மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.2.13

Astrology.Popcorn Post. வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!




Astrology.Popcorn Post. வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!

Popcorn Post no.38

இன்று காதலர் தினம்! (Valentine Day)


காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

காதலித்தவனையே அல்லது காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று மணந்து கொள்ளுங்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. காதலுக்காக அவர்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள். அவர்களை அழ வைத்தால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது!

ஜாதி, மதம், இனம் குறுக்கே வந்து அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

போராடுங்கள். உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள். அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். ஒரு கள்ளியை அல்லது மங்கையாக இருந்தால் ஒரு கள்ளனை வசப்படுத்திக் கைக்குள் போட்டுக்கொண்ட உங்களுக்கு, பெற்றோர்களை வசப்படுத்துவதா கஷ்டம்?

ஆனால் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்காதீர்கள். பார்த்துப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? பாதியில் விட முடியுமா? பாதியில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் (SMS), புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள் வட்டாரம் என்று சாட்சியாக மாட்டிக்கொண்டு உள்ளனவோ? அவற்றை எல்லாம் எப்படி விலக்க முடியும்? அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை அல்லது காட்டேஜ் எடுத்து, போட்ட ஆட்டங்கள் எத்தனையோ? கணக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்ன? டூ வீலரில் அல்லது பஸ் பயணத்தில் உரசிய உரசல்கள் எத்தனையோ? ஆகவே ஜாதகத்தை எல்லாம் இருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்குப் பிறகு அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான குணம் மற்றும் குடும்ப பாரம்பரியம் முழுமையாகத் தெரியும்போது, பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

காதல் புனிதமானது. ஒரு வருடம் அல்லது ஒரு மாதம் ஏன் ஒருவாரம் வாழ்ந்தாலும் போதும். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.

ஜாதகம் பார்க்காமல் மணந்து கொள்ளும்போது, அவனுடைய அல்லது அவளுடைய ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அல்லது நீசமாகி ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது ஆயுள் பாவம் அடிபட்டுப்போயிருந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வியாக்கியானம் எல்லாம் காதலில் குதிப்பதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.

என்னிடம் கேட்டிருந்த ஒரு பெண்ணிற்கு இதை எழுதியபோது, சட்டென்று அவள் பதில் அனுப்பினாள்: “சார், எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், அவனைப் பிடித்துக் கொடுத்து, மகளிர் காவல் நிலைத்தில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணி விடுவேன். எனக்குப் பிரச்சினை எல்லாம் என் பெற்றோர்களை வைத்துத்தான். என்னுடைய காதலுக்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்னுடைய திருமணம் அவர்கள் ஆசியுடன் நடக்குமா? அதை மட்டும் நீங்கள் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்....!”

எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!

அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதா? அல்லது அவளிடம் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஜீவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதா நீங்களே சொல்லுங்கள்!

பத்து சதவிகிதம் இப்படியும் இருக்கலாம். ஆகவே காதலர்களே ஜாதகத்தை மறந்து விட்டு, பெற்றோருடைய ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------
“வாத்தி (யார்) கட்டுரைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா, காதலிக்க வழியில்லாமல் (அதாவது ஒருத்திகூடக் கிடைக்காமல்) அல்லது காதலுக்கு வாய்ப்பில்லாம்ல் நேரடியாக திருமண பந்தததில் மாட்டிக்கொண்டு விட்டவர்கள், அல்லது மாட்டிக்கொண்டு விட்டதாக நினைப்பவர்கள் எல்லாம், வருந்தாமல் சூடாக வாழைக்காய் பஜ்ஜி இரண்டைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு கோப்பைஃபில்டர் காப்பியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்க்கலாம். அதில் காதல் மறுக்கப்பட்டுள்ளது தெரியவரும்! டென்சன் இல்லாமல் பார்ப்பதற்குத்தான் வாழைக்காய் பஜ்ஜி & ஃபில்டர் காப்பி! சம்ஜே க்யா?

