மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

26.6.14

Astrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே!

 

Astrology: quiz 60: Answer: வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற பெண்ணே...பெண்ணே!

ஜவ்வாது மேடையிட்டு  சர்க்கரையில் பந்தலிட்டு 
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில்தேனெடுத்து தா தா தா..
(ஜவ்வாது)
வேலோடு விழியிரண்டு வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து போராட வந்த பெண்ணே
ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாழவிட்டு பாராமல் சென்ற கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ....ஹே...
(ஜவ்வாது)
பூப்போல இதழ் விரித்து பொன்னான உடலெடுத்து
தேர் போல வந்த கண்ணே
சிலை போல வந்த பெண்ணே
அத்தானின் துணையிருக்க முத்தான மொழியிருக்க
பித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக அணைத்த கண்ணா..கண்ணா...
ஹேஹேஹேஹெ..ஹே..
(ஜவ்வாது)

பாடல்:  கவியரசர் கண்ணதாசன்.
திரைப்படம் பணத்தோட்டம்

-----------------------------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. அம்மணிக்கு 27 வயதில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு ஆண்டுகூட நிலைக்கவில்லை. விவாகம் ரத்தானது.

2. அம்மணி மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது.

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!

1. ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினாதிபதி நீசமாகிவிட்டார். நீசமானால் விக்கெட் அவுட்.

2.லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் சனீஷ்வரன். இன்னொரு பக்கம் செவ்வாய். சங்கடமான அமைப்பு.

3.பெண்களுக்கு முக்கியமான பாக்கிய ஸ்தான அதிபதி குரு பகவான் லக்கினத்திற்கு எட்டிலும், தன் வீட்டிற்குப் பன்னிரெண்டிலும் அமர்ந்து ரன் அவுட்டாகி விட்டார். அவரால் எந்த உபயோகமும் இல்லாமல் போய்விட்டது.

4. புதன், சுக்கிரன், சனி ஆகிய மற்ற 3 கிரகங்களும் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளார்கள். Retired hurt - ஆடமுடியாத நிலைமை என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

5. சுபக்கிரகங்கள் 3ம் கெட்டிருக்கின்றன. அதுவும் ஒரு சாதகமில்லாத அமைப்பு

6. ஜாதகியின் 7ஆம் வீட்டுக்காரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில். மேலும் அந்த வீட்டிற்கு ஆறில். அதுவும் ஒரு மோசமான அமைப்பு.

7. களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல்

8. பிறகு எப்படி ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது என்ற கேள்வி எழலாம். குரு பகவானின் விஷேசப்பார்வை  சனி மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சுக்கிரனுடன் கை கோர்த்து, ஜாதகிக்குத்
திருமணத்தை நடத்தி வைத்தார்.

9. இரண்டாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய். அத்துடன் 2ஆம் வீட்டின் மேல் குரு பார்வை. என்ன பிரயோஜனம்? சனியின் 3ஆம் பார்வையால்
அந்த அமைப்பு க்ளீன் போல்டானது. (Clean Bowled)

10. அது மட்டுமா? 2ஆம் வீட்டுக்காரன் சூரியன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தான். அவனுக்கும் விக்கெட் பறிபோனது.

11. ஏழாம் வீட்டுக்காரன் சனி 12ஆம் வீட்டில் அந்த வீட்டுக்காரன் புதனுடன் அமர்ந்திருப்பதைப் பாருங்கள். (association of 7th lord and 12th lord) அந்த அமைப்பு திருமண மகிழ்ச்சிக்கு (marital happiness) எதிரானது.

12. போதாததிற்கு சந்திரனும் ராகுவும் சேர்ந்து உள்ளான். மனகாரகனுடன் ராகு சேர்ந்தால் என்ன ஆகும். வேண்டிய அளவிற்கு மனச் சங்கடங்களையும், மனப் போராட்டங்களையும், கவலைகளையும் கொடுத்தான். அவனால் முடிந்தது அதுதான்.

ஆக மொத்தம் இரண்டாம் வீடும் கெட்டுப்போனதால் ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போனது.

ஜாதகிக்குத் தன் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் வெறுத்துப்போய் தன் பெற்றோர்களிடமே திரும்பி வந்துவிட்டார். விவாகத்தையும் ரத்து செய்துவிட்டார்.

துரதிர்ஷ்டமான ஜாதகம். வேறு என்னத்தைச் சொல்வது?

அலசல் போதுமா?

போட்டியில்  29  பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் .16.பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.

