மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.4.12

நாலு பேருக்கு நன்றி!

++++++++++++++++++++++++++++++++++++++++++
நாலு பேருக்கு நன்றி!

நான்காம் எண் ராகுவிற்கு உரியது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள். நடைமுறை வாழ்க்கை வாழ்பவர்கள். ஆங்கிலத்தில் சொன்னால் They are very practical people.
பந்தா இல்லாதவர்கள்.

நான்காம் எண்காரர்கள் எதிலும் விவரமானவர்கள். அமைப்பானவர்கள்.
ஒரு ஒழுங்குமுறையில் செயல்படக் கூடியவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள்.

எடுத்த காரியத்தை நடுவில் விட்டு விடமாட்டார்கள். என்ன இடர் வந்தாலும் போராடி அல்லது எதிர்த்து நின்று கடைசியில் அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். கடினமான உழைப்பாளிகள்

வங்கியாளர், கணக்காளர், மேலாளர், விஞ்ஞானிகள், வழக்குரைஞர்கள் போன்ற வேலைகளில் சிறப்பாகச் செயல் படக்கூடியவர்கள்.

இந்த எண்காரர்களுக்கு மன உறுதி, பிடிவாதம், எடுத்த காரியத்தில் முனைப்பு போன்றவை மேலோங்கி இருக்கும். அதனால் சமயங்களில் வளைந்து கொடுத்துப் போகமுடியாமல் அவதிப்படவும் நேரிடும்

பாரம்பரிய வழிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு செயல் படக்கூடியவர்கள். மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்கள். உதவும் மனப்பான்மை மிக்கவர்கள். இயல்பானவர்கள். சுயகட்டுப்பாடு உடையவர்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடியவர்கள். ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு முரண்பட்டவர்களாகவும், குறுகிய சிந்தனைகளை உடையவர்களாகவும், பிடிவாதம் மிக்கவர்களாகவும் காட்சியளிப்பார்கள். அது எண்காரர்களுக்கு உரிய பொதுத் தோற்றம்.

காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள். சீக்கிரமே வெறுப்பும் அடையக்கூடியவர்கள். காதலில் ஈடுபடும்போது, காதலன் அல்லது காதலி இசைந்து வருபவராக இருந்தால், நேர்த்தியான காதலராகப் பரிணமளிக்கக்கூடியவர்கள்.

புரிந்து கொள்ளமுடியாதவர்கள். அதன்காரணமாகப் பலர் இவர்களை நெருங்கமாட்டார்கள். தங்களை நேசிப்பவர்களுக்கு உயிரையும் தரக்கூடியவர்கள். அதே நேரத்தில் தனிமை விரும்பிகள்.
(Difficult to understand and get close to. Loyal to those they love but a loner)
எதையும் சட்டென்று அறிந்து கொள்ளும் தன்மை இருக்கும்.
தெளிவான மனநிலையை உடையவர்கள். துணிச்சலானவர்கள்.
சாதாரண மனிதர்களில் இருந்து மாறுபட்டவர்கள்

அதீத புத்திசாலிகள். அதீத மனக்கட்டுப்பாடுகள் மிக்கவர்கள். பகுத்தறிவு கொண்டவர்கள். எதிர்பார்ப்பதைச் செய்யக்கூடியவர்கள். கனவுகளைத் துரத்திச் சென்று அதை நனவாக்குபவர்கள். சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள். சமூக சிந்தனைகளை உடையவர்கள். இருந்தாலும் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காதவர்கள். சிலரால் காதலில் வெற்றிபெற முடியாது. எதையும் சீரியசாக எடுத்துக்கொள்பவர்கள்.
வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். இருந்தாலும் திருப்தியடையாதவர்கள். அதீதமான விருப்பு & வெறுப்புக்களை உடையவர்கள். சிலர் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். அதன்காரணமாகத் தனித்து இருக்கவும் நேரிடும். பல அரிய விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர்கள். இருந்தாலும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமாட்டாரகள்.

Health and  Finance:
Birth number 4 people usually suffer form breathlessness, weakness, sudden stomach pain & respiratory problems. Their financial prosperity usually start from late twenties.
If possible they should avoid joint business. They will be more successful while working alone.

சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் தனித் தன்மைவாய்ந்தவர்கள். மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். அதன்காரணமாக பலருக்கும் எதிரியாகக் காட்சியளிப்பவர்கள். மற்ற எண்காரர்களைவிட இவர்களுக்குத்தான் அதிக அளவில் விரோதிகள் இருப்பார்கள்.

”நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி”

என்று புரட்சித்தலைவரின் படத்தில் பாடல் ஒன்றுவரும். அந்தப் பாடலில் குறிப்பிடப்படும் தோள் கொடுத்துத் தூக்கிச் செல்லும் என்று வர்ணிக்கப்படும் நபர்கள் இந்த 4 எண்ணுக்கு உரியவர்கள். தங்களுடைய முற்போக்கு சிந்தனைகளால் பலருக்கும் தோள் கொடுப்பவர்கள் அவர்கள்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண்ணிற்கு உரியவர்கள்
1,2,7 and  8ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மட்டும் இவர்களுடன் சினேக மனப்பான்மையுடன் இருப்பார்கள்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய நாட்கள்
இவர்களுக்கு உகந்த கிழமைகள்
Lucky colour are Electric blue, Half Shades, Grey

கோமேதகம் இவர்களுக்கு உரிய நவரத்தினம் ஆகும். ராகு திசை நடப்பவர்கள் அனைவரும் இந்தக் கல்லை அணிந்து கொள்ளலாம்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

45 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    நான்காம் எண்காரர்கள் பற்றிய விபரங்களையும்,
    பலன்களையும் மிகமிக சரியாகவும்,
    உபயோகமுள்ளதாகவும் கொடுத்துள்ளீர்கள்.
    நன்றி!!

    ReplyDelete
  2. இன்றைய பதிவு யாருக்கு ஷாக் ஆக இருக்குதோ இல்லையோ தேமொழிக்கு நிச்சயம் ஷாக் கொடுத்து இருக்கும்..

