மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.5.15

Quiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது!

Quiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது!

புதிர் எண் 83ற்கான விடை

9.5.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், ஒரு ஜாதகத்தைக் கொடுத்து மூன்று கேள்விகள் கேட்டிருந்தேன். கேட்கப் பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகரின் திருமண வாழ்க்கை
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை
3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்

ஜாதகத்தை அலசி  உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்றிருந்தேன்.


சரியான பதில்:

அது ஒரு அம்மணியின் ஜாதகம். திருமணமான 3 மாத காலங்களிலேயே விதவையானவர். ஒரு கடும் விபத்தில் கணவர் இறந்துவிட்டார். அத்துடன் ஜாதகியின் மண வாழ்க்கை முடிந்து விட்டது. அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

1. கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி 7ல் ஆனாலும் ராகுவின் பிடியில்.

2. கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் 8ல். அத்துடன்
எட்டாம் அதிபதி சனீஷ்வரனின் பார்வையில். சனீஷ்வரனின்
பார்வையால் யோககாரகன் செல்லாக் காசாகிவிட்டார். அத்துடன்
தனக்கே உரிய மாங்கல்ய தோஷத்தையும் உண்டாக்கினார்.

3. களத்திரகாரகன் சுக்கிரன் 6ம் இடத்தில் போய் உட்கார்ந்ததோடு,
பாபகர்த்தாரி யோகத்திலும் சிக்கிக் கொண்டு உள்ளார். ஒரு பக்கம்
சூரியன் மறுபக்கம் ராகு. அவரும் செல்லாக் காசாகிவிட்டார்.

4. செவ்வாய், சனீ ஆகியவர்களின் சேர்க்கை அல்லது பரஸ்பர பார்வை கடுமையானது. அதுவும் திருமண வாழ்க்கைக்கு சம்பந்தப்படும்போது சோகத்தை உண்டாக்கக் கூடியது.

22 வயதில் திருமணமான ஜாதகி அடுத்து வந்த 3 மாத காலத்திற்
குள்ளாகவே கணவனைப் பறிகொடுத்துவிட்டு, தனிமைப் பட்டுப்
போனார். மறுமணம் செய்து கொள்ளாததால் குடும்ப வாழ்க்கையும்
இல்லை. குழந்தைகளும் இல்லை

இந்த அலங்கோலங்கள் எல்லாம் 7ல் அமர்ந்த ராகு திசை முடியும்போது நடந்தது.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 12 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 5 பேர்கள் மட்டும் விடையை ஒட்டிய பதிலைக் கொடுத்துள்ளார்கள்
பலனை ஒட்டி எழுதியவர்களைக் கீழே சேர்த்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

