மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!

12-8-2016

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கட்டத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்

இது ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் திருமண வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் பற்றிய உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

சரியான விடையை நாளை 13-8-2016 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

  1. திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்
    7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.

    ReplyDelete
  2. 1960-செப்டம்பர்-13-ஆம் நாள் மாலை 5:30 மணியளவில் பிறந்த ஜாதகிக்குத் தாமதமாகத் திருமணம் நடந்தது. சயனபோக ஸ்தானம் கத்தரி யோகத்தில். புத்திரபாக்கியம் இல்லை. புனர்பூ தோஷம் உண்டு.
    1) யோக காரகனும், களத்திர காரகனும், பாக்கிய ஸ்தானாதிபதியுமான சுக்கிரன் எட்டாம் அதிபனுடன் எட்டில் மறைவு. ஏழில் ராஹு, பகைவனான களத்திராதிபன் சூரியனுடன். ஆனாலும் ஸ்தானத்தைப் பார்க்கும் குரு, ஸ்வதசை சூரிய புக்தியில் முப்பது வயதில் திருமணம் நடத்தி வைத்தார்.
    2) சயனஸ்தானம் கத்தரியில். ஸ்தானாதிபதி சனி அவ்விடத்திற்குப் பன்னிரண்டில். மேலும் சுக்கிரன் மறைவில். இந்தக் காரணங்களால் தாம்பத்தியத்தில் ஆர்வக் குறைவு. லக்கினத்தில் உள்ள கேதுவை, சனி பார்ப்பதால் துறவு வாழ்வில் ஈடுபாடு இருக்கும்.
    3) புனர்பூ தோஷம் இருந்தாலும் குரு பார்வை திருமண பந்ததைப் பிரிக்கவில்லை. மேலும், குடும்ப ஸ்தானத்தை மூன்று சுபர்கள் பார்க்கிறார்கள்.
    4) மூன்றுக்குடைய செவ்வாயும், ஆறுக்குடைய சந்திரனும் ஐந்தில் இருப்பதோடு, சனி பார்வை இருப்பதால் புத்திரர்கள் இல்லை.
    கணவனும் மனைவியுமாக சமுதாய மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள்.

    ReplyDelete
  3. ஜாதகி 13 செப்டம்கர் 1960 அன்று 5 மணி 33 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    ஜாதகியின் 20 வயதுவரை செவ்வாய்,ராகுதசா. எனவே 2க்கும் 11க்கும் அதிபனான குருதசாவில்தான் திருமணம்.லக்கின கேது, 7ல் ராகு, மற்றும் 7ல் சூரியன் என்பவை திருமணத்தடை, தாமதத்திற்கு வழிவகுக்கும்.ஆனால் 7ம் அதிபதி,7ம் இடம் ஆகிய இரண்டையும் குரு பார்த்துவிடுவதால் திருமணத்தடை விலகுகிறது.களத்திரகாரகன் சுக்கிரன் நீச பங்கம் அடைந்து நன்மையே செய்வார்.
    குருதசா புதன் புக்தி 24 வயதில் அல்லது குரு தசா சுக்கிர புக்தி 28 வயதில் திருமணம் நட‌க்க வாய்ப்பு.

    எட்டாம் இடத்தில் எட்டுக்கு உரியவர், எட்டாம் இடத்திற்கு 12ம் அதிபதி வக்கிர சனியின் பார்வை, செவ்வாயின் பார்வை,ஆகியவை நன்மை செய்ய வாய்ப்புக் குறைவு.மாங்கல்யத்திற்கு ஏதேனும் சிரமம் வந்ததோ என்று ம‌னம் கலங்குகிறது.களத்திரகாரகன் 8ல் இருப்பது.....?

    கஜகேசரி, சசிமங்கள,யோகங்கள் உதவிசெய்து ஜாதகி நல்ல குடும்ப வாழ்வு வாழ்ந்திருக்க வேண்டும்.5ல் 6ம் இடத்துக்காரன்,செவ்வாய் ஆகியோரால் அறுவை சிகிச்சை மூலம் ஒரு குழந்தை பாக்கியம் உண்டு.

    எதிர்மறை எழுத மனம் வரவில்லை.

