மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.1.13

Astrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல?

Astrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல?

அலசல் பாடம்

கஷ்டங்களுக்கு ஒரு உதாரண ஜாதகம்! Example horoscope for Difficulties

பிரச்சினை இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கை என்பது சீட்டாடத்தைப் போன்றது. கையில் 13 கார்டுகளுடன் நீங்கள் ஆடித்தான் ஆகவேண்டும். ஒரு கார்டை நீங்கள் கீழே இறக்கினால், பதிலுக்குக் கீழே இருந்து ஒரு கார்டை எடுத்துக்கொள்ள வேண்டும். சீட்டாடுபவர்களுக்கு அல்லது முன்பு ஆடியவர்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

அத்துடன் சிலருக்கு ஒரு பிரச்சினைதான் இருக்கும். அதைத் தீர்த்தவுடன் அடுத்த பிரச்சினை வரும். ஆனால் சிலருக்குக் ஒரே நேரத்தில் நான்கைந்து பிரச்சினைகள் இருக்கும். அதாவது ரம்மி சேராமல், கையில் சில ஜோக்கர்க்ளும் பல பெரிய கார்டுகளும் கையில் இருப்பது போன்ற நிலைமை!

அதுபோல ஒரு அன்பருக்கு ஒரே நேரத்தில் பல பிரச்சினைகள். செய்யும் தொழில் சீராக இல்லை. அதில் நஷ்டம். திருமண வாழ்க்கையில் பிரச்சினை. மனைவியுடன் சுமூகமான உறவு இல்லை. கடும் பணப் பிரச்சினை. உடல் நலமின்மை. இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து படுத்தி எடுத்தன!

ஆளை விட்டால் போதும் எங்காவது ஓடிப் போய்விடலாம் என்னும் நிலைமை!

அது எப்படி ஓடிப்போக முடியும்? விதி விடுமா?

நீ திருடித்தான் \பிழைக்க வேண்டுமென்றால், திருடித்தான் பிழைக்க வேண்டும். திருடித்தான் மகிழ வேண்டுமென்றால், அப்படித்தான் மகிழ முடியும் (இந்த வரி பதிவுத் திருடர்களுக்காக!)

என்ன ஆயிற்று அவருக்கு?

வாருங்கள் அவருடைய ஜாதகத்தை அலசுவோம்? அவருக்கு நாம் என்ன உதவியா செய்யப் போகிறோம்? இல்லை! நமது பயிற்சிக்காக அதை இன்று அலசுவோம்
--------------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:

ஜாதகத்தில் உள்ள பெரிய குறை கேமதுருமா யோகத்தின் பிடியில் ஜாதகம் உள்ளது.  கேமதுருமா யோகம் என்பது மோசமான அவ யோகம். உங்கள் மொழியில் சொன்னால் தரித்திர யோகம். அந்தஅவயோகம் உள்ள ஜாதகன் வறுமையில் வாடும்படியாகிவிடும். Kema Druma Yoga is said to occur when there is no planet positioned in either second house or in the twelfth house from Moon; சந்திரனுக்கு இரண்டுபக்கமும் எந்த கிரகமும் இல்லாமலும், உடன் எந்த கிரகமும் இல்லாமலும், சந்திரன் தனித்து இருக்கும் நிலைமை!

2. யோககாரகனான செவ்வாய் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். அவனால் பயனில்லாமல் போய்விட்டது.

3. அதே போல 2ஆம் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய புதனும் சூரியனுக்கு அருகில் சென்று அஸ்தமித்துவிட்டான். இரண்டாம் வீடு பணத்திற்கான வீடு. பதினொன்றாம் வீடு லாபத்திற்கான வீடு.

4. லக்கினத்திற்கு எட்டாம் வீட்டுக்காரன் (அஷ்டமாதிபதி) குரு அந்த வீட்டிற்கு 12ல், அதாவது லக்கினத்திற்கு ஏழில் அமர்ந்து திருமண வாழ்க்கையில் கஷ்டங்களைக் கொடுத்தான். எட்டாம் அதிபதிஎன்றாலே கஷ்டங்களைக் கொடுப்பவன். அதை மனதில் வையுங்கள்.

