மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.6.14

Astrology: quiz.58: பேசுவது கிளியா? பெண்ணரசி மொழியா?

 
Astrology: quiz.58: பேசுவது கிளியா? பெண்ணரசி மொழியா?

Quiz No.58: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தியெட்டு

10.6.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்::

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.



நவாம்சம் இல்லையே என்று சிலர் வருத்தப் படுகிறார்கள். அவர்களுக்காக இன்று நவாம்சத்தையும் கொடுத்துள்ளேன்!


ஜாதகரின் 7ஆம் வீட்டையும், 2ஆம் வீட்டையும் ஆராய்ந்து பதில் எழுதுங்கள். ஜாதகருக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம்ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று? மண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஆகவில்லை என்றால்  ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா? அல்லது இல்லையா?

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses)  குடைந்து  எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29 comments:

  1. Respected Sir
    Here is my quick analysis.

    1. Kethu is in 7th place
    2. Mars is in lakna looking at 7th place, but he is yogakaraha for Simha lakna.
    3. 2nd lord Budha is in 12place, but with laknathipaty and Guru looks at it. Guru looks at 2nd house as well.
    4. 7th lord is 6th place. But he is also 6ht lord and 8th log Guru is with him. Vipareetha Rjayogam.
    5. Sukran is in good place (Friend's house and in 11th place).
    6. Sukra Dasa comes at the right time.

    So he got married after 27 in sukra Dasa.
    Married life will have problems because of Kethu, Mars look and Sani being in 6th house, but who does not in these days...

    ReplyDelete
  2. 1. Jathaga is married.
    2.The marriage could have been after 27 years during sukra dasa.
    3.Jathaga's family life would be overall good.

    ReplyDelete
  3. quiz No. 58

    ஏழுக்குடையவன் ஆட்சி.களத்திரகாரகன் சுக்கிரன் 11ல், குருவின் 9ம் பார்வை இரண்டாமிடத்தில்.ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். புதன் தசை சூரியபுத்தி அல்லது குருபுத்தியில் நடந்திருக்கும்.

    இரண்டாம் வீட்டுக்குரியவன் லக்கினாதிபதியோடு பனிரண்டில்..அனேகமாக ஜாதகர் வெளிநாட்டில் செட்டிலாக வாய்ப்பு உண்டு அல்லது குறைந்த பட்சம் வருமானமாவது வெளிநாட்டிலிருந்து வர வாய்ப்புண்டு.

    ReplyDelete
  4. வணக்கம். Quiz No. 58

    01.08.1961 ஆம் ஆண்டு, காலை 8.15.01 மணிக்கு, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தார் இந்த ஜாதகர். சிம்ம லக்கின ஜாதகம்.

    பதில் -1
    7ஆம் வீடு, 7ஆம் வீட்டு அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் இந்த ஜாதகத்தில் கெட்டிருப்பதால் திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்.

    காரணம்:
    7ம் வீட்டில் கேது 7ம் வீட்டு அதிபதி சனி 6ம் வீட்டில் (அதாவது 7ம்வீட்டிற்க்கு 12ல்) 9ம் வீடு பாக்கியாதிபதி செவ்வாய் ராகுவுடன் லக்கினத்தில் கூட்டு. மேலும் 6ம் வீட்டு வில்லனும் சனி அவரே. எல்லாம் ஒன்று சேர்ந்து திருமணம் இல்லாமல் செய்துவிட்டது.

    பதில் -2
    குடும்ப வாழ்க்கையும் அமையாமல் போய்விட்டது.

    காரணம்:
    2ம் வீட்டு அதிபதி புதன் லக்கினத்திற்க்கு 12ல் பகை வீட்டில் அமர்ந்துள்ளார். சிம்ம லக்கினகாரர்களுக்கு யோகமில்லாதவர்கள் சுக்கிரன், புதன்.

    அதிகபடியான காரணங்கள்.
    1. கால சர்ப தோஷம். தீய கிரங்களுடன் 1ம் வீடு அல்லது 7ம் வீட்டுடன் கூட்டு அல்லது பார்வை இருந்தால் திருமணம் இல்லாமல் செய்துவிடும்.

