மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.6.14

Astrology: Quiz 57: answer வெற்றி மீது வெற்றி வந்து சேர்ந்ததா?Astrology: Quiz 57: answer வெற்றி மீது வெற்றி வந்து சேர்ந்ததா?

நேற்றையப் பதிவில் ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ஜாதகர் வெளிநாடு சென்று, வேலையில் செர்ந்து பொருள்ஈட்ட நினைத்தார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். அவர் முயற்சி வெற்றி அடைந்ததா? அல்லது வெற்றிஅடையவில்லையா? அடைந்தார் என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? அடையவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? என்பதை அலசி எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்

நிறையப் பேர்கள் பதில் எழுதியுள்ளீர்கள்.

முதலில் சரியான விடை என்ன என்று பார்ப்போம்:

ஜாதகரின் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.ஜாதகருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கவில்லை


1. ஜாதகர் மகர லக்கினக்காரர். லக்கினாதிபதி சனி நீசம். அவர் கேந்திரத்தில் இருந்தாலும் நீசம் நீசம்தான். முதலில் லக்கினாதிபதியே வலுவாக இல்லை. மேலும் சுபக் கிரகங்களின் பார்வை இல்லை.
2. லக்கினத்தில் 6ஆம் இடத்துக்காரன். வில்லன். ஜாதகருக்குக் கேடானவன். அவன் வந்து லக்கினத்தில் அமர்ந்தது கேடாகும்.
3. அத்துடன் ராகுவும் கூட்டணியாக சேர்ந்தது நன்மையானதல்ல.
4. ஏழாம் இடத்துக்காரன் சந்திரனும் நீசம்.
5. மகர லக்கினத்திற்கு யோககாரகன் சுக்கிரன். 5ஆம் மற்றும் 11ஆம் இடங்களுக்கு உரியவன். ஒரு கோணம் மற்றும் ஒரு கேந்திரத்திற்கும் உரியவன். அவன் வந்து 12ல் (விரையத்தில்) அமர்ந்தது கேடானது.

6. துவக்கம் முதலே திசைகள் சாதகமாக இல்லை.

சனி இருப்பு - 6 ஆண்டுகள் 8 மாதங்கள் 9 நாட்கள்
புதன் மகா திசை - 17 ஆண்டுகள் (6ஆம் அதிபதி)
அடுத்து கேது மகா திசை - 7 ஆண்டுகள் (சொல்லவே வேண்டாம்)
அடுத்து சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள் (12ஆம் இடத்துக்காரனின் திசை)
                   ------------------------------------------
ஆக மொத்தம் 50 ஆண்டுகள். அதாவது ஜாதகரின் 50ஆவது வயது வரை திசைகள் சாதகமாக இல்லை.

7. பத்தாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் (Lord for profession) 12ல் மறைந்து விட்டார்.
8. அத்துடன், அதாவது தொழில்காரகன் சுக்கிரனுக்கு 7 மற்றும் 9ஆம் அதிபதி புதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது வெளிநாட்டு வாய்ப்புகளுக்குக் கேடானது
9. மேலும் அவர் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் செவ்வாய். மறுபக்கம் ராகு
10. தொழில்காரகன் சுக்கிரனுடன் மாந்தி (12ல் மாந்தி) முயற்சிகள் அனைத்தும் செல்லாமல் போனது.
11.  நான் அடிக்கடி சொல்வதைப் போல பொருள் ஈட்டலுக்கு 2ஆம் வீட்டுக்காரனும், 11ஆம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் சாதகமாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 6/8 positionல் உள்ளார்கள். அதாவது சனியும், செவ்வாயும் 6/8, 8/6 நிலையில் உள்ளார்கள்.
12. சுகங்களைக் கொடுக்கக்கூடிய சுக்கிரனும் கெட்டிருக்கிறான். சுக ஸ்தானமும் கெட்டிருக்கிறது. பிறகு எப்படி சுகமான வாழ்க்கை கிடைக்கும்?
ஆகவே ஜாதகரின் முயற்சிகள், கனவுகள் எதுவும் பலிக்கவில்லை.

