மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.13

அவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது?

--
அவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது?

முயற்சியும், ஆர்வமும் இருந்தால் எல்லாம் வரும்.

அது எப்படி வராது? ஒரு கை பார்த்துவிடுவோம் என்று தன்நம்பிக்கை, தன்முனைப்போடு இறங்கிப் பாருங்கள். எல்லாம் வரும்.

நான் 17 ஆண்டுகளுக்கு முன்பு கணினியை கற்றுக்கொள்ள முயன்றபோது, என் நண்பர் ஒருவர் Fuseஐப் பிடிங்கி வைத்து, வீட்டை இருட்டாக்கி விடுவதைபோல பேசினார்:

“அதைக் கற்றுக் கொள்வது கடினம். உன் நேரத்தை வீணடிக்காதே!”

நான் சொன்னேன். ”இருபது வயதுகூட நிரம்பாதவர்கள் எல்லாம் அதில் நுழைந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்: அவர்களுக்கு வரும்போது. எனக்கு ஏன் வராது?”

ஒருவனுக்கு ஒன்று வரும்போது நமக்கு மட்டும் ஏன் அது வராது என்று களத்தில் இறங்கினால் எல்லாம் வரும்.

அதேபோல், ஆச்சரியப்படும் விதமாக பத்தே நாட்களில் எனக்கு கணினி வசப்பட்டது. திரு.சுந்தரராஜன் என்னும் கணினி வாத்தியார், தினமும் ஒரு மணி நேரம் எங்கள் வீட்டிற்கு வந்து எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

நான் அவரிடம் துவக்கத்திலேயே சொன்னேன்: “எனக்கு காரை ஓட்ட மட்டும் சொல்லிக்கொடுங்கள். வண்டியை எப்படி ஸ்டார்ட் செய்வது. எப்படி நகர்த்துவது. எப்படி ஓட்டுவது. எப்படி நிறுத்துவது என்பதை மட்டும் சொல்லிக்கொடுங்கள். மற்றவற்றை நானாக நோண்டிக் கற்றுக்கொள்கிறேன்”

அதாவது எஞ்சின், கார்புரேட்டர், கிளட்ச், கியர்பாக்ஸ், அண்டர் சேசிஸ் என்று அனைத்தையும் காட்டி அவற்றின் செயல்பாடுகளையும் விளக்கி என்னைத் துவக்கத்திலேயே குழப்பாதீர்கள் என்று அவரிடம் சொல்லியிருந்தேன். அதன்படியே அவரும் சொல்லிக் கொடுத்தார்.

இப்போது கணினியின் செயல்பாடுகள் அனைத்தும் எனக்குத் தெரியும். எல்லாம் நானாக நோண்டியும், தோண்டியும் கற்றுக்கொண்டது.அதனால்தான் சென்ற பத்து ஆண்டுகளாக என்னால் நிறைய எழுத முடிகிறது. கணினியால் அது சாத்தியமாகிறது. பத்திரிக்கைகளுக்கு எழுத முடிகிறது.ப்ளாக்கில் எழுத முடிகிறது.

இதுவரை சுமார்100 சிறுகதைகளையும், 100ற்கும் மேற்பட்ட குட்டிக்கதைகளையும், 3 ஆய்வுக் கட்டுரைத் தொடர்களையும் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளேன். வகுப்பறை மற்றும் பல்சுவை ஆகிய இரண்டு ப்ளாக்குகளிலும் சேர்த்து இதுவரை சுமார் 2,000 பதிவுகளை  (Posts) எழுதியுள்ளேன். பத்து புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.

17 ஆண்டுகளுக்கு முன்பு நான் கணினி ஒன்றை வாங்கியபோது, அதன் விலை 60 ஆயிரம் ரூபாய். அதுவும் 486Dx கணினிக்கு அந்த விலை. அதாவது Hard Discன் அளவு அரை ஜி.பி அளவு கூடக் கிடையாது.

ஆனால் இப்போது என்னிடம் இருக்கும் கணினி இண்டெல் ஐ 5 ப்ராசசர், 500 ஜி.பி ஹார்ட் டிஸ்க், 6 ஜி.பி ராம் என்று எல்லா வசதிகளுடனும் உள்ளது.  BSNL Broadband  இணைப்பும் unlimited browsing and unlimited download என்று அனைத்து வசதிகளுடன் இருக்கிறது. எல்லாம் தொழில் நுட்பங்களின் அசுர வளர்ச்சி.

இந்த இடத்தில் ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். கதை எழுதத் தெரிந்ததால்தான், ஜோதிடத்தையும் கதைகளைப்போல சுவாரசியமாக எழுத முடிகிறது
----------------------
சரி, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

ஜோதிடமும் அப்படித்தான் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.