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

25 comments:

  1. Good One!

    I am Happy with Bajji, Filter Coffee and arranged Marriage.

    GK
    BLR

    ReplyDelete
  2. As usual, Excellent post!!

    I am happy with Bajji,Filter Coffee and arranged marriage.

    Your old student,
    GK-BLR

    ReplyDelete
  3. ஓடிப் போய் திருமணம் செய்துக் கொண்டால் திருமண செலவாவது மிச்சமாகும். அந்த பணத்தை வைத்து எங்காவது வெளிநாட்டிற்கு தேனிலவு போகலாம். அல்லது திருமணத்திற்கு பிறகு குடும்ப செலவிற்கு அந்த பணம் பயன்படும். திருமணம் என்றால் தாலி கட்டுவதுதானே முக்கியம்.

    ReplyDelete
  4. ஐயாவுக்கு வணக்கம்..
    பதிவு வழக்கம் போல அருமை..நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க.நன்றி.

    ReplyDelete
  5. விவாகரத்து பெருகி வரும் சூழலில்
    விவகாரங்கள் காதலினால் மட்டுமா

    காதல் சோசியமும் உண்டு. அது திரை
    கலைஞர் பாக்கியராசுக்கு நன்கு தெரியும்

    ஆணும் பெண்ணும் உரிமையை
    அப்படி மாற்றிக் கொண்டால்

    வழக்கம் போல்
    வலமாக வரும் பாடல் இப்படித்தானிருக்கும்


    பொறந்தாலும் ஆம்பிள்ளையா பொறக்ககூடாது - அய்யா

    பொறந்து விட்டா
    பொம்பிள்ளைய நினைக்க கூடாது

    ஆம்பிள்ளை எல்லாம் பொம்பிள்ளை போலே மாறவும் கூடாது

    பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கண்டு வாடவும் கூடாது

    ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே
    அய்யா உன்னை நினைச்சேனே

    அர்ஜ்சுனன் போல அழகிருக்க
    அனுமார் ஜாதி பிடிச்சேனே

    பரம்பரை ஞாபகம் போகலையே பழையத இன்னும் மறக்கலையே

    மரத்துக்கு மேலே தாவுறியே மனுசனை குரங்கா நினைகிறியே

    காதலை கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்

    உன்னை எனக்குன்னு எழுதி வச்சான் உறவை நனச்சி அழுக வச்சான்

    சிரிக்கிற காதல் முறிந்து விடும் அழுகுற காதல் உறுதி பெறும்

    முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை மணந்துவிடு

    .....

    இதை இப்படி பாடுவர்
    இன்றைய இளைஞர்கள்

    முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை "மறந்து" விடு

    ReplyDelete
  6. அய்யாவிற்க்கு காதலர் தின நல்வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  7. காதல் மறுக்கப்படுவது ஒரு வகையில் நன்மையே. காதலித்து, கைவிடப்பட்டு கொஞ்ச நாள் அவளை/அவனை பற்றி நினைத்து உருகி, இன்னும் சிலர் கையை கீறுவது என்று எல்லாம் போய்.... நல்ல பிள்ளையாக அம்மா அப்பா சம்மதத்துடன் தேடி ஏற்பாட்டு திருமணம் பண்ணுவதே நலமாக இருக்கும்.

    எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அனானுக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும். பழகும் பெண்களில் கொஞ்சம் பிடித்த பெண்களின் ஜாதகங்களை நைசாக வாங்கி, அவர்களுக்கு பலன் சொல்வது போல பார்த்து விடுவது. அதில் எதாவது அவனுக்கு செட்டாகுமா என்று பார்ப்பது. இன்னும் ஒன்றும் அமையலியாம். சொல்றான்.

    இப்படி எல்லாம் டெக்னிகலாக நம்மாளுங்க யோசிக்கறாங்க.

