மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.1.09

அதிரவைத்த இளம் சந்நியாசி!

அதிரவைத்த இளம் சந்நியாசி!

இளஞ்செழியன் எனும் பெயரையுடைய குறுநில மன்னன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய நாடு நன்றாக இருந்தது. அவனது ஆட்சியில் நாட்டு மக்களும்
நன்றாக இருந்தார்கள்.

அனால் அவன் நன்றாக இல்லை. அதாவது அவனுடைய குடும்ப வாழ்க்கை
நன்றாக இல்லை!

என்ன காரணம்?

அவனுக்கு இரண்டு தேவியர்கள். அதாவது இரண்டு மனைவிகள். பதின்மூன்று
குழந்தைகள். நித்தமும் அரண்மனையில் சண்டைகள். சச்சரவுகள்.

வீட்டில் வெட்டு குத்து நடக்கவில்லை. மற்றதெல்லாம் நடந்தது. குடும்பத்தில்
ஒற்றுமையும், இணக்கமும் இல்லை!!

மனிதன் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும் - நீங்களே சொல்லுங்கள்?

அவர்கள் பதினைந்து பேர்களுமாகச் சேர்ந்து அரசனைத் தினமும் துவைத்துக்
காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெளி ஆட்களாக இருந்தால், அரசன் துன்பம் விளைவிப்பவர்களை அல்லது
குழப்பம் விளைவிப்பவர்களை உள்ளே தூக்கிப் போட்டிருப்பான். மனைவி
மக்களை தண்டித்து எப்படி உள்ளே போட முடியும்?

அரசன் தவித்தான். சுருண்டான். மயங்கினான். கவலை கொண்டான். தலைவலி.
தூக்கமின்மை. என்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகினான். அனைத்தும் அவனை
அனுதினமும் வாட்டின!

எதிலும் அவனால் தன்நினைவோடு இருக்க முடியவில்லை. செயல் பட முடியவில்லை!

ஒரு நாள் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் குறிப்பிட்டு, அழுகாத
குறையாக தன்னுடைய மனக்குறைகளை வெளிப்படுத்தினான்.

நண்பர் அதற்கு ஒரு யோசனை சொன்னார். ஞானானந்தா என்று இளம் துறவி
ஒருவர் இருப்பதாகவும் அவரிடம் உபதேசம் கேட்டுக்கொண்டால், எல்லாப்
பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும் என்றும் சொன்னார். அவரைத்தான் பார்த்ததில்லை
என்றும், ஆனால் நிறையக் கேள்விப் பட்டிருப்பதாகவும் சொன்னார். அதோடு அந்த
இளம் துறவி தற்சமயம் பல்லவ நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும்
செய்தியையும் சொன்னார்.

அரசன் தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, தகவலைச் சொல்லி, உடனே
புறப்பட்டுச் சென்று, எப்படியாகினும், அந்தத் துறவியை அழைத்து வரச்
சொன்னான். முதன்மந்திரியும், நான்கு வீரர்கள் துணையுடன், உடனே
புறப்பட்டுப் போனார்.

ஆனால் சென்றது வீணாகி விட்டது. துறவி வருவதற்கு மறுத்து விட்டார்.

கிராமம், கிராமமாகத் தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும்,
அரசர்களைவிடத்தான் மக்களையே அதிகம் விரும்புவதாகவும், இறையருளைச்
சொல்லி, மக்களை நல்வழிப் படுத்துவதே தனது தலையாய வேலை என்றும்
சொன்னார். தனி மனிதர்களுக்குத் தான் முக்கியம் கொடுப்பதில்லை என்றும்
சொன்னார்.

மந்திரி காலில் விழாத குறையாகக் கெஞ்சியும், அவர் வரச் சம்மதிக்க
வில்லை. அதோடு தான் ராமேஸ்வரம் வரை கால் நடைப் பயணம் மேற்கொண்டிருப்ப
தாகவும், திரும்பும் வழியில், அழைத்தால், வந்து பார்ப்பதாகவும் சொன்னார்.
அதற்கு ஒரு ஆண்டு காலம் ஆகுமென்றும் கூறிவிட்டார்.