    2. குரு நீசம்(4 பரல்) சனியுடன் (4 பரல்) கூட்டு.

    3. பல வீனமான சந்திரன் அஷ்டமத்தில் (3 பரல்) 7ம் பார்வை 2ம் வீட்டில் பார்ப்பதால் எந்த உபயோகமும் இல்லை.

    4. 5ம் வீட்டு அதிபதி குரு 6ம் வீட்டில் நீசம். குழந்தை பாக்கியமும் இல்லை.

    5. 7ம் வீட்டில் கேது இருப்பதால் ஜாதகனுக்கு அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. 7ம் வீட்டில் 21 பரல்கள் பவீனம். திருமணத்திற்க்கு குறைந்த பட்சம் 25 பரல்களாவது இருக்க வேண்டும்.

    6. லக்கினம் (4 பரல்) பலவீனம்.செவ்வாய் ராகு கூட்டு கேதுவின் 7ம் பார்வை எல்லாம் சேர்ந்து திருமணம் இல்லாமல் செய்துவிட்டது.

    7. 4ல் மாந்தி இருப்பதால் துரதிர்ஷ்டவசமானவன் எழ்மையானவன்

    8. களத்திரகாரகன் சுக்கிரன் பார்வை 7ம் வீட்டின்மீதோ 1ம் வீட்டின்மீதோ இல்லாமல் இருப்பதால் திருமணம் செய்யும் அதிகாரம் இல்லாமல் போய்விட்டான்.

    9. சிம்ம லக்கினகாரர்களுக்கு யோகமில்லாதவர்கள் சுக்கிரன், புதன் பெரிய நன்மைகளை செய்யமாட்டான்.

    10. சிம்ம லக்கினகாரர்களுக்கு யோககாரன் சூரியன், செவ்வாய், புதன் மூவரும் ஜாதகத்தில் வலிமையாய் இருப்பது அவசியம். ஆனல் இந்த ஜாதகத்தில் இல்லை.

    சந்திரசேகரன் சூரியநாரயணன்

    ReplyDelete
  5. வணக்கம்

    திருமண வாழ்க்கை வாய்ப்பு இல்லை

    7ம் அதிபதி 6ல் மறைவு
    2ம் அதிபதி 12ல் மறைவு

    நன்றி
    ஜவஹர்

    ReplyDelete
  6. அருமையான தலைப்பு. வகுப்பு அறையின் சிற‌ப்பில் இதுவும் ஒன்று.

    எதிர்பார்க்கும் அடுத்த தலைப்பு

    கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் மொழியா

    பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா

    ReplyDelete
  7. Native of the horoscope will not get married.
    2nd House : 2nd house owner Mercury is placed in 12th house and 12th house owner Moon sees 2nd house.
    Also moon is neecham in navamsa. 8th place owner [Jupiter] sees the second house.
    7th house : 7th house owner Saturn[though in own house] is placed 12th from its position.
    Aspected by bad planets Mars and Rahu. Kethu is placed in 7th place.

    ReplyDelete
  8. இரண்டு கேள்விகள்தாம் என்று சொல்லிவிட்டு கேள்விக்குள் கேள்விகள், துணைக் கேள்விகள் என்று நிறைய இருக்கின்றன.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய ஐயா:


    ஜோதிட புதிர் எண் :58 க்கான எனது கணிப்பு:


    1) ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். (32.6 - 33.8 வயதில்)

    காரணங்கள்:-

    * சிம்ம லக்னம், மீன ராசி, லக்ன அதிபதி "சூரியன்" 12ல் மறைந்துள்ளார்

    * சிம்ம லகினதிற்கு யோககரன் "செவ்வாய்" (4 மற்றும் 9மிடத்திருக்கு அதிபதி) லக்கினத்தில் ராகுடன் சேர்ந்து உள்ளார். இவர்களது பார்வை 7ம் இடத்தின் மீது உள்ளது.

