மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.10.13

Astrology:Write your answer to the queries - Quiz 15 புதிருக்கான பதிலை எழுதுங்கள்

 

Astrology: write your answer to the queries: Quiz No.15 புதிருக்கான பதிலை எழுதுங்கள்

தொடர் - பகுதி பதினைந்து

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவு சற்று வித்தியாசமானது. கொடுக்கப்பெற்றுள்ள ஜாதகத்திலிருந்து பிறந்த தேதியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக, ஜாதகத்தை வைத்துக் கேட்கப்பெற்றிருக்கும்  3 கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரணப் பெண்மணிதான்!




கேள்விகள்

1.  இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?
2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா? அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?
3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பையும் வைத்து எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

41 comments:

  1. Respected Sir
    1. 7th lord in 12th house Guru, sukra and Budha in 8th house. but 6th lod and 12th lord in 8the Vibaretha Raja yogam. Strong Laknathipathi and Guru's look at 7th lord would have given the marrage.
    2. for the second house, we have Sani and Mar's Look. But We have Guru' Sukara and Subha Buda looks also. 2nd lord also in 9 house, friendly house. Should have better than average family life.
    3. Some problems may be due to Sani and Mar's Look to the second house and Sani (7th lord) in 12th house

    ReplyDelete
  2. வருகையை முதலில் பதிவு செய்கிறேன்

    ReplyDelete
  3. Sir,

    Please find my analysis below:
    It's a tricky horoscope.
    1) Yes, she is married, Mostly marriage would have happened in the second half of sukra dasha. 3 benefics aspecting 2nd house. 2nd house also receiving aspect of mars + sani. Adhi yogam is there, benefics in 6,7,8 from chandra.
    2) Most likely, Husband is from different caste or country because of exchange between 7th lord and 12th lord. The horoscope has sayana dosham because of saturn in 12th place. The married life will not be happy because of mars + saturn aspect on 2nd house which creates a warzone. Though benefics aspect 2nd house, Guru has ownership of malefic 6th house, similarly Mercury has ownership of 3rd and 12th house. 7th lord in 6th place from 7th with aspect of 6th lord, Husband will become enemy of her.
    Possibility of marriage ending in seperation or divorce.
    3) Rahu in 5th house - putra dosham
    Saturn in 12 th house - sayana dosham
    Most of the benefics are sleeping in 8th house
    Putra dosham and sayana dosham could have caused seperation or divorce.
    Mandi's association with first house and chandra and also afflicted 5th house indicates the lady may have mind related problems and decision making problems.

    Notable point in this horoscope: The lady could be psychic because of strong 8th house and mars ketu combination. She has some amount of intuition. Read somewhere that mars ketu combination enables the person to tell arulvakku.


    ReplyDelete
  4. அழகான (லக்னமும் ராசியும் கடகம்) இந்தப் பெண்மணி (02-ஏப்ரல்-1974 இந்திய நேரப்படி மதியம் 1:54க்குப் பிறந்தவர்) அரிதான புஷ்கல மற்றும் தனயோகங்களுடன் பிடிவாத குணமும் (லக்ன மாந்தி) கொண்டவர்.

    1) திருமண இடத்தோன் (லக்கினம் மற்றும் சந்திரர்களுக்குப்) பன்னிரண்டில் மறைந்தாலும், குரு பார்வை பெற்றதாலும், குடும்பாதிபதி கதிரோன் நட்புள்ள பாக்கிய வீட்டில் நின்றதாலும், காரகன் சுபர்களுடன் கூடியதாலும் 24 வயதளவில் திருமணம் நடந்திருக்கும்

    2) பன்னிரன்டில் மறைந்த களஸ்திர ஸ்தானிபதி சனியின் பார்வையால், குடும்பஸ்தானாதிபதியும் எதிரியுமான கதிரோன் பாதிக்கப் பட்டுள்ளார். அதனாலும், லக்னம் ராசியைப் பீடித்துள்ள மாந்தி தரும் பிடிவாத குணத்தினாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சினைகள் கொண்டதாக இருக்கும்.

    3) குடும்ப இடத்தைக் குரு மற்றும் சுகஸ்தானாதிபதி சுக்கிரன் பார்த்தாலும், கூடவே விரையஸ்தானாதிபதி புதனும், கேதுவுடன் நின்ற செவ்வாயும் பார்ப்பதால் ஊடல் (பிரிவு) மற்றும் கூடல் (சமரசம்) நிறைந்த குடும்பம்.

    (மூத்த மாணவர், பெரியவர் முத்துகிருஷ்ணன் சார் மருத்துவ சோதனை முடிவுகள் சுபமாகவே இருக்க வேண்டி கொள்கிறேன்)

    நன்றி

    ReplyDelete
  5. Vanakkam Aiya,

    Koduthulla jadhaga nabaruku,thirumanam nadanthirukum. Guru,sukiran,budhan agiya grahangal serndirupadal sathkalathram amayum.

    5il ragu,aduvum ucham petrirupadal puthira thosham aiya...

    Sevayodu,kedu ulladal blood-sambandamana prachnaigal...

    Melum budhanum,saniyum parivarthanai agirukirargal(8,12m veetuku udayavargal);lagnathil mandhi veru amarndullar...enave prachnaigalum undu aiya.

    Nandri.

    ReplyDelete
  6. வணக்கம் .