போட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே! போட்டியை நிறுத்திவிடலாமா? உங்கள் கருத்தை எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------
1
/////Blogger kmr.krishnan said...
24 நவம்பர் 1971 இரவு 10மணி 54 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர்.ஜாதகர் என்று கொடுக்கப்பட்டுள்ளதே தவிர ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை.
1. திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லாமல் குடும்பம், குழந்தை பாக்கியம் பற்றிக் கேட்டுள்ளதால் திருமணம் குருதசா குருபுக்தியில் நடந்தது என்று எடுத்துக் கொள்கிறேன். ஏழாம் அதிபனனான சனைச்சரனுக்கு கடகத்தின் யோககாரகனான செவ்வேளின் பார்வை அதைப்போலவே சனைச்சரனின் பார்வை செவ்வாய்க்கு.செவ்வாய் சனைச்சரன் ஜன்ம பகைவர்கள். மேலும் சனைச்ச்ரன் வக்கிரமாகியுள்ளார். ஏழாம் இடம் ராகுவாலும் செவ்வாயாலும் சூழப்பட்டுள்ளது.எனவே திருமண வாழ்க்கை முழுமை அடையவில்லை. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவில்லை.ஏழாம் இடத்திற்கு 17 பரல் மட்டுமே.
2.குடும்ப வாழ்க்கை திருமண வாழ்க்கையுடன் ஒட்டியதால் அதுவும் அமையவில்லை. லக்கினாதிபதி சந்திரன் ராகுவுடன் சம்பந்தப்பட்டதால் எப்போதும் ஏதாவது மனக்கவலையில் இருப்பார்.நான்காம் அதிபன் ஆறில் மறைந்ததால் சிறிய வயதிலேயே தாயைப்பிரிந்து குடும்பம் இல்லாமல் சிரமம். திருமணத்திகுப்பின்னரும் கணவரைப் பிரிந்து சுவையில்லாத குடும்ப‌ வாழ்க்கை.
3,ஐந்தாம் அதிபதி எட்டில், ஐந்தாம் இடத்தில் சூரியன், குரு,. காரகன் பாவத்தில். ஐந்தாம் இடத்திற்கு சனிபார்வை.எனவே குழந்தை பாக்கியம் இல்லை.
லக்கினத்தில் கேது இருந்தாலும் பாக்கிய ஸ்தானதிபதி குருவின் பார்வை லக்கினத்திற்கு, யோககாரகன் செவ்வாய் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஆகியவை குறைந்த பலனுடனாவது திருமண,குடும்ப‌ வாழ்க்கையைக் கொடுத்தது.ஆனால் குழந்தை இல்லை.
Friday, May 08, 2015 2:05:00 PM ////
---------------------------------------
2
/////Blogger venkatesh r said...
கடக லக்கினம், மகர ராசி ஜாதகர். லக்னாதிபதி சந்திரன் 7ல் ராகுவுடன் கை கோர்த்து பாபகர்த்தாரியில் வலுவிழந்துள்ளார்.
ஜாதகரின் திருமண வாழ்க்கை : களத்திராதிபதி சனி 11ல் வக்கிரகதியில் உள்ளார். அவரின் மேல் குரு மற்றும் சூரியனின் பார்வை உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் 6ல் மறைவு. கடக ராசிக்கு யோகாதிபதி செவ்வாயும் 8ல் மறைந்து, 8ம் அதிபதி சனியின் பார்வையில் வலுவிழந்து விட்டார். 7ல் ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்.மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு தாமதமாக‌ குரு தசையில் சுக்கிர புத்தி (அ) சூரிய புத்தியில் 32 வயதிற்கு மேல் திருமணம் நடந்தது.
ஜாதகரின் குடும்ப வாழ்க்கை : ராகு சந்திரனின் கூட்டணியால் தன்முனைப்பு (EGO) உள்ள ஜாதகர். 2ம் அதிபதி சூரியன் குருவுடன் சேர்ந்து 5ல் உள்ளதால் நல்ல குடும்பத்தில் பிறந்த துணைவர் (அ) துணைவி கிடைத்திருப்பார். 12ம் அதிபதி புதன் சுகாதிபதி சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து 6ல் மறைவு. 12ம் பாவம் பாபகர்த்தாரியில் மாட்டிக் கொண்டு விட்டது. அதனால் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை. பிரிந்து வாழும் சூழ்நிலை.
ஜாதகரின் புத்திர பாக்கியம் : புத்திரகாரகன் குரு 5ம் பாவத்திலேயே அமர்ந்து "பாவ நாசம்" செய்துவிட்டார். அவருடன் கூட்டாக உள்ள சூரியனும், 7லுள்ள வக்கிர சனியின் பார்வையும் அதற்கு பக்க வாத்தியமாக மாறி புத்திர பாவம் வலு இழந்து இருக்கிறது. 5ம் அதிபதி செவ்வாயும் லக்கினத்திற்கு 8ல் மறைந்து வலுவற்ற நிலையில் உள்ளதால், ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.
மொத்தத்தில் ஜாதகரின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கைதான்.
வழக்கம் போல் வாத்தியாரின் மேலான அலசலில் விடையை தெரிந்து கொள்ள ஆசை. Over to Vaathiyaar!
Friday, May 08, 2015 2:17:00 PM //////
---------------------------------------------
3
/////Blogger Ravichandran said...
Ayya,
DOB: 24-Nov-1971, 22:00:00
1. He would have got married, but marriage life is not good. Wither would have got divorced or separated or other person died. Reason is Shani and Chevvai is looking each other by their look. Shani is looking is Chevvai by 10th look. Chevvai is looking Shani by 4th look.
2. Family life is good. He would have born in good family. Because Sun(second house owner) sitting in 5th house with Guru. Second house owner sitting in Poorva Puniaya house.
3. Kids would be difficuly, because 5th house aspected by Shani.
Your Student,
Trichy Ravi
Friday, May 08, 2015 3:14:00 PM//////
------------------------------------------------
4
//////Blogger slmsanuma said...
Quiz No. 83 dated.8.5.2015