5. அத்துடன் ஜாதகனுக்குக் குரு திசை நடந்த போது, எட்டாம் அதிபதி லக்கினத்தையும் சூரியனையும் பார்த்ததால் ஜாதகனுக்கு உடல் நலம் இல்லாமலும் போய் விட்டது.

ஜாதகன் கடைசிவரை எந்த நன்மையையும் அடையவில்லை. சிம்ம லக்கின ஜாதகன் என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டு, எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல


என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை மனதில் பாடிக்கொண்டே காலத்தை ஓட்டினான்!

மேல்நிலை வகுப்பிற்காக முன்பு எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணவக் கண்மணிகள் பலர் யோசனை சொல்லியுள்ளார்கள். ”சார், பாடங்களை Text Format ல் பதிவிடாமல் image formatல் பதிவிடுங்கள். திருட்டுப் போவதைத் தவிர்க்கலாம்”

உங்கள் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளேன். இன்றையப் பாடத்தை image formatல் கீழே பதிவிட்டுள்ளேன். இந்த முறையில் பதிவிடுவதில் எனக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அதை விட முக்கியமாக உங்களுக்குப் படிப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.

இரண்டில் (Text Format  &  image format) எது படிப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
 ---------------------------------------------------------------------------------------------
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

56 comments:

  1. கட்டுரை நன்று. முன்னர் நீங்கள் எழுதிய கட்டுரை இதைவிட பல தகவல்களைக் கொண்டதாக உள்ளது. அதன் சுட்டி http://classroom2007.blogspot.com.au/2009/09/loneliness-yoga.html.

    நீங்களே தொடர்புபட்ட உங்கள் சுட்டிகளை கட்டுரைகளுடன் இணப்பது நல்லது.
    நன்றிகள்.

    ReplyDelete
  2. அய்யா காலை வணக்கம் .என்னால் இரண்டையும் படிக்க முடிகின்றது . நன்றி

    ReplyDelete
  3. Upto me its better to be on Text, Nobody cant steal your intelligence thats the intellectual property. Though people they try they will realize this soon and stop doing same.

    ReplyDelete
  4. அருமை... எந்த வீட்டதிபதியும் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தால் அந்த வீட்டு பலன் அவ்வளவுதான்....

    ReplyDelete
  5. எழுத்துக்களின் அளவை மட்டும் கொஞ்சம் பெரிதாக்கினால் போதும்... இமேஜ் பார்மட் ஓகே....

    ReplyDelete
  6. Sir, very useful lesson.

    Few doubts:
    1.lagnam has guru's 7 parvai. Why not it helped him. (guru in 7th place is very good as he see lagnam directly)
    2. if a horo has kemadura yogam, then what ever other good things he has will not help(even guru in 7th place got parivarthana and lagnathypathy suryan got aatchi balam also he sits in lagnam). Is this right sir.
    3.by Only seeing rasi, can we analyse a horo perfectly without seeing amsam.

    Sir, i am reading your lessons through mobile only. If you keep in image format, it is not visible in actual size.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  7. வறுமையை சொல்லும்
    வெறுமை ஜாதகத்தின்

    அலசல் பாடம்
    அருமை..

    காலியாக போன இரண்டாவது இடம்
    ஜாலியாக இல்லாமல் செய்தது

    பாடம் பாதுகாக்க வேண்டுமென்பதால்
    படமாக வந்தாலும் பரவாயில்லை

    எழுத்துருவாக வந்தாலும்
    எதுவும் சொல்வதற்கு இல்லை

    உங்கள் வசதி மற்றும்
    எங்களுக்கான பாடத்தின் பாதுகாப்பு

    முக்கியம் இது தானே..
    முனைவதில் சிரமம் அவ்வளவுதானே

    எந்த மாற்றங்களுமே முதலில்
    ஏமாற்றங்களை தரும் ..