    2.4.1974ல் 1.30.08 PM , ஆயில்யம் ( 1 ம் பாதம்) நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி .

    1. திருமணமானவர்.
    2. குடும்ப வாழ்க்கை உண்டு .
    3. பிரச்சனை இல்லை.

    லக்னாதிபதி சந்திரன் கடக லக்னத்தில் சுப பலத்துடன் (அஷ்டவர்கத்தில்- 28 பரல்கள் ) இருக்கிறார். 9ம் வீட்டின் திருகோனத்தில் உள்ள சூரியனின் 5ம் பார்வை லக்னத்தை பார்ப்பதால் லக்னம் பலமடைந்து உள்ளது .

    7ம் வீட்டு அதிபதி சனி 12ம் வீட்டில் அமர்ந்து அயன , சயன , போககியத்திற்கு விளைவு ஏற்படாமல் குருவின் 5ம் பார்வை நிவர்த்தி செய்துவிடுகிறார். மேலும் ,
    12ம் வீட்டில் சனி சுய அஷ்டவர்கத்தில் - 2 பரல்கள் கொண்டு தன்னுடைய பலத்தை குறைத்துகொண்டு ஜாதகியின் திருமணத்திற்கு வழி விடுகிறார்.
    ஆகையினால் , 27 வயதில் சுக்ர தசை, சந்திர புத்தியில் திருமணமானார்.

    2ம் வீட்டு அதிபதி சூரியன் 9ம் வீட்டில் (25 பரல்கள் ) திருகோனத்தில் இருப்பதாலும் , குருவின் 7ம் பார்வை, சுக்ரனின் 7ம் பார்வை 2ம் வீட்டின் மீது பார்பதாலும் குடும்ப வாழ்க்கைக்கு பலமான வழி கொடுத்துள்ளார்.

    8ம் வீட்டில் குரு, சுக்ரன், புதன் இருப்பதால் , ஜாதகிக்கு ஆதியோகம் பெற்று மாதர் குல தலைவியாகவும் , நற் பண்புகள் உடையவராகவும் , தீர்க ஆயுளுடன் , செல்வம் மிகுந்த ஆடம்பர வாழ்க்கை பெற்றுள்ளார் .

    அனப யோகம் - சூரியனை தவிர்த்து மற்ற கிரகங்கள் சந்திரனுக்கு 12ம் இடத்தில் இருந்தால் , இந்த யோகம் ஆஸ்தியும் , சுகமும், நிறைந்தவராக ஆக்குகின்றது .

    சதா சஞ்சார யோகம் - லக்னாதிபதி சர ராசியில் இருப்பது - அதிக அலைச்சல் இருக்கும் , அதிகபடியான பயணங்கள் உண்டு .

    இந்த ஜாதகத்தில் சுப யோகம் இருப்பதால் தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு வாழ்வார்கள்.


    8ம் இடத்தில் புதன் வந்து அமர்வது சிறப்பான அமைப்பு.
    ஜாதகிக்குப் பல விஷேச குணங்கள் இருக்கும்.எல்லோரையும் அனுசரித்துப்போகும் தன்மை இருக்கும். யாரையும் சமாளிக்கும் அல்லது வளைத்துப்போடும் தன்மை இருக்கும்.செல்வம் பலவழிகளில் வந்து சேரும். தன் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுவாள் . சுருக்கமாகச் சொன்னால் செல்வந்தனாக இருப்பாள். அதிக நாள் உயிரோடு இருப்பாள்.

    5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 11ம் இடத்தில் இருந்து 7ம் பார்வையால் ஜாதிக்கு ராகுவின் பலத்தை குறைத்து தாமதமாக குழந்தை பாக்கியத்தை கொடுக்கிறார்.

    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கங்கள்.நிச்சயம் திருமண யோகம் உண்டு. காதல் திருமணமாக வாய்ப்பு உண்டு. 2ம் இடத்தை பார்க்கும் சுக்கிரனை வைத்து கூறுகிறேன். 7க்குடைய சனி 12ல் மறைவதால் நிச்சயம் மண வாழ்க்கையில் பிரச்சினை தான். 5ல் ராகு வேறு. அனைத்தையும் தாங்கும் மன உறுதியை லக்னாதிபதி மனோகாரகன் சந்திரன் தருகிறான்.

    ReplyDelete
  8. Dasa Details:
    ~14 years: Mercury
    ~14 - 21: Ketu
    ~21 - 41: Venus

    2nd Lord Sun is in 9th house.
    7th Lord Saturn in 12th house, Parivarthana with 12th Lord Mercury.

    6th Lord Jupiter is in seventh house. Aspects twelfth, second and fourth houses. Maandhi in Lagnam. May be proud, vain and rather sharp/piercing in speech.

    Ayushkaraka Saturn (7th Lord also - Killer) is in 12th place aspected by 6th Lord who is in 8th Place. Killer Sun (2nd Lord) is in Jupiter (6th Lord's) house, with second house itself aspected by Jupiter. Medium life span, I think.

    Now coming to marriage:

    Marriage is not denied, though difficult. The good position of 2nd Lord in 9th house, Parivarthana between Saturn and Mercury, Jupiter's aspect on 7th Lord, 2nd house and 4th house show marriage.

    May have happened in the early - mid 2os, when Major period of Venus was running, in the sub period of either Venus Himself (who is in Saturn's house) or that of Second Lord Sun.

