மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.5.15

Astrology: quiz number.83 கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே!


Astrology: quiz number.83 கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே!

Quiz No. 83

8.5.2015

சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னால் ஒரு பதிவை
வலை ஏற்றியிருக்கிறேன். அதையும் படிக்க வேண்டுகிறேன்!

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!




மேலே உள்ள ஜாதகத்தை வைத்து உங்கள் கணிப்பை எழுதுங்கள்:

1. ஜாதகரின் திருமண வாழ்க்கை
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை
3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்

ஜாதகத்தை அலசி  உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. 1. ஜாதகரின் திருமண வாழ்க்கை
    Date of Birth
    NOV 24 1971 10.40 PM

    Rahu and lagna lord Moon in 7th house. Mars in 8th house gives manglik dosha. 12th house under paap kartari yoga. venus karaka for Marital life is in 6th house. so there are possibilities for delayed marriage. 2nd lord and 9th lord in 5th house aspected by saturn. Marriage might have happened during jupiter dasha possibly in saturn or Sun sub period.

    2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை
    if he or she got married during jupiter maha dasha, one will have a decent family life.

    i also see there are some possibilities for early marriage(rahu dasha-moon sub period) bcos of rahu/moon in 7th house. then mostly the marriage will break in mars sub period.
    (This applies if the native is female)


    3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்

    sun in 5th house is not favorable for having many children. Native may have only one child possibly during Mars sub period.

    thanks
    sree



    ReplyDelete
  2. அய்யா ,
    கடக லக்னம். யோகாதிபதி செவ்வாய் எட்டில்.செவ்வாய் தோஷம். சுபரான குரு 5-ம் வீட்டில் அஸ்தமனம் ஆகவில்லை. சந்திரன் ஏழாம் வீட்டில் இருந்து தன வீடான லக்னத்தை நோக்குகிறார் . ராகுவுடன் சேர்ந்திருப்பது தோஷம் போல் தெரிந்தாலும் சந்திரன் லக்னாதிபதி ஆனதாலும் குரு பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருபதாலும் திருமணம் குரு தசையில் நடந்திருக்கும். கலப்பு திருமணாக அல்லது காதல் திருமணமாக இருக்கலாம். ஏழாம் வீடு அதிபதி சனி 11-ல் செவ்வாய் பார்வையில். அது ஒரு காரணம். குரு ஏழாம் அதிபதியை பார்ப்பதால் தோஷம் விலகும்.
    ஒரு ஆண் குழந்தை உண்டு .ஐந்தில் சூரியனும் குருவும் ஒன்பதுக்கு அதிபதியான குரு ஐந்தில் இருப்பதாலும் .
    குடும்ப வாழ்க்கை அவ்வளவு சுகமாக இராது. காரணம் இரண்டாம் இடத்தை செவ்வாய் பார்த்து இரண்டாம் இட அதிபதி சூரியன் ஷட்பலம் இல்லாமல் இருக்கிறார் !.

    ReplyDelete
  3. 24 நவம்பர் 1971 இரவு 10மணி 54 நிமிடம் 30 நொடிக்குப் பிறந்தவர்.ஜாதகர் என்று கொடுக்கப்பட்டுள்ளதே தவிர ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை.

    1. திருமணம் நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லாமல் குடும்பம், குழந்தை பாக்கியம் பற்றிக் கேட்டுள்ளதால் திருமணம் குருதசா குருபுக்தியில் நடந்தது என்று எடுத்துக் கொள்கிறேன். ஏழாம் அதிபனனான சனைச்சரனுக்கு கடகத்தின் யோககாரகனான செவ்வேளின் பார்வை அதைப்போலவே சனைச்சரனின் பார்வை செவ்வாய்க்கு.செவ்வாய் சனைச்சரன் ஜன்ம பகைவர்கள். மேலும் சனைச்ச்ரன் வக்கிரமாகியுள்ளார். ஏழாம் இடம் ராகுவாலும் செவ்வாயாலும் சூழப்பட்டுள்ளது.எனவே திருமண வாழ்க்கை முழுமை அடையவில்லை. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவில்லை.ஏழாம் இடத்திற்கு 17 பரல் மட்டுமே.