மந்திரி திகைத்துப் போய்விட்டார்.

இந்தக்காலமாக இருந்தால், நடப்பதே வேறு. சாமியாரை ஏதாவது ஒரு செக்சனில்
பிடித்து அள்ளிக் கொண்டு வந்திருக்கலாம். அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
காலம். அனைவருமே பக்திமான்கள். தர்ம சிந்தனை உடையவர்கள், அதோடு
தன்னுடைய சக்தியால் சாமியார் எதையாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற
பயம் வேறு இருந்தது.

அதனால் மந்திரி தோல்வியுடன் திரும்பி விட்டார். அரசனிடம் எதையாவது சொல்லி
சமாளிக்க வேண்டியது என்ற முடிவையும் எடுத்திருந்தார்.

இரண்டு வாரங்களில் துறவி வருவதாக உறுதி அளித்திருக்கிறார் என்று அரசனிடம்
ஒரு பொய்யைச் சொல்லி நிலமையைச் சமாளித்தார். இரண்டு வாரங்கள் கழித்து
அரசன் நினைவு படுத்திய போது, ஒரு வீரனை அனுப்பி விசாரித்துக் கொண்டு வரச்
சொல்வதாககூறி, மீண்டும் அதே பொய்யைச் சொல்லி மேலும் ஒருமாத காலத்தை
ஓட்டினார்.

இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன.

மிகுந்த கோபத்திற்கு ஆளான அரசன், முதன் மந்திரியைக் கண்டித்துச் சொல்லி
விட்டான். "என்ன சேய்வீர்களோ தெரியாது. இன்னும் பதினைந்து தினங்களுக்குள்
அந்தத் துறவி இங்கே இருந்தாக வேண்டும். இல்லை என்றால் உங்கள் பதவியை
நீங்கள் இழக்க நேரிடும்!"

முதன் மந்திரிக்கு மிகவும் இக்கட்டாகிவிட்டது. இக்கட்டில் சிலரது மூளை
அற்புதமாக
வேலை செய்யும். மந்திரியின் மூளையும் அப்படியொரு வேலையைச் செய்தது.

ஒரு போலிச் சாமியாரை உருவாக்கி, அரசன் முன் கொண்டு வந்து நிறுத்திட
மந்திரி
முடிவு செய்தார். அதை உடனடியாகச் செயல் படுத்தவும் முனைந்தார்.

இந்தக் காலம் போல பத்திரிக்கைகள், புகைப்படங்கள், தொலைக்காட்சிகள்
எதுவும் இல்லாததால் போலியான ஒருவனைக் கொண்டு வந்து நிறுத்தினால்
யாருக்குத் தெரியப்போகிறது?

சாந்தமான முகக்களை மற்றும் தோற்றமுள்ள இளைஞனைத் தேடி, மந்திரி
பக்கத்துக் கிராமங்களில் அலைந்து பார்த்தார்.

அவருடைய நல்ல நேரம், கிராமம் ஒன்றில் மணியக்காரராக இருந்த
பெரியசாமியின் மகன் முத்தழகன் தோதாகக் கிடைத்தான்.

மந்திரியின் சொல்லத் தட்ட முடியாமல் சாமியார் வேடத்திற்கு ஒப்புக்கொண்ட
முத்தழகன் நடிக்க வேண்டிய இடத்தைக் கேட்டவுடன் பயந்து விட்டான்.

"அய்யா, அரசர் கண்டு பிடித்து விட்டால் பிரச்சினையாகி விடுமே!" என்றான்.

உடனே மந்திரி தக்கதொரு பதிலைச் சொல்லி அவனத் தேற்றினார்.