    * 7ம் இடத்து அதிபதி "சனி" 6ம் இடத்தில் ஆட்சி (அம்சத்தில் வர்த்தகோமம்) , உடன் நீசம் பெற்ற குருடன் சேர்ந்து உள்ளார் (அம்சத்தில் ஆட்சி) . மற்றும் 7ம் இடத்தில் "கேது" அமர்ந்து உள்ளார்.

    * களத்திரகாரகன் சுக்கிரன் 11ம் இடத்தில் "நட்பு வீடு".

    * 26வயது 6மாதத்திற்கு பிறகு சுக்கிர தசை இதில் சுக்கிர, சூரிய, சந்திர புத்தி கடந்து செவ்வாய் புத்தியில் (32.6 - 33.8 வயதில்) திருமணம் நடந்திருக்கும்.

    2) குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    காரணங்கள்:-

    * 2ம் இடத்து அதிபதி "புதன்" 12ம் இடத்தில் (2ம் இடத்திலிருந்து 11ம் இடம்) சூரியனுடன் உள்ளார். (புதாதித்ய யோகம்)

    * 2ம் இடத்தின் மீது குரு [5 & 8 ம் அதிபதி] (6ம் இடத்திலிருந்து 9ம் பார்வை), சந்திரன் [12ம் அதிபதி] (8ம் இடத்திலிருந்து 7ம் பார்வை ) பார்வை உள்ளது. இதில் சந்திரனை "செவ்வாய்" (8ம் பார்வை) லக்கனத்தில் இருந்து பார்க்கிறார்.

    ...சுபம்...

    ReplyDelete
  10. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    புதிர் எண் 58

    லக்னம் சிம்மம் ..
    1.லக்னாதிபதி சூரியன் தன வீட்டிற்கு 12 ல் உடன் புதன் .
    2.லக்னத்தில் சிம்மத்திற்கு யோக காரகன் செவ்வாய் உடன் ராஹு
    3.இவர்கள் இருவரின் பார்வை 7 மிடத்தை ..7மிடம் .கும்பம் இதில் கேது ..
    4.7மிட அதிபதி சனி ஆட்சியாக மகரத்தில் உடன் குரு ஆனால் இது 6 . . ...மிடமாக அமைந்தது

    5.2 வருடம் 6மாதம் சனி திசை இருப்பு .பின் புதன் 17 வருடம் அடுத்து .கேது 7 வருடத்திற்கு கடைசி சனி புக்தி வரும் நேரம் திருமணத்தை . ..கொடுதிருப்பான்.

    .6.சனியும் குருவும் 6 மிடம் 8 மிடம் அதிபதிகள் இருவரும் 6ல் கூட்டு **விபரீத ராஜ யோகம் *** இந்த விபரீத ராஜா யோக கிரகங்கள் 2 பேரும் லக்னாதிபதி&குடும்பாதிபதி புதன் 7 ம் பார்வையாக பார்த்ததால் திருமணம் உண்டு.

    7.குரு தனது 9ம் பார்வையாக 2ம் வீட்டை பார்ப்பதால் திருமணம் குடும்பம் என்று நிச்சயமாக உண்டு.

    வாத்தியார் அய்யா சொல்லிய மாதிரி .உண்டு அல்லது இல்லைஎன

    வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் சொல்லி விட்டேன் s.n.ganapathi.