அந்த .16. பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் சரியாக இரண்டு பதில்களையும் எழுதியவர்கள் 7  பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான

பதிலை ஒட்டி எழுதியவர்கள் .9  பேர்கள். அவர்களின் பெயரும் பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------

1 ******
Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம். QUIZ NO.60
    30.07.1974 ஆம் தேதி காலை 7.15.05 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகிக்கு கடக லக்கினம். செவ்வாய் யோககாரகன்.
    ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி 40வது வயதில் விவாக ரத்து எற்பட்டது.
    திருமணத்திற்க்கு எதிரான அமைப்புகள் இந்த ஜாதகத்தில் நிறைய உள்ளன.
    1. லக்கினம் பாபகர்த்தாரி தோஷம். ஒரு பக்கம் சனி 12ல், மறுபக்கம் செவ்வாய் 2ல். லக்கினம் பலவீனம் (3 பரல்).
    2. லக்கினாதிபதி சந்திரன் (3 பரல்). விருச்சிக ராசியில் நீசம். நீசபங்க யோகம் உண்டாகி உயர்ந்த நிலையை அடையமுடியும். மேலும் ராகுவுடன் கூட்டு 5ம் வீட்டில். 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.
    3. 7ம் வீட்டு அதிபதி சனி (2 பரல்). லக்கினத்திற்க்கு 12ம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதமாகும். மேலும்,களத்திரகாரகன் சுக்கிரனுடன், புதனுடன் கூட்டு. 12ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன்.
    4. நவாம்சத்தில் லக்கினாதிபதி சந்திரனும், 7ம் வீட்டு அதிபதி சனியும் கூட்டு சேர்ந்து இருப்பதால் புனர்ப்பு தோஷம்.திருமணம் பிரிவில் தான் முடியும். மேலும் களத்திரகாரகன் சுக்கிரனும் இவர்களுடன் கூட்டு.
    5. 9ம் வீட்டு பாக்கியாதிபதி குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி. 6ம் வீட்டு அதிபதி வில்லனும் அவரே. இந்த ஜாதகத்தில் குரு வக்கிரம் அடைந்துள்ளார்.அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் 8ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும்.
    6. 2ம் வீட்டு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் லக்கினத்தில் பாபகர்த்தாரி தோஷத்தில். அதாவது 2ம் வீட்டிற்க்கு 12ல் விரைய ஸ்தானத்தில்.2ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை. நவாம்சத்தில் 2ம் வீட்டு அதிபதி சூரியன் துலா ராசியில் நீசம் அடைந்துள்ளார்.
    7. வக்கிரம் அடைந்த குருவின் 5ம் பார்வை 12ம் வீட்டின் மீதும், 7ம் பார்வை 2ம் வீட்டில் மீது பார்ப்பதாலும் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது.
    8. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சந்திரனை 4ம் பார்வையால் மேலும் பவீனம் அடையவைத்துள்ளார்.
    9. குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு, அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் சனியின் பார்வையுடன். வீக்காக உள்ளார்.குழந்தைக்குக் காரகன் வக்கிர குரு அஷ்டமத்தில் மறைந்து விட்டார். ஜாதகிக்கு குழந்தையில்லாமல் போய்விட்டது.
    குரு வக்கிரத்தில் இருக்கும் பொழுது குருவின் பார்வையால் எந்த பலனும் கிடைக்காது.
    யோககாரன் செவ்வாயின் பார்வை சந்திரன் மீது இருப்பதாலும், நீசபங்க யோகத்தினால் சந்திர தசையில் ஜாதகிக்கு 35 வயதில் திருமணம் ஆகி சந்திர தசை சனி புக்த்தியில் 40 வது வயதில் விவாக ரத்து எற்பட்டது. விவாக ரத்து எற்பட்டதற்கு காரணம் நவாம்சத்தில் சனியும், சந்திரனும் கூட்டு.
    இந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
    1. கஜகேசரி யோகம் சந்திரனிலுருந்து குரு கேந்திரத்தில் இருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.அதிர்ஷ்ட்டம் உண்டாகும், முன்னேற்றம், வெற்றி உண்டாகும்.
    2. நீசபங்க யோகம் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, June 25, 2014 8:53:00 AM/////
---------------------------------------------------------
2
/////Blogger seethalrajan said...
    1. லக்னாதிபதி நிசம் உடன் ராகு, லக்னமும் பாபகர்தாரியோகம் உள்ளது.
