில் மண் விழுந்திருக்கும்.

1. லக்கினாதிபதியும், தனாதிபதியுமான சனி பகவான் மேசத்தில் நீசமடைந்துள்ளார். நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதன் காரணமாக நீசபங்கமாகியுள்ளார்.அங்கிருந்தபடியே லக்கினத்தின் மேல் தன் 10ம் தனிப்பார்வை பார்த்தபடியும், கர்மாதிபதியாக தன் நேர்ப்பார்வையில் 10மிடத்தையும் வைத்துள்ளார்.
2. வெளி நாட்டு தொழில் அமைய 9ம் இடம் வலுப்பெற்று இருக்க வேண்டும்.அதன் அதிபதி புதன் லக்கினத்திலேயே அமர்ந்து ராகுவுடன் கை கோர்த்துள்ளார். 9மிடம் 39 பரல்களுடன் உள்ளது.

மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு 26ம் வயதில் சுக்கிர தசை, சனி புத்தியில் வெளி நாட்டில் வேலை கிடைத்தது.
3. அட்டமாதிபதி சூரியன் இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் அமர்வு, விரையாதிபதி குரு லாபஸ்தானமான 11ல் அமர்வு மற்றும் யோகாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் தனுசு ராசியில் மறைவு போன்ற காரணங்கள் ஜாதகரின் நிறைய பணம் சம்பாதிக்கும் ஆசையை நிறைவேற்றாமல் தடுத்து இருக்கும். (2மிடத்திற்கு 26 பரல்கள், 11மிடத்திற்கு 34 பரல்கள். அதனால் ஓட்டை அண்டா).

தங்களின் மேலான விளக்கத்திற்கு காத்திருக்கிறேன்.

ravichandran said...

Respected Sir,

My answer for our Quiz No.103:

The Native of the horoscope had a chance go to foreign and earn after his 37 years of age.

Reasons:

1. Dasa and puthis are not supported till 37 years.

2. 10th lord is in 12th house from lagna and under baba kathriyaga.

3. Education also affected.

4. In Navamsa, 10th lord, the authority for karma and Jupiter are in good position.

With kind regards,
Ravi-avn