Date of Birth 24.11.1971
Place of Birth : Chennai (Assumed) 80.15 E 13.4 N
Time of birth 10.54.30 PM
1. ஜாதகரின் திருமண வாழ்க்கை
Kadaka Laknam, Magara Rasi.
Though Karagan Sukkiarn has 4 Bindus but associated with Budhan and also in Bapakarthari yogam. 
Bhavaga athipathi Saneeswaran has Suriyan, Sevvai and Guru Parvai. Retrogated. But at 11th place to lakna with 4 Bindus.
Bhavagam has 17 Bindus and the Laknathipati Chandran is with Raghu in this 7th place with the Kethu Parvai.
Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
Kargan Sukkiran is at 12th place to the Bhavagam and Bhavaga athipathi Saneeswaran is at 5th place to the Bhavagam at Trikonam but retrograte. 
Sevvai thosam is in this Horoscope.
Due to the above conditions this native did not get married.
Your words
பள்ளிக்குப் போவதுதான் முதல் பாக்கியம். படித்துப் பட்டம் வாங்குவது இரண்டாவது விஷயம். பள்ளிக்கே போகவில்லை எனும்போது பட்டம் பெறாததைக் குறை சொல்வதில் பயனில்லை. திருமணம் இல்லை. குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் பற்றி சொல்வதில் பயனில்லை.
However let us analyse the other two items also.
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை
Kargan Guru has 5 Bindhus but with retrogrative Saneeswaran Parvai.
Bhavaga athipathi Suriyan has 6 bindus and associated with Guru but has retrogrative Saneeswaran Parvai.
2nd Bavagam has 31 Bindus but has the Sevvai parvai.
Karagan is at 4 (kendram) to the Bavagam and Bhavaga athipathi Suriyan is at 4 (kendram) to the Bavagam.
Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
Due to the above the native’s family life is not happy.
3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்
Kargan Guru has 5 Bindhus but with retrogrative Saneeswaran Parvai.
Bhavaga athipathi Suriyan has 6 bindus and associated with Guru but has retrogrative Saneeswaran Parvai.
5nd Bavagam has 29 Bindus but has the retrogrative Saneeswaran Parvai and Suriyan Guru association is in this 5th house.
Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
Karagan is at the 5th Bavagam itself and Bhavaga athipathi Sevvai is at 4 (kendram) to the Bavagam.
As per the above conditions, the native has not children bakkiyam.
Saturday, May 09, 2015 12:57:00 AM /////
----------------------------------------
5
//////Blogger Siva Radjane said...
1.ஜாததகரின் திருமண வாழ்க்கை?
ஜாதகி ஒரு பெண்.ஜாதகி திருமணம் ஆனவர்.ஜாதகியின் 27 ம் வயதில் குரு’திசை சனி’புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.
7 ம் அதிபன் சனிக்கு குரு’வின் பார்வை.2 ம் அதிபன் சூரியன் குரு’வுடன் சேர்க்கை.2 ம் அதிபனும் 7 ம் அதிபனும் சமசப்தம பார்வை.மேலும் சந்திரனுக்கு 7 ம் இடத்திலும் ,2 ம் அதிபன் சனி’க்கும் குரு’வின் பார்வை உள்ளதால் ஜாதகி நிச்சயம் திருமணம் ஆனவர்.
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை?
ஜாதகியின் குடும்ப வாழ்க்கை மகிழ்சியற்றதாய் இருந்திருக்கும். ஜாதகி கணவரை பிரிந்து விவாகரத்தானவரானவர் (அ) விதவையாகி மறுமணம் புரிந்தவராய் இருப்பார்.
7 ம் அதிபன் சனி’ வக்கிரம். அதற்கு செவ்வாய் சூரியன் பார்வை.7 ல் ராகு. 2 ல் செவ்வாயின் பார்வை. 2ம் அதிபன் சூரியனுக்கு 8 ம் அதிபன் சனியின் பார்வை.மாங்கல்ய ஸ்தானமான 8 ல் செவ்வாய்,அதற்கு சனியின் பார்வை.
சந்திரனுக்கு 2ல் செவ்வாய் அதற்கு சனியின் பார்வை,7ல் சனியின் பார்வை.சந்திரனுக்கு 8 ம் அதிபன் சூரியனுக்கு ச்னி’யின் நேர் பார்வை.
களஸ்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்திற்கு 6 ல்,சந்திரனுக்கு 12 ல் மறைவு. ஆகவே ஜாதகி கணவனை இழந்தவர். 7 ம் அதிபன் சனி’ 11 ல் இருந்து குரு’ பார்வை இருப்பதால் ஜாதகி மறுமணம் ஆனவராய் இருப்பார்.
3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்?
ஜாதகிக்கு குழந்தை பாக்கியன் குறைவே.ஜாதகிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கும். ஆனால் அக் குழந்தைக்கு ஆயுள் குறைவே.
5 ம் அதிபன் ‘செவ்வாய்’ 8 ல் மறைவு.அதற்கு 8 ம் அதிபன் சனி’யின் வக்கிர பார்வை.5 ல் சூரியன்,அதற்கு சனி’யின் பார்வை. 5 ல் உள்ள புத்திரகாரகன் குரு அம்சத்தில் நீசம்.
சந்திரனுக்கு 5 ல் சனி.அதற்கு செவ்வாயின் பார்வை.8 ம் அதிபன் சூரியன் பார்வை.சந்திரனுக்கு 5ம் அதிபன் சுக்கிரன் சந்திரனுக்கு 12ல் மறைவு.5 ல் விரையாதிபதி குருவின் பார்வை. ஆகவே இந்த ஜாதகிக்கு புத்திரதோஷம்.
குழந்தை பிறந்திருந்தாலும் அது நீண்ட நாள் வாழும் பாக்கியனம் இல்லை.
G.Sivarajan
Pondicherry.
Saturday, May 09, 2015 3:58:00 AM ///////
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

