மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.1.13

Astrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்னடா செய்வான்?

 Astrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்னடா செய்வான்?

Popcorn Post No.31
பாப்கார்ன் பதிவுகள் - எண்.31

தேதி 22.1.2013 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
இதற்கு முன்னால் Popcorn Post No.30 6.11.2012 செவ்வாய்க் கிழமை அன்று வெளியானது. இடையில் 76 நாட்கள் கழித்து இன்றுதான் அதன் தொடர்ச்சி
வெளியாகிறது. பாப்கார்ன் போஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியை விளங்கச் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்துவது. சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக இருக்கும். பாப்கார்ன் பொட்டலம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவுதான் பதிவும் இருக்கும்.

ஒரு கிரகம் எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அந்த கிரகத்தால் நன்மை இருக்காது. அவரே எட்டில் போய் மாட்டிக்கொண்டு உள்ளார். மாட்டிக்கொண்டு உள்ளவர் என்ன நன்மையைச் செய்ய்ப்போகிறார்?

சரி, குரு எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அவருக்கும் அதே விதிதானா?

இல்லை. குரு நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும் நன்மையைச் செய்வார்.

உதாரணமாகக் குரு துலா லக்கின ஜாதகிக்கு (நன்றாகக் கவனிக்கவும்) 3 மற்றும் 6ஆம் இடத்திற்கு அதிபதி. இரண்டு தீய இடங்களுக்கு அதிபதி. அவர் எட்டில் அமர்ந்தால், அதுவும் ஜாதகியின் மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்தால், மாங்கல்ய் அதோஷம் உண்டா? அவரின் ஆதிபத்யததை வைத்து இந்தக் கேள்வி.

தோஷம் இல்லை. ஏன்?

குரு முதல்நிலை சுபக்கிரகம். அவர் எட்டில் அமர்ந்தாலும், அங்கே தன்னுடைய ஆதிப்பத்யத்தைக் கைவிட்டு விட்டு (அதாவது 3 & 6ஆ இடங்களுக்கு உரியவன் என்னும் நிலையை விட்டுவிட்டு, நன்மையையே செய்வார். மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்க மாட்டார்.

பெண் தீர்க்க சுமங்கலி!!!!
---------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

37 comments:

அய்யர் said...

it is nice to receive pop-corn after a looooooong time..!!
It is spicy and crispy..!!
and healhty tooooooo

Gnanam Sekar said...

அய்யா காலை வணக்கம்

renga said...

குருவிற்கு வணக்கங்கள்,
நன்றி. என் ஜாதகத்தில் குரு 8ல் உள்ளார். கன்யா லக்னத்திற்கு 8க்குடைய செவ்வாய் 10க்குடைய புதனுடன் பரிவர்த்தனை ஆகி உள்ளார். இந்த அமைப்பு என்ன பலன் தரும்?

Ganesan R said...

Yes Sir. My wife's lagna is Thula. Guru is in Rishaba.I am 55 years old .We have successfully spent more than 30 years of married life.Thanks Sir.

-Ganesan.

Guru Selvam said...

ஐயா, வணக்கம்.

என் மகள் ரிசப லக்னம். 8ல் குரு ஆட்சி. எப்படியிருக்கும்?

‍‍குரு செல்வம், சிங்கை

Udhaya Kumar said...

குருவிற்கு வணக்கம்,

தாங்கள் அனுப்பிய சுவைமிகு பாப்கானை
சுவைத்தேன்,நீண்ட நாட்களுக்கு பிறகு சிந்தனைக்கு இது ஒரு சுருசுருப்பை தந்தது.இது போன்ற சுவையான கருத்துகளை சிந்தனைக்கு விருந்தாக்க
கோருகிறேன்.
நன்றி.

arul said...

good lesson sir

ravichandran said...

Respected Sir,

Nice to get popcorn morning itself and after long time. My profound gratitude forever.

With kind regards,
Ravi

SP.VR. SUBBAIYA said...