    Marriage granted, but the placement of 7th Lord in 12th house, 4th + 11th Lord in 8th house, 12th Lord in 8th house, along with 6th and 9th Lord in the 8th house show possible loss of Husband, probably in Venus - Saturn Period or Venus - Mercury period.

    Saturn in 12th house indicates troubles in bed pleasures. Venus with 12th Lord and 6th Lord also supports the same.

    I have not attempted to trace out the birt details to have a peep at Navamsa or Ashtakavarga. Who knows, her Navamsa may be excellent, and thus, render all the negatives in Rasi chart less effective.

    Thank you.

    Periyavaadaasan

    ReplyDelete
  9. Dear Ayya,

    1. Married because sukran surrounded by benefics. chandran looks at 7th house. seventh house lord looked by jupiter.

    2. Troubled Marriage : Health of husband is a big issue. presence of some chronic disease is possible because 7th & 8th lord in 12th house, 12th lord and 8th lord parivardhana , 8th house with sukarn ...is filled with 6th lord , 3rd lord , 12th lord .

    br
    gopinath

    ReplyDelete
  10. ஏப்ரல் 2 , 1974. ஆயில்யா நட்சத்திரம் . கடக ராசி கடக லக்னம். லக்னாதிபதி சந்திரன் லக்னத்தில் . ஆனால் மாந்தியுடன் . 7-ம் அதிபதி சனி 12-ம் இடத்தில் அதாவது விரய ஸ்தானத்தில் . சுய வர்க்கத்தில் 2 பரல்கள் . களத்திர காரகன் சுக்ரன் 8-ம் இடத்தில். ஏழாம் இடத்துக்கு 26 பரல்கள். 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் 23 பரல்கள். அதன் அதிபதி சூரியனுக்கு சுய வர்கத்தில் 3 பரல்கள். அதுவும் தன்னுடய வீட்டிற்கு எட்டாம் வீட்டில். 5-ம் இடத்தில் 26 பரல்கள். ராகு
    வேறு . புத்ர தோஷம்.
    1) சுக்கிர தசையில் சந்திர புக்தியில் திருமணம் ஆகியிருக்கலாம் . அவர் அழகாக இருந்ததினால்.
    2) ஆனால், குடும்ப வாழ்க்கை கிடையாது.
    3) பிரச்னை என்னவாக இருக்கும் என்றால் பெண்மணி அழகாக இருந்திருப்பார். புத்திர தோஷம் வேறு. 6-ம் இடத்தில் 43 பரல்கள். நோய்கள் இருந்திருக்கும். குழந்தை இருந்திருக்காது. செவ்வாய், ராகு கேது பார்வையால் கணவன் மீது சந்தேக குணம் இருந்திருக்கும். விவாகரத்து ஆகியிருக்கும்.

    ReplyDelete
  11. 1)She got married but late becoz of saturn in 12th house & sukran in 8th house.

    2)Kadaga Lagna & Ma in Lagna, so she will get more angry often. Sukran in 8th house and his dasa between 21 to 41 age.. will make her to face so many family problem.

    3)Rahu in 5 house is "pitra dosh", she may not have kid.

    ReplyDelete
  12. April 2, 1974 13:51 பிறந்தவரின் ஜாதகம்
    1. திருமணம் ஆகியிருக்கும். சுக்கிரன் மற்றும் லக்னாதிபதி சந்திரன் பலத்துடன் உள்ளார்கள். சுக்கிர திசையில் திருமணம்.
    2. குடும்ப வாழ்க்கை உண்டு. இரண்டாம் அதிபதி பலத்துடன் 9ஆம் வீட்டில். 2ஆம் வீடு 3 சுபர் மற்றும் யோகாதிபதி செவ்வாய் பார்வையில். ஆனால் சனி பார்வை இருப்பதால் பிரச்சனைகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை. அதோடு 2ஆம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு 8ல்.
    3. லக்னத்தில் மாந்தி இருப்பதால் தினமும் சச்சரவுகள் உள்ள குடும்பம். கணவனுடன் பிரிந்து வாழமாட்டார், சேர்ந்து மகிழ்ச்சியில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பார்.

    ReplyDelete
  13. திருமணம் இல்லை 7 ஆம் அதிபதி 12 ல் மறைவு,சுக்கிரன் 8 ல்,

    ReplyDelete
  14. Person is married but her marriage life may be ended in short duration.

    Positive things:
    1) Guru aspects 2 nd house
    2) Guru aspects sani 7&8th lord
    3) From Sukura 7 the lord in 2 postion
    4) Sukura get good conjunction Guru and Puthan
    5) Moon(lagnathipathi) aspects 7 the house
    6)4th house is accepted by guru
    7)2nd lord in 9th house

    Negative things
    1)8 & 12 lord exchange
    2)8 lord sani in 12 house deny sexual happenies
    3)7 the in 12 the house
    4)During her marriage period bhathakathipathi dasa(11the lord) venus
    5)According to this horoscope 7th and 8th lord(sani) is 12 house and karaka for marriage is in 8 the house . Both are bad.

    ReplyDelete
  15. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 15 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 02.04.1974 அன்று பிறந்த இந்த ஜாதகிக்கு அருமையான யோகங்கள் உள்ள ஜாதகம்.

    குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பது ஒரு ராஜ யோகம். ஆறுக்குடைய குரு எட்டில் மறைவு, எட்டுக்குரிய சனி பன்னிரண்டில் மறைவு. இவை எல்லாமே விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது.

