மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.6.14

Astrology: quiz 58: Answer: வந்தது கிளியுமில்லை. வாழ்க்கை கொடுக்கவுமில்லை!


Astrology: quiz 58: Answer: வந்தது கிளியுமில்லை. வாழ்க்கை கொடுக்கவுமில்லை!

பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா

பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
(பாடுவது கவியா)

பாடல்:  கவியரசர் கண்ணதாசன்.
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகருக்கு தாமதமாக 33 வயதிற்கு மேல் திருமணம் நடைபெற்றது.

2. ஆனால் மண வாழ்க்கை ஒரு ஆண்டிற்கு மேல் நிலைக்க வில்லை. திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!


1. சிம்ம லக்கின ஜாதகர். லக்கினாதிபதி சூரியன் 12ல். லக்கினாதிபதி விரையத்தில் அமர்ந்தால் ஜாதகர் வாழ்க்கை அவருக்குப் பயன்படாது என்பது விதி.

2. சிம்ம லக்கினத்திற்கான யோககாரகன் செவ்வாய் லக்கினத்திலேயே அமர்ந்திருந்தாலும், உடன் அமர்ந்த ராகுவால் கெட்டிருக்கிறார்.

3. ஏழாம் வீட்டில் கேது இருந்தால், அது அந்த பாவத்திற்குக் கேடானது.

4. ஏழாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறான். சோபிக்க வில்லை.

5. பூர்வ புண்ணியாதிபதி குரு ஆறாம் வீட்டில் அமர்ந்து கெட்டிருக்கிறார். உடன் அந்த வீட்டுக்காரன் சனியின் கூட்டு. அதுவும் சோபிக்க வில்லை.

6. குடும்ப வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டிய 2ஆம் வீட்டுக்காரன் புதன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்து விட்டான். அதுவும் சரியில்லை.

7. செவ்வாய் லக்கினத்தில் இருந்து தனது பார்வையால் 7ஆம் வீட்டையும் அங்கே இருக்கும் கேதுவையும் பார்க்கிறார். இருவரும் சேர்ந்து ஜாதகருக்குக் கடுமையான ரோகம் உள்ள மனைவியைக் கொடுத்தார்கள். அதன்காரணமாக அவதியுற்ற ஜாதகர் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டியதாயிற்று.

8. சிம்ம லக்கினத்திற்கு சுக்கிரதிசை நன்மையானதல்ல. சுக்கிரதிசை செவ்வாய் புத்தியில் விவாகம் ரத்தானது.

9. சுக்கிரதிசையின் பின்பகுதியில் ஜாதகர் தனது 2ஆவது விவாகத்திற்கு முயற்சி செய்தார். அது ஈடேறவில்லை.

10. சனியின் 3ஆம் பார்வை சந்திரனின் மேல். புனர்பூ தோஷம். தம்பதிகளின் பிரிவிற்கு அதுவும் ஒரு காரணம்

11. 4ஆம் வீட்டில் மாந்தி. சுகக்கேடான ஜாதகம்

அலசல் போதுமா?

போட்டியில் 27 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 9 பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்

அந்த 9 பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் ‘பிரிவில்’ முடிந்திருக்கும் என்று எழுதியவர்கள் 3 பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் *******ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான பதிலை ஒட்டி எழுதியவர்கள் 6 பேர்கள். அவர்களின் பெயரும் பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Here is my quick analysis.
    1. Kethu is in 7th place
    2. Mars is in lakna looking at 7th place, but he is yogakaraha for Simha lakna.
    3. 2nd lord Budha is in 12place, but with laknathipaty and Guru looks at it. Guru looks at 2nd house as well.
    4. 7th lord is 6th place. But he is also 6ht lord and 8th log Guru is with him. Vipareetha Rjayogam.
    5. Sukran is in good place (Friend's house and in 11th place).
    6. Sukra Dasa comes at the right time.
    So he got married after 27 in sukra Dasa.
    Married life will have problems because of Kethu, Mars look and Sani being in 6th house, but who does not in these days...
    Tuesday, June 10, 2014 4:07:00 AM//////