    ReplyDelete
  11. வணக்கம்

    திருமண யோகம் இல்லை .,
    ஏழாமிடம் மற்றும் இரண்டாமிடம் குறைவான பரல்கள் , ஏழில் உள்ள கேது சுபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலும் ஆறில் எட்டாமதிபனும், எட்டில் பன்னிரண்டாம் அதிபனும் . , ஏழாம் அதிபதி சனி ஆட்சி பலத்துடன் இருந்தாலும் அவர் அந்த வீட்டுக்கு மறைவு மேலும் வக்கிரமாகிறார் .. யோககாரகன் செவ்வாய் லக்கினத்தில் இருப்பினும் செவ்வாயுடன் ராகு சேர்க்கை ., இரண்டாம் அதிபதி புதன் லக்னாதிபதியுடன் சேர்ந்து பண்ணிரண்டில் மறைவு . களஷ்திரஷ்தான அதிபதியும் காளஷ்திரகாரகனும் 6/8 ., இரண்டாமிடம் குரு பார்வையுடன் இரண்டாம் அதிபதி புதன் குருபார்வையுடன் சப்தமாக .. ஆனால் குரு வக்கிரம்+நீசம். இதுவரை நடைபெற்ற திசைகளும் சாதகமாக இல்லை.. .. நவாம்சத்தில் இரண்டாம் மற்றும் பன்னிரண்டாமிடம் வர்கோத்தமம்., இவரது திருமணம் ஒருகுரையுள்ள திருமணமாக நடந்து இருப்பின் (இரண்டாம் திருமணம் , தனது தகுதிக்கு குறைவானது போன்ற ) சுகம் .,

    ReplyDelete
  12. இல்லை. இல்லை. 1.‍‍‍‍‍‍ 7 கு உடையவன் 6 இல்
    2. 2 கு உடையவன் 12 இல். கல்யாண்னம் ஆகாது.

    ReplyDelete
  13. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    ஜாதகருக்கு 26 வயதிற்க்கு மேல் சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்க வேண்டும்.7ம் வீட்டிற்கு செவ்வாய்,ராகு பார்வை. 7ம் அதிபதி சனி 6ல்(வக்கிரம்),தன் வீட்டிற்க்கு 12 மற்றும் லக்கினத்திற்க்கு 6ம் இடத்தில்.குடும்பாதிபதி புதன்,லனாதிபதி சூரியனுடன் சேர்ந்து 12ல் மறைவு.
    திருமணத்திற்க்கு பின் மனைவி பிரிவு அல்லது மறைவு.ஜாதகருக்கு வெளி நாட்டு வாசம்.

    ReplyDelete
  14. லக்னாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில். ஏழாம் அதிபதி சனியும் அதற்கு விரய ஸ்தானமான 6-ல் வக்கிரம் பெற்று வர்கோதமும் ஆகி இருக்கிறார். லக்னத்தில் செவ்வாய் ராகு. மனிதர் காதல் வசப்பட்டு தோல்வியுற்று இருப்பார். சனி குரு ஆறாம் இடத்தில் சேர்க்கை பெற்று வக்கிரமும் பெற்றிருப்பதால் கிட்டத்தட்ட துறவி போன்று வாழ்க்கை அமைந்திருக்கும். கேது தசை புதன் புக்தியில் திருமணம் ஆகிருக்கலாம். ஆனால் அது நிலைத்திருக்காது அல்லது மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார்!

    ReplyDelete
  15. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 58 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    சிம்ம லக்ன ஜாதகரான இவருக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதன் 12ல் லக்னாதிபதி சூரியனுடன் சேர்ந்து குரு பார்வையைப் பெறுவதாலும், யோக காரகனான செவ்வாய் லக்கினத்தில் இருந்து களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் அவருடைய 30 ஆவது வயதில் சுக்கிர தசை சூரிய புக்தியில் திருமணம் ஆகி இருக்கும்.

    ஆனால் களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கேது வியாதி உடைய துணையை அளித்திருப்பார். மேலும் களத்திர ஸ்தான அதிபதி சனி அந்த இடத்துக்கு 12ல் அதாவது 6ல் ரோக ஸ்தானத்தில் இருக்கிறார். அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்திருக்காது.

    ReplyDelete
  16. புதிர் எண் :58 க்கான என்னுடைய அலசல்:

    சிம்ம லக்னம், மீன ராசி ஜாதகர். புனர்பூ தோஷமுள்ள‌ ஜாதகம்.

    அவருக்கு திருமண பாக்கியம் கிடைக்கவில்லை.

