மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.1.16

Astrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழிவோம் வாருங்கள்!

Astrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழிவோம் வாருங்கள்!

ஜோதிடப் புதிர் 101

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஜோதிடப் புதிர் பகுதியைத் துவங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். வாரம் ஒரு புதிர் வெளியாகும். அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். ஜாதகத்தை நன்றாகப் பாருங்கள்:

கேள்வி இதுதான்: அம்மணிக்கு திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகமா? அல்லது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா?

உங்கள் பதிலை சும்மா, காசை சுண்டிப்போட்டுப் பார்த்து எழுதாமல், காரணங்களுடன் எழுதவும்



அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

32 comments:

  1. அப்படி போடு....
    அப்பா இதை தான் எதிர்பார்த்தோம்

    ReplyDelete
  2. திருமண யோகம் உள்ள ஜாதகம். 89 இல் ஆரம்பித்த குரு தசையில் நடந்திருக்கும். புதிர்களுக்கு பதில் எழுதிப் பழக்கம் குறைவாகையால், அடுத்தடுத்த புதிர்களில் அதிகம் எழுத முயற்சிக்கிறேன். நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அய்யா வணக்கம்

    உடல் நலம் தேறி மீண்டும் களத்திற்கு வந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி
    புதிர் போட்டியும் மீண்டும் களத்திற்கு வந்தது கண்டும் மிக மகிழ்ச்சி
    ஜல்லிக்கட்டு மீண்டும்//மீண்டு வந்தால் (வருமா?) வருமே அப்படிப்பட்ட மகிழ்ச்சி

    அம்மணி பிறந்த தேதி 1.9.68

    காரகன் சுக்கிரன் அஸ்தங்கதம் // ஆனால் 4 பரல்கள்

    பாவகத்தின் மீது சனீஸ்வரன், குரு, செவ்வாய், புதன் ஆகிய கிரக பார்வை
    பாவகத்தின் பரல்கள் 26
    பாவகத்தின் மீது பாவக அதிபதி குரு பார்வை // சிறப்பு

    பாவக அதிபதி குரு 5 பரல்களுடன் // செவ்வாய் பார்வை

    பாவக அதிபதி குரு பாவகத்திற்கு 9மிடம் // லக்கினத்திற்கு 3மிடம்
    காரகன் சுக்கிரன் மட்டுமே ஆதரிக்கவில்லை
    காரகன் சுக்கிரன் பாவகத்திற்கு 6மிடம் // லக்கினத்திற்கு 12மிடம்

    எனவே குரு திசையில் செவ்வாய் புத்தியில் அம்மணிக்கு திருமணம் ஆயிற்று.
    அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகம்

    உங்களிடம் தேர்வு எழுதி நீண்ட நாட்கள் ஆனதால் பதட்டம் // நேரம் அதிகம் ஆனது
    நன்றி
    சந்தானம் சேலம்

    ReplyDelete
  4. அன்புள்ள வாத்தியாருக்கு,

    எங்களின் வேண்டுகோளுக்கு செவி கொடுத்து செய்தும் காட்டியதற்கு மிக்க நன்றி. இந்த கேள்வி பதில் புதிர் நிச்சயம் நாங்கள் கற்ற சூத்திரங்களை உறுதி செய்வதற்கு உதவும். மாணவர்கள் வேண்டுவன கொடுப்பதில் வாத்தியார் வள்ளல் என மீண்டும் இந்நிகழ்வு ஒரு உதாரணம். இவ்வாறே என்றும் தொடர வேண்டும் என பல மாணவர்களின் சார்பாக நன்றியுடன் வேண்டுகிறேன்.


    வணக்கம் வாத்தியாரே!

    Quiz 101 க்கான பதில்.

    அம்மணி பிறந்த நேரம் 7 Jun 1968 காலை 7:30

    திருமணம் ஆனது. குரு திசையில். ஆனால் சுகப்படவில்லை.