 1. சரியான பதில் அளித்தவர்கள் பட்டியலில் என் பெயர் இருப்பதில் மகிழ்ச்சி ஐயா!
  மிக்க நன்றி ஐயா!

  புதிர் பாடத்தை நிறுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். நேற்று வெள்ளிக்கிழமை. சாதாரணமாக நீங்கள் முருகன் பாடலைத்தான் வெளியிடுவீர்கள். எனவே பலரும் அதை அனுமானித்தும், மேலும் இரண்டு நாட்களாக பதிவு இலாததாலும் பலரும் புதிரைப் பார்த்து இருக்க மாட்டார்கள்.அதனால் பங்கு பெற்ற‌வர் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.

  மேலும் போட்டியில் தவறான பதில் கொடுப்பதை அவமானமாக நினைப்பவர்கள் பலரும் இருக்கலாம். எனவே ஏற்கனவே நான் கூறியதைப் போல ஜாதகருக்கு நேர்ந்ததை நீங்களே கூறி, எதனால் அப்படி நேர்ந்தது என்று கேட்கலாம்.அதில் சிறந்த பதில் என்றெல்லாம் கூறாமல் உங்கள் அலசலைக் கொடுத்து அதனுடன் 'உங்கள் பதிலை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறி விடலாம். இதன் மூலம் பலபேரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது என் ஆலோசனைதான். முடிவு உங்கள் கையில்.
  kmrk1949@gmail.com

  ReplyDelete
 2. i was partly correct. sir i have a few question? From last few quiz lessons you have mentioned rahu in 7th or 8th house mostly ends up in divorce or widowhood esp during rahu dasha. is this inevitable?