    2.குடும்ப வாழ்க்கை திருமண வாழ்க்கையுடன் ஒட்டியதால் அதுவும் அமையவில்லை. லக்கினாதிபதி சந்திரன் ராகுவுடன் சம்பந்தப்பட்டதால் எப்போதும் ஏதாவது மனக்கவலையில் இருப்பார்.நான்காம் அதிபன் ஆறில் மறைந்ததால் சிறிய வயதிலேயே தாயைப்பிரிந்து குடும்பம் இல்லாமல் சிரமம். திருமணத்திகுப்பின்னரும் கணவரைப் பிரிந்து சுவையில்லாத குடும்ப‌ வாழ்க்கை.

    3,ஐந்தாம் அதிபதி எட்டில், ஐந்தாம் இடத்தில் சூரியன், குரு,. காரகன் பாவத்தில். ஐந்தாம் இடத்திற்கு சனிபார்வை.எனவே குழந்தை பாக்கியம் இல்லை.

    லக்கினத்தில் கேது இருந்தாலும் பாக்கிய ஸ்தானதிபதி குருவின் பார்வை லக்கினத்திற்கு, யோககாரகன் செவ்வாய் பார்வை இரண்டாம் இடத்திற்கு ஆகியவை குறைந்த பலனுடனாவது திருமண,குடும்ப‌ வாழ்க்கையைக் கொடுத்தது.ஆனால் குழந்தை இல்லை.

    ReplyDelete
  4. கடக லக்கினம், மகர ராசி ஜாதகர். லக்னாதிபதி சந்திரன் 7ல் ராகுவுடன் கை கோர்த்து பாபகர்த்தாரியில் வலுவிழந்துள்ளார்.

    ஜாதகரின் திருமண வாழ்க்கை : களத்திராதிபதி சனி 11ல் வக்கிரகதியில் உள்ளார். அவரின் மேல் குரு மற்றும் சூரியனின் பார்வை உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் 6ல் மறைவு. கடக ராசிக்கு யோகாதிபதி செவ்வாயும் 8ல் மறைந்து, 8ம் அதிபதி சனியின் பார்வையில் வலுவிழந்து விட்டார். 7ல் ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம்.மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு தாமதமாக‌ குரு தசையில் சுக்கிர புத்தி (அ) சூரிய புத்தியில் 32 வயதிற்கு மேல் திருமணம் நடந்தது.

    ஜாதகரின் குடும்ப வாழ்க்கை : ராகு சந்திரனின் கூட்டணியால் தன்முனைப்பு (EGO) உள்ள ஜாதகர். 2ம் அதிபதி சூரியன் குருவுடன் சேர்ந்து 5ல் உள்ளதால் நல்ல குடும்பத்தில் பிறந்த துணைவர் (அ) துணைவி கிடைத்திருப்பார். 12ம் அதிபதி புதன் சுகாதிபதி சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து 6ல் மறைவு. 12ம் பாவம் பாபகர்த்தாரியில் மாட்டிக் கொண்டு விட்டது. அதனால் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை. பிரிந்து வாழும் சூழ்நிலை.

    ஜாதகரின் புத்திர பாக்கியம் : புத்திரகாரகன் குரு 5ம் பாவத்திலேயே அமர்ந்து "பாவ நாசம்" செய்துவிட்டார். அவருடன் கூட்டாக உள்ள சூரியனும், 7லுள்ள வக்கிர சனியின் பார்வையும் அதற்கு பக்க வாத்தியமாக மாறி புத்திர பாவம் வலு இழந்து இருக்கிறது. 5ம் அதிபதி செவ்வாயும் லக்கினத்திற்கு 8ல் மறைந்து வலுவற்ற நிலையில் உள்ளதால், ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.

    மொத்தத்தில் ஜாதகரின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கைதான்.
    வழக்கம் போல் வாத்தியாரின் மேலான அலசலில் விடையை தெரிந்து கொள்ள ஆசை. Over to Vaathiyaar!

    ReplyDelete
  5. Ayya,

    DOB: 24-Nov-1971, 22:00:00

    1. He would have got married, but marriage life is not good. Wither would have got divorced or separated or other person died. Reason is Shani and Chevvai is looking each other by their look. Shani is looking is Chevvai by 10th look. Chevvai is looking Shani by 4th look.

    2. Family life is good. He would have born in good family. Because Sun(second house owner) sitting in 5th house with Guru. Second house owner sitting in Poorva Puniaya house.

    3. Kids would be difficuly, because 5th house aspected by Shani.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    மகர ராசி, கடக லக்ன ஜாதகர். லக்னாதிபதி சந்திரன் 7ல் மகரத்தில் ராகுவுடன். யோகாதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்திருக்கிறார்.

