மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.1.09

சிலருக்கு மட்டும் வெற்றி எளிதாகக் கிடைப்பது ஏன்?


சிலருக்கு மட்டும் வெற்றி எளிதாகக் கிடைப்பது ஏன்?

வெற்றி எனும் மூன்றெழுத்துச் சொல்லை விரும்பாத மனிதர் எவரேனும் உண்டா?

அத்தனை மாந்தர்களும் ஆசைப்பட்டுத் தேடுவதும், ஏங்குவதும் வெற்றிக்குத்தான்

எல்லோருக்கும் வெற்றி எளிதில் கிடைக்கிறதா?

இல்லை!

சிலருக்கு மட்டுமே வெற்றி எளிதாகக் கிடைக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது மகன் பிரபுவிற்கும்,
இயக்குனர் S.A சந்திரசேகரன் அவர்களின் மகன் விஜய்க்கும், இயக்குனர்
கஸ்தூரி ராஜா அவர்க்ளின் வின் மகன் தனுஷிற்கும் கிடைத்த வெற்றி,
எளிதான வெற்றி அல்லது துவக்க வெற்றி அனைவரும் கிடைக்குமா?

கிடைக்காது.

திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்களின் பிள்ளைகளாக அவர்கள்
பிறந்ததே, அவர்கள் வெற்றியை எளிதாக எட்டிப் பிடித்ததற்குக் காரணம்.

பண்ணைபுரத்துக்காரர் இசைஞானி இளையராஜா அவர்களையும், அல்லி
நகரத்துக்காரர் பாரதிராஜா அவர்களையும் வெற்றி தேவதை அவளாக
வந்து தழுவவில்லை. அவர்கள் இருவரும் கடும் முயற்சிகள் செய்து அவளைத்
தேடிப் பிடித்தார்கள். அவர்கள் தேடிய விதத்தை அல்லது தேடும்போது பட்ட
சிரமங்களைச் சொன்னால் அதைவைத்தே இரண்டு திரைப்படங்களை எடுக்கலாம்
-------------------------------------------------------------------------------------
புத்தியும் (அறிவும்) வாய்ப்பும் சந்திக்கையில் கிடைப்பது வெற்றி
புத்திக்கு ஒவ்வாதவைகளும், இயல்பு வாழ்க்கையும் (state of being real)
சந்திக்கும் போது கிடைப்பது தோல்வி!

"Success is when Skill meets Opportunity.
Failure is when Fantasy meets Reality."
- Brokins

சரி, எல்லோருக்கும் புத்தி இருக்கிறது. அந்த புத்தியை ஒழுங்காக வேலை
செய்ய விதி விடுகிறதா? மீறி வேலை செய்தாலும் வாய்ப்புக்கள் கிடைக்கிறதா?
வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அது் வெற்றியில் முடிகிறதா?

எல்லாம் ஜாதகப் பலன்! அதுதான் கொடுப்பினை எனப்படும்!

தட்டிவிட்டுப் போவதில் அல்லது கவிழ்த்துவிட்டுப்போவதில் ராகுவிற்கு
இணை ராகுதான். எந்த ஒரு ஜாதகனுக்கு ராகுவின் இம்சை இல்லாமல்
இருக்காது.

ஆனால் அவர் தனியாக இருந்து இம்சித்தால் பரவாயில்லை. வேறு ஒரு
கிரகத்துடன் சேர்ந்து கூட்டாக இம்சிப்பதுதான் பொறுக்க முடியாததாகிவிடும்

கதைத்தது போதும், பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்
-------------------------------------------------------------------------------------
இன்று மனகாரகன் சந்திரனுடன் ராகு சேர்வதால் ஏற்படும் பலன்களைப்
பார்ப்போம்:

மனம் ஏன் கட்டுப்படுவதில்லை?

"கண்போன போக்கிலே கால் போகலாமா
கால்போன போக்கிலே மனம் போகலாமா
மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன்போன பாதையை மறந்து போகலாமா"

என்ற அசத்தலான வரிகளுடன் துவங்கும் அற்புதமான பாடல் ஒன்று
உள்ளது. அனைவரும் அறிந்த பாடல் அது. கவிஞர் வாலியின் மகுடத்தில்
மேலும் ஒரு வைரத்தைச் சேர்த்த பாடல் அது!

பாடலைக் கேட்டுக் கிறங்கும் ஒவ்வொரு மனிதனும் அதன்படிதான்
நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவான்.