    1. குருவும் செவ்வாயும் பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதாலும், களத்திர ஸ்தானமாகிய ஏழுக்குரிய சனிக்கு ஒன்பதாம் இடத்தில் குருவும், சுக்கிரனும் சேர்ந்திருப்பதாலும் இவருக்கு திருமணம் ஆகியிருக்கும். ஆட்சி பெற்ற சந்திரன், லக்னாதிபதியாயும் இருப்பதால் தன்னுடைய தசா புத்திகளில் நல்ல யோகத்தைக் கொடுப்பார்.

    2. குடும்ப ஸ்தான அதிபதியான சூரியனுக்கு பன்னிரண்டில் சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் சேர்ந்து இருப்பது சந்தோஷமான வாழ்க்கையைக் குறித்தாலும், குடும்ப ஸ்தானத்தையும், அதன் அதிபதி சூரியனையும் தன் பார்வையில் வைத்திருக்கும் சனியால் குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் குடும்ப வாழ்க்கை உண்டு.

    3. களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் மறைந்து விட்டதாலும், கேதுவுடன் சேர்ந்த பூர்வ புண்ணியஸ்தானாபதி செவ்வாய், ஏழாம் பார்வையாக அந்த இடத்தையும், ராகுவையும் பார்ப்பதாலும், நான்காம் பார்வையாக குடும்பஸ்தானத்தைப் பார்ப்பதாலும் குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும்.

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா !

    Ans-1
    7இம் வீட்டுக்கு 2 இல் சுக்கிரன், லக்கின அதிபதி நேரடி பார்வை இல் 7இம் வீடு - திருமணம் உண்டு.



    Ans-2
    7இம் அதிபதி சனி 7 இம் வீட்டிற்கு 6இம் வீட்டில் மேலும் 12இல் மறைவு எனவே திருமண வாழ்கை பிரச்னை கொண்டதாக இருக்கும்

    Ans-3
    12ல் சனி. அது அயன, சயன போக பாகியத்திற்கான வீடு. அங்கே சனி இருப்பது போக பாக்கியத்தைக் குறைக்கும். ஜாதகிக்கு புணர்ச்சி இன்பம் கிடைக்காமல் செய்வான்.

    ReplyDelete
  17. அய்யா,
    7-ஆம் அதிபதி 12-இல்,
    களத்திரகாரன் சுக்கிரன், குரு 8-இல், அதுமட்டுமல்லாமல் ஆரம்பதிசை 14 வருடம் புதன் திசை(8-ஆம் இடத்தின் திசை), 14 வருடம் 2 மாதம் கழித்து 7 வருடம் கேது திசை, அதன் பின்பு மறுபடியும் சுக்கிர திசை(8-இன் திசை ), மொத்தம் 41 வருடம் கழிந்து அந்த பெண்ணிற்கு திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை.
    4-இற்கு உரிய சுக்கிரன் 8-இல், 9-இற்கு உரிய குரு 8-இல், இந்த பெண் கஷ்டத்தை தவிர வேற எதுவும் அனுபவிதிற்க மாட்டாள்.

    பிறந்த தேதி : 1-4-1974

    ReplyDelete


  18. 1. இந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது இல்லையா?

    திருமணம் ஆகிவிட்டது

    2. திருமணமாகியிருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்குமா? அதாவது குடும்ப வாழ்க்கை உண்டா அல்லது இல்லையா?

    மகிழ்ச்சியானதாக இருக்குமா இருக்காது, 4 ஆம் ஆதிபதி 8இடத்தில் இருக்கிறது ,7ஆம் ஆதிபதி இடத்தில்12 இருக்கிறது,

    பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும்

    3. பிரச்சினை இருக்கும் என்றால் எதை வைத்துப் பிரச்சனை?

    4ஆம் ஆதிபதி8 இடத்தில் இருக்கிறது தசை நடத்துகிறர் உடையவன்12 இருக்கிறது இவர்கள் இடையில் பணம் சம்மந்தமா

    ஆண்,பெண் தம்பத்தியம் உறவுமுறை சரியாக இருக்காது

    ReplyDelete
  19. அய்யா,
    நேற்றைய பாட்டிற்கு இந்த பாட்டு எப்படி உள்ளது.
    படம்: "நான் கடவுள்"


    இந்த பாட்டில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
    "ஒரு முறையா இரு முறையா
    பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
    புது வினைய பழ வினைய,
    கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே "
    அத்தனை செல்வமும் உன் இடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ் விடத்தில்
    வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
    அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்"

    -----------------------------------
    யாம் ஒரு, பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்




    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே


    அம்மையும் அப்பனும் தந்தத
    இல்லை ஆதியின் வல் வினை சூழ்ந்தத
    அம்மையும் அப்பனும் தந்தத
    இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்தத
    இம்மையை நான் அறியாததா
    இம்மையை நான் அறியாததா
    சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே


    அத்தனை செல்வமும் உன் இடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
    அத்தனை செல்வமும் உன் இடத்தில்
    நான் பிச்சைக்கு செல்வது எவ்வ விடத்தில்
    வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
    அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


    ஒரு முறையா இரு முறையா
    பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
    புது வினைய பழ வினைய,
    கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
    பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்கையும் துரத்துதே
    உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
    அருள் விழியால் நோக்குவாய்
    மலர் பத்தால் தாங்குவை
    உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே
    பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
    உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
    ஐயனே என் ஐயனே

    -----------------------------------
    நமது வகுப்பறை மாணவர்களுக்கு சமர்ப்பணம்!!!!