    நாம் இயற்றிய ஒரு செய்யுள்:

    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண - உயர்
    காதல் நலமேனவே களினடமிடுவோம்!
    காதலது நல்லின்பம் காதலி தெய்வம்
    அதில் ஊருசுவை யுண்டுவஃ துயிர்கட்கமுதாம்!

    இந்த காதல் திருமணத்துக்கு பின் வரும் காதலை குறித்தது.

    நமது முன்னாள் மேதகு ஜனாதிபதி திரு ராதாக்ருஷ்ணன் அவர்களிடம் ஒரு ஆங்கில நண்பர் கேட்டாராம், "அது எப்படி உங்கள் கலாசாரத்தில் காதலிக்காமல், முன் பின் தெரியாமல் ஒரு பெண்ணை கலியாணம் பண்ணிக்கொல்லுகிரீர்கள்?" என்றி. அதற்கு நம்மவர் சொன்னாராம் "உங்கள் காதல் முடிவடையும் நேரத்தில் எங்கள் காதல் ஆரம்பிக்கிறது" என்று...... எங்கோ படித்தது.....


    அன்புடன்
    காலகாலதாசன்
    புவனேஸ்வர்

    ReplyDelete
  8. ////Blogger geekay said...
    Good One!
    I am Happy with Bajji, Filter Coffee and arranged Marriage.
    GK
    BLR////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  9. /////Blogger geekay said...
    As usual, Excellent post!!
    I am happy with Bajji,Filter Coffee and arranged marriage.
    Your old student,
    GK-BLR/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger Ak Ananth said...
    ஓடிப் போய் திருமணம் செய்துக் கொண்டால் திருமண செலவாவது மிச்சமாகும். அந்த பணத்தை வைத்து எங்காவது வெளிநாட்டிற்கு தேனிலவு போகலாம். அல்லது திருமணத்திற்கு பிறகு குடும்ப செலவிற்கு அந்த பணம் பயன்படும். திருமணம் என்றால் தாலி கட்டுவதுதானே முக்கியம்./////

    ஓடிப்போயா.....................? கணக்காய்வாளரே உங்கள் கணக்கு சரியாக இல்லை! கவியரசர் கண்ணதாசன் சொல்லிவிட்டுப்போனதை மறந்துவிட்டீர்களே!

    காதலிக்கும்போது:

    மல்லிகை மலர் சூடிக் காத்து நில்லடி
    மாலை இளந்தென்றல் தன்னைத் தூது விடடி

    திருமணம் என்று முடிவு செய்த பின்:

    நல்லதொரு நாள பார்த்த்து சேதி சொல்லடி
    நாட்டோரைச் சாட்சிவைத்து வந்து விடடி!

    ReplyDelete
  11. /////Blogger Thava Kumaran said...
    ஐயாவுக்கு வணக்கம்..
    பதிவு வழக்கம் போல அருமை..நல்ல கருத்துக்களை சொல்லிருக்கீங்க.நன்றி./////

    உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. அன்புடன் பாங்கான பண்பும் உடைய வாத்தியாரய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.வாலண்டைன் தினத்தன்று வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடவும் மிகவும் நன்றாகவே இருந்தது,தங்களின் பதிவைப் போலவே.குறிப்பிட்ட மங்கையின் பதில் மிகவும் கவனத்தை ஈர்ப்பதாகவுமுள்ளது.இது அந்த பெண்ணின் தைரியமாக தெரியவில்லை. பதிலாக அசட்டுத்தனம் என்று தெரிகிறது.
    ஸம்ஜாத்தோ டீக் ஸே மகர் லக்த்தாஹை பஹுத் லோச்சா ஹை.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  13. Blogger அய்யர் said...
    விவாகரத்து பெருகி வரும் சூழலில்
    விவகாரங்கள் காதலினால் மட்டுமா
    காதல் சோசியமும் உண்டு. அது திரை
    கலைஞர் பாக்கியராசுக்கு நன்கு தெரியும்
    ஆணும் பெண்ணும் உரிமையை
    அப்படி மாற்றிக் கொண்டால்
    வழக்கம் போல்
    வலமாக வரும் பாடல் இப்படித்தானிருக்கும்

