மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.6.14

Astrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா!

 

Astrology: quiz.60: ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா!

Quiz No.60: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபது
25.6.2014
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் ஜாதகத்தில் 7ஆம் வீட்டையும் 2ஆம் வீட்டையும்  ஆராய்ந்து பதில் எழுதுங்கள்.


The same chart is given with navamsam


இன்றைய கேள்விகள்:

1
ஜாதகிக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஆகவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

2
குடும்ப வாழ்க்கை அதாவது மண வாழ்க்கை எப்படி இருந்தது?

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

30 comments:

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம். QUIZ NO.60

30.07.1974 ஆம் தேதி காலை 7.15.05 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு கடக லக்கினம். செவ்வாய் யோககாரகன்.

ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி 40வது வயதில் விவாக ரத்து எற்பட்டது.

திருமணத்திற்க்கு எதிரான அமைப்புகள் இந்த ஜாதகத்தில் நிறைய உள்ளன.

1. லக்கினம் பாபகர்த்தாரி தோஷம். ஒரு பக்கம் சனி 12ல், மறுபக்கம் செவ்வாய் 2ல். லக்கினம் பலவீனம் (3 பரல்).

2. லக்கினாதிபதி சந்திரன் (3 பரல்). விருச்சிக ராசியில் நீசம். நீசபங்க யோகம் உண்டாகி உயர்ந்த நிலையை அடையமுடியும். மேலும் ராகுவுடன் கூட்டு 5ம் வீட்டில். 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.

3. 7ம் வீட்டு அதிபதி சனி (2 பரல்). லக்கினத்திற்க்கு 12ம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதமாகும். மேலும்,களத்திரகாரகன் சுக்கிரனுடன், புதனுடன் கூட்டு. 12ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன்.

4. நவாம்சத்தில் லக்கினாதிபதி சந்திரனும், 7ம் வீட்டு அதிபதி சனியும் கூட்டு சேர்ந்து இருப்பதால் புனர்ப்பு தோஷம்.திருமணம் பிரிவில் தான் முடியும். மேலும் களத்திரகாரகன் சுக்கிரனும் இவர்களுடன் கூட்டு.

5. 9ம் வீட்டு பாக்கியாதிபதி குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. 6ம் வீட்டு அதிபதி வில்லனும் அவரே. இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம் அடைந்துள்ளார்.அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் 8ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும்.

6. 2ம் வீட்டு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் பாபகர்த்தாரி தோஷத்தில். அதாவது 2ம் வீட்டிற்க்கு 12ல் விரைய ஸ்தானத்தில்.2ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை. நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம் அடைந்துள்ளார்.

7. வக்கிரம் அடைந்த குருவின் 5ம் பார்வை 12ம் வீட்டின் மீதும், 7ம் பார்வை 2ம் வீட்டில் மீது பார்ப்பதாலும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.

8. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.

9. குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு, அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் சனியின் பார்வையுடன். வீக்காக உள்ளார்.குழந்தைக்குக் காரகன் வக்கிர குரு அஷ்டமத்தில் மறைந்து விட்டார். ஜாதகிக்கு குழந்தையில்லாமல் போய்விட்டது.
குரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது குருவின் பார்வையால் எந்த பலனும் கிடைக்காது.

யோககாரன் செவ்வாயின் பார்வை சந்திரன் மீது இருப்பதாலும், நீசபங்க யோகத்தினால் சந்திர தசையில் ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி சந்திர தசை சனி புக்த்தியில் 40 வது வயதில் விவாக ரத்து எற்பட்டது. விவாக ரத்து எற்பட்டதற்கு காரணம் நவாம்சத்தில் சனியும், சந்திரனும் கூட்டு.

இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
1. கஜகேசரி யோகம் சந்திரனிலுருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.அதிர்ஷ்ட்டம் உண்டாகும், முன்னேற்றம், வெற்றி உண்டாகும்.
2. நீசபங்க யோகம் உயர்ந்த நிலையை அடையமுடியும்.

சந்திரசேகரன் சூரியநாராயணன்


Ramanathan said...Sevvai, Yogakaraka, is in 2nd house. Good Family for sure

Sani, lord of 7th house seated in 12th house along with Marragie authority Sukran(lord of 4th and 11th house).
Point to Note is lord of 8th house(same as 7th house) and lord of 12th house present in 12th house.
Sukran will derive benefit
Lord of 4th house, authority for material pleasures in 12th house which is also for material pleasures.
Guru in 8th house is good for women.
Due to above reasons marraige would surely have happened in Sukran Dasa.
Presence of Mandi in 8th house could have caused delays