    உறுதி எண்ணத்திலும் செயல்கள்
    உள்ளத்திலும் இருந்தால்

    அள்ளி அணைத்துக் கொள்வாள்
    அன்பிற்கினிய "வெற்றி" தேவதை

    இந்த வகுப்பில்
    இந்த பாடலினை

    வழக்கம் போல்
    வலமாக சுழல விட அனுமதியுங்கள்

    உலகத்தின் தூக்கம் கலையாதோ?
    உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?

    உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?
    ஒரு நாள் பொழுதும் புலராதோ?

    கடல் நீர் நடுவே பயணம் போனால்
    குடிநீர் தருபவர் யாரோ?

    தனியாய் வருவோர் துணிவைத் தவிர
    துணையாய் வருபவர் யாரோ?

    ஒரு நாள் போவார் ஒரு நாள்வருவார்
    ஒவ்வொரு நாளும் துயரம்

    ஒரு ஜான் வயிரை வளர்ப்பவன் உயிரை
    ஊரார் நினைப்பது சுலபம்

    ReplyDelete
  8. Image format looks nice.Please increase little big font size.

    Use the below freeware for easy Image capture.

    http://getgreenshot.org/downloads/

    ReplyDelete
  9. sir vanakam sir jathakathil .kethu .gudai piddithu gondu..pokirthu allava..

    ReplyDelete
  10. பாடம் ஏற்கனவே தெரிந்த செய்தியானாலும் மீள்பார்வையாக மனதில் நன்கு பதிகிறது. நன்றி ஐயா!

    எனக்கு text தான் ஏற்றதாக உள்ளது.

    என்னுடைய கட்டுரை 'இசைவிரும்பும் கூத்தனார்'என்ற தலைப்பில்
    தீபம் என்னும் ஆன்மீக மாதம் இருமுறை கல்கி குழும இதழில் (20 ஜனவரி 2013தேயிட்டு 5 ஜனவரி 2013 சனிக்கிழமை அன்றே
    வெளியாகியுள்ளது)பிரசுரமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதில் பிர்சுரமாகியுள்ள மூன்று புகைப்படங்களும் அடியேன் எடுத்ததுதான்.சுமார்
    25% கட்டுரை 'எடிட்' செய்யப்பட்டு சுருக்கப்பட்டு விட்டது.
    இருப்பினும் கட்டுரையின் மையக் கருத்து மாறவில்லை.

    வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. அய்யா, சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் அது 'புதாத்திய யோகம்' என்று சொல்கிறார்களே...? அது குறித்து தங்கள் கருத்தை அறிந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்..

    ReplyDelete
  12. திருடர்களுக்கான சாட்டை அடியுடன் , பாடம் அருமை
    தொடரட்டும் உங்கள் பணி,

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,

    திருடர்களுக்கு பயந்து ,நீங்களும் பின் வாங்க வேண்டாம்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களே,
    பாடம் நன்று, எப்போதும் போல!

    நான் உங்களுக்கு முன்பே, ப்ளாக்கரில் disable text selection செய்வதற்காக ஒரு வழிமுறையை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தேன். அதை செய்தால் இமேஜ் போலத்தான் உங்கள் பதிவு இருக்கும்.
    அதை செய்து பாருங்கள். மின்னஞ்சலில் "Text selection, disable" தேடிப்பார்த்தால் அந்த இருக்கும். இல்லை எனில் மீண்டும் அனுப்பி வைக்கிறேன்.

    Please note, the image file of the lesson today is overlapping with the text in side bar.

    நன்றி.
    புவனேஷ்

    ReplyDelete
  14. I AM FEELING HARD TO READ PLEASE POST IN TEXT FORMAT

    ReplyDelete
  15. I AM FEELING HARD TO READ PLEASE POST IN TEXT FORMAT

    ReplyDelete
  16. அய்யா,

    வணக்கம். உதாரண ஜாதகத்தின் அலசல்
    படித்ததும் துக்கம் மேலிட்டது.

    எனினும் உங்கள் அலசல் அருமை.