"அதெல்லாம் பிரச்சினை வராது. அப்படியே வந்தாலும் என் பெயரைச் சொல்லி,
என்
கட்டாயத்தினால்தான் நடித்தாகச் சொல்லிவிடு. வருவதை நான் பார்த்துக்
கொள்கிறேன்"


முத்தழகன் ஒப்புக்கொண்டான். வேறு வழி? ஒப்புக்கொள்ளாவிட்டால் முதன்
மந்திரியை எதிர்கொள்வது எப்படி?

------------------------------------------------------------------------------------------------
முத்தழகனுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கபெற்றது. தலைமுடி மழுங்க வழிக்கப்
பெற்றது. கழுத்தில் ஒரு பெரிய உருத்திராட்ச மாலை அணிவிக்கப்பெற்றது.
அதோடு தலைப் பகுதியிலும் வட்ட வடிவமாக ஒரு உருத்திராட்ச மாலை அணிவிக்கப்
பெற்றது. பட்டையாக விபூதி பூசப்பெற்றது. சிவப் பழமாகக் காட்சியளித்தான்.

அரசன் என்னென்ன கேள்விகள் கேட்பான். அவற்றிற்கு என்னென்ன பதில்கள்
அளிக்க வேண்டுமென்றும் பயிற்சி கொடுக்கப்பெற்றது. அதோடு தெரியாத
கேள்விகளுக்கு நமச்சிவாய அல்லது திருச்சிற்றம்பலம் என்று இறைவனின் பெயரை
மட்டும் சொல்லும்படி பணிக்கப்பெற்றிருந்தது. மொத்தமாகப் பயிற்சி அளிக்கப்
பெற்றிருந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள்!
---------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் அதிகாலை நேரத்தில், நகருக்கு வெளியில் இருந்த மண்டபம் ஒன்றில்
அவன் உட்கார வைக்கப்பட்டான். அரண்மனை பல்லக்கு ஒன்று அனுப்பட்டது.
அதிலேறி அவனும் அரண்மனைக்கு வந்து சேர வேண்டும் என்பது ஏற்பாடு!.

இப்போது அவனுடைய பெயர். தவத்திரு ஞானானந்தா சுவாமிகள்!

அதற்கு முதல் நாளே, சுவாமிகள் எழுந்தருள உள்ள விஷயம் அரசனுக்குத்
தெரிவிக்கப்பட்டதால், அரசனும் அவரை வரவேற்க மகிழ்வுடன் தயாராக
இருந்தான்.

அரண்மணை முழுவதும் நன்நீரால் கழுவப்பெற்று, நல் மலர்களால் அலங்கரிகப்
பட்டிருந்தது.

அரண்மணை வாசலில் தன் தேவியர்கள் மற்றும் புத்திர சிகாமணிகளுடன் நின்று
கொண்டிருந்த அரசன் ஆவலுடன் சுவாமிகளின் வரவை எதிர் நோக்கிக் காத்துக்
கொண்டிருந்தான்.

நடந்தது என்ன?

அது மிகவும் சுவாரசியமானது!

என்ன சுவாரசியம்?

அடுத்த பதிவில் அது தெரிய வரும்!

(தொடரும்)
----------------------------------------------------------------------------
"வாத்தியாரே, இந்தக் கதைக்கும் பாடத்திற்கும் உள்ள தொடர்பு?"

"அடுத்த Topic கேதுவைப்பற்றியது. அதற்கான முன்னோட்டம்தான் இந்தக் கதை!
---------------------------------------------------------------------------
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்


வாழ்க வளமுடன்!

34 comments:

  1. sir story is very interesting. but kethu have highest power than other planet is it true sir?

    ReplyDelete
  2. கிளைமாக்ஸ் நேரத்தில் கரண்ட்கட் ஆனதுபோல் உள்ளது.விரைவில் கிளைமாக்ஸ் வெளியிடுங்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. சஸ்பென்ஸ்ல கதையை நிறுத்தியதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!
    :-))

    ReplyDelete
  4. கதை அருமையாக உள்ளது. கேள்விப்பட்டது போலவும் உள்ளது. வகுப்பறை தோழர்களிடம் சஸ்பென்ஸ்-ஐ உடைக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  5. Kethu starts with spiritual story.
    Good beginning.