    பொறந்தாலும் ஆம்பிள்ளையா பொறக்ககூடாது - அய்யா
    பொறந்து விட்டா
    பொம்பிள்ளைய நினைக்க கூடாது
    ஆம்பிள்ளை எல்லாம் பொம்பிள்ளை போலே மாறவும் கூடாது
    பெண் ஆடும் ஆட்டத்தை கண்டு நோட்டத்தை கண்டு வாடவும் கூடாது
    ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே
    அய்யா உன்னை நினைச்சேனே
    அர்ஜ்சுனன் போல அழகிருக்க
    அனுமார் ஜாதி பிடிச்சேனே
    பரம்பரை ஞாபகம் போகலையே பழையத இன்னும் மறக்கலையே
    மரத்துக்கு மேலே தாவுறியே மனுசனை குரங்கா நினைகிறியே
    காதலை கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
    உன்னை எனக்குன்னு எழுதி வச்சான் உறவை நனச்சி அழுக வச்சான்
    சிரிக்கிற காதல் முறிந்து விடும் அழுகுற காதல் உறுதி பெறும்
    முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை மணந்துவிடு
    இதை இப்படி பாடுவர்
    இன்றைய இளைஞர்கள்
    முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை "மறந்து" விடு/////

    முடிகிறவரைக்கும் சிரித்தும், முடிந்த பிறகு அழுகின்ற கேஸ்களும் உண்டு சுவாமி! எல்லாம் வங்கி வந்த வரம்!

    ReplyDelete
  14. /////Blogger Ananthamurugan said...
    அய்யாவிற்க்கு காதலர் தின நல்வாழ்த்துகள் !!!/////

    காலன் அழைக்கும் பருவத்தில் இருப்பவர்களுக்கெல்லாம், கலக்கல் (காதல்) வாழ்த்துக்கள் எதற்கு சாமி?

    ReplyDelete
  15. /////Blogger Bhuvaneshwar said...
    காதல் மறுக்கப்படுவது ஒரு வகையில் நன்மையே. காதலித்து, கைவிடப்பட்டு கொஞ்ச நாள் அவளை/அவனை பற்றி நினைத்து உருகி, இன்னும் சிலர் கையை கீறுவது என்று எல்லாம் போய்.... நல்ல பிள்ளையாக அம்மா அப்பா சம்மதத்துடன் தேடி ஏற்பாட்டு திருமணம் பண்ணுவதே நலமாக இருக்கும்.
    எனக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அனானுக்கு கொஞ்சம் ஜோதிடம் தெரியும். பழகும் பெண்களில் கொஞ்சம் பிடித்த பெண்களின் ஜாதகங்களை நைசாக வாங்கி, அவர்களுக்கு பலன் சொல்வது போல பார்த்து விடுவது. அதில் எதாவது அவனுக்கு செட்டாகுமா என்று பார்ப்பது. இன்னும் ஒன்றும் அமையலியாம். சொல்றான்.
    இப்படி எல்லாம் டெக்னிகலாக நம்மாளுங்க யோசிக்கறாங்க.
    நாம் இயற்றிய ஒரு செய்யுள்:
    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண - உயர்
    காதல் நலமேனவே களினடமிடுவோம்!
    காதலது நல்லின்பம் காதலி தெய்வம்
    அதில் ஊருசுவை யுண்டுவஃ துயிர்கட்கமுதாம்!
    இந்த காதல் திருமணத்துக்கு பின் வரும் காதலை குறித்தது.
    நமது முன்னாள் மேதகு ஜனாதிபதி திரு ராதாக்ருஷ்ணன் அவர்களிடம் ஒரு ஆங்கில நண்பர் கேட்டாராம், "அது எப்படி உங்கள் கலாசாரத்தில் காதலிக்காமல், முன் பின் தெரியாமல் ஒரு பெண்ணை கலியாணம் பண்ணிக்கொல்லுகிரீர்கள்?" என்றி. அதற்கு நம்மவர் சொன்னாராம் "உங்கள் காதல் முடிவடையும் நேரத்தில் எங்கள் காதல் ஆரம்பிக்கிறது" என்று...... எங்கோ படித்தது.....
    அன்புடன்
    காலகாலதாசன்
    புவனேஸ்வர்/////

    வாழ்க உங்கள் பெற்றோர் சமர்த்தான பிள்ளையைப் பெற்றமைக்காக!