    உங்கள் மாணவி

    ReplyDelete
  17. Sir, The lesson is very good and interesting. Your intellectual property is to be protected. Please go for the 2nd option with a little big better font.

    With Regards.

    Mu.Prakaash

    ReplyDelete
  18. எனக்கு text தான் ஏற்றதாக உள்ளது.

    ReplyDelete
  19. Both are easy to read. Please do as your convenient format.

    Thanking you.

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா...

    நல்ல பதவுரை.

    இமேஜ்ல் உள்ள டெக்ஸ்ட் சற்று பெரிதாக இருந்தாள் அனைவரும் படிக்கும் வகையில் இருக்கும்.


    ஒரு கிரகம் லக்னத்துக்கு 12ல் மறைவதிற்கும்....தன் வீட்டிற்கும் 12ல் மறைவதிற்கும் என்ன வேறுபாடுகள்....

    ReplyDelete
  21. வண்க்கம் ஐயா,இமேஜ் முறையில் இருக்கும் பதிவு படிக்க சிறிது கஷ்ட்டமாகத்தான் உள்ளது,போகக் போக பழக்கமாகிவிடும். நீங்கள் எந்த முறையில் சொல்லிக்கொடுத்தாலும் வரவேற்கிறோம் ஐயா.

    நீங்கள் கொடுத்துள்ள உதாரண ஜாதகத்தை போன்றே என்னிடமும் சிம்மலக்ன‌ ஜாதகம் ஒன்று உள்ளது.சிம்ம லக்னம்,8ல் சூரியன்,செவ்வாய்,2,11க்குரிய புதன் அதே 8ல் அஸ்தங்கம், நீச்சம்,8ம் அதிபதி லக்ன‌த்திற்கு 3ல், அதாவது 8க்கு 8ல்,7ம் அதிபதி சனி 7ல் குரு பார்வையில்.ஆனால் அம்சத்தில் புதன் கன்னியில் நீச பங்க ராஜயோகத்தில் உள்ளார்.இதனால் என்ன நிவர்த்தி கிடைக்கும்? நன்றி ஐயா.

    ReplyDelete
  22. Guruji,
    Please continue in the TXT format itself.Its easily readable compare to image format.Let them loot, people know who's article its from the words and style its written.
    Vrichigam

    ReplyDelete
  23. அலசல் பாடம் அருமை!
    புதிய வகுப்பிற்கான அறிவிப்பு மற்றும் கட்டண விவரம் அளியுங்கள் அய்யா!

    ReplyDelete
  24. பாடம் அருமை. இமேஜ் ஃபார்மெட்டில் எழுத்துக்கள் படிக்க சிரமமாக இருக்கிறது.
    எழுத்துக்களை பெரிது படுத்த இயலுமா? Text தான் படிக்க சரியாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  25. சார் வணக்கம்
    எப்படி போட்டாலும் படிப்பேன் உங்கள் விருப்பம் சார் எனக்கு கூட ரொம்ப துன்பம் அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நான் சிம்ம லக்கன‌த்தில் பிறக்க கூடாது சார்.இன்று பாடம் நல்லாயிருந்தது ரொம்ப நன்றி

    ReplyDelete
  26. /////Blogger krishnar said...
    கட்டுரை நன்று. முன்னர் நீங்கள் எழுதிய கட்டுரை இதைவிட பல தகவல்களைக் கொண்டதாக உள்ளது. அதன் சுட்டி http://classroom2007.blogspot.com.au/2009/09/loneliness-yoga.html.
    நீங்களே தொடர்புபட்ட உங்கள் சுட்டிகளை கட்டுரைகளுடன் இணப்பது நல்லது.
    நன்றிகள்//////

    முயற்சிக்கிறேன். நன்றி கிருஷ்ணன் சார்

    ReplyDelete
  27. //////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம் .என்னால் இரண்டையும் படிக்க முடிகின்றது . நன்றி/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. ///////Blogger சங்கர் said...
    Upto me its better to be on text./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. /////Blogger சங்கர் said...
    Upto me its better to be on Text, Nobody cant steal your intelligence thats the intellectual property. Though people they try they will realize this soon and stop doing same./////

    உணர்ந்தால் சரிதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. //Blogger ஸ்கூல் பையன் said...
    அருமை... எந்த வீட்டதிபதியும் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தால் அந்த வீட்டு பலன் அவ்வளவுதான்../////..