    ReplyDelete
  3. 22ந் தேதி எனக்கு. கூறியுள்ள குணங்கள் எனக்குச் சரியாக இருக்கிறதா என்று மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.பதிவு வழக்கமான சிரத்தையுடன் கொடுத்து உள்ளீர்கள் நன்றி ஐயா!

    ReplyDelete
  4. இன்று நாகம் .

    இந்த ராஜ நாகம் மிகப் பெரிய பயம் காட்டும் இடம் 13 .எந்த ஹோட்டலிலும் இந்த என்னில் ரூம் இருக்காது. பேயோடுகூட படுத்து விடுவார்கள். இந்த 13 என் உள்ள ரூமில் மட்டும் யாரும் தங்க மாட்டார்கள்.

    தெரிய வில்லை இந்த 13 என்னில் என்ன மர்மம் உள்ளது என்பதை வாத்தியாரும் மைனரும் விளக்கவும்.

    இந்த நாகத்தின் பலவீனங்கள்;அடித்து பேசுவது,மர்ம மாணவர்கள் ,தங்களின் கொள்கைக்கு கிரீடம் சூட்டும் ராஜாக்கள் .

    கிரீடம் சூட்டிய நம் ஊர் ராஜ நாகங்கள்;சர்தார் வல்லபாய் பட்டேல், கணித மேதை ராமானுஜம்.

    நாக ராணி ; முபி,- D/O தனுசு

    ReplyDelete
  5. நாலு..
    மீண்டும் கவுன்ட்டவுனா (இல்லை)

    அய்யா வகுப்பின்
    அடுத்த வரிசையில்..

    numerology உடன் Gemmologyயும் உள்ளது மற்றவை வருமா. வருடுமா?

    எண்ணிக்கை இல்லாத எந்த எண்ணில்
    எம்மை சேர்க்கப் போகிறீர்கள்..?

    ///தெரிய வில்லை இந்த 13 என்னில் என்ன மர்மம் உள்ளது என்பதை வாத்தியாரும் மைனரும் விளக்கவும். ///

    அவரை காட்டிக் கொடுத்த
    அவர் 13வது சீடர் என்று சொல்லுவர்.

    அவர் என்ன சொல்கிறாரோ பார்ப்போம்
    அப்பவும் அன்பு வணக்கங்கள் உண்டு..

    ReplyDelete
  6. எண் 4 பற்றிய பதிவிற்கு நன்றி ஐயா. 31 இல் பிறந்த யாரையும் தெரியாது. தங்கையின் பிறந்ததேதி 4, கணவருக்கும் மகனுக்கும் பிறந்த தேதி 13, 22 இல் பிறந்த ஆளை எனக்கு நன்றாகத் தெரியும் (அது நான்தான்). கொடுக்கப் பட்ட இந்த குணநலன்கள் 13 இல் பிறந்தவர்களுக்கு அதிகம் பொருந்துவதாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. ///minorwall said... இன்றைய பதிவு யாருக்கு ஷாக் ஆக இருக்குதோ இல்லையோ தேமொழிக்கு நிச்சயம் ஷாக் கொடுத்து இருக்கும்..///

    ஹி... ஹி.. ஹீ ...(என்ன பதில் சொல்றதுன்னு தெரியல )

    ///1,2,7 and 8ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மட்டும் இவர்களுடன் சினேக மனப்பான்மையுடன் இருப்பார்கள்///

    இது ரொம்ப பொருந்தர மாதிரி இருக்கு மைனர் :)))

    ReplyDelete
  8. யோசித்து யோசித்து பார்க்கிறேன் .....எனக்கு தெரிந்த நண்பர்களோ உறவுகளோ யாருமே எண் நான்கில் இல்லை. ஏனோ தெரியவில்லை.
    எனது எண் இரண்டு (29), நான்கோடு சேராது என்பதாலோ ?

    ReplyDelete
  9. /////Blogger arul said...
    nice post sir/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger krishnan51972 said...
    The messages are useful for no:4////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    நான்காம் எண்காரர்கள் பற்றிய விபரங்களையும்,
    பலன்களையும் மிகமிக சரியாகவும்,
    உபயோகமுள்ளதாகவும் கொடுத்துள்ளீர்கள்.
    நன்றி!!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  12. ////Blogger minorwall said...
    இன்றைய பதிவு யாருக்கு ஷாக் ஆக இருக்குதோ இல்லையோ தேமொழிக்கு நிச்சயம் ஷாக் கொடுத்து இருக்கும்../////

    அவரின் நகைச்சுவை உணர்வு மிகவும் பிரசித்தமானது. ஆகவே நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப்போல அவர் இத்ற்கெல்லாம் அதிர்ச்சி அடைய மாட்டார் மைனர்!

    ReplyDelete
  13. /////Blogger kmr.krishnan said...
    22ந் தேதி எனக்கு. கூறியுள்ள குணங்கள் எனக்குச் சரியாக இருக்கிறதா என்று மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும்.பதிவு வழக்கமான சிரத்தையுடன் கொடுத்து உள்ளீர்கள் நன்றி ஐயா!/////

    நீங்கள் சொன்னால்தான் உண்மையாகவும் சிறப்பாகவும் இருக்கும்!

