மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.6.14

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான பதிவு இது!

 

Humour: நகைச்சுவை: சிரிக்கத் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கான பதிவு இது!

இன்றையப் பதிவு சிரிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு மட்டும்! உம்மண்ணா மூஞ்சிகள், அதாவது எப்போதும் சீரியசாக இருக்கும் அன்பர்கள் பதிவை விட்டு விலகவும்!

மற்றவர்கள் தொடரவும்!
----------------------------------------------
ஒரு நாடு வளமாக இருந்தது. நாட்டின் மன்னரும் மகிழ்ச்சியாக இருந்தார். ஆட்சியில் அதுதான் முக்கியம்.

ஒரு நாள் மன்னருக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது. உடனே தன்னுடைய பிரதான அமைச்சரை அழைத்தார். அவரும் என்னவோ எதோ என்று ஓட்டமும் நடையுமாக உடனே வந்து சேர்ந்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நாட்டில் முட்டாள்களும் இருப்பார்கள் அல்லவா?” என்று அவரிடம் மன்னர் கேட்டார்.

அமைச்சர் பதில் சொன்னார், "ஆம் மன்னா, அதில் என்ன சந்தேகம்? புத்திசாலிகளுடன் முட்டாள்களையும் கொண்டதுதான் உலகம்”

“அப்படியென்றால் நம் நாட்டிலுள்ள முட்டாள்களில் அதி முட்டாள்களான ஐந்து பேர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன்”

அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. அதி புத்திசாலிகளைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் என்று சொன்னால், ஏதாவது போட்டிவைத்து, அதில் வெற்றி பெறும் ஐவரைக் கொண்டு வந்து விடலாம். முட்டாள்களைக் கொண்டுவரச் சொன்னால் என்ன செய்வது? என்று பலத்த சிந்தனைக்கு ஆளானார்

ஆனாலும் என்ன செய்வது? மன்னரின் விருப்பமாயிற்றே, அதை எப்படித் தட்டிக் கழிப்பது என்று, அதற்கு ஒப்புக்கொண்டு, “சரி மன்னா!” என்றார்.

ஒரு மாதகாலம் நாடு முழுவதும் பயணம் செய்து, இரண்டு பேர்களை மட்டும் தேடிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து அரசர் முன் நிறுத்தினார் அமைச்சர்.

அவரைப் பார்த்த உடன்,” என்ன அமைச்சரே இது?” என்றார் மன்னர்.

”இல்லை, மன்னா! நடந்ததைச் சொல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.

“சரி, சொல்லுங்கள்” என்றார் மன்னர்.

”மன்னா, நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின் மேல் அமர்ந்து கொண்டு, தன் துணி மூட்டையைத் தன் தலை மேல் வைத்தவாறு, பயணம் செய்து கொண்டிருந்தான். ஏனப்பா அவ்வாறு செய்கிறாய் என்று கேட்டபோது, என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு அதிகச் சுமையால் வலிக்கக்கூடாது அல்லவா? அதற்காகத்தான் என்றான். இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது பெரிய முட்டாள்!.” என்று விளக்கமாகச் சொன்னார் அமைச்சர்.

“சரி, அடுத்து?”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரை மேல் வளர்ந்த புல்லை மேய்வதற்காக, தன் எருமை மாட்டைக் கூறையின் மேல் இழுத்து ஏற்ற முயற்சித்துக் கொண்டிருந்தான். இவன் தான் நம் நாட்டின் நான்காவது பெரிய முட்டாள்”

“மிக்க மகிழ்ச்சி அமைச்சரே.மிக்க மகிழ்ச்சி. எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் உங்கள் ஒப்புதலுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதை எல்லாம் விட்டு விட்டு, முட்டாள்களைத் தேடி கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் அலைந்து கொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்”

மன்னரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விழுந்து விழுந்து சிரித்தார். பிறகு,” அடுத்து?” என்றார்.

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கும்போது, அதைக் கவனிக்காமல், முட்டாள்களைத் தேடிக்கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்று அதிரடியாகச் சொன்னார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிப் போய்விட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

அரசன் புத்திசாலியானதால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்.” என்று அமைச்சரின் கூற்றை ஒப்புக் கொண்டார்.

“சரி, முதலாவது முட்டாள் எங்கே?”

அமைச்சர் சொன்னார்: “ மன்னா, அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும், அவற்றை விட்டுவிட்டு, வலைப் பதிவுகளே கதி என்று வாழ்ந்து கொண்டிருப்பதோடு, இந்த மொக்கையான கதைக்கு வந்து, நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று ஆர்வத்துடன் தேடிப் படித்துக் கொண்டிருக்கும் இவர்தான் அந்த முதலாவது முட்டாள்!”
--------------------------------------------------------------
”அட சாமி (வாத்தி) கடைசியில் என்னையே முட்டாளாக்கி விட்டீர்களே?”

“நான் ஒன்றும் தப்பவில்லை. நானும் இந்தக் கதையை இணையத்தில் படித்து, முதல் முட்டாள் என்ற பட்டத்தோடுதான் இங்கே வந்துள்ளேன். மேலும் வெட்டித்தனமாக அதைத் தட்டச்சு செய்து வலையில் ஏற்றியிருக்கிறேன்.”
----------------------------------------------------------------
என்ன கதை நன்றாக உள்ளதா?
=========================================
முக்கிய அறிவிப்பு:

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆனால் வகுப்பறைக்கு விடுமுறை இல்லை. இல்லை. இல்லை. இன்று ஒரு பதிவு வெளியானதைப் போல நாளையும் ஒரு பதிவு உண்டு. அனைவரும் வகுப்பறைக்கு வந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூகுள் ஆண்டவரின் auto post வசதியால் அது சாத்தியப்படுகிறது. அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். அவ்வப்போது நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்!