//////Blogger அய்யர் said...
it is nice to receive pop-corn after a looooooong time..!!
It is spicy and crispy..!!
and healhty tooooooo////

Thanks for your comments Viswanathan!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Gnanam Sekar said...
அய்யா காலை வணக்கம்////

நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

///Blogger renga said...
குருவிற்கு வணக்கங்கள்,
நன்றி. என் ஜாதகத்தில் குரு 8ல் உள்ளார். கன்யா லக்னத்திற்கு 8க்குடைய செவ்வாய் 10க்குடைய புதனுடன் பரிவர்த்தனை ஆகி உள்ளார். இந்த அமைப்பு என்ன பலன் தரும்?/////

இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும். நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்! தற்சமயம் அதற்கு நேரமில்லை.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ganesan R said...
Yes Sir. My wife's lagna is Thula. Guru is in Rishaba.I am 55 years old .We have successfully spent more than 30 years of married life.Thanks Sir.
-Ganesan./////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Guru Selvam said...
ஐயா, வணக்கம்.
என் மகள் ரிசப லக்னம். 8ல் குரு ஆட்சி. எப்படியிருக்கும்?
‍‍குரு செல்வம், சிங்கை////

பதிவில் சொல்லியுள்ளபடி இருக்கும். தீர்க்க சுமங்கலி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Udhaya Kumar said...
குருவிற்கு வணக்கம்,
தாங்கள் அனுப்பிய சுவைமிகு பாப்கானை
சுவைத்தேன்,நீண்ட நாட்களுக்கு பிறகு சிந்தனைக்கு இது ஒரு சுருசுருப்பை தந்தது.இது போன்ற சுவையான கருத்துகளை சிந்தனைக்கு விருந்தாக்க
கோருகிறேன்.
நன்றி./////

நல்லது. நன்றி. தொடர்ந்து செய்கிறேன் உதயகுமார்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger arul said...
good lesson sir////

உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Nice to get popcorn morning itself and after long time. My profound gratitude forever.
With kind regards,
Ravi/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

KJ said...

Kettalum Mel makkal Mel makkale... Very useful post sir. Nandrigal pala.

kmr.krishnan said...

Present, Sir!

Ak Ananth said...

இந்த அமைப்பில் குரு பகவான் தான் கொடுக்க வேண்டிய சுப பலனைக் குறைத்துக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தாங்கள் சொல்வது போல் பாபராகி விட மாட்டார் என்பது உண்மை.

Parvathy Ramachandran said...

மிக நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி.

jeevan74 said...

its nice to see the popcorn topic.kindly post titbits information on astrology whenever u have time available.

I have one doubt sir. u mentioned about guru. If shukran is in 8th place for the thula lagna is it malefic or good. The same thing about mars in 8th house for mesa lagnam. clarify me sir

KJ said...

For above jeeva's question, i remember from older lessons, sukran at 8 th position is like a gift.

Sir, pl correct me if i am wrong.

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,குரு 6,8,12 ம் வீட்டில் அமர்ந்து பார்க்கும் பார்வையில் இருக்கும் வீடுகள்,மற்ற இடங்களில் அம்ர்ந்து அவர் பார்வையில் இருக்கும் வீடுகள்,அதாவது 2ல் குரு அமர்ந்தால் 6,8,10ம் வீட்டை பார்க்கிறார்,12ல் அமர்ந்தாலும் 4,6,8ம் வீடுகளை பார்க்கிறார்,12ம் வீட்டில் அமர்ந்து 6,8ம்வீட்டை பார்ப்பதற்கும்,2ம் வீட்டில் அமர்ந்து 6,8ம் வீட்டை பார்ப்பதற்கும்,6,8ம் வீட்டிற்கு கிடைக்கும் பலன்களில் வித்யாசம் உண்டா?
வகுப்பறையில் கடைசி பென்ச் மாணவி நான்,படிக்கவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன,படிக்கும்போது இடையில் வரும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.தவறாக ஏதாவது கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும் ஐயா நன்றி ஐயா.

Ravindranath sharma said...

Iyah,
The hand painting photos are amazing and to days lesson also very helpful awaiting for your next edition of this extension
Thank you
V.R.Sharma

manikandan said...

good lesson sir, Bur popcorn oru irandu vai sappidarathu munna galiahidichu...........

SP.VR. SUBBAIYA said...