    ReplyDelete
  4. Ayya,

    1. For Ladies, 8th & 9th houses should be good for getting good marriage life. Her 9th house owner(Chevvai) sitting 9th from 9th house along with Chandran(Sasi Mangala yogam). 8th house has Neecha Panga Raja Yogam(Sukran Neecham + Bhudhan Uccham) . So she would have good husband because of Neecha Panga Raja Yogam & Sasi Mangala Yogam as well.
    2. In this horoscope 7th house owner(Suriyan) sitting in his own house. Moreover he is Raja Graham.
    3. She would have got good family life as well. Because 2nd house owner(Guru) sitting in 11th house. Moreover Guru is seen by Moon as well. Gaja Kesari Yogam.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,கும்ப லக்ன பெண்.5இல் 6ம் அதிபதி சந்,உடன் 3ம் அதிபதி செவ்.சசி மங்கள யோகம்.7இல்,7ம் அதிபதி சூரியன் மற்றும் ராகு இருந்தாலும் திருமண தடையில்லை குரு பார்வை இருப்பதால்.8இல் 5ம் அதிபதி புதன் உச்சம் ஆனால் நவாம்சத்தில் நீசம்.நீசம் பங்கமடையவில்லை.8இல்,4மற்றும் 9ம் அதிபதி சுக்கிரன் நீச்சம்.ஆனால் உச்ச புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம்.11இல் அதன் அதிபதி குரு ஆட்சி.உடன் லக்னாதிபதி/விரையாதிபதி சனி.7இல் ,7ம் அதிபதி ஆட்சி+குரு பார்வை+களத்திரகாரன் சுக்கிரன் நீசபங்கம் அடைந்ததால் இளமையில் திருமணம். 7ம்இடத்தை பார்த்த குருதசையில்,குரு புத்தியில் திருமணம்.சனி விரையாதிபதியாகி 5 ம் இடத்தை பார்ப்பதாலும்,5ம் அதிபதி புதன்,நவாம்சத்தில் நீசமானதாலும் குழந்தை பாக்கியம் சனி புத்தியிலும்,அடுத்து வந்த புதன் புத்தியிலும்,கேது புத்தியிலும் இல்லை.5ம் இடத்திற்க்கு குரு பார்வை இருப்பதால் அடுத்து வந்த ராஜயோகம் பெற்ற பாக்யாதிபதி சுக்கிரன் புத்தியில்,8 வருடங்களுக்கு பிறகு குழந்தை பாக்கியம் அமைந்தது. நன்றி.

    ReplyDelete
  6. Vanakkam ayya jathaki kumba lagnam mithuna rasi lagnathipathi sani 11m veetil guru 2m veettukaradun kaikothu ullar.lagnathil. Kathu amarunthu sapthama sthanthinai parpathu kedanathu irupinum guru sapthama sthanthinai thanathu onpathvathu paarvayal parpathu guru paarvayal kodinanmai.melum lagnam navamsathil varkotham petrullathu sirappu.enavay guru dasai sapthamathi suriyan pukthiyil thirumanam nadakkum illaram makizhchiyaga amaiyum vazhga valamudan

    ReplyDelete
  7. பார்த்தேன்... பதிலுக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  8. ஐயா வணக்கம். வியாழ மாற்றம் நன்றாக ஆரம்பித்திருக்கும் என நம்புகிறேன்.

    இந்த ஜாதகியுடன் வாழ்வதென்பது மிகவும் கடினமான விடயம்.
    ஆனால், சுயமாக மிகவும் நல்ல நிலைக்கு வந்திருப்பார். அது இன்னும் மோசமான மனநிலைகளை கொடுத்து விடும். குடும்பத்தை பிரிந்திருக்கும் நிலைக்கும் இடமுண்டு. ஆனால், தான் நினைத்தால், கூட இருந்தே, கூட இருக்கும் எவரையும் நிம்மதி, வாழ்வு இல்லாமல் செய்து விடுவார்.
    தன்னலமே அதிகமாக இருக்கும்.
    குடும்பத்தை என்று குறிப்பிடடதன் காரணம்; பொதுவாக பெண்களுக்கு கணவருடன் பிரச்சனை இருப்பினும், குழந்தைகள் நலன் பேணுவர். ஆனால், இங்கு அதுவும் ஐயமே. 'தான்' என்பதே முன்னிலையாக இருக்கும் போது, பிள்ளைகள் நலன் கூட இரண்டாம் பட்ச்சம் தான்.

    முற்று முழுதாக ஜாதகியையும் குறை கூறி விட முடியாது. ஏழில் சூரியன், நல்ல திருமண வாழ்வை தருவது மிக குறைவு. அது ஜாதகியின் குணத்தில் கைவைப்பினும் கூட, கணவரது குணத்தையும் கூடவே குறிப்பிடுவதால்...