    ReplyDelete
  14. ////Blogger thanusu said...
    இன்று நாகம் .
    இந்த ராஜ நாகம் மிகப் பெரிய பயம் காட்டும் இடம் 13 .எந்த ஹோட்டலிலும் இந்த என்னில் ரூம் இருக்காது. பேயோடுகூட படுத்து விடுவார்கள். இந்த 13 என் உள்ள ரூமில் மட்டும் யாரும் தங்க மாட்டார்கள்.
    தெரிய வில்லை இந்த 13 என்னில் என்ன மர்மம் உள்ளது என்பதை வாத்தியாரும் மைனரும் விளக்கவும்.
    இந்த நாகத்தின் பலவீனங்கள்;அடித்து பேசுவது,மர்ம மாணவர்கள் ,தங்களின் கொள்கைக்கு கிரீடம் சூட்டும் ராஜாக்கள் .
    கிரீடம் சூட்டிய நம் ஊர் ராஜ நாகங்கள்;சர்தார் வல்லபாய் பட்டேல், கணித மேதை ராமானுஜம்.
    நாக ராணி ; முபி,- D/O தனுசு////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  15. ////Blogger அய்யர் said...
    நாலு..
    மீண்டும் கவுன்ட்டவுனா (இல்லை)
    அய்யா வகுப்பின்
    அடுத்த வரிசையில்..////
    numerology உடன் Gemmologyயும் உள்ளது மற்றவை வருமா. வருடுமா?
    எண்ணிக்கை இல்லாத எந்த எண்ணில்
    எம்மை சேர்க்கப் போகிறீர்கள்..?
    ///தெரிய வில்லை இந்த 13 என்னில் என்ன மர்மம் உள்ளது என்பதை வாத்தியாரும் மைனரும் விளக்கவும். ///
    அவரை காட்டிக் கொடுத்த
    அவர் 13வது சீடர் என்று சொல்லுவர்.
    அவர் என்ன சொல்கிறாரோ பார்ப்போம்
    அப்பவும் அன்பு வணக்கங்கள் உண்டு../////

    நீங்கள் சொல்வதெல்லாம் மேலை நாட்டவர்களுக்குத்தான். நம் நாட்டில் அந்த எண்ணை அத்தனை சீரியசாகப் பலரும் எடுத்துக்கொள்வதில்லை!

    ReplyDelete
  16. ////Blogger தேமொழி said...
    எண் 4 பற்றிய பதிவிற்கு நன்றி ஐயா. 31 இல் பிறந்த யாரையும் தெரியாது. தங்கையின் பிறந்ததேதி 4, கணவருக்கும் மகனுக்கும் பிறந்த தேதி 13, 22 இல் பிறந்த ஆளை எனக்கு நன்றாகத் தெரியும் (அது நான்தான்). கொடுக்கப் பட்ட இந்த குணநலன்கள் 13 இல் பிறந்தவர்களுக்கு அதிகம் பொருந்துவதாகத் தோன்றுகிறது.////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. /////Blogger தேமொழி said...
    ///minorwall said... இன்றைய பதிவு யாருக்கு ஷாக் ஆக இருக்குதோ இல்லையோ தேமொழிக்கு நிச்சயம் ஷாக் கொடுத்து இருக்கும்..///
    ஹி... ஹி.. ஹீ ...(என்ன பதில் சொல்றதுன்னு தெரியல )
    ///1,2,7 and 8ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் மட்டும் இவர்களுடன் சினேக மனப்பான்மையுடன் இருப்பார்கள்///
    இது ரொம்ப பொருந்தர மாதிரி இருக்கு மைனர் :)))

    நல்லது. நன்றி! (இது மைனரின் சார்பாக்)

    ReplyDelete
  18. /////Blogger Kalai said...
    யோசித்து யோசித்து பார்க்கிறேன் .....எனக்கு தெரிந்த நண்பர்களோ உறவுகளோ யாருமே எண் நான்கில் இல்லை. ஏனோ தெரியவில்லை.
    எனது எண் இரண்டு (29), நான்கோடு சேராது என்பதாலோ ?////

    இருக்கலாம். ஆனால் இது எல்லாம் பொது விதிகள்தான்!

    ReplyDelete
  19. ///தேமொழி said...
    எண் 4 பற்றிய பதிவிற்கு நன்றி ஐயா. ................. 22 இல் பிறந்த ஆளை எனக்கு நன்றாகத் தெரியும் (அது நான்தான்). கொடுக்கப் பட்ட இந்த குணநலன்கள் 13 இல் பிறந்தவர்களுக்கு அதிகம் பொருந்துவதாகத் தோன்றுகிறது.////

    சகோதரியார் அனுபவப் பட்டு சொல்லி இருக்கிறார்கள் அதனால் அப்படியே எடுத்துக் கொள்கிறேன்...

    பெரிய மனுசத் தன்மையும், பெருந்தன்மையும், பிறர் விவகாரத்தில் தலையிட்டு உதவும் மனப் பான்மையும், அதே நேரம் தனது விவகாரத்தில் யாரும் தலை இட விரும்பாமையும், தனக்கு ஏற்பட்டத் தோல்வியின் வலியைப் பற்றி கவலைப் படாமல், தனக்கு ஏற்பட்ட தோல்வி தனது அன்பிற்கு காரணமானவர்கள் தன்னை நேசிப்பவர்கள் வருந்தும் படி செய்து விட்டதே என்று வருந்துவதும்... அதிகார தோரணையும் அதே நேரம் இடம், பொருள், ஆள் பார்த்து அடக்கி வாசிப்பதும் (இதுவரை அப்பாவிடம் ஒரு அடி கூட வாங்காமல் வந்திருக்கிறான்) இப்படி பலவும் சொல்லலாமா!

    அப்படி என்றால்... பெருந்தன்மையால் ஏமாளியோ என்ற எண்ணமும் மற்றவர்களுக்கு வருகிறது (பிற்காலத்தில் அவன் மனைவியிடமும் இதை கூறி கூடவே இருந்து கவனிக்க வேண்டிக் கொள்ள வேண்டும்!!!!) .... ஆனால் உண்மை என்னவென்றால் அப்படிப் பெருந்தன்மையாக இருந்தால் தான் தாம் தலைவராக இருக்க முடியும் என்ற எண்ணமும் உள்ளூர இருக்குமோ??!! தெரியவில்லை....

    இதெல்லாம் நான் என் மகனிடம் காணும் குணாதிசயங்கள்.... கோவிந்த் 13 /03 / 2001 - Singapore -ல் பிறந்தவன்.

    அவன் சிம்ம லக்னம், லக்னாதிபதி புதனுடன், ஏழிலில், சுக்ரன் எட்டில் உச்சம்...