The 5th house(authority for children) occupied by lagna lord Chandran(Neecham) along with Rahu.
Guru(atuhority for children) in 8th house along with Mandi. Yogakaraka is aspecting 8th house
For the above said reasons, Children may have been delayed.
However, Yogakaraka will ensured children in Surya(lagna lord) dasa followed by Sukran Dasa.
YogaKaraka would ensure all benefits to the family life of person.
Financially too, the person will be well off due to Ketu in 11th house in addition to yogakaraka in 2nd house as
sukran Maha dasa(lord of 4 and 11) and Suryan(lagna lord) Maha dasa are peaking in late 20s

Ramanathan said...Sevvai, Yogakaraka, is in 2nd house. Good Family for sure

Sani, lord of 7th house seated in 12th house along with Marragie authority Sukran(lord of 4th and 11th house).
Point to Note is lord of 8th house(same as 7th house) and lord of 12th house present in 12th house.
Sukran will derive benefit
Lord of 4th house, authority for material pleasures in 12th house which is also for material pleasures.
Guru in 8th house is good for women.
Due to above reasons marraige would surely have happened in Sukran Dasa.
Presence of Mandi in 8th house could have caused delays

The 5th house(authority for children) occupied by lagna lord Chandran(Neecham) along with Rahu.
Guru(atuhority for children) in 8th house along with Mandi. Yogakaraka is aspecting 8th house
For the above said reasons, Children may have been delayed.
However, Yogakaraka will ensured children in Surya(lagna lord) dasa followed by Sukran Dasa.
YogaKaraka would ensure all benefits to the family life of person.
Financially too, the person will be well off due to Ketu in 11th house in addition to yogakaraka in 2nd house as
sukran Maha dasa(lord of 4 and 11) and Suryan(lagna lord) Maha dasa are peaking in late 20s

Sakthivel K said...

அம்மனி ஜாதகம்! யோகஜாதகம்அல்ல!!
லக்னாதிபதி 6 இல்! நீசம் ராகு உடன்..
7ஆம் அதிபதி சனி 12 இல்
குரு 8 இல் (மா) உடன்
2ஆம் அதிபதி 2ஆம் இடத்துக்கு 12இல்
4 ஆம் அதிபதி 12இல்
ஜாதகி உடல் நலம்,மனநலம் பாதிப்பு..
சுகப்படாத ஜாதகம்...
திருமனம் ஆகவில்லை.....

Chandrasekharan said...

Respected Sir,

1. Lagnadhipathy Chandran Raghuvin pidiyil and Chevvayin Special Paarvai.

2.) 2-m adhipathy Sooriyan Lagnathil (Avar veetirku 12-il)

3.) 7-m adhipathy Sani Lagnathirku 12-il (7-m veetirku 6-il).

4.) Kalathira kaaragan Sukran 8-m adhipathy-udan 12-il amarvu. Kethu matrum Sooriyanukku Naduvil ullar.

5.)7-m adhipathykum (Sani), Lagnathipathykum (Chandran) Sasthastagam thodarbu.

Budhan dhasa 3.4 years+Kethu 7 years + Sukran 20 years. Then sooriya Dhasa (2-m adhipathy dhasa) adhanal,

Jadhagikku Sooriya dhasavil thirumanam nadandhu irukkum.

Kanavar Noiyevaai pattu irandhuruppar.

(Guru peyarchiku pin Puthagam Veliyiduvadhaga soneergal. I am waiting. Please allocate me a copy of your book sir.)

Thank You.

seethalrajan said...

1. லக்னாதிபதி நிசம் உடன் ராகு, லக்னமும் பாபகர்தாரியோகம் உள்ளது.
2.9ம் வீட்டு அதிபதி குரு 8ல் மறைவு, 5ல் ராகு யோகம் அனைத்தும் கெட்டுவிட்டது.
3. 7ம் வீட்டு அதிபதி சனி 12ல் உடன் சுக்ரன்,புதன் ஆனால் அம்சத்தில் சுக்ரன் உச்சம் உடன் லக்ன அதிபதி சந்திரன் மற்றும் களத்திர காரகன் சனி அகையல் சுக்ர திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும்.

7.சிம்ம லக்ன யோக காரகன் செவ்வாய் 2ல் நல்லது ஆனால் அந்த வீட்டு அதிபதி சூரியன் அந்த வீட்டுக்கு 12ல் மற்றும் அம்சத்தில் நிசம். குடும்ப வாழ்கை நன்றாக இல்லை தோல்வி அடைந்து இருக்கும்.

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

புதிர் பகுதி 60 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

கடக லக்கின ஜாதகரான இவருக்கு லக்கினாதிபதி நீச்சம். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.

குடும்ப ஸ்தானத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து பாக்யஸ்தான அதிபதி குருவின் பார்வை பெறுவதால் செவ்வாய் தோஷம் இருந்தாலும், சுக்கிர திசை குரு பக்தியில் அதாவது ஜாதகியின் 21 வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.