    ஆனால், எந்த பிரச்சனையும் ஜாதகியை ஒன்றும் செய்யாது. அதையும் நாம் கவனித்தே ஆக வேண்டும்.
    என்ன நடப்பினும், இறுதி வரை சுய வாழ்வு என்பது இவருக்கு நன்றாகவே இருக்கும்.

    ReplyDelete
  9. லக்கினாதிபதி சனி லாபத்தில் நல்ல நிலையில் உள்ளார். குடும்பஸ்தனாதிபதி குரு ஆட்ச்சிபெற்று லாபஸ்தானத்தில் உள்ளார் .மேலும் களத்திரகாரகன் செவ்வாய் திரிகோணத்தில் வலுவாக உள்ளார் .ஆட்சி பெற்ற சூரியன் ராகுவுடன் களத்ரஸ்தானத்தில் இருப்பது களத்ரதோஷத்தை கொடுத்து முதல் திருமணம் சிறக்க வாய்ப்பு இல்லை .தாமத திருமணம்(2 ம் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம் ) நல்ல குடும்பம் அமையும்

    ReplyDelete

  10. வணக்கம் குருவே,

    குருவின் பார்வை களத்திர ஸ்தானத்திற்கு விழுவதால். இந்த ஜாதகிக்கு 22வது வயது நடப்பிலேயே திருமணம் நடந்திருக்கும். ஆனால் அது நிலைத்திருக்காது. ஒன்று பிரிந்திருக்கணும் அல்லது கணவனை இழந்திருக்கணும். காரணம், களத்திர ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதி சூரியன் ராகுவோடு நெருக்கமாக பத்து டிகிரிக்குள் சேர்ந்து வலுவிழந்துவிட்டார். களத்திர காரகனும், சுகாதிபதியும், பாக்கியாதிபதியுமான சுக்கிரன் லக்கினத்திற்கு எட்டில் மறைந்து சனி மற்றும் செவ்வாயின் பார்வையையும் பெற்றார். அட்டமாதிபதி புதனும் சனி மற்றும் செவ்வாயின் பார்வையை பெற்று அம்சத்தில் நீசமடைந்தார். ராசியின்படி பார்த்தாலும் செவ்வாய் சுக ஸ்தானம், களத்திர ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இடங்களை பார்த்து வலுவிழக்க செய்கிறார். குடும்ப ஸ்தானத்தோடு குரு, சுக்கிரன், புதன் சம்பந்தம் ஓரளவேனும் வசதியான வாழ்க்கையையும், அதேவேளையில் குடும்பாதிபதி குருவானவர் சனி, மாந்தி, சந்திரன், செவ்வாய் சம்பந்தம் பெற்றதால் ஆன்மிகம் நாட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கும். இதற்க்கு லக்கினத்தில் அமர்ந்த கேதுவும் ஒரு காரணம்.

    நன்றி,
    செல்வம்

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்,

    1. சுக்கிரன் நீச்சம், புனர்ப்பூ தோஷம், லக்கனத்தில் கேது, ராகு 7 ஆம் அதிபதி சூரியனுடன் ஆகிய காரணங்களால் திருமணம் தாமதம் ஆகி இருக்கும்.

    ஆனால் செவ்வாயின் 3 ஆம் பார்வை 7 ஆம் இடத்தில்,குரு உச்சம் அதனால் குரு திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும் .

    இந்த ஜாதகத்தில் சந்திரமக்கள யோகம், நீச்சபங்க ராஜ யோகம், குரு சண்டாள யோகம் போன்ற யோகங்கள் உள்ளன.

    2. 5ஆம் அதிபதி நீச்சம், 6ஆம் அதிபதி 5ல் ஆகிய காரணங்களால் குழத்தை பிறப்பும் தாமதம் ஆகி இருக்கும். ஆனால் 5ஆம் இடத்திற்கு உச்ச குருவின் பார்வை மற்றும் லக்கனாதிபதியின் பார்வை இருப்பதால் குழத்தை உண்டு.