    ReplyDelete
  6. Sir,

    Most eagerly awaited topic.

    Adiyanuku Meena Lagnathil Kethu...

    That's y more intrested about this chapter... :)-:)-:)-

    Anpudan,
    Kamesh

    ReplyDelete
  7. அதிகப்படுத்தப்பட்ட ஆவலில் தியாகராஜன்.

    ReplyDelete
  8. /////Blogger sridhar said...
    sir story is very interesting. but kethu have highest power than other planet is it true sir?/////

    il is not true!

    ReplyDelete
  9. /////Blogger வேலன். said...
    கிளைமாக்ஸ் நேரத்தில் கரண்ட்கட் ஆனதுபோல் உள்ளது.விரைவில் கிளைமாக்ஸ் வெளியிடுங்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில், முதல் பாதிக்குப்பிறகு, இடைவேளை விடுகிறாரர்களே, அப்படி இதுவும் இடைவேளைதான். போய்க் காப்பி சப்பிட்டுவிட்டு, மயிலுக்கும் தண்ணீர் காட்டிவிட்டு வாருங்கள்!

    ReplyDelete
  10. ////Blogger திவா said...
    சஸ்பென்ஸ்ல கதையை நிறுத்தியதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்!
    :-))////

    நானும் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். விசாரித்தேன். வாத்தியாரால் இன்று அவ்வளவுதான் எழுத முடிந்ததாம்.
    ஆறு மணிக்குப் பதிவை வலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தில், எழுதியவரை போதும் என்று, தொடரும் வார்த்தையைச் சேர்த்து பதிவை வலை ஏற்றிவிட்டாராம்.

    ReplyDelete
  11. /////Blogger இராசகோபால் said...
    கதை அருமையாக உள்ளது. கேள்விப்பட்டது போலவும் உள்ளது. வகுப்பறை தோழர்களிடம் சஸ்பென்ஸ்-ஐ உடைக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன்.
    அன்புடன்
    இராசகோபால்/////

    உடைத்துவிடாதீர்கள். அப்புறம் கேது பகவானின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்! :-)))))

    ReplyDelete
  12. /////Blogger krish said...
    Kethu starts with spiritual story.
    Good beginning./////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  13. ////Blogger Kamesh said...
    Sir,
    Most eagerly awaited topic.
    Adiyanuku Meena Lagnathil Kethu...
    That's y more intrested about this chapter... :)-:)-:)-
    Anpudan,
    Kamesh////

    ஆர்வத்தை அப்படியே கெட்டியாகப் பிடித்து வையுங்கள். தொடர்ந்து 15 நாட்களுக்குக் கேதுவை பற்றிய பாடம்!

    ReplyDelete
  14. ////Blogger தியாகராஜன் said...
    அதிகப்படுத்தப்பட்ட ஆவலில் தியாகராஜன்.////

    அடுத்த பதிவு உங்கள் ஆவலை இன்னும் அதிகப்படுத்தும்!

    ReplyDelete
  15. Trailer Super !!! Waiting for the main picture....

    ReplyDelete
  16. அய்யா,
    கதை என்னை அந்த காலத்துக்கு இழுத்து சென்றது. அந்த காலத்திலும் "போலி" மந்திரிகள் இருந்தார்களா? அல்லது எந்த காலத்திலும் மந்திரி, மந்திரியாத்தான் இருந்தார்களா?

    நன்றி!

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  17. Ketu stands for spirituality, liberation from karmic cycle and non-attachment to earthly desires and ambitions. It also stands for wisdom, psychic power, healing ability..I feel the story will go in similar line

    ReplyDelete
  18. "தல" ராகு பகவானின் ரகளை ராச்சியம் முடிந்தது அப்பாடி என்று மூச்சு விட்டால்...."வால்" வல்லரசின் வரலாறு ஆரம்பமா? வாழ்க வகுப்பாசிரியரின் மிரட்டல் தொண்டு.....