    ஜாதக ரீதியாக அதன் காரணங்கள்:

    1. லக்னாதிபதி சூரியனும்,குடும்பாதிபதி புதனும் 12ல் மறைந்து விட்டனர்.
    2. தவிர 6,8ம் அதிபதிகளான சனி மற்றும் குருவின் நேர் பார்வை வேறு அவர்களின் மேல்.
    3. களத்திராதிபதி சனி 6ல் மறைவு.
    4. குடும்ப காரகன் குரு நீசம் மற்றும் 6ல் மறைவு.
    4. 7மிடம் சுபகர்த்தாரியில் இருந்தாலும் அதில் கேது அமர்ந்து குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்.
    5. லக்னத்தில் அமர்ந்த யோககாரகன் செவ்வாய் மட்டுமே 7மிடத்தை பார்க்கிறார். ஆனால் அவரும் ராகுவுடன் கை கோர்த்து வலுவிழந்து விட்டார்.
    6. களத்திர காரகன் 11ல்"தனக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இல்லை" என அமர்ந்து விட்டார்.

    ஜாதகருக்கு கோச்சார ரீதியாக வந்த தசாபுக்திகளும் சாதகமாகவில்லை. குடும்பஸ்தானத்திற்கு இயற்கை சுபர்களான குரு மற்றும் சந்திரன் பார்வையிருப்பினும்,தங்களின் 8ம் மற்றும் 12மிட‌ ஆதிபத்தியத்தின் காரணமாக ஜாதகருக்கு குடும்பம் அமைய உதவவில்லை.

    எனவே, ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்க‌ வாய்ப்பில்லை.குடும்பமே அமையாத போது மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?

    "OVER TO VAATHIYAR".

    ReplyDelete
  17. கஷ்டமய்யா. திருமணம் புரிந்து சேர்ந்து வாழாதவர்களும் இருக்கிறார்கள். திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். மண முறிவு ஆகி இரண்டாவது திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். மணமுறிவு ஆகாமலேயெ இரண்டாவது திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

    சரி இன்றைய ஜாதகத்திற்கு வருவோம். 7ல் கேது. 7ம் அதிபதி 6ல் மறைவு. ஆயினும் களத்திரகாரகன் சுக்கிரன் 11ல் நல்ல நிலையில் இருப்பதால், திருமணம் பாக்கியம் உண்டு. ஆனால் தாமதத் திருமணம். 30 வயதிற்கு மேல் சுக்கிர தசையில் சந்திர புத்தியில். 2ம் அதிபதி புதன் 12ல் சூரியனுடன் மறைந்திருப்பதாலும் அவருக்கு நீச குரு, சனி பார்வை இவற்றால் திருமண வாழ்க்கை சுகமில்லை. வாழ்க்கைத் துணையை பிரிய வேண்டி வரும்.

    ReplyDelete
  18. வணக்கம் குரு,

    இந்த ஜாதகருக்கு சற்று தாமதமாக 32 வயதில் திருமணம் நடந்திருக்கும். காரணம் லக்னத்தில் ராகு ஏழில் கேது, ஏழாம் வீட்டு அதிபதி சனி ஆறில் மற்றும் குடும்பாதிபதி புதன், லக்னாதிபதி சூரியன் விரைய ஸ்தானத்தில். அப்படி நடந்திருக்கவில்லையெனில் அந்த விசயத்திற்காக பணத்தை செலவு செய்திருப்பார்.

    திருமணம் நடந்திருக்கும் என கணித்ததிற்க்கு காரணங்கள்,

    1. வர்கோத்தம லக்னம்.
    2. ஏழாமிடம் சுப கர்தாரி யோகத்தில் உள்ளது.
    3. களத்திரகாரகன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில். அவர் செவ்வாய் பாத சாரம் பெற்றாலும் செவ்வாயனவர் லக்ன சுபர் ஆவார்.
    4. ஏழாம் அதிபதி சனி ஆறில் நின்றாலும் அது ஆட்சி வீடு கூடவே குரு சேர்க்கை, சனி வர்கோத்தமும் அடைந்துள்ளார்.
    5. குடும்பாதிபதி புதன் மற்றும் லக்னாதிபதி சூரியனுக்கு குருவின் பார்வை உள்ளது.
    6. குடும்ப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சந்திரன் பார்வை உள்ளது. ஆகவே ஒட்டுமொத்தமாக குடும்ப வாழ்கை மகிழ்ச்சியற்றதாக இருக்குமென கூற இயலாது.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  19. மதிப்பிற்குரிய ஐயா !!!