-----------------------------------------------------
2 ******
/////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    ஜாதகருக்கு 26 வயதிற்க்கு மேல் சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்க வேண்டும்.7ம் வீட்டிற்கு செவ்வாய்,ராகு பார்வை. 7ம் அதிபதி சனி 6ல்(வக்கிரம்),தன் வீட்டிற்க்கு 12 மற்றும் லக்கினத்திற்க்கு 6ம் இடத்தில்.குடும்பாதிபதி புதன்,லனாதிபதி சூரியனுடன் சேர்ந்து 12ல் மறைவு.
    திருமணத்திற்க்கு பின் மனைவி பிரிவு அல்லது மறைவு.
    Tuesday, June 10, 2014 12:28:00 PM//////
-----------------------------------------------------------
3
/////Blogger murali krishna g said...
    லக்னாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில். ஏழாம் அதிபதி சனியும் அதற்கு விரய ஸ்தானமான 6-ல் வக்கிரம் பெற்று வர்கோதமும் ஆகி இருக்கிறார். லக்னத்தில் செவ்வாய் ராகு. மனிதர் காதல் வசப்பட்டு தோல்வியுற்று இருப்பார். சனி குரு ஆறாம் இடத்தில் சேர்க்கை பெற்று வக்கிரமும் பெற்றிருப்பதால் கிட்டத்தட்ட துறவி போன்று வாழ்க்கை அமைந்திருக்கும். கேது தசை புதன் புக்தியில் திருமணம் ஆகிருக்கலாம். ஆனால் அது நிலைத்திருக்காது அல்லது மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்!
    Tuesday, June 10, 2014 12:50:00 PM/////
-------------------------------------------------------
4
//////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 58 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    சிம்ம லக்ன ஜாதகரான இவருக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதன் 12ல் லக்னாதிபதி சூரியனுடன் சேர்ந்து குரு பார்வையைப் பெறுவதாலும், யோக காரகனான செவ்வாய் லக்கினத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் அவருடைய 30 ஆவது வயதில் சுக்கிர தசை சூரிய புக்தியில் திருமணம் ஆகி இருக்கும்.
    ஆனால் களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கேது வியாதி உடைய துணையை அளித்திருப்பார். மேலும் களத்திர ஸ்தான அதிபதி சனி அந்த இடத்துக்கு 12ல் அதாவது 6ல் ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்காது.
    Tuesday, June 10, 2014 12:52:00 PM/////
----------------------------------------------
5 ****** 
//////Blogger Kirupanandan A said...
    கஷ்டமய்யா. திருமணம் புரிந்து சேர்ந்து வாழாதவர்களும் இருக்கிறார்கள். திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். மண முறிவு ஆகி இரண்டாவது திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். மணமுறிவு ஆகாமலேயெ இரண்டாவது திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.
    சரி இன்றைய ஜாதகத்திற்கு வருவோம். 7ல் கேது. 7ம் அதிபதி 6ல் மறைவு. ஆயினும் களத்திரகாரகன் சுக்கிரன் 11ல் நல்ல நிலையில் இருப்பதால், திருமணம் பாக்கியம் உண்டு. ஆனால் தாமதத் திருமணம். 30 வயதிற்கு மேல் சுக்கிர தசையில் சந்திர புத்தியில். 2ம் அதிபதி புதன் 12ல் சூரியனுடன் மறைந்திருப்பதாலும் அவருக்கு நீச குரு, சனி பார்வை இவற்றால் திருமண வாழ்க்கை சுகமில்லை. வாழ்க்கைத் துணையை பிரிய வேண்டி வரும்.
    Tuesday, June 10, 2014 3:22:00 PM/////
----------------------------------------------
6
/////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண்: 58 இற்கான பதில் !!!
    ஜாதகர் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சூரியன் 12 இல் பகை ராசியில் விரையம். சிம்ம இலக்கின யோககாரகர் செவ்வாய் லக்கினத்தில் ராகுவுடன். 7 ஆம் அதிபதி சனி லக்கினத்திற்கு ஆறாம் வீட்டில், எழிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் வக்கிர நிலையில். மேலும் சனி ஐந்தாம்அதிபதி மற்றும் கோனாதிபதியான குருவுடன் ஆறில் உள்ளார். களத்திரகாரகன் சுக்கரன் பதினொன்றில். அதலால் திருமணம் உண்டு !!! சுக்கரதிசை சனி புத்தி ஜாதகர்க்கு 27 ஆம் வயதில் வந்திருந்தாலும், திசை புத்திக்குரிய நாயகர்கள் 6/8 ஆம் ஸ்தானத்தில் உள்ளதால் அந்த சமயத்தில் நடைபெற வாய்ப்பில்லை. அதன்பின் வந்த புதனும் 2/12 அமைப்பில் உள்ளார் !!! ஆதலால் சுக்கர திசையில் திருமணம் நடைபெறவில்லை. லக்கினாதிபதி சூரிய திசை செவ்வாய் புத்தியில், தனது 32 ஆம் வயதில் நடைபெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை விரையாதிபதி சந்திரனின் பார்வை, மற்றும் ஐந்தாம் அதிபதி குருவின் பார்வையும் இருப்பதும், குடும்ப ஸ்தானாதிபதி புதன் 12 இல் உள்ளதாலும் குடும்ப வாழ்வு வெகு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை !!!!!!
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, June 10, 2014 3:58:00 PM/////
---------------------------------------------
7
/////Blogger MS RAJU said...
    வாத்தியார் ஐயா, இந்த ஜாதகரின் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் வீட்டதிபதி இனைவு, வர்கோத்தமம் பெற்ற லக்னம், இரண்டாம் அதிபதி,7ம் அதிபதி ஆகியன குடும்ப வாழ்வை உறுதி செய்கின்றது.
    லக்னாதிபதி பன்னிரண்டில் மறைவு, 7ம் அதிபது 7ற்கு 12ல் மறைவு ஆகியன தாமதமான திருமண வாழ்வை அதாவது 30 வயதிற்கு மேல் வந்த சுக்கிர திசையில் நடை பெற்று இருக்க வேண்டும். லக்னாதிபதி பன்னிரண்டில் மறைவுற்றதால் மகிழ்சி அற்ற வாழ்வாக அமைந்திருக்கும்.
    Tuesday, June 10, 2014 4:07:00 PM/////
-----------------------------------------------------------------------
8
/////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்
    இன்றைய புதிருக்கான விடை:
    1.தாமத திருமணம் ஆகி இருக்கும்.
    2.மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கை.

