மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.1.16

காசியின் மகத்துவம்!


காசியின் மகத்துவம்!

காசியில் கருடன் பறப்பதில்லை,
கவுளி ஒலிப்பதில்லை ஏன்..?

இராவண சம்ஹாரம் முடிந்ததும் ராமேஷ்வரம் வந்த ஸ்ரீராமர் சிவபெருமானை பூஜிக்க விரும்பி லிங்கம் ஸ்தாபிக்க நினைத்தார்.
ஹனுமானை அழைத்து காசிக்குப்போய் ஒருசிவலிங்கம் எடுத்துவா என்று கட்டளையிட்டார்.

காசிக்குச் சென்ற ஆஞ்சநேயர் அங்கு அதிகமாக லிங்கம் இருந்த இடத்துக்குச் சென்று எது சுயம்பு லிங்கம் எப்படிக் கண்டு எடுத்து செல்வது என்று தடுமாறினார்!

அப்போது ஒரு சிவலிங்கத்துக்கு மேலே கருடன் வட்டமிட்டார்!
அதுதான் சுயம்புலிங்கம் என்று கண்டு கொண்ட ஆஞ்சநேயர் இதை எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தார்.

அதை ஆமோதிப்பது போல் பல்லி சத்தமிட்டு ஆதரித்தது.
அந்த சுயம்புலிங்கத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியே வரும்போது காலபைரவர் இது என் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
என்னைக் கோட்காமல் நீ எப்படி எடுத்துச் செல்லலாம் என்று கூறி தடுத்தார்.

அவரோடு வாக்குவாதம் செய்யும்போது கவுளி என்ற பல்லியும் கருடனும் ராமர் காரியத்துக்கு உதவி செய்தார்கள் என்று ஹனுமன் கூறினார்!

என் கடமைக்கு குந்தகம் உண்டாக்கிய பல்லியே நீ இனி காசியில் ஒலிக்கக் கூடாது! ஏ கருடா! நீ காசியில் பறக்கக் கூடாது என்று காலபைரவர் சாபம் இட்டார்!

எனவே இப்போதும் கருடன் காசியில் பறப்பதில்லை!
கவுளி சப்தமிடுவதில்லை இந்த அதிசயம் இன்றும் காசியின் அதிசயம்!
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  இது புதிய செய்தி!அதிசயமும் அற்புதமும் நிறைந்தசெய்தி!!
  நன்றிகள்!!!
  அன்புடன்,
  -பொன்னுசாமி

  ReplyDelete
 2. நமது புராணச் செய்திகள் எப்போதுமே பரவசம் அளிக்கக் கூடியவை.தகவலுக்கு நன்றி ஐயா!

  ReplyDelete
 3. அய்யா,
  எனக்கு ஒரு சந்தேகம்.
  ஒரு வீடு பார்த்தேன் கிட்ட தட்ட அந்த வீடு 1 மாத காலம் வீடு வாடகைக்கு என்று அறிவிப்பு பலகை போடபட்டிருந்தது. திங்கள்கிழமை இரவு 8.15-க்கு சென்று பார்த்து விட்டு நாளை காலை எனது முடிவை சொல்கிறேன் என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன் அடுத்த நொடியில் இன்னொருவர் வந்து அந்த வீடிற்கு முன்பணம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதற்க்கு கரணம் என்ன?
  குறிப்பு:
  மேற்கு பார்த்த வாசல்

  ReplyDelete
 4. குருவே வந்தனம்.
  எங்கள் தந்தையாரின் அஸ்தியைக் கரைப்பதற்காக 1980ல் இராமேஸ்வரம் சென்றிருக்கிறேன். அதுபோன்று எங்கள் மாமியாரின் அஸ்தி கரைக்க என் மைத்துனருடன் 1983ல் சென்றிருந்தேன்.ஆனால், இவ்வதிசயச் செய்தியை இன்றுதானறிகிறேன்!!! பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே!

  ReplyDelete
 5. வணக்கம் .
  நன்றாக உள்ளது .

  காசி கங்கையில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் .
  காசி விஸ்வநாதர், தங்க அன்னபூரினி தர்சனம் எனக்கு 1983ல் கிடைத்தது .
  ஒரு வாரம் தங்கியிருந்து காசியை வளம் வந்தேன் .
  மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும் ஆண்டவன் கிருபை இருந்தால்

  ReplyDelete
 6. /////Blogger siva kumar said...
  உள்ளேன் ஐயா///

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

  ReplyDelete
 7. ////Blogger GOWDA PONNUSAMY said...
  அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  இது புதிய செய்தி!அதிசயமும் அற்புதமும் நிறைந்தசெய்தி!!
  நன்றிகள்!!!
  அன்புடன்,
  -பொன்னுசாமி////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

  ReplyDelete
 8. ///Blogger kmr.krishnan said...
  நமது புராணச் செய்திகள் எப்போதுமே பரவசம் அளிக்கக் கூடியவை.தகவலுக்கு நன்றி ஐயா!//////

  உண்மைதான்.உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 9. /////Blogger C.Senthil said...
  அய்யா,
  எனக்கு ஒரு சந்தேகம்.
  ஒரு வீடு பார்த்தேன் கிட்ட தட்ட அந்த வீடு 1 மாத காலம் வீடு வாடகைக்கு என்று அறிவிப்பு பலகை போடபட்டிருந்தது. திங்கள்கிழமை இரவு 8.15-க்கு சென்று பார்த்து விட்டு நாளை காலை எனது முடிவை சொல்கிறேன் என்று கூறிவிட்டு வீடு திரும்பினேன் அடுத்த நொடியில் இன்னொருவர் வந்து அந்த வீடிற்கு முன்பணம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இதற்கு கரணம் என்ன?
  குறிப்பு:
  மேற்கு பார்த்த வாசல்////

  எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்!

  ReplyDelete
 10. /////Blogger வரதராஜன் said...
  குருவே வந்தனம்.
  எங்கள் தந்தையாரின் அஸ்தியைக் கரைப்பதற்காக 1980ல் இராமேஸ்வரம் சென்றிருக்கிறேன். அதுபோன்று எங்கள் மாமியாரின் அஸ்தி கரைக்க என் மைத்துனருடன் 1983ல் சென்றிருந்தேன்.ஆனால், இவ்வதிசயச் செய்தியை இன்றுதானறிகிறேன்!!! பகிர்வுக்கு நன்றி வாத்தியாரே!////

  எனது நூலில் இந்த விபரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துள்ளேன்

  ReplyDelete
 11. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  வணக்கம் .
  நன்றாக உள்ளது
  காசி கங்கையில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் .
  காசி விஸ்வநாதர், தங்க அன்னபூரினி தர்சனம் எனக்கு 1983ல் கிடைத்தது .
  ஒரு வாரம் தங்கியிருந்து காசியை வலம் வந்தேன் .
  மீண்டும் ஒரு முறை செல்ல வேண்டும் ஆண்டவன் கிருபை இருந்தால்/////

  நீங்கள் செல்ல இருக்கும்போது சொல்லுங்கள். தங்கும் இடத்திற்கு உரிய முகவரியைத் தருகிறேன்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com