    ReplyDelete
  20. Respected Sir,

    1. The native of the horoscope will be married but delayed marriage.7th lord gets guru parvai so the native will be married and as sukran hidden in 8th house the marriage would have been delayed.

    2.Her married life will not be successful. As the 7th lord sani in 12th house not a good position.Also sukran is with combo of mercury(12th house) and guru(6th house).
    She will not have a family because 2nd lord sun is in 8 th house from its own house. Also 2nd house gets sevai,sani 6th lord and 12th lord parvai. which is very unfavorable.

    3. Reason for her failure of marriage would be she will not have child. As ragu in 5th house getting sevai parvai too which will be big barrier for the native to be a mom.

    ReplyDelete
  21. Respected Sir,

    "Nammudaya mootha maanavaragiya thiru K.M.R ayya avargalin health 100% gunamaga vendum endru iraivanai vendugiraen."

    D.O.B : 2/April/1974 : Time : 1.58pm

    6-m adhibathy 8il & 8-m adhibathy 12-il so kettavan kettidil kittidum rajayogam endra amaipu idhil therigiradhu.

    1.)Thirumanam aanavar. 22nd vayadhil sukra dhasa aarambam so kandippaga thirumanam nadathi vaithiruppar. sukran than nanbanana sani veetil amarvu. Sukra dhasavil, kudumbasthana adhibathy sooriya bukthil thirumanam aagi irukkalam endru thondrugiradhu ayya. 8il sukran amarvadhu its a blessed horoscope endru thangal 8-m idam patriya paadathil padithirukiraen.

    2.)lagnathil amarndha maandhium, 5il amarndha raaghuvum, 8il amarndha guruvum thirumana valkayai prechanai seidiruppargal. Kuripaga kulandhai visayamaga prechanai vandirukkum.

    3.)5il raghu, avar saniyai pondru seyal paduvaar and guru avar 8il amarvu. guru 8il amarndhal neenda ayul aanal kulandhai visayathil kai vaithu iruppar. guru 6-m adhipathy avar 8il amarvu (Kettavan kettidil kittidum rajayogam) 6-m idathu velaigalai avar positive aga matryiruppar aanal karagan velayil kai vaithuiruppar.

    Thavarugalai naalaya explanations moolama thiruthi kolgiraen.

    Thankyou.

    ReplyDelete
  22. Respected Sir,

    My answer for our today's Quiz no.15:-

    1. She was born on April 2,1974 and forty years old now. Got married. Seventh house getting moon's aspect as its 7th look and not occupied by any bad planets as well as not getting bad planets aspect. She has married in Venus dasha period (it is forth and eleventh house authority).

    2. Her marriage life was in trouble since seventh house lord is sitting in twelfth house, sixth place from its own house and getting sixth house lord aspects as well as twelfth house lord and eighth house lord are exchanged. Second house lord is affected by Saturn and sitting eighth place form its house. Second house is getting saturn aspect as its third look and Mars aspects. Both are bad aspects even Guru's aspect also since it is sixth house lord. Yoga karagha is also affected since it is cojoined with kethu and getting Rahu's aspect. She may got divorced or her husband might be died.

    3. Problem might have come in her married life due to her husband may be sick or he may be spendthrift since seventh house lord is sitting in twelfth house (general rule) and eighth house is affected (Mangalya bagya)by Jupiter and Mercury (6th and 12th house lords)

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  23. Dear Sir,

    1. The lady may not be married. If married then it may be divorced.
    2.In eighth place guru and sukran and hence marriage life is affected.In 12th place sani. So her personal life is affected.
    3.Sex related issues will be in life.May not have children.

    ReplyDelete
  24. வணக்கம் ஐயா,

    1.7ம் அதிபதி 12ல்,அவர் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி 8ல்,களத்திரகாரகன் சுக்கிரன் 8ல்,லக்கினமும், ராசியும் ஒன்றாக இருப்பதால் ராசிக்கு 7மதிபதியும் 12ல்,அவருக்கு திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

    2.5ல்ராகு,9ல்சூரியன்,9மஅதிபதி 9ம்வீட்டிற்கு 12ல்,லக்னத்திற்கு 8ல், அவராகவே தன் வாழ்க்கையை கெடுத்துகொண்டிருப்பார்.

    ReplyDelete
  25. Madhipirkuriya ayya,

    1.Indha jathagaruku thirumanam nadaipettru irrukum. Aatchi petra chandran 7aam veetai parkirar melum 7am athipathi sani-i guru parkirar.

    2.Thirumana valkai makilchiyaga irruka vaipu illa ayya. Karanam, 7aam athipathi 12il maraivu melum sukran 8il ullar athanal avarudaya sugasthanam kettu vittathu. jeevanasathanam athipathi mars kethu udan kuttani ivai elam avarudaya thirumana and kudumba valkai prachanai kuriyathu aagivittathu.

    3.Jathagar kanavaridam anusariththu pogamattar ithuvae avar ella prachnaikum karnam ayya.