உங்களுடைய பின்னூட்டங்களும், அவற்றிற்கான வாத்தியாரின் பதில்களும் 25.6 2014 புதன்கிழமை காலையில் வெளியாகும். பொறுத்துக்கொள்ளவும்

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

11 comments:

  1. நகைச்சுவை சுவையாக இருந்தது.

    அந்தக் கால மன்னர்களுக்கெல்லாம் நிறைய நேரம் இருந்துள்ளது போலும்.அதனால்தான் இதுபோன்ற சந்தேகம் எல்லாம் வருகின்றது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற ச்ந்தேகம் வந்ததால் சிவ பெருமானே
    நேரில் வரவில்லையா?

    ReplyDelete
  2. முட்டாள்களை அடையாளங்காட்டிய
    முழு அறிவாளிகளே... நன்றிகள்

    முட்டாள் தனத்தில் இருந்து தான்
    முளைக்கும் அறிவு..

    இல்லையென்றால் பறக்குமா
    இறக்கையுடன் ஆகாய விமானம்

    தான் ஆயிரமுறை முயன்றுதோற்ற
    தாமஸ் ஆல்வா எடிசனின் விளக்கு

    ஆண்டவனை அடையும் இலக்கை
    அப்படியே விட்டுவிட்டு

    பணத்தையே நாடி அதிலேயே
    பாசம் கொண்ட நாளைய

    அறிவாளிகள் இனி
    அறிவு ஓளிகள்..

    இன்னொருமுறை
    இப்படி முட்டாள்கள் என

    குறைவாக எண்ணாதீர்கள்
    குவிந்துள்ளன அவர்களிடம் திறமை

    ReplyDelete
  3. ///kmr.krishnan said...
    ச்ந்தேகம் வந்ததால் சிவ பெருமானே
    நேரில் வரவில்லையா?///

    எங்கிருந்து வந்தார்..
    எங்கேயாவது இல்லையென்றால்

    தானே அவர் வரவேண்டும்
    தம்மோடு இருப்பவர் எங்கிருந்து

    வரவேண்டும்? இது
    வாதமல்ல.. திருத்தம்..

    ReplyDelete
  4. //நான் ஒன்றும் தப்பவில்லை. நானும் இந்தக் கதையை இணையத்தில் படித்து, முதல் முட்டாள் என்ற பட்டத்தோடுதான் இங்கே வந்துள்ளேன்.//

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்ற நோக்கில் இதைக் கொடுத்திருக்கிறீர்கள் போலும். (இதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை)

    ReplyDelete
  5. நல்ல நகைச்சுவை.
    நன்றி.

    வெங்கடேஷ்

    ReplyDelete
  6. வேப்பிலையாரின் பின்னூட்டத்தைப் பார்த்தால் அவர் அதிகமாக கடுப்பாகி விட்டார் போல் தெரிகிறது.

    ReplyDelete
  7. //எங்கிருந்து வந்தார்..
    எங்கேயாவது இல்லையென்றால் //

    அருவமாக எங்கும் நிறைந்திருப்பவர் ஓர் உருவம் எடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு வந்தார் என்று திரு KMRK சொல்கிறார். இதில் உங்களுக்கென்ன குழப்பம். நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி...?

    ReplyDelete
  8. ///Kirupanandan A said...
    நீங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி...?///

    குழப்பமே இல்லை..
    குறித்து சொன்னது தெளிவாக

    இல்லை என்பதைத்தான்
    "இது வாதமல்ல திருத்தம்" என

    இறுதி வரியில் சொன்னதை
    இன்னமுமா நீங்களும்

    கவணிக்கவில்லை
    கணக்கு"பிள்ளையாரே"

    ReplyDelete
  9. ///Kirupanandan A said...
    வேப்பிலையாரின் பின்னூட்டத்தைப் பார்த்தால் அவர் அதிகமாக கடுப்பாகி விட்டார் போல் தெரிகிறது....///

    கடுப்பும் வெறுப்பும் எப்போதுமே
    கடுகளவும் கிடையாது..

    நல்லதை உள்ளதை
    நயம் பட சொல்லாத போது

    கோபமாக எழுதுவதுண்டு
    கோபத்தில் இடுவதில்லை கோலம்

    அடிப்பது போல கோவம் வரும்
    அதில் ஆபத்து இருக்காது என்ற

    கண்ணதாசனின்
    கவிதை வரிகளை சுழலவிடுகிறேன்

    உள்ளதை சொல்வேன்
    சொன்னதை செய்வேன்

    வேறென்றும் தெரியாது
    உள்ளத்தில் இருப்பதை

    வார்த்தையில் மறைக்கும்
    உட்கபடம் தெரியாது

    பள்ளிக்கு சென்று படித்ததில்லை
    ஒரு எழுத்தும் தெரியாது

    பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர
    எதுவும் கிடையாது

    அடிப்பது போல கோபம் வரும்
    அதில் ஆபத்து இருக்காது

    நீ அழுதால்
    நானும் அழுவேன் அதற்கும்

    காரணம் புரியாது
    காரணம் புரியாது

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com