    2.9ம் வீட்டு அதிபதி குரு 8ல் மறைவு, 5ல் ராகு யோகம் அனைத்தும் கெட்டுவிட்டது.
    3. 7ம் வீட்டு அதிபதி சனி 12ல் உடன் சுக்ரன்,புதன் ஆனால் அம்சத்தில் சுக்ரன் உச்சம் உடன் லக்ன அதிபதி சந்திரன் மற்றும் களத்திர காரகன் சனி அகையல் சுக்ர திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    7.சிம்ம லக்ன யோக காரகன் செவ்வாய் 2ல் நல்லது ஆனால் அந்த வீட்டு அதிபதி சூரியன் அந்த வீட்டுக்கு 12ல் மற்றும் அம்சத்தில் நிசம். குடும்ப வாழ்கை நன்றாக இல்லை தோல்வி அடைந்து இருக்கும்.
    Wednesday, June 25, 2014 10:11:00 AM/////
-------------------------------------------------------
3
/////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 60 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    கடக லக்கின ஜாதகரான இவருக்கு லக்கினாதிபதி நீச்சம். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டது.
    குடும்ப ஸ்தானத்தில் யோககாரகன் செவ்வாய் அமர்ந்து பாக்யஸ்தான அதிபதி குருவின் பார்வை பெறுவதால் செவ்வாய் தோஷம் இருந்தாலும், சுக்கிர திசை குரு பக்தியில் அதாவது ஜாதகியின் 21 வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.
    ஆனால் குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் அந்த இடத்துக்கு 12ல் அமர்ந்து சனி மற்றும் செவ்வாய்க்கு இடையில் மாட்டிக் கொண்டுவிட்டது மட்டுமல்லாமல் நவாம்சத்தில் நீச்சம் அடைந்து விட்டது. மேலும் களத்திர ஸ்தானாதிபதி சனியும், களத்திர காரகன் சுக்கிரனும் 12ல் மறைந்து விட்டது. அதனால் இவர் கணவரை இழந்து இவரே குடும்பதை தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
    புனர்பூ தோஷம் இருப்பதும் இந்த நிலையை உறுதிப் படுத்துகிறது.
    Wednesday, June 25, 2014 11:06:00 AM/////
-------------------------------------------------------- 
4 ****** 
Blogger murali krishna g said...
    ரொம்பவும் கடினமான ஜாதகமாக உள்ளது !.
    முதலில் 7-ம் வீட்டை பார்க்கலாம் ! 7-ம் வீட்டில் கிரஹங்கள் இல்லை !. அதன் அதிபதி சனி 12-ல் களத்தீரக்காரகன் சுக்கிரனுடனும் ஆட்சி பெற்ற புதனுடனும் கூட்டணி !. 7-ம் வீட்டிற்கு (சனியின் வீடு) லக்னத்திலுருந்து சூரியனுடய பார்வை. வேறு கிரஹங்களின் பார்வை இல்லை !. களத்திர தோஷம் உண்டு !. தாமதமான திருமணம் !. கஷ்டப்பட்டு நடந்தேறிருக்கும் !. சுக்கிர தசையின் முடிவிலோ அல்லது சூரிய தசை ஆரம்பத்தில் நடந்திருக்கும் !. சூரியனும் சுக்கிரனும் திருமணம் நடக்க உதவி இருப்பார்கள் !.சுக்ரன் 12-ல் நட்பு வீட்டில் இருந்து கொண்டு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார் ! அதனால் நிச்சயம் படுக்கை சுகம் உண்டு !
    2-ம் வீட்டு அதிபதி சூரியன் அதற்கு 12-ல். இரண்டாம் வீட்டில் செவ்வாய் (தோஷம்) !. அதற்கு சனியின் பார்வை வேறு !. வக்ர குருவும் மாந்தியுடன் கூட்டணி போட்டு 8-ம் வீட்டில் இருந்து கொண்டு பார்த்தாலும் பலமான பார்வை இல்லை !.எனவே, திருமண வாழ்வு நிலைத்திருக்காது ! விவாகரத்தில் முடிந்திருக்கும் !. நவாம்சத்தில் ஏழாம் வீடு புனர்பூ தோஷத்துடன் சுக்கிரனும் கூட்டணி. காரகோ பாவ நாசனாய என்பது இங்கே மிகவும் பொருந்தும் !.    சரியா அய்யா ? அலசலுக்கு காத்திருக்கிறேன் !
    Wednesday, June 25, 2014 11:34:00 AM
-------------------------------------------------------
5   
/////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில்,2ம் வீட்டதிபதி சந்திரன் 5ல் நீச்சம் மற்றும் ராகு வுடன் கூட்டணி.
    2).இரண்டாம் வீட்டில் செவ்வாய்.பரிவர்த்தனை யோகம்.குருவின் பார்வை இரண்டாம் வீட்டின் மீது.
    3).5ம் வீட்டிலுள்ள நீச்ச சந்திரனுக்கு அந்த வீட்டதிபதி செவ்வாயின் பார்வை.
    4).7ம் வீட்டதிபதி சனியும்,களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல் மறைவு அத்துடன் 12ம் பதி ஆட்சி பெற்ற புதனுடன் சேர்க்கை.
    7ம் வீட்டிற்கு சூரியன் பார்வை.
    5).களஸ்திர ஸ்தானதிபதி சனிக்கும், களத்திர காரகன் சுக்கிரனுக்கும் வக்கிரம் பெற்ற குருவின் பார்வை.