    *சிம்ம லக்கினம்,மீனராசி ஜாதகர்.லக்கினாதிபதி 12ம் இடத்தில்,குடும்ப ஸ்தானாதிபதியான புதன்கூட்டணி போட்டு அமர்ந்து உள்ளார்.போராட்டமான வாழ்க்கை.
    *7க்குரியவனான சனி பகவான் அந்த ஸ்தானத்திற்க்கு 12மிடம் அத்துடன்
    லக்கினத்திற்க்கு 6மிடம் எனினும் ஆட்சி என்ற அந்தஸ்தை அடைவது நன்மை.
    *7இல் கேது அமர்ந்தாலும் அது சுபகர்த்தாரி யோகத்தில் அமைந்து உள்ளது. எனவே தாமதமாக இருந்தாலும் திருமணத்தை கொடுத்தது.சுக்கிர‌
    தசையில் சுய புத்தியில் 30 வயதிற்க்கு மேல் மணமாகி இருக்கும்.
    *எனினும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்களான சனியும் சூரியனும்
    சப்தமமாக அமர்ந்த்து திருமண,குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மையினை
    கொடுத்தது.
    *அத்துடன் களத்திரகாரகன் சுக்கிரன் அமர்ந்த வீட்டுக்காரரான புதன் 12இல்
    அம‌ர்ந்ததும் மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கையினை கொடுக்காது.
    எனது கணிப்பு சரியா என தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.
    நன்றி
    ல ரகுபதி
    Tuesday, June 10, 2014 9:00:00 PM/////
-------------------------------------------------------------------
9 ******
 Blogger thozhar pandian said...
    7ம் அதிபதி சனி 7க்கு 12ல், ஆறாம் வீட்டில். குடும்ப ஸ்தான அதிபதி புதன் இலக்கினத்திற்கு 12ல் மறைவிடத்தில். 7ம் வீட்டில் கேது. 7ம் வீட்டிற்கோ 7ம் அதிபதிக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை (புதன் சனியை பார்த்தாலும், அவர் சூரியனோடு இருப்பதால் முழு சுப கிரகமாக கருத இயலாது). 7ம் வீடு வியாழனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இருந்தாலும் இதை சுபகர்த்தாரி யோகமாக கருத முடியாது. காரணம், தேய்பிறை சந்திரன். இலக்கினாதிபதி சூரியனும் 12ல் மறைவிடத்தில். குரு நீசம். களத்திரகாரகன் சுக்கிரன் மட்டும் இலக்கினத்திற்கு 11ல் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டு. 7ம் வீட்டு அதிபதி சனியும் குடும்ப ஸ்தான அதிபதி புதனும் வர்கோத்தமம் அடைந்திருக்கிறார்கள். இலக்கினமும் வர்கோத்தமம். மேலும் சனி சொந்த வீட்டில் இருப்பதால், திருமணம் நடந்திருக்கும். ஆனால் மண வாழ்க்கை இனித்திருக்காது. தம்பதிகள் பிரிந்திருப்பர்.
    Wednesday, June 11, 2014 1:55:00 AM////
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