சரியான விடை: ஜாதகருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் வெற்றி வந்து சேராதபோது, மனிதன் என்ன சொல்லுவான் - எல்லாம் என் ஜாதகக் கொளாறு. எனக்கு வெற்றி வந்து சேராததற்குக் காரணம் என் ஜாதகத்தில் உள்ள கிரகக் கோளாறு. கிரக அமைப்புக்கள்தான் காரணம் என்பான்.

அதுதான் உண்மை.

அன்புடன்
வாத்தியார்

---------------------------------------------------------------------
மொத்தம் 7 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்தபாராட்டுக்கள். அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Better luck next time for them!

1
/////Blogger Sanjai said...
    1. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு குறைவு
    2. லக்னாதிபதி சனி 4ல் நீசம்
    3. 10க்கு உடையவன் சுக்ரன் 12ல் மறைவு, மற்றும் மாந்தி தொடர்பு.
    4. சுக்ரன் பாபகர்த்தாரி யோகத்தில் (ராகு மற்றும் செவ்வாய் க்கு இடையில்)
    5. பொருள் ஈட்டும் முயற்சி வெற்றி பெற சாத்தியம் மிகவும் குறைவு.
    Wednesday, June 04, 2014 5:58:00 AM/////
--------------------------------------------------------
2   
//////Blogger Muthukrishnan Prakash said...
    ayya,
    ivar velinaadu sendrikka vaaippu illai.
    Kaarnam:
    1. Lagnathipathi Sani Neesam. Sani Sara Raasiyil irundhaalum, Lagnaathipathikku subar paarvai illai. Ivarukku 9,12 matrum 10m athipathiyin paarvai illai.
    2. 9,12 athipathigal Jala Raasiyil Irundhaalum orukkoruvar(9,12)paarvai serkai illai.
    3. 5 matrum 10m athipathiyaana sukkiran(yogakaran) maandhiyudan 12-il sikkiyullaar. Ivarukkum endha subar paarvaiyum illai. Kurippaaga, Lagnaathipathy, 9 matrum 12m athipathyin paarvai illai.
    Anbudan,
    Mu.Prakaash
    Wednesday, June 04, 2014 9:54:00 AM////
-------------------------------------------------
3

//////Blogger S.Namasu said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    புதிர் போட்டி 57க்கான கணிப்பு:-
    ஜாதகருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு இல்லை
    கரணங்கள்
    1) லக்கன அதிபதி மற்றும் தொழில் காரகன் "சனி" மேஷத்தில் நீசம் (4-கேந்திர இடமானாலும், மற்றும் தனது 10ம் பார்வை 1ம் இடம்மீது கொண்டிருந்தாலும் )
    2) 9ம் இடத்து அதிபதி "புதன் " லக்கனத்தில் "ராகுடன்" இருக்கிறார் மேலும் இவரது தசா 6:8:9 முதல் 23:8:9 வயது மட்டுமே. (புதன் சம கிரகம் - இவர் ராகுடன் சேர்ந்ததனால் கெட்டுவிட்டார்) மேலும் எந்த சுபகிரக பார்வையையும்
பெறவில்லை.
    3) 9 மற்றும் 12ம் இடத்து அதிபதிகளின் தசா/புத்தி களில் வெளிநாடு செல்ல முடியும். ஆனால் இவருக்கு 12ம் இடத்து  அதிபதி "குரு" தசை இளமை பருவத்தில் வரவில்லை.
    சுபம்.
    Wednesday, June 04, 2014 9:55:00 AM/////
----------------------------------------------
4
/////Blogger Bala.N said...
    இவருக்கு வெளி நாடு செல்லும் யோகம் இருக்க வாய்ப்பு கிடைத்து இருக்காது. பாக்கியாதிபதி லக்கினத்தில் ராகுவுடன் சேர்ந்த் அமர்ந்து இருப்பாதலும் சந்திரன் விரயாபதி உடன் இருபதாலும் சுகஸ்தானதில் சனீ இருப்பாதாலும் வாய்ப்பு இருந்து இருக்காது
    Wednesday, June 04, 2014 3:23:00 PM////
-------------------------------------------------------
5   
///////Blogger Barathi GP said...
    The native has not gone to foreign because of the followings:
    1 in fourth the saturan occupied
    2 three planets are in bathaga isthanam
    3 chandran seventh naive is debilitated
    4 fifth place sukran yogakaran for makaram lagnam is in 12th place
    for the above reasons native could not proceed to abroad.
    for foriegn travel 4th 7th 9th and 12 th are to be karaka places
    nellai padmanaban
    Wednesday, June 04, 2014 3:51:00 PM/////
----------------------------------------------------

