மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.1.16

கடவுள் யாரையும் கைவிடுவதில்லை!


கடவுள் யாரையும் கைவிடுவதில்லை!

🌼கடவுள் யாரையும் கைவிடுவதில்லை🌼

🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…

🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது  என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று
முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.

🌼அப்போது…கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான்
கவனித்து வந்தேன்.

🌼 அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.

🌼ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

🌼இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட
வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

🌼“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

🌼ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.

🌼அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.

🌼ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

🌼“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த
வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.

🌼பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

🌼எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை
அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று சாந்தமாக பதிலளித்தார்.

🌼மேலும் கடவுள் என்னிடம்,

🌼“உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய்,

🌼நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில்
விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.

🌼மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.

🌼ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

🌼“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

🌼இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

🌼நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

🌼“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

🌼“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.
“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

🌼“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

🌼“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

🌼நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.

🌼மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

🌼ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

🌼கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை🌼

                              🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

37 comments:

  1. வணக்கம் ஐயா. மீண்டும் வகுப்பறை சுடற் விட்டு எரிய ஆரம்பித்தது. உடல் நிலை எவ்வாறு ஐயா உள்ளது. மேலும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
    ��மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.
    மிகவும் பிடித்த வரிகள் ஐயா

    ReplyDelete
  2. குரு வந்தனம்.
    ஆஹா, குரு தான் சிஷ்யர்களுக்கு வழிகாட்டி! ஒவ்வொரு முறையும் தாங்கள் எழுதும் குறிக்கோள்கள் அல்லது உதாரணங்கள் அனைத்துமே எங்கள் மனதினில் கற்பனைச் சிறகெடுத்துப் பார்க்க ஏதுவான சுலபமானவைகளாகவே இருக்கும். இன்றைய தங்கள் பதிவும் படிப்போர் மனதில் ஆழப்பதிந்து, இறைவன் எங்கணம் மூங்கில் வளரக் காந்திருந்தாரோ, அதுபோல இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தழைத்து வாழ, நாமும்
    நம்பிக்கையுடன் காத்திருப்போம், மனதினில் திடமான பிரார்த்தனையுடன்.
    நமது அன்புக்குரிய வாத்தியாரின் உடல்நலம் வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி, எப்போதும் குன்றா நலத்துடன்,தங்கள் குடும்பத்தாருடனும்
    நம்முடனும் இருக்க எம்பெருமான் குன்றுதோராடும் குமரக்கடவுளை உளமாரப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. " மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்".
    பலரது வாழ்க்கையில் துன்பங்களும் அவலங்களும் இதனால்தான் . நல்ல பதிவு .

    ReplyDelete
  4. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    சிறு கதையாக படைக்கப் பட்ட மனவளக் கட்டுரை!!.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்!!!.
    தங்களின் நலமும் பணியும் சிறக்க இறைவணை என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  5. அன்புள்ள வாத்தியாருக்கு,

    மிக நல்ல கருத்து.

    உறுப்பினர்களின் பழைய வேகம் இப்போது இல்லை. வழக்கம் போல கேள்வி பதில் இங்கேயே தொடருமாறு வாத்தியாரை வேண்டுகிறேன்...

    வாத்தியார் ஆவன செய்வார் என நிச்சயம் நம்புகிறேன்.

    தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  6. Respected Sir,

    Happy morning... Hope your health is well...

    Nice post...

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  7. ஆம் .கடவுளை நம்பினார் கைவிடப்படார்.

    'ஆண்டவரே! என்னை ஏன் கைவிட்டீர்?'என்று சிலுவையில் அறையப்பட்ட ஏசு
    கதறியதையும் கண‌க்கில் கொள்ள வேண்டியுள்ளது.கிறித்துவம் என்ற மதம் தோன்ற வேண்டும் என்பதற்காக்கவே ஆண்டவர் ஏசுவைத் த்ன் உடலைத் தியாகம் செய்ய வைத்தார்போலும். காரணம் இல்லாமல் காரியம் நடப்பதில்லை

    ReplyDelete
  8. Vanakkam ayya nambikkai than vazhgai arumaiyana thathuva kathai vazhga valamudan

    ReplyDelete
  9. yes sir and thank you very much for reminding us.it is true that every people have their own problem and issues as you said in your classroom lessons.

    It seems that every one has got the problem in this world but god gives the strength to withstand.

    ReplyDelete
  10. சரியான நேரத்தில் எனக்காகவே பதிவு செய்தது போல் உள்ளது அய்யா.
    நன்றி

    ReplyDelete
  11. நம்பினார் கெடுவதில்லை. உண்மை தான்.
    பலர் நடந்து வந்த பாதையை மட்டும் யாரும் முழுதாக அறிந்து கொள்வதில்லை.

    உளியால் உடைத்து சிதைக்கப்படாத கல் சிலையாவதில்லை.

    நம்மால் சமாளிக்க முடியாத துன்பங்களையும், பிரச்சனைகளையும் இறைவன் காரணமில்லாமல் ஒருபோதும் தருவதில்லை.