மனதைக் கட்டிவைத்து விட்டு, உலக நியதிகளின்படி இனிமேல் நடக்க
வேண்டும் என்று மனதில் சூல் கொள்வான்.

நடக்க முடியுமா? முடியாது!

எத்தனை நாட்களுக்கு அந்த வரிகள் மனதில் நிற்கும்?

கட்டிக்கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை
நாட்களுக்கு
வரும்?

அதிக பட்சம் இரண்டு நாட்களுக்கு வரும்! அப்புறம் பழைய கதைதான்!

ஏன் அப்படி?

சிலரைத் தவிர, பலருக்கும் மனகாரகன் வலிமை இல்லாமல் இருப்பான்.
மனகாரகன் சந்திரன் வலிமை இல்லாமல் இருந்தால் மனதைக் கட்டுப்
படுத்துவது எப்படி சாத்தியம் ஆகும்?

தடிமனான தாம்புக் கயிற்றை வைத்து மாட்டைக் கட்டலாம். இரட்டை நூலை
(Twine Thread) வைத்து மாட்டைக் கட்ட முடியுமா?

மனகாரகன் சந்திரன், ஜாதகத்தில் நீச மடைந்திருந்தாலும் அல்லது பகை
வீடுகளில் இருந்தாலும், அல்லது தன் சுயவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக்
குறைவான பரல்களுடன் இருந்தாலும் அவன் வலிமையாக இல்லை என்று பொருள்.

அதோடு, சனி அல்லது ராகு அல்லது கேது போன்ற தீய கிரகங்களுடன்
சந்திரன் சேர்ந்து இருந்தாலும் அல்லது அஸ்தமணம் அடைந்திருந்தாலும்
வலிமை இல்லை!

அதிலும் சந்திரனுடனான ராகுவின் சேர்க்கை, ஜாதகனுக்கு அதிகமான மனப்
போராட்டங்களை ஏற்படுத்தக்கூடியது!

அதனால் என்ன ஆகும்?

அவன்பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
அவன்சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
அவன்கைப் பொருட்கள் காணாமல் போகும்
அவன்மன நிம்மதி மாயமாகிப் போகும்!

எல்லோருக்கும் இது பொதுவானதா?

இல்லை, சிலருக்கு விதிவிலக்கு உண்டு!

யார் அவர்கள்?

அந்த இருவர் கூட்டணியின் மீது குரு அல்லது சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்களின்
பார்வை பட்டாலும் அல்லது அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் வீடு சர்வாஷ்டக
வர்கத்தில் 30ம் அதற்கு மேலும் பரல்களைப் பெற்று விளங்கினாலும் அவர்களுக்குப்
பாதிப்பு இருக்காது!

சர்வாஷ்டகவர்கத்தையும், அஷ்டகவர்கத்தையும் சரியாகப் பார்க்காமல் அல்லது
அவை இல்லாத ஜாதகங்களுக்கு ஒரு ஜோதிடர் பலன் சொன்னால் அது சமயங்களில்
அவர் காலைவாரி விட்டுவிடும். அவர் சொன்னது பலிக்காமல் போய்விடும்!
===============================================================
Rahu/Ketu tends to bring about very sudden turn of events and can cause
a very rapid rise to power, glory and fame followed by a matching fall in the end!

ராமலிங்க ராஜூவிற்கு நடந்ததை நினைத்துக் கொள்ளுங்கள்!

Another peculiarity of these planets is their "pushing' effect! Any planet
that is conjunct with these planets loses its qualities and energies almost completely.
That effect is particularly seen during the dasha periods of these planets.
The lack of energy, motivation and direction are unmistakable. This is often seen
in combust (conjunction with sun) planets to some extent!
---------------------------------------------------------------------------
1ல்

லக்கினத்தில் இருப்பது நல்லதல்ல! ஜாதகனுக்கு நோய்கள் ஏற்பட்டு,
அதனால் ஜாதகனின் மனதும் பாதிக்கப்படும்.
Rahu in the first house will gives unpleasant influences
-----------------------------------------------------------------------------
2ல்

ஜாதகனின் குடும்ப வாழ்க்கையில் தீராத பிரச்சினைகள் உண்டாகும்.
கணவன் மனைவி இருவருக்குமே மனம் பாதிக்கப்படும். இருவரில் ஒருவர்
உயிரை மாய்த்துக் கொள்ளும் மன நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள்.
--------------------------------------------------------------------------------
3ல்
ஜாதகர் சிற்றின்பங்களில் அதிக நாட்டமுடையவராக இருப்பார்.
சிற்றின்பம் என்னவென்று சரியாகத் தெரியாதவர்கள் பதிவை விட்டு விலகவும்.
ஜாதகரை 'அந்த' விஷயத்தில் திருப்தி செய்வது மிகக் கடினம். புதிது புதிதாக
அவருக்கு வேண்டும்.