k.umapathy said...

Respected sir,
Good morning.
crystal clear analysation of the 2nd and 7th house.
Thanking you sir,
yours sincerely,
k.umapathy

kmr.krishnan said...

குடும்ப வாழ்க்கை இவருக்கு சிலாக்கியமில்லை என்பது ஜாதகத்தைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிவிட்டது.ஆனால் எனக்கு நானே அபரம்(எதிர்மறை) சொல்வதில்லை என்று விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டால், (ஏனெனில் எனக்கு வாக்கில் சனி)இவருக்கு வாழ்க்கை நன்றாக அமைந்திருக்கும், ஆண்டவன் அமைத்துக் கொடுத்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு
சுமாரான குடும்ப வாழ்க்கை என்று கூறிவிட்டேன்.

நல்ல அலசலுக்கு நன்றி ஐயா!

Kirupanandan A said...

வாத்தியார் சொன்னதை வைத்துப் பார்த்தால் சுக்கிர தசை சந்திர புத்தியில் திருமணம் என்று நான் கணித்தது சரியே.

திருமணம் ஆகுமா ஆகாதா என்பதை நவாம்ச லக்கினத்தைக் கொண்டு கணிக்கலாம். அதே நேரத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றி நவாம்ச லக்கினத்திற்கு 7ம் இடம் காட்டும். இந்த ஜாதகத்தில் நவாம்ச லக்கினத்திற்கு 7ம் இடம் சனியின் வீடாவதால் வாழ்க்கைத் துணை வயதான தோற்றமுள்ளவராகவோ, நோயாளியாகவோ இருக்கலாம்,. அத்துடன் அதன் அதிபதி சனி நவாம்ச லக்கினத்திற்கு 6ல் மறைந்து விட்டதால் இல்லற (இன்பம்) வாழ்க்கை சுகப்படாது. இதை எனது பதிலில் சொல்லாவிட்டாலும் ”திருமண வாழ்க்கை சுகமில்லை” சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டேன்.

Ramkumar KG said...

அய்யா
இங்கே ஒரு சந்தேகம். இரண்டாம் அதிபதி 12இல் இருந்தால் அது இரண்டுற்கு 11ஆம் இடமாதலால் நல்லதே என்று ஒரு பழைய பாடத்தில் படித்த ஞாபகம். இதை பற்றி ஓரிரு வார்த்தை கூறுங்களேன். நன்றி

Ramkumar KG said...

அய்யா,

முதல் திருமணம் தோல்வியில் முடிந்து அல்லது மனைவி இறந்து இரண்டாம் திருமணம் வெற்றி பெற்றவர்கள் ஜாதகம் எப்படி இருக்கும். ஒரு உதாரணத்துடன் இங்கோ அல்லது மேல்நிலை பாடத்திலோ கற்று கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி

Subbiah Veerappan said...

////Blogger k.umapathy said...
Respected sir,
Good morning.
crystal clear analysation of the 2nd and 7th house.
Thanking you sir,
yours sincerely,
k.umapathy/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
குடும்ப வாழ்க்கை இவருக்கு சிலாக்கியமில்லை என்பது ஜாதகத்தைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிவிட்டது.ஆனால் எனக்கு நானே அபரம்(எதிர்மறை) சொல்வதில்லை என்று விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டால், (ஏனெனில் எனக்கு வாக்கில் சனி)இவருக்கு வாழ்க்கை நன்றாக அமைந்திருக்கும், ஆண்டவன் அமைத்துக் கொடுத்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு
சுமாரான குடும்ப வாழ்க்கை என்று கூறிவிட்டேன்.
நல்ல அலசலுக்கு நன்றி ஐயா!////