    மிதுன லக்கினம், துலா ராசி,
    1). 7ம் இடத்திற்கு குரு பார்வையும், 7ம் அதிபதி குருவிற்கு சுக்கிரன் கேந்திரத்தில் (10ல்) அமர்ந்ததால் திருமணம் குரு திசையின் ஆரம்பத்திலேயே (23 வயதிற்குள்) நடை பெற்றது. கோள்சாரமும் அதற்க்கு கை கொடுத்தது.

    2). பொதுவாகவே மிதுன, கன்னி, தனுசு, மீனம் லக்கின காரர்களுக்கு திருமண வாழ்வு அவ்வளவு திருப்திகரமாக இருந்ததில்லை என்பதற்கு இது உதாரண ஜாதகம்.

    3). அம்மணியின் பிறந்த கரணம் விஷ்தி கரணம் அதை மேலும் உறுதி செய்துவிட்டது. விஷ்தி கரணம் தம்பதியினரிடையே ஒற்றுமையின்மையும், பிரிந்து வாழும் சூழ்நிலையும் காட்டுகிறது. அதை 2ம் இடத்தில் குறைவாக உள்ள அஷ்ட வர்க்க பரலும் உறுதி செய்கிறது. 7ம் இடத்திற்கு செவ்வாயின் பார்வையும், சந்திரனுக்கு 8ல் செவ்வாய்(செவ்வாய் தோஷம்) உள்ளதும் கவனிக்க தக்கது.



    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  5. Dear Guruji,

    1. 7th Lord guru is in 9th house from its house.
    2. guru aspects 7th place.
    Definitely there is marriage.
    But Saturn and mars aspecting 7th house further venus in 12th house, there could be various troubles in marriage life.
    As you said earlier, in navamsa saturn in lagna and mars in 7th house this will delay the marriage.
    There could be delay and trouble in marriage but no denial in marriage.

    ReplyDelete
  6. Jupiter 7th lord aspecting 7th place and lagna lord bhuthan also aspecting 7th place.two
    good planets seeing 7th place.and karaga sukran is in ownhouse.so definitely marraige will
    happen..since sukran is surrounded by Fire planets sun and mars.intial delay or some struggle
    will happen before marraige.

    ReplyDelete
  7. Ezhukkudaya Guru 3m veetilirunthu 5 parvayaga 7m edathai parppathal intha jathakikku kandippaga Thirumanam Guru thasaiyil nadanthirukkum.

    ReplyDelete
  8. தெரியவில்லை குரு

    ReplyDelete
  9. 1. ஜாதகி 7 ஜூன் 1968 அன்று காலை 7 மணி 28 நிமிடங்களுக்குப்பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    2ஏழாம் இடத்திற்கு சனியின் பார்வை, செவ்வாயின் பார்வை. இவை திருமணத்தடை ஏற்படுத்தும்.

    3. களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து சூரியனால் அஸ்தங்கதம்.
    4. 6ம் அதிபனான செவ்வாய் சுக்கிரன் சம்பந்தம் பெற்று 12ல் மறைந்து சூரியனாலும் அஸ்தங்கதம்.

    மேற்கண்டவை திருமண பந்தத்திற்கு ஒவ்வாதவை.ஆனால்
    1.குருவின் பார்வை 7ம் இடத்தின் மேல்.
    2. லக்கினாதிபதி புதனின் பார்வையும் 7ம் இடத்தின் மேல்.
    3. குருவின் பார்வை 9ம் இடத்திற்கும் கிடைப்பதால்,

    திருமணம மறுக்கப்படவில்லை என்று முடிவு செய்கிறேன்.
    21 வயதில் துவங்கிய குருதசா சாதகமாக அமைந்தது.
    குரு தசாகுரு புக்தியில் 1991ல் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு.