6
/////Blogger Raja Murugan said...
    ஆசிரியருக்கு வணக்கம்,6 க்கும் 9 க்கும் அதிபதியான புதன் லக்கினத்தில் ராகுவுடன் கூட்டணியில் இருப்பதாலும், 9 ம் வீட்டுக்கு 8 ம் வீட்டில் தீய கிரகமான சனி உச்சம் பெற்று லக்கினத்தில் உள்ள 9 ம் அதிபதி புதனை 10
பார்வையால் பார்ப்பதாலும், 9 ம் வீட்டின் பக்கியதிபதி சுக்கிரன் 12 மறைந்ததலும் ஜாதகர் வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை. 9 ம் அதிபதி நல்ல நிலையில் இருந்து தீய கிரகத்தின் பார்வை பாராமல் இருந்தால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும்.
    Wednesday, June 04, 2014 8:21:00 PM/////
----------------------------------------------------------------
7
Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.57:
    The native of the horoscope has not blessed to go foreign.
    Reasons:
    1. Lagna lord Saturn is debilitiated in Aries.
    2. Nineth house is not getting any benefic planets aspect.
    3. Though Nine house lord is sitting in Lagna, It is associated with Rahu and also affected by baba kathiri yoga. (between Sun and Mandhi). It's the main reason.
    4. Jupiter didn't aspect either ninth house lord or ninth house. It is the authority for overseas travelling.
    5. Yogakaraga as well as poorva puniyathipathi Venus is sitting in twelfth house from lagna along with Mandhi and is in baba kathiri yoga. It is not good sign.
    6. Second house is occupied by eighth house lord Sun. It is bad for self earning.
    Hence, All the above reasons, The native is not blessed to go abroad.
    With kind regards,
    Ravichandran M.
Thursday, June 05, 2014 1:34:00 AM

---------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

 1. Respected Sir
  Looks like parals does not give the complete information.

  He has more than 30 parals in 9 and 11 and most of the planets have 4 or more parals.

  May be I should have spend more time analysing than being a "Mundri kottai" :)

  ReplyDelete
 2. நல்ல அலசல். ஆனால் ஒரு கேள்வி. புதன் 6ம் வீட்டுக்காரன் என்றாலும் பாக்கியஸ்தான அதிபதியும் கூட அல்லவா? பாக்கியஸ்தான அதிபதியின் தசை ஜாதகருக்கு நன்மை பயக்கும் என்று படித்திருக்கிறேன். அப்படி செய்யாமல் போனதற்கு இராகு கூட்டணி காரணமா?

  ReplyDelete
 3. வாத்தியார் இந்த முறை "க்ளூ" கொடுப்பதில் சதி செய்து விட்டார் என்றும் சொல்லலாம்.

  ReplyDelete
 4. Respected sir,
  Good morning.crystal clear explanation.One request sir.If you add the navamsam chart in addition with Rasi chart it would be very useful for the students like me.
  Thanking You .
  Yours sincerely,
  k.umapathy

