மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.1.13

வினைகள் எப்போதடா தீரும்?

வினைகள் எப்போதடா தீரும்?
பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிய பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

ஊரப்பா பழநியப்பா கந்தப்பா - அங்கு
பக்தர் கூட்டம் பெருகுதப்பா
(ஊரப்பா ... )

உன் பேரப்பா பழநியப்பா
காவடிகள் கூடுதப்பா
பாரப்பா பழநியப்பா
கண்திறந்து பாருமப்பா

ஆண்டியாய் வந்தவா
ஆறுமுக வேலவா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

பங்குனி உத்திரக் காவடிகள்
ஆடியே கூடுதப்பா
பொங்கிவரும் பாலுடன் - உன்
சேவடி சேருதப்பா

பழநிமலை சன்னிதியில்
தங்கத் தேரய்யா
உன்னைப் பாடிவரும் பக்தருக்கு
வினைகள் தீருதய்யா
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

பால்காவடி பன்னீர்க்காவடி புஷ்பக்காவடி
சேவற்காவடி மச்சக்காவடி வேல்காவடி
முருகனுக்கு ... அரோகரா

தாங்கிவரும் அடியார்கள்
ஆயிரம் கோடியப்பா
சேர்ந்துவரும் காவடிகள்
சன்னிதி சேருதப்பா

வேண்டிவரும் அன்பர்களின்
குறைகள் நீங்குமே
நம்மை நாடிவரும் துன்பங்கள்
வேலும் தாங்குமே
வடிவேலும் தாங்குமே
(ஊரப்பா ... )

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

நவலோக மாமணியே
சிவனாரின் கண்மணியே
அவனியும் போற்றுதடா
ஆதி சக்தி மைந்தன் உனை

பாலும் தேனும் பஞ்சாமிர்தம்
குடம் குடமாய் கோயிலில்
நாளும் இங்கே வழியுதடா
உந்தன் தங்க மேனியில்

என்றும் உந்தன் சன்னிதியில்
கோடி சரண தோஷமே
அல்லல் நீங்குதே
முருகா ஆசை பெருகுதே

கந்தனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா

வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் ஞானவேல்
வேல் வேல் வெற்றிவேல்
வேல் வேல் சக்திவேல்

வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா

- பாடலைப் பாடியவர் 'பத்மஸ்ரீ' டி. எம். செளந்தரராஜன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

15 comments:

  1. அய்யா காலை வணக்கம்

    ReplyDelete
  2. Good afternoon sir,

    May God Murugar bless us all with
    peace and prosperity

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்,
    நன்றி

    ReplyDelete
  4. முருகா..
    முருகா..

    மாறி வரும் நாகரீக உலகினிலே நாங்கள்
    மாறவில்லை தெய்வ பக்தி நிலைனியிலே

    முருகா..
    முருகா..

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா, ஆசிரியருக்கும்,சகோதர,சகோதிரிகள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.எல்லோரையும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  6. அய்யா,
    தங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.தை பிறப்பு விவசாயிகளுக்கு துயர் தீர்க்குமா என்பதற்கு ஜோதிட பதிவு இட வேண்டுகின்றேன்.நன்றி.
    senthilkumar.v1974@gmail.com

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவ தோழியர், தோழர்களுக்கும் பொங்ல நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கண்ணதாசன் கவிதை சந்த நயத்துடன் அருமை.

    நான் நாள்தோறும் தவறாமல் பின்னூட்டம் இடுகிறேன். இப்போது தொடர்ந்து 3 நாட்களாக என் பின்னூட்டம் வெளியாகவில்லையே! ஏதாவது இயந்திரக் கோளாறா?

    ReplyDelete
  8. ///kmr.krishnan has left a new comment on your post "வினைகள் எப்போதடா தீரும்?":
    GOOD SONG. Thank you,Sir/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger Lakhsmi Nagaraj said...
    Good afternoon sir,
    May God Murugar bless us all with
    peace and prosperity////

    ஆகா, உங்களின் பிரார்த்தனைக்கு அறுமுகத்தான் நிச்சயம் செவிசாய்ப்பார். வாழ்க உங்கள் நல்ல மனது!

    ReplyDelete
  10. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    நன்றி/////

    நல்லது நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  11. ////Blogger அய்யர் said...
    முருகா..
    முருகா..
    மாறி வரும் நாகரீக உலகினிலே நாங்கள்
    மாறவில்லை தெய்வ பக்தி நிலையினியிலே
    முருகா..
    முருகா.//////

    ஆறுமுகமும், பன்னிரெண்டு கைகளும் எதற்கு இருக்கின்றன? முருக பக்தர்களை வழி நடத்துபவை அவைதான். ஆகவே மாறாது!

    ReplyDelete

  12. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா, ஆசிரியருக்கும்,சகோதர,சகோதிரிகள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.எல்லோரையும் நோய் நொடி இல்லாமல் சந்தோசமாகவும்,மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள இறைவனை வேண்டுகிறேன். நன்றி ஐயா.///////

    உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. /////Blogger kannadi said...
    அய்யா,
    தங்களுக்கு என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.தை பிறப்பு விவசாயிகளுக்கு துயர் தீர்க்குமா என்பதற்கு ஜோதிட பதிவு இட வேண்டுகின்றேன்.நன்றி. senthilkumar.v1974@gmail.com/////

    இந்த ஆண்டு சுபக்கிரகமான சுக்கிரனின் ஆண்டு. எல்லோருடைய துயரும் தீரும். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  14. ////Blogger kmr.krishnan said...
    வாத்தியார் ஐயாவுக்கும் சக மாணவ தோழியர், தோழர்களுக்கும் பொங்ல நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கண்ணதாசன் கவிதை சந்த நயத்துடன் அருமை.
    நான் நாள்தோறும் தவறாமல் பின்னூட்டம் இடுகிறேன். இப்போது தொடர்ந்து 3 நாட்களாக என் பின்னூட்டம் வெளியாகவில்லையே! ஏதாவது இயந்திரக் கோளாறா?////

    அதற்கான விளக்கத்தை உங்களுக்குத் தனி மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளேன். கிடைத்ததா? படித்துப் பார்த்தீர்களா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com