    புதிர் எண்: 58 இற்கான பதில் !!!

    ஜாதகர் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சூரியன் 12 இல் பகை ராசியில் விரையம். சிம்ம இலக்கின யோககாரகர் செவ்வாய் லக்கினத்தில் ராகுவுடன். 7 ஆம் அதிபதி சனி லக்கினத்திற்கு ஆறாம் வீட்டில், எழிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் வக்கிர நிலையில். மேலும் சனி ஐந்தாம்அதிபதி மற்றும் கோனாதிபதியான குருவுடன் ஆறில் உள்ளார். களத்திரகாரகன் சுக்கரன் பதினொன்றில். அதலால் திருமணம் உண்டு !!! சுக்கரதிசை சனி புத்தி ஜாதகர்க்கு 27 ஆம் வயதில் வந்திருந்தாலும், திசை புத்திக்குரிய நாயகர்கள் 6/8 ஆம் ஸ்தானத்தில் உள்ளதால் அந்த சமயத்தில் நடைபெற வாய்ப்பில்லை. அதன்பின் வந்த புதனும் 2/12 அமைப்பில் உள்ளார் !!! ஆதலால் சுக்கர திசையில் திருமணம் நடைபெறவில்லை. லக்கினாதிபதி சூரிய திசை செவ்வாய் புத்தியில், தனது 32 ஆம் வயதில் நடைபெற வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை விரையாதிபதி சந்திரனின் பார்வை, மற்றும் ஐந்தாம் அதிபதி குருவின் பார்வையும் இருப்பதும், குடும்ப ஸ்தானாதிபதி புதன் 12 இல் உள்ளதாலும் குடும்ப வாழ்வு வெகு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை !!!!!!

    இப்படிக்கு

    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  20. வாத்தியார் ஐயா, இந்த ஜாதகரின் லக்னாதிபதி மற்றும் இரண்டாம் வீட்டதிபதி இனைவு, வர்கோத்தமம் பெற்ற லக்னம், இரண்டாம் அதிபதி,7ம் அதிபதி ஆகியன குடும்ப வாழ்வை உறுதி செய்கின்றது.

    லக்னாதிபதி பன்னிரண்டில் மறைவு, 7ம் அதிபது 7ற்கு 12ல் மறைவு ஆகியன தாமதமான திருமண வாழ்வை அதாவது 30 வயதிற்கு மேல் வந்த சுக்கிர திசையில் நடை பெற்று இருக்க வேண்டும். லக்னாதிபதி பன்னிரண்டில் மறைவுற்றதால் மகிழ்சி அற்ற வாழ்வாக அமைந்திறுகும்.

    சரி என்றால் மகிழ்சி இன்றேல் மீண்டும் பாடம் படித்துவிட்டு வருகின்றேன்.

    குரு பெயர்ச்சி பலன்கள் தங்கள் பானியில் எப்போழுது வரும் என்று ஆவலுடன் உள்ளோம்.

    ReplyDelete
  21. Ayya,

    He must be married before age of 26(Probably during Ketu Desa) and marriage life also should be good. Because the below reasons: Vipareeth raja yogam(Shani -6th house owner & Guru- 8th house owner sitting in 6th house). After age 26, he has undergone Sukra Desa. So during this desa, he must be enjoyed life very well.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  22. Kalyanam nadaka vaipu llai... & kuriyavan 6 il maraivu.... 2 ku vuriyavan 12 il maraivu.... 7 il kethu veru... vonru klayanam nadanthirukathu illa vidil nadanthu keturikum....