ஆனால் குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் அந்த இடத்துக்கு 12ல் அமர்ந்து சனி மற்றும் செவ்வாய்க்கு இடையில் மாட்டிக் கொண்டுவிட்டது மட்டுமல்லாமல் நவாம்சத்தில் நீச்சம் அடைந்து விட்டது. மேலும் களத்திர ஸ்தானாதிபதி சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் 12ல் மறைந்து விட்டது. அதனால் இவர் கணவரை இழந்து இவரே குடும்பதை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

புனர்பூ தோஷம் இருப்பதும் இந்த நிலையை உறுதிப் படுத்துகிறது.

murali krishna g said...

ரொம்பவும் கடினமான ஜாதகமாக உள்ளது !.
முதலில் 7-ம் வீட்டை பார்க்கலாம் ! 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை !. அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி !. 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை !. களத்திர தோஷம் உண்டு !. தாமதமான திருமணம் !. கஷ்டப்பட்டு நடந்தேறிருக்கும் !. சுக்கிர தசையின் முடிவிலோ அல்லது சூரிய தசை ஆரம்பத்தில் நடந்திருக்கும் !. சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் !.சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் ! அதனால் நிச்சயம் படுக்கை சுகம் உண்டு !
2-ம் வீட்டு அதிபதி சூரியன் அதற்கு 12-ல். இரண்டாம் வீட்டில் செவ்வாய் (தோஷம்) !. அதற்கு சனியின் பார்வை வேறு !. வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்தாலும் பலமான பார்வை இல்லை !.எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது ! விவாகரத்தில் முடிந்திருக்கும் !. நவாம்சத்தில் ஏழாம் வீடு புனர்பூ தோஷத்துடன் சுக்கிரனும் கூட்டணி. காரகோ பாவ நாசனாய என்பது இங்கே மிகவும் பொருந்தும் !.
சரியா அய்யா ? அலசலுக்கு காத்திருக்கிறேன் !

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கம்.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,2ம் வீட்டதிபதி சந்திரன் 5ல் நீச்சம் மற்றும் ராகு வுடன் கூட்டணி.
2).இரண்டாம் வீட்டில் செவ்வாய்.பரிவர்த்தனை யோகம்.குருவின் பார்வை இரண்டாம் வீட்டின் மீது.
3).5ம் வீட்டிலுள்ள நீச்ச சந்திரனுக்கு அந்த வீட்டதிபதி செவ்வாயின் பார்வை.
4).7ம் வீட்டதிபதி சனியும்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் மறைவு அத்துடன் 12ம் பதி ஆட்சி பெற்ற புதனுடன் சேர்க்கை.
7ம் வீட்டிற்கு சூரியன் பார்வை.
5).களஸ்திர ஸ்தானதிபதி சனிக்கும், களத்திர காரகன் சுக்கிரனுக்கும் வக்கிரம் பெற்ற குருவின் பார்வை.
6).களத்திரஸ்தானாதிபதி சனி தன் வீட்டிற்க்கு 6ல் மறைவு.
எனவே ஜாதகிக்கு சுக்கிரதசை முடிவில் 30 வயதிற்க்கு மேல் நோயாளியான கணவன் வாய்த்திருப்பார்.
7).2ல் செவ்வாய் நிற்ப்பதாலும்,2ம் பதி நீச்சமடந்ததாலும்,12ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தாலும் குடும்ப வாழ்வில் சுகமில்லை.

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு
தயவு செய்து 2ம் பதி சந்திரன் என்பதை லக்னாதிபதி என திருத்தம் செய்ய வேண்டுகிறேன்.
2ம் பதி சூரியன் தன் வீட்டிற்க்கு 12ல் மறைவு.30 வயதிற்கு மேல் சூரிய தசயில் நோயாளி கணவன், குடும்ப வாழ்வில் சுகமில்லை.

SIVA said...

