மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

12.6.14

Astrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும்!

Astrology: படித்த முட்டாள்களும், படிக்காத மேதைகளும்!

படிப்பை மட்டும் வைத்து ஒருவரை மேதை என்றோ அல்லது படிக்காததை மட்டும் வைத்து ஒருவரை முட்டாள் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

ஜாதகத்தில் படிப்பிற்கும் அறிவிற்கும் தனித்தனி இலாக்காக்கள் (வீடுகள்). கல்விக்கு நான்காம் வீடு. அறிவிற்கு (keen intelligence) ஐந்தாம் வீடு.

நான்காம் வீடு நன்றாக இல்லை என்பதற்காக, ஐந்தாம் வீடும் கெட்டிருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

சிலருக்கு 4ஆம் வீடு நன்றாக இருக்கும். சிலருக்கு 5ஆம் வீடு நன்றாக இருக்கும். நூற்றில்  பத்து அல்லது பதினைந்து பேர்களுக்குத்தான் இரண்டு வீடுகளும் நன்றாக இருக்கும். அதெல்லாம் வாங்கி வந்த வரம்!

அதனால்தான் பெரியவர்கள் இப்படிச் சொல்வார்கள்: படித்த முட்டாள்களும் உண்டு. படிக்காத மேதைகளும் உண்டு!

கவியரசர் கண்ணதாசன் பள்ளிப் படிப்பையே முடிக்காதவர். அவருக்கு இல்லாத அறிவா? திறமையா? அனுபவமா?

அவர் இந்த படித்த முட்டாள்கள், படிக்காத மேதைகள் பிரச்சினையைத் தன்னுடைய பாடல் ஒன்றில் ஏற்றியதுடன், அதற்கு அற்புதமானதொரு விளக்கத்தையும் கொடுத்தார்

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு!

- கவியரசர் கண்ணதாசன்

படம்: படிக்காத மேதை. முழுப்பாடலும் வேண்டுமென்பவர்கள் இணையத்தில் உள்ளது. பாருங்கள்.
---------------------------------------------------------
இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்:


திருமதி ஸிமிரிதி இராணி அவர்கள் மோடியின் மந்திரி சபையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்.Minister of Human Resource Development of Government of India.

23.3.1976ல் தில்லியில் பிறந்த அவருக்கு 38 வயதுதான் முடிந்துள்ளது. 40 வயதிற்குக் கீழே உள்ளவர்களை எல்லாம் இளமையானவர்கள் என்று எடுத்துக்கொண்டால் அவரும் இளமையானவர்தான்!

அழகான தோற்றம் உடையவர். ஆரம்ப காலத்தில் மாடலாகவும், தொலைக்காட்சி நடிகையாகவும் இருந்து மக்களிடையே பிரபலமானவர். அவருடைய தந்தை பஞ்சாபி. தாய் பெங்காலி. மூன்று சகோதரிகளில் அவர்தான் மூத்தவர். பன்மொழிகளில் வல்லவர். திறமையாகப் பேசக்கூடியவர்.

கல்வி: 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

பட்டப் படிப்பு படிக்காத அவருக்கு எப்படி முக்கியமான துறையைக் கொடுக்கலாம் என்று பல அன்பர்கள் (காங்கிரஸ்காரர்கள்) கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.பட்டப் படிப்பு ஒன்று மட்டும் எப்படித் தகுதி என்று எப்படிக் கொள்ள முடியும்? அறிவு, புத்திசாலித்தனம், திறமை எல்லாம் முக்கியமில்லையா?

அவர் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றின் காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களே அவர் தகுதியானவரா அல்லது இல்லையா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்
அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13 comments:

Kirupanandan A said...

நமக்கும் அறிவுக்கும் ரொம்ப தூரம் வாத்தியார். ஜாதகத்தில் 5ல் (மகரம்) வில்லனான செவ்வாயும் வில்லாதி வில்லனான ராகுவும் இருக்கிறார்கள். வேண்டாம் சற்று தள்ளி 6ம் வீட்டிற்குச் சென்று அமர்ந்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

வேப்பிலை said...

படிப்பு வேறு அறிவு வேறு என அன்று
பகர்ந்ததை இன்று பதிவாகி உள்ளது

அய்யர் சொல்வது
அது தான்

படிப்பை வாங்க முடியும். இந்த
பாரில் அறிவை வாங்க முடியாது

அறிவுள்ளவர்களுக்கு அது புரியும்
அது சரி .. அறிவு என்றால் என்ன?

venkatesh r said...