    ReplyDelete
  10. வணக்கம் ஐயா
    மிக்க மகிழ்ச்சி மீன்டும் புதிர் பகுதி இடம்பெருவது.
    ஜாதகி மிதுன லக்கணம்
    அதிபதி புதன் ராசி துலாம்
    லக்கண அதிபதி லக்கனத்தில் இருப்பது நல்லது.
    1. திருமணம் ஆனவர்.
    2.திருமணம் பிரிவில் முடிந்தது
    காரணம்: 1
    7ம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்கு 9ம் இடமான திரிகோணம் பெற்றுள்ளார். அத்துடன் 2ம் வீட்டு அதிபதி சந்திரனும் திரிகோணம் பெற்று வலுவாக உள்ளார். இந்த அமைப்புகளால் ஜாதகிக்கு திருமணம் நடந்து முடிந்ததை காட்டுகிறது
    காரணம்: 2
    2ம் வீட்டின் மேல் வில்லன் செவ்வாயின் 3ம்பார்வை விழுகிறது. மற்றும் 7ம் வீட்டிற்கும் 8ம் அதிபதி சனி மற்றும் 6ம் அதிபதி செவ்வாயின் பார்வையும் உள்ளது.அத்துடன் சுக்கிரன் 12ல் மறைவு. இதன் காரனமாக மணவாழ்க்கை பிரிவில் முடிந்தது.
    காரணம்: 3
    அயன சயன போகத்தில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் அமர்ந்து அம்மனியின் திருமண வாழ்க்கைக்கு வேட்டு வைத்தார்கள்.

    ReplyDelete
  11. ஜோதிடப் புதிர் 101

    திருமண யோகம் உள்ள ஜாதகம்.

    1. சர்ப தோஷம் உள்ள ஜாதகம்.

    2. குருவின் 5 ஆம் பார்வை 7 ஆம் இடத்தின் மேல்

    3. செவ்வாயின் 8ஆம் பார்வை 7 ஆம் இடத்தின் மேல்(செவ்வாய் பெண்களுக்கு திருமண விஷயத்தில் குருவை போல் செயல்படுவார்)

    4. குரு திசையில் கண்டிப்பாக திருமணம் நடைபெற்று இருக்கும்.

    மு.சாந்தி

    ReplyDelete
  12. வணக்கம் சார். வாழ்கநலமுடன்.......
    மிதுனலக்னம் லக்னாதிபதி புதன் ஆட்சி !
    2ஆம் அதிபதி 5ல்.வலிமை (வர்க்கோத்மம்)
    7ஆம் வீட்டிற்க்கு குரு பார்வை
    திருமணம் நடந்திருக்கும் !!!

    ReplyDelete
  13. வாத்தியார் அய்யாவிற்கு வணக்கம். வழக்கம் போல் ஜோதிடப் புதிர் போட்டி தொடங்கியதிற்கு நன்றி.
    புதிர் எண் 101க்கான அலசல்:
    அம்மணிக்கு திருமணம் 26 வயதில் குரு தசை, புதன் புத்தியில் நடைபெற்றது்

    1. லக்கினாதிபதி புதன் லக்கினத்திலேயே வலுவாக அமர்ந்து களத்திர ஸ்தானத்தை தன் பார்வையில் வைத்துள்ளார்.
    2.களத்திராதிபதி குரு 3ல் அமர்ந்தாலும் தன் 5ம் தனிப்பார்வையால் 7மிடத்தை பார்க்கறார்.
    3.குடும்ப ஸ்தானம் சுபகத்தாரி யோகத்திலும் அதன் அதிபதி சந்திரன் 5லும் அமர்ந்து வலுவாக உள்ளன.
    4.பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிரன் 12ல் மறைந்து பாபக்கிரக கூட்டணியில் வலுவிழந்து விட்டார்.
    5.அம்மணிக்கு 20 வயது வரை ராகு தசை நடந்துள்ளது. அதற்கு பிறகு வந்த குரு தசை, புதன் புத்தியில் 26 வயதில் திருமணம் இனிதே நடந்தேறியது.