கூடுதலாக நினைவாற்றல் மட்டும் வேண்டும். நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான். தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, அமலா பால்
நயன்தாரா போன்ற கனவுலகக் கன்னிகளைப் பற்றிய செய்திகள் மட்டும் மனதில் எப்படி நிற்கிறது? அப்படி ஜோதிடததையும் கொண்டுபோய் ஸ்டாண்டு போட்டு நிறுத்த வேண்டியதுதான்.

நேற்றைய பதிவில் புதிருக்குப் பதில் சொன்ன திரு.பழனிசண்முகம் ஜாதகி விதவை என்று எப்படிச் சொன்னார்? ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீடு கணவனையும், ஏழாம் வீட்டில் இருந்து அதற்கு எட்டாம் வீடு கணவனின் ஆயுளையும் குறிக்கும் என்பது விதி (Rule). ஜாதகிக்கு அந்த வீட்டிற்கு உரிய சனீஷ்வரன் கெட்டிருந்ததால், ஜாதகி விதவை என்று கணித்துச் சொல்லிவிட்டார். ஜாதகத்தைப் பார்வையிடும் நேரத்தில் அந்த விதி (Rule) அவருடைய மனதில்/நினைவில் எப்படி  எட்டிப் பார்த்தது? அதுதான் நினைவாற்றல். பழனிசண்முகத்திற்கு வசப்பட்ட ஜோதிடம் உங்களுக்கு ஏன் வசப்படாது? யோசித்துப் பாருங்கள்.

என் ப்ளாக்கிற்கு வருகிறவர்கள், அதாவது ஜோதிடப் பாடத்தைத் தேடி வருகிறவர்கள் இரண்டு விதம். ஒன்று தங்கள் ஜாதகம் சம்பந்தமான செய்திகளை மட்டும் பார்க்கிறவர்கள் ஒரு விதம். நாமும் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பவர்கள் இன்னொரு விதம்.

என் அனுபவத்தில் இங்கே வருகிறவர்களில் பத்து சதவிகிதம் பேர்கள்தான் கற்றுக்கொள்ளூம் ஆர்வத்துடன் வருகிறவர்கள். மற்றவர்கள் எல்லாம் தங்கள் ஜாதகத்தை அலசிப் பார்க்க மட்டுமே வருகிறவர்கள்.

அது சரிதான் என்பதற்கு ஒரு ஆதாரத்தைக் கொடுக்கிறேன்.

நேற்று புதிய வகுப்பான galaxy2007ஐப் பற்றிச் சொன்னதோடு, இனி அதில் மட்டுமே ஜோதிடப் பாடங்கள் வெளிவரும் என்றும் சொல்லியிருந்தேன்.

நேற்று முச்சூடும் (அதாவது நேற்று முழுவதும்) வந்து சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 பேர்கள். புது வகுப்பில் சேர்வதற்கு மனுப் போட்டவர்கள் எத்தனை பேர்கள் என்று தெரியுமா? இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் 60 பேர்கள்தான் மனுப் போட்டிருக்கிறார்கள்.
துவக்க நாளுக்குள் (அதாவது நவம்பர் 7க்குள்) 100 அல்லது 120 பேர்களுக்கு மேல் சேரமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. சேராதவர்களுக்குத்தான் நஷ்டம்!!

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதத் துவங்கியபோது 10 பேர்கள் கூட படிக்க வரவில்லை. 6 மாதங்களுக்குப் 30 பேர்கள் கிடைத்தார்கள்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை ஐநூறைத் தொட்டது.

எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் படுவதில்லை!

என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, நான் அறிந்துணர்ந்ததை ஆவணப் படுத்துகிறேன். அவ்வளவுதான். இரண்டு பத்திரிக்கைகளில் சென்ற பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் தொடர் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை 10 புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் ஜோதிடம் இம்மிகூட இல்லை. அந்தப் பத்திரிக்கையின் மூலம் எனக்கு முப்பதாயிரம் வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

அதனால்தான் சொல்கிறேன். எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதும் கவலைப் படுவதில்லை.

உறவினர்கள், நண்பர்கள் என்று இருநூறு பேர்கள் இருப்பதைவிட, நம் மேல் உண்மையான அன்போடும், நன்றி, விசுவாசத்தோடும் இருக்க நான்குபேர்கள் கிடைத்தால் போதும். அதுதான் சிறப்பானது! அதுதான் வாழ்க்கை.

வாழ்க்கையின் எல்லா நிலைகளுக்கும் அது பொருந்தும்!

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Post 2


Devotional: கம்பெடுத்தால் ஆடும் குரங்கு கந்தா என் மனது! 

