மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.1.16

இன்று குடியரசு தினம்!


குடியரசு தினம் என்றால் என்ன?

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு தினம் பற்றிக்
கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம்
என்பதை உணரமுடிகிறது. மற்றபடி பலருக்கு - அதிலும் குறிப்பாய் பல இளைஞர்களுக்கு -குடியரசு பற்றி எதுவும் தெரிவதில்லை.

இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம் இருக்கிறது.மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்?பள்ளியில் ஆசிரியர்களா?வீட்டில்  பெற்றோர்களா? சுதந்திரப் போராட் வீரர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் காந்தி, நேருவிற்கு மேல் அவர்களால் சொல்ல முடிவதில்லை.

தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி, காமராஜ், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்ரமண்ய சிவா, பாரதி, வீர வாஞ்சி, கொடி காத்த குமரன், நீலகண்ட
பிரம்மசாரி,வேலு நாச்சியார் ........இன்னும் எதனையோ வீரர்கள் சுதந்திரத்திற்காக் குரல் கொடுத்தவர்கள். இவர்களில் பலர் தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள்.

இந்தியா அளவில் பார்த்தால் திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தி, நேரு, பட்டேல்,அம்பேத்கர், பகத்சிங், நேதாஜி, லாலா லஜபதி, ஆச்சார்ய
வினோபாபாவே, சித்தரஞ்சன் தாஸ், தாதாபாய் நௌரோஜி..... இன்னும் எத்தனையோ பேர் நாட்டு விடுதலைக்காகப் போராடி வாழ்ந்தனர். இவர்களை எவ்வளவு பேர் நினைவில் கொண்டிருக்கிறோம்? ஆசிரியர்கள் நாட்டுப் பற்றை மாணவர்களுக்கு ஊட்டவேண்டும்.


இந்த ஊட்டம்தான் வருங்கால சந்ததியினர் நாட்டுப் பற்று கொண்டு நம் நாட்டை உயர்த்த வழிகாட்டும். பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. அன்றாட வாழ்க்கையை தொலைக்காட்சிகளிலேயே தொலைத்து விடுகிறவர்கள் எப்படி இளைஞர்களுக்கு வழிகாட்டுவது? வேரில் பழுதுகள்
இருந்தால் விழுதுகள் வளர்வது எப்படி சாத்தியம்?

நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான் ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று  உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையும் ஆகும்.

முந்நூறு வருடங்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம்.. அந்த முந்நூறு வருடங்கள் முன்பு நம் நாடு எப்படி இருந்தது?

அப்போது மன்னர்கள் பலர்ஆண்டனர். மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன்எவ்வழி மக்கள் அவ்வழி என்றே
வாழ்ந்தார்கள்.

ராஜராஜ சோழன், மராட்டிய சிவாஜி, குப்தர்கள் போன்றவர்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தாலும் ஔரங்கசீப், அலாவுதின் கில்ஜி போன்றவர்களால் மக்கள் துன்பமும்பட்டார்கள். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி. அவன் வைத்ததே சட்டம். இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது.

மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள். அவர்களின் கொடுங்கோலாட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவது உண்டு.

குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய   தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம் (constitution). மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல்
சட்டம்தான் உலகிலேயே மிக நீளமானதாம். மன்னர் ஆட்சி ஆங்கிலேயர் ஆட்சி எல்லாம் முடிந்து 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திரத்தைப்
போராடி வாங்கிவிட்டோம். சுதந்திரத்திற்குப் போராடிய பலரில் நேரு, அதன் பின் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 1950இல் குடியரசு நாடாக அதாவது மக்களாட்சி நாடாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது. ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம். சரியான ஆட்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்தவரை நீக்கிவிட்டு வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் இளைய தலைமுறை நன்கு அறிந்திருக்குமானால் நாட்டின் எதிர்காலம் வளமுடையதாக ஆகும் என்பது நிச்சயம்.

ஜெய்ஹிந்த் !!!
----------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. அன்புள்ளம் கொண்ட அய்யா அவகளுக்கு வணக்கங்கள்!
    நல்ல கருத்துக்களை தெளிவு பட அறியத்தரும் பதிவு. நமது வருங்கால சந்ததிக்கு,இளைய தலைமுறையினருக்கு - குழந்தைகளுக்கு குடியரசு தின விபரங்களை தெரிவித்து அவர்களின் தேசப் பற்றை வளர்ப்போம்!.
    அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  2. உண்மை ஐயா... இந்த இந்திய வருங்கால தூண்களின் மேலே வெளிநாடுகளின் கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது... அடிப்படைக்கல்வி மாற்றியமைத்தாலன்றி இளம் மாணவர்களுக்கு தேசம் பற்றிய நேசம் அமையாது, உங்கள் யோசனை காலத்தால் செயல்படட்டும்! வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Independence day wishes to all...

    Have a great day.

    with kind regards,
    Ravi- avn

    ReplyDelete
  4. ///சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம்
    என்பதை உணரமுடிகிறது.///

    அப்படியா... இப்பவும்
    அடிமைகளாக வே இருக்கிறோம்.