    இப்படிக்கு,
    மு.சாந்தி

    ReplyDelete
  12. Native born on sep 13 1960

    5.20pm

    I guess marriage might have happened during jupiter dasha/saturn sub period. 7th house lord sun is associated with rahu. sun in 7th house may give vidhawa yogam. mars and 6th house lord moon(wanning) in 5th house. 5th house and rasi lord mercury debilitated in navamsa. 9th house lord venus in 8th house also in debilitation sign. 12 th house lord saturn in 11th house.
    1,5,7,9,12th house not looking good for long/happy married life. separation might have occurred during rahu sub period.

    also we see positive signs like 7th house lord in 7th house. jupiter aspecting 5th and 7th house. lagna lord aspecting lagna. there are also chances for remarriage.

    thanks
    sree

    ReplyDelete
  13. ஆசிரியர் ஐயா வணக்கம்.
    புதிர்114.
    1. மிருகசீர்ஷ நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்கனம், 1960 செப் 13, மாலை 5.30 க்கு பிறந்தவர், அழகானவர்.

    2. கஜகேசரி யோகம், சசிமங்கள யோகம், நீசபங்க ராஜயோகம், சூரியன் ஆட்சி பலம் , குரு ஆட்சி பலம் கொண்டவர். செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் குறையிருக்காது. தந்தை வழியிலும், சகோதரர் வழியிலும் சொத்துக்கள் கிடைத்திருக்கும்.

    3. புனர்பூ தோசம் உள்ளதினாலும் சுக்கிரன் எட்டில் மறைந்ததினாலும் திருமணத்தின்போது தடைகள் ஏற்பட்டிருக்கும்.

    4. ராகுதிசை சூரிய புத்தியிலும், குருதிசை சுக்கிர புத்தியிலும் இரு திருமணங்கள் நடந்திருக்கும்.

    5. குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி ஆட்சி வலுவுடன் இருந்தாலும், சனி மற்றும் மாந்தியின் கூட்டால் கெட்டுவிட்டார்.

    6. தனகாரகன் குரு 11ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் ஆட்சியில் இருப்பதால் பணபலத்துடன் சாதகர், உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்ந்தது எனக்காக என மகிழ்வோடு இருப்பார்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  14. ஜாதகர் பிறந்த தேதி : 13 – 09 – 1960
    கும்ப லக்னம். லக்கினாதிபதி சனியுடன் மாந்தி
    லக்கினாதிபதி சனி வக்கிரம். லக்கினத்தில் கேது. லக்னம் வர்கோத்தமம்
    சனி பார்வையில் சந்திரன், புனர்பூ தோஷம்
    சனி குரு சேர்க்கை, பிரம்மஹத்தி தோஷம்
    பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சந்திரன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன்.
    பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி புதன் நவாம்சத்தில் நீச்சம்
    பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம். மேலும் பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கெட்ட அமைப்பு.
    களத்திரகாரன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைவு
    ஏழில் சூரியன் களத்திர தோஷம்
    ஏழாம் அதிபதி சூரியன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவின் பிடியில்
    கேதுவின் பார்வையில் ஏழாம் வீடு
    இரண்டாம் வீடு அதிபதி குரு ஆட்சி பலத்துடன் இருந்தாலும் சனி & மாந்தியின் பிடியில்
    பாக்கிய ஸ்தான அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி & ஏழாம் வீடு ஆகிய மூன்றும் கெட்டு இருப்பதால் இது திருமண தடை ஜாதகம்.
    கன்னியில் உச்ச புதன் & நீச சுக்கிரன் இணைவு. நீசபங்க ராஜயோகம்.
    குரு தனது ஒன்பதாம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்க்கின்றார். குரு பார்வையால் தாமத திருமணம் நடந்து இருந்தாலும் பிரிவை தந்து இருக்கும்.
    லக்கினாதிபதி சனியுடன் தனக்காரன் குரு லாபஸ்தானத்தில் உள்ளதால் வருமானத்திற்கு குறைவில்லை.

    ReplyDelete
  15. Sani parvai - Lagnam, 5th house and 8th house
    In 5th house theeya Chandran with Sevvai. Sani parvai. Sevvai + Chandran Not good
    In Navamsam Sani is in 8th house and aspect 5th house. - Kudumbastganam and puthrastanam spoiled
    In 7th house - Suriyan atchi with Rahu - Guru parvai
    Budan Ucham in 8 the house in rasi but neecham in Navamsam.
    Sukaran neecham in 8 th house in rasi. Must have married early but divorced. Later possibility of second marriage during Guru dasa Sani or Suriya bukthi. Must have had troubles in married life. Thanks, K R Ananthakrishnan - Chennai

    ReplyDelete
  16. ஆசிரியர் ஐயா வணக்கம்.
    இந்த புதிருக்கான, சாதகருக்கான பிறந்த தேதியை சாதக சாப்ட்வேரில் தேடும்போது, யதார்த்தமாக 4.2.1962 காலை 7 மணி என்று பதிந்து தேடிப்பார்த்தேன். அது இந்த சாதகரின் பிறந்த தேதி இல்லை.