    6).களத்திரஸ்தானாதிபதி சனி தன் வீட்டிற்க்கு 6ல் மறைவு.
    எனவே ஜாதகிக்கு சுக்கிரதசை முடிவில் 30 வயதிற்க்கு மேல் நோயாளியான கணவன் வாய்த்திருப்பார்.
    7).2ல் செவ்வாய் நிற்ப்பதாலும்,2ம் பதி நீச்சமடந்ததாலும்,12ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தாலும் குடும்ப வாழ்வில் சுகமில்லை.
    Wednesday, June 25, 2014 12:21:00 PM/////
 --------------------------------------------------------------- 
6 ******
///////Blogger venkatesh r said...
    ஆசிரியருக்கு வணக்கம். இரண்டாம் கேள்வியே, முதல் கேள்விக்கு பதிலாக உள்ளது.
    புதிர் எண்: 60 க்கான விடை.
    1. ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும்.
    2. குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லை. மன/ மண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்வார்.
    அலசல் இதோ:
    கடக லக்னம், விருச்சிக ராசி ஜாதகி. புனர்பூ தோஷமுள்ள ஜாதகம்.
    1. லக்கினமும், லக்கினாதிபதியும் வலுவாக இல்லை. லக்கினத்திற்கும், லக்கினாதிபதிக்கும் சுபர் பார்வையில்லை. லக்கினாதிபதியும் மனக்காரகனுமான‌ சந்திரன் நீசமடைந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.
    2. குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் 2க்கு 12ல், லக்கினத்தில் அமர்ந்துள்ளார்.இது அவருக்கு நல்ல இடமில்லை.
    3. இரண்டில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்து 6/9ம் அதிபதி குருவின் பார்வையில் உள்ளார். சனி 12ல் அமர்ந்து தன் 3ம் தனிப் பார்வையில் செவ்வாயை பார்க்கிறார்.இந்த காரணங்களால் இரண்டாமிடமும், செவ்வாயும் பலமாக இல்லை.
    4. களத்திராதிபதி சனி,காரகன் சுக்கிரனுடன் 12ல் மறைந்து விட்டார். தவிர 12ம் அதிபதி புதனின் கூட்டணி அவர்களை வலிமை இழக்க‌ வைத்துள்ளது.
    5. 6/9ம் அதிபதி குரு தன் 5ம் தனிப் பார்வையில் இவர்களை பார்க்கிறார்.
    இந்த காரணங்களால், ஜாதகிக்கு, 26 வயதிற்கு மேல் சுக்கிர தசை, குரு புக்தியில் திருமணம் நடந்திருக்கும். அதற்கு பிறகு வந்த சந்திர தசை ராகு (அ) சனி புக்தியில் மண முறிவு ஏற்பட்டிருக்கும்.
    இதற்கான காரணங்கள் :
    1. நவாம்ச லக்னத்திற்கு ஏழில் சனி+சந்திரன் கூட்டணி. புனர்பூ தோசம்.
    2. சந்திரன் நீசமடைந்து, ராகுவுடன் கூட்டணி.இதனால் மன வலிமை குறைந்துள்ளது.
    3. ஏழாமிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
    4. ஜாதகத்தில் சொல்லிக் கொள்ளும்படியான யோகங்களில்லை.
    இதனால், ஜாதகிக்கு கோச்சாரத்தில் வந்த நீச சந்திர தசை ராகு புக்தியில் ஏற்பட்ட மனச் சலனம் காரணமாக‌ மண முறிவுக்கு வித்திட்டு இருக்கும்.
    Wednesday, June 25, 2014 2:28:00 PM//////
-----------------------------------------------------------------------
7
////Blogger Senthil Nathan said...
    ஐயா.
    இந்த பெண்மணியின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சனீஸ்வரன் பன்னிரண்டில் களத்திர காரகன் சுக்கிரனுடன் இருப்பதாலும் சுக்கிரன் நவாம்சத்தில் உச்சம் அடைந்திருப்பதாலும் இவர் 1990-1991 ல் திருமணமாகி விதவையானவர்,
    மேலும் இரண்டாம் அதிபதி சூரியன் இரண்டிற்கு பன்னிரண்டில் இருப்பதாலும் சூரியன் நவாம்சத்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் இவருக்கு குடும்பம் இல்லை .
    அதாவது
    இலக்கினாதிபதி ஐந்தில் நீச்சம் அடைந்திருப்பதாலும் உடன் உச்ச இராகுவும் நீச்ச கேதுவும், செவ்வாயும் சந்திரனை பாதிப்பதாலும் இவர் குழந்தை இல்லாதவர். குறை ஆயுளை கொண்டவர்.
    Wednesday, June 25, 2014 5:25:00 PM/////
-------------------------------------------------------------------- 
8******
/////Blogger Kirupanandan A said...
    இந்த ஜாதகருக்கு தாமதித்த திருமணம் யோகம்தான். 30 வயதிற்கு மேல் சூரிய தசையில் சந்திர புத்தியில் என்று சொல்லலாம். 7ம் அதிபதி சனி, களத்திர காரகன் சுக்கிரன் இருவருமே ஒரு சேர 12ல் மறைந்ததும் அந்த இடம் பாப கர்தாரி யோகத்தில் இருப்பதும் தாமதத்திற்கு முக்கிய காரணம். திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கும். செவ்வாய் வாக்குஸ்தானமான 2ல் இருப்பது வீண் சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகலாம்.