    அன்றைய அடிமைகலை விட
    இன்றைய அடிமைகளால் உரிமையாய் கூட அழ முடியவில்லை.

    //மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள்.//

    இப்பவும் அப்படித்தான்..
    இது வேறு கோணத்தில்...

    ///மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு.///

    இப்பவும் அப்படித்தானா நடக்கிறது...
    இதயம் தொட்டு சொல்லுங்கள்..

    சாஸ்த்திரபடி செய்யும் திருமணங்களை ஒரு
    சட்டம் ரத்து செய்விடுகிறதே...

    இந்து உரிமை எங்கே ஒடுக்கப்படுகிறது பார்த்தீர்களா?
    இந்தியர்கள் எப்படி கொடுமை செய்யபடுகிறார்கள்...?

    நாங்கள் சு"தந்திர" மற்றும்
    நயமான "குடி"யரசு தினங்களை கொண்டாடுவதில்லை

    ReplyDelete
  5. அரசியல் சாசனத்தை ஏற்றநாள் 26 ஜனவரி 1950.

    இதை ஏன் 26 ஜனவரி என்று வைத்தார்கள்? ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் மகா சபையின் தலைவ்ராக இருந்த போது, இந்தியாவின் லட்சியம் பூரண சுயராஜ்ஜியம் என்பதை காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றினார்.
    அந்த நாள் 26 ஜனவரி 1930. லாகூரில் அந்த மகாநாடு நடந்தது. இராட்டை வரைந்த மூவர்ண‌க்கொடி நாடு முழுவதும் ஏற்ற்ப்பட்டு சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர் 26ஜனவரியை குடியரசு நாளாக அரசு அறிவித்தது.

    ReplyDelete
  6. My Republic day greetings to all.JAI HIND!

    ReplyDelete
  7. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவகளுக்கு வணக்கங்கள்!
    நல்ல கருத்துக்களை தெளிவு பட அறியத்தரும் பதிவு. நமது வருங்கால சந்ததிக்கு,இளைய தலைமுறையினருக்கு - குழந்தைகளுக்கு குடியரசு தின விபரங்களை தெரிவித்து அவர்களின் தேசப் பற்றை வளர்ப்போம்!.
    அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  8. /////Blogger Sugumar Je said...
    உண்மை ஐயா... இந்த இந்திய வருங்கால தூண்களின் மேலே வெளிநாடுகளின் கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது... அடிப்படைக்கல்வி மாற்றியமைத்தாலன்றி இளம் மாணவர்களுக்கு தேசம் பற்றிய நேசம் அமையாது, உங்கள் யோசனை காலத்தால் செயல்படட்டும்! வாழ்க வளமுடன்!!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Independence day wishes to all...
    Have a great day.
    with kind regards,
    Ravi- avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  10. ////Blogger Tax Clinic said...
    ///சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள், அவர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று விட்டோம்
    என்பதை உணரமுடிகிறது.///
    அப்படியா... இப்பவும்
    அடிமைகளாக வே இருக்கிறோம்.
    அன்றைய அடிமைகளை விட
    இன்றைய அடிமைகளால் உரிமையாய் கூட அழ முடியவில்லை.
    //மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவார்கள்.//
    இப்பவும் அப்படித்தான்..
    இது வேறு கோணத்தில்...
    ///மக்கள்: தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் முலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு.///
    இப்பவும் அப்படித்தானா நடக்கிறது...
    இதயம் தொட்டு சொல்லுங்கள்..
    சாஸ்த்திரபடி செய்யும் திருமணங்களை ஒரு
    சட்டம் ரத்து செய்விடுகிறதே...
    இந்து உரிமை எங்கே ஒடுக்கப்படுகிறது பார்த்தீர்களா?
    இந்தியர்கள் எப்படி கொடுமை செய்யபடுகிறார்கள்...?
    நாங்கள் சு"தந்திர" மற்றும்
    நயமான "குடி"யரசு தினங்களை கொண்டாடுவதில்லை/////

    உங்கள் கருத்துக்கள் எப்போதுமே சற்று வித்தியாசமானவை. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. //////Blogger kmr.krishnan said...
    அரசியல் சாசனத்தை ஏற்றநாள் 26 ஜனவரி 1950.
    இதை ஏன் 26 ஜனவரி என்று வைத்தார்கள்? ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் மகா சபையின் தலைவ்ராக இருந்த போது, இந்தியாவின் லட்சியம் பூரண சுயராஜ்ஜியம் என்பதை காங்கிரஸ் மகாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றினார்.
    அந்த நாள் 26 ஜனவரி 1930. லாகூரில் அந்த மகாநாடு நடந்தது. இராட்டை வரைந்த மூவர்ண‌க்கொடி நாடு முழுவதும் ஏற்றப்பட்டு சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னர் 26ஜனவரியை குடியரசு நாளாக அரசு அறிவித்தது./////

    அரிய தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. ////Blogger kmr.krishnan said...
    My Republic day greetings to all.JAI HIND!/////

    நல்லது. நன்றி!ஜெய்ஹிந்த்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com