மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.1.16

அரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா?


அரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா?

அரச கிரகம் என்றால் உடனே சூரியன் என்று8 சொல்லிவிடுவீர்கள்.  சரி அரச கனி என்றால் எது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
எலுமிச்சம் பழத்தைத்தான் அரச கனி என்று சொல்லுவார்கள்.

அதன் சிறப்பைக் கீழே கொடுத்துள்ளேன்:

இந்து மத சமய பூஜைகளில் எலுமிச்சைக்குத்தான்  முதலிடம்!

🎾எலுமிச்சை - இதை தேவகனி, இராஜகனி என்றும் கூறுவார்கள்.

எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ  இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம். இது சிட்ரஸ் லிமன் (Citruslimon) என்னும் அறிவியல்
பெயர் கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இதுபுளிப்புச் சுவை.

🎾இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

 🎾இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப் பட்டு
ஆக்கப்பட்டு வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி

இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும், ரிபோஃப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய் துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா? எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரணசக்கியும் அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும்
சுருக்கங்கள் மறைகின்றன.

🎾பாலேட்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேனூடன் பருகி வர உடல் எடை குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில் இருப்பதால் இதயக் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல் போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ், நீங்கும். உடலிலிருந்து நச்சுப் பொருள்களையும், பாக்டிரியாக்களையும் வெளியேற்றி மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற காய்ச்சலின் போது விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப் பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை நீர் கலக்காமல் அப்படியே விட்டுக் கொண்டால் நாக்கின் சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி சிறிது நேரம் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய பழம் பயன்கள் அதிகம் இதனைப்பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால், அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும்.

🎾தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம் பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள் உட்கொண்டு, அதனால் அடங்காத கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால், சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால் உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள்,  மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது.

🎾முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை
அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண் போல பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால்
மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை அன்பர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது. உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால் நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு விலகும். உடல் நச்சுக்களை வெளியேற்றும். உடலின் தற்காப்பு சக்தி எலுமிச்சையால் பெருகும். கடல் உப்பினால் உப்பிய
உடம்பு எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம் போன்றவைகளை வெட்டியதும் பயன்படுத்தி விட வேண்டும்.

🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

விளக்கம் போதுமா?

அன்புடன்,
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. அருமையான தகவலுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. /////Blogger kmr.krishnan said...
    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா!////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. /////Blogger hamaragana said...
    yes sir.//////

    நல்லது. நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  4. ஒப்பில்லா தெய்வம்
    ஒதிமலை ஆண்டவர்

    முருகன் சந்நிதியில்
    முதலில் இந்த அரச கனிதான்

    பிரசாதம்... மற்றதெல்லாம்
    பின்னர் தான்...

    நினைத்த காரியம் கை கூடும் உறுதியாக
    நிறை கனி உங்களுக்கு கிடைத்துவிட்டால்.

    இதற்காக காத்திருப்போர் ஏராளம்
    இன்றும் இந்த நிலை..

    இந்த முருகன் உதடு அசைத்து பேசும்
    இந்த அற்புதம் இன்றும் நடக்கிறது

    மலை ஏறும் போது
    மறக்காமல் பெயர் சொல்லி

    அழைக்கும் இந்த
    அழகனை ஒரு முருயேனும்

    பார்த்து விட்டு வாருங்கள்..
    பயன் பல கிடைக்கும்...

    ReplyDelete
  5. /////Blogger வேப்பிலை said...
    ஒப்பில்லா தெய்வம்
    ஒதிமலை ஆண்டவர்
    முருகன் சந்நிதியில்
    முதலில் இந்த அரச கனிதான்
    பிரசாதம்... மற்றதெல்லாம்
    பின்னர் தான்...
    நினைத்த காரியம் கை கூடும் உறுதியாக
    நிறை கனி உங்களுக்கு கிடைத்துவிட்டால்.
    இதற்காக காத்திருப்போர் ஏராளம்
    இன்றும் இந்த நிலை..
    இந்த முருகன் உதடு அசைத்து பேசும்
    இந்த அற்புதம் இன்றும் நடக்கிறது
    மலை ஏறும் போது
    மறக்காமல் பெயர் சொல்லி
    அழைக்கும் இந்த
    அழகனை ஒரு முருயேனும்
    பார்த்து விட்டு வாருங்கள்..
    பயன் பல கிடைக்கும்...//////

    நல்லது. அரிய தகவலுக்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com