காலேஜ் படிப்பு காப்பி ஆத்ததான்!
பி.ஏ. படிப்பு பென்ச்சு துடைக்கத்தான்!
சி.ஏ. படிப்பு செருப்பு தைக்கத்தான்!
அப்படினு பாட்டை அப்பவே பாடிப்புட்டாங்களே!

காங்.ஐக்கு வேறு வேலை இல்லை. தேர்தலுக்கு முன் மோடிஐ டீ வித்தவர் பிரதம மந்திரி ஆக முடியாது என்றனர். இப்பொழுது இந்த விஷயத்தை "கை"யில் எடுத்து இருக்கின்றனர். சோனியா காந்தியை விட இவர் அதிகம் படித்தவர்தான்.

kmr.krishnan said...

நல்ல குரல் வளம், ஆற்றொழுக்குப்போன்று தங்கு தடையில்லாத சொற்பொழிவு,எளிமையான அழகான ஆங்கிலப் பிரயோகம்,அந்த சபைக்குத்தேவையான கருத்துக்கள்; ஸ்மிரிதி இரானி பாராட்டப் பட வேண்டியவரே.

மோடி தேர்வு செய்த அமைச்சர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில்
திறமையானவர்களே.

ஸ்மிரிதியின் கல்வித்தகுதியைக் கசிய விட்டதாகக்கூறி இடை நீக்கம் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் வேலையில் சேரச்செய்த பெருந்தன்மை; தன் பணியினைப்பார்த்து விமர்சிக்கலாம்,கல்வித் தகுதியைப் பார்த்து அல்ல என்று அழகாக எதிர்கொண்ட பாங்கு ஆகியவை ஸ்மிரிதியின்
ஆளுமையை வெளிப் படுத்துகிறது.

பொருளாதார மேதை, அரசியல் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ஆட்சி செய்ததையும் பார்த்தோம்.ஒரு சுமாரான ஹோட்டலில் 125 ரூபாய் செலவு செய்தாலே காலை சிற்றுண்டியை முடிக்க முடியும் என்ற நிலையினைக் கொண்டு வந்து விட்டார்கள். 'பிரெட் கிடைக்காவிட்டால் கேக் சப்பிடுங்கள்' என்ற அறிவுரையைத்தான் படித்த முட்டாள்களால் கூற முடியும்

Dallas Kannan said...

Respected Sir
Great post. Great Speach...
Some questioned in facebook if any of the previous rulers gave such a great speach without notes or even with notes.

I think some people will never learn even after knowing the great people like Kamaraj, edision and so on...

Me respect for her gone up a lot compared to Sonia where she lied about her education.

I am with Kirupanandan.... I have neecha Sani in my 5th and 5th lord is in 12th place!!!

Subbiah Veerappan said...

/////Blogger Kirupanandan A said...
நமக்கும் அறிவுக்கும் ரொம்ப தூரம் வாத்தியார். ஜாதகத்தில் 5ல் (மகரம்) வில்லனான செவ்வாயும் வில்லாதி வில்லனான ராகுவும் இருக்கிறார்கள். வேண்டாம் சற்று தள்ளி 6ம் வீட்டிற்குச் சென்று அமர்ந்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறார்கள்./////

கேட்கமாட்டார்கள். கேட்டால்தான் நன்றாக இருக்குமே! எல்லோரும் அவரவருடைய ஜாதகத்தை விருப்பப்படி மாற்றி அமைத்துக்கொள்ளலாமே!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
படிப்பு வேறு அறிவு வேறு என அன்று
பகர்ந்ததை இன்று பதிவாகி உள்ளது
அய்யர் சொல்வது
அது தான்
படிப்பை வாங்க முடியும். இந்த
பாரில் அறிவை வாங்க முடியாது
அறிவுள்ளவர்களுக்கு அது புரியும்
அது சரி .. அறிவு என்றால் என்ன?/////

அறிவு என்பது நீங்கள் அறிந்து வைத்திருப்பவை! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படக்கூடியவை!

Subbiah Veerappan said...

Blogger venkatesh r said...
காலேஜ் படிப்பு காப்பி ஆத்தத்தான்!
பி.ஏ. படிப்பு பென்ஞ்ச்சு துடைக்கத்தான்!
சி.ஏ. படிப்பு செருப்பு தைக்கத்தான்!
அப்படினு பாட்டை அப்பவே பாடிப்புட்டாங்களே!
காங்.ஐக்கு வேறு வேலை இல்லை. தேர்தலுக்கு முன் மோடிஐ டீ வித்தவர் பிரதம மந்திரி ஆக முடியாது என்றனர். இப்பொழுது இந்த விஷயத்தை "கை"யில் எடுத்து இருக்கின்றனர். சோனியா காந்தியை விட இவர் அதிகம் படித்தவர்தான்.