  ReplyDelete
 3. Dear sir
  Your question
  போட்டியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறதே!
  போட்டியை நிறுத்திவிடலாமா?
  உங்கள் கருத்தை எழுதுங்கள்!
  This causes to me as your heading மின்னலுடன் இடியும் வந்தது!
  Please refer the time of answering of your two students
  //////Blogger slmsanuma said...
  Quiz No. 83 dated.8.5.2015
  Saturday, May 09, 2015 12:57:00 AM /////
  Another student after the above
  //////Blogger Siva Radjane said...
  Saturday, May 09, 2015 3:58:00 AM ///////
  We are searching your blog 24 hours around the clock.
  Initially I donot know anything about astrology and latter on the readings from your blog I got interest in astrology and I learnt from your blog regularly for the past morethan two years and you may find that for the last 7 to 8 Quiz I am one of the participant and successful one also. This is the success of your greatest service and not mine. You are a pioneer in bringing the astrology science to next generation. Please don’t think to stop any of your work which is nutrition to all of your students like me.
  Don’t think about the absentees who will always be in large in number
  Please think about the sincere students who will always be small in number
  Please continue your service for those like me

  ReplyDelete
 4. Dear sir,

  My sincere request please do not stop the lesson as we are learning lot from the lessons and I understood "The mutual aspect in between mars & Saturn is danger Please clear my doubt is - "if one is looking other one but other one is not looking first one" Please clear my doubt-

  ReplyDelete
 5. ஐயா..வணக்கம்..

  தங்களின் வலைதளத்தை படித்த பிறகே எனக்கு ஜோதிடத்தில் முழு ஆர்வம் ஏற்பட்டது.. அதன் பிறகே இப்பொழுது நான் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தொலை தூரக்கல்வியில் M.A. ஜோதிடவியல் படித்து வருகிறேன். தங்களின் QUIZ என்னைப் போன்றவருக்கு நல்ல பயிற்சியாக உள்ளது.. நிறுத்த வேண்டாம் தொடருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
  போட்டியாளர்கள் குறைவதற்கு காரணம், தாங்கள் குறிப்பிட்ட ஒரே கிழமையில் நடத்தினால் பலரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. என்னால் கூட தினந்தோறும் தங்களின் பக்கத்திற்கு வரமுடியாத போதும் புதன் கிழமை கண்டிப்பாக வந்து எட்டிப்பார்த்து விடுவேன்.அது போலத்தான் சிலரின் வருகையும் இருக்கும் என நினைக்கிறேன். முன்பு கண்டிப்பாக புதன் கிழமையில் போட்டி இருக்கும். கடந்த சில மாதங்களாக கிழமைகள் மாறி மாறி வருவதாலேயே எண்ணிக்கை குறைவாக உள்ளதாக எண்ணுகிறேன்.
  தவறாக எண்ண வேண்டாம்.. உங்களின் வேலை பளு எங்களுக்கு தெரியும். இருந்தாலும் இதுவே காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்..

  நன்றியுடன்

  G.சிவராஜன்
  (பாண்டிச்சேரி)

  ReplyDelete
 6. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்

  வெளியூர் சென்றதால் மிக தாமதமாக் பதிவை பார்க்க நேர்ந்தது போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை ..
  புதிர் போட்டியை நிறுத்தினால் நாங்கள் எங்களின் திறனை வளர்த்து கொள்வது கடினம் ???
  ஒரு மாணவர் வந்தாலும் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் ஆகவே தயவு செய்து புதிர் போட்டியை ... நானும் ..சக மாணவர்கள் சார்பாக தொடர்ந்து நடத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன் ..

  ReplyDelete
 7. திருமணம் பற்றிய புதிர்களை விட்டு
  திரும்பி பாருங்கள்..

  கடன் பற்றி எழுதுங்கள்
  கேள்வி கேளுங்கள்..

  கட்டாயம் பங்களிப்பு
  கணிசமாக அதிகரிக்கும்..

  மணவாழ்க்கை பலருக்கும்
  மனக்கசப்பை தான் தருகிறது..

  வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  வகைக்கு ஒன்றாக உருவாகிறது

  திரும்பி பாருங்கள்
  திருப்பி போடுங்கள்

  ReplyDelete
 8. வணக்கம் வாத்தியாருக்கு

  வேண்டாம்! வேண்டாம்!
  நிறுத்த வேண்டாம்.