    ReplyDelete
  23. 1. லக்கினத்தில் ராகு, செவ்வாய் (4,9)க்கு உடையவன் - மூர்க்க குணம்.
    2. லக்கின அதிபதி சூரியன் 12ல் மறைவு
    3. 7க்கு உடைய சனி பகவான் 6ல் (சனி வக்ரம், கூடவே குரு உம் வக்ரம்)
    4. சுக்ரன் மட்டும் தனியே 11ல் இருந்து யாரை பார்க்கிறார் :)
    5. முக்கியமான ஒன்று 4ல் மாந்தி (சுக ஸ்தானம்) அமர்ந்து, அந்த வீட்டை ஆஃப் செய்து விட்டார்.
    6. 2க்கு உடைய பூதனும் 12ல் மறைவு.
    7. வக்ர குருவும் (9ம்), சந்திரனும் (7ம்) பார்வையால் 2ம் வீட்டை பார்ப்பது ஆறுதல்.
    8. திருமண வாய்ப்பு மிகவும் குறைவு.

    ReplyDelete
  24. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்

    இன்றைய புதிருக்கான விடை:

    1.தாமத திருமணம் ஆகி இருக்கும்.

    2.மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கை.

    *சிம்ம லக்கினம்,மீனராசி ஜாதகர்.லக்கினாதிபதி 12ம் இடத்தில்,குடும்ப ஸ்தானாதிபதியான புதன்கூட்டணி போட்டு அமர்ந்து உள்ளார்.போராட்டமான
    வாழ்க்கை.

    *7க்குரியவனான சனி பகவான் அந்த ஸ்தானத்திற்க்கு 12மிடம் அத்துடன்
    லக்கினத்திற்க்கு 6மிடம் எனினும் ஆட்சி என்ற அந்தஸ்தை அடைவது நன்மை.

    *7இல் கேது அமர்ந்தாலும் அது சுபகர்த்தாரி யோகத்தில் அமைந்து உள்ளது. எனவே தாமதமாக இருந்தாலும் திருமணத்தை கொடுத்தது.சுக்கிர‌
    தசையில் சுய புத்தியில் 30 வயதிற்க்கு மேல் மணமாகி இருக்கும்.

    *எனினும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்களான சனியும் சூரியனும்
    சப்தமமாக அமர்ந்த்து திருமண,குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மையினை
    கொடுத்தது.

    *அத்துடன் களத்திரகாரகன் சுக்கிரன் அமர்ந்த வீட்டுக்காரரான புதன் 12இல்
    அம‌ர்ந்ததும் மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கையினை கொடுக்காது.



    எனது கணிப்பு சரியா என தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா.


    நன்றி
    ல ரகுபதி

    ReplyDelete
  25. கள‌த்திரகாரகன் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதாலும், இரண்டாம் இடத்திற்கு குருவின் பார்வை இருப்பதலும், சுக்கிரனின் பார்வை ஐந்தாம் இடத்திற்குக் கிடைப்பதாலும், அன்பருக்கு கேதுதசா முடிந்தபின்னர் சுக்கிர தசா சுக்கிரபுக்தியில் 30 வயதிற்கு மேல் திருமணம் நடந்தது.ஏழாம் இடத்திற்கு உரிய சனி பகவான் குருவுடன் சம்பந்தப்பட்டதால் திருமணத் தடை ஏதும் என் மனதுக்குத் தோன்றவில்லை.மேலும் செவ்வாய் யோககாரகன் லக்கினத்தில் நட்பு இடத்தில் இருந்து 7ம் இடத்தினை தன் பார்வையில் வைத்திருந்தது நல்ல் அனுகூலம். 2, 11 க்குரிய புதனுக்கு , லக்கினாதிபதியான சூரியனுக்கும் குருவின் பார்வை கிடைத்தது அனுகூலம்.

    தாமதித்த திருமணம். ஓரளவு நல்ல குடும்ப வாழ்க்கை.