வணக்கம் அய்யா ,
பிறப்பு : 3௦/07/1974 5:26 am,
பதில் : திருமணம் உண்டு , தாமதத்திருமணம் , 30 வயதிற்கு மேல் சூரிய திசை சந்திரபுத்தியில்,
குடும்பம் : மகிழ்ச்சி நிறைந்தது ,
கிரக நிலை: 1,2 மற்றும் 7 ம் இடம் குறைந்த பரல் , அவற்றின் அதிபதிகளும் குறைந்தபரல்களுடன் , ஆனால் கடக ,மற்றும் சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் இரண்டாம் இடத்தில குருபார்வையுடன் , களஷ்திரகாரகன் குருபார்வையுடன் களஷ்திரஷ்தான அதிபதியின் சேர்க்கை., ஆயினும் அவர் மறைவு பெற்றுள்ளது திருமணத்தில் பல சிரமங்களை கொடுக்கும்., மேலும் அவர்களும் , லக்கினமும் பாபகர்தாரி யோகத்தில் . லக்கினாதிபதி நீசபங்கம் மேலும் உச்சமடைந்த ராகுவின் சேர்க்கை
இருப்பினும் அவர் கஜகேசரி யோகத்தில் , ஆகவே இவர் தனது புத்தியில் சூரியதிசையில் திருமணம் நடத்திக்கொடுப்பார், இதற்க்கு நவாம்சம் பலம் பெற்று இருப்பதே காரணம் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் அனால் அவருடன் ஆறாம் அதிபதி சனியின் சேர்க்கையால் தாமத திருமணம் , இரண்டாமிட சூரியன் நீசபங்கம் , மேலும் நவாம்ச லக்கினாதிபதி குருவுடன் சேர்ந்து திரிகோணம் பெற்றிருக்கிறார் ., ஆகவே இவர் பிற்காலம் நல்ல நிலையில் அமையும்

Ramnath said...

7ம் இட சனி மற்றும் களத்ரகாரகன் சுக்ரன் 12ல் மறைவு. சனி மற்றும் சுக்ரன் அஸ்தங்கம் அடையவில்லை. ஏழாம் இடத்திற்க்கு அசுப கிரகமான சூரியன் பார்வை உள்ளது. ஆனால் களத்ரகாரகன் சுக்ரனுக்கு குருவின் பார்வை உள்ளது. ஜாதகருக்கு 10 வயது முதல் 30 வயது வரை சுக்ர தசை (நான்கு மற்றும் பதினோரமிட வீட்டு அதிபதி). ஏழாம் இடத்தில் அசுப கிரகங்கள் எதுவும் இல்லை. எனவே சற்று தாமதித்து ஆனால் கண்டிப்பாக திருமனம் நடந்திருக்கும். ஜாதகரின் பிறந்த தினம் குறிப்பிட படாததால் எந்த வயதில் திருமனம் ஆனது என்று சொல்லமுடியவில்ல.

குடும்ப வாழ்க்கை : ஐந்தாம் மற்றும் பத்தாம் இட அதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்திருப்பது சிறப்பு. மேலும் இரண்டாம் இடத்திற்க்கு குரு பார்வை உள்ளது. எனவே இரண்டாம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. மாங்கல்ய ஸ்தானமான 8ம் இடத்தில் சுப கிரகமான குரு அமர்ந்துள்ளதால் கணவரின் ஆயுளுக்கு பங்கம் இல்லை. எனவே குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

venkatesh r said...

ஆசிரியருக்கு வணக்கம். இரண்டாம் கேள்வியே, முதல் கேள்விக்கு பதிலாக உள்ளது.

புதிர் எண்: 60 க்கான விடை.

1. ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும்.
2. குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை. மன/ மண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்வார்.

அலசல் இதோ:

கடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி. புனர்பூ தோஷமுள்ள ஜாதகம்.

1. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இல்லை. லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் மனக்காரகனுமான‌ சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.
2. குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2க்கு 12ல், லக்கினத்தில் அமர்ந்துள்ளார்.இது அவருக்கு நல்ல இடமில்லை.
3. இரண்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து 6/9ம் அதிபதி குருவின் பார்வையில் உள்ளார். சனி 12ல் அமர்ந்து தன் 3ம் தனிப் பார்வையில் செவ்வாயை பார்க்கிறார்.இந்த காரணங்களால் இரண்டாமிடமும், செவ்வாயும் பலமாக இல்லை.
4. களத்திராதிபதி சனி,காரகன் சுக்கிரனுடன் 12ல் மறைந்து விட்டார். தவிர 12ம் அதிபதி புதனின் கூட்டணி அவர்களை வலிமை இழக்க‌ வைத்துள்ளது.
5. 6/9ம் அதிபதி குரு தன் 5ம் தனிப் பார்வையில் இவர்களை பார்க்கிறார்.

இந்த காரணங்களால், ஜாதகிக்கு, 26 வயதிற்கு மேல் சுக்கிர தசை, குரு புக்தியில் திருமணம் நடந்திருக்கும். அதற்கு பிறகு வந்த சந்திர தசை ராகு (அ) சனி புக்தியில் மண முறிவு ஏற்பட்டிருக்கும்.

இதற்கான காரணங்கள் :

1. நவாம்ச லக்னத்திற்கு ஏழில் சனி+சந்திரன் கூட்டணி. புனர்பூ தோசம்.
2. சந்திரன் நீசமடைந்து, ராகுவுடன் கூட்டணி.இதனால் மன வலிமை குறைந்துள்ளது.
3. ஏழாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
4. ஜாதகத்தில் சொல்லிக் கொள்ளும்படியான யோகங்களில்லை.

