மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 14

ஜோதிடத் தொடர் - பகுதி 14

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
பூர நட்சத்திரம் (சிம்ம ராசி)

இது சுக்கிரனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. மகம்
5. உத்திரம்
6. சித்திரை
7. விசாகம்
8. கேட்டை
9. மூலம்
10. உத்திராடம்
11. அவிட்டம்
12. சதயம்
13. பூரட்டாதி
14. ரேவதி

ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இவற்றுள் உத்திராடம் 2, 3 4 ஆம் பாதங்கள், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் மகர ராசிக்கு உரியனவாகும். ஜோதிடர்கள் சிம்மத்திற்கு ஆறாம் இடம் மகரம். மகரத்திற்கு எட்டாம் இடம் சிம்மம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மீன ராசிக்கு உரிய நட்சத்திரங்களில் ரேவதி நட்சத்திரம் மகத்திற்குப் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அதை விலக்கிவிடுவது நல்லது..

கடக ராசிக்குரிய நட்சத்திரங்களில், சிம்மத்திற்கு உரிய நட்சத்திரங்களில் எதுவும் பொருத்தமான நட்சத்திரம் இல்லை. 12/1 position to each rasi என்பது இல்லை!.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூரம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் மத்திம பொருத்தம் உண்டு. என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

ரோஹிணி பொருந்தாது!

மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், ஹஸ்தம், சுவாதி, திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் மத்தியமான பொருத்தம் உள்ள நட்சத்திரங்களாகும் மத்திய பொருத்தம். என்றால் சராசரி! அதாவது average. வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தவறில்லை!
 -------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

Geetha Lakshmi A said...

வண்க்கம் ஐயா,6/8,8/6,12/1 என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நட்சத்திரம்,ராசியை தவிர்த்த ஜோதிடர்கள் 1/12 நிலைப்பாட்டில் உள்ள நட்சத்திரம்,ராசியை தவிர்க்காததற்கு காரணம் ஏதாவது உள்ளதுங்களா? நன்றி ஐயா.

Bhuvaneshwar said...

கீதா லக்ஷ்மி அவர்களின் கேள்வியினை நான் வழிமொழிகிறேன். கவலை வேண்டாம் கீதா லக்ஷ்மி, பூரத்துக்கு கன்னி ஒன்று - பன்னிரண்டு. ஆனால் கண்ணியில் இருந்து பார்க்கிற பொழுது பன்னிரண்டு ஒன்று ஆகி விடும் அல்லவா? இன்னும் ஒரு நக்ஷத்திரம் தான் பாக்கி. கன்னி வந்து விடும். அப்புறம் சிம்மம் பன்னிரண்டு - ஒன்று என்ற கணக்கில் பொருந்தாது! ஹீ ஹீ!
இரு பக்கமும் பார்க்க வேண்டும் அல்லவா!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Geetha Lakshmi A said...
வண்க்கம் ஐயா,6/8,8/6,12/1 என்ற நிலைப்பாட்டில் இருக்கும் நட்சத்திரம்,ராசியை தவிர்த்த ஜோதிடர்கள் 1/12 நிலைப்பாட்டில் உள்ள நட்சத்திரம்,ராசியை தவிர்க்காததற்கு காரணம் ஏதாவது உள்ளதுங்களா? நன்றி ஐயா.////

நமது வகுப்பறை மாணவக் கண்மணியின் விளக்கம் கீழே உள்ளது. பாருங்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Bhuvaneshwar said...
கீதா லக்ஷ்மி அவர்களின் கேள்வியினை நான் வழிமொழிகிறேன். கவலை வேண்டாம் கீதா லக்ஷ்மி, பூரத்துக்கு கன்னி ஒன்று - பன்னிரண்டு. ஆனால் கன்னியில் இருந்து பார்க்கிற பொழுது பன்னிரண்டு ஒன்று ஆகி விடும் அல்லவா? இன்னும் ஒரு நக்ஷத்திரம் தான் பாக்கி. கன்னி வந்து விடும். அப்புறம் சிம்மம் பன்னிரண்டு - ஒன்று என்ற கணக்கில் பொருந்தாது! ஹீ ஹீ!
இரு பக்கமும் பார்க்க வேண்டும் அல்லவா!/////

கரெக்ட்! நன்றி புவனேஷ்வர்!

Bhuvaneshwar said...

படத்தில் மாப்பிள்ளை உடை சூப்பர். இந்த உடைக்கு பெயர் தெரியுமா யாருக்காவது?

SP.VR. SUBBAIYA said...

////Blogger Bhuvaneshwar said...
படத்தில் மாப்பிள்ளை உடை சூப்பர். இந்த உடைக்கு பெயர் தெரியுமா யாருக்காவது?/////

திரைப்படங்களில் costume தயாரிப்பாளர்கள் நாயர்களுக்குத் தைக்கும்/தயாரிக்கும் உடைகளில் ஒன்று அது! பெயர்களை அவர்களே சொன்னால்தான் உண்டு சாமி!