மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.10.13

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?

 

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது? 

சனீஷ்வரனிடம்  போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு நாம் மேல் நோக்கிப் பயனப்பட்ட பிறகு என்ன நடந்தால் என்ன?

மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை யோசித்து அல்லது தெரிந்து கொண்டு இப்போது ஏன் மண்டைக்குக் குடைச்சலைத் தர வேண்டும்?

மரணத்தை அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அல்லது பார்க்காமல் அதைப் புறந்தள்ளிவிட்டுப் போய் விடலாம். இன்றைக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. முதல் பிரச்சனை அநியாய விலைவாசிகள். அவற்றைச் சமாளிக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இது போன்ற மொக்கைப் பதிவுகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் இப்போதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.

மற்றவர்கள் தொடரலாம்!
-------------------------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது என்பது பற்றியும் விவரிக்கின்ற பண்டைய திபேத்திய நூல் ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். புக் மார்க் செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

http://www.holybooks.com/wp-content/uploads/The-Tibetan-Book-of-Living-and-Dying.pdf

அந்தப் புத்தகம் பற்றி ஆய்வு செய்து உரை நிகழ்த்தியவர்களின் காணொளிக் காட்சியும் உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்தில்  சொல்லுங்கள்!
------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மறு பிறவியைப் பற்றியும் பல மதங்கள் பலவிதமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றன.

உடம்பிற்குத்தான் மரணம். ஆத்மாவிற்கு மரணம் இல்லை. ஆத்மா வேறு ஒரு பிறவியை எடுத்து விடும் என்பதை இந்து மதத்தில் பல மகான்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

"ஏற்றப் பழந்துணியை நீக்கி எறிந்தொருவன்
மாற்றும் புதிய உடை வாய்ப்பது போல்
தோற்றுமுயிர் பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல் கொண்டு பிறக்குமென்று கொள்"


என்கிறது பழம் பாடல் ஒன்று. இதை முன்பு ஒரு முறை இணையத்தில் படித்தேன். பகவத்கீதையில் இந்த வரிகள் வருவதாக அந்த  அன்பர் கூறியுருந்தார்.

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான்  அந்த நிலை நமக்கு உண்டாகும்.

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without  desire

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

குறள் - 362

பட்டினத்தடிகளும் தனது பாடல் ஒன்றில்

பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்று பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது நீ இறந்து சாம்பலாகிப்
போகும்போது, உன் ஆத்மா மேற்கொள்ளும் அடுத்த பயணத்திற்கு இந்தப் பாவ புண்ணியக் கணக்கை கொண்ட கோப்பும் (file) உன் ஆத்மாவுடன் கூடவே வரும் என்று சொல்லியிருக்கிறார்.

அதுதான் நம்முடைய அடுத்த பிறவியை நிர்மானிக்கும் வலிமை கொண்டதாகும் என்கிறார்கள்.

ஜோதிடத்தில் அதைத்தான் பூர்வ புண்ணியம் என்கிறோம். வாங்கி வந்த வரம் என்கிறோம்.

இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இன்றையத் தேவைகளை சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல! ஒரு நற்சிந்தனையால் அதைச் செய்துகொண்டிருக்கிறேன்

நடப்பது நடக்கட்டும். எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்!
என்னைப் பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான். அவன் வழி நடத்துகிறான். நடத்துவான்!

அன்புடன்
வாத்தியார்

----------------------------
அடுத்ததாக, சுவாரசியமான ஜோதிடப் புதிர் ஒன்று உங்களின் அலசலுக்காகக் காத்திருக்கிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள். அது நாளை வெளியாகும்!



Our sincere thanks to the person who uploaded this video in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21 comments:

  1. நல்ல பதிவு ஐயா!

    "இன்றைய தேவைகளைச் சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல! "

    இவை பொன் வரிகள்.

    ஸ்ரீனிவாஸ ராஜுலு

    ReplyDelete
  2. அருமை ஐயா... ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  3. அய்யா, அருமையான பதிவு !. இன்றைக்கு தான் என்னுடய நண்பரின் மாமனார் தவறி விட்டார் !. அதை பற்றி யோசித்து கொண்டிரிக்கும் போது இந்த பதிவை பார்த்தேன். ரசித்தேன் . புளகாங்கிதம் அடைந்தேன். மனத்தில் இனம் தெரியாத அமைதி குடி கொண்டது. இது அப்போதும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். பிரச்னைகள் இருக்கட்டும் !. அதை எதிர் கொள்கிற நல்ல மன நிலையை வேண்டுகிறேன் !. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !. திபேத்தன் புத்த மத லாமாக்கள் மிக அருமையாக மிருதுவாக மரணத்தை தொட்டிருக்கிறார்கள். அந்த பக்குவம் எல்லோருக்கும் கிடைத்தால் இந்த மண்ணுளகமே சொர்க்‌கம் ஆகி விடும் !.