இதனால், ஜாதகிக்கு கோச்சாரத்தில் வந்த நீச சந்திர தசை ராகு புக்தியில் ஏற்பட்ட மனச் சலனம் காரணமாக‌ மண முறிவுக்கு வித்திட்டு இருக்கும்.

kmr.krishnan said...

இந்த ஜாதகத்தில் குருவின் பார்வை என்ற ஒரு விஷயம் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாற வைக்கிறது.

1.முதலில் லக்கினம் செவ்வாய் சனி ஆகிய கிரஹங்களால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் உள்ளது.லக்கினத்திற்கு 22 பரல்தான். லக்கினாதிபதி சந்திரன் நீசம் அடைந்ததும் இன்றி ராகுவுடன் கூட்டணி. எனவே அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஜாதகம்.
2.இரண்டாம் அதிபன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது, தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது சிலாக்கியமில்லை.எனவே குடும்ப வாழ்க்கை சுகமில்லை.
3. ஏழாம அதிபன் சனைச்சரன் 12ல் அமர்ந்தது கணவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அதிகம் பிரிந்து வாழும் சூழல். அது வேலை காரணமாகவும் இருக்கும்.
4 ஏழாம் அதிபன் குருவின் பார்வை பெறுவதும் களத்திரகாரகன் சுக்கிரன் குருவின் பார்வை பெறுவதும் எட்டாம் அதிபன் 12ல் மறைவதும் இவருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு அதிகம் என்ப்தை சுட்டுகிறது.சுக்கிர தசா புத புக்தியில் 28 வயதுபோல் திருமணம்.
5.இந்த லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் இரண்டாமிடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்தது சுமாரான குடும்ப வாழ்வை கொடுத்திருக்கும்.
6. லக்கினத்திகு ஐந்தில் ராகு அமர்ந்தது குழந்தைப்பேறு இல்லாமல் செய்கிறது.
28 வயதில் திருமணம் ஆகி குழந்தைப்பேறு இன்றி வருந்த்திக்கொண்டு, மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.
மண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு.

Senthil Nathan said...

ஐயா.

இந்த பெண்மணியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சனீஸ்வரன் பன்னிரண்டில் களத்திர காரகன் சுக்கிரனுடன் இருப்பதாலும் சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்திருப்பதாலும் இவர் 1990-1991 ல் திருமணமாகி விதவையானவர்,

மேலும் இரண்டாம் அதிபதி சூரியன் இரண்டிற்கு பன்னிரண்டில் இருப்பதாலும் சூரியன் நவாம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் இவருக்கு குடும்பம் இல்லை .

அதாவது

இலக்கினாதிபதி ஐந்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் உடன் உச்ச இராகுவும் நீச்ச கேதுவும், செவ்வாயும் சந்திரனை பாதிப்பதாலும் இவர் குழந்தை இல்லாதவர். குறை ஆயுளை கொண்டவர்.

vanikumaran said...

1. திருமணத்திற்க்கு 7ம் பாவம்,அதிபதி,காரகன் இதில் 7ம் பாவாதிபதி சனி விரையவீட்டில் விரையாதிபதியுடனும், காரகன் சுக்கிரன் அதே விரையவீட்டில் விரையாதிபதியுடனும் சேர்ந்து கெட்டுள்ளது.

2. குடும்ப வாழ்விற்கு 2ம்வீடு,அதிபதி,காரகன் இவற்றில்
2ம் வீடு செவ்வாயாலும்,அதிபதி 2க்கு 12ல் விரையத்திலும், கிரக காரகன் குரு 8ம் இடத்தில் மாந்தி உடன் சேர்ந்தும்,2ம் அதிபதி சூரியன் நவாம்சதில் நீசமாகி குடும்ப பாவம் முற்றிலும் கெட்டுள்ளது.

3. மேலும் லக்னம், மற்றும் 12ம் வீடு பாபகத்தாரி யோகத்தில். லக்னாதிபதி சந்திரன் நீசம் மற்றும் ராகுவின் பிடியில்

இதன் காரணங்களால் கணவன்,குடும்பம் இல்லற வாழ்வு இல்லை எனலாம்

Kirupanandan A said...