  ReplyDelete
 5. நீங்கள் சொன்ன காரணங்களைப் படித்துப் பார்த்தால் தலைதான் சுற்றுகிறது. புதன் 6ம் அதிபதியானாலும் 9ம் அதிபதியாகவும் வருகிறார். 9ம் இடத்திற்கான பலனைக் கொடுக்காததற்கு என்ன காரணம் என்று சொல்லவில்லை. 7ம் அதிபதி சந்திரன் நீசமானதும் வெளிநாடு போக முடியாததற்கும் என்ன சம்பந்தம். ஆட்சி பெற்ற கிரகத்தோடு இருந்தால் நீச பங்கம் உண்டு. அது வேலை செய்யவில்லையா. ஒரு பக்கம் ராகு மறு பக்கம் செவ்வாய் இருப்பது பாப கர்த்தாரி யோகம் என்றால் அதே இடத்தில் ஒரு பக்கம் சந்திரன், குரு, மறு பக்கம் புதன் இருப்பது சுபகர்த்தாரி யோகம் ஏன் இல்லை. ஒன்றை இன்னொன்று விழுங்கி விட்டதா? சுக்கிர தசை வரை சாதகம் இல்லை என்றால் அதன் பிறகு வரும் 8ம் அதிபதியான சூரிய தசை மட்டும் எப்படி நன்மையாக இருக்கும். இப்படியே போனால் வாழ் நாள் முழுக்க கஷ்டம் என்பதாகி விடும். இனி வரும் காலங்களில் கூர்ந்து கவனித்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 6. 1. நீசம் ஆனாலும் சனி நீசபங்கம் ஆகியுள்ளார்.(நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீசபங்கம்.)
  2. புதன் 6ம் இடத்துக்காரன் லக்கினத்தில் அமர்ந்தார். சரிதான். ஆனால் அவர் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் உரியவர் அல்லவா? பாக்கியாதிபதியாக புதன் ஏன் வேலை செய்யவில்லை?
  3. ஏழாம் இடத்துக்காரரான சந்திரனும் நீசபங்கம்.
  4.யோககாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் 6 வது இடத்தினை தன் நேர்பார்வையில் வைத்துள்ளாரே! அதனால் 6ம் விட்டுக்காரனான புதனின் கெடுக்கும் தன்மை குறையாதா?
  5.பூசம் அனுஷம் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு முதலில் சனி, புதன் கேது சுக்கிரன் ஆகிய தசாதான் வரும்.சாதாரணமாக ஒருதசா வேலை செய்யும் விதம் பற்றிச் சொல்லும் போது, மூன்று பகுதிகளாகச் சொல்லுவார்கள்.
  அந்த தசாவின் கிரஹம் நின்ற இடம்,அந்த கிரஹத்தின் வீடுகள் அந்த லக்கினத்திற்கு எவையோ அவை. இந்த ஜாதகருக்கு சுக்கிர தசா 12, 5, 11
  ஆகிய இடங்களின் பலனை கொடுக்க வேண்டும். எது எப்போது வேலை செய்யும் என்பத்னை நடந்த பிறகுதான் கணிக்க வேண்டும்.
  6.பத்தாம் வீட்டுக்காரன் 12ல் மறைந்தால் தூரதேசத்தில் வேலை என்பதே கணக்கு.
  7.சுக்கிரனுக்கு 9ம் இடத்துக்காரனான புதனுடன் சம்பந்தம் இல்லை என்று ஒரு கூற்று. லக்னத்துக்கு என்று வரும் போது புதன் 6ம் வீட்டு அதிபன் என்று கொள்வது; 10ம் வீடு என்று வரும் போது புதன் 9ம் அதிபனாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
  8.சுக்கிரன் பாபகர்த்தாரியில் உள்ளாரா? 4க்கும் 11க்கும் உரிய செவ்வாயை
  எப்படி இந்த ஜாதக்ருக்கு பாபக் கிரஹமாகக் கொள்ளத்தகும்? லக்கினத்துக்கு செவ்வாய் உச்சமானவர் ஆயிற்றே.மேலும் அவர் தன் வீட்டிலேயே அமர்ந்துள்ளாரே!
  7.சனியும் செவ்வாயும் சஷ்டாஷ்டகமாக இருந்தாலும் குரு பகவான் செவ்வாயுடனேயே இருந்தும் ஒன்றும் பல்ன் இல்லையா?
  8. மூன்றாம் இடமான மீனத்தை, வெற்றி ஸ்தானத்தை, குரு பார்த்தாரே, அதற்குப் பயன் ஒன்றும் இல்லையா?

  இந்த ஜாதகர் வாழ்க்கை நமக்குத் தெரிந்ததால் 'போஸ்ட் மார்டம்' செய்து அவர் விருப்பம் நிறைவேததற்கு ஜாதகக் காரணங்களைக் கண்டு பிடித்து விட்டோம்.

  இதே அமைப்புள்ள ஜாதகர், இன்னும் 'இன்னிங்ஸ்' துவங்காதவர், 'நான் வெளிநாடு போவேனா?'என்று கேட்டால் இந்தக் காரணங்களால் போக மாட்டாய் என்று சொல்வதா? அல்லது போவதற்கான காரணங்களை 'பாசிடிவா'கக் கண்டு
  பதில் சொல்வதா? எது சரி?