    ReplyDelete
  14. Anbunan vathiyaar ayya vanakkam
    (Sorry my system under repair so aim using iPad No Tamil fond)

    Chandran varkothamam,Sani varkothamam ..
    Laknathpathi Pathan ..lakanathil..
    7th house under kuru parvai ..also kuru house..

    After 21year married Surely

    ReplyDelete

  15. kaala thamadhamaga thirumanam nadanthadhu.

    1)
    7 am veetirku SEVVAI,SANI parvai. 7 am adhipathi guruvirkum sevvai parvai thurumana thaamatham

    7 kkuriya guru than veetai parpathal 7 am veedu valuvanathu


    2)
    kalathira karagan sukran rasiyil maraidhalum amsathil natpu petrullaar.
    3)
    navamsathil 7am veetil sevai iruppadhu,adhai sani parvai seivathu kodumai endralum, guru 7 am veetai parthu thirumanathai nadathinar

    4)
    7 am athipathi guru ashtavargathil 26 paral enralum , suyavargathi 5 paral iruppadhal thirumanam ok.

    thanks,
    S.DAYANIDHI, AVIYANUR

    ReplyDelete
  16. MARRIAGE OK. BUT LATE MARRIAGE

    1)
    7 TH HOUSE AFFLICTED BY ASPECTS OF SATURN AND MARSE, MARRIAGE DELAYED

    BUT JUPITOR ASPECTS ITS OWN HOUSE (7 TH HOUSE )MARRAIGE HAD DONE.

    VENUS IS NOT GOOD IN RASI BUT NAVAMSAM, HE IS IN HIS FRIEND"S HOUSE.







    IN NAVAMSAM SATURN IS LAGNA AND MARS IS IN 7 TH HOUSE, MARRIAGE DELAYED

    BUT JUPITOR ASPECTS 7 TH HOUSE MARRIAGE HAD DONE IN GURU DASA

    3)
    7TH LORD JUPITOR GETS 5 BINDHUS IN OWN VARGAM. SO MARRIAGE OK

    THANKS,
    S.DAYANIDHI, AVIYANUR

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்,

    மீண்டும் இந்த புதிரை தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி.
    திருமணம் நடைபெறும். ஏனெனில் 7க்குரிய குருவின் பார்வை 7ல் விழுகிறது. லக்னாதிபதி புதனின் பார்வையும் 7ல் விழுகிறது.
    சனியின் பார்வை விழுந்தாலும். குருபார்க்க கோடி நன்மையல்லவா?
    சுக்கிரன் 12ல் மறைந்து செவ்வாயுடன் இருப்பதால் கணவரை பிரியும் நிலை உருவாகலாம். நவாம்சத்தில் லக்னத்தில் சனீஸ்வரர், இதுவும் ஒரு காரணம். 5க்குரியவனும், களத்திர காரகனுமான சுக்கிரன் மீது சனியின் பார்வையுள்ளது. குழந்தை பாக்கியம் குறைவுதான். குருவின் திசையில் திருமணம் நடந்திருக்கும்.

    வணக்கம் ஐயா
    வ.ம.சூ. அந்தோணி

    ReplyDelete
  18. Respected Sir,

    My answer for our Quiz No.101:

    1. She got married before her age of 30. (Born on 7th June 1968 at 8:00am)

    Reasons:

    1. Seventh house and its authority is not affected as well as Jupiter is aspecting its
    own house as 5th aspect.

    2. Logna lord also is in lagna.

    3. Second house and its authority is not affected.

    4. In Jupiter Dasa marriage had happened.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  19. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    புதிர் 101 க்கான அலசல்:
    திருமணம் மறுக்கப் பெற்ற அவயோக ஜாதகம்!!!
    லக்கினாதிபதி லக்கினத்தில் அமர்வு.வக்கிரம் பெற்றதுடன் மாந்தியுடன் இணைவு.
    7ம் பதி குரு பாதகாதிபதியாகி 7ம் வீட்டை பார்வை செய்கிறார்.6ம் பதி செவ்வாயின் பார்வையால் கெட்டுப் போயுள்ளார்.7ம் வீட்டிற்க்கு சனி, செவ்வாய் பார்வை.
    ராசி அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்றாலும் 12ல் மறைவு. 6ம் பதியுடன் கூட்டு. ராசிக்கு 7ம் பதி செவ்வாய் ராசிக்கு 8ல் அமர்ந்துவிட்டார்.ராசிக்கு 7மிடம் பாப கர்த்தாரி யோகத்தில்.
    ராகு, குரு தசை பலனின்றி 37 வயதிற்க்கு பின் ஆரம்பித்த சனி திசையும் நன்மை தரும் அமைப்பில் இல்லை.
    முடிவு???......திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  20. ஐயா வணக்கம்

    லக்கினாதிபதி ஆட்சி யில் பலமாக உள்ளார்
    2ஆம் அதிபதி கோணத்தில்,
    7ஆம் அதிபதி குரு பகவான் தன் வீட்டை பார்க்கிறார் ,
    அம்சத்திலும் 7 ஆம் இடத்துக்கு குரு பார்வை உள்ளது
    ஆகையால் திருமணம் உண்டு

    சுக்கிரன் மறைவு,
    8,9 க்கு அதிபதி சனி அம்சத்தில் லக்கினத்தில் ,
    அம்சத்தில் 7ல் செவ்வாய், சனி பகவானின் பார்வை
    ஆகையால் தாமத திருமணம்.
    நன்றி ஐயா
    கண்ணன்

    ReplyDelete
  21. Sir,
    Native could get late marriage. But Marriage life s good.
    Lagnathypathy aspects seventh house and Seventh house owner aspects seventh house.

    ReplyDelete
  22. அம்மணிக்கு திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
    -Yes, she is married.

    அதாவது திருமண யோகம் உள்ள ஜாதகமா? அல்லது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா?

    - lagna lord, 7th lord, 4th house (hemmed between benefics), 12 the house lord in 12th house indicates marriage.
    - chevvai dosam with Saturn aspecting combusted Mars with Venus indicates married to an older spouse.
    - Married during Jupiter-Mercury dasa at age of 25-27

    ReplyDelete
  23. வணக்கம்.
    அம்மணிக்கு திருமணம் நடைபெற்றது.
    ஒரு பெண் குழந்தையும் உண்டு.
    1. 2ம் வீட்டு அதிபதி சந்திரன் 5 ம் வீட்டில் திரிகோணத்தில் -2ம் வீடு பலமாக உள்ளது
    2. 7ம் வீட்டு அதிபதி 3 ல் அமர்ந்து 5 ம் பார்வையால் 7 ம்வீட்டை பார்க்கிறார்,மேலும்
    7ம் பார்வையால் 9ம் வீடு பாக்கியஸ்தானத்தைப் பார்க்கிறார்.
    3. 6ம் வீட்டு அதிபதி 12ல் அமர்ந்து 4 ம் பார்வையால் 7ம் வீட்டு அதிபதியையும்,8ம் பார்வையால் 7ம் வீட்டையும் பார்ப்பதால் தடங்கல் எற்படும்.

    ஆகாயத்தில் பறந்து கொண்டு இருக்கும் பொழுது இதை எழுதுகிறேன்.
    மன்னிக்கவும் தவறு இருந்தால்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்



    ReplyDelete
  24. Vanakkam iyya,

    Puthir poti meendum thodangiyatharku mikka magizhchi...

    nadigar Ajith vasanathil la sollanum endral "vaathiyar is back" :-)

    Puthirukaana vidai..