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. /////Blogger ஸ்கூல் பையன் said...
    எழுத்துக்களின் அளவை மட்டும் கொஞ்சம் பெரிதாக்கினால் போதும்... இமேஜ் பார்மட் ஓகே.../////.

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  33. //////Blogger KJ said...
    Sir, very useful lesson.
    Few doubts:
    1.lagnam has guru's 7 parvai. Why not it helped him. (guru in 7th place is very good as he see lagnam directly)
    2. if a horo has kemadura yogam, then what ever other good things he has will not help(even guru in 7th place got parivarthana and lagnathypathy suryan got aatchi balam also he sits in lagnam). Is this right sir.
    3.by Only seeing rasi, can we analyse a horo perfectly without seeing amsam.
    Sir, i am reading your lessons through mobile only. If you keep in image format, it is not visible in actual size.
    Thanks,
    Sathishkumar GS/////

    There will be a separate session for personal doubts. Please wait

    ReplyDelete
  34. ////Blogger அய்யர் said...
    வறுமையை சொல்லும்
    வெறுமை ஜாதகத்தின்
    அலசல் பாடம்
    அருமை..
    காலியாக போன இரண்டாவது இடம்
    ஜாலியாக இல்லாமல் செய்தது
    பாடம் பாதுகாக்க வேண்டுமென்பதால்
    படமாக வந்தாலும் பரவாயில்லை
    எழுத்துருவாக வந்தாலும்
    எதுவும் சொல்வதற்கு இல்லை
    உங்கள் வசதி மற்றும்
    எங்களுக்கான பாடத்தின் பாதுகாப்பு
    முக்கியம் இது தானே..
    முனைவதில் சிரமம் அவ்வளவுதானே
    எந்த மாற்றங்களுமே முதலில்
    ஏமாற்றங்களை தரும் .
    உறுதி எண்ணத்திலும் செயல்கள்
    உள்ளத்திலும் இருந்தால்
    அள்ளி அணைத்துக் கொள்வாள்
    அன்பிற்கினிய "வெற்றி" தேவதை//////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  35. /////Blogger Prasanna Venkatesh said...
    Image format looks nice.Please increase little big font size.
    Use the below freeware for easy Image capture.
    http://getgreenshot.org/downloads//////

    உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. ////Blogger eswari sekar said...
    sir vanakam sir jathakathil .kethu .gudai piddithu gondu..pokirthu allava../////

    இல்லை! ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இல்லையே? இருந்தால் அல்லவா குடை தேவைப்படும்?

    ReplyDelete
  37. ////Blogger kmr.krishnan said...
    பாடம் ஏற்கனவே தெரிந்த செய்தியானாலும் மீள்பார்வையாக மனதில் நன்கு பதிகிறது. நன்றி ஐயா!
    எனக்கு text தான் ஏற்றதாக உள்ளது.
    என்னுடைய கட்டுரை 'இசைவிரும்பும் கூத்தனார்'என்ற தலைப்பில்
    தீபம் என்னும் ஆன்மீக மாதம் இருமுறை கல்கி குழும இதழில் (20 ஜனவரி 2013தேயிட்டு 5 ஜனவரி 2013 சனிக்கிழமை அன்றே
    வெளியாகியுள்ளது)பிரசுரமாகியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அதில் பிர்சுரமாகியுள்ள மூன்று புகைப்படங்களும் அடியேன் எடுத்ததுதான்.சுமார்
    25% கட்டுரை 'எடிட்' செய்யப்பட்டு சுருக்கப்பட்டு விட்டது.
    இருப்பினும் கட்டுரையின் மையக் கருத்து மாறவில்லை.
    வாசித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன்./////