  ReplyDelete
 7. Respected Sir
  I remember from one of the lessons that Sani will do good in mesham for Dhanur Lagna. Little confused. I thought if Sani could do good for Dhanur lagna even if it is neecham, It will do good for it is own lagnams (Makram and Kumbam).

  ReplyDelete

 8. Also as per our sathrams living in abroad is not considerd good yoga. For me, my astrologer told that because of my past sins/sapams I will never be able to live in my native country. Even if I try very hard and force myself...may be I can be there for only few months. That is the case for me. Only folks live in abroad for long time like me know how much they miss the home land...

  ReplyDelete
 9. //இதே அமைப்புள்ள ஜாதகர், இன்னும் 'இன்னிங்ஸ்' துவங்காதவர், 'நான் வெளிநாடு போவேனா?'என்று கேட்டால் இந்தக் காரணங்களால் போக மாட்டாய் என்று சொல்வதா? அல்லது போவதற்கான காரணங்களை 'பாசிடிவா'கக் கண்டு
  பதில் சொல்வதா? எது சரி?//

  வெளிநாடு போவதற்கு 9,12 இடங்கள், ராகு இவற்றின் நிலை மிக முக்கியம். இவை மூன்றும் சர ராசிகளிலோ, ஜல ராசிகளிலோ இருக்க வேண்டும். இன்னும் சில விதிகள் உண்டு. அவற்றையும் பார்த்து விட்டுதான் ஒரு முடிவுக்கு வர முடியும்.

  ReplyDelete
 10. ந‌ல்ல‌ அல‌ச‌ல். தாங்கள் எந்த ச‌ர்ஃப் போட்டு அல‌சினீர்க‌ள் என்று தெரிந்தால் நாங்க‌ளும் அதே போல் அல‌சுவோம்.

  1. லக்கினாதிபதி நவாம்சத்தில் உச்சமாகி இருந்தால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா.( quiz 57 சனி நவாம்சத்தில் துலா ராசியில் உச்சம்) உதார‌ன‌ம் ர‌ஜினி ஜாத‌க‌ம் போல் இதையும் ஏன் எடுத்துக்கொள்ள‌கூடாது.


  2. ராசியில் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் 10ம் வீட்டில் துலா ராசியில் சனியுடன் கூட்டு.நீசபங்கம் ஆகியுள்ளார்.

  3. புதன் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் உரியவர் அல்லவா? பாக்கியாதிபதியாக புதன் ஏன் வேலை செய்யவில்லை.(அஷ்ட‌வ‌ர்க‌த்தில் 39 ப‌ர‌ல் உள்ள‌து). அர்த்த‌மில்லாம‌ல் போய்விடுமா.

  4. முத‌ல் விதியை வைத்து ம‌ட்டும் முடிவு கூறினால் உப‌விதியின் ப‌ல‌ன் தேவையில்லையா.( உப‌ விதி: ந‌வாம்ச‌ம், அஷ்ட‌வ‌ர்க்க‌ம், யோக‌ம்..)

  5.எப்பொழுது முத‌ல் விதியை க‌டைபிடிக்க‌வேண்டும். எப்பொழுது உப விதியை க‌டைபிடிக்க‌வேண்டும் என்று தாங்க‌ள் மேலும் விள‌க்க‌மாக‌ கூறினால் மிக‌வும் ந‌ன்றாக‌ இருக்கும்.


  ReplyDelete
 11. ///////Blogger Dallas Kannan said...
  Respected Sir
  Looks like parals does not give the complete information.
  He has more than 30 parals in 9 and 11 and most of the planets have 4 or more parals.
  May be I should have spend more time analysing than being a "Mundri kottai" :)/////

  நீங்கள் குறிப்பிட்டுள்ள பரல்கள் எல்லாம் சரிதான். ஜாதகருடைய வாழ்க்கைக்கு அவைகள் வேறு விதமாக உதவியிருக்கின்றன. வெளிநாடு செல்லும் அமைப்பைத் தவிர, ஜாதகத்திRku வேறு எத்தனை செயல்பாடுகள் உள்ளன. அவற்றை நினைத்துப் பாருங்கள். முந்திரிக்கொட்டை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆர்வம்தான் காரணம்! நன்றி பாண்டியரே!

