மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.2.16

பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள்!

பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள்!

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.

அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர்

இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.

சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான்.

இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.

இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள்.

அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.

அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.

ஏதுமறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.

சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறனார்.

அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.

ஆச்சர்யப்பட்டான் அர்சுனன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை….!வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?

எனக்கும் தெரியவில்லை..? என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.

அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…?

உடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.

அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான்.

அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…!

உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.

அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.

அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான்.

அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?கண்ணனும் சிரித்துக்கொண்டே…!

இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.

அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.

ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….!!

அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார்.

இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும்.
============================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

 1. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
  நீதி கதை அருமை...செய்கிற தர்மம் ஒரு உயிர் காப்பாற்ற படும் எனில் அதன் பலன் கூடுதலாக கிடைக்கும்
  நன்றி ..

  ReplyDelete
 2. Hariom sir.how is your health. Take care. Selfless action will be return 100 times of action. It is true.if we do selfless we will get all things for us.sure.touching story.Andalrajasekaran

  ReplyDelete
 3. குரு வந்தனம்.
  மிக உயர்ந்த கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.மனிதன் இறந்தபின் எது மிஞ்சும்?! அவனது வாழ்நாளில் அவன் செய்யும் தானமும், தர்மமும், தானே! பலன் என்ன என்பதை யாரும் அறிய முடியாது, தான தரமம் செய்யும்போது!
  கிருஷ்ணபகவான் தன்னை நம்பி அணுகியோரை என்றுமே கைவிட்டதில்லை என்பதை மஹாபாரதத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் படிக்கிறோம்.மிக நல்ல உபதேசக் கதை.
  நன்றி, வாத்தியாரே!

  ReplyDelete
 4. Respected Sir,

  Happy morning... superb article...

  You have also doing great service that teaching astrology without expect anything to everybody. If you give material wealth it will reduce but spiritual and education knowledge won't reduce.It will increase day by day...

  Sath sila ekadasi utchav ki jai...

  With kind regards,
  Ravi-avn

  ReplyDelete
 5. ஐயா, வணக்கம். புராண காலத்திற்கு மட்டுமல்ல, நிகழ் காலத்திற்கும் பொருந்தும் அருமையான கதை.அதனால் தான் சென்னை வெள்ளத்திலே பிரதிபலன் பாராது உதவிய மூன்று சிறுவரகளுக்கு சென்ற ஆண்டின்"சிறந்த இந்தியருக்கான விருது"வழங்கி NDTV கௌரவித்துள்ளது.சோதிடக்கலை அழிந்து விடாமல் இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சி, உங்களுக்கு இன்னும் நூறு வயது ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் புகழையும் கொடுக்கும்.

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா! அருமையான நீதிக்கதை!

  சுயநலம் கருதாத தங்களது ஜோதிட சேவை பல்கி பெருகி பலன் தங்களை அடைய வேண்டும்.,.

  ReplyDelete
 7. Vanakkam ayya unnathamana payanulla neethikathi vazhga valamudan

  ReplyDelete
 8. ////Blogger hamaragana said...
  அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்
  நீதி கதை அருமை...செய்கிற தர்மம் ஒரு உயிர் காப்பாற்ற படும் எனில் அதன் பலன் கூடுதலாக கிடைக்கும்
  நன்றி ..////

  உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

  ReplyDelete
 9. ////Blogger Unknown said...
  Hariom sir.how is your health. Take care. Selfless action will be return 100 times of action. It is true.if we do selfless we will get all things for us.sure.touching story.Andalrajasekaran/////

  உடல் நலம் இப்போது பரவாயில்லை சகோதரி. உங்களின் அன்பான விசாரிப்பிற்கு நன்றி!

  ReplyDelete
 10. ////Blogger வரதராஜன் said...
  குரு வந்தனம்.
  மிக உயர்ந்த கருத்து சொல்லப்பட்டிருக்கிறது.மனிதன் இறந்தபின் எது மிஞ்சும்?! அவனது வாழ்நாளில் அவன் செய்யும் தானமும், தர்மமும், தானே! பலன் என்ன என்பதை யாரும் அறிய முடியாது, தான தரமம் செய்யும்போது!
  கிருஷ்ணபகவான் தன்னை நம்பி அணுகியோரை என்றுமே கைவிட்டதில்லை என்பதை மஹாபாரதத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் படிக்கிறோம்.மிக நல்ல உபதேசக் கதை.
  நன்றி, வாத்தியாரே!////

  நல்லது. நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 11. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... superb article...
  You have also doing great service that teaching astrology without expect anything to everybody. If you give material wealth it will reduce but spiritual and education knowledge won't reduce.It will increase day by day...
  Sath sila ekadasi utchav ki jai...
  With kind regards,
  Ravi-avn/////

  நல்லது நன்றி அவனாசி ரவி!

  ReplyDelete
 12. ////Blogger adithan said...
  ஐயா, வணக்கம். புராண காலத்திற்கு மட்டுமல்ல, நிகழ் காலத்திற்கும் பொருந்தும் அருமையான கதை.அதனால் தான் சென்னை வெள்ளத்திலே பிரதிபலன் பாராது உதவிய மூன்று சிறுவரகளுக்கு சென்ற ஆண்டின்"சிறந்த இந்தியருக்கான விருது"வழங்கி NDTV கௌரவித்துள்ளது.சோதிடக்கலை அழிந்து விடாமல் இருக்க நீங்கள் எடுக்கும் முயற்சி, உங்களுக்கு இன்னும் நூறு வயது ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் புகழையும் கொடுக்கும்.///

  இன்னும் 100 வயதா? அது பேராசை ஆகிவிடும். சனீஷ்வரன் என்றைக்கு போர்டிங் பாஸ் கொடுக்கிறாரோ - அன்று புறப்பட வேண்டியதுதான்!

  ReplyDelete
 13. /////Blogger kmr.krishnan said...
  Very nice Story/////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 14. ////Blogger Santhanam Raman said...
  வணக்கம் ஐயா! அருமையான நீதிக்கதை!
  சுயநலம் கருதாத தங்களது ஜோதிட சேவை பல்கி பெருகி பலன் தங்களை அடைய வேண்டும்.,./////

  பலன் என்னை அடைந்தால் அது சுயநலக் கணக்கில் வந்து விடுமே! ஆகவே எனது மாணவர்களுக்கு அந்தப் பலன்கள் சேரட்டும்!

  ReplyDelete
 15. /////Blogger Gajapathi Sha said...
  Vanakkam ayya unnathamana payanulla neethikathi vazhga valamudan//////

  நல்லது. நன்றி கஜபதி!

  ReplyDelete
 16. /////Blogger Subathra Suba said...
  Nalla neethi kadhai////

  நல்லது. நன்றி சகோதரி!

  ReplyDelete
 17. arputham ayya
  mikka nandri
  nandriyal vazhvathu ullam
  vazgha valamudan
  adeyan
  dharumaidasan

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com