/////Blogger KJ said...
Kettalum Mel makkal Mel makkale... Very useful post sir. Nandrigal pala./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
Present, Sir!/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ak Ananth said...
இந்த அமைப்பில் குரு பகவான் தான் கொடுக்க வேண்டிய சுப பலனைக் குறைத்துக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தாங்கள் சொல்வது போல் பாபராகி விட மாட்டார் என்பது உண்மை.////

நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!!!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
மிக நல்லதொரு பதிவினைத் தந்தமைக்கு நன்றி.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger jeevan74 said...
its nice to see the popcorn topic.kindly post titbits information on astrology whenever u have time available.
I have one doubt sir. u mentioned about guru. If shukran is in 8th place for the thula lagna is it malefic or good. The same thing about mars in 8th house for mesa lagnam. clarify me sir/////

சுக்கிரன் எட்டில் இருப்பதால் பல நன்மைகள் உண்டு. எட்டாம் இடத்தில் இருந்துகொண்டு தன்னுடைய பார்வையால் இரண்டாம் இடத்தைப் பார்ப்பார். ஜாதகனுக்கு கதைகள், கவிதைகளில் நாட்டத்தை உண்டாக்குவார். ரசணை உணர்வுகள் மிக்கவனாக ஜாதகன் இருப்பான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger KJ said...
For above jeeva's question, i remember from older lessons, sukran at 8 th position is like a gift.
Sir, pl correct me if i am wrong./////

இல்லை நீங்கள் சொல்வது சரிதான் பழைய பாடத்தில் அப்படித்தான் உள்ளது. கிஃப்ட் என்று எழுதியுள்ளேன். உங்களின் நினைவாற்றலுக்கு ஒரு ஓ’ போடுகிறேன்! நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா,குரு 6,8,12 ம் வீட்டில் அமர்ந்து பார்க்கும் பார்வையில் இருக்கும் வீடுகள்,மற்ற இடங்களில் அம்ர்ந்து அவர் பார்வையில் இருக்கும் வீடுகள்,அதாவது 2ல் குரு அமர்ந்தால் 6,8,10ம் வீட்டை பார்க்கிறார்,12ல் அமர்ந்தாலும் 4,6,8ம் வீடுகளை பார்க்கிறார்,12ம் வீட்டில் அமர்ந்து 6,8ம்வீட்டை பார்ப்பதற்கும்,2ம் வீட்டில் அமர்ந்து 6,8ம் வீட்டை பார்ப்பதற்கும்,6,8ம் வீட்டிற்கு கிடைக்கும் பலன்களில் வித்யாசம் உண்டா?
வகுப்பறையில் கடைசி பென்ச் மாணவி நான்,படிக்கவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன,படிக்கும்போது இடையில் வரும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.தவறாக ஏதாவது கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும் ஐயா நன்றி ஐயா.////

கேள்வி, பதிலுக்கு என்று தனித் தொடர் வகுப்புக்கள் நடைபெற உள்ளது (முன்பு போல) அப்போது கேளுங்கள் சகோதரி! விரிவான பதில் கிடைக்கும்!

SP.VR. SUBBAIYA said...


/////Blogger Ravindranath sharma said...
Iyah,
The hand painting photos are amazing and to days lesson also very helpful awaiting for your next edition of this extension
Thank you
V.R.Sharma////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger manikandan said...
good lesson sir, Bur popcorn oru irandu vai sappidarathu munna galiahidichu...........////

மெதுவாக, ரசித்துச் சாப்பிடுங்கள். மாலை நேரங்களில் என்ன சாப்பிடுவீர்கள்? இரண்டு மேரி பிஸ்கட், ஒரு கோப்பை தேநீர்? அப்படி நினைத்துக்கொள்ளுங்கள்!

KJ said...

Thank you sir. Piditha visayam yepadi ayya marakum.

SP.VR. SUBBAIYA said...

////Blogger KJ said...
Thank you sir. Piditha visayam yepadi ayya marakum./////

ஜோதிடத்தில், பிடித்த விஷயம், பிடிக்காத விஷயம் என்று பேதப் படுத்த வேண்டாம். எல்லாவற்றையுமே பிடிக்கும்படியாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து விஷயங்களும் மனதில் தங்கும்!

KJ said...

Sir, i guess you are mistaken. Nan pothuvaga piditha visayam yethuvume marakathu endren. Jothidamum athu pola piditha visayame.