  ReplyDelete
 12. Blogger thozhar pandian said...
  நல்ல அலசல். ஆனால் ஒரு கேள்வி. புதன் 6ம் வீட்டுக்காரன் என்றாலும் பாக்கியஸ்தான அதிபதியும் கூட அல்லவா? பாக்கியஸ்தான அதிபதியின் தசை ஜாதகருக்கு நன்மை பயக்கும் என்று படித்திருக்கிறேன். அப்படி செய்யாமல் போனதற்கு இராகு கூட்டணி காரணமா?/////

  கரெக்ட். அதே காரணத்தை இன்று எழுதியுள்ள விளக்கத்தில் (post dated 6.6.14) எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் பாண்டியரே!

  ReplyDelete
 13. //////Blogger venkatesh r said...
  வாத்தியார் இந்த முறை "க்ளூ" கொடுப்பதில் சதி செய்து விட்டார் என்றும் சொல்லலாம்.//////

  அலசல் பாடங்களுக்கு நான் க்ளூ கொடுப்பதில்லை. கொடுக்காத போது, அது எப்படி சதியாகும் அன்பரே?

  ReplyDelete
 14. /////Blogger k.umapathy said...
  Respected sir,
  Good morning.crystal clear explanation.One request sir.If you add the navamsam chart in addition with Rasi chart it would be very useful for the students like me.
  Thanking You .
  Yours sincerely,
  k.umapathy//////

  பார்க்கலாம். முடிந்தவரை செய்கிறேன். நன்றி!

  ReplyDelete
 15. ////Blogger Kirupanandan A said...
  நீங்கள் சொன்ன காரணங்களைப் படித்துப் பார்த்தால் தலைதான் சுற்றுகிறது. புதன் 6ம் அதிபதியானாலும் 9ம் அதிபதியாகவும் வருகிறார். 9ம் இடத்திற்கான பலனைக் கொடுக்காததற்கு என்ன காரணம் என்று சொல்லவில்லை. 7ம் அதிபதி சந்திரன் நீசமானதும் வெளிநாடு போக முடியாததற்கும் என்ன சம்பந்தம். ஆட்சி பெற்ற கிரகத்தோடு இருந்தால் நீச பங்கம் உண்டு. அது வேலை செய்யவில்லையா. ஒரு பக்கம் ராகு மறு பக்கம் செவ்வாய் இருப்பது பாப கர்த்தாரி யோகம் என்றால் அதே இடத்தில் ஒரு பக்கம் சந்திரன், குரு, மறு பக்கம் புதன் இருப்பது சுபகர்த்தாரி யோகம் ஏன் இல்லை. ஒன்றை இன்னொன்று விழுங்கி விட்டதா? சுக்கிர தசை வரை சாதகம் இல்லை என்றால் அதன் பிறகு வரும் 8ம் அதிபதியான சூரிய தசை மட்டும் எப்படி நன்மையாக இருக்கும். இப்படியே போனால் வாழ் நாள் முழுக்க கஷ்டம் என்பதாகி விடும். இனி வரும் காலங்களில் கூர்ந்து கவனித்து விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்./////

  பழநி அப்பன் அருளால், என் பார்வை கூரானதுதான். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை இன்றைய பதிவில் (Post dated 6.6.2014) எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் கிருபானந்த வாரியாரே!