பக்தி மலர் 

கம்பெடுத்தால் ஆடும் குரங்கு கந்தா என் மனது: நீ வேலெடுத்து நின்றதைக் கண்டு உணந்தேன் இப்பொழுது. என்ற பல்லவியுடன் துவங்கும் முருகன் பாடல் ஒன்று இன்றையப் பக்தி மலரை நிறைக்கின்றது. பாடியபாடகி உருக்கமாகப் பாடுகின்றார். முழுப் பாடலையும் கேளுங்கள்.

அன்புடன்,
வாத்தியார் 
------------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
Our sincere thanks to the person who uploaded this song in the net! 



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

  1. சொல்லப் போனால், கிரமமாக கணினியில் பயிற்சி பெற்ற எங்களைப் போல்வாரை விட, தங்களைப் போன்ற, திரு.கிருஷ்ணன் சார் போன்ற ஆன்றோர்கள் 'தூள்' பரத்துகிறீர்கள்.

    1) 'முயற்சி திருவினை ஆக்கும்' என்பதற்கு இந்தப் பதிவு ஒரு உதாரணம்.

    2) 'எண்ணித் துணிக கருமம்' - செய்யத் துணியும் செயலை நன்கு ஆராய்ந்து செய்தால் நிச்சயம் வெற்றிதான். தாங்கள் இப்போது எடுத்துள்ள காரியமும் (காலக்ஸி 2007) மிக்க ஆய்ந்து எடுத்துள்ள ஒன்றானதால் 'வெற்றி நிச்சயம்'.

    'எண்ணித் துணிக' என்பது, 'எத்தனை மாணவர்கள் சேருவார்கள் என்பதை எண்ணுவதல்ல' என்று ஆணித்தரமாக எழுதியதற்கும் பாராட்டுக்கள்.


    -ஸ்ரீனிவாஸ ராஜுலு

    ReplyDelete
  2. மன்னிக்க வேண்டும், தங்களின் எழுத்தையோ அல்லது தங்களின் ரசிகர்களின் எண்ணிக்கையயோ குறை கூறவேண்டும் என்று அதைச் சொல்லவில்லை. வருகையாளர்கள் என்பது எதை விரும்புகிறார்களோ, எங்கு அது சுவரசியமாகக் கிடைக்கிறதோ அங்கு செல்வார்கள். வகுப்பறை 2007 என்பது சோதிடப் பதிவுகளால் பெருமை பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவே அதைக் கூறினேன். சோதிடம் பற்றி தளத்தில் தேடியபோது, வகுப்பறை என் கண்ணில் பட உள்ளே நுழைந்து, இணைத்துக் கொண்டேன். அதற்கு முன்பு உங்களைப் பற்றியோ அல்லது உங்களின் பிறபடைப்புகள் பற்றியோ நான் அறிந்திருக்கவில்லை. உங்களின் சோதிட தகவல்கள் பிற சோதிட தளங்களைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததால், இருப்பதால் (சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும்) தொடர்ந்து கொண்டிருக்கிறேன். தகவல் திருடு போகிறது என்பதற்காக தனி இணைய தளம் என்று தாங்கள் கூறியதும் அவ்வளவு சரியில்லை. திரு சந்திரசேகர் கூறியதுபோல், அந்தத் தளத்தில், மாணவரோடு மாணவராக திருடுபவர் வந்தால் என்ன செய்வீர்கள். உங்களின் மற்ற வலைப்பூக்களைப் பற்றியோ அல்லது தங்களின் புத்தக வாசகர்களைப் பற்றியோ நான் ஒன்றும் கூறவில்லை. வகுப்பறை 2007-ல் வருபவர்கள் சோதிட பாடத்திற்காகவே என்பது என் கருத்து.
    அன்புடன்
    AstrolearnerLKG
    [ வேண்டுகோள்: தங்களுக்கு நேரம் இருப்பின் இந்த வலைதளத்திற்கு சென்று பார்க்கவும்: nimiththigan.blogspot.in ]
    அவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது? முயற்சியும், ஆர்வமும் இருந்தால் எல்லாம் வரும். (தாங்கள் சொன்னதுதான்)

    ReplyDelete
  3. Congratulations sir for all Successful post so far and in future. I do not have any word except the 'Thanking you' and the effort which you have put to make useful for each and every student is awesome.

    Frankly speaking, the words are not enough to recognize your efforts, This is what teacher has to do for student :)

    ReplyDelete
  4. உறவினர்கள், நண்பர்கள் என்று இருநூறு பேர்கள் இருப்பதைவிட, நம் மேல் உண்மையான அன்போடும், நன்றி, விசுவாசத்தோடும் இருக்க நான்குபேர்கள் கிடைத்தால் போதும். அதுதான் சிறப்பானது! அதுதான் வாழ்க்கை.