    நான்காம் எண்ணிற்கு உரிய கிரகம் ராகு பதினொன்றில், பத்தில் குருவும், சனியும்.... செவ்வாய் நான்கிலே ஆட்சி செய்கிறான்... இதனால் தான் இந்தக் குணங்களோ? அறிந்தவர்கள் சொல்லவும்...

    சகோதரி தேமொழி இவைகள் தமக்கும் பொருந்துமா என்பதை பொருத்தி அடிக்கோடிடலாம் நன்றி. எப்படியோ எங்கள் வீட்டிலும் ஒரு ஆராய்ச்சியாளன் பிறந்திருக்கிறான் இல்லையா!:):):)))) உண்மைதான் உங்களைப் போல எல்லாவற்றையும் துருவித் துருவி ஆராய்வான்.:);) புதுமையோடு பழைமையையும் விரும்புவான்... அதிலும் சினிமாவில் அதுர பாடாவிப் படமெல்லாம் உட்கார்ந்து பார்த்து இது உங்களுக்கு பிடிக்கும், பிடிக்காது என்று கணிப்பு வேறு....

    இன்றைய பாடம் எங்களுக்கும் உபயோகம், பாடத்திற்கு நன்றிகள் ஐயா....

    ReplyDelete
  20. பதிவு மிகவும் அருமை அய்யா. நான்காம் எண்ணிற்கு உரிய பண்புகளை 'ர' (இரத்தின) சுருக்கமாக கூறி தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.

    ReplyDelete
  21. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இரண்டாம் தேதியில் பிறந்தவர்.ஆனால் சிம்ம லக்னத்தில் சனி, ராகு அமையப் பெற்றவர்.நீங்கள் சொன்ன அனைத்தும் அவருக்கு பொருந்துகிறது. பாடத்திற்கு நன்றி ஐயா...

    -அருள்நிதி

    ReplyDelete
  22. minorwall said...
    இன்றைய பதிவு யாருக்கு ஷாக் ஆக இருக்குதோ இல்லையோ தேமொழிக்கு நிச்சயம் ஷாக் கொடுத்து இருக்கும்

    எதற்காக கவலை பட்டும் எதுவும் நிகழ போவதில்லை>எல்லா நாலும் ஒரே மாதிரியா இருக்கு பாருங்கோ...!?

    444444444...4444.44 44

    ReplyDelete
  23. ///ஜி ஆலாசியம் said... சகோதரி தேமொழி இவைகள் தமக்கும் பொருந்துமா என்பதை பொருத்தி அடிக்கோடிடலாம்///

    நான் பார்த்த வரை வாத்தியார் குறிப்பிட்ட குணநலன்கள் பிறவி எண் 4 இல் உள்ளவர்களுக்கு வெவ்வேறு அளவில் பொருந்துகிறது என நினைக்கிறேன், நான் பார்த்த பண்புகளை ஒவ்வொரு தேதிக்கும் கீழே குறிப்பிட்டுள்ளேன், இதைப் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். இதனால்தான் பொதுப் பலன்கள் என்று பொதுவாக குறிப்பிடுகிறார்கள் போலிருக்கிறது.

    4 -(என் தங்கை)
    --- பெருந்தன்மை உண்டு (ஆனா எந்த கப்ல காபி அதிகம் இருக்கோ அது எனக்கு வேணும்)
    --- உதவும் மனப்பான்மை உண்டு (சரி, நீ மாடிக்கு போனீன்னா அப்படியே என்னோட ஹாண்ட்பாக்க கையோட எடுத்துட்டு வந்திடு)
    --- ஆராய்ச்சி மனப்பான்மை? அப்படினா என்ன? வேலையத்த வேலை செய்யறதுக்கு தூங்கலாம்
    --- நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள்..உண்மை.. உண்மை...
    --- பந்தா இல்லாதவர்கள்.??? (யாரைப் பற்றி சொல்கிறீர்கள்?)
    --- நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள். ...உண்மை
    --- காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள்? Love... Bah! Humbug!
    --- தனிமை விரும்பிகள்...உண்மை
    --- அதீத புத்திசாலிகள் ஆமாம் ...ஆமாம்
    --- துணிச்சலானவர்கள்? ( எனக்கு பயமா இருக்கு லைட்ட அணைக்காதே)
    ________________________________
    13-(என் கணவர் மற்றும் மகன் இளங்கோ)
    --- பெருந்தன்மையின் மொத்த உருவம், இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. வயதிற்கு மீறிய பெருந்தன்மை. சிலசமயம் சல்யூட் செய்யலாம் எனத் தோன்றும். பெருந்தன்மையால் ஏமாளியோ என்ற எண்ணமும் மற்றவர்களுக்கு வருகிறது என்று சொல்லியுள்ளீர்கள். இது மிகவும் பொருந்தும். பிறர் என்ன நினைப்பது. நானே என் மகனைப் பற்றி அப்படி நினைத்துள்ளேன். சமீபத்தில் உமாவிடம் கூட மினஞ்சலில் குறிப்பிட்டேன் இதைப் பற்றி.
    --- உதவும் மனப் பான்மை உண்டு, அனால் இவர்களைப் போலுண்டா என்று மெச்சும் அளவுக்கு என்று சொல்ல முடியாது
    --- ஆராய்ச்சி மனப்பான்மை...இது அவரவருக்கு எதில் ஆர்வம் அதிகமோ அதில் எனக் கொள்ளலாம். என் கணவருக்கும் மகனுக்கும் கணக்கில் விடை வரவில்லை என்றால் தூக்கம் கூட வராது, குடைந்து கொண்டே இருப்பார்கள்.
    --- நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள் ...உண்மை
    --- பந்தா இல்லாதவர்கள் ...உண்மை
    --- நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள். ...உண்மை
    --- காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள்? Love... Bah! Humbug!
    --- தனிமை விரும்பிகள்...உண்மை
    --- அதீத புத்திசாலிகள், மண்டை எல்லாம் மூளை
    --- துணிச்சலானவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் பார்த்ததில்லை
    ________________________________
    22-(நானே நான்)
    --- பெருந்தன்மை அதெல்லாம் ஏதோ உண்டு, எப்படி பெருந்தன்மையா ஒத்துக்கிறேன் பாருங்க
    --- உதவும் மனப் பான்மை அதிகம் (இது எங்க அம்மா கொடுத்த சான்றிதழ், "அம்மா" சொல்லிற்கு மறு பேச்சு ஏது?), இதனால் தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்வேன் என்று அம்மா கவலைப் பட்டதுண்டு.
    --- ஆராய்ச்சி மனப்பான்மை...பலவற்றில் உண்டு
    --- நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள், யாரு நானா? hopeless idealist endru பெற்ற பிள்ளைகளே பட்டம் கொடுத்திருக்கிறார்கள்
    --- பந்தா இல்லாதவர்கள்...உண்மை
    --- நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள். ...உண்மை
    --- காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள்? Love... Bah! Humbug!
    --- தனிமை விரும்பிகள்...உண்மை
    --- அதீத புத்திசாலிகள் சொல்லிக்கிலாம்தான் ஆனா தன்னடக்கம் தடுக்கிறதே :))))
    --- துணிச்சலானவர்கள்...என் வீரவாளுக்கு நிறைய வேலை இருக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்
    எனக்கும் செவ்வாய் நான்கில் ஆட்சிதான். ஆனால் தொடர்பு உள்ளதா என சொல்லத் தெரியவில்லை.