    ReplyDelete
  4. Respected Sir,

    Its wonderful post. Where there is a will, there is way.

    You are doing precious service to this society. Hope good people will understand and appreciate.

    Thanks forever,

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  5. உண்மையில் மரணத்தைப் போன்ற ஒரு இன்பமயமான விஷயம் இருக்க முடியாது. எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் நமக்கு கிடைக்கும் விடுதலை என்று சொல்லலாம்.

    ReplyDelete
  6. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.

    நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம்!

    உபயம்
    ரமணர் - ஆன்மிக சிந்தனைகள்(Dinamalar)

    ReplyDelete
  7. மரணம் ஒரு வரம் என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார். அது வரும்போது நமது சாதனைகள் வேதனைகள் ஒன்றும் தெரியாது. நமது வாழ்வில் நாம் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாகவோ பாரமாகவோ இருந்திருக்கிறோம் என்பது நமது கண் முன் தெரியும். அதுவே நமது அடுத்த பயணம் எப்படி அமையும் என்றும் தீர்மானிக்கும்.

    வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தாலே போதும். நமது வாழ்வு முழுமை அடைந்து விடும். மனிதப்பிறப்பின் மகத்துவமே அதுதான். மற்ற ஜீவராசிகளுக்கு இந்த பாக்கியம் இல்லை. அதனால் தான் அவ்வையார் "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் நாம் மற்ற ஜீவராசிகளை துச்சமாக மதிக்க வேண்டும் என்று அல்ல. அவற்றால் தங்களது இயற்கை குணத்தை மாற்றிக்கொள்ள இயலாது. நம்மால் முடியும். அதற்கு இறை அருள் வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்கள் வேண்டும். நம்மை விட மற்றவர்களை நேசிக்க வேண்டும். என் போன்றவர்களுக்கு அது மிகவும் கடினம். ஆனால் முயற்சி செய்கிறோம். என்றாவது ஒரு நாள் அந்த இடத்திற்கு வருவோம். அந்த நிலை வரும்போது கோள்களால் நமக்கு எந்த துன்பமும் வராது. நம்மை பெரிதாக நாம் நினைப்பதால்தான் நமக்கு துன்பம்.

    மற்றவர்களுக்கு பண உதவி தான் செய்ய வேண்டும் என்று அல்ல. ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ ஏன் ஒரு வருடத்திலோ ஒரு சில மணித்துளிகள் ஆதரவற்ற குழந்தைகளுடனோ பெரியவர்களுடணோ உடல் குறை உள்ளவர்களுடனோ செலவிடலாம். அவர்களின் முகத்தில் ஒரு சில நிமிடங்கள் பொங்கும் மகிழ்ச்சியே போதும். அதை விட பெரிய இன்பம் வேறு எதிலும் கிடைக்காது. இது ஒரு சுய நலமே. ஆனால் இதில் தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.

    இறைவனிடம் வேண்டும் போது எல்லாரும் இன்புற்றிருக்க அன்றி வேறெதையும் அறியேன் பராபரமே என்று வேண்ட வேண்டும்.

    இவற்றை எல்லாம் நான் மற்றவர்களுக்காக சொல்லவில்லை. எனக்காக எனது ஆசைகளையே சொல்லி கொள்கிறேன். இந்த மன நிலை எனக்கு கிடைக்க பெரியவர்களின் ஆசி வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. ////Blogger Srinivasa Rajulu.M said...
    நல்ல பதிவு ஐயா!
    "இன்றைய தேவைகளைச் சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல! "
    இவை பொன் வரிகள்.
    ஸ்ரீனிவாஸ ராஜுலு///

    அது என் மன வெளிப்பாடு. உங்களை அது கவர்ந்தமைக்கும், அதைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய மேன்மைக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger eswari sekar said...
    vanakam sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அருமை ஐயா... ஆவலுடன் காத்திருக்கிறேன்...///

    எதற்கு தனபாலன்? அடுத்த பதிவிற்கா? உங்களின் ஆர்வம் வாழ்க! வளர்க!

    ReplyDelete
  11. ////Blogger murali krishna g said...
    அய்யா, அருமையான பதிவு !. இன்றைக்கு தான் என்னுடய நண்பரின் மாமனார் தவறி விட்டார் !. அதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் போது இந்த பதிவை பார்த்தேன். ரசித்தேன் . புளகாங்கிதம் அடைந்தேன். மனத்தில் இனம் தெரியாத அமைதி குடி கொண்டது. இது அப்போதும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். பிரச்னைகள் இருக்கட்டும் !. அதை எதிர் கொள்கிற நல்ல மன நிலையை வேண்டுகிறேன் !. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !. திபேத்தன் புத்த மத லாமாக்கள் மிக அருமையாக மிருதுவாக மரணத்தை தொட்டிருக்கிறார்கள். அந்த பக்குவம் எல்லோருக்கும் கிடைத்தால் இந்த மண்ணுலகமே சொர்க்‌கம் ஆகி விடும் !.////

    தவறிய மனிதரின் ஆன்மா சாந்தியடைட்டும்! நல்லவர்களுக்கு நல்ல மனநிலை நிச்சயம் கிடைக்கும்!