    ReplyDelete
  26. சந்தோசமான வேளையில் கேள்வித்தாள் கஷ்டமா போச்சே?
    1. 7ம் இடத்தின் மீது சொந்த வீட்டிலிருந்து லக்னாதிபதியின் பார்வை, களத்திரகாரகன் 8ல் மாங்கல்யஸ்தானத்தில், சுக்கிர தசை. ஆகவே திருமணம் வாய்ப்பு உண்டு.
    2. ஏழாமதிபதி 12ல் விரயத்தில், 7ம் வீட்டின் மீது உச்சமான ராகுவின் பார்வை. ஆகவே திருமண வாழ்க்கை நன்றாக இராது.
    3. ஏழாமதிபதி 12ல் விரயத்தில், 7ம் வீட்டின் மீது உச்சமான ராகுவின் பார்வையால் பிரச்சினை.

    ReplyDelete
  27. 1. 7,8ம் அதிபதி சனி பகவான் 12ல், 12ம் அதிபதி புதன் 8இல் மற்றும் பரிவர்த்தனை,களத்திரகாரகன் சுக்கிரனும் 8இல். (6ம் அதியும் 12ம் அதிபதியும் 8ம் வீட்டில் விபரீத ராஜயோகத்தில்)
    குடும்பஸ்தானாதிபதி சூரியன் திரிகோணா வீட்டில். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி. லக்னத்தில் மாந்தி.

    எப்படி பார்த்தாலும் சுக்கிர திசையில் திருமணம் நடந்திருக்கும். ஆட்சி பெற்ற லக்னாதிபதியாலும்,திரிகோண பலம் பெற்ற குடும்பஸ்தானதிபதியாலும் திருமணம் மறுக்கப்படவில்லை.

    2.ஆனால் 7ம் அதிபதி 12இல் மறைவு. கணவர் பணி நிமித்தமாக வெளிநாட்டில் வேலை செய்பவ‌ராக இருக்கலாம்.

    3.கல்யாணம் ஆகியும் கணவரை பிரிந்து வாளும் கொடுமை தான் இந்த ஜாதகிக்கு.

    ReplyDelete
  28. வணக்கம்.

    லக்னாதிபதி சந்திரன் 7ம் இடத்தை பார்க்கிறார். திருமணம் ஆகி இருக்கும்.

    8, 12ம் அதிபதிகள் பரிவர்த்தனை. விபரீத ராஜ யோகம். 2ம் இடத்தை குருவும், சுக்ரனும் பார்கிறார்கள். குடும்ப வாழ்கை நன்கு அமையும்.

    ஆனால் சனி 12ல் இருப்பதால் ஆரோக்ய பிரச்னை இருக்கும்.

    அன்புடன்,

    ராதா

    ReplyDelete
  29. 1.திருமணம் ஆனவர்தான்.7ம் அதிபன் சனி 12ல் மறைந்து இருபக்கமும் கேது மாந்தியால் சூழப்பட்டாலும், குருவின் சிறப்புப் பார்வை பெற்றதால் தாமதித்தாவது திருமணம் உண்டு.
    2.லக்கினத்திலேயே மாந்தி நின்றதும்,கடக ராசி கடக லக்கினக்காரர்கள் பொதுவாகவே திருமணவாழ்க்கையில் அதிர்ஷ்டக் குறைவானவர்கள் என்பதாலும்,
    7ம் அதிபன் பலமாக பாதிக்கப்பட்டதாலும்,6ம் அதிபன் 8 ஏறியதால் ஜாதகி எதிரிகளை உடையவர் என்பதாலும், ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்பதாலும், குடும்பவாழ்க்கை பாதிப்புதான்.3,12,6,9,4,11 அதிபர்கள் 2ம் வீட்டைப் பார்ப்பதாலும் குடும்ப வாழ்க்கை மிகுந்த சந்தோஷம் இருக்காது.
    கணவனைப் பிரிந்து வாழக்கூடும்.
    3.பிரிவினைக்குக்காரணம், வேலை நிமித்தமாகவோ, உடல் ஊனமாகவோ,
    இந்தப்பெண்ணின் சுதந்திரப்போக்கும்,கணவனின் சந்தேகமோ காரணமாக இருக்கலாம்.

    நன்றி ஐயா! என் வேண்டுகோளை ஏற்றதற்கும் , புதிர் கேள்விகளுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  30. 1) திருமணம் ஆகியிருக்கும். காரணம் 7ம் அதிபதி சனிக்கு குருவின் பார்வை இருக்கிறது. களத்திரகாரகன் சுக்கிரன் மற்ற 2 சுப கிரகங்களுடன் இருக்கிறார்

    2) பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை. களத்திரஸ்தானாதிபதி சனி 12லும் , களத்திரகாரன் சுக்கிரன் 8லும் மறைந்து விட்டதை வைத்துச் சொல்கிறேன்.

    3) ராகு ஐந்திலும் கேது, செவ்வாய் 11ல் இருந்து 5ம் இடத்தைப் பார்ப்பதும், புத்திர காரகன் குரு 2 பகை கிரகங்கள் சூழ இருப்பதும் குழந்தைப் பாக்கியத்திற்கு தடை ஏற்பட்டு அதுதான் பிரச்சினைக்கு காரணம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  31. lagnathypathy chandran in lagnam (own house ) gives 7th aspect to 7th house. so no problem in marraige. Ragu at 5th position, will make problem in getting child. But possible for late child as 2nd house has guru's aspect also second house owner in 9th place.