    Wednesday, June 25, 2014 8:15:00 PM/////
----------------------------------------------------------
9******   
////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண்..60
    கடக்க லக்னம் .லக்னாதிபதி 5 ல் திரிகோணத்தில் நீசமாக.. ரகுவுடன் கூட்டு . மனநோயாளி .
    லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் ..
    லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் குரு7ம் பார்வை ..
    களச்திரகாரகன்சுக்கிரன் &ஏழாம் வீட்டதிபதி சனி 12 ல் மறைவு ..
    எட்டில் குருவுடன் மாந்தி ...திருமணம் ஆனாலும் விதவையாகும் வாய்ப்பு. அல்லது விவாகரத்து ..
    Wednesday, June 25, 2014 8:24:00 PM//////
---------------------------------------------------------
10
Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா,வணக்கம்.
    புதிர் 60க்கு விடை:லக்கணாதிபதி நீசம்,2ம் வீட்டு அதிபதி அதற்கு பனிரெண்டில், 7ம் வீட்டு அதிபதி அதற்கு 6ல், களத்திரகாரகன் சுக்கிரன் லக்கணத்திற்கு பனிரெண்டில்.சுக்கிரதிசையில் திருமணம் முடிந்திருக்கும்,குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது.
    Wednesday, June 25, 2014 8:28:00 PM/////
------------------------------------------------------------  
11
///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.60:
    The Native of the horoscope is 40 years old.
    1. She has got married and short span of Married life.
    2. Her marriage or family life is in trouble.
    Reasons:
    1. Lagna lord Moon is in debilitated position at fifth house along with exalted Rahu.
    2. Bagyathipathi (Jupiter) is in twelfth house from its own house.
    3. Seventh lord and 4th lord is in twelfth house from lagna,
    4. There is Kala sarpa dhosa.
    5. There is kuja dosha.
    6. Seventh house lord Saturn and Kalathra karaga Venus is hemmed between Kethu and Sun. (baba kathiri yoga)
    7. Lagna and second house lord is in Baba kathri yoga. (Saturn and Mars)
    8. There is Vibaretha Raja Yoga.(Eighth house lord Satrun and Twelfth house lord Mercury is in Twelfth house).
    Marriage:
    i)Though seventh house lord and kalathra karaga is in twelfth house,she has married at the age of 26 to 29 during Venus Dhasa period because Jupiter is aspecting as its 5th aspect and aspecting second house too. Because of vibareetha raja yoga also supported to get marry.
    ii) In Navamsa, Venus is exalted, associated with seventh house lord and parivarthna yoga with Jupiter.
    Hence, all the above reasons she got married.
    Marriage or Family life:
    i)Family life is not happy due to seventh house lord and kalathra karaga are in baba kathiri yoga nd sitting in twelfth house from lagna,
    ii) Saturn is aspecting second house as its 3rd aspect. Its bad and second house lord is sitting twelfth house from its own house.
    iii) Mars is sitting in second house and getting saturn's aspect. Its too bad for family life.
    iv) Saturn is aspecting 9th house and 9th house lord is sitting 12th house from its own house. Its not good sign.
    v) Fourth house lord sitting in twelfth house along with saturn.It shows bad sign.
    Her Husband deceased or seperation due to Sun is sitting twelfth house from its own house( 8th house lord from 7th house)
    vi)Saturn is sitting twelfth house from lagna and under baba kathiri yoga and getting sixth house lord aspects.