    ReplyDelete
  24. ///Ananthamurugan said...
    எதற்காக கவலை பட்டும் எதுவும் நிகழ போவதில்லை>எல்லா நாலும் ஒரே மாதிரியா இருக்கு பாருங்கோ...!?
    444444444...4444.44 44///

    நான்கைத் தவிர எங்கள் குடும்பத்தில் மற்ற எண்களும் உண்டு அவை 2, 3 :)))

    ReplyDelete
  25. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ///தேமொழி said...
    எண் 4 பற்றிய பதிவிற்கு நன்றி ஐயா. ................. 22 இல் பிறந்த ஆளை எனக்கு நன்றாகத் தெரியும் (அது நான்தான்). கொடுக்கப் பட்ட இந்த குணநலன்கள் 13 இல் பிறந்தவர்களுக்கு அதிகம் பொருந்துவதாகத் தோன்றுகிறது.////
    சகோதரியார் அனுபவப் பட்டு சொல்லி இருக்கிறார்கள் அதனால் அப்படியே எடுத்துக் கொள்கிறேன்...
    பெரிய மனுசத் தன்மையும், பெருந்தன்மையும், பிறர் விவகாரத்தில் தலையிட்டு உதவும் மனப் பான்மையும், அதே நேரம் தனது விவகாரத்தில் யாரும் தலை இட விரும்பாமையும், தனக்கு ஏற்பட்டத் தோல்வியின் வலியைப் பற்றி கவலைப் படாமல், தனக்கு ஏற்பட்ட தோல்வி தனது அன்பிற்கு காரணமானவர்கள் தன்னை நேசிப்பவர்கள் வருந்தும் படி செய்து விட்டதே என்று வருந்துவதும்... அதிகார தோரணையும் அதே நேரம் இடம், பொருள், ஆள் பார்த்து அடக்கி வாசிப்பதும் (இதுவரை அப்பாவிடம் ஒரு அடி கூட வாங்காமல் வந்திருக்கிறான்) இப்படி பலவும் சொல்லலாமா!
    அப்படி என்றால்... பெருந்தன்மையால் ஏமாளியோ என்ற எண்ணமும் மற்றவர்களுக்கு வருகிறது (பிற்காலத்தில் அவன் மனைவியிடமும் இதை கூறி கூடவே இருந்து கவனிக்க வேண்டிக் கொள்ள வேண்டும்!!!!) .... ஆனால் உண்மை என்னவென்றால் அப்படிப் பெருந்தன்மையாக இருந்தால் தான் தாம் தலைவராக இருக்க முடியும் என்ற எண்ணமும் உள்ளூர இருக்குமோ??!! தெரியவில்லை....
    இதெல்லாம் நான் என் மகனிடம் காணும் குணாதிசயங்கள்.... கோவிந்த் 13 /03 / 2001 - Singapore -ல் பிறந்தவன்.
    அவன் சிம்ம லக்னம், லக்னாதிபதி புதனுடன், ஏழிலில், சுக்ரன் எட்டில் உச்சம்...
    நான்காம் எண்ணிற்கு உரிய கிரகம் ராகு பதினொன்றில், பத்தில் குருவும், சனியும்.... செவ்வாய் நான்கிலே ஆட்சி செய்கிறான்... இதனால் தான் இந்தக் குணங்களோ? அறிந்தவர்கள் சொல்லவும்...
    சகோதரி தேமொழி இவைகள் தமக்கும் பொருந்துமா என்பதை பொருத்தி அடிக்கோடிடலாம் நன்றி. எப்படியோ எங்கள் வீட்டிலும் ஒரு ஆராய்ச்சியாளன் பிறந்திருக்கிறான் இல்லையா!:):):)))) உண்மைதான் உங்களைப் போல எல்லாவற்றையும் துருவித் துருவி ஆராய்வான்.:);) புதுமையோடு பழைமையையும் விரும்புவான்... அதிலும் சினிமாவில் அதுர பாடாவிப் படமெல்லாம் உட்கார்ந்து பார்த்து இது உங்களுக்கு பிடிக்கும், பிடிக்காது என்று கணிப்பு வேறு....
    இன்றைய பாடம் எங்களுக்கும் உபயோகம், பாடத்திற்கு நன்றிகள் ஐயா..../////

    பாடங்கள் எப்போதுமே பலருக்கும் (குறிப்பாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அக்கறை உள்ளவர்களுக்கு) உபயோகம் தான்!

