மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.5.15

கண்ணான கண்ணனுக்கு அவசரமா?


Cover page of the book (Wrapper)

கண்ணான கண்ணனுக்கு அவசரமா?

கண்ணான கண்ணனுக்கு அவசரமா 
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா 
-கவியரசர் கண்ணதாசன்

வாத்தியாரின் ஜோதிட நூல் அச்சில் உள்ளது. அச்சில் பல நிலைகள்
உள்ளன. முதலில் தட்டச்சுவது, பிறகு பக்கம் சேர்ப்பது, பிழை திருத்தம்,
அச்சிடல், பைண்டிங் என்று பல நிலைகள் உள்ளன.

நான் இதுவரை 11 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளதால் அச்சிடும் சிரமங்கள் எனக்கு நன்கு தெரியும்.

நாம் கணினியில் எழுதும் எழுத்துருக்களும் அச்சகங்களில் உள்ள எழுத்துருக்களும் ஒன்றுக்கொன்று முரணானவை

நமக்கு unicode Fonts
அவர்களுக்கு Senthamiz  அல்லது Vanavil   DTP எழுத்துருக்கள்

ஒன்றுக்கொன்று உதவாது. நான் அப்படியே எனது கணினியில் உள்ளதை எடுத்துக் கொடுத்தாலும், அவர்கள் அதைப் பார்த்துப் புதிதாக தட்டச்சியாக
வேண்டும்.

வெள்ளைக்காரனும் தமிழ்ப் பெண்ணும் கல்யாணம் செய்து கொண்ட கதைதான். ஒரே சாப்பாட்டை இருவரும் சாப்பிட முடியாது.

நமக்கு தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய்
அவருக்கு, பிஸ்ஸா, பர்கர்

ஆகவே சிரமங்களைப் புரிந்து கொண்டு சற்றுப் பொறுமையாக இருங்கள்.

முதல் புத்தகம் நான் சொல்லியபடி 6.6.2015 அன்று வெளியாகும்.
ஒவ்வொரு மாத இடைவெளியிலும் மேலும் ஒவ்வொரு புத்தகத்தைக் கோண்டுவர முயற்சிக்கிறேன்
------------------------------------------------------------
இதுவரை பதிவு செய்துள்ளவர்கள் மிகவும் குறைவானவர்களே அவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிரதிகள் உண்டு

அவர்கள் இருநூறு ரூபாய்கள் முன் பணம் அனுப்பியதோடு அல்லாமல். மின்னஞ்சல் மூலம் பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய மின்னஞ்சல்களுக்கெல்லாம் தனித்தனியாகப் பதில்
எழுத நேரமில்லை.

பணம் வந்ததைத் தெரியப் படுத்துங்கள் என்று தொடர்ந்து மின்னஞ்சல்கள் வருகின்றன.  ஆகவே 6.6.2015 வரை பொறுமையாக இருங்கள்.

இது என்னுடைய கனிவான வேண்டுகோள்

அன்புடன்
வாத்தியார்
-----------------------

மார்ச் 19ம் தேதியன்று எழுதியது. மீண்டும் உங்கள் பார்வைக்கு

நீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது!

வகுப்பறையில் எழுதத் துவங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதல் 5 ஆண்டுகள் எழுதிய ஜோதிடப் பாடங்களைத் தொகுத்து,

படிப்பதற்குத் தோதாக வரிசைப் படுத்தி, புத்தகங்களாகக் கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். அதில் சில தடங்கல்கள்

ஏற்பட்டன. ஓயாத பணிச்சுமை. மற்றும் பத்திரிக்கைகளுக்கான ஆக்கங்கள் அதில் வந்த கதைகளைத் தொகுத்துப் புத்தகங்களாக வெளியிடும்

வேலைகள் என்று விதம் விதமான, தவிர்க்க முடியாத பணிகள்.

