இன்று தைப்பூசம்!
தை மாதத்தில் பொங்கலுக்கு இணையாக இன்னொரு விசேட நாள் இருக்கிறது என்றால் அது தைப்பூச தினம்தான்! ஆயிரக் கணக்கான முருக பக்தர்கள் நடைப் பயணமாக பழநிக்குச் செல்லும் நாள் இது. இன்னன்நாளில் நாமும் முருகப் பெருமானை நினைத்து, வழிபட்டு அவனருளைப் பெறுவோம்!
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அற்புதமாக முருகனைப் பாடிய சில பாடல்களை இன்று பதிவிடுகிறேன். படித்து மகிழுங்கள்!
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் குவலயத்தோர் வழிபடட்டும் என்று சிறப்பாகத் தன் வசனத்தில் எழுதிப் படங்களிலும்
அதைச் சிறப்பாகக் காட்டியவர் திரு.ஏ.பி.நாகராஜன்.
எல்லா இடங்களிலும் குன்றில் உறையும் குமரன், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் மட்டும் கடலோரத்தில் குடிகொண்டுள்ளார்.
சூரனைவென்று தேவர்களைக் காத்தகுமரன், இன்றும் இன்முகத்துடன் அங்கே நின்று, தன் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திருச்செந்தூர் சண்முகநாதனைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவிட்டுள்ளேன்!
பாடலைப் பாருங்கள்:
-------------------------------------------------
"திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம் - அது
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும்
ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்!
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?
மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!
பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலர்கள் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா!
படம்: தெய்வம் - வருடம் 1972
"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - அவனைத் தேடித்தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!" என்று
பாடலைத் துவங்கியவர், கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் - தலையா கடல் அலையா? என்று வியந்ததோடு, குழந்தைகள், பெரியவர் என்று
அனைவரையும் அங்கே வரவழைக்கும் செயல் குமரனுக்கு மட்டுமே தெரிந்த கலை!" என்று சொன்னது இந்தப்பாடலின் சிறப்பாகும்.
நம்பியவர் வந்தால், நெஞ்சுருகி நின்றால், முருகன் வந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்று முத்தாய்ப்பாய்ப் பாடலை முடித்தது கவியரசருக்கே
கைவந்த கலை என்றால் அது மிகையல்ல!
---------------------------------------------
மற்றுமொரு பாடல்:
செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு
சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
(செந்தூர்)
என்னிரு கைகள் தூக்கியபோது
பெண்பார்க்க வந்தானம்மா,
பன்னிரு கையில் வாரி யணைத்துப்
பண்பாட வந்தானம்மா!
கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா?
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா?"
படம்: சாந்தி - வருடம்.1965
-------------------------
மேலும் ஒரு பாடல்:
இந்தப் பாடலை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள். என்னதொரு சொல் விளையாட்டு என்று கண்டு கூறுங்கள்!
"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா
(காவ..)
நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா
(காவ..)
ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!
தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ
(காவ..)
ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!
திருப்பதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ"
படம்: மனிதனும் தெய்வமாகலாம் - வருடம் 1975
"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா - குமரா நீயிருக்கும் இடம் தானடா" என்று கோவிலுக்கு ஒரு புது
விளக்கம் சொல்லிப் பாடலைத் துவக்கியவர், "நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும், ஏன் எங்கும் உன்முகம் தான் தெரியுது சண்முகா"
என்று சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு.
புவியைக் காப்பவனே, உன் திருவடிகளை நாங்கள் தாங்குவோம் என்று முத்தாய்ப்பான வரிகளில் சொன்னது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Respected Sir,
ReplyDeleteHappy morning... Lord muruga will bless all of us...
With kind regards,
Ravi- avn
தைப் பூசத்தில் முருகப் பெருமானை ஆடிப்பாடி வணங்குவோம். நன்றி ஐயா!
ReplyDeleteகுரு வந்தனம்.
ReplyDeleteகுஞ்சரி மணாளன், குமரக்கடவுள் திருவடி போற்றி, போற்றி!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Lord muruga will bless all of us...
With kind regards,
Ravi- avn//////
நல்லது. நன்றி அவனாசிக்காரரே!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteதைப் பூசத்தில் முருகப் பெருமானை ஆடிப்பாடி வணங்குவோம். நன்றி ஐயா!/////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுரு வந்தனம்.
குஞ்சரி மணாளன், குமரக்கடவுள் திருவடி போற்றி, போற்றி!//////
பழநியப்பா போற்றி போற்றி!
இந்த தைபூசத்திற்கு
ReplyDeleteஇதயம் கனியும்
கொங்கு தமிழில்
கொஞ்சி மகிழ கோவை வந்திருந்தேனுங்க....
இந்த பாடலை என் பங்கிற்கு
இங்கே பகிருந்து கொள்கிறேன்
சென்னி குளநகர் வாசன் - தமிழ்
தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும்
செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை
தீரன், அயில் வீரன்.
வன்ன மயில்முரு கேசன், - குற
வள்ளி பதம்பணி நேசன் - உரை
வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற
வாதே சொல்வன் மாதே!
கோபுரத் துத்தங்கத் தூவி - தேவர்
கோபுரத்துக் கப்பால் மேவி - கண்கள்
கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு
குலவும் புவி பலவும்.
https://www.youtube.com/watch?v=6MCkBbBN9vs