    ReplyDelete
  26. /////Blogger Balamurugan Jaganathan said...
    பதிவு மிகவும் அருமை அய்யா. நான்காம் எண்ணிற்கு உரிய பண்புகளை 'ர' (இரத்தின) சுருக்கமாக கூறி தெளிவுபடுத்தி உள்ளீர்கள்.////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////Blogger Arul said...
    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இரண்டாம் தேதியில் பிறந்தவர்.ஆனால் சிம்ம லக்னத்தில் சனி, ராகு அமையப் பெற்றவர்.நீங்கள் சொன்ன அனைத்தும் அவருக்கு பொருந்துகிறது. பாடத்திற்கு நன்றி ஐயா...
    -அருள்நிதி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. Blogger Ananthamurugan said...
    minorwall said...
    இன்றைய பதிவு யாருக்கு ஷாக் ஆக இருக்குதோ இல்லையோ தேமொழிக்கு நிச்சயம் ஷாக் கொடுத்து இருக்கும்
    எதற்காக கவலை பட்டும் எதுவும் நிகழ போவதில்லை>எல்லா நாலும் ஒரே மாதிரியா இருக்கு பாருங்கோ...!?
    444444444...4444.44 44////

    என்ன செய்தீர்கள்? உங்களுடைய பின்னூட்டத்தில் வரிகளுக்கிடையே ஏன் இத்தனை இடைவெளி?

    ReplyDelete
  29. /////Blogger eswari sekar said...
    inrya////

    என்ன சொல்ல வந்தீர்கள்?

    ReplyDelete
  30. /////Blogger தேமொழி said...
    ///ஜி ஆலாசியம் said... சகோதரி தேமொழி இவைகள் தமக்கும் பொருந்துமா என்பதை பொருத்தி அடிக்கோடிடலாம்///
    நான் பார்த்த வரை வாத்தியார் குறிப்பிட்ட குணநலன்கள் பிறவி எண் 4 இல் உள்ளவர்களுக்கு வெவ்வேறு அளவில் பொருந்துகிறது என நினைக்கிறேன், நான் பார்த்த பண்புகளை ஒவ்வொரு தேதிக்கும் கீழே குறிப்பிட்டுள்ளேன், இதைப் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். இதனால்தான் பொதுப் பலன்கள் என்று பொதுவாக குறிப்பிடுகிறார்கள் போலிருக்கிறது.
    4 -(என் தங்கை)
    --- பெருந்தன்மை உண்டு (ஆனா எந்த கப்ல காபி அதிகம் இருக்கோ அது எனக்கு வேணும்)
    --- உதவும் மனப்பான்மை உண்டு (சரி, நீ மாடிக்கு போனீன்னா அப்படியே என்னோட ஹாண்ட்பாக்க கையோட எடுத்துட்டு வந்திடு)
    --- ஆராய்ச்சி மனப்பான்மை? அப்படினா என்ன? வேலையத்த வேலை செய்யறதுக்கு தூங்கலாம்
    --- நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள்..உண்மை.. உண்மை...
    --- பந்தா இல்லாதவர்கள்.??? (யாரைப் பற்றி சொல்கிறீர்கள்?)
    --- நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள். ...உண்மை
    --- காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள்? Love... Bah! Humbug!
    --- தனிமை விரும்பிகள்...உண்மை
    --- அதீத புத்திசாலிகள் ஆமாம் ...ஆமாம்
    --- துணிச்சலானவர்கள்? ( எனக்கு பயமா இருக்கு லைட்ட அணைக்காதே)
    ________________________________
    13-(என் கணவர் மற்றும் மகன் இளங்கோ)
    --- பெருந்தன்மையின் மொத்த உருவம், இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. வயதிற்கு மீறிய பெருந்தன்மை. சிலசமயம் சல்யூட் செய்யலாம் எனத் தோன்றும். பெருந்தன்மையால் ஏமாளியோ என்ற எண்ணமும் மற்றவர்களுக்கு வருகிறது என்று சொல்லியுள்ளீர்கள். இது மிகவும் பொருந்தும். பிறர் என்ன நினைப்பது. நானே என் மகனைப் பற்றி அப்படி நினைத்துள்ளேன். சமீபத்தில் உமாவிடம் கூட மினஞ்சலில் குறிப்பிட்டேன் இதைப் பற்றி.
    --- உதவும் மனப் பான்மை உண்டு, அனால் இவர்களைப் போலுண்டா என்று மெச்சும் அளவுக்கு என்று சொல்ல முடியாது
    --- ஆராய்ச்சி மனப்பான்மை...இது அவரவருக்கு எதில் ஆர்வம் அதிகமோ அதில் எனக் கொள்ளலாம். என் கணவருக்கும் மகனுக்கும் கணக்கில் விடை வரவில்லை என்றால் தூக்கம் கூட வராது, குடைந்து கொண்டே இருப்பார்கள்.
    --- நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள் ...உண்மை
    --- பந்தா இல்லாதவர்கள் ...உண்மை
    --- நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள். ...உண்மை
    --- காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள்? Love... Bah! Humbug!
    --- தனிமை விரும்பிகள்...உண்மை
    --- அதீத புத்திசாலிகள், மண்டை எல்லாம் மூளை
    --- துணிச்சலானவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் பார்த்ததில்லை
    ________________________________
    22-(நானே நான்)
    --- பெருந்தன்மை அதெல்லாம் ஏதோ உண்டு, எப்படி பெருந்தன்மையா ஒத்துக்கிறேன் பாருங்க
    --- உதவும் மனப் பான்மை அதிகம் (இது எங்க அம்மா கொடுத்த சான்றிதழ், "அம்மா" சொல்லிற்கு மறு பேச்சு ஏது?), இதனால் தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்வேன் என்று அம்மா கவலைப் பட்டதுண்டு.
    --- ஆராய்ச்சி மனப்பான்மை...பலவற்றில் உண்டு
    --- நடைமுறையோடு ஒத்துப்போகிறவர்கள், யாரு நானா? hopeless idealist endru பெற்ற பிள்ளைகளே பட்டம் கொடுத்திருக்கிறார்கள்
    --- பந்தா இல்லாதவர்கள்...உண்மை
    --- நம்பிக்கைக்கு உரியவர்கள். நேரம் தவறாதவர்கள். ...உண்மை
    --- காதல் விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள்? Love... Bah! Humbug!
    --- தனிமை விரும்பிகள்...உண்மை
    --- அதீத புத்திசாலிகள் சொல்லிக்கிலாம்தான் ஆனா தன்னடக்கம் தடுக்கிறதே :))))
    --- துணிச்சலானவர்கள்...என் வீரவாளுக்கு நிறைய வேலை இருக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்
    எனக்கும் செவ்வாய் நான்கில் ஆட்சிதான். ஆனால் தொடர்பு உள்ளதா என சொல்லத் தெரியவில்லை.//////