  ReplyDelete
 16. /////Blogger kmr.krishnan said...
  1. நீசம் ஆனாலும் சனி நீசபங்கம் ஆகியுள்ளார்.(நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீசபங்கம்.)
  2. புதன் 6ம் இடத்துக்காரன் லக்கினத்தில் அமர்ந்தார். சரிதான். ஆனால் அவர் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் உரியவர் அல்லவா? பாக்கியாதிபதியாக புதன் ஏன் வேலை செய்யவில்லை?
  3. ஏழாம் இடத்துக்காரரான சந்திரனும் நீசபங்கம்.
  4.யோககாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் 6 வது இடத்தினை தன் நேர்பார்வையில் வைத்துள்ளாரே! அதனால் 6ம் விட்டுக்காரனான புதனின் கெடுக்கும் தன்மை குறையாதா?
  5.பூசம் அனுஷம் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு முதலில் சனி, புதன் கேது சுக்கிரன் ஆகிய தசாதான் வரும்.சாதாரணமாக ஒருதசா வேலை செய்யும் விதம் பற்றிச் சொல்லும் போது, மூன்று பகுதிகளாகச் சொல்லுவார்கள்.
  அந்த தசாவின் கிரஹம் நின்ற இடம்,அந்த கிரஹத்தின் வீடுகள் அந்த லக்கினத்திற்கு எவையோ அவை. இந்த ஜாதகருக்கு சுக்கிர தசா 12, 5, 11
  ஆகிய இடங்களின் பலனை கொடுக்க வேண்டும். எது எப்போது வேலை செய்யும் என்பத்னை நடந்த பிறகுதான் கணிக்க வேண்டும்.
  6.பத்தாம் வீட்டுக்காரன் 12ல் மறைந்தால் தூரதேசத்தில் வேலை என்பதே கணக்கு.
  7.சுக்கிரனுக்கு 9ம் இடத்துக்காரனான புதனுடன் சம்பந்தம் இல்லை என்று ஒரு கூற்று. லக்னத்துக்கு என்று வரும் போது புதன் 6ம் வீட்டு அதிபன் என்று கொள்வது; 10ம் வீடு என்று வரும் போது புதன் 9ம் அதிபனாக எடுத்துக்கொள்ள வேண்டுமா?
  8.சுக்கிரன் பாபகர்த்தாரியில் உள்ளாரா? 4க்கும் 11க்கும் உரிய செவ்வாயை
  எப்படி இந்த ஜாதக்ருக்கு பாபக் கிரஹமாகக் கொள்ளத்தகும்? லக்கினத்துக்கு செவ்வாய் உச்சமானவர் ஆயிற்றே.மேலும் அவர் தன் வீட்டிலேயே அமர்ந்துள்ளாரே!
  7.சனியும் செவ்வாயும் சஷ்டாஷ்டகமாக இருந்தாலும் குரு பகவான் செவ்வாயுடனேயே இருந்தும் ஒன்றும் பலன் இல்லையா?
  8. மூன்றாம் இடமான மீனத்தை, வெற்றி ஸ்தானத்தை, குரு பார்த்தாரே, அதற்குப் பயன் ஒன்றும் இல்லையா?
  இந்த ஜாதகர் வாழ்க்கை நமக்குத் தெரிந்ததால் 'போஸ்ட் மார்டம்' செய்து அவர் விருப்பம் நிறைவேததற்கு ஜாதகக் காரணங்களைக் கண்டு பிடித்து விட்டோம்.
  இதே அமைப்புள்ள ஜாதகர், இன்னும் 'இன்னிங்ஸ்' துவங்காதவர், 'நான் வெளிநாடு போவேனா?'என்று கேட்டால் இந்தக் காரணங்களால் போக மாட்டாய் என்று சொல்வதா? அல்லது போவதற்கான காரணங்களை 'பாசிடிவா'கக் கண்டு
  பதில் சொல்வதா? எது சரி?/////

  உங்களுடைய விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. அனைத்திற்கும் உரிய பதில்கள் இன்றையப் பதிவில் (post dated 6.6.2014) உள்ளன. படித்துப் பாருங்கள் நண்பரே!

  ReplyDelete
 17. /////Blogger Dallas Kannan said...
  Respected Sir
  I remember from one of the lessons that Sani will do good in mesham for Dhanur Lagna. Little confused. I thought if Sani could do good for Dhanur lagna even if it is neecham, It will do good for it is own lagnams (Makram and Kumbam)./////

  ஆயிரக்கணக்கான விதிமுறைகள் உள்ளதால், சில சமயங்களில் அப்படித்தான் நேரிடும். அதற்காக அசந்து போகாதீர்கள் தோழரே! தொடர்ந்து படித்து வாருங்கள். ஒரு நிலையில் தெளிவு பிறக்கும்!