    1. திருமண வாழ்க்கை
    களத்திர ஸ்தானத்தில் லக்னாதிபதி சந்திரன் இருக்கிறார். உடன் ராகுவும் இருக்கிறார். அதனால் இவர் கலப்பு திருமணம் செய்வார். 5ம் அதிபதி செவ்வாய் 7ம் அதிபதியான சனியைப் பார்ப்பதாலும், 7ம் அதிபதி 11ல் அமர்ந்து 5ம் வீட்டையும் அதன் அதிபதியான செவ்வாயையும் பார்ப்பதாலும் காதல் திருமணம் என்பது உறுதி ஆகிறது.

    2. குடும்ப வாழ்க்கை
    குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீட்டில் குருவுடன் சேர்ந்திருக்கிறார். அதனால் ஜாதகருக்கு நல்ல குடும்பம் அமையும். பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டு அதிபதியாக குரு இருந்து, 9ம் வீட்டையும், லக்னத்தையும் பார்க்கிறார். 5ம் அதிபதி செவ்வாயும் 6ம் அதிபதி குருவும் பரஸ்பர கேந்திர ஸ்தானத்தில் இருப்பதால் பணத்திற்குப் பஞ்சமிருக்காது.

    3. குழந்தை பாக்கியம்
    5ல் சூரியன் இருப்பது புத்திர நாசம். அவருடன் புத்திரகாரகன் குரு இருக்கிறார். ஆகவே காரகோபாவ நாஸ்தி. ஆனால் 7ம் அதிபதியான சனி 11ல் இருந்து, குருவையும், சூரியனையும் பார்ப்பதாலும், அவருக்கு 8ம் இடத்தில் சுபக்கிரகங்களான புதனும் சுக்கிரனும் இருப்பதாலும் இவருக்கு குழந்தைகள் உண்டு.

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா வணக்கம்.

    பரிட்சையில் பங்கு பெரும் அளவிற்கு புத்தி இன்னும் வளரவில்லை ஆசானே! அப்படி புத்தி வளந்த உடன் முதல் பதில் அடியவனுடையது தான் ஆசானே


    நன்றி ஆசானே .

    ReplyDelete
  8. கூடுதல் தகவல் ஆசானே.

    அடியவனும் அடி முதல் தலை வரை ஆராந்து விட்டேன் எம்முடைய அறிவிற்கு எட்டிய மட்டும் அதனில் பாருங்கோ ஐயா!

    தாங்கள் தான் இணையதளத்தில் மிகவும் அருமையாக இன்னும் சொல்ல போனால் மிகவும் அற்புதமாக பாடம் நடத்துகின்றீர்கள்.

    அதுவும்

    "தாய் மொழியாம் தமிழில்".

    ஜோதிடம் என்னும் அறுசுவை உணவில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து தத்துவத்தையும் கலந்து ஆசானே .

    யாம்!

    தங்களுடைய மாணவன் என்று கூறி கொள்வதில் மிகவும் பேரானந்தமாக கருதுகின்றோம் ஆசானே .

    "நல்லதுக்கு போகாவிட்டாலும் கெட்டதிற்கு எப்பாடு பட்டாவது போகணும்"' என்று சொலவடை உண்டு அல்லவா ஆசானே .

    நன்றி! வணக்கம். வந்தனம் .

    ReplyDelete
  9. Answer to Quiz no 83:
    Lagnathipathi Chandran is in 7th house with Rahu. The person got married at the age of 22 or 23rd during Rahu dasa Chandra bukthi.
    The family life was very good with children. Puthrakarakan Guru in 5th place along with Sun 2nd house owner with the aspect of Sani – 7th house owner. Got kids in Guru dasa – Sani bukthi at the age of 27 to 29. Puthrasthana athipathi is in 8th house with the aspect of Kalathirasthana athipathi sani. Also parvai parimarram as Sani is aspecting Sevvai vice versa.
    Also Guru (Puthrakarakan) and Sevvai (Puthrasthanathipathi) and Sani (Kalathrastanathipathi) are in Kendram.
    Sani is aspecting Lagnam, 5th house and 8th house giving long life. Guru is also aspecting 9th house, 11th house and lagnam.
    The person has good married life with children
    K R Ananthakrishnan - Chennai

    ReplyDelete
  10. Hi sir
    Ans: DOB Nov 24 1971 9 pm.

