மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.1.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 11


Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 11

ஜோதிடத் தொடர் - பகுதி 11

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
பூச நட்சத்திரம் (கடக ராசி)

இது சனீஷ்வரனின் நட்சத்திரம்.

1. அஸ்விணி
2. கார்த்திகை
3. ரோஹிணி
4. மிருகசீரிஷம்
5. திருவாதிரை
6. புனர்பூசம்
7. ஆயில்யம்
8. ஹஸ்தம்
9. சுவாதி
10. கேட்டை
11. மூலம்
12. உத்திராடம்
13. சதயம்
14. ரேவதி

ஆகிய 14 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.

இதில் மூலம், உத்திராடம் ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு  சதய நட்சத்திரத்திற்கும் உண்டு. அது  கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமாகும்..கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

அதே நிலைப்பாடு மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை, புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi)  வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.

ஆக மொத்தத்தில் 9 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.

பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் பூச நட்சத்திரம் ஒன்றாக இருந்தால், மத்திம பொருத்தம்,. சராசரி!

சித்திரை நட்சத்திரம் பொருந்தாது!

மகம், உத்திரம், விசாகம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி  ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

kmr.krishnan said...

நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பூச நட்சத்திரத்திற்கு நல்ல பொருத்தமுள்ள நடசத்திரம் எதுவுமே இல்லை என்றல்லவா ஆகிவிடுகிறது?

ஏதோ சுமாரான பொருத்தத்துடன் திருமணம் செய்து கொண்டு காலத்தைத் தள்ள வேண்டியதுதானா?

பூசம் ஆன நான் அனுஷம் ஆன என் மனைவியுடன் தின,ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமலேயே 37 வருடம் வாழ்ந்துள்ளேன்.ஹிஹிஹி....

SP.VR. SUBBAIYA said...

//////Blogger kmr.krishnan said...
நீங்கள் சொல்வதைப்பார்த்தால், பூச நட்சத்திரத்திற்கு நல்ல பொருத்தமுள்ள நடசத்திரம் எதுவுமே இல்லை என்றல்லவா ஆகிவிடுகிறது?
ஏதோ சுமாரான பொருத்தத்துடன் திருமணம் செய்து கொண்டு காலத்தைத் தள்ள வேண்டியதுதானா?
பூசம் ஆன நான் அனுஷம் ஆன என் மனைவியுடன் தின,ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமலேயே 37 வருடம் வாழ்ந்துள்ளேன்.ஹிஹிஹி....//////

அது இறையருள். நீங்கள் வாங்கி வந்த வரம். சந்தோஷப்படுங்கள்!

அய்யர் said...

தலைப்பிலேயே யாருக்கு யாரென
மலைக்க வைத்த பின் வருத்தமேன்

இந்த பாடலினை
இன்று சுழலவிட்டபடி வருகை பதிவு

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
உறவுக்குப் பெயரென்ன?

"காதல்"; அந்த

ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த
உரிமைக்குப் பெயர் என்ன?

"குடும்பம்"


கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை

Geetha Lakshmi A said...

வணக்கம் ஐயா,ராகு,கேதுவின் சாரத்தில் இருக்கும் கிரகங்களின் வலிமை எப்படியிருக்கும்? நன்றி ஐயா.

C.Senthil said...

ayya,
already i have sent my jathagam to your mail. still i didnt get any response from you and now my situation is very bad condition. sani dasa has started from july. my life is very dull. i need to know my carrier ayya. please please help me.

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
தலைப்பிலேயே யாருக்கு யாரென
மலைக்க வைத்த பின் வருத்தமேன்
இந்த பாடலினை
இன்று சுழலவிட்டபடி வருகை பதிவு
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - அந்த
உறவுக்குப் பெயரென்ன?
"காதல்"; அந்த
ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த
உரிமைக்குப் பெயர் என்ன?
"குடும்பம்"
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை/////

உங்களுடைய பாடலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Geetha Lakshmi A said...
வணக்கம் ஐயா,ராகு,கேதுவின் சாரத்தில் இருக்கும் கிரகங்களின் வலிமை எப்படியிருக்கும்? நன்றி ஐயா.//////

பழைய பாடங்களில் விரிவாக எழுதியுள்ளேன் சகோதரி! தேடிப் பிடித்துப் படியுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger C.Senthil said...
ayya,
already i have sent my jathagam to your mail. still i didnt get any response from you and now my situation is very bad condition. sani dasa has started from july. my life is very dull. i need to know my carrier ayya. please please help me./////

மின்னஞ்சல் மூலம் வந்த தனிப்பட்டவர்களின் ஜாதகங்கள், நூற்றுக் கணக்கில் கைவசம் உள்ளன. அவற்றை எல்லாம் அலசிப் பதில் சொல்ல நேரம் இல்லையே சாமி!
நீங்கள் இருக்கும் ஊரிலேயே ஒரு நல்ல ஜோதிடராகப் பார்த்துக் கேளுங்கள். அவர் உதவி செய்வார்!