சிலர் 'அந்த' நாட்டத்தில் வீட்டைவிட்டு, வேறு பெண்ணுடன் ஜீட் விட்டு
விடுவார்கள். சில பெண்கள், பிற ஆடவர்களுடன் கள்ளக் காதலில் ஈடுபடுவதும்
இந்த அமைப்பினால்தான்.

உடனே இந்த அமைப்புள்ள பெண்களின் மேல் சந்தேகம் கொண்டு விடாதீர்கள்
சாமிகளா!

சில பெண்கள் இந்த அமைப்பு இருந்தும், பல்லைக் கடித்துக் கொண்டு,
கட்டியவனுடனேயே இருப்பார்கள். அதற்கு பெண்களுக்கென்றுள்ள விஷேச
அமைப்புக்கள் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும். அந்த அமைப்பு
இல்லாவிட்டால்தான் பிரச்சினை!

ஏன் இதைக்குறிப்பிடுகிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை, பெண்கள்
கனிவாக நடத்தப்பட வேண்டியவர்கள்.
-------------------------------------------------------------------------------------------
4ல்

ஜாதகரின் அன்னைக்கு தோஷம். அவ்வளவுதான். இதைப் பற்றி விரிவாக எழுத
விருப்பமில்லை! அன்னையரைக் குறைகூறி எழுத எனக்கு மனம் வரவில்லை!
அன்னையால் சில ஜாதகர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
-------------------------------------------------------------------------------
5ல்

ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும். எல்லாம் மனச்சோதனைதான்
சிலருக்கு கண்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் விபத்துக்குள்ளாகலாம்.

The native will be more inclined to mystic sciences.This combination will give
unfocused intelligence.There could be mental confusion at times and even mental
problems like depression etc.
--------------------------------------------------------------------------------
6ல்

******ஜாதகன் சுகமான பிறவி. உலகம் பிறந்தது எனக்காக என்று சாப்பிட்டு விட்டு
வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர்
உழைப்பார்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அல்லது மனைவி, அல்லது
பெண்னைக்கட்டிய தோஷத்திற்க்காக மாமனார் என்று யாராவது ஒருவர்
ஜாதகனுக்குப் படியளப்பார்கள்.

சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்
-------------------------------------------------------------------------------
7ல்

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சிற்றின்ப ஈடுபாடுகள்
மிகுந்தவராக இருப்பார். (இருக்கட்டுமே சாமி. அடுத்தவனுக்கு உபத்திரவம்
இல்லாமல் இருந்தால் சரி)

பிற நாடுகளில் வசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.(அப்படியென்றால் டபுள்
ஓக்கே! அங்கேயும் போய் சிற்றின்பங்களை அனுபவிக்கட்டும். பேரின்பங்களைச்
சொல்லிக் கழுத்தறுக்கும் ஆட்கள் அங்கே இருக்க மாட்டார்கள்:-))))
--------------------------------------------------------------------------------
8ல்

வாழ்க்கை மகிழ்ச்சியின்றி இருக்கும். என்னடா வாழ்க்கை என்கின்ற மனநிலை
இருக்கும். சிலருக்குத் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்
மிகுந்திருக்கும். இந்த அமைப்பு இருந்தால் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான்
அதிகத் துன்பங்கள் ஏற்படும்
-------------------------------------------------------------------------------
9ல்
********ஜாதகருக்குப் பிற நாடுகளில் வாழ்க்கை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கும்.
அதிர்ஷ்டகரமான அமைப்பு இது. ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் ஏற்படும்
(அப்பாடா சாமி! ஒரு இடத்திலாவது இந்தக் கூட்டணி நன்மை செய்கிறதே!)
-------------------------------------------------------------------------------
10ல்
இந்த அமைப்புள்ள ஜாதகரின் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும்.
சூது, வாது, கபடம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகருடைய வணிகம் அல்லது
தொழிலில் அது மேலோங்கியிருக்கும். அவர் மேலுள்ள நம்பகத்தன்மையை
அவர் இழக்க நேரிடும்

Rahu in the 10th house (house of careers) gives good influences, especially
with foreign affairs.10th house career with foreign matters (ambassador, travel
agent, foreign guide, and even spying) would flourish with a strong rahu
influence.