இந்த ஜாதகருக்கு தாமதித்த திருமணம் யோகம்தான். 30 வயதிற்கு மேல் சூரிய தசையில் சந்திர புத்தியில் என்று சொல்லலாம். 7ம் அதிபதி சனி, களத்திர காரகன் சுக்கிரன் இருவருமே ஒரு சேர 12ல் மறைந்ததும் அந்த இடம் பாப கர்தாரி யோகத்தில் இருப்பதும் தாமதத்திற்கு முக்கிய காரணம். திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கும். செவ்வாய் வாக்குஸ்தானமான 2ல் இருப்பது வீண் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகலாம்.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண்..60
கடக்க லக்னம் .லக்னாதிபதி 5 ல் திரிகோணத்தில் நீசமாக.. ரகுவுடன் கூட்டு . மனநோயாளி .
லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் ..
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் குரு7ம் பார்வை ..
களச்திரகாரகன்சுக்கிரன் &ஏழாம் வீட்டதிபதி சனி 12 ல் மறைவு ..
எட்டில் குருவுடன் மாந்தி ...திருமணம் ஆனாலும் விதவையாகும் வாய்ப்பு. அல்லது விவாகரத்து ..

Venkat Lakshmi said...

உயர்திரு ஐயா,வணக்கம்.
புதிர் 60க்கு விடை:லக்கணாதிபதி நீசம்,2ம் வீட்டு அதிபதி அதற்கு பனிரெண்டில், 7ம் வீட்டு அதிபதி அதற்கு 6ல், களத்திரகாரகன் சுக்கிரன் லக்கணத்திற்கு பனிரெண்டில்.சுக்கிரதிசையில் திருமணம் முடிந்திருக்கும்,குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.

ravichandran said...

Respected Sir,

My answer for our today's Quiz No.60:

The Native of the horoscope is 40 years old.

1. She has got married and short span of Married life.

2. Her marriage or family life is in trouble.

Reasons:

1. Lagna lord Moon is in debilitated position at fifth house along with exalted Rahu.
2. Bagyathipathi (Jupiter) is in twelfth house from its own house.
3. Seventh lord and 4th lord is in twelfth house from lagna,
4. There is Kala sarpa dhosa.
5. There is kuja dosha.
6. Seventh house lord Saturn and Kalathra karaga Venus is hemmed between Kethu and Sun. (baba kathiri yoga)
7. Lagna and second house lord is in Baba kathri yoga. (Saturn and Mars)
8. There is Vibaretha Raja Yoga.(Eighth house lord Satrun and Twelfth house lord Mercury is in Twelfth house).
Marriage:

i)Though seventh house lord and kalathra karaga is in twelfth house,she has married at the age of 26 to 29 during Venus Dhasa period because Jupiter is aspecting as its 5th aspect and aspecting second house too. Because of vibareetha raja yoga also supported to get marry.

ii) In Navamsa, Venus is exalted, associated with seventh house lord and parivarthna yoga with Jupiter.

Hence, all the above reasons she got married.

Marriage or Family life:
i)Family life is not happy due to seventh house lord and kalathra karaga are in baba kathiri yoga nd sitting in twelfth house from lagna,
ii) Saturn is aspecting second house as its 3rd aspect. Its bad and second house lord is sitting twelfth house from its own house.
iii) Mars is sitting in second house and getting saturn's aspect. Its too bad for family life.
iv) Saturn is aspecting 9th house and 9th house lord is sitting 12th house from its own house. Its not good sign.
v) Fourth house lord sitting in twelfth house along with saturn.It shows bad sign.

Her Husband deceased or seperation due to Sun is sitting twelfth house from its own house( 8th house lord from 7th house)

vi)Saturn is sitting twelfth house from lagna and under baba kathiri yoga and getting sixth house lord aspects.
vii)In Navamsa, Second house lord is debilitated.

viii) lagna lord and seventh house lord are in 6/8 position.

Hence all the above reasons, She has short span of marriage life and family life was not happy.

Since Venus and Saturn are associated and sitting in twelfth house, she involves in illicit sex. She has more sexual feelings and It spoils her life.

With kind regards,
Ravichandran M.


Udhayaganesh said...

She is not married.

Reason:

1) 7th god(saturn) and venus are in 12 house 2) lagna god is necham 3) 2nd house sun is in 12th house

Family life would be okay because cancer(kadagam lagna) favour planet are mars and guru. Mars in in 2nd house and guru is looking 2nd house.

Raja Murugan said...

ஆசிரியருக்கு வணக்கம், இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி நீசம் ஆனதாலும்,சுபகிரகமான குரு 8 ல் மறைவதாலும், சுக்கிரனும்,7 ம் அதிபதி சனியும் 12 ல் மறைவதாலும் இந்த ஜாதகருக்கு தாமத திருமணம். இந்த ஜாதகரின் நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றும்,சந்திரன் மற்றும் 7 அதிபதியுடன் இருப்பதால் திருமணம் ஆகியிருக்கும். ஆனால் இவரின் மற்ற கிரகங்களின் நிலை இவர் மிகவும் கடன்,நோய்,வறுமை,மிக அதிக பொருள் விரயம் ஆகியவற்றுடன் மிக சிரமமான வாழ்கை வாழ்வார். புத்திர தோஷம் உள்ளவர். மிகுந்த மன கவலை, உளைச்சலில் இருப்பவர்.

valli rajan said...