    Great Quote sir.

    ReplyDelete
  5. sir, so many people are still learning.

    final decision about providing username password for galaxy 2007 website is yours.

    ReplyDelete
  6. “The best teacher is not the one who knows most but the one who is most capable of reducing knowledge to that simple compound of the obvious and wonderful.”

    தங்கள் ஜோதிட வகுப்பு பணி நீண்டு தொடர செந்திலாண்டவனை பிரார்த்திக்கிறோம்.

    அன்புடன்
    ராதா

    ReplyDelete
  7. உங்கள் பணி தொடரட்டும்...
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  8. Respected Sir,

    "Where there is a will, there is a way".

    I respect and eagerly awaiting to go for our New Galaxy.

    With kind regards,
    Ravichandran M.


    ReplyDelete
  9. வாத்தியாருக்கு வணக்கம்.

    வாத்தியார் தீடீர் என்று கம்பு எடுத்து ஆடும் பாடல் போட்டவுடன் நான் பயந்து விட்டேன்

    எதற்க்காக வாத்தியார் கம்பு எடுத்தார். யாரும் பயம் கோள்ளவேண்டாம்.

    பழனி ஆண்டவர் கம்பை காவடியக மாற்றிவிடுவார்.
    கவலை வேண்டாம்.

    மாணவன் நோக்கமே பாடம் கற்ப்பது.

    வாத்தியாரின் மணம் புண்படாமல் பாதுகாத்துகொள்வது நம் கடமை

    எல்லொரும் வணங்குவோம் எல்லாம் நல்ல படியாக நடக்க.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  10. உணர்வுகளை மதிக்காத
    உறவுகள் எப்போதும்

    ஒட்டி இருந்தால் என்ன
    எட்டி இருந்தால் என்ன

    உடன் வருவதற்கு நல்ல
    உள்ளம் உள்ளவர் இருக்கையில்

    எடுக்கும் முயற்சியில்
    எப்போதும் தொடரும் நன்மைகளே

    வகுப்பறைக்கு தொகை எந்த வங்கியில்
    வரவு வைக்க வேண்டும் சொல்லலயே

    பல 100களோ
    சில 1000களோ அனுப்பவதற்கு

    குரு காணிக்கை எந்த பெயரில்
    குடுக்க வேண்டும் தகவல் கிடைக்குமா

    காத்திருக்கிறோம் அன்பு
    கட்டளைகளுக்காக...





    ReplyDelete
  11. நானும் உங்களைப் போலவே கணினியை நோண்டியே கற்றுக்கொண்டேன்.அத்னால் அலுவலகப் பணிகளை மற்றவர் துணையின்றி சுயமாக செய்து முடிக்கமுடிந்தது.தற்போது வகுப்பறை2007 ல் பதிவிடப்பெற்ற பதிவுகள் அனத்தையும் படித்து ஜோதிட அடிப்படையை ஓரள்வு கற்றுள்ளேன்.தற்போது வலைத்திருட்டு காரணமாக இனிமேல் பதிவுகலள் அனைத்தும் புதிய பூட்டிய வலைத்தளத்தில் பதிவிட உள்ளீர்கள்.ஜோதிட கணிதாறிவியல் சார்ந்த தங்கள் பதிவுகளைத் தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன்.புதிய வகுப்பறையில் சேற்வதற்கு விண்ணப்பமும் அனுப்பியிள்ளேன்.

    நன்றியுடன்
    VVRRAJU

    ReplyDelete
  12. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்
    இணையதளங்களில் ஜோதிடம் பற்றிய தேடல்களின் போது நிச்சயமாக த‌ங்களின் பதிவையும் பார்ப்பவர்கள் உண்மையை உணர்வர்.அதாவது தங்க‌ள்
    எழுத்தை குறுகிய நோக்கத்துடன் பயன்படுத்தி பெருமை தேடிக்கொள்ள நினைப்பவர் உண்மையில் சிறுமையையே அடைவர்.இருப்பினும் தங்கள் தனிப்பட்ட எழுத்து நடையையும்,உண்மையான மாணவர் நலனையும் பாதுகாக்கும் பொருட்டு தாங்கள் எடுக்கும் முடிவிற்க்கு அனைவரும் உடன்பட்டவர்களே.
    தங்கள் நல்ல‌ நோக்கம் நிறைவேற தாங்கள் என்றும் நினைவுறுத்தும் திருச்செந்த்தூர்முருகன் துணை நிற்ப்பான்.மூத்த மாணவர்களின்
    பின்னூட்டத்தையும்,கருத்தையும் நான் எப்போதும் ஆவலோடு கவன‌த்தில் எடுத்துக்கொள்கிறேன். த‌ங்கள் பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
    நன்றி ல ரகுபதி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com