    ReplyDelete
  19. ஐயா தங்களின் எழுத்து நடை வியக்க வைக்கிறது. ஆர்வத்தை தூண்டுகிறது.
    கேது பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  20. கதை அருமையாக உள்ளது.எழுத்து நடை அருமை.

    GK

    ReplyDelete
  21. Dear sir,

    Astrology Mass Mr.SP.VR.S -

    Astrology is like a IFB Washing Machine,Kethu is like a Cloth. Based on machine performance, we will get lot of output.

    But Always input is "Astrology Mass".

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  22. //////Blogger மிஸ்டர் அரட்டை said...
    Trailer Super !!! Waiting for the main picture..../////

    அடுத்து வரும் நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger Sridhar said...
    அய்யா,
    கதை என்னை அந்த காலத்துக்கு இழுத்து சென்றது. அந்த காலத்திலும் "போலி" மந்திரிகள் இருந்தார்களா? அல்லது எந்த காலத்திலும் மந்திரி, மந்திரியாத்தான் இருந்தார்களா?
    நன்றி!
    ஸ்ரீதர் S/////

    மனிதன் எப்போதும் மனிதனாகத்தான் இருந்திருக்கிறான். நல்லவன் நல்லவனாகவும். கெட்டவன் கெட்டவனாகவும். அதற்குக் காலமெல்லாம் கிடையாது!

    ReplyDelete
  24. //////Blogger மிஸ்டர் அரட்டை said...
    Ketu stands for spirituality, liberation from karmic cycle and non-attachment to earthly desires and ambitions. It also stands for wisdom, psychic power, healing ability..I feel the story will go in similar line//////

    ஆமாம். கதையின் முடிவில் அது தெரியவரும்!

    ReplyDelete
  25. /////Blogger படித்துறை.கணேஷ் said...
    "தல" ராகு பகவானின் ரகளை ராச்சியம் முடிந்தது அப்பாடி என்று மூச்சு விட்டால்...."வால்" வல்லரசின் வரலாறு ஆரம்பமா? வாழ்க வகுப்பாசிரியரின் மிரட்டல் தொண்டு...//////..

    தொண்டால் கூட மிரட்ட முடியுமா? எனக்கு வியப்பாக உள்ளது நண்பரே!:-)))))

    ReplyDelete
  26. //////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா தங்களின் எழுத்து நடை வியக்க வைக்கிறது. ஆர்வத்தை தூண்டுகிறது.
    கேது பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன்./////

    எழுத்து நடை நன்றாக உள்ளதா? நான் கதாசிரியன் (பகுதி நேரப் பணி) அப்படியிருந்தால்தானே வாசகரை ஈர்க்க முடியும்.
    ஜோதிடத்தை விட்டு விட்டு, பேசாமல் கதைகளையே கரும்பலகையில் எழுதட்டுமா?

    ReplyDelete
  27. //////Blogger Geekay said...
    கதை அருமையாக உள்ளது.எழுத்து நடை அருமை.
    GK//////

    பாராட்டிற்கு நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  28. ////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear sir,
    Astrology Mass Mr.SP.VR.S -
    Astrology is like a IFB Washing Machine,Kethu is like a Cloth. Based on machine performance, we will get lot of output. But Always input is "Astrology Mass".
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////////

    பாராட்டிற்கு நன்றி அருள்குமார் ராஜாராமன்!

    ReplyDelete
  29. //////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா தங்களின் எழுத்து நடை வியக்க வைக்கிறது. ஆர்வத்தை தூண்டுகிறது.
    கேது பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன்./////

    எழுத்து நடை நன்றாக உள்ளதா? நான் கதாசிரியன் (பகுதி நேரப் பணி) அப்படியிருந்தால்தானே வாசகரை ஈர்க்க முடியும்.
    ஜோதிடத்தை விட்டு விட்டு, பேசாமல் கதைகளையே கரும்பலகையில் எழுதட்டுமா?
    ////

    No Sir.. U can have a good mix of stories and astrology...