    Marriage might have happened during ragu Dasa sukran budhi or suriyan budhi, neesa
    ragu AND strong kudampathipathi helped for marriage. Yokaran chevvai parvai in 2nd house also looking to 7th athipathi, happy married life. There must be delay in child birth, native might have got child after 10 years from marriage due to neesa guru in amsam 5th house has Sun+ guru and sanibhagavan 7m parvai

    ReplyDelete
  11. அன்புள்ள ஐயா அவர்களுக்கு
    கேள்வி எண் 83 –விடை:
    சாதகர் கடக லக்னத்தி பிறந்துள்ளார். லக்கினத்தில் கேது சேர்க்கை.
    சுக்கிரன் குரு பரிவர்த்த்னை.

    தனது திரும ண வாழ்க்கை மிகவும் வெறுப்பில் அமை ந்தது.காரணம் லக்கினத்தில் கேது அமர் ந்திருக்கிறார்
    , சுமுக வாழ்க்கை இருக்க வாய்ப்பில்லை.
    கேந்திரத்தில் சூரியனும் குருவும் அமர்ந்துள்ளனர். 5 ந்தின் அதிபதி 6ல் மறைவு. ம்ற்றும் சூரியன் 5 ல் நிற்க புத்திர தோஷம் மனக்குழப்பம் கொடுத்திருக்கிறார். ஆகையால் புத்திர தோஷம் சாதகருக்கு இருக்கிறது. ராகு திசையில் சாதகருக்கு மிகுந்த சிரமங்கள் கொடுத்திருக்கிறார். புத்திர தோஷம் கண்டிப்பாக உள்ளது. மிகவும் தாமதமாக குழந்தை பிறந்தது. அதாவது தனது வயது 24 ல் மஹாகுகு தசா ஆரம்பித பொழுது அவருக்கு குழ ந்தை பாக்கியம் கிட்டியது.SIR FIRST TIME I AM WRITING THIS . PL CORRECT ME IF ANYTHING WRONG.

    ReplyDelete
  12. Quiz No. 83 dated.8.5.2015
    Date of Birth 24.11.1971
    Place of Birth : Chennai (Assumed) 80.15 E 13.4 N
    Time of birth 10.54.30 PM
    1. ஜாதகரின் திருமண வாழ்க்கை
    Kadaka Laknam, Magara Rasi.
    Though Karagan Sukkiarn has 4 Bindus but associated with Budhan and also in Bapakarthari yogam.
    Bhavaga athipathi Saneeswaran has Suriyan, Sevvai and Guru Parvai. Retrogated. But at 11th place to lakna with 4 Bindus.
    Bhavagam has 17 Bindus and the Laknathipati Chandran is with Raghu in this 7th place with the Kethu Parvai.
    Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
    Kargan Sukkiran is at 12th place to the Bhavagam and Bhavaga athipathi Saneeswaran is at 5th place to the Bhavagam at Trikonam but retrograte.
    Sevvai thosam is in this Horoscope.
    Due to the above conditions this native did not get married.
    Your words
    பள்ளிக்குப் போவதுதான் முதல் பாக்கியம். படித்துப் பட்டம் வாங்குவது இரண்டாவது விஷயம். பள்ளிக்கே போகவில்லை எனும்போது பட்டம் பெறாததைக் குறை சொல்வதில் பயனில்லை. திருமணம் இல்லை. குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் பற்றி சொல்வதில் பயனில்லை.
    However let us analyse the other two items also.
    2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை
    Kargan Guru has 5 Bindhus but with retrogrative Saneeswaran Parvai.
    Bhavaga athipathi Suriyan has 6 bindus and associated with Guru but has retrogrative Saneeswaran Parvai.
    2nd Bavagam has 31 Bindus but has the Sevvai parvai.
    Karagan is at 4 (kendram) to the Bavagam and Bhavaga athipathi Suriyan is at 4 (kendram) to the Bavagam.
    Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
    Due to the above the native’s family life is not happy.
    3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்
    Kargan Guru has 5 Bindhus but with retrogrative Saneeswaran Parvai.
    Bhavaga athipathi Suriyan has 6 bindus and associated with Guru but has retrogrative Saneeswaran Parvai.
    5nd Bavagam has 29 Bindus but has the retrogrative Saneeswaran Parvai and Suriyan Guru association is in this 5th house.
    Laknathipati Chandran is with Raghu having 2 Bindhus. Kethu in Laknam, Laknam with 24 Bindus which are not likeable.
    Karagan is at the 5th Bavagam itself and Bhavaga athipathi Sevvai is at 4 (kendram) to the Bavagam.
    As per the above conditions, the native has not children bakkiyam.