அதனால் என்ன? பரவாயில்லை. எதிர்மறையாக இருக்கும்போது அதைச் சொல்லாமல் விடுவதுதான் தவறு! நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Kirupanandan A said...
வாத்தியார் சொன்னதை வைத்துப் பார்த்தால் சுக்கிர தசை சந்திர புத்தியில் திருமணம் என்று நான் கணித்தது சரியே.
திருமணம் ஆகுமா ஆகாதா என்பதை நவாம்ச லக்கினத்தைக் கொண்டு கணிக்கலாம். அதே நேரத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றி நவாம்ச லக்கினத்திற்கு 7ம் இடம் காட்டும். இந்த ஜாதகத்தில் நவாம்ச லக்கினத்திற்கு 7ம் இடம் சனியின் வீடாவதால் வாழ்க்கைத் துணை வயதான தோற்றமுள்ளவராகவோ, நோயாளியாகவோ இருக்கலாம்,. அத்துடன் அதன் அதிபதி சனி நவாம்ச லக்கினத்திற்கு 6ல் மறைந்து விட்டதால் இல்லற (இன்பம்) வாழ்க்கை சுகப்படாது. இதை எனது பதிலில் சொல்லாவிட்டாலும் ”திருமண வாழ்க்கை சுகமில்லை” சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டேன்./////

நல்லது. உங்களது விளக்கங்களுக்கு நன்றி கிருபானந்தன்!

Subbiah Veerappan said...

////Blogger Ramkumar KG said...
அய்யா
இங்கே ஒரு சந்தேகம். இரண்டாம் அதிபதி 12இல் இருந்தால் அது இரண்டுற்கு 11ஆம் இடமாதலால் நல்லதே என்று ஒரு பழைய பாடத்தில் படித்த ஞாபகம். இதை பற்றி ஓரிரு வார்த்தை கூறுங்களேன். நன்றி////

அது பொது விதி. பொது விதிகள் எல்லா இடங்களிலும் செல்லாது. இரண்டாம் அதிபதி தன் வீட்டிற்குப் பன்னிரெண்டில் இருந்தால் நன்மையானது என்பது இங்கே செல்லவில்லை. காரணம் அது லக்கினத்திற்குப் பன்னிரெண்டாம் வீடாகி (விரைய வீடாகி)ப் போனதால்!

Subbiah Veerappan said...

///Blogger Ramkumar KG said...
அய்யா,
முதல் திருமணம் தோல்வியில் முடிந்து அல்லது மனைவி இறந்து இரண்டாம் திருமணம் வெற்றி பெற்றவர்கள் ஜாதகம் எப்படி இருக்கும். ஒரு உதாரணத்துடன் இங்கோ அல்லது மேல்நிலை பாடத்திலோ கற்று கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி////

அது போன்ற ஒரு ஜாதகத்தை, எனது கோப்புக்களில் இருந்து தேடிப் பிடித்துச் செய்கிறேன். பொறுத்திருங்கள்.

siva said...

Sir. I have a question.. in the lessons I have covered.. each person will definitely have 337. i.e., some will be good and some will not be.. looking at this analysis almost all of his important things are not good. So what would be good for him and make his 337..

Subbiah Veerappan said...

/////Blogger siva said...
Sir. I have a question.. in the lessons I have covered.. each person will definitely have 337. i.e., some will be good and some will not be.. looking at this analysis almost all of his important things are not good. So what would be good for him and make his 337../////

1, 9,10 & 11 ஆம் வீடுகளில் 30 பரல்களுக்கும் மேல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எழுதியுள்ளேனே சாமி!
மழை ஏரிகளில் பெய்தால் விவசாயத்திற்கு ஆகும்
மலைப் பிரதேசங்களில் பெய்தால், ஆறாகி, குடிநீருக்குப் பயன்படும்.
சாக்கடையில் பெய்தால் (அதாவது தெருக்களில்) என்ன ஆகும்?
யோசித்துப் பாருங்கள்.
பரல்கள் பயன் படக்கூடிய இடங்களில் அதிகம் இருப்பின் நன்மையானது. இல்லை என்றால் இல்லை.
337ற்கு ஒன்று நன்மைகள் இருக்கும்
அல்லது
துன்பங்களைத் தாங்கும், எதிர் கொள்ளும் வலிமை இருக்கும்
That is standing power!