    ReplyDelete
  16. //////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புடன் பாங்கான பண்பும் உடைய வாத்தியாரய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.வாலண்டைன் தினத்தன்று வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடவும் மிகவும் நன்றாகவே இருந்தது,தங்களின் பதிவைப் போலவே.குறிப்பிட்ட மங்கையின் பதில் மிகவும் கவனத்தை ஈர்ப்பதாகவுமுள்ளது. இது அந்த பெண்ணின் தைரியமாக தெரியவில்லை. பதிலாக அசட்டுத்தனம் என்று தெரிகிறது.
    ஸம்ஜாத்தோ டீக் ஸே மகர் லக்த்தாஹை பஹுத் லோச்சா ஹை.
    நன்றியுடன்,
    -Peeyes./////

    அசட்டுத்தனம்தானே சுவாமி....! அது இல்லாவிட்டால் எப்படி? காதல் கோட்டைக்கு முதல் வாசலே அதுதான்! இரண்டாவது வாசல்..? அசட்டுத் துணிச்சல்! இன்னும் உள்ள வாசல்கள்...? நிறைய உள்ளன. கதவைத் திற்க்க மாட்டார்கள். ஏறிக் குதிக்க வேண்டிய வாசல்களும் உள்ளன! பின்னூட்டத்தில் இவ்வளவுதான் சொல்ல முடியும்! அர்த்தமாயிந்தா சாமி?

    ReplyDelete
  17. இன்று காதல் திருமணத்திற்கு எதிராக சில சாதிச் சங்கங்களும், சாதி சார்ந்த அரசியல் கட்சிகளும் கொடி தூக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுக் கலாச்சார நாளான வாலண்டின் நாளில் காதலுக்கு ஆலோசனை கூறியுள்ள உங்களுக்கு
    அபாரமான துணிச்சல்தான்.

    ஒருதலைக் காதலை நிராகரித்து அமில வீச்சுப் பெற்று உயிர்துறந்த வினோதினியின் ஆன்மா சாந்தியடைய காதலர் தினத்தன்று அஞ்சலி!

    ReplyDelete
  18. //////Blogger kmr.krishnan said...
    இன்று காதல் திருமணத்திற்கு எதிராக சில சாதிச் சங்கங்களும், சாதி சார்ந்த அரசியல் கட்சிகளும் கொடி தூக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுக் கலாச்சார நாளான வாலண்டின் நாளில் காதலுக்கு ஆலோசனை கூறியுள்ள உங்களுக்கு
    அபாரமான துணிச்சல்தான்.
    ஒருதலைக் காதலை நிராகரித்து அமில வீச்சுப் பெற்று உயிர்துறந்த வினோதினியின் ஆன்மா சாந்தியடைய காதலர் தினத்தன்று அஞ்சலி!//////

    கண்ணை மூடிக்கொண்டு காதலை ஆதரிக்கவில்லையே சுவாமி. காதலின் உண்மையான நிலையையும், பெற்றோர்களின் கண்ணீரையும் எழுதியிருக்கிறேனே சுவாமி. அதை நீங்கள் கவனிக்கவில்லையா? உண்மையை (உண்மை நிலைமையை) யார் வேண்டுமென்றாலும் சொல்லலாம். அதற்குத் துணிச்சல் எதற்கு?