  ReplyDelete
 18. /////Blogger Dallas Kannan said...
  Also as per our sathrams living in abroad is not considerd good yoga. For me, my astrologer told that because of my past sins/sapams I will never be able to live in my native country. Even if I try very hard and force myself...may be I can be there for only few months. That is the case for me. Only folks live in abroad for long time like me know how much they miss the home land.../////

  உண்மைதான். சொந்த மண்ணையும் சொந்தங்களையும் விட்டுவிட்டுச் செல்வது என்பது வரமல்ல! எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் சிலரது மனம் புண்படும் என்பதால் அதை வெளிப்படுத்துவதில்லை!

  ReplyDelete
 19. /////Blogger Kirupanandan A said...
  //இதே அமைப்புள்ள ஜாதகர், இன்னும் 'இன்னிங்ஸ்' துவங்காதவர், 'நான் வெளிநாடு போவேனா?'என்று கேட்டால் இந்தக் காரணங்களால் போக மாட்டாய் என்று சொல்வதா? அல்லது போவதற்கான காரணங்களை 'பாசிடிவா'கக் கண்டு
  பதில் சொல்வதா? எது சரி?//
  வெளிநாடு போவதற்கு 9,12 இடங்கள், ராகு இவற்றின் நிலை மிக முக்கியம். இவை மூன்றும் சர ராசிகளிலோ, ஜல ராசிகளிலோ இருக்க வேண்டும். இன்னும் சில விதிகள் உண்டு. அவற்றையும் பார்த்து விட்டுதான் ஒரு முடிவுக்கு வர முடியும்.//////

  நன்றி. அவரின் சந்தேகத்திற்கு நீங்கள் பதில் எழுதிய மேன்மைக்கு நன்றி!

  ReplyDelete
 20. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  ந‌ல்ல‌ அல‌ச‌ல். தாங்கள் எந்த ச‌ர்ஃப் போட்டு அல‌சினீர்க‌ள் என்று தெரிந்தால் நாங்க‌ளும் அதே போல் அல‌சுவோம்.
  1. லக்கினாதிபதி நவாம்சத்தில் உச்சமாகி இருந்தால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா.( quiz 57 சனி நவாம்சத்தில் துலா ராசியில் உச்சம்) உதார‌ன‌ம் ர‌ஜினி ஜாத‌க‌ம் போல் இதையும் ஏன் எடுத்துக்கொள்ள‌கூடாது.
  2. ராசியில் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் 10ம் வீட்டில் துலா ராசியில் சனியுடன் கூட்டு.நீசபங்கம் ஆகியுள்ளார்.
  3. புதன் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கும் உரியவர் அல்லவா? பாக்கியாதிபதியாக புதன் ஏன் வேலை செய்யவில்லை.(அஷ்ட‌வ‌ர்க‌த்தில் 39 ப‌ர‌ல் உள்ள‌து). அர்த்த‌மில்லாம‌ல் போய்விடுமா.
  4. முத‌ல் விதியை வைத்து ம‌ட்டும் முடிவு கூறினால் உப‌விதியின் ப‌ல‌ன் தேவையில்லையா.( உப‌ விதி: ந‌வாம்ச‌ம், அஷ்ட‌வ‌ர்க்க‌ம், யோக‌ம்..)
  5.எப்பொழுது முத‌ல் விதியை க‌டைபிடிக்க‌வேண்டும். எப்பொழுது உப விதியை க‌டைபிடிக்க‌வேண்டும் என்று தாங்க‌ள் மேலும் விள‌க்க‌மாக‌ கூறினால் மிக‌வும் ந‌ன்றாக‌ இருக்கும்./////

  உங்களுடைய விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. அனைத்திற்கும் உரிய பதில்கள் இன்றையப் பதிவில் (post dated 6.6.2014) உள்ளன. படித்துப் பாருங்கள் நண்பரே!

  ReplyDelete
 21. kirupa sonathu mutrilum unmai
  10 m athibathy 12 ill thuratesa velai. avasara avasara maga jadagam alasal

  aatam aduvatharku munbe out enral enna niyam. jothida thanthai parasarar kutru elam thubangalukum viduvu kalamundu. thavira sukiranai satarnamaga idai podukirirgal

  asura guru deva guru vai vida balam vaithavar nichayam thavira tirumanam aanavara enrum solavilai

  tirumanam agi irunthal maniviyin bhakiyastanathai parka vendum

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com