    நீண்ட பின்னூட்டத்திற்கும் உங்களுடைய கருத்துப் பகிர்விற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  31. /////Blogger தேமொழி said...
    ///Ananthamurugan said...
    எதற்காக கவலை பட்டும் எதுவும் நிகழ போவதில்லை>எல்லா நாலும் ஒரே மாதிரியா இருக்கு பாருங்கோ...!?
    444444444...4444.44 44///
    நான்கைத் தவிர எங்கள் குடும்பத்தில் மற்ற எண்களும் உண்டு அவை 2, 3 :)))/////

    அதானே! இல்லாமல் இருக்குமா?

    ReplyDelete
  32. /////தேமொழி said...
    ///ஜி ஆலாசியம் said... சகோதரி தேமொழி இவைகள் தமக்கும் பொருந்துமா என்பதை பொருத்தி அடிக்கோடிடலாம்///

    நான் பார்த்த வரை வாத்தியார் குறிப்பிட்ட குணநலன்கள் பிறவி எண் 4 இல் உள்ளவர்களுக்கு வெவ்வேறு அளவில் பொருந்துகிறது என நினைக்கிறேன், நான் பார்த்த பண்புகளை ஒவ்வொரு தேதிக்கும் கீழே குறிப்பிட்டுள்ளேன், இதைப் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். இதனால்தான் பொதுப் பலன்கள் என்று பொதுவாக குறிப்பிடுகிறார்கள் போலிருக்கிறது.////

    மிக்க நன்றி... இது தான் ஆராய்ச்சி... என்பது.:):) நன்றி சகோதரியாரே!:)

    ReplyDelete
  33. ////தேமொழி said...
    ________________________________
    13-(என் கணவர் மற்றும் மகன் இளங்கோ)
    --- பெருந்தன்மையின் மொத்த உருவம், இவர்களை மிஞ்ச ஆள் இல்லை. வயதிற்கு மீறிய பெருந்தன்மை. சிலசமயம் சல்யூட் செய்யலாம் எனத் தோன்றும். பெருந்தன்மையால் ஏமாளியோ என்ற எண்ணமும் மற்றவர்களுக்கு வருகிறது என்று சொல்லியுள்ளீர்கள். இது மிகவும் பொருந்தும். பிறர் என்ன நினைப்பது. நானே என் மகனைப் பற்றி அப்படி நினைத்துள்ளேன். சமீபத்தில் உமாவிடம் கூட மினஞ்சலில் குறிப்பிட்டேன் இதைப் பற்றி.////

    சந்தோசம் தரும் செய்தி!!!

    எங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இளங்கோவிற்கு உரியதாக்குங்கள். நன்றி.

    ReplyDelete
  34. என் பெண் பிறந்த தேதி 22 நீங்கள் எழுதிய பெரும்பான்மையான குணநலன்கள் அவளுக்கு இருக்கின்றன.

    ReplyDelete
  35. இந்த நாகத்தின் பலவீனங்கள்;அடித்து பேசுவது//

    இந்த குணமும் என் பெண்ணிடம் இருக்கிறது. இரண்டில் செவ்வாய் வேறு, கேட்கணுமா???

    ReplyDelete
  36. துணிச்சலானவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் பார்த்ததில்லை //

    வீட்டில உங்களுக்குப்பயந்து அவங்க வாயத் திறக்கறதில்லைன்னு அவங்களுக்கு துணிச்சலே இல்லைன்னு சொல்றது ரொம்ப ஓவர்!!!!!!!!!

    எனக்கும் செவ்வாய் நான்கில் ஆட்சிதான்.//

    என் தங்கைக்கும் நான்கில் செவ்வாய் ஆட்சிதான், பயங்கரமா எல்லாரோடும் சண்டை போடுவாள் (இப்போதும் அப்படித்தான்). சின்ன வயதில் எங்க ரெண்டு பேருக்கும் மாமா வைத்திருந்த பெயர் 'பச்சை காளி', 'பவள காளி'. சண்டை ஆரம்பிச்ச உடனே கிண்டலும் ஆரம்பித்துவிடும்.

    பச்சை காளி, பவள காளி பற்றி ஏதோ கதை உண்டு. அதை கிருஷ்ணன் சாரை இங்கே பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  37. Uma said...
    துணிச்சலானவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் பார்த்ததில்லை //

    வீட்டில உங்களுக்குப்பயந்து அவங்க வாயத் திறக்கறதில்லைன்னு அவங்களுக்கு துணிச்சலே இல்லைன்னு சொல்றது ரொம்ப ஓவர்!!!!!!!!!

    எனக்கும் செவ்வாய் நான்கில் ஆட்சிதான்.//

    என் தங்கைக்கும் நான்கில் செவ்வாய் ஆட்சிதான், பயங்கரமா எல்லாரோடும் சண்டை போடுவாள் (இப்போதும் அப்படித்தான்). சின்ன வயதில் எங்க ரெண்டு பேருக்கும் மாமா வைத்திருந்த பெயர் 'பச்சை காளி', 'பவள காளி'. சண்டை ஆரம்பிச்ச உடனே கிண்டலும் ஆரம்பித்துவிடும்.

    பச்சை காளி, பவள காளி பற்றி ஏதோ கதை உண்டு. அதை கிருஷ்ணன் சாரை இங்கே பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்

    ஆண் வர்க்கம் உயிரை பணயம் வைத்து வாழ்க்கையை ஓட்றதே எவ்வளவு துணிச்சல்....! இதில் பத்ரகாளி,பச்சை,பவள காளிகள்,நினைக்கிறப்பவே திகில் படம் பார்க்கிற எபக்ட்......