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
நல்ல குரல் வளம், ஆற்றொழுக்குப்போன்று தங்கு தடையில்லாத சொற்பொழிவு,எளிமையான அழகான ஆங்கிலப் பிரயோகம்,அந்த சபைக்குத்தேவையான கருத்துக்கள்; ஸ்மிரிதி இரானி பாராட்டப் பட வேண்டியவரே.
மோடி தேர்வு செய்த அமைச்சர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் திறமையானவர்களே.
ஸ்மிரிதியின் கல்வித்தகுதியைக் கசிய விட்டதாகக்கூறி இடை நீக்கம் செய்யப்பட்ட பல்கலை ஊழியர்களை மீண்டும் வேலையில் சேரச்செய்த பெருந்தன்மை; தன் பணியினைப்பார்த்து விமர்சிக்கலாம்,கல்வித் தகுதியைப் பார்த்து அல்ல என்று அழகாக எதிர்கொண்ட பாங்கு ஆகியவை ஸ்மிரிதியின் ஆளுமையை வெளிப் படுத்துகிறது.
பொருளாதார மேதை, அரசியல் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் ஆட்சி செய்ததையும் பார்த்தோம்.ஒரு சுமாரான ஹோட்டலில் 125 ரூபாய் செலவு செய்தாலே காலை சிற்றுண்டியை முடிக்க முடியும் என்ற நிலையினைக் கொண்டு வந்து விட்டார்கள். 'பிரெட் கிடைக்காவிட்டால் கேக் சப்பிடுங்கள்' என்ற அறிவுரையைத்தான் படித்த முட்டாள்களால் கூற முடியும்////

உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger Dallas Kannan said...
Respected Sir
Great post. Great Speach...
Some questioned in facebook if any of the previous rulers gave such a great speach without notes or even with notes.
I think some people will never learn even after knowing the great people like Kamaraj, edision and so on...
Me respect for her gone up a lot compared to Sonia where she lied about her education.
I am with Kirupanandan.... I have neecha Sani in my 5th and 5th lord is in 12th place!!!////

நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Jeevalingam Kasirajalingam said...


சிறந்த பகிர்வு

visit: http://ypvn.0hna.com/

thozhar pandian said...

ஸ்மிரிதியின் கல்வி ஒரு குறை என்று கூறும் காங்கிரசிடம் முந்தைய ஆட்சியின் அவலத்தை யாராவது பட்டியலிட்டால் தேவலை. மதுரை "அஞ்சா நெஞ்சர்", "2ஜி புகழ்" ஆ.இராசா, "மாவீரன்" நடிகர் நெப்போலியன் ஆகியோர் அனைவரும் பட்டதாரிகளே. கர்ம வீரர் காமராசர் பட்டப் படிப்பு படிக்கவில்லை. எந்த காங்கிரஸ்காரராலாவது மேற்கூறிய கனவான்கள் பட்டதாரிகளாதலால் கர்ம வீரரை விட சிறந்தவர்கள் என்று கூற இயலுமா? இதை தட்டச்சு செய்ய என் விரல்கள் கூசுகின்றன. சோனியா காந்தி மற்றும் இராகுல் காந்தியின் தகுதிகள் என்ன? பொருளாதார மேதைகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொண்டவர்கள் இன்று நாட்டை ஆக்கி வைத்துள்ள இலட்சணத்தை தான் நாம் கண் கூடாக பார்க்கிறோமே. திரு.கே.எம்.ஆர்.கி கூறியதை நானும் ஆமோதிக்கிறேன்.

மோடியை தேனீர் விற்றவர் அதனால் பிரதமராக தகுதியில்லாதவர் என்று காரி உமிழ்ந்த இந்த கூட்டத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். இன்னும் இவர்கள் திருந்தியபாடில்லை. மோடியை பாராட்டி பேசிய சசிதரூரை கண்டித்திருக்கும் இவர்களுக்கு அரசியல் முதிர்ச்சி இன்னும் வரவில்லை, இனி வரப்போவதுமில்லை.

Prabu said...

Dear Sir,

Well said about the knowledge and education also thanks for your Mrs Smiriti Irani video.

She will be prove her talent as a education minister in INDIA

JAIHIND