Dear Guruji,
1. Lagna lord is neecham
2. Lagnam is in PapaKarthari Yoga
3. Jupiter in eight house
4. Venus in 12 house.
5. 7th Lord in twelfth house but aspected by guru.
6. Venus is uccham in navamsam. Neecha banga raja togam.
7. 2nd lord is neecha in navamsam.
Answer:
1.Marriage is held at the age of 30 when surya dasa period.
2.But there will separation within 4 years when surya dasa saturn sub
period.
3. Marriage happened because strong venus and aspect of guru on seventh lord.

Ravi said...

7th lord even though in 12th, it is with sukra along with its friend and friends rasi (Budhan and Mithuna) with Guru’s aspect. Hence marriage took place at right age.

2nd lord in 1st but in neecha sign in Navamsa. Sukra and Shani combination in both Rasi and Navamsa provided good number of challenges in the family life. Placement of Chevvai in 2nd (rasi) also added fuel to these challenges.

raghupathi lakshman said...

இன்றைய புதிருக்கான விடை:

1. திருமணம் ஆகவில்லை.

2. குடும்ப வாழ்க்கையும் அமையவில்லை.

* கடக லக்கினம் விருச்சிக ராசி ஜாதகி

*லக்கினாதிபதி நீச்சம் அடைந்து பாவியான ராகுவுடன் இணைந்து
பலமிழந்தார். லக்கினம் பாபகர்தாரி யோகத்திலமைந்து சுபர்பார்வை ஏதுமின்றி அமைந்தது நன்மையல்ல.

* பெண்களுக்கு பாக்கிய ஸ்தானம் சிறப்பாக அமைவது மிக முக்கியம் ஜாதகத்தில் பாக்கியாதிபதி குரு ஜாதகத்திற்க்கு 8லும்,பாக்கிய ஸ்தானத்திற்க்கு 12இலும் அமைந்தது கேடாகும்.

*7ம் அதிபதியான சனிபகவான் களத்திரகாரகரான சுக்கிரபகவானுடன்
ஆட்சி பெற்ற புதனுடன் 12இல் மறைந்தது திருமணத்திற்க்குதடையாக அமைந்தது.

* சுகஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தது,12மிடம் பாபகர்த்தாரி யோகத்தில் அமைந்து (அயன சயன ஸ்தானம்) நன்மையளிக்கவில்லை.

* குடும்பஸ்தானம் பாகியஸ்தானம் சனி பார்வைனால் கெட்டது.

*குடும்பஸ்தானாதிபதி சூரியன் 2ம் இடத்திற்க்கு 12ல் அமைந்தது
கெடுதலாகும்.
*சனியும் சுக்கிரனும் கிரகயுத்ததில் அமைந்தது கெடுதல் தந்தது.
*சுபர்கள் நன்மை செய்யும் நிலையில் இல்லை.என‌வே நற்ப‌லன்
குறைவே.இயன்றவரை முயற்சித்திருக்கிறேன்.

விடையினை சரியா என தெரிந்துகொள்ள ஆவல் ஐயா


நன்றி

thozhar pandian said...

இலக்கினாதிபதி நீசம். 7ம் வீட்டுக்கார சனி அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு மறைவிடமான 12ல். களத்திரகாரகர் சுக்கிரனும் 12ல். 2ம் வீட்டுக்கார சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் அதாவது இலக்கினத்தில். 2ம் வீட்டில் செவ்வாய். ஆனால் இவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகர் ஆகிறார். பாக்கியாதிபதியும் முதல் நிலை சுப கிரகமான குரு பகவான் இலக்கினத்திற்கு எட்டில். உடன் மாந்தி. திருமண வாழ்விற்கு அவ்வளவு விசேஷம் இல்லாத ஜாதகம். ஒரே ஆறுதல் களத்திரகாரகர் மேலும், 7ம் வீட்டுக்காரர் மேலும், 2ம் வீட்டின் மேலும், குரு பகவானின் பார்வை விழுவது மட்டுமே. சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். இராகுவும் சந்திரனும் சேர்ந்து 5ம் வீட்டில் இருக்கின்றனர். அதுவும் வலிமை இல்லாத சந்திரன். ஜாதகியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக இருக்கும். சந்தேக குணம் இருக்கும். புத்திர தோஷம் உண்டு. 12ல் சனி இருப்பதால அயன சயன பாக்கியத்திற்கு கேடு. மண வாழ்க்கை இனித்திருக்காது. பிரிந்து வாழவும் வாய்ப்புள்ளது.