    vii)In Navamsa, Second house lord is debilitated.
    viii) lagna lord and seventh house lord are in 6/8 position.
    Hence all the above reasons, She has short span of marriage life and family life was not happy.
    Since Venus and Saturn are associated and sitting in twelfth house, she involves in illicit sex. She has more sexual feelings and It spoils her life.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, June 25, 2014 9:04:00 PM/////
-------------------------------------------------------   
12******
/////Blogger valli rajan said...
    Dear Guruji,
    1. Lagna lord is neecham
    2. Lagnam is in PapaKarthari Yoga
    3. Jupiter in eight house
    4. Venus in 12 house.
    5. 7th Lord in twelfth house but aspected by guru.
    6. Venus is uccham in navamsam. Neecha banga raja togam.
    7. 2nd lord is neecha in navamsam.
    Answer:

    1.Marriage is held at the age of 30 when surya dasa period.
    2.But there will separation within 4 years when surya dasa saturn sub
    period.
    3. Marriage happened because strong venus and aspect of guru on seventh lord.
    Wednesday, June 25, 2014 10:16:00 PM/////

------------------------------------------------------------  
13   
////Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதி நீசம். 7ம் வீட்டுக்கார சனி அந்த வீட்டிற்கு 6ல், இலக்கினத்திற்கு மறைவிடமான 12ல். களத்திரகாரகர் சுக்கிரனும் 12ல். 2ம் வீட்டுக்கார சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் அதாவது இலக்கினத்தில். 2ம் வீட்டில் செவ்வாய். ஆனால் இவர் கடக இலக்கினத்திற்கு யோககாரகர் ஆகிறார். பாக்கியாதிபதியும் முதல் நிலை சுப கிரகமான குரு பகவான் இலக்கினத்திற்கு எட்டில். உடன் மாந்தி. திருமண வாழ்விற்கு அவ்வளவு விசேஷம் இல்லாத ஜாதகம். ஒரே ஆறுதல் களத்திரகாரகர் மேலும், 7ம் வீட்டுக்காரர் மேலும், 2ம் வீட்டின் மேலும், குரு பகவானின் பார்வை விழுவது மட்டுமே. சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கும். இராகுவும் சந்திரனும் சேர்ந்து 5ம் வீட்டில் இருக்கின்றனர். அதுவும் வலிமை இல்லாத சந்திரன். ஜாதகியின் வாழ்க்கை சோகம் மிகுந்ததாக இருக்கும். சந்தேக குணம் இருக்கும். புத்திர தோஷம் உண்டு. 12ல் சனி இருப்பதால அயன சயன பாக்கியத்திற்கு கேடு. மண வாழ்க்கை இனித்திருக்காது. பிரிந்து வாழவும் வாய்ப்புள்ளது.
    Thursday, June 26, 2014 12:24:00 AM/////
-----------------------------------------------------  
14
/////Blogger Dallas Kannan said...
    The chart has lot of yogams, but with a catch..
    Vipareetha raja yogam -- in papakarthari yogam
    Gajakesari -- Guru in 8th place and Moon is neecham
    Gurumangala - Guru is in 8th place.
    For a girl 9th place/lord and Guru is important. In this chart all 3 are spoiled.
    7th lord is in 12 plance... the consolation is, it is in vipareetha rajayogam and Guru is looking at it.
    2nd place is lord is in 12th place from it and Mars is there.
    So I am going to say, she is married late after Sukra Dasa.
    But Marrage life did not last long.
    Thursday, June 26, 2014 12:37:00 AM/////

------------------------------------------------------------------------------  
15******
////Blogger sivaradjane said...
    7 - ம் அதிபதி சனி’ 12 ல் மறைவு. உடன் களத்திரக்காரகன் சுக்கிரனும் மறைவு மற்றும் பாபகர்த்தாரி யோகத்தில்’ சிக்கிக் கொண்டுள்ளனர். பாக்கியாதிபதி குரு’ அந்த வீட்டுக்கு 12 ல் மறைந்துள்ளார்.2 ம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு 12ல் மறைவு ,கூடவே அவரும் பாபகர்த்தாரியில் சிக்கியுள்ளார். ஆயினும் 9,6 க்குடைய குரு’வின் பார்வை 7 ம் அதிபதி சனி’க்கும் ,சுக்கிரனுக்கும் இருக்கிறது. 2-ம் இடத்திற்கும் குரு பார்வை உள்ளது.மேலும் அம்சத்தில் சுக்கிரன் உச்சத்தில்..உடன் லக்னாதிபதி சந்திரனுடன் 7-ம் அதிபதி
    கூட்டாக உள்ளதால் தாமதமாக திருமணம் நடந்திருக்கும். ஆனால் 12-ம் இடமான அயன ,சயன போகத்தில் சனி இருப்பதால் இல்லற வாழ்க்கை சுகப்பட்டிருக்காது. மேலும் 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை.2-ம் அதிபதி ’சூரியன்’அம்சத்தில் நீசமாகியிருப்பதால் ஜாதகி கணவனை பிரிந்தவராயிருப்பார்.
    Thursday, June 26, 2014 2:21:00 AM/////
-----------------------------------------------------
16 
/////////Blogger kmr.krishnan said...
    இந்த ஜாதகத்தில் குருவின் பார்வை என்ற ஒரு விஷயம் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தடுமாற வைக்கிறது.
    1.முதலில் லக்கினம் செவ்வாய் சனி ஆகிய கிரஹங்களால் சூழப்பட்டு பாபகர்த்தாரியில் உள்ளது.லக்கினத்திற்கு 22 பரல்தான். லக்கினாதிபதி சந்திரன் நீசம் அடைந்ததும் இன்றி ராகுவுடன் கூட்டணி. எனவே அஸ்திவாரமே ஆட்டம் கண்ட ஜாதகம்.
    2.இரண்டாம் அதிபன் சூரியன் லக்கினத்தில் அமர்ந்தது, தன் வீட்டிற்கு 12ல் அமர்ந்தது சிலாக்கியமில்லை.எனவே குடும்ப வாழ்க்கை சுகமில்லை.
    3. ஏழாம அதிபன் சனைச்சரன் 12ல் அமர்ந்தது கணவனை ஏதோ ஒரு காரணத்திற்காக அதிகம் பிரிந்து வாழும் சூழல். அது வேலை காரணமாகவும் இருக்கும்.
    4 ஏழாம் அதிபன் குருவின் பார்வை பெறுவதும் களத்திரகாரகன் சுக்கிரன் குருவின் பார்வை பெறுவதும் எட்டாம் அதிபன் 12ல் மறைவதும் இவருக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு அதிகம் என்ப்தை சுட்டுகிறது.சுக்கிர தசா புத புக்தியில் 28 வயதுபோல் திருமணம்.
    5.இந்த லக்கினத்திற்கு யோககாரகன் செவ்வாய் இரண்டாமிடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்தது சுமாரான குடும்ப வாழ்வை கொடுத்திருக்கும்.
    6. லக்கினத்திகு ஐந்தில் ராகு அமர்ந்தது குழந்தைப்பேறு இல்லாமல் செய்கிறது.
    28 வயதில் திருமணம் ஆகி குழந்தைப்பேறு இன்றி வருந்த்திக்கொண்டு, மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.
    மண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு.