    ReplyDelete
  32. Vannakam Sir,

    I answer your first question.

    1. Sukra tisail kandippaga kalyanm agiyrukkum. 7 ikku uriya sani 12 il marivuu.athanal kalyanm konjam latega ayirukkum. guruvin parvaiyum sukranin parvaiyum 2il ulathu. kalyanthai mudithu vaithuirpparkal.

    2. Kudmba valkai problem aga thaan irukkum.

    3. reason: 7 ikkum 8 iukkum uriyavan sani. sani 3 im paarvaiyaga 2 im iddamaana kudumba sthanathi parkir.10im parvaiyaga suriyaniyum parkir. sooriyan sani serkaiyoo allathu paarvaiyoo nalathu alla. sooriyan 2 ikku uriyavar. athodu guru 6 ikkum 9 ikkum uriyavar. 8il irukkirar. suriyanukku idam kodutha athipathi antha vetirkku 12 il. 6ikku uriya guruvin paarvai yum nalathalla. athodu 12 ikku uriya viraiyathi pathi 8 il paarvai 2 il mel.

    MAIN REASON.... PARIVARTHANI 12IKKU URIYAVAN 8IL. 8IKKU URIYAVAN 12IL. ATHODU 2 PERIN PARVAIYUM 2IM VITTIL.

    AGGA MOTHAMGAAA KUDUMBA VALKAIYAI KEDUTHIRUPARGAL.......

    NANDRI SIR....
    Mahes T

    ReplyDelete
  33. I answer 3rd question sir...

    Finally kudumba valkaiyai ilamal seithuruppargal.....

    Mahes T

    ReplyDelete
  34. களத்திரகாரகன் சுக்கிரன், குரு, மற்றும் புதன் 8‍ல் மறைவு.
    7‍ம் அதிபதி 12‍ல் மறைவு; 12‍ம் அதிபதியும் 8‍ம் அதிபதியும் பரிவர்த்தனை. 5‍ம் அதிபதி செவ்வாய் கேதுவுடன்; 5‍ல் ராகு.
    மேலும் 14 வயதிற்கு மேல் கேது திசை. பிறகு 8‍ல் மறைந்த சுக்கிரன் திசை.
    எனவே திருமணம் தடைபட்டு இருக்க வேண்டும். 12‍‍ல் சனி ‍ இருப்பதாலும், புத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் குழந்தை பாக்கியத்திற்கான இல்லற வாழ்க்கை தடை பட்டிருக்க வேண்டும்

    AMG

    ReplyDelete
  35. வணக்கம் அய்யா..

    லக்ன அதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. இரண்டாம் அதிபதி திரிகோன நட்பு வீட்டில் இருப்பதும் சிறப்பு. எட்டாம் வீட்டில் மூன்று சுப கிரகங்கள் இரண்டாம் வீட்டை பார்க்கின்றன. இது வாங்கி வந்த வாரம். சானியின் மூன்றாம் பார்வை மற்றும் யோகக்காரன் செவ்வாயின் நான்காம் பார்வையும் குடும்ப பாவத்தில் படுகிறது. 7 ம் அதிபதி சனி 12 ல இருந்தாலும் நட்பு வீட்டில் பரிவர்த்தனை யோகத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். ஜோதிட ஆசான் jagannatha hora 24 சிறப்பான யோகங்கள் இருப்பதாக சொல்கிறது. 2,6,10 ம் வீட்டை சிறப்பாக கொண்ட தனயோகா ஜாதகம். (23+43+29=95). 3,7,11 ம் வீட்டின் பரல் =84, எனவே சராசரியான சந்தோசம் கிடைக்கும். எல்லா கிரகம்களும் நட்பு/சம வீட்டில் உள்ளன.. 5ல ராகு இருப்பதால் குழந்தை பாக்கியம் சற்று தாமதம் ஆகலாம். யோககாரன் செவ்வாயின் 7,8ம் பார்வை 5, மற்றும் 6ம் வீட்டில் விழுகிறது. 3 கிரகம்கள் ஆட்சி, ராகு உச்சம். சனி மற்றும் செவ்வாய் குரூர கிரகம் என்ற அடிப்படையில் (2 ம் வீட்டின் பார்வை) குடும்பத்தில் பிரச்சனைகளை குடுக்கலாம். நீச கேது திசை முடிந்து 24 வயதிற்கு பிறகு சுக்கிர திசையில் திருமணம் நடந்திருக்கலாம்.

    ReplyDelete
  36. ஜாதகி ஏப்ரல் 2 1974 பிறந்தவர். இலக்கினத்தில் வளர்பிறை சந்திரன்.
    இலக்கினாதிபதியும் இவரே. ஜாதகி அழகாக இருந்திருக்க வேண்டும். ஆனால் உடன் மாந்தியும் இருப்பதால் எதாவது குறையை கொடுத்திருப்பார். மூன்று சுபகிரகங்கள், களத்திரகாரகன் சுக்கிரன் குடும்ப காரகன் குரு உட்பட, 8ம் இடத்தில் மறைவிடத்தில். 7க்குரிய சனி பகவான் 12ம் வீட்டில், 7ம் இடத்திற்கு 6ல். குரு பார்வையோ வேறு சுப கிரக பார்வையோ 7ம் இடத்திற்கு இல்லை. ஆனால் குரு பார்வை 7ம் வீட்டுக்காரர் சனிக்கு உண்டு. இருந்தும் சனியே 8ம் அதிபதியும் ஆவார். குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டை மூன்று சுப கிரகங்கள் தங்களது நேரடி பார்வையில் வைத்துள்ளன. ஜாதகி வளமான நல்ல குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் இவருக்கு திருமணம் தடைபட்டிருக்கக் கூடும்.