    ReplyDelete
  12. கடவுள் எப்போதும் யாரையும் கைவிடுவதில்லை. அவருடைய நீட்டிய கரங்களை நாம் பார்ப்பதில்லை. விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தாங்கள் உடல் நலம் தேறி மீண்டும் எழுத்துப்பணி மேற்கொண்டதைக்காண
    மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆயினும் தங்களுக்கு முழு ஒய்வு தேவை.உணவு விஷயத்தில் கவனம் தேவை.தாங்கள் பூரண நலம் பெற முருகன் அருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  14. Vanakkam ayya,

    I am new student to your vagupparai, hope you are doing well and praying God to live long with good health and wealt, we are all so blessed and fortunate to read your blog. Thanks

    ReplyDelete
  15. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    நலம் நலமறிய ஆவா ...
    ஆத்திகனுக்கும்..நாத்திகனுக்கும் அருள் புரிய கூடியவர் நமது சமயத்தில் உள்ள இறைவன்தான் ...!!!
    எதோ ஒரு காரணம் கொண்டே சோதனைகள் ..[வேர் விடவே==அனுபவம் ] அவரவர் வினை பயன் ..!!!
    நல்ல கருத்துக்கள் .
    நன்றி

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. உயர்வும் தாழ்வும் இல்லையென்றால்
    உயர்வேது சொல்லுங்கள்...

    ஒப்பீடு செயாவும்
    ஒப்பனைக்கும் இது தேவை..

    அடுத்தவரோடு ஒப்பீடுவதர்க்கு முன்
    அப்படியே உங்களோடு ஒப்பீடு செய்து பாருங்கள்

    நேற்றைய நானும்
    இன்றைய நானும்...

    வளர்ந்து இருக்கிறனா என் அறிவில்
    வளர்ந்து இருக்கிறனா நல் எண்ணத்தில் ...

    இந்த ஒப்பீடு அவசியம் தேவை...
    இதை வேண்டாம் என்று யாரவது சொல்வார்களா?

    ReplyDelete
  18. Vanakkam Ayya

    I am new to your Vagupparai. Hope you are recovering and doing well and praying GOD to give all wealth and health always, your writing is simply superb!

    Manavann

    ReplyDelete
  19. வணக்கம் வாத்தியார் அவர்களே! கடவுள் யாரையும் கைவிடுவதில்லை! மிகவும் அருமையான, நம்பிக்கை தர வல்ல ஒரு அற்புதமான படைப்பு!. வாழ்த்துகள்.
    வேலை செய்தவனுக்கு கூலி கூட கிடைக்கவில்லை, வேலை செய்தவன் போல நடித்தவனுக்கு விருதே கிடைகிறதாம்! என்பது போல, வியர்வை சிந்தி உழைப்பவனை, நியாயமாக இருப்பவனை எல்லாம் கை விடாமல் இருக்க வேண்டும். இதனால் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும்!.

    ReplyDelete
  20. //////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா. மீண்டும் வகுப்பறை சுடற் விட்டு எரிய ஆரம்பித்தது. உடல் நிலை எவ்வாறு ஐயா உள்ளது. மேலும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
    ��மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.
    மிகவும் பிடித்த வரிகள் ஐயா////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  21. //////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    ஆஹா, குரு தான் சிஷ்யர்களுக்கு வழிகாட்டி! ஒவ்வொரு முறையும் தாங்கள் எழுதும் குறிக்கோள்கள் அல்லது உதாரணங்கள் அனைத்துமே எங்கள் மனதினில் கற்பனைச் சிறகெடுத்துப் பார்க்க ஏதுவான சுலபமானவைகளாகவே இருக்கும். இன்றைய தங்கள் பதிவும் படிப்போர் மனதில் ஆழப்பதிந்து, இறைவன் எங்கணம் மூங்கில் வளரக் காந்திருந்தாரோ, அதுபோல இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தழைத்து வாழ, நாமும்
    நம்பிக்கையுடன் காத்திருப்போம், மனதினில் திடமான பிரார்த்தனையுடன்.
    நமது அன்புக்குரிய வாத்தியாரின் உடல்நலம் வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி, எப்போதும் குன்றா நலத்துடன்,தங்கள் குடும்பத்தாருடனும்
    நம்முடனும் இருக்க எம்பெருமான் குன்றுதோராடும் குமரக்கடவுளை உளமாரப் பிரார்த்திக்கிறேன்./////

    நல்லது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  22. ////Blogger Ganesan R said...
    " மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்".
    பலரது வாழ்க்கையில் துன்பங்களும் அவலங்களும் இதனால்தான் . நல்ல பதிவு .//////

    நல்லது. நன்றி கணேசன்!