This Rahu gives excellent research abilities, speculation, working with medicines,
lawyers, and those which are erratic or cruel nature (slaughter houses,
hides and skins, and perhaps sewage plants, foul smelling locations or positions)
-------------------------------------------------------------------------------
11ல்
ஜாதகருக்குத் திடீர் பண வரவுகள் உண்டு. அது இந்த இரு கிரகங்களின்
தசா, புத்திகளில் கிடைக்கும். அந்த அமைப்பிற்கு, சனீஷ்வரனின் பார்வை
கூடாது. பார்வை இருந்தால், ஜாதகருக்கு விபத்து ஏற்படும்.
------------------------------------------------------------------------------
12ல்
ஜாதகருக்குப் பல விதத்திலும், மனப் போராட்டம் நிறைந்திருக்கும். மன
அமைதியை இழந்து துன்பப்பட நேரிடும்!

ஒன்றும் பயப்படாதீர்கள்.ஞானி பட்டம் உங்களுக்குத்தான்:-)))))
-------------------------------------------------------------------------------
Moon/rahu combination has been accepted as an undesirable
combination against mental stability and happiness in life, But there
are some instances where moon/rahu combination have given good
results.It is because, this combination is aspected by benefic planets
or by strong lagna lord or by strong 5th lord or by strong 11th lord!
-------------------------------------------------------------------------------
டிஸ்கி: சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில்
உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது
குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்

மற்றவை நாளை!

(அலசல் தொடரும்)

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

37 comments:

  1. //டிஸ்கி: சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில்
    உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது
    குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்//

    உங்களை கவுக்கலாம்னு பார்த்துட்டே வந்தேன்.. கடைசியா இப்படி ஒரு டிஸ்கி போட்டுட்டீங்களே ஐயா...
    //6ல்

    ******ஜாதகன் சுகமான பிறவி. உலகம் பிறந்தது எனக்காக என்று சாப்பிட்டு விட்டு
    வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர்
    உழைப்பார்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அல்லது மனைவி, அல்லது
    பெண்னைக்கட்டிய தோஷத்திற்க்காக மாமனார் என்று யாராவது ஒருவர்
    ஜாதகனுக்குப் படியளப்பார்கள்.

    சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்//


    எனக்கு ஆறுல தான் சந்திரனும், ராகுவும் இருக்காங்க. ஆனா என் சாப்பாட்டுக்கு உழைச்சி (காசு மட்டுமில்லாமல் சமையலும்) செஞ்சி தான் மூணு வருஷமா சாப்பிட்டு இருக்கேன் :)

    வேற யாரோ நடவுல சதி பண்ணிட்டாங்க போல :)

    ReplyDelete
  2. This lesson is superb.you have made my day

    Thanks

    Dr.vinoth

    ReplyDelete
  3. Blogger வெட்டிப்பயல் said...
    //டிஸ்கி: சொல்லப்பட்டுள்ள அனைத்துமே பொதுப்பலன்கள். ஜாதகத்தில்
    உள்ள பிற அமைப்புக்களைவைத்து அவைகள் கூடலாம் அல்லது
    குறையலாம். அல்லது இல்லாமலும் போகலாம்//
    உங்களை கவுக்கலாம்னு பார்த்துட்டே வந்தேன்.. கடைசியா இப்படி ஒரு டிஸ்கி போட்டுட்டீங்களே ஐயா...
    //6ல்
    ******ஜாதகன் சுகமான பிறவி. உலகம் பிறந்தது எனக்காக என்று சாப்பிட்டு விட்டு
    வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர்
    உழைப்பார்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அல்லது மனைவி, அல்லது
    பெண்னைக்கட்டிய தோஷத்திற்க்காக மாமனார் என்று யாராவது ஒருவர்
    ஜாதகனுக்குப் படியளப்பார்கள்.