    ReplyDelete
  37. ல.ரகுபதி
    மதிப்பிற்க்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    எனது பதில்,
    1.திருமணம் நடந்து விட்டது சுக்கிர தசையில் நடந்து இருக்கும்.
    2.களத்திர ஸ்தானதிற்க்கு ஆறாம் இட‌த்திலும்,லக்னத்திற்க்கு பன்னிரெண்டாம் இடத்திலும் அதன் அதிபதி அமர்ந்து மறைந்து உள்ளார். இதனால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையவில்லை.பாக்கியாதிபதி குரு அதற்க்கு பன்னிரெண்டாம் இடத்தில் அமைந்ததும் குறையே.
    3.குடும்பாதிபதி சூரியன் அந்த இடதிற்க்கு எட்டில் மறைந்து இருப்பதுடன் குடும்ப ஸ்தானத்திற்க்கு செவ்வாய் மற்றும் சனியின் கொடூர பார்வையால் குடும்பம் பிரிந்து இருக்கும்.இந்த பிரச்சனைக்கு தொழில் ஒரு காரணமாய் இருக்குமோ என‌
    நாளை வரும் தங்கள் முடிவின் மூலம் என் நிலையினை நான் அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா. நன்றி.

    ReplyDelete
  38. 1) she got married.
    Moon aspects 7th house. Sukra with Guru and also Guru's aspect on 7th lord saturn.

    2 & 3) No her married life was not good.
    Saturn in 12 and 4th lord in 8 implies quarrelsome married life and void of pleasure and delightness.
    But since Guru is aspecting 2 and 2nd lord positioned well in 9, the relationship wont break.

    ReplyDelete
  39. Sir

    Quiz - 15


    1.திருமணம் நடந்திருக்கும்
    1. லக்கினாதிபதி ஆட்சி பலத்துடன் உள்ளாா். ( பரல்கள் . 28)
    2. 2ம் வீட்டு அதிபதி 9.ம் வீட்டில்(பாக்கியாதிபதி)நட்பு வீட்டீல் உள்ளா்ா (25)
    3. களஸ்திரகாரகன் 8ம்வீட்டீல் நட்புடன் உள்ளாா். (23)
    4. 7ம் வீட்டு அதிபதி 12ம் வீட்டீல் நட்புடன் உள்ளாா்.(26)


    2. பிரச்சனை உள்ளதாக இருக்கும்.

    ஏன் என்றால் சுக்கிரன் இருக்கும் வீட்டதிபதி 12ல் மறைவு அதனால் மனமகிழ்ச்சி இராது.

    7ம்வீ்ட்டீல் 26 பரல்கள் அதனால் சுமாரன மனவாழ்க்கை,மேலும் 4ம் அதிபதி 8ம் வீட்டீல் மற்றும் 6ம் அதிபதியும் இணைந்து உள்ளாா் அதனால் குடும்பத்தில் சுகம் இராது.

    3. பிரச்சனை - புத்திரசோகம்

    1. 3க்குடையவன் 8-ல் இருந்தால் உடல் குறைபாடு இருக்கலாம்.(கருப்பையில்)
    2. 5ல் ராகு(புத்திரஸ்தானத்தில்)
    3. கும்பத்தில் குரு இருந்தால் புத்திரப்பிரச்சனை இருக்கும்.

    ReplyDelete
  40. அழகிய நிறமுடைய ஜாதாகிக்கு சுக்கிர திசையில் நிச்சயம் திருமணம்.ஆனால் கடவுள் குழந்தை பிறப்பதில் பிரச்சனை செய்து விட்டான்.இவரது கணவருக்கும் வாரிசு விசயத்த்தில் பிரச்சனை இருக்கிறது .இல்லை குழந்தை பிறந்தாலும் நீடிக்காது .இருந்தாலும் இவர்கள் சேர்ந்தே தான் வாழ்கின்றனர் ,பணட்திற்கு குறை இருக்காது .சதா மனக்கவலையுடன் உறக்கமின்றி இருக்கிறார் ஜாதகி.

    ReplyDelete
  41. இந்த ஜாதகிக்கு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தை இன்மை. அதாவது குழந்தை இல்லை. அதைக் கோடிட்டுக் காட்டியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயர்களைக் கீழே தெரிவித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்! பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அடுத்தடுத்து வரவுள்ள ஜாதகங்களில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்!

    சரியான விடையை எழுதிய அந்தப் பத்துப் பேர்கள்:
    1. திரு.சத்தியநாராயணன்.
    2. திருமதி.கோகிலம்.
    3. திரு.ஜி. முரளிகிருஷ்ணா.
    4. திரு.உதயகணேஷ்.
    5. திருமதி ஜனனி முருகேசன்.
    6. திரு.சி.ஜீவானந்தம்.
    7. திரு. A.K ஆனந்த்.
    8. திரு.AMG.
    9. திருமதி. தனலெட்சுமி.
    10. SRi.

    கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com