    Mithuna lagna jaathagi.. laganathipathi budhan lagnathil plus villan maandi

    Thirumanathirku 7 aam idam.... 7&10 athipathi guru bhagavan...

    Guru bhagavan 3aam idathil amarnthu (7 aam veetirku 9il) 7 aam idathaiyum, bhagya sthanathayum, laaba sthanathayum paarkirar

    Guru bhagavan mel 6aam athipathi sevai yin paarvaiyum ullathu... 7 aam idathirku sevai+sani+guru+budhan paarvai ullathu...

    Sani bhagavan intha jathagathirku 8&9aam athipathi aavar..

    Thirumana vayathil athavathu ammaniku 22 vayathil irundhu guru dasa aarambam... Guru dasa vil thirumanam nadai petru irukum... guru dasa sani or budhan buthiyil nadai petru irukum..

    Nandri,
    Bala

    ReplyDelete
  25. Marriage is sure, bcoz, Guru is the seventh house lord and again lord for marriage for girls, so his 5th aspect on 7th house makes it flourish.

    ReplyDelete
  26. Marriage is sure, bcoz, Guru is the seventh house lord and again lord for marriage for girls, so his 5th aspect on 7th house makes it flourish.

    ReplyDelete
  27. Dear sir,

    Yes she is married and the reasons are as below
    1.7th lord Jupiter is in 9th place from 7th place which is the house of husband.
    2.Lagna lord bhudan is in its own place and keeping a view on 7th place
    3.Second place lord moon is sitting in 5 th place & this may be love marriage.
    4.12 th place lord also sitting in 12 th place and gives the benefit of ayna syna benefit.

    ReplyDelete
  28. Ayya,

    Marriage would have happened and married life also will be good The following are reasons:
    a. Guru is looking 7th house by 5th look
    b. Neechbanga Raja yoga is there in this horoscope. 12th house owner(Sukran) is sitting in 12th house along with 6th house owner(Chevvai) and 3rd house owner(Suriyan)
    c. Suriyan is not combusting Sukran. Because Sukran is traversing 19th degree and Suriyan is traversing in 22nd degree.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  29. தாமதமாக திருமணம் நடைபெறும்

    பாக்யாதிபதி சனி வர்கோத்தமம்

    குடும்பாதிபதி சந்திரன் வர்கோத்தமம்

    எழாம் அதிபதி குரு எழாம் வீட்டை தன் பார்வையில் வைத்து உள்ளார் நவாம்சத்திலும் குரு எழாம் வீட்டை தன் பார்வையில் வைத்து உள்ளார்

    ReplyDelete
  30. அய்யா ,

    மிதுன லக்னம் !. லக்னத்தில் புதன் ஆட்சி பெற்று 7-ம் இடத்தை பார்வை இடுகிறார் !. 3-ல் குரு இருந்து 5-ம் பார்வை ஆக 7-ம் இடத்தை பார்கிறார் !. அதனால் நிச்சயம் திருமணம் உண்டு !. ஆனால் , சனியும் செவ்வாயும் 10-ம் பார்வை ஆகவும், 8-ம் பார்வை ஆகவும் 7-ம் இடத்தை பார்ப்பதால் காதல் அல்லது கலப்பு திருமணம் தாமதமாக நடந்திருக்கும். அப்படி நடந்து இருந்தாலும் அந்த திருமண வாழ்க்கையில் சந்தோஷம் நீடிக்காது. காரணம் குரு சனி செவ்வாய் பார்வை 7-ம் இடத்துக்கு கிடைபதாலும் சுக்ரன் சஷ்டஷ்டகத்தில் இருபதாலும் !.

    ReplyDelete
  31. Ayya vanakkam .inghu irandu birth date 1/9/68 & 7/6/68 m eduthullarkal iru nanbarkalin result m athigha verupadu irukkatha. thangalin karuthai arinthukolla virumpukiren. anpudan kittuswamy

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com