  கேள்வி பதில் பகுதியை நிறுத்த வேண்டாம் ஆசானே.

  தாங்கள் நினைத்து கொண்டு உள்ளீர்கள் பரிட்சையில் பங்கு பெருவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என

  ஆனால்,


  உண்மை அதுவல்ல! அல்ல!! அல்லவே அல்ல!!!

  எமக்கு தெரிந்த மட்டும் அண்ணாச்சிகள் நிறைய ஆள்கள் அதுவும் நிறைய நாட்டில் இருந்து கொண்டு தேர்வு எழுதுகின்றார்கள் ஆனால், விடை தாளை தங்களுக்கு (வாத்தியாருக்கு) அனுப்புவது இல்லை.

  நிபுணத்துவம் இன்னும் வரவில்லை அதுதான் காரணம்.

  மனசாட்சியின் படி சுயமாக கேள்வி பதில்களை திருத்தி கொள்கின்றோம்.

  மறுநாள் வரும் அனைவரின் பதில்களையும் பார்த்து .

  முக்கியமாக தங்களுடைய பதிலை கண்டும் தான்.

  சுருக்கமாக கூறுவது என்றால் தன்மேல் உள்ள ஒரு அவநம்பிக்கை தான் என்று வைத்து கொள்ளுங்களேன் ஐயா.

  எங்களை போன்று எத்தனை நபர்கள் இருப்பார்களோ அது உண்மைக்கு தான் தெரியும்.


  பழைய பாடங்களை படிப்பவர்களின் எண்ணிக்கையும் என்னவென்று தங்களுக்கு தெரியும் அல்லவா.

  இறுதி முடிவு தங்களுடைய கையில் ஆசானே.

  வணக்கம். வந்தனம். நமஸ்காரம். நமஸ்தே, நன்னி. ஷுக்ரன். தண்யவாடமுழு. தண்யவாட.
  தேங் யு .

  ReplyDelete
 9. ஐயா என்னைப்போல் ஏகலைவன் கள் ஜோதிடம் கற்று க்கொண்டு இருப்பது உங்கள் மூலம்தான் .குறிப்பாக கேள்வி யை விட மறுநாள் வரவரப்போகும் உங்கள் விளக்கத்திற்கான காத்திருக்கும் 1000 கணக்கான மாணவர் களில் நானும் ஒருவன் நன்றி ஐயா

  ReplyDelete
 10. sir

  pl open a forum where in we( students )can discuss the good and bad aspects of a well known celebrity's horoscope as well as your astrology quiz lessons. Kmr sir has mentioned that there is no thumb rule in astrology in last quiz. i replied for that post and its not seen in the comments page. i kindly request you to value our time and opinion.

  thank you
  sree

  ReplyDelete
 11. Ayya kalai vanakkam...palarukku...ithu..payan tharakudiya pathivu...nirutha vendam...thodarnthu pathividavum ayya Nandri...

  ReplyDelete
 12. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
  புதிர் போட்டியை நிறுத்தி விட வேண்டாம் என தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம்.
  சில காரணங்களால் பல அன்பர்கள் கலந்து கொள்ள முடியாது போயிருக்கலாமல்லவா. புதிர் போட்டியை கடந்த புதன் கிழமை வரை எதிர்பார்த்து மற்றும் கடந்த இரண்டு நாட்களாக வெளியூர் பயணம் காரணமாக கலந்து கொள்ள முடியாமல் ஆகிவிட்டது.வருந்துகின்றோம்.
  தங்களின் எழுத்துக்களை தங்களின் சுவை மாறாத தடத்தில் பயணித்து பலரும் பயனுறுவதால் இந்தப் பணி தொடர பழநியப்பன் அருள் புரிய வேண்டும் என விரும்புகின்றோம்.
  நன்றியுடன்
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 13. அய்யா அவர்களுக்கு,
  ஒரு புதிரை கொடுத்து கண்டுபிடி என சொல்லும் முறையிலேயே ஆர்வம் அதிகமாக இருக்கும் என்பது சுவையான விஷயம்.
  ஒவ்வொரு பாவத்திற்க்கும் அலசல்களை விரிவாக்கலாமே.
  நன்றியுடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com