    ReplyDelete
  19. திரு KMRK குறிப்பிட்ட ஜாதிச் சங்கங்களுக்கு வேறு வேலை இல்லை போலும். அல்லது அவர்களுக்கு வேறு issue எதுவும் கிடைக்கவில்லையா. Waste fellows.

    ஜாதிப் பிரிவினைகள் தீர காதல் கலப்புத் திருமணங்கள் படி கல்லாக அமையலாம்.

    ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...
    அஃதொன்றே இவ்வுலகத் தலைமையின்பம் - பாரதி

    ReplyDelete
  20. ஐயா ,
    நானும் தங்கள் அஞ்சல் வழி பாடங்களை கற்று கொள்ளலாம் என்று ஆசை படுகிறேன்.
    இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?. தங்கள் புத்தகங்கள் வெளி வந்து விட்டனவா ? சென்னையில் எங்கு கிடைக்கும் ? நன்றி.

    ReplyDelete
  21. /////Blogger Ak Ananth said...
    திரு KMRK குறிப்பிட்ட ஜாதிச் சங்கங்களுக்கு வேறு வேலை இல்லை போலும். அல்லது அவர்களுக்கு வேறு issue எதுவும் கிடைக்கவில்லையா. Waste fellows.
    ஜாதிப் பிரிவினைகள் தீர காதல் கலப்புத் திருமணங்கள் படி கல்லாக அமையலாம்.
    ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே...
    அஃதொன்றே இவ்வுலகத் தலைமையின்பம் - பாரதி/////

    ஜாதி ஓட்டுக்களுக்காக ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்கள் இங்கே (நாட்டில்) அதிகம். அது எங்களுக்குப் பழகிப்போய்விட்ட சமாச்சாரம். அவர்களைக் குறை சொல்வதில் பயனில்லை. மக்களின் மேல்தான் குறை!

    ReplyDelete
  22. /////Blogger murali krishna g said...
    ஐயா ,
    நானும் தங்கள் அஞ்சல் வழி பாடங்களை கற்று கொள்ளலாம் என்று ஆசை படுகிறேன்.
    இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?. தங்கள் புத்தகங்கள் வெளி வந்து விட்டனவா ? சென்னையில் எங்கு கிடைக்கும் ? நன்றி.//////

    அஞ்சல் வழி, கொஞ்சல் வழியெல்லாம் கிடையாது. மேல்நிலை என்னும் தனி இணையதள வகுப்பு மட்டும் உண்டு. அது உறுப்பினர்களுக்கு மட்டுமே. உங்களைப் பற்றி எழுதுங்கள். ப்ளாக்கில் உள்ள அடிப்படைப் பாடங்களைப படித்து உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும். எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

    ReplyDelete
  23. ஓடிப் போய் திருமணம் செய்வதை நான் ஆதரிக்கவில்லை. அதனால் நன்மை/தீமை என்ற எந்த விளைவும் இருக்கலாம். திருமணத்திற்கான செலவு மிச்சமாகும் என்றேன். ஆனால் அது சரியானது என்று வாதாடவில்லை.

    ReplyDelete
  24. ஓடிப்போய் கல்யாணம் பண்ணுவது தமிழகத்துக்கு புதிதல்ல. அதற்கு அழகாக ஒரு பெயர் உண்டு, நமது சங்க இலக்கியத்தில். "உடன்போக்கு" என்பதாகும் அப்பெயர். பல பாடல்களில் நற்றாய், காதலனுடன் பாலை தனது மகள் பாலை நிலம் கடந்து போவதை எண்ணி புலம்புவது இருக்கும்.


    அதே போல, களவு ஒழுக்கம் கூட இருந்தத.

    இதை எல்லாம் நான் ஆதரிக்கவில்லை, எதிர்க்கவும் இல்லை. ஒரு தகவலாக கூறுகிறேன்.

    காலகாலதாசன்
    புவனேஷ்வர்

    ReplyDelete
  25. Love marriage or arranged marriaged the sucess of the married life depends on the couples character and commitment towards there married life.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com