Sivachandran Balasubramaniam said...

மதிப்பிற்குரிய ஐயா !!!

புதிர் எண் அறுபதுக்கான பதில் !!!

உதாரணமாக கொடுக்கப்பட்ட ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றிருக்க வாய்பில்லை !!! லக்கினாதிபதி சந்திரன் நீசம். அவன் உச்ச ராகுவுடன் சேர்ந்தாலும் பாபகிரக பிடியில் குறைந்த பரல்களுடன். எழாமதிபதி சனி களத்திரகாரகன் சுக்கரனுடன் லக்கினத்திற்கு 12 இல் அமர்ந்ததுடன், அவர்கள் இருவரும் கடுமையான கிரக யுத்தத்தில், மற்றும் சங்கமத்தில், மேலும் 12 ஆம் வீடு கடுமையான பாபகர்த்தாரி யோகத்தில். பெண்களுக்கு பாக்கியாதிபதி முக்கியம், பாக்கியாதிபதி குரு வக்கிர நிலைமையில், 9 ஆம் வீடிற்கு 12 இல் மாந்தியின் பிடியில், குருவே 6 ஆம் அதிபதி ஆவதாலும் ( வில்லன் ), அவன் பார்வை சனி மற்றும் சுக்கிரன் மேல் விழுவதும் நன்மை அல்ல.. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஜாதகையின் அயன, சயன, போக சுகத்திற்கு கேடு. சுக்கிரன் சுக ஸ்தானாதிபதி வேறு. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடம். யோகக்காரகன் செவ்வாய் இரண்டாம் இடத்தில் மிக குறைந்த பரல்களுடன், குடும்பஸ்தனாதிபதி சூரியன் இரண்டாம் வீட்டிற்கு 12 இல், பாபகர்த்தாரி யோகத்தில், அம்சத்தில் நீசம் வேறு. இத்தகைய காரணங்களால் ஜாதகிக்கு திருமண பாக்கியம் கிடைக்க வாய்பில்லை !!!

இப்படிக்கு

சிவச்சந்திரன்.பா

Dallas Kannan said...

The chart has lot of yogams, but with a catch..
Vipareetha raja yogam -- in papakarthari yogam
Gajakesari -- Guru in 8th place and Moon is neecham
Gurumangala - Guru is in 8th place.

For a girl 9th place/lord and Guru is important. In this chart all 3 are spoiled.
7th lord is in 12 plance... the consolation is, it is in vipareetha rajayogam and Guru is looking at it.
2nd place is lord is in 12th place from it and Mars is there.

So I am going to say, she is married late after Sukra Dasa.
But Marrage life did not last long.

raju maharajun said...

உயர் திரு ஆசிரியர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துகொள்கிறேன்.அய்யா நான் புதிய மாணவன் ஆனால் உங்கள் அனுபவம் தான் எனது வயது இருக்கும் போல் தெரிகிறது மேலும் தாங்கள் தமிழ் சேவையை பாராட்டி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் தாங்கள் ஜோதிட பாடத்தை தொடர்ந்து ஒரு மாதகாலமாகவே படித்து கொண்டு வருகிறேன்.ஆனால் அதில் 230-280 வரைக்கும் உள்ள பாடங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் பெறப்படும் என்று குறிப்பிட்டுள்லிர்கள் இதோ எனது மின்னஞ்சல் முகவரி mrajubalaji@gmail.com

sivaradjane said...

7 - ம் அதிபதி சனி’ 12 ல் மறைவு. உடன் களத்திரக்காரகன் சுக்கிரனும் மறைவு மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில்’ சிக்கிக் கொண்டுள்ளனர். பாக்கியாதிபதி குரு’ அந்த வீட்டுக்கு 12 ல் மறைந்துள்ளார்.2 ம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் மறைவு ,கூடவே அவரும் பாபகர்த்தாரியில் சிக்கியுள்ளார். ஆயினும் 9,6 க்குடைய குரு’வின் பார்வை 7 ம் அதிபதி சனி’க்கும் ,சுக்கிரனுக்கும் இருக்கிறது. 2-ம் இடத்திற்கும் குரு பார்வை உள்ளது.மேலும் அம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில்..உடன் லக்னாதிபதி சந்திரனுடன் 7-ம் அதிபதி
கூட்டாக உள்ளதால் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். ஆனால் 12-ம் இடமான அயன ,சயன போகத்தில் சனி இருப்பதால் இல்லற வாழ்க்கை சுகப்பட்டிருக்காது. மேலும் 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை.2-ம் அதிபதி ’சூரியன்’அம்சத்தில் நீசமாகியிருப்பதால் ஜாதகி கணவனை பிரிந்தவராயிருப்பார்.