    கல்கி குழுமம் தரமான வாசகர்களைக் கொண்ட பத்திரிக்கை நிறுவனம். அதில் உங்கள் கட்டுரை வெளியனதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் வெளி மாநிலத்தில் இருக்கிறேன். ஊருக்குத் திரும்பியவுடன் அந்த இதழை வாங்கிப் பார்த்து என் கருத்தைக் கூறுகிறேன்

    ReplyDelete
  38. ////Blogger Advocate P.R.Jayarajan said...
    அய்யா, சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் அது 'புதாத்திய யோகம்' என்று சொல்கிறார்களே...? அது குறித்து தங்கள் கருத்தை அறிந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்..///////

    சரிதான். சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால் அது 'புதாத்திய யோகம்தான். ஆனால் அந்த யோகம், அது கேந்திரம் அல்லது திரிகோணங்களில் அமையும் போதுதான் முழுப்பலன்.
    This Yoga results in making the native intelligent, smart, and help him acquire good education, knowledge and skills with less hard work. The native also earns high status, individual admiration; and has all comforts and contentment in his life.

    ReplyDelete
  39. //////Blogger rajanblogs said...
    திருடர்களுக்கான சாட்டை அடியுடன் , பாடம் அருமை
    தொடரட்டும் உங்கள் பணி,
    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது,
    திருடர்களுக்கு பயந்து ,நீங்களும் பின் வாங்க வேண்டாம்.
    வாழ்க வளமுடன்.//////

    பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான் என்று விட்டுவிட்டேன். பின் வாங்க மாட்டேன். நன்றி!

    ReplyDelete
  40. /////Blogger Bhuvaneshwar said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களே,
    பாடம் நன்று, எப்போதும் போல!
    நான் உங்களுக்கு முன்பே, ப்ளாக்கரில் disable text selection செய்வதற்காக ஒரு வழிமுறையை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தேன். அதை செய்தால் இமேஜ் போலத்தான் உங்கள் பதிவு இருக்கும்.
    அதை செய்து பாருங்கள். மின்னஞ்சலில் "Text selection, disable" தேடிப்பார்த்தால் அந்த இருக்கும். இல்லை எனில் மீண்டும் அனுப்பி வைக்கிறேன்.
    Please note, the image file of the lesson today is overlapping with the text in side bar.
    நன்றி.
    புவனேஷ்////

    "Text selection, disable" செய்தாலும், திருடுவதற்கு வேறு வழிகள் உள்ளன புவனேஷ்! Text selection, disable" செய்யப்பெற்றுள்ளது!

    ReplyDelete
  41. ////Blogger KARIKAL said...
    I AM FEELING HARD TO READ PLEASE POST IN TEXT FORMAT////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  42. /////Blogger Lakhsmi Nagaraj said...
    அய்யா,
    வணக்கம். உதாரண ஜாதகத்தின் அலசல் படித்ததும் துக்கம் மேலிட்டது.
    எனினும் உங்கள் அலசல் அருமை.
    உங்கள் மாணவி/////

    துக்கம் எதற்கு? படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை முக்கியம்! இறையருள் கை கொடுக்கும்!

    ReplyDelete
  43. ////Blogger Muthukrishnan Prakash said...
    Sir, The lesson is very good and interesting. Your intellectual property is to be protected. Please go for the 2nd option with a little big better font.
    With Regards.
    Mu.Prakaash//////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  44. /////Blogger arul said...
    text format is good sir/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  45. /////Blogger dubai saravanan said..
    எனக்கு text தான் ஏற்றதாக உள்ளது./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  46. ///Blogger C Jeevanantham said...
    Both are easy to read. Please do as your convenient format.
    Thanking you./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  47. /////Blogger raja said...
    வணக்கம் ஐயா...
    நல்ல பதவுரை.
    இமேஜ்ல் உள்ள டெக்ஸ்ட் சற்று பெரிதாக இருந்தால் அனைவரும் படிக்கும் வகையில் இருக்கும்.
    ஒரு கிரகம் லக்னத்துக்கு 12ல் மறைவதிற்கும்....தன் வீட்டிற்கும் 12ல் மறைவதிற்கும் என்ன வேறுபாடுகள்..///////..