    ReplyDelete
  13. Respected Sir,

    My answer for our Quiz No.83:

    1. He/she has married after 30 years of age.

    2. Family life continues just like that.

    3. They blessed having baby with some problem.

    REASONS.
    1. Marriage life:

    i) Seventh lord is sitting 5th place from his own house and in friend house.

    ii) Lagna lord is sitting in 7th place.

    iii) Seventh lord is getting bagyathipathi's aspect.

    iv) Kalathirakaraga is sitting in 6th house and 12th house from 7th house. Hence, marriage will be delay.

    2) Family life:

    i) Second house is aspected by Yogakaraga Mars.

    ii) Second house lord is sitting 4th house from its own house along with Jupiter.

    iii) 12th house also is in good position.

    Hence, Family life will continue as just like that.

    3) Child birth:

    i) Fifth house authority is sitting 4th house from its own house.

    ii) 6th as well as 9th house authority Jupiter is sitting alongwith 2nd house lord

    iii) Saturn is aspecting 5th house.

    Hence, The native has blessed baby but having some problem.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  14. 1.ஜாததகரின் திருமண வாழ்க்கை?
    ஜாதகி ஒரு பெண்.ஜாதகி திருமணம் ஆனவர்.ஜாதகியின் 27 ம் வயதில் குரு’திசை சனி’புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.

    7 ம் அதிபன் சனிக்கு குரு’வின் பார்வை.2 ம் அதிபன் சூரியன் குரு’வுடன் சேர்க்கை.2 ம் அதிபனும் 7 ம் அதிபனும் சமசப்தம பார்வை.மேலும் சந்திரனுக்கு 7 ம் இடத்திலும் ,2 ம் அதிபன் சனி’க்கும் குரு’வின் பார்வை உள்ளதால் ஜாதகி நிச்சயம் திருமணம் ஆனவர்.

    2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை?
    ஜாதகியின் குடும்ப வாழ்க்கை மகிழ்சியற்றதாய் இருந்திருக்கும். ஜாதகி கணவரை பிரிந்து விவாகரத்தானவரானவர் (அ) விதவையாகி மறுமணம் புரிந்தவராய் இருப்பார்.
    7 ம் அதிபன் சனி’ வக்கிரம். அதற்கு செவ்வாய் சூரியன் பார்வை.7 ல் ராகு. 2 ல் செவ்வாயின் பார்வை. 2ம் அதிபன் சூரியனுக்கு 8 ம் அதிபன் சனியின் பார்வை.மாங்கல்ய ஸ்தானமான 8 ல் செவ்வாய்,அதற்கு சனியின் பார்வை.
    சந்திரனுக்கு 2ல் செவ்வாய் அதற்கு சனியின் பார்வை,7ல் சனியின் பார்வை.சந்திரனுக்கு 8 ம் அதிபன் சூரியனுக்கு ச்னி’யின் நேர் பார்வை.
    களஸ்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்திற்கு 6 ல்,சந்திரனுக்கு 12 ல் மறைவு. ஆகவே ஜாதகி கணவனை இழந்தவர். 7 ம் அதிபன் சனி’ 11 ல் இருந்து குரு’ பார்வை இருப்பதால் ஜாதகி மறுமணம் ஆனவராய் இருப்பார்.

    3. ஜாதகரின் குழந்தை பாக்கியம்?
    ஜாதகிக்கு குழந்தை பாக்கியன் குறைவே.ஜாதகிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கும். ஆனால் அக் குழந்தைக்கு ஆயுள் குறைவே.

    5 ம் அதிபன் ‘செவ்வாய்’ 8 ல் மறைவு.அதற்கு 8 ம் அதிபன் சனி’யின் வக்கிர பார்வை.5 ல் சூரியன்,அதற்கு சனி’யின் பார்வை. 5 ல் உள்ள புத்திரகாரகன் குரு அம்சத்தில் நீசம்.
    சந்திரனுக்கு 5 ல் சனி.அதற்கு செவ்வாயின் பார்வை.8 ம் அதிபன் சூரியன் பார்வை.சந்திரனுக்கு 5ம் அதிபன் சுக்கிரன் சந்திரனுக்கு 12ல் மறைவு.5 ல் விரையாதிபதி குருவின் பார்வை. ஆகவே இந்த ஜாதகிக்கு புத்திரதோஷம்.
    குழந்தை பிறந்திருந்தாலும் அது நீண்ட நாள் வாழும் பாக்கியனம் இல்லை.

    G.Sivarajan
    Pondicherry.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com