    Wednesday, June 25, 2014 2:58:00 PM/////((மகிழ்ச்சியில்லாத குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவார்.
    மண முறிவு ஏற்பட்டு தனியாக வாழவும் வாய்ப்புண்டு என்று ஈரெட்டாகச் சொல்லலாமா?  ஸ்திரமாக ஒரே பதிலை அல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும் மிஸ்டர் கிருஷ்ணன்!).
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

Unknown said...

யோககாரகர் செவ்வாய் 2ல் இருப்பது, 9ம் அதிபதி குருவுடன் இருக்கும் பரஸ்பர பார்வை இவற்றால் தொழில் முன்னேற்றம் காணலாம் (secured job), சொந்த காலில் நிற்கலாம். இது கணவன், குழந்தைகளுடன் வாழும் குடும்ப வாழ்க்கைக்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

kmr.krishnan said...

ஏன் ஈரெட்டாகச்சொன்னேன் என்றால் இந்த ஜாதகம் என் மனைவியின் ஜாதகம் போல் கிட்டத்தட்ட உள்ளது. அவர்களும் கடக லக்கினம் விருச்சிக ராசி.என்ன இந்த ஜாதகி கேட்டை . என் மனைவி அனுஷம். அனுஷம் என்பதால் ஏற்ற இற‌கங்களுடன் குடும்ப‌ வாழ்வை 60 வயதுவரை ஓட்டிவிட்டார்கள். ஆகவே
இந்த ஜாதகியும் அப்படி இருக்கலாமே என்ற எண்ணத்திலும், எதிர்மறை சோல்ல வேண்டாமே என்ற நோக்கத்திலும் அவ்வாறு கூறினேன்.

ஜாதகியின் திருமண வயது, அவருடைய கணவனைப் பிரிந்து வாழும் ஜாதக‌ அமைப்பு ஆகியவற்றைச் சரியாகவே சொல்லியுள்ளேன். வாத்தியார் நட்சத்திரம் கொடுக்காவிட்டாலும், என் அலசல் பாணி சரியாகத்தான் உள்ளது என்ற மனநிறைவு உள்ளது.

மிக்க நன்றி ஐயா!

Unknown said...

அய்யா வணக்கம்

Ram Venkat said...

சுழல விட்டுள்ள பாட்டு அருமை. அதை விட அருமை கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு ஏற்றவாறு வரியை மாற்றியுள்ளீர்.பெரும்பாலும் பெண்கள்தான் மணமுறிவினால் பாதிக்கப்படும் நிலை மாறி ஆண்கள் பாதிக்கப்படும் காலம் வந்து விட்டது என்று சொல்லுகிறீரோ?

sivaradjane said...

ஐயா வணக்கம்..
நான் கடந்த ஐந்து ,ஆறு மாதங்களாக தங்களது பாடங்களை தொடக்கத்தில் இருந்து படித்து வருகிறேன்.. 400 பாடங்களை கடந்திருப்பேன். ஆனால் நடுவில் சில மின்னஞ்சல் பாடங்களைத் தவிர மற்றவற்றை ஆர்வமுடன் படித்து வருகிறேன்.. ஆரம்ப போட்டிகளில் பங்கெடுக்க ஆசை என்றாலும் தவறாக சொல்லிவிடுவேனோ? என ஒரு வித தயக்கத்தில் பங்கெடுக்காமல் விட்டுவிடுவேன். ஆயினும் அடக்க முடியாத ஆர்வத்தில் இரண்டு போட்டிகளில் பங்கெடுத்தேன். ஆனால் பதில்கள் அனைத்தும் தவறாக அமைந்து விட்டன.. மூன்றாம் முறையாக நேற்றைய போட்டியில் கலந்து கொண்டேன்.. என்னால் நம்பவே முடியவில்லை.. சரியான பதில்கள் என எனக்கு நட்சத்திரங்களை தாங்கள் கொடுத்துள்ளீர்கள்.என் மகிழ்சிக்கு அளவே இல்லை..இது தொடந்து பங்கெடுக்க எனக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.. இந்த வெற்றியை குருவே உங்கள் பாதங்களில் சமர்பிக்கிறேன்.

சிவராஜன் (பாண்டிச்சேரி)

Subbiah Veerappan said...