    உடம்பில் அடிபடுவதற்கும், தலையில் அடிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவோ அதுதான் வேறுபாடு!

    ReplyDelete
  48. /////Blogger Geetha Lakshmi A said...
    வண்க்கம் ஐயா,இமேஜ் முறையில் இருக்கும் பதிவு படிக்க சிறிது கஷ்ட்டமாகத்தான் உள்ளது,போகக் போக பழக்கமாகிவிடும். நீங்கள் எந்த முறையில் சொல்லிக்கொடுத்தாலும் வரவேற்கிறோம் ஐயா.
    நீங்கள் கொடுத்துள்ள உதாரண ஜாதகத்தை போன்றே என்னிடமும் சிம்மலக்ன‌ ஜாதகம் ஒன்று உள்ளது.சிம்ம லக்னம்,8ல் சூரியன்,செவ்வாய்,2,11க்குரிய புதன் அதே 8ல் அஸ்தங்கம், நீச்சம்,8ம் அதிபதி லக்ன‌த்திற்கு 3ல், அதாவது 8க்கு 8ல்,7ம் அதிபதி சனி 7ல் குரு பார்வையில்.ஆனால் அம்சத்தில் புதன் கன்னியில் நீச பங்க ராஜயோகத்தில் உள்ளார்.இதனால் என்ன நிவர்த்தி கிடைக்கும்? நன்றி ஐயா.//////

    லக்கினாதிபதியும், யோககாரகனும் எட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்களே சகோதரி! என்ன நிவர்த்தி கிடைத்து என்ன பயன்?. பிரார்த்தனை ஒன்றுதான் நிவர்த்தியளிக்கும்!

    ReplyDelete
  49. /////Blogger Virichigam said...
    Guruji,
    Please continue in the TXT format itself.Its easily readable compare to image format.Let them loot, people know who's article its from the words and style its written.
    Vrichigam/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி! பலரது கருத்தும் அதுதான்! எனக்கும் Text தான் சரியாகத் தோன்றுகிறது. அப்படியே பதிவிடுகிறேன் நண்பரே!!

    ReplyDelete
  50. /////Blogger ravi krishna said...
    அலசல் பாடம் அருமை!
    புதிய வகுப்பிற்கான அறிவிப்பு மற்றும் கட்டண விவரம் அளியுங்கள் அய்யா!//////

    இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. ஒருவாரம் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  51. /////Blogger Parvathy Ramachandran said...
    பாடம் அருமை. இமேஜ் ஃபார்மெட்டில் எழுத்துக்கள் படிக்க சிரமமாக இருக்கிறது.
    எழுத்துக்களை பெரிது படுத்த இயலுமா? Text தான் படிக்க சரியாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.//////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி! பலரது கருத்தும் அதுதான்! எனக்கும் Text தான் சரியாகத் தோன்றுகிறது. அப்படியே பதிவிடுகிறேன் சகோதரி!

    ReplyDelete
  52. //////Blogger sundari said...
    சார் வணக்கம்
    எப்படி போட்டாலும் படிப்பேன் உங்கள் விருப்பம் சார் எனக்கு கூட ரொம்ப துன்பம் அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நான் சிம்ம லக்கன‌த்தில் பிறக்க கூடாது சார்.இன்று பாடம் நல்லாயிருந்தது ரொம்ப நன்றி/////

    சூப்பர் ஸ்டார் சிம்ம லக்கினம்தான். வருத்தம் எதற்கு? இன்னொரு ஜென்மம் எதற்கு? இதுவே இறுதியாக இருக்கட்டுமே!

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. வணக்கம் ஐயா.
    பாடம் அருமை.

    இமேஜ் ஃபார்மெட்டில் எழுத்துக்களை பெரிது படுத்த இயலுமா? பெரிதுபடுத்தி பதிவிடவும்

    திருட்டு பையல்(கள்) என்ன செய்கிறான் என்று பார்ப்போம்

    -கிமூ-

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com