    ReplyDelete
  38. வணக்கம் ஐயா,
    நான்காம் எண்களில் பிறந்தவர்களை அதிகம் எனக்கும் தெரியாது...அதனால் நான்காம் எண்காரர்களின் பொது குணாதிசயங்களை அறிய முடிந்தது...நான்காம் எண்காரர்களின் குணாதிசயங்களை ஆராய்ந்து தேமொழி சகோதரி ஒரு நீண்ட குறிப்பையே தந்துவிட்டீர்கள்,மீண்டும் நீங்கள் 4ம் எண்காரர் என்று நிரூபித்து விட்டீர்கள்...ஹிஹிஹி...

    உங்கள் வீட்டில் எப்படி 4ம் எண் ஆதிக்கமோ அது போன்று எங்கள் வீட்டில் 2ம் எண் தான் அதிகம்...ஆச்சரியம் என்னவென்றால் ஒரே எண் ஒரே குடும்பத்தில் அதிகம் வருவது தான்...

    ReplyDelete
  39. Blogger Uma said...
    என் பெண் பிறந்த தேதி 22 நீங்கள் எழுதிய பெரும்பான்மையான குணநலன்கள் அவளுக்கு இருக்கின்றன./////

    இருந்தால் நல்லது! இதுபோன்ற பின்னூட்டங்கள்தான் பதிவிற்கு வலு சேர்க்கும்!

    ReplyDelete
  40. ////Blogger Uma said...
    இந்த நாகத்தின் பலவீனங்கள்;அடித்து பேசுவது//
    இந்த குணமும் என் பெண்ணிடம் இருக்கிறது. இரண்டில் செவ்வாய் வேறு, கேட்கணுமா???/////

    மகள்தானே! அடித்தால் வலிக்குமா என்ன? பொறுத்துக்கொள்ளூங்கள்!

    ReplyDelete
  41. ///Blogger Uma said...
    துணிச்சலானவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் பார்த்ததில்லை //
    வீட்டில உங்களுக்குப்பயந்து அவங்க வாயத் திறக்கறதில்லைன்னு அவங்களுக்கு துணிச்சலே இல்லைன்னு சொல்றது ரொம்ப ஓவர்!!!!!!!!!
    எனக்கும் செவ்வாய் நான்கில் ஆட்சிதான்.//
    என் தங்கைக்கும் நான்கில் செவ்வாய் ஆட்சிதான், பயங்கரமா எல்லாரோடும் சண்டை போடுவாள் (இப்போதும் அப்படித்தான்). சின்ன வயதில் எங்க ரெண்டு பேருக்கும் மாமா வைத்திருந்த பெயர் 'பச்சை காளி', 'பவள காளி'. சண்டை ஆரம்பிச்ச உடனே கிண்டலும் ஆரம்பித்துவிடும்.
    பச்சை காளி, பவள காளி பற்றி ஏதோ கதை உண்டு. அதை கிருஷ்ணன் சாரை இங்கே பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்./////

    நீங்கள் பயமுறுத்துவது போதாதா? அவரும் வந்து விளக்கம் சொல்லிப் பயமுறுத்த வேண்டுமா?:-)))

    ReplyDelete
  42. ////Blogger Ananthamurugan said...
    Uma said...
    துணிச்சலானவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் பார்த்ததில்லை //
    வீட்டில உங்களுக்குப்பயந்து அவங்க வாயத் திறக்கறதில்லைன்னு அவங்களுக்கு துணிச்சலே இல்லைன்னு சொல்றது ரொம்ப ஓவர்!!!!!!!!!
    எனக்கும் செவ்வாய் நான்கில் ஆட்சிதான்.//
    என் தங்கைக்கும் நான்கில் செவ்வாய் ஆட்சிதான், பயங்கரமா எல்லாரோடும் சண்டை போடுவாள் (இப்போதும் அப்படித்தான்). சின்ன வயதில் எங்க ரெண்டு பேருக்கும் மாமா வைத்திருந்த பெயர் 'பச்சை காளி', 'பவள காளி'. சண்டை ஆரம்பிச்ச உடனே கிண்டலும் ஆரம்பித்துவிடும்.
    பச்சை காளி, பவள காளி பற்றி ஏதோ கதை உண்டு. அதை கிருஷ்ணன் சாரை இங்கே பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்
    ஆண் வர்க்கம் உயிரை பணயம் வைத்து வாழ்க்கையை ஓட்றதே எவ்வளவு துணிச்சல்....! இதில் பத்ரகாளி,பச்சை,பவள காளிகள்,நினைக்கிறப்பவே திகில் படம் பார்க்கிற எபக்ட்....../////

    நயன்தாராவிற்கு நம்பியார் வேடம் போட்ட மாதிரி, இந்தக் காளிகளுக்கு பாலைய்யா வேஷத்தைப் போட்டுவிட வேண்டியதுதானே!:-)))

    ReplyDelete
  43. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    நான்காம் எண்களில் பிறந்தவர்களை அதிகம் எனக்கும் தெரியாது...அதனால் நான்காம் எண்காரர்களின் பொது குணாதிசயங்களை அறிய முடிந்தது...நான்காம் எண்காரர்களின் குணாதிசயங்களை ஆராய்ந்து தேமொழி சகோதரி ஒரு நீண்ட குறிப்பையே தந்துவிட்டீர்கள்,மீண்டும் நீங்கள் 4ம் எண்காரர் என்று நிரூபித்து விட்டீர்கள்...ஹிஹிஹி...
    உங்கள் வீட்டில் எப்படி 4ம் எண் ஆதிக்கமோ அது போன்று எங்கள் வீட்டில் 2ம் எண் தான் அதிகம்...ஆச்சரியம் என்னவென்றால் ஒரே எண் ஒரே குடும்பத்தில் அதிகம் வருவது தான்.../////

    ஒரு குடும்பத்தில் அப்படி இருப்பது நல்லதுதான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com