    சிலருக்கு உடல் உபாதைகள், உடற் குறைபாடுகள் இருக்கும்//
    எனக்கு ஆறுல தான் சந்திரனும், ராகுவும் இருக்காங்க. ஆனா என் சாப்பாட்டுக்கு உழைச்சி (காசு மட்டுமில்லாமல் சமையலும்) செஞ்சி தான் மூணு வருஷமா சாப்பிட்டு இருக்கேன் :)
    வேற யாரோ நடவுல சதி பண்ணிட்டாங்க போல :)/////

    வாங்க பாலாஜி. ரெம்ப நாளைக்கப்புறமா இந்தப் பக்கம் வந்திருக்கிறீகள்.
    உங்கள் வரவு நல்வரவாகுக!

    என்னைக் கவிழ்ப்பது கடினம். லக்கினத்தில் யோககாரகன் செவ்வாய்.
    அதோடு குரு பகவானின் விசேச பார்வை லக்கினத்தின் மீது!
    இருவரும் குறுக்கே வந்து நின்று என்னைக் காப்பாற்றி விடுவார்கள்:-))))

    அதை விடுங்க, தர்மன், அர்ஜுனன், கர்ணன் என்று பாரதத்தையே
    மறந்துவிட்டீர்களே! அதோடு கவுண்டமணி அண்ணனையும் மறந்து விட்டீர்களே?
    நியாயமா?

    ReplyDelete
  4. ////Blogger Dr.Vinothkumar said...
    This lesson is superb.you have made my day
    Thanks
    Dr.vinoth////

    Thank you very much for your comments, Doctor!

    ReplyDelete
  5. ஜாதகன் சுகமான பிறவி. உலகம் பிறந்தது எனக்காக என்று சாப்பிட்டு விட்டு
    வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர்
    உழைப்பார்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அல்லது மனைவி, அல்லது
    பெண்னைக்கட்டிய தோஷத்திற்க்காக மாமனார் என்று யாராவது ஒருவர்
    ஜாதகனுக்குப் படியளப்பார்கள்.//

    அப்படியும் இருப்பார்கள். மாமனாருக்கு
    சேர்த்து குடும்பத்துக்கு கஷ்டப்படும் ஜாதகர்களும் இருக்கிறார்கள்.

    பலன்கள் நன்றாக இருந்தது.
    வாழ்க வளமுடன:,
    வேலன்.

    ReplyDelete
  6. //வாங்க பாலாஜி. ரெம்ப நாளைக்கப்புறமா இந்தப் பக்கம் வந்திருக்கிறீகள்.
    உங்கள் வரவு நல்வரவாகுக!
    //
    கோவை ரெண்டு தடவை வந்தேன். உங்களை பார்க்கலாம்னு ஒரு ப்ளானும் இருந்தது. ரெண்டு தடவையும் பயங்கர பிஸி. அடுத்த முறை வந்த பொறுமையா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன் :)

    இந்தியால வலைப்பதிவு பக்கம் அதிகமா வர முடியலை. இப்ப தான் மறுபடியும் ஆரம்பிச்சிருக்கேன். இனிமே அதிரடியா களம் இறங்க வேண்டியது தான் :)

    //என்னைக் கவிழ்ப்பது கடினம். லக்கினத்தில் யோககாரகன் செவ்வாய்.
    அதோடு குரு பகவானின் விசேச பார்வை லக்கினத்தின் மீது!
    இருவரும் குறுக்கே வந்து நின்று என்னைக் காப்பாற்றி விடுவார்கள்:-))))
    //
    என் லக்கினத்துல செவ்வாய் இல்லையே. செவ்வாயும் சனியும் சேர்ந்து மூணாவது இடத்துல இருக்காங்க. குரு பகவான் நாலுனு நினைக்கிறேன். அது குருவா புதனானு மறந்து போச்சு. எது எப்படியோ கஷ்டப்பட்டாவாது சாப்பாடு இருக்குனு நிலை இருக்கே. அதுவே போதும் :)

    //
    அதை விடுங்க, தர்மன், அர்ஜுனன், கர்ணன் என்று பாரதத்தையே
    மறந்துவிட்டீர்களே!//
    பாரதத்தை மறக்க முடியுமா? அப்படியே மறந்தாலும் கண்ணன் தான் விட்டுடுவானா? :)

    //
    அதோடு கவுண்டமணி அண்ணனையும் மறந்து விட்டீர்களே?
    நியாயமா?//

    சான்சே இல்லை. கவுண்டர் நம்ம ரத்துதுலயே ஊறிட்டாரு. இனிமே எடுத்து விட வேண்டியது தான் :)

    ReplyDelete
  7. சில கைதேர்ந்த அரசியல்வாதிகளைப் போல் இருக்கிறது ராகுவின் கதை.....கூட்டணி சேர்ந்தவர்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போல் இருக்கிறது.......சந்திர பகவானுடன் சேர்ந்து ராகு ஆடும் சதிராட்டத்தை சரளநடையில் விளக்கிய சத்துமிகு ஆசிரியர் திருவடிகளுக்கு சரணங்கள் பல.....