    ஆனால் தேதியில் ராசிக்கட்டத்தைப் பார்த்து மிரண்டு போனேன். காரணம் லக்னம்,சூரி,சந்,செவ்,பு,வி,சுக்,சனி,கே, என ஒன்பதும் ஒரே கட்டத்தில், அதாவது மகரத்தில் உள்ளது.

    அந்த தேதியில் பிறந்தவர்களின் சாதக பலன் எப்படி ஐயா இருக்கும். தங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  17. புதிர் எண்:114க்கான அலசல்:

    கும்ப லக்கினம், மிதுன ராசி ஜாதகி. லக்கினாதிபதி சனி பகவான் வக்கிரகதியில் 11மிடத்தில் அதன் அதிபதியும் குடும்பஸ்தானத்திற்கும் அதிபதியுமான குருவுடன் அமர்ந்துள்ளார். 6ம் அதிபதி சந்திரன் மற்றும் வைரியான செவ்வாயின் நேர் பார்வையில் உள்ளார். புனர்ப்பூ தோசமுள்ள ஜாதகம்.

    குடும்பாதிபதி குருவும் 6மிட அதிபதி சந்திரனின் பார்வையுடன் இருப்பது உசிதம் இல்லை. அது போலவே ஏழாம் வீட்டு அதிபதி சூரியன் தன் சொந்த வீட்டில், சிம்மத்தில் அமர்ந்திருந்தாலும், கூடவே பகைவன் ராகு பகவான் இருப்பதால் திருமண வாழ்வு சண்டை சச்சரவுடன் இருக்கும். ஆனால் குடும்பாதிபதி குருவின் 9ம் விசேச பார்வை 7ம் வீட்டில் விழுவது நன்மை தரும் அமைப்பு.
    களத்திர காரகன் சுக்கிர பகவான் 8ல் கன்னி ராசியில்நீசமடைந்து வலுவிழந்து செல்லாக்காசாகி விட்டார். கூடவே புதனுடன் கை கோர்த்தாலும் நவாம்சத்தில் புதன் நீசமடைந்துள்ளதால் அவருக்கு எந்த உதவியும் இல்லை.

    மேற்கண்ட காரணங்களால்,ஜாதகிக்கு திருமணம் தாமதமாக 30 வயதில் குரு தசை, சூரியபுத்தியில் நடைபெற்றது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இல்லை. பிரிந்து வாழும் சூழ்நிலை.

    ReplyDelete
  18. Dear Sir
    Jathaki was born in Punarpoosa nakshathra on 15/9/1960.
    She has:
    1. Sasi Mangala Yogam in Mithuna Rasi
    2. Neesa Panga Raja Yogam in Kanni (Puthan exalted and Sukran debilitated)
    3. Sooryan adchi in Simmham – this gives kalasthra thosam for Jathaki
    4. Guru adchi in Thanusu
    Chandran and Sevvai aspecting guru and Sani. 2nd house belongs to Guru and he is in 11th house with sani. Poorva Punya sthana sukran is in Kanni and is debilitated.
    Jathaki must have got married Sani Dasa and Guru Puthi. She has children because Guru aspecting 5th house.
    Because of her Kalasthra thosam her marriage wouldn’t have been happy.
    Regards
    Rajam Anand

    ReplyDelete
  19. வணக்கம். முதலில் மகர லக்னம் என தவறுதலாக அச்சிட்டுவிட்டேன். ஆகையால் அப்பதிவினை நீக்கி தற்போது திருத்தியப் பதிவினை சமர்ப்பிக்கின்றேன்

    கும்ப லக்னம். லக்னாதிபதியும் ஆட்சி பலம் பெற்ற குருவும் லாபஸ்தானத்தில். சூரியன் ஆட்சிபலம். புதன் ஆட்சி மற்றும்உச்சம். சுக்கிரன் நீசபங்கம்.
    குறை என்று பார்க்கப்போனால் காலதாமத திருமணம். தாமதத்திற்கு சூரியனுடன் இணைந்திருக்கும் ராகு. குழந்தைபேறும் தாமதம்தான். காரணம் 6க்குடையவன் செவ்வாயுடன் 5ல்.
    குருவின் பார்வை புத்திரஸ்தானத்திலும், களத்திரஸ்தானத்திலும் அருமையாக பதிந்துள்ளதால் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் அம்மணிக்கு உண்டு

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com