மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.5.15

Half Quiz; பாதிப் புதிர்: அலசலை நீங்கள் செய்யுங்கள். கசக்கிப் பிழிந்து காயப் போடுவதை நான் செய்கிறேன்


Half Quiz; பாதிப் புதிர்: அலசலை நீங்கள் செய்யுங்கள். கசக்கிப் பிழிந்து காயப் போடுவதை நான் செய்கிறேன்

வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) அவர்கள் நல்ல யோசனை ஒன்றைச் சொல்லியிருந்தார். அவருடைய யோசனை  கீழே உள்ளது. அதைப் படித்துப் பாருங்கள். அவருக்கும் என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்!
---------------------------------------------------------------------------------
Blogger kmr.krishnan said...
சரியான பதில் அளித்தவர்கள் பட்டியலில் என் பெயர் இருப்பதில் மகிழ்ச்சி ஐயா!
மிக்க நன்றி ஐயா!
புதிர் பாடத்தை நிறுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நேற்று வெள்ளிக்கிழமை. சாதாரணமாக நீங்கள் முருகன் பாடலைத்தான் வெளியிடுவீர்கள். எனவே பலரும் அதை அனுமானித்தும், மேலும் இரண்டு நாட்களாக பதிவு இலாததாலும் பலரும் புதிரைப் பார்த்து இருக்க மாட்டார்கள்.அதனால் பங்கு பெற்ற‌வர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.
மேலும் போட்டியில் தவறான பதில் கொடுப்பதை அவமானமாக நினைப்பவர்கள் பலரும் இருக்கலாம். எனவே ஏற்கனவே நான் கூறியதைப் போல ஜாதகருக்கு நேர்ந்ததை நீங்களே கூறி, எதனால் அப்படி நேர்ந்தது
என்று கேட்கலாம்.அதில் சிறந்த பதில் என்றெல்லாம் கூறாமல் உங்கள் அலசலைக் கொடுத்து அதனுடன் 'உங்கள் பதிலை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறி விடலாம். இதன் மூலம் பலபேரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது என் ஆலோசனைதான். முடிவு உங்கள் கையில்.
kmrk1949@gmail.com
Saturday, May 09, 2015 6:41:00 AM
----------------------------------------------------------
ஆகவே இனி புதிர்கள் வேறு விதமாக வரும். ஜாதகரின் நிலைப் பாட்டை நான் கூறிவிடுவேன். ஜாதகப்படி என்ன காரணமாக இருக்கலாம் என்பதை அவரவர் தங்களுக்குத் தோன்றும் விதத்தில் எழுதலாம். அடுத்த நாள் ஜாதகப்படி உண்மையான காரணம் என்ன என்பதை நான் எழுதுகிறேன்.

நீங்கள் உங்கள் பதிலுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்

பலபேரும் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டாக்கும் நோக்கில் இந்த மாற்றம்!

என்ன சரிதானே?

உங்கள் கருத்தை எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

  1. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் ..
    மிக அருமையான யோசனை...எப்படியோ புதிர் தொடர வேண்டும். அப்போதுதான் என் போன்றவர்கள் ஈடுபாடுடன் படிக்க முடியும் ..நன்றி KMRK
    வாத்தியார் அய்யாவுக்கு நன்று...!! நன்றி நன்றி

    ReplyDelete
  2. sir..

    its a nice idea.. but i would suggest instead of posting the answer you can give a clue to find an answer.

    like in previous quiz you mentioned the native became widow in rahu dasha. so you may pl ask " rahu dasaiyil avarukku yerpatta thunbam ennavaga irukkalam?".

    thanks
    sree

    ReplyDelete
  3. Dear Sir

    As a regular reader of your Quiz , it is my earnest view not to stop the wonderful way of getting analysis. Yes as one of your old student Mr Ramakrishnan viewed, students like me who are in the early stage of Jothida analysis, are able to at least get an idea as to how to do analysis-latter on we will participate-a graet series indeed-H sankar Kalyan-Maharashtra

    ReplyDelete
  4. வாருங்கள் ஐயா வாருங்கள்

    இன்று புதிய தாக உள்ளதே!

    என்ன ஒரு ஆச்சரியம்

    மாலை வேலை பாடம் ஒன்று வலையில் வந்து உள்ளதே ஐயா.

    நன்றி! மிக்க நன்றி!

    உணர்ச்சி வசபடாமல் இருக்க ஒரு வழி வகை கூறுங்களேன் ஐயா!.

    தங்களுடைய புதிய பாட தொடக்கத்திற்கு ஒரு வணக்கம்.

    ஐயா அடியேன் வசிக்கும் கத்தாரில் மட்டும் (இன்று தான் கவனித்தேன் ) 222 நபர்கள் (12:10 AM. இந்திய நேரம் ) வருகை தந்ததை
    மிக்க மகிழ்ச்சி .

    ReplyDelete
  5. வணக்கம் குரு,

    இந்த புதிய முறை நன்றாக இருக்குமென நானும் நம்புகிறேன். வரவேற்கிறேன்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  6. Respected Sir,

    Happy morning. Hope all is well.

    I wish to draw some valid points about Quiz post:

    1. Our senior prabhu's suggestion is very good.

    2. It seems advanced level in our class but any one can participate whether our answer is correct or not.

    3. U can also conduct "Mock Test".

    4. Our test must stimulate to find our vedic knowledge.

    5. U can post our classroom students horoscope also but without indicating name.

    Have a nice day.

    With kind regards,
    Ravichandran M

    ReplyDelete
  7. சரி தான். நான் தவறாக எழுதிவிடுவோமோ, கணிப்பு சரியாக இறுக்குமா என்று பதில அளிப்பதில்லை. ஆனால் மனதில் கணித்து கொண்டு உங்கள் பதிலுடன் ஒப்பிட்டுக்கொள்வேண். புதிர் மிகவும் அவசியம், புதிர் பாடத்தை நிறுத்த வேண்டாம், மிகவும் பயன் உள்ளது.
    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  8. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    இன்றைய தங்களின் பதிவு ஒரு பாடலை நினைவு படுத்தியது:
    ” நீ என்னென்ன செய்தாலும் புதுமை, எனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை”
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா!,

    இந்த புதிய "மாத்தி யோசி" முயற்சியை வரவேற்கிறேன். உங்களின் உயர்ந்த குறிக்கோளே 100 பேராவது பயனடைந்து ஜோதிடராவதுதான்.
    முருகனின் அருளால் தொடரட்டும் உங்களின் மகத்தான பணியும்,புதிர் பாடங்களும். நன்றி.

    ReplyDelete
  10. மிகவும் அருமையான யோசனை ஐயா

    ReplyDelete
  11. என்னுடைய ஆலோசனையை முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட ஐயாவுக்கும்,வரவேற்ற‌ நமது மாண்வ்ர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு திறந்த புத்தகத் தேர்வு போல. புத்தகத்தை ந்ன்றாகப் படித்த்வ்ர்களுக்கே விடை எங்கே உள்ளது என்று தெரியும்.

    ஒவ்வொரு வெள்ளிகிழமையும் புதிரை ஐயா வெளியிடலாம் அதனால் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கிடைக்கும். பதில் எழுத அதிக‌ நேரம் கிடைக்கும்.திங்கள் காலையில் ஐயாவின் அலசல் வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

    முருகன் பாடலையும் அன்று வெளியிடலாம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com