    ReplyDelete
  8. Sir,
    One of my friends has Ragu and Moon in Rishabam, both exclated, since both Ragu and Moon are in exclation will the bad effect reduce or nullified.

    ReplyDelete
  9. Dear Sir,

    All the lines are really good(Songs).First,We have to control ourself(Self Control)and concentration(Full Fledged - Karma ( I Mean Duty(Seyalkal)). Second one is Clear thoughts(Thinking - Good thoughts("Nalla" Ennangal) and imagination. Third, to work end to end that will produce Intuition. This is ultimate success protocal.


    Rahu with moon Combination is lesson is nice sir.

    "You are like a Living
    Astro-Legend Sir...". You are a Astrology Mass Sir.

    Thank you Sir

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  10. வாத்தியாரே..

    இன்னாது இது..?

    என்க்கு அல்லாமே ராங்க்கா பூடுது..?

    பத்தாம் நம்பர் வூட்ல தனியாளா நின்னு ஒப்பாரி வைக்குறான் ராகு..

    ஆனா நீங்க சொல்றது எனக்கு ஒத்து வராதே..

    எங்கிட்டோ இடிக்குது வாத்தியாரே..

    ReplyDelete
  11. ஓடினவனுக்கு ஒன்பதாம் இடத்துல குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி ன்னு சொல்லுவாங்க.

    அப்படி என்றால் என்ன ?

    ReplyDelete
  12. /////Blogger வேலன். said...
    ஜாதகன் சுகமான பிறவி. உலகம் பிறந்தது எனக்காக என்று சாப்பிட்டு விட்டு
    வேளா வேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, சுகமாக வாழ்வான். அவனுக்காகப் பிறர்
    உழைப்பார்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி அல்லது மனைவி, அல்லது
    பெண்னைக்கட்டிய தோஷத்திற்க்காக மாமனார் என்று யாராவது ஒருவர்
    ஜாதகனுக்குப் படியளப்பார்கள்.//
    அப்படியும் இருப்பார்கள். மாமனாருக்கு
    சேர்த்து குடும்பத்துக்கு கஷ்டப்படும் ஜாதகர்களும் இருக்கிறார்கள்./////

    அது வேறு சில அமைப்புக்களால் கிடைப்பது!

    ReplyDelete
  13. /////Blogger வெட்டிப்பயல் said...
    அதோடு கவுண்டமணி அண்ணனையும் மறந்து விட்டீர்களே?
    நியாயமா?//
    சான்சே இல்லை. கவுண்டர் நம்ம ரத்துதுலயே ஊறிட்டாரு. இனிமே எடுத்து விட வேண்டியது தான் :)//////

    "வில்லு படம் பார்த்து சொல்லை இழந்த மணியண்ணன்" என்ற தலைப்பில் துவங்குங்கள்!:-))))

    ReplyDelete
  14. //////Blogger படித்துறை.கணேஷ் said...
    சில கைதேர்ந்த அரசியல்வாதிகளைப் போல் இருக்கிறது ராகுவின் கதை.....கூட்டணி சேர்ந்தவர்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போல் இருக்கிறது.......சந்திர பகவானுடன் சேர்ந்து ராகு ஆடும் சதிராட்டத்தை சரளநடையில் விளக்கிய சத்துமிகு ஆசிரியர் திருவடிகளுக்கு சரணங்கள் பல.....//////

    நன்றி கணேஷ்!

    ReplyDelete
  15. //////////Blogger krish said...
    Sir,
    One of my friends has Ragu and Moon in Rishabam, both exalted////

    ரிஷபத்தில் சந்திரன் மட்டும் உச்சம். ராகு அங்கே நீசமாக இருப்பார். அவர் உச்சனுடன் சேர்ந்ததால் நீசபங்க ராஜ யோகம் பெறுவார்.நல்ல பலன்களைத் தருவார்!