    ReplyDelete
  26. ஐயா,
    சிம்ம லக்னம். லக்னாதிபதி 6,8,12ல் மறையக்கூடாது.அதிலும் லக்னாதிபதி
    சூரியனுக்கு 12 ஆம் இடம் ஆகவே ஆகாத இடம். லக்னத்தில் செவ்வாய், ராகு.
    நாக தோஷம், செவ்வாய் தோஷம். ஏழுக்குடையவன் ஆறில் குருவுடன். ஆனால்
    குரு நீச்சம். சனி சந்திரனைப் பார்க்கிறார். புனர்பூ தோஷம். ஆகவே, இது திருமணம்
    மறுக்கப்பட்ட ஜாதகம்.

    அ.நடராஜன்

    ReplyDelete
  27. Respected sir

    Thirumanam nadaipetra jadhagar.
    lagnadipathy 12il. 7-m adhipathy 6il. Guru neecham and 2i 9m paarvayaga parkiraar. Ivvalavu irundhum 27m vayadhil sukra dhasa varugiradhu. Sukradhasavil thirumanam nadaipetru irukkum. 2m veetai neechabangam adaindha guru paarkirar and budhan avar veetirku 11il ullar.

    Thank you

    ReplyDelete
  28. Respected Sir,

    My answer for our today's Quiz No.58:

    1. The native of the horoscope has not blessed to get marry.

    2. His home is not sweet home. He has to struggle (Problem in family life).

    Reasons:
    1. Lagna lord is in twelfth house along with Second house lord. This is bad.
    2. Kethu is in seventh house and getting rahu and mars aspects. this is also bad.
    3. Seventh house lord is sitting twelfth house from its own house along with eighth house lord. this is worst.
    4. Jupiter is debilitated and also sitting in sixth house. Its worst.
    5. Venus is not aspecting either seventh house or seventh house lord.
    6. The position of Venus and seventh house lord Saturn is 6/8 and with lagna lord 1/12. Its worst. Hence, Venus dhasa is not supported for his marriage.
    7. Though Bagyathipathi Mars sitting in lagna, it is associated with Rahu. this is not good sign for marriage.
    8. Lagna lord and seventh house lord are enemies and sitting 6th and 12th place.
    9. Benefic planets Moon and Jupiter are sitting in eighth and sixth place (Bad house).

    Hence, all the above reasons, the native of the horoscope is not married.

    Home is not sweet home - reasons:

    1. Second house lord sitting along with lagna lord in twelfth house and getting Sixth and eighth house lord's aspects. It is bad.

    2. Second house is aspected by Moon (twelfth house lord) from eighth house. It is worst.

    3. Jupiter is debilitated and sitting in sixth house along with Saturn. Its also too bad.

    4. There is no special yoga in this horoscope to live happily.

    Hence, His family life is affected by problems.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  29. 7ம் அதிபதி சனி 7க்கு 12ல், ஆறாம் வீட்டில். குடும்ப ஸ்தான அதிபதி புதன் இலக்கினத்திற்கு 12ல் மறைவிடத்தில். 7ம் வீட்டில் கேது. 7ம் வீட்டிற்கோ 7ம் அதிபதிக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை (புதன் சனியை பார்த்தாலும், அவர் சூரியனோடு இருப்பதால் முழு சுப கிரகமாக கருத இயலாது). 7ம் வீடு வியாழனுக்கும் சந்திரனுக்கும் இடையில் இருந்தாலும் இதை சுபகர்த்தாரி யோகமாக கருத முடியாது. காரணம், தேய்பிறை சந்திரன். இலக்கினாதிபதி சூரியனும் 12ல் மறைவிடத்தில். குரு நீசம். களத்திரகாரகன் சுக்கிரன் மட்டும் இலக்கினத்திற்கு 11ல் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டு. 7ம் வீட்டு அதிபதி சனியும் குடும்ப ஸ்தான அதிபதி புதனும் வர்கோத்தமம் அடைந்திருக்கிறார்கள். இலக்கினமும் வர்கோத்தமம். மேலும் சனி சொந்த வீட்டில் இருப்பதால், திருமணம் நடந்திருக்கும். ஆனால் மண வாழ்க்கை இனித்திருக்காது. தம்பதிகள் பிரிந்திருப்பர்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com