மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.2.16

எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது?


எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது?

ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்ற னர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.

வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.

அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.

மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.

அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப் போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.

அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.

அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.

பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.

அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம்.

உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.

கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.

கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.

ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார். பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.

இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.

நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.

நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.

வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்

=============================================================
2
மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

வீட்டு இணைப்புகளுக்கானது:-

முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00, நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50. நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
 (நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00. (நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல்
உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட்
வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம்  ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)

அனைவரும் அறிய பகிருங்கள் நண்பர்களே..BY TNEB
============================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

siva kumar said...

உள்ளேன் ஐயா

adithan said...

வணக்கம் ஐயா,அருமையான நீதி.நமக்கு கோபம் வந்துவிட்டாலே அது எதிரிக்கு முதல் வெற்றி.கோபம் கொண்ட மனதால் விவேகமாக சிந்திக்க முடியாது.நன்றி.

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
நல்ல உன்னதமான கருத்து! கோபத்தை அடக்குபவனே ஞானி!! இந்த சம்பவம் நடந்த இடம் பாலன்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு வனத்தில் (இப்போது சுற்றுலாதலம்) நடந்ததாம்!!!.
மின் கட்டன விபரங்கள் அறியத்தந்தமைக்கு நன்றிகள்!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி

வரதராஜன் said...

குரு வந்தனம்.
கிருஷ்ணரின் கதை படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது இதுதான். எதிராளியின் பலத்தைக் குறைக்க சாதாரணமாக பொருமை(Patience)
காக்கப்படவேண்டும் என்பர்.அவர் பேச நாம் பேச இருவரும் நிறுத்தாமல் எதிர்பாராமல் சண்டையில் முடிகிறது!
அதைத்தான் இக் கதையிலும் கிருஷ்ண பகவான் செய்துள்ளார்.
இறைவா, எனக்கும் இது போன்ற சன்மனதைத் தா,மறுபிறவி இல்லாமைக்கு ஒரு மார்க்கம் காண்பி!
இன்றைய கதையின் தத்துவம்: சினம் காக்க! சரிதானே, ஐயா!?
இரண்டாம் பதிவான மின் கட்டணம் கணக்கிடும் முறை மிகவும் உபயோகமானது.பயனுள்ள பதிவைப் பகிர்ந்தமைக்கு பலநூறு நன்றிகள், வாத்தியாரையா!

A. Anitha said...

மெய் தான்...

பொறுமையைப் போன்ற சிறந்த ஆயுதம் இல்லை.

Subathra Suba said...

தங்களின் கதை நடை அருமை

C.P. Venkat said...

அருமையான பதிவு குருஜி அவர்களே!... எதிரியின் பலம் கூடவும், குறையவும் நாம் தான் காரணம் என்பதை உணர்த்திய விதம் அருமை... அதுவும் கிருஷ்ண்னுக்கு புழுவாகவும், மற்றவர்களுக்கு பயங்கரமாகவும் காட்சி தருவது போல சொல்லி இருப்பது மிகவும் அருமை..தங்கள் உடல் நலம் பற்றி அறிய வேண்டுகிறேன்.
அன்புடன்
வெங்கடேஷ்.சி

Subbiah Veerappan said...

//////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

தங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,அருமையான நீதி.நமக்கு கோபம் வந்துவிட்டாலே அது எதிரிக்கு முதல் வெற்றி.கோபம் கொண்ட மனதால் விவேகமாக சிந்திக்க முடியாது.நன்றி./////

உண்மைதான். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
நல்ல உன்னதமான கருத்து! கோபத்தை அடக்குபவனே ஞானி!! இந்த சம்பவம் நடந்த இடம் பாலன்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு வனத்தில் (இப்போது சுற்றுலாதலம்) நடந்ததாம்!!!.
மின் கட்டன விபரங்கள் அறியத்தந்தமைக்கு நன்றிகள்!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

///////Blogger வரதராஜன் said...
குரு வந்தனம்.
கிருஷ்ணரின் கதை படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது இதுதான். எதிராளியின் பலத்தைக் குறைக்க சாதாரணமாக பொருமை(Patience)
காக்கப்படவேண்டும் என்பர்.அவர் பேச நாம் பேச இருவரும் நிறுத்தாமல் எதிர்பாராமல் சண்டையில் முடிகிறது!
அதைத்தான் இக் கதையிலும் கிருஷ்ண பகவான் செய்துள்ளார்.
இறைவா, எனக்கும் இது போன்ற சன்மனதைத் தா,மறுபிறவி இல்லாமைக்கு ஒரு மார்க்கம் காண்பி!
இன்றைய கதையின் தத்துவம்: சினம் காக்க! சரிதானே, ஐயா!?
இரண்டாம் பதிவான மின் கட்டணம் கணக்கிடும் முறை மிகவும் உபயோகமானது.பயனுள்ள பதிவைப் பகிர்ந்தமைக்கு பலநூறு நன்றிகள், வாத்தியாரையா!///////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

//////Blogger A. Anitha said...
மெய் தான்...
பொறுமையைப் போன்ற சிறந்த ஆயுதம் இல்லை./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Subathra Suba said...
தங்களின் கதை நடை அருமை////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////////Blogger C.P. Venkat said...
அருமையான பதிவு குருஜி அவர்களே!... எதிரியின் பலம் கூடவும், குறையவும் நாம் தான் காரணம் என்பதை உணர்த்திய விதம் அருமை... அதுவும் கிருஷ்ணனுக்கு புழுவாகவும், மற்றவர்களுக்கு பயங்கரமாகவும் காட்சி தருவது போல சொல்லி இருப்பது மிகவும் அருமை..தங்கள் உடல் நலம் பற்றி அறிய வேண்டுகிறேன்
அன்புடன்
வெங்கடேஷ்.சி////

நல்லது. நன்றி. உடல் நலம் இப்போது பரவாயில்லை! தேறி வருகிறது!