    ReplyDelete
  23. Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    சிறு கதையாக படைக்கப் பட்ட மனவளக் கட்டுரை!!.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்!!!.
    தங்களின் நலமும் பணியும் சிறக்க இறைவணை என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    நல்லது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  24. Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    சிறு கதையாக படைக்கப் பட்ட மனவளக் கட்டுரை!!.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்!!!.
    தங்களின் நலமும் பணியும் சிறக்க இறைவணை என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    நல்லது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  25. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அன்புள்ள வாத்தியாருக்கு,
    மிக நல்ல கருத்து.
    உறுப்பினர்களின் பழைய வேகம் இப்போது இல்லை. வழக்கம் போல கேள்வி பதில் இங்கேயே தொடருமாறு வாத்தியாரை வேண்டுகிறேன்...
    வாத்தியார் ஆவன செய்வார் என நிச்சயம் நம்புகிறேன்.
    தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.//////

    உங்களின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாளைய பதிவைப் பாருங்கள்!

    ReplyDelete
  26. //////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Hope your health is well...
    Nice post...
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn//////

    நல்லது, நன்றி அவனாசி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  27. /////Blogger kmr.krishnan said...
    ஆம் .கடவுளை நம்பினார் கைவிடப்படார்.
    'ஆண்டவரே! என்னை ஏன் கைவிட்டீர்?'என்று சிலுவையில் அறையப்பட்ட ஏசு
    கதறியதையும் கண‌க்கில் கொள்ள வேண்டியுள்ளது.கிறித்துவம் என்ற மதம் தோன்ற வேண்டும் என்பதற்காக்கவே ஆண்டவர் ஏசுவைத் தன் உடலைத் தியாகம் செய்ய வைத்தார்போலும். காரணம் இல்லாமல் காரியம் நடப்பதில்லை///////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  28. //////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya nambikkai than vazhgai arumaiyana thathuva kathai vazhga valamudan/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. //////Blogger seenivasan said...
    yes sir and thank you very much for reminding us.it is true that every people have their own problem and issues as you said in your classroom lessons.
    It seems that every one has got the problem in this world but god gives the strength to withstand.//////

    உண்மைதான். நல்லது. நன்றி ஸ்ரீனிவாசன்!

    ReplyDelete
  30. /////Blogger Sakthi- 2014 said...
    சரியான நேரத்தில் எனக்காகவே பதிவு செய்தது போல் உள்ளது அய்யா.
    நன்றி//////

    அப்படியா! மிக்க மகிழ்ச்சி1

    ReplyDelete
  31. //////Blogger Mrs Anpalagan N said...
    நம்பினார் கெடுவதில்லை. உண்மை தான்.
    பலர் நடந்து வந்த பாதையை மட்டும் யாரும் முழுதாக அறிந்து கொள்வதில்லை.
    உளியால் உடைத்து சிதைக்கப்படாத கல் சிலையாவதில்லை.
    நம்மால் சமாளிக்க முடியாத துன்பங்களையும், பிரச்சனைகளையும் இறைவன் காரணமில்லாமல் ஒருபோதும் தருவதில்லை./////

    சரியாகச் சொன்னீர்கள்! நன்றி சகோதரி!

    ReplyDelete
  32. ////Blogger Kamala said...
    கடவுள் எப்போதும் யாரையும் கைவிடுவதில்லை. அவருடைய நீட்டிய கரங்களை நாம் பார்ப்பதில்லை. விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.//////

    உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. /////Blogger ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    தாங்கள் உடல் நலம் தேறி மீண்டும் எழுத்துப்பணி மேற்கொண்டதைக்காண மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆயினும் தங்களுக்கு முழு ஒய்வு தேவை.உணவு விஷயத்தில் கவனம் தேவை.தாங்கள் பூரண நலம் பெற முருகன் அருளை வேண்டுகிறேன்./////

    உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  34. ////Blogger Santhanam Raman said...
    Vanakkam ayya,
    I am new student to your vagupparai, hope you are doing well and praying God to live long with good health and wealt, we are all so blessed and fortunate to read your blog. Thanks/////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  35. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    நலம் நலமறிய ஆவா ...
    ஆத்திகனுக்கும்..நாத்திகனுக்கும் அருள் புரிய கூடியவர் நமது சமயத்தில் உள்ள இறைவன்தான் ...!!!
    எதோ ஒரு காரணம் கொண்டே சோதனைகள் ..[வேர் விடவே==அனுபவம் ] அவரவர் வினை பயன் ..!!!
    நல்ல கருத்துக்கள் .
    நன்றி//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  36. //////Blogger C.P. Venkat said...
    வணக்கம் வாத்தியார் அவர்களே! கடவுள் யாரையும் கைவிடுவதில்லை! மிகவும் அருமையான, நம்பிக்கை தர வல்ல ஒரு அற்புதமான படைப்பு!. வாழ்த்துகள்.
    வேலை செய்தவனுக்கு கூலி கூட கிடைக்கவில்லை, வேலை செய்தவன் போல நடித்தவனுக்கு விருதே கிடைகிறதாம்! என்பது போல, வியர்வை சிந்தி உழைப்பவனை, நியாயமாக இருப்பவனை எல்லாம் கை விடாமல் இருக்க வேண்டும். இதனால் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும்!.//////

    ஏன் அவநம்பிக்கை? கடவுள் இருக்கிறார்!. உரிய நேரத்தில் ஒவ்வொருவருக்கும் அவர் உதவுவார்!

    ReplyDelete
  37. Very useful and recover from frustration to me

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com