    ReplyDelete
  30. வேலை பளு மற்றும் பல்வேறு காரணங்களால் வகுப்புக்கு வர இயலவில்லை; வந்தாலும் அட்டெண்டன்ஸ்(பின்னூட்டம்) தர இயலவில்லை, ஐயா மற்றும் சகமாணவ கண்மணிகளே..

    ராகு கொடுத்து கெடுப்பவர்
    கேது கெடுத்து கொடுப்பவர் என்பார்கள். நம் வாத்தியார் ஐயா
    கொடுத்து.. கொடுப்பவர்!

    கதையும் சஸ்பென்ஸும்
    சுவராஸ்யம்; வகுப்புஅறையின்
    மற்ற இணைப்புகள் எதுவும்
    இன்று காண கிடைக்கவில்லை,
    ராகு தூக்கிக்கொண்டு போய் விட்டாரா? :))

    ReplyDelete
  31. /////Blogger மிஸ்டர் அரட்டை said...
    //////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா தங்களின் எழுத்து நடை வியக்க வைக்கிறது. ஆர்வத்தை தூண்டுகிறது.
    கேது பற்றிய பாடத்தை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன்./////
    எழுத்து நடை நன்றாக உள்ளதா? நான் கதாசிரியன் (பகுதி நேரப் பணி) அப்படியிருந்தால்தானே வாசகரை ஈர்க்க முடியும்.ஜோதிடத்தை விட்டு விட்டு, பேசாமல் கதைகளையே கரும்பலகையில் எழுதட்டுமா? ////
    No Sir.. U can have a good mix of stories and astrology...///////

    அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  32. //////Blogger தமாம் பாலா (dammam bala) said...
    வேலைப் பளு மற்றும் பல்வேறு காரணங்களால் வகுப்புக்கு வர இயலவில்லை; வந்தாலும் அட்டெண்டன்ஸ்(பின்னூட்டம்) தர இயலவில்லை, ஐயா மற்றும் சகமாணவ கண்மணிகளே..
    ராகு கொடுத்து கெடுப்பவர்
    கேது கெடுத்து கொடுப்பவர் என்பார்கள். நம் வாத்தியார் ஐயா
    கொடுத்து.. கொடுப்பவர்!
    கதையும் சஸ்பென்ஸும்
    சுவராஸ்யம்; ////////

    நன்றி பாலா. நீங்கள் முதல் பெஞ்ச் மாணவர். நேரம் கிடைக்கும்போது வரலாம். முதல் பெஞ்சிற்கு மட்டும் அந்தச் சலுகை!:-))))


    //////வகுப்புஅறையின்
    மற்ற இணைப்புகள் எதுவும்
    இன்று காண கிடைக்கவில்லை,
    ராகு தூக்கிக்கொண்டு போய் விட்டாரா? :))////

    என்ன, குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள்? மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  33. /////Blogger Sridhar said...
    அய்யா,
    கதை என்னை அந்த காலத்துக்கு இழுத்து சென்றது. அந்த காலத்திலும் "போலி" மந்திரிகள் இருந்தார்களா? அல்லது எந்த காலத்திலும் மந்திரி, மந்திரியாத்தான் இருந்தார்களா?
    நன்றி!
    ஸ்ரீதர் S/////

    மனிதன் எப்போதும் மனிதனாகத்தான் இருந்திருக்கிறான். நல்லவன் நல்லவனாகவும். கெட்டவன் கெட்டவனாகவும். அதற்குக் காலமெல்லாம் கிடையாது!

    /////

    அய்யா,

    எனக்கு கண்ணதாசன் பாடல் ஒன்று நினைவு வருகிறது.

    ...... "மனிதானாக வாழ தெரியவில்லையே"..
    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  34. அய்யா ..... அதிரவைத்த இளம் சந்நியாசி கதை சூப்பர் ........அடுத்த வாரத்திற்காக வாசலில் நான் காத்து கொண்டு இருக்கிறன் ...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com