    ReplyDelete
  16. Blogger Arulkumar Rajaraman said...
    "You are like a Living
    Astro-Legend Sir...". You are a Astrology Mass Sir.
    Thank you Sir
    Loving Student
    Arulkumar Rajaraman///////

    மறுபடியும் சொல்ல விரும்புகிறேன். அடியேன் கற்றது கை மண்அளவே!
    ஜோதிடம் பெரிய கடல். அதை முழுமையாக அறிந்தவர்கள் ரிஷிகள் மட்டுமே!

    ReplyDelete
  17. Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    இன்னாது இது..?
    என்க்கு அல்லாமே ராங்க்கா பூடுது..?
    பத்தாம் நம்பர் வூட்ல தனியாளா நின்னு ஒப்பாரி வைக்குறான் ராகு..
    ஆனா நீங்க சொல்றது எனக்கு ஒத்து வராதே..
    எங்கிட்டோ இடிக்குது வாத்தியாரே..////

    கந்தசஷ்டிக் கவசத்தைப் படியுங்கள். எந்த ஒப்பாரியும் காதில் விழுகாது தமிழரே!

    ReplyDelete
  18. /////Blogger கோவி.கண்ணன் said...
    ஓடினவனுக்கு ஒன்பதாம் இடத்துல குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துல சனி ன்னு சொல்லுவாங்க.
    அப்படி என்றால் என்ன ?/////

    ஒன்பதில் குரு என்பது Natal Chartஐ வைத்துச் சொல்வார்கள். ஆயுள் முழுக்க இது மாறாது
    அஷ்டமத்துச் சனி என்பது Transit Satrun ஐ வைத்துச் சொல்வார்கள். இது இரண்டரை ஆண்டுகள் கழித்து மாறும்

    ஒன்பதில் குரு இருந்தால் அடுத்தவன் பணம் கிடைக்கும்
    அஷ்டமத்தில் சனி இருந்தால், அடுத்தவனிடம் பனத்தை இழக்க நேரிடும்!

    விளக்கம் போதுமா? இல்லையென்றால் சிங்கைக்குப் புறப்பட்டு வரட்டுமா?

    ReplyDelete
  19. அய்யா,

    ஒரு சந்தேகம்.

    "மனகாரகன் சந்திரன், ஜாதகத்தில் நீச மடைந்திருந்தாலும் அல்லது பகை
    வீடுகளில் இருந்தாலும், அல்லது தன் சுயவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக்
    குறைவான பரல்களுடன் இருந்தாலும் அவன் வலிமையாக இல்லை என்று பொருள்"

    சந்திரன் பாடத்தில், சந்திரனுக்கு பகை வீடு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.

    எது சரி அய்யா?

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  20. ////Blogger hotcat said...
    present sir.
    -shankar////

    படித்துவிட்டுப் பிறகு வாருங்கள் சங்கர்!

    ReplyDelete
  21. Blogger Sridhar said...
    அய்யா,
    ஒரு சந்தேகம்.
    "மனகாரகன் சந்திரன், ஜாதகத்தில் நீச மடைந்திருந்தாலும் அல்லது பகை
    வீடுகளில் இருந்தாலும், அல்லது தன் சுயவர்க்கத்தில் 3 அல்லது அதற்குக்
    குறைவான பரல்களுடன் இருந்தாலும் அவன் வலிமையாக இல்லை என்று பொருள்"
    சந்திரன் பாடத்தில், சந்திரனுக்கு பகை வீடு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.
    எது சரி அய்யா?
    நன்றி,
    ஸ்ரீதர் S//////

    சந்திரனுக்குப் பகை வீடுகள் கிடையாது. ஆனால் பகைக் கிரகங்கள் உண்டு. சந்திரன் சுபக் கிரகம். அசுபர்கள் எல்லாம் அவனுக்குப் பகைவர்களே!

    ReplyDelete
  22. மனக்காரகன் சந்திரனுடன் இராகு சேரும்போது ஏற்படும் வாழ்கை போராட்டங்களை அற்புதமாக சொன்னீர்கள் அய்யா

    ReplyDelete
  23. //விளக்கம் போதுமா? இல்லையென்றால் சிங்கைக்குப் புறப்பட்டு வரட்டுமா?//

    அடுத்த வாரம் நேரில் வந்து கேட்டுக் கொள்கிறேன் !

    :)

    ReplyDelete
  24. வணக்கம் வாத்யாரய்யா!இளையராஜா,பாரதிராஜா தலைமுறையில் வெற்றிக்கான பாதைகள் கடினமாக இருந்ததென்று நினைக்கிறேன்.இன்றைய தலைமுறைகளின் உதாரணம் வழிகள் இலகுவாகப் பட்டிருக்கிறது.