////Blogger Kirupanandan A said...
யோககாரகர் செவ்வாய் 2ல் இருப்பது, 9ம் அதிபதி குருவுடன் இருக்கும் பரஸ்பர பார்வை இவற்றால் தொழில் முன்னேற்றம் காணலாம் (secured job), சொந்த காலில் நிற்கலாம். இது கணவன், குழந்தைகளுடன் வாழும் குடும்ப வாழ்க்கைக்கு உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது./////

என்ன சாமி அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? யோககாரகன் என்னும்போது, கெட்டுப்போகாமல் இருந்தால் அவன் எல்லா யோகங்களுக்கும் துணை நிற்பான். இங்கே சனியின் பார்வையால் அவன் நிலை கெட்டு விட்டது.

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
ஏன் ஈரெட்டாகச்சொன்னேன் என்றால் இந்த ஜாதகம் என் மனைவியின் ஜாதகம் போல் கிட்டத்தட்ட உள்ளது. அவர்களும் கடக லக்கினம் விருச்சிக ராசி.என்ன இந்த ஜாதகி கேட்டை . என் மனைவி அனுஷம். அனுஷம் என்பதால் ஏற்ற இற‌கங்களுடன் குடும்ப‌ வாழ்வை 60 வயதுவரை ஓட்டிவிட்டார்கள். ஆகவே இந்த ஜாதகியும் அப்படி இருக்கலாமே என்ற எண்ணத்திலும், எதிர்மறை சோல்ல வேண்டாமே என்ற நோக்கத்திலும் அவ்வாறு கூறினேன்.
ஜாதகியின் திருமண வயது, அவருடைய கணவனைப் பிரிந்து வாழும் ஜாதக‌ அமைப்பு ஆகியவற்றைச் சரியாகவே சொல்லியுள்ளேன். வாத்தியார் நட்சத்திரம் கொடுக்காவிட்டாலும், என் அலசல் பாணி சரியாகத்தான் உள்ளது என்ற மனநிறைவு உள்ளது.
மிக்க நன்றி ஐயா!/////

எதிர்மறையான அமைப்பு இருக்கும் இடங்களில் சொல்லித்தானே ஆக வேண்டும் ஸ்வாமி! இனிமேல் சொல்லுங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger raju maharajun said...
அய்யா வணக்கம்/////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger venkatesh r said...
சுழல விட்டுள்ள பாட்டு அருமை. அதை விட அருமை கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்திற்கு ஏற்றவாறு வரியை மாற்றியுள்ளீர்.பெரும்பாலும் பெண்கள்தான் மணமுறிவினால் பாதிக்கப்படும் நிலை மாறி ஆண்கள் பாதிக்கப்படும் காலம் வந்து விட்டது என்று சொல்லுகிறீரோ?/////

உண்மைதான். ஆனால் மணமுறிவு என்று வரும்போது இரு பாலருக்கும் பாதிப்பு ஏற்படும். பாதிப்பை அளவெடுக்க முடியாது!

Subbiah Veerappan said...

//////Blogger sivaradjane said...
ஐயா வணக்கம்..
நான் கடந்த ஐந்து ,ஆறு மாதங்களாக தங்களது பாடங்களை தொடக்கத்தில் இருந்து படித்து வருகிறேன்.. 400 பாடங்களை கடந்திருப்பேன். ஆனால் நடுவில் சில மின்னஞ்சல் பாடங்களைத் தவிர மற்றவற்றை ஆர்வமுடன் படித்து வருகிறேன்.. ஆரம்ப போட்டிகளில் பங்கெடுக்க ஆசை என்றாலும் தவறாக சொல்லிவிடுவேனோ? என ஒரு வித தயக்கத்தில் பங்கெடுக்காமல் விட்டுவிடுவேன். ஆயினும் அடக்க முடியாத ஆர்வத்தில் இரண்டு போட்டிகளில் பங்கெடுத்தேன். ஆனால் பதில்கள் அனைத்தும் தவறாக அமைந்து விட்டன.. மூன்றாம் முறையாக நேற்றைய போட்டியில் கலந்து கொண்டேன்.. என்னால் நம்பவே முடியவில்லை.. சரியான பதில்கள் என எனக்கு நட்சத்திரங்களை தாங்கள் கொடுத்துள்ளீர்கள்.என் மகிழ்சிக்கு அளவே இல்லை..இது தொடந்து பங்கெடுக்க எனக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.. இந்த வெற்றியை குருவே உங்கள் பாதங்களில் சமர்பிக்கிறேன்.
சிவராஜன் (பாண்டிச்சேரி)/////

இறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்யுங்கள். என் பதிவை அடையாளங்காட்டியதும், உங்களைப் படிக்க வைத்ததும், படித்தததை மனதில் தங்கவைத்ததும் - எல்லாமே இறையருள்தான்!

hamaragana said...

அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா
இரண்டு வீடுகளை மட்டும் அலசுங்கள் என்று கூறியதால் .அத்துடன் நிறுத்தி கொண்டேன் ..முன்னே தவறுகள் இருந்தாலும் தற்போது மீண்டும் மீண்டும் முயற்சி செய்து .நன்கு அலசியதில் அதிகமான புள்ளிகள் ..நன்றி அய்யா ...s.n.ganapathi