ஜோதிடப் பாடங்கள் மொத்தம் 3,000 பக்கங்கள். அவற்றை 6  பாகங்களாக வெளியிடலாம் என்று உள்ளேன். அடிப்படைப் பாடங்கள், மற்றும்

அஷ்டகவர்க்கப்பாடங்களை முதலில் 4 தொகுதிகளாக வெளியிட உள்ளேன்.

பதிப்பிற்கான type setting வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அச்சுப்பிழைகள் இன்றி அவற்றைச் சரி செய்வதற்கும் ஏற்பாடு

செய்துள்ளேன்.அச்சிட்டு புத்தகமாகக் கொண்டு வரும் பணியை அச்சுத் தொழிலில் அனுபவம் மிக்க நண்பர் ஒருவர் செய்து தர உள்ளார்.

இறையருளால், முதல் இரண்டு தொகுதிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாராகிவிடும். 6.6.2015ற்குள் உங்களுக்குப் புத்தகங்கள்

கிடைத்துவிடும்.

குறைந்த அளவில்தான் புத்தகங்களை அச்சிட உள்ளேன். எத்தனை புத்தக்கங்கள் அச்சிட வேண்டும் என்பது எனக்குத் தெரிய வேண்டும்.

தெரிந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல அச்சிட முடியும்.

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்!

1. இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. கூரியர் சர்வீசில் புத்தகங்களை அனுப்பும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு.

2. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்தியத் தொடர்பும், இந்திய முகவரியும் இருந்தால் மட்டுமே புத்தகங்கள் கிடைக்கும்.

3. உங்கள் பிரதிகளுக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி umayalpathippagam@gmail.com

4. கொடுக்கப்பட்டுள்ள அந்த முகவரிக்கு மட்டுமே கடிதம் எழுதுங்கள். எழுதும்போது உங்களின் முழுப் பெயர், முழு முகவரி (Full postal address)
மற்றும் அலை பேசி எண் ஆகியவற்றைத் தெரியப் படுத்துங்கள்.

5. பதிவுக் கட்டணம் ரூபாய் 200:00 (இரு நூறு ரூபாய்கள்: மட்டும்). இந்தப் பணம் புத்தக விலை மற்றும் கூரியர் கட்டணங்களில் கழித்துக்

கொள்ளப்படும். வங்கிக் கணக்கு விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்

6. புத்தகங்களின் அளவு 1/8 size. பக்கங்களின் எண்ணிக்கையும், விலையும் புத்தகங்கள் தயாராகி வந்தவுடன் உங்களுக்குத் தெரியப் படுத்தப்படும்.

அதற்கான பணத்தை நீங்கள் அப்போது செலுத்தினால் போதும். Books will be in reasonable and affordable price

7.வெளிநாட்டுக் கண்மணிகளுக்கு என்ன செய்யலாம் என்பதைத் தபால் துறையில் முழுமையாக விசாரித்துவிட்டுப் பிறகு அறிவிக்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

வேப்பிலை said...

காத்திருப்பதில் தான் சுகம் உள்ளது
காதலிலும் சரி... புத்தகத்திலும் சரி

உங்களுக்காக காத்திருக்கிறோம்
உண்மையாகவே இது போல..

பணம் முன்பே அனுப்பினால்
பணம் பற்றிய தொந்திரவு என

அமைதிகாத்தது புரிகிறது
ஆண்டவன் செயல் என்ன செய்ய

முருகன் அருள்
முன் நிற்கும்

hamaragana said...

அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா
உங்களுக்காக காத்திருக்கிறோம்

Pathrachalam Chalam said...

Vathiyar ayya vukku Nandrigal...pala Nichayam ungal book Muruga Peruman arulal payment Panniya Anaivarukkum kidaikum....

Jagan said...

என் கண்களுக்கு வேளை கொடுத்து விட்டு...
நி ஓயவில்லமால் தழிழை நூலில் பதிவிரக்கம் செய்கிராய்...
என் இனையத்திள்
உன் செய்தி வரும் வரை
தேடிக்கொண்டே இருக்கும்...

ஏழுத்து பிழை இருப்பின் மன்னிக்கவும்.