    ReplyDelete
  12. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Its wonderful post. Where there is a will, there is way.
    You are doing precious service to this society. Hope good people will understand and appreciate.
    Thanks forever,
    With kind regards,
    Ravichandran M./////

    உங்களைப் போன்றவர்களுக்குப் புரிந்தால் சரிதான். நான் எழுதும் நோக்கமும் அதுதான். நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  13. ///Blogger Ak Ananth said...
    உண்மையில் மரணத்தைப் போன்ற ஒரு இன்பமயமான விஷயம் இருக்க முடியாது. எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் நமக்கு கிடைக்கும் விடுதலை என்று சொல்லலாம்.////

    உண்மைதான். அதுதான் தீர்க்கமான விடுதலையும் கூட.உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  14. ////Blogger sundarkmy said...
    மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
    நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம்!
    உபயம்
    ரமணர் - ஆன்மிக சிந்தனைகள்(Dinamalar)////

    ரமண ரிஷியின் பொன்மொழியைப் பகிர்ந்துகொண்ட மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger thozhar pandian said...
    மரணம் ஒரு வரம் என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார். அது வரும்போது நமது சாதனைகள் வேதனைகள் ஒன்றும் தெரியாது. நமது வாழ்வில் நாம் மற்றவர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாகவோ பாரமாகவோ இருந்திருக்கிறோம் என்பது நமது கண் முன் தெரியும். அதுவே நமது அடுத்த பயணம் எப்படி அமையும் என்றும் தீர்மானிக்கும்.
    வாழும் காலத்தில் மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தாலே போதும். நமது வாழ்வு முழுமை அடைந்து விடும். மனிதப்பிறப்பின் மகத்துவமே அதுதான். மற்ற ஜீவராசிகளுக்கு இந்த பாக்கியம் இல்லை. அதனால் தான் அவ்வையார் "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் நாம் மற்ற ஜீவராசிகளை துச்சமாக மதிக்க வேண்டும் என்று அல்ல. அவற்றால் தங்களது இயற்கை குணத்தை மாற்றிக்கொள்ள இயலாது. நம்மால் முடியும். அதற்கு இறை அருள் வேண்டும். அதற்கு நல்ல எண்ணங்கள் வேண்டும். நம்மை விட மற்றவர்களை நேசிக்க வேண்டும். என் போன்றவர்களுக்கு அது மிகவும் கடினம். ஆனால் முயற்சி செய்கிறோம். என்றாவது ஒரு நாள் அந்த இடத்திற்கு வருவோம். அந்த நிலை வரும்போது கோள்களால் நமக்கு எந்த துன்பமும் வராது. நம்மை பெரிதாக நாம் நினைப்பதால்தான் நமக்கு துன்பம்.
    மற்றவர்களுக்கு பண உதவி தான் செய்ய வேண்டும் என்று அல்ல. ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ ஏன் ஒரு வருடத்திலோ ஒரு சில மணித்துளிகள் ஆதரவற்ற குழந்தைகளுடனோ பெரியவர்களுடணோ உடல் குறை உள்ளவர்களுடனோ செலவிடலாம். அவர்களின் முகத்தில் ஒரு சில நிமிடங்கள் பொங்கும் மகிழ்ச்சியே போதும். அதை விட பெரிய இன்பம் வேறு எதிலும் கிடைக்காது. இது ஒரு சுய நலமே. ஆனால் இதில் தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.
    இறைவனிடம் வேண்டும் போது எல்லாரும் இன்புற்றிருக்க அன்றி வேறெதையும் அறியேன் பராபரமே என்று வேண்ட வேண்டும்.
    இவற்றை எல்லாம் நான் மற்றவர்களுக்காக சொல்லவில்லை. எனக்காக எனது ஆசைகளையே சொல்லி கொள்கிறேன். இந்த மன நிலை எனக்கு கிடைக்க பெரியவர்களின் ஆசி வேண்டுகிறேன்.////

    வேண்டிக்கொண்டீர்கள் அல்லவா? பெரியவர்கள் என்ன, இறைவனே உங்களை ஆசீர்வதிப்பான் தோழரே!

    ReplyDelete
  16. As usual,
    My opinion on DEATH is different;

    However thanks for the post and the tips you have given in the mail.

    Getting ready for new Presidentship.

    ReplyDelete
  17. Wonderful book! Thanks for sharing such an awesome book.

    ReplyDelete
  18. ////Blogger வேப்பிலை said...
    As usual,
    My opinion on DEATH is different;
    However thanks for the post and the tips you have given in the mail.
    Getting ready for new Presidentship.//////

    புது தலைமையா? new Presidentship ப்பா என்னது அது?

    ReplyDelete
  19. /////Blogger Ravi said...
    Wonderful book! Thanks for sharing such an awesome book.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com