    ReplyDelete
  25. பாடங்கள் மிக அருமை
    கோதண்ட ராகு என்றால் என்ன ஐயா ?

    ReplyDelete
  26. ////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    மனகாரகன் சந்திரனுடன் இராகு சேரும்போது ஏற்படும் வாழ்கை போராட்டங்களை அற்புதமாக சொன்னீர்கள் அய்யா/////

    எல்லாம் உங்களுக்காகத்தான்!

    ReplyDelete
  27. //////Blogger கோவி.கண்ணன் said...
    //விளக்கம் போதுமா? இல்லையென்றால் சிங்கைக்குப் புறப்பட்டு வரட்டுமா?//
    அடுத்த வாரம் நேரில் வந்து கேட்டுக் கொள்கிறேன் ! :)/////

    முடிவெட்டிக்கொள்ள சென்னையில் இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்தவர் அல்லவா, செய்தாலும் செய்வீர்!

    ReplyDelete
  28. /////Blogger ராஜ நடராஜன் said...
    வணக்கம் வாத்யாரய்யா!இளையராஜா,பாரதிராஜா தலைமுறையில் வெற்றிக்கான பாதைகள் கடினமாக இருந்ததென்று நினைக்கிறேன். இன்றைய தலைமுறைகளின் உதாரணம் வழிகள் இலகுவாகப் பட்டிருக்கிறது.//////

    வேலை, சம்பளம் இரண்டும் இலகுவாக்கப் பட்டிருக்கிறது. மற்றதெல்லாம் கடினமாகி விட்டிருக்கிறது.
    கடவுள் ஒரு கதைவைத் திறந்து விட்டால் இன்னொரு கதவைச் சாத்தி விடுவார்!

    ReplyDelete
  29. ////Blogger dubai saravanan said...
    பாடங்கள் மிக அருமை
    கோதண்ட ராகு என்றால் என்ன ஐயா ?/////

    RAHU in DHANUSU Rasi is named as KODHANDA RAHU

    ReplyDelete
  30. ராகுவை மட்டும் துவைத்து, பிழிந்து, அலசித் தள்ளுகின்றீர்கள் பதிவிற்கு மேல் பதிவாக இட்டு.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  31. சார் உங்களுக்கும் எனக்கும் 3இல் இருக்குதே! வித்தியாசமா ஏதாவது.........

    புள்ளிராஜா

    ReplyDelete
  32. எல்லாம் சரி வடமொழி எழுத்து இல்லாம பேரே வைக்க முடியான பண்ணிட்டீங்களே நீங்க் எல்லாம் சேந்து.

    ReplyDelete
  33. ////Blogger இராசகோபால் said...
    ராகுவை மட்டும் துவைத்து, பிழிந்து, அலசித் தள்ளுகின்றீர்கள் பதிவிற்கு மேல் பதிவாக இட்டு.
    அன்புடன்
    இராசகோபால்///

    ராகு மற்றும் கேது உள்ளாடைகளைப் போன்றவர்கள். அடித்துத்தான் துவைக்க வேண்டும்! ஹி.ஹி.!

    ReplyDelete
  34. ///Blogger Pullirajaa said...
    சார் உங்களுக்கும் எனக்கும் 3இல் இருக்குதே! வித்தியாசமா ஏதாவது.........
    புள்ளிராஜா/////

    எனக்கு ராகு 3ல் இருப்பதாக யார் சொன்னார்கள்?
    உங்களோடு என்னையும் சேர்த்து என் பெயரை ரிப்பேராக்க பார்க்கிறீர்களே!
    மூன்று நாட்களுக்கு பெஞ்சுமேல் நின்று பாடங்களைப் படியுங்கள்!

    ReplyDelete
  35. Blogger குடுகுடுப்பை said...
    எல்லாம் சரி வடமொழி எழுத்து இல்லாம பேரே வைக்க முடியான பண்ணிட்டீங்களே நீங்க் எல்லாம் சேந்து./////

    என்ன சாமி சொல்கிறீர்கள்? பொதுவில் சொல்லாமல், எடுத்துக்காட்டுடன் வாருங்கள்!

    ReplyDelete
  36. Dear sir,

    Figure represents is like a Nokia (Combination of Rahu and Kethu)- Advertisement

    Based